உலகளவில் கொரோனா இன்னும் இருப்பதால் இந்தியாவில் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா பரிசோதனைகளை தீவிரப்படுத்த அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.சேகரித்த மாதிரிகளை உரிய ஆய்வகத்துக்கு அனுப்பவும், தொற்று விதிமுறைகளை கடைபிடிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
Tag: மாநில அரசு
தீபாவளிக்கு முன்னதாக அக்டோபர் 23ஆம் தேதி அசாம் முதல்வர் ஹிமன்தா பிஸ்வா சர்மா தனது ட்விட்டர் பதிவில் ஊழியர்களின் அகவிலைப்படி நான்கு சதவீதம் உயர்த்த அசாம் அரசு முடிவு எடுத்திருப்பதாக உறுதி செய்துள்ளார். இந்த அகவிலைப்படி உயர்வானது 2022 ஜூலை 1 முதல் வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதல்வரின் இந்த ட்விட்டர் பதிவுக்கு ஊழியர்கள் தரப்பிலிருந்து பொதுமக்கள் தரப்பிலிருந்தும் நன்றியும் வாழ்த்துக்களும் கூறப்பட்டு வருகிறது. மேலும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் […]
தமிழகத்தில் கடந்த ஆறு வருடங்களாக புதிய சுகாதார நிலையங்கள் அமைக்கப்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கூறியுள்ளார். இந்த நிலையில் இது தொடர்பாக பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன் தமிழகத்தில் 25 புதிய சுகாதார நிலையங்கள் மற்றும் 25 நகர்ப்புற சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட இருக்கிறது என கூறியுள்ளார். மேலும் தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட இருக்கின்ற 50 சுகாதார நிலையங்களுக்கு 120 கோடி செலவாகும் என குறிப்பிட்டுள்ளார். இதனை அடுத்து சுகாதார நிலையங்களை அமைக்க மத்திய […]
தீபாவளியை முன்னிட்டு ரேஷன் கார்டு தாரர்களுக்காக அரசு சிறப்பு திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி ஏழைகளுக்கும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் இலவச ரேஷன் அரிசி உள்ளிட்ட பல சிறப்பு வசதிகளை மத்திய, மாநில அரசு வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா அரசு இந்த முறை தீபாவளி அன்று சிறப்பு தொகுப்பை அறிவித்துள்ளது. மாநிலத்தில் உள்ள 1.5 கோடி ரேஷன் கார்டு தாரர்களுக்கு ஏக்நாத் ஷிண்டே அரசு தீபாவளி பரிசு வழங்க இருக்கிறது இதன் கீழ் ரேஷன் கார்டு […]
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டம் ஆமாரம்பல்லம் கிராமத்தில் உள்ள வணிக கட்டிடத்தை இஸ்லாமிய மத வழிபாட்டு தலமாக மாற்ற அனுமதிக்குமாறு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அந்த மனுவை கலெக்டர் அலுவலகம் நிராகரித்துள்ளது. இதனை எதிர்த்து மத வழிபாட்டு தளம் அமைக்க அனுமதிக்கும்படி நூருல் இஸ்லாம் ஷம்ஹரிகா சங்கம் எனும் இஸ்லாமிய அமைப்பு கேரளா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது தொடக்கத்தில் […]
75வது சுதந்திர தின விழாவையொட்டி வீடுகள் தோறும் தேசியகொடி ஏற்றுமாறு பொதுமக்களை மத்திய அரசு அறிவுறுத்திவருகிறது. இதற்கிடையே ஹரியானா மாநிலத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் தேசியகொடி வாங்காதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் மறுக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானது. இதற்கு எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இது பற்றி மத்திய உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடு முழுவதும் 80 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு மாதந்தோறும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் தேசிய கொடி […]
கல்வி அதிகாரம் முழுவதும் மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். விழுப்புரம் சட்டமன்ற தொகுதி திமுக இளைஞரணி சார்பில் திராவிட மாடல் பயிற்சி பாசறை கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்ததாவது “இந்தியை கட்டுப்படுத்துவதை ஆரம்பத்தில் இருந்தே நாம் எதிர்த்தோம். மாநிலத்தில் முழுமையாக கல்வி அதிகாரத்தை கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினோம். புதிய கல்வி கொள்கை குறித்த முதல்வர் […]
சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் சு. அமிர்த ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தொகுதி – I , தொகுதி – II/II-A , தொகுதி – IV/VAO மற்றும் தொகுதி – VII/VIII ஆகிய தேர்வுகளுக்கும் மேலும் மத்திய அரசால் நடத்தப்படும் IBPS, SSC, RRB, INDIAN POSTAL SERVICE,UPSCதேர்வுகளுக்கும் பாடத்திட்டங்கள் மற்றும் நடப்பு நிகழ்வுகள், பாடநூல்கள் பழைய வினாத்தாள்கள், மாதிரி தேர்வுகள், கேள்வி & பதில்கள் ஆகியன https://tamilnaducareerservices.tn.gov.in வலைதளத்தில் […]
மாநில அரசுகள் கடன் வாங்குவதை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மாநில அரசுகளின் கடன்சுமையும், நிதி பற்றாக்குறையையும் அதிகரிப்பதால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கும் அபாயம் இருப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மேலும் மாநில அரசுகள் இலவசங்கள் வழங்கும் போக்கை மாநில அரசுகள் அதிகரித்துக் கொண்டே இருப்பது கண்டனத்திற்குரியது என்று மாநில தலைமைச் செயலாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜிஎஸ்டி விவகாரத்தில் சட்டங்களை இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு சம உரிமை உண்டு என உச்சநீதிமன்றம் அதிரடியாக தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் மத்திய மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது. ஏனென்றால் இந்தியா ஒரு கூட்டாட்சி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கக் கூடிய நாடு. குழப்பத்தை தவிரக்கவே இந்திய அரசியலமைப்புச் சட்டம் மத்திய அரசுக்கு கூட்டாட்சி அதிகாரத்தை தருகிறது. ஜனநாயகமும் கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்து உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயது 62 ஆக உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசு கடுமையான பொருளாதார நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது. ஒன்றிய அரசிடம் இருந்து வரவேண்டிய நீதியும் வராத காரணத்தினால் நிலைமையை எப்படி சமாளிப்பது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் தீவிரமாக துறை சார்ந்த அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் வீண் செலவுகளை எப்படி குறைப்பது என்பது பற்றி ஆராய்ந்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் செயல்படாமல் அல்லது […]
முழுமையான இரட்டை இடைநிலைப் படிப்புகளான பிஏ, பிஎஸ்சி, பிஎட் மற்றும் பிகாம் b.ed போன்றவற்றை உள்ளடக்கிய நான்கு வருட ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்டத்தை கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 50 பல்முனை கல்வி நிறுவனங்களில் ஆரம்பத்தில் இது செயல்படுத்தப்படும் என கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2030ஆம் ஆண்டிற்குள் நீடித்த வளர்ச்சியை எட்டுவதற்கான செயல் திட்டத்தை நிறைவேற்றுவதற்கேற்ப மத்திய அரசு கடந்த ஆண்டு தேசிய கல்வி கொள்கை 2020 க்கு […]
பூஸ்டர் டோஸ் இலவசமாக செலுத்த அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை இலவசமாக அரசு மருத்துவமனைகளில் செலுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தார். இதற்கு மத்திய அரசில் விரைவில் பதிலளிக்கும் என்று நம்புகிறோம் என தெரிவித்த அவர் அதுவரை தனியார் மருத்துவமனைகளில் சிஎஸ்ஆர் திட்டம் மூலம் […]
டெல்லியில் கொரோனா பரவலை தடுப்பதற்காக பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை மாநில அரசு வெளியிட்டிருக்கிறது. நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் வெகுவாக குறைந்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் கொரோனா பரவல் குறைந்திருப்பதால், மாநில அரசுகள் கட்டுப்பாடுகள் பரவலாக தளர்த்தியுள்ளது. அதிலும் குறிப்பாக முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என பல மாநிலங்கள் அறிவித்துள்ளது. இந்த நிலையில், டெல்லி, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் கொரோனா பரவலின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில் டெல்லியில் கொரோனா பரவலை […]
மயிலாடுதுறையில் கவர்னர் ஆர்.என் ரவி சென்ற நிகழ்வில் பாதுகாப்பு குறைபாடு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் ; மயிலாடுதுறையில் கவர்னர் ஆர்.என் ரவி சென்ற நிகழ்வில் பாதுகாப்பு குறைபாடு.கவர்னர் கான்வாய் மீது திமுகவினர் கல் மற்றும் கொடிக்கம்பங்களை வீசியுள்ளனர். மேலும் இன்று நம் மேதகு கவர்னருக்கு மயிலாடுதுறையில் ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு, மாநில அரசே முழு பொறுப்பு என அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார் […]
அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு மாதம்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது . இந்த ஓய்வூதிய தொகை தபால் நிலையங்கள் மூலமாகவோ அல்லது வங்கிகள் மூலமாகவோ பெரும்பாலும் வழங்கப்படுகின்றன. இந்த பென்சன் பணம் வழங்குவதற்கு ஓய்வூதியர்களுக்கு பயோமெட்ரிக் அடிப்படையிலான மின்னணு உயிர்வாழ் சான்றிதழ் வங்கியின் மூலம் கொடுக்கப்படும். இவ்வாறு கொடுக்கப்படும். இந்த உயர்வாழ் சான்றிதழ் மூலம் ஓய்வூதியதாரர்களுக்கு பென்ஷன் தொகை வழங்கப்படும். தற்போது உள்ள காலகட்டங்களில் வைரஸ் பரவல் காரணமாக மூத்த குடிமக்கள் வங்கிகளுக்கு சென்று தங்களுக்கான பென்சன் தொகையை […]
தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மத்திய அரசை சீண்டி பார்ப்பதையே தன் வேலையாக கொண்டுள்ளார். தான் பங்கேற்ற முதல் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய அரசை ஒன்றிய அரசு என பகிரங்கமாக அறிவித்தார். அதன் பின்னர் நடைபெற்ற கவுன்சிலில் பங்கேற்கவில்லை.அதற்கு பதிலாக தமிழக அரசு சார்பில் நடத்தப்பட்ட சமூக வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று ஜிஎஸ்டி கவுன்சிலின் முக்கியத்துவத்தை சுக்குநூறாக உடைத்தார். அதோடு இல்லாமல் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் மத்திய அரசை துறை ரீதியாக விமர்சித்து கடுப்பேற்றி […]
அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகைப்படி அதிகரித்து அறிவிப்பு ஒன்றை மாநில அரசு வெளியிட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில்முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில்ஒய் .எஸ். ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது. இதில் 11 வது ஊழியர் திருத்த குழு அளித்த பரிந்துரையின் படி இந்த மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு சில வாரங்களுக்கு முன்பு ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இதற்கு அம்மாநில அரசு ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், 11 வது ஊதிய திருத்த குழுவின் பரிந்துரையின் […]
கொரோனா பரவல் நாடு முழுவதும் குறைந்து வரும் நிலையில் புனே மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகள் இன்று முதல் திறக்கப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா 3-ஆம் அலையின் தாக்கம் காரணமாக பல பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில் மாநில அரசுகள் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினர். அந்தந்த மாநிலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளின் அடிப்படையில் முழு ஊரடங்கு, பகுதி நேர ஊரடங்கு, இரவு ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு என அமல்படுத்தப்பட்டன. இதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு […]
இந்தியாவில் எந்த மாநிலமும் செய்யாத சாதனையை ஆளும் திமுக அரசு செய்து வருகிறது என முதல்வர் முக ஸ்டாலின் கூறியுள்ளார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திமுக கட்சியின் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்தவர்களிடம் உரையாற்றினார். அதில் அவர் கூறியதாவது, “நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருகிறது. எனவே திமுக அரசின் சாதனையை மக்களுக்கு இணைய தளங்களின் வாயிலாக தெரிவிக்க வேண்டியது உங்களின் கடமை ஆகும். நான் எவ்வாறு ஆட்சி செய்து வருகிறேன் என்பது பற்றி […]
2022-2023 நிதியாண்டிற்கான பட்ஜெட் கடந்த 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதில் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் வரிவிலக்கு சலுகை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஓய்வூதிய நிதிய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் சுப்ரதிம் பண்டோபாத்தியா கூறியதாவது, மத்திய அரசு ஊழியர்களின் ஊதியத்தில் 14 சதவிகிதம் பிடிக்கப்பட்டு அது என்.பி.எஸ் எனப்படும் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் வரவு வைக்கப்படுகிறது. இதற்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு வரி […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனாவின் மூன்றாவது அலை காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன . தமிழகத்தை பொருத்தவரை இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, குஜராத் உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பரவல் வேகமாக அதிகரித்து வருவதாகவும்,மகாராஷ்டிரா, உத்திரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பரவல் வேகம் குறைந்து வருவதாகவும் மத்திய குடும்ப நலத்துறை […]
இமாச்சல பிரதேச அரசு தங்களுடைய ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க ஆணை பிறப்பித்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் தங்களுடைய ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அந்தவகையில் இமாச்சல பிரதேச மாநில அரசும் தங்களுடைய ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இமாச்சல பிரதேச மாநில நிறுவன தின விழாவில் அம்மாநில முதல்வர் ஜெயராம் […]
மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மாநில அரசு முட்டுக்கட்டை போடுவதாக இருந்தால் புகாருக்கு மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு செயல்படுத்திவரும் நெடுஞ்சாலை திட்டங்களுக்கு மாநில அரசு தடை விதிப்பதாக பலர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். இது குறித்து மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும். என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “நெடுஞ்சாலை திட்டங்களை உருவாக்கி […]
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அரசு ஊழியர்கள் தங்களுடைய ஊதியத்தை உயர்த்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து ஆந்திராவில் அரசுத்துறையில் அதிகாரிகள் முதல், கடைநிலை ஊழியர் வரை பணிபுரிந்து வரும் லட்சக்கணக்கானோரின் சம்பளம் விகிதம், ஓய்வூதியர் பங்களிப்பு, அரசு ஊழியர்கள் ஓய்வு வயது பற்றி ஜெகன்மோகன் ரெட்டி உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர் அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியத்தை 23 சதவிகிதமாக உயர்த்தி முதல்-மந்திரி உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த ஊதிய உயர்வை அமல்படுத்துவதற்கு […]
ஐஏஎஸ் அதிகாரிகளின் பணிகளின் விதிகளில் திருத்தம் மேற்கொள்ளும் தீர்மானத்தை உடனடியாக மத்திய அரசு கைவிட வேண்டும் என்று கமலஹாசன் வலியுறுத்தியிருக்கிறார். மக்கள் நீதி மையத்தின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் மாநிலங்களில் பணியாற்றும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஎஃப்எஸ் அதிகாரிகளை தேவைப்படும்பட்சத்தில் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசாங்கத்தின் பணிகளுக்கு அழைக்கும் அதிகாரம் கடந்த 1954 ஆம் வருடத்தின் இந்திய ஆட்சிப் பணி விதியை 6-ஆம் புதிய திருத்தம் […]
தமிழகத்தில் மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் போக்குவரத்துக்கான கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரிக்க தொடங்கிய நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனால், பொதுமக்கள் மீண்டும் அச்சம் அடைந்துள்ளனர். கடந்த மாதம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு போடப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, இன்று வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. தொடர்ந்து, கொரோனா பரவலும் உயர்ந்து […]
பல்கலைக்கழக துணைவேந்தர்களை நேரடியாக மாநில அரசே நியமிப்பது தொடர்பான தீர்மானம் விரைவில் நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்றுடன் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. இதில் உரையாற்றிய பாஜக எம்எல்ஏ ஜி.கே மணி தமிழக அரசு நிதியிலிருந்து கட்டப்பட்ட பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிப்பதில் காலதாமதம் ஆகிறது என்று கூறினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் பொன்முடி துணைவேந்தரை நியமிப்பதில் மாநில அரசின் பங்கு இருக்க வேண்டும் என முதலமைச்சர் கருதுகிறார் என கூறினார். […]
கொரோனா தொற்றின் 2-ஆம் அலை பாதிப்புகள் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் நடப்பு கல்வியாண்டின் தொடக்கம் முதல் மூடப்பட்டு, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டது. இதையடுத்து தொற்று படிப்படியாக குறைந்து வந்தன. அதன் பின்னர் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்ததால் கிட்டத்தட்ட 1 மாத காலம் மூடப்பட்டிருந்த பள்ளிகள், டிசம்பர் 18,2021 முதல் 6-ஆம் வகுப்பு மற்றும் […]
சம்பா நெல் அறுவடைக்கு பின்பு நெல் தரிசில் பயறு சாகுபடி செய்வது குறித்த மாநில அரசின் நடவடிக்கைகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பா நெல் அறுவடையை தொடர்ந்து நெல்வயல்கள் தரிசாகக் கிடக்கும் சமயத்தில் அதில் பயறு வகைகளை பயிரிடுவதன் மூலம் விவசாயிகள் அதிக அளவில் ஆபத்தை எட்டலாம். மேலும் பொதுமக்களின் புரத தேவையையும் ஊட்டச்சத்து குறைபாடும் நீக்க முடியும் என்பது மாநில அரசின் கருத்து. எனவே இதற்காக வெறும் 60 நாட்களில் விளையக்கூடிய மற்றும் குறைந்த அளவு […]
தென்னாப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளை அச்சுறுத்து வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் ஒமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு மாநிலங்களில் பரவி வருகிறது. இதனால் ஒமிக்ரான் தொற்று பாதித்த மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தற்போது கர்நாடகா மாநிலத்திலும் ஒமிக்ரான் பரவி வருவதால் பல்வேறு […]
உத்தரகண்ட் மாநிலத்தில் முதலமைச்சரான புஷ்கர் சிங் தாமி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டேராடூனிலுள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில், மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார்களுக்கு 3 % அகவிலைப்படி உயர்வை அளிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 2.5 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் […]
இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்வு ஏற்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் கடந்த வருடம் கொரோனா பரவல் காரணமாக அரசு ஊழியர்கள் அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி அனைத்து மாநிலங்களும் தங்கள் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளித்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கு […]
புதுவையில் கடந்த மாதம் பெய்த தொடர் கனமழையால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். மேலும் ஆயிரக்கணக்கான வீட்டுக்குள் வெள்ளநீர் புகுந்தது. தொடர் மழையால் புதுச்சேரி, உழவர்கரை, காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பெரிய அளவில் பாதிப்பு அடைந்தனர். அதன்பின்னர் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கியது. இதையடுத்து மத்திய குழுவினர் கடந்த மாதம் நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதன் பின்னர் அந்த மாநில முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், வறுமை […]
இந்தியாவின் தலைநகரமான புதுடில்லியில் கடந்த சில வாரங்களுக்கு முன் புகை காரணமாக காற்று மாசுபாடு அடைந்து உள்ளது. இந்த காற்று மாசுபாடானது டில்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து பரவத் தொடங்கியது. இதனால் சிறுவர்கள் மற்றும் முதியவர்கள் என்று அனைவரும் சுவாசிப்பதில் சிரமம் அடைந்தனர். அவர்களின் நலனை கருத்தில்கொண்டு அம்மாநில அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்பட தடை விதித்தது. ஆகவே மறு உத்தரவு வரும் வரை கல்வி நிறுவனங்கள், பொது பயன்பாடுகள், கட்டிட கட்டுமான […]
டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தேவையில்லாத பயிர்க் கழிவுகளை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாளும், தொழிற்சாலைகளிலிருந்து வெளியேறும் புகையினாலும், காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாக தெரிகிறது. டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், தேவைப்பட்டால் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி கொள்ளுங்கள் என்று டெல்லி அரசுக்கு அறிவுறுத்தியது. அதன் பின்னர் பள்ளி, கல்லூரிகளை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு 1 வாரத்திற்கு மூடியது. மேலும் கட்டுமான பணிகளுக்கும் தடை விதித்து உத்தரவிடப்பட்டது. […]
ஆந்திரப் பிரதேசத்தில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநில அரசு ஊழியர்களின் சம்பள உயர்வு தொடர்பாக மாநில அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு பற்றி ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய தலைமை செயலாளர் கபீர் சர்மா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக் கமிட்டியில் 11-வது ஊதிய திருத்த ஆணையம் அளித்த அறிக்கை விரிவாக ஆராய்ந்ததில் உரிய திருத்தம் ஆணையம் […]
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறுவது குறித்த முடிவுகளை மாநில அரசு எடுக்கும் என வேளாண் மந்திரி கூறியுள்ளார். 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வேண்டுமென விவசாயிகள் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர்.இதனைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் நடைபெற்ற குளிர்கால கூட்டத் தொடரின் போது 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் பெறப்பட்டன. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் கைவிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விவசாயிகள் குறிப்பிட்ட விவசாயப் பொருட்களுக்கான […]
டிசம்பர் மாத இறுதிக்குள் அனைவரும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் போடப்பட்டு வந்த தடுப்பூசி, பின்னர் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வந்தது. கடந்த 21ம் தேதி வரை இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 72 கோடி பேர் முதல் தடுப்பூசி […]
சமையல் எண்ணெய் மீதான வரிவிதிப்பு குறைந்ததன் முழுப்பயனும் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டும். இதனை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் ஓராண்டுக்கும் மேலாக சமையல் எண்ணை மீதான விலை உயர்வு அதிகரித்து வருகின்றது. பண்டிகை காலத்தை ஒட்டி சமையல் எண்ணெய் விலை குறைப்பதற்காக கச்சா எண்ணெய் மீதான இறக்குமதி வரியை செப்டம்பர் மாதம் மத்திய அரசு குறைத்தது. இரண்டாவது முறையாக இம்மாதம் இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்துள்ளது. […]
நிலக்கரி அமைச்சகத்தின் எச்சரிக்கையை மாநில அரசுகள் கேட்கவில்லை என்று மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவில் தற்போது டெல்லி, ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் மின் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நிலக்கரி தட்டுப்பாட்டை மறுத்துவரும் மத்திய அரசு, மாநில அரசுதான் நிலக்கரி அமைச்சகத்தின் பேச்சைக் கேட்கவில்லை என்று குற்றம் சாட்டி வருகின்றது. இன்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்ரா மாவட்டத்தில் உள்ள அசோகா நிலக்கரி சுரங்க பணிகளை மத்திய அமைச்சர் பிரஹலாத் […]
மகாராஷ்டிராவில் பருவ மழையால் சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து அம்மாநில அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தை பொறுத்தவரை கொரோனாவின் கோரப்பிடியிலிருந்து தற்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறது. இந்நிலையில் தென்மேற்கு பருவமழை தொடங்கி பல லட்சக் கணக்கான ஏக்கரில் விளைந்திருந்த பயிர்களை நாசம் அடையச் செய்தது. இதனால் விவசாயிகள் பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மகாராஷ்டிர அரசிடம் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து மும்பை முதல்வர் உத்தவ் தாக்கரே, துணை […]
தமிழகத்தில் கடந்த 2016-2017 கல்வியாண்டில் அரசு கோட்டாவில் மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கு மாநில அரசு தேர்வு நடத்தி மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. இதில் மருத்துவ படிப்பிற்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுது.அதன் பிறகு 2017-2018 ஆம் ஆண்டு கல்வி ஆண்டில் நீட்தேர்வு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் மருத்துவ படிப்பிற்க்கு மாநில அரசு வழங்கும் 50% இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இதனால் அரசு மருத்துவர்கள் மற்றும் மாணவர்களின் தொடர் போராட்டத்தின் காரணமாக 2020ஆம் ஆண்டு 463 அரசாணை வெளியிடப்பட்டது. அந்த […]
மத்திய உள்துறை அமைச்சகம், பிளாஸ்டிக் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட தேசியக் கொடிகளை பயன்படுத்தக் கூடாது, என்று மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இம்மாதம் 15 ஆம் தேதி அன்று, நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. அதில், நாட்டு மக்கள் தேசியக்கொடி மேல் பற்று மற்றும் மரியாதை வைத்திருக்கிறார்கள். எனவே தான், சுதந்திரதினம் மற்றும் குடியரசு தினத்தன்று தேசியக்கொடியை தங்கள் சட்டையில் குத்தி செல்கிறார்கள். தேசியக்கொடிக்கான மரியாதையை […]
சமையல் சிலிண்டர் உயர்வுக்கு மாநில அரசு தான் காரணமா? மாநில அரசு 55 சதவீதம் வரி விதிப்பதாக கூறப்படுவது உண்மையா? இதில் தெரிந்து கொள்வோம். இந்தியா முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இந்த பிரச்சினை தாண்டி தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வு என்பது நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக வந்து நிற்கின்றது. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனையாகி கொண்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் மிகவும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான சமையல் […]
கொரோனா பரவலை குறைத்தால் பொது இடங்களில் மக்கள் கூடுவதை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்தியாவில் தீவிரமாக பரவி வந்த கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. பல மாநிலங்களில் கடுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தொற்று பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் பொது இடங்களில் அதிகமாகக் கூட்டம் […]
கர்நாடகாவில் ஐசக் என்பவரின் நூலகத்தில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து அம்மாநில அரசு அந்த நூலகத்திற்கு 8243 புத்தகங்களை வழங்க ஏற்பாடு செய்துள்ளது. கர்நாடகா மாநிலம் மைசூரில் சேர்ந்த சையத் ஐசக் தினக்கூலியாக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது கடின உழைப்பின் மூலம் ஒரு நூலகம் ஒன்றை உருவாக்கி நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி நூலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அந்த தீ விபத்தில் நூலகத்திலிருந்து புத்தகங்கள் அனைத்தும் தீயில் கருகியுள்ளது. […]
சார்தாம் யாத்திரை செல்ல உத்தரகாண்ட் மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஹரித்துவாரில் நடந்த கும்பமேளாவில் பல லட்சம் பேர் ஒன்று கூடியதால் கொரோனா பரவல் அதிக உச்சத்தை அடைந்தது. இதற்கு ஹரித்துவாரில் ஓடும் கங்கை மாதா தெய்வம் நம்மை காப்பாற்றும் கொரோனா பாதிப்பு வராது என உத்தரகாண்ட் முதல்வர் தீரத்சிங் ராவத் கூறியிருந்த நிலையில் தற்போது பத்ரிநாத், கேதார்நாத், யமுனோத்ரி, கங்கோத்ரி ஆகிய நான்கு புனித தலங்களுக்கு உத்தரகாண்ட் மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
மேற்கு வங்காள மாநிலத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி குறைக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 2 வாரமாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தது. முதல் முறையாக பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளதால் மக்களும் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகியுள்ளனர் . இதற்காக மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர். இதற்காக மேற்கு வங்காள அரசு பெட்ரோல் மற்றும் […]
மாநில அரசுகள் கடன் பெறுவதற்குத் தேவையான சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதற்கு கால அவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது. மாநில அரசுகள் நடப்பு நிதியாண்டில் கூடுதல் கடன் பெறுவதற்கு தேவையான சீர்திருத்தங்களை நிறைவேற்றுவதற்குரிய கால அவகாசத்தை 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதுவரை 9 மாநிலங்களில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தை அமல்படுத்தி உள்ளன. நான்கு மாநிலங்கள் தொழில் தொடங்க உகந்த சீர்திருத்தங்களை மேற்கொண்டு உள்ளன. அந்த மாநிலங்களுக்கு ரூ.40.251 […]