தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்த நிலையில், தற்போதைய நிலவரபடி கடந்த 24 மணி நேரத்தில் 95 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய பாதிப்பு 105 ஆக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இன்று பாதிப்பு 100க்கு கீழ் குறைந்துவிட்டது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் த்தில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 51 ஆயிரத்து 910 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 34 லட்சத்து 12 ஆயிரத்து 714 ஆக உயர்ந்துள்ள நிலையில் […]
Tag: மாநில செய்தி
அமெரிக்காவால் தேர்ந்தெடுக்கப்பட்ட துணை அதிபர் கமலா ஹாரிஸ் பெண் சக்தியை நிரூபித்துள்ளார் என்று தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் பாராட்டியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி 7 பேர் விடுதலையை நீதிமன்றம் அறிவித்தால் ஏற்றுக்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி, ஏழு பேர் விடுதலைக்கு ஆளுநருக்கு திமுக உள்பட அரசியல் கட்சியினர் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், இது குறித்து இவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுதலை செய்வதை முடிவு செய்ய வேண்டியது நீதிமன்றம் தான் என்றும், அவர்களை விடுவித்தால் சிறைச்சாலைகளில் 25 ஆண்டுக்கும் […]
மத்திய ஜல் சக்தி துறை அமைச்சகம் நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலமாக தமிழகத்தை தேர்வு செய்துள்ளது. நாட்டில் நீர் மேலாண்மையில் சிறப்பாக விளங்கும் மாநிலங்களுக்கு மத்திய அரசு விருது பட்டியலை அறிவித்துள்ள நிலையில் இவ்விருதினை தமிழக அரசு பெற்றுள்ளது. மத்திய நீர்வள அமைச்சகம் அறிவித்துள்ள இந்த அறிவிப்பில், நீர் மேலாண்மையில் தென்னிந்தியாவில் ஆறுகளை மீண்டும் உயிர்ப்பிக்க செய்வதில் சிறந்த மாவட்டமாக வேலூர் மற்றும் கரூர் மாவட்டங்களையும், அதேபோல் நீர் மேலாண்மையை சிறப்பாகக் கையாண்ட உள்ளாட்சி அமைப்புகளில் […]
எஸ் ஏ சந்திரசேகர் தொடங்கிய கட்சியில் இருந்து விலகுவதாக விஜய்யின் தாயார் ஷோபா பேட்டி அளித்துள்ளார். நேற்று எஸ் ஏ சந்திரசேகர் அகில இந்திய இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்பது கட்சியாக மாறியுள்ளது என்றும், மேலும் அரசியல் கட்சியை பதிவு செய்ததற்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் விளக்கம் அளித்துள்ளார். இதை அறிந்த நடிகர் விஜய் எனது தந்தை திரு எஸ் ஏ சந்திரசேகர் தொடங்கிய கட்சிக்கும் எனக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ எவ்வித […]
திண்டிவனத்தில் தலைமை காவல் அதிகாரி மது போதையில் காரைஒட்டியதில் அதில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்த பெரமண்டூர் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் கோபாலபுரத்தில் உள்ள தனது வயல் வெளியை பார்வை பார்த்துவிட்டு புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலை வழியாக வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்றிருக்கிறார். அப்பொழுது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த போலீஸ் கார் ஒன்று தர்மராஜ் இருசக்கர வாகனத்தின் மீது பின்புறமாக மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் தர்மராஜ் […]
கடன் பிரச்சினையின் காரணமாக ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமாரி மாவட்டம் நாகா்கோவில் அருகே டி. வி.டி நகர் காந்தி சாலையை சேர்ந்தவர் நாகராஜன் ஆட்டோ டிரைவர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் இவர் பலரிடம் பணம் கடனாக வாங்கி இருக்கிறார். கடன் கொடுத்தவர்கள் பணத்தைதிருப்பி கேட்டுள்ளனர் ஆனால் அவரால் பணத்தை கொடுக்க முடியவில்லை இதன் காரணமாக மிகுந்த மனவேதனைக்கு ஆளானார். இந்த நிலையில் நேற்று […]
சுசீந்திரம் அருகே மர்ம விலங்கு கடித்தில் 800 கோழிகள் இறந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டதில் இருக்கும் சுசீந்திரம் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். வீட்டின் அருகில் கோழி பண்ணை வைத்திருக்கும் இவர் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 1 500 கோழிகளை வளர்த்து வருகின்றார். நேற்று முன்தினம் வழக்கம் போல் பண்ணைக்கு சென்று கோழிகளுக்கு தீவனம் மற்றும் தண்ணீர் வைத்து விட்டு வந்துள்ளார். பண்ணைக்கு நேற்று காலை பண்ணை க்கு சதீஷ் சென்றுள்ளார். […]
மூன்று வாலிபர்கள் குடிபோதையில் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்பட்டுத்தியுள்ளது. கோவை கணபதி அருகே உள்ள காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத். இவர் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டின் வாசலில் நிறுத்திவிட்டு வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்பொழுது அவ்வழியே மதுபோதையில் வந்த அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார், தமிழரசன், உண்ணி என்ற பிரவீன் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து கோபிநாத்தின் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் தீ வைத்து எரித்துள்ளனர். […]
ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த வங்கி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கருப்பராயன் கோவில் அருகில் ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் ரவி இவர் கட்டிட தொழிலாளி ஆவார். இவருடைய மகன் மதன்குமார் இவர் கவுண்டம்-பாளையத்தில் உள்ள ஒரு தனியார் வங்கியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைனில் சூதாட்டம் விளையாடி வந்துள்ளார். இதில் அவர் தொடக்கத்தில் அதிக பணம் சம்பாதித்து […]
பள்ளி மாணவி தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில்இருக்கும் கருக்கம்பாளையத்தை தை சேர்தவர் சேர்ந்தவர் முத்துசாமி. இவர் சொந்தமாக லாரி ஓட்டி வருகிறார். இவருடைய மனைவி சாந்தி இவர்களுடைய மகள் அகல்யா ஆவார். இவர் கரிச்சிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 1 முடித்து இருக்கிறார். இந்நிலையில் நேற்று முத்துசாமி லாரியில் பெங்களூரு சென்று விட்டதாகவும் மற்றும் தாய் சாந்தி உறவினர் வீட்டிற்கு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக சென்று விட்டதாக கூறப்படுகின்றது. பிறகு […]
திருச்சியில் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா காடுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி இவரது மகன் நவீன் இவர் மேஸ்திரியாக வேலை பார்த்து வந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ஆலம்பட்டியை சேர்ந்தவர் கணேசன்என்பவரது மகள் சுஜிபாலா. நவீன் கட்டட வேலைக்காக பேருந்தில் சென்ற போது சுஜிபாலாவின் அறிமுகம் ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் இவர்களது சந்திப்பு காதலாக மாறி மூன்று மாதங்களாக இருவரும் காதலித்து வந்தனர்.இந் நிலையில் கடந்த 29-ஆம் […]
திருச்சி அருகே வாய்க்காலில் மூழ்கி 4 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாநகரில் ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் ரோடு ரங்கா நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன்- லட்சுமி தம்பதியினருக்கு 4 வயதில் கௌதம் வாசுதேவன் என்ற மகன் இருந்தான். இவர்கள் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கல்லணை அருகே உள்ள கிளிக்கூண்டு கிராமத்திற்கு சென்றுள்ளனர். அப்போது தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் வாசுதேவன் நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால் சந்தேகம் அடைந்த […]
மருத்துவம் படிக்கலாம் சிகிச்சைமையம் நடத்திய போலி மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் அருகே உள்ள போடி மேலத்தெருவை சேர்ந்தவர் அப்பாஸ். இவர் சன் மனநல மறுவாழ்வு மையம் என்ற பெயரில் தேனி என் ஆர் டி நகர் கஸ்தூரிபாய் தெருவில் மருத்துவ சிகிச்சை மையம் நடத்தி வருகின்றார். இவர் முறையான மருத்துவப் படிப்பு படிக்காமல் போலியான சான்றிதழ்களை கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை பார்த்து வந்ததாக மாவட்ட கலெக்டருக்கு புகார் சென்றது . இது பற்றி […]
புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி அதிகாரிகள் உரிய நேரத்தில் பணிக்கு வராவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். புதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 9 மணிக்குள் செயல்படத் தொடங்கும். ஆனால் கடந்த சில மாதங்களாக அனைத்து அரசு அலுவலகங்களிலும் அதிகாரிகள் தாமதமாக பணிக்கு வருவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் இன்று காலை திடீரென ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர் நாராயணசாமி ஒரு சில அதிகாரிகள் பணிக்கு வராததால் அது […]
போலி இ- மெயில் புகாரில் யூடியூப் சேனலை சேர்ந்த மாரிதாஸ் என்பவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். தனியார் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரையடுத்து மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் மாரிதாஸ் மீது சென்னை சைபர் கிரைம் போலீசா வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். தகவல் தொழில்நுட்ப சட்டத்தை தவறாக பயன்படுத்துதல் என்ற பிரிவின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. தனியார் தொலைக்காட்சி இ- மெயில் முகவரியை தவறாக பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பொய்யான தகவலை […]
சென்னை உயர்நீதிமன்றத்தில் வாய்தா பெற்றுக் கொண்டு அவசரஅவசரமாக கைது செய்கிறது என்று திமுக தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பட்டியலின சமுதாய மக்களுக்கு வழங்கிய இட ஒதுக்கீடு குறித்து பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது இதற்கு அவர் மீது காவல் நிலையத்தில் எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது இந்த வழக்கு பதிவின் கீழ் நின்று அவரை இன்று அதிகாலை போலீசார் கைது செய்தனர் தேனாம்பேட்டை காவல் […]
தமிழகத்தில் புதிய அரசு பணிகளை உருவாக்க தடை விதிக்கப்பட்டு உத்தரவிடபட்டுள்ளது. கொரோனாவால் முடக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. முன்னதாக அரசு துறைகளில் நிதி சிக்கன நடவடிக்கைகளை கடைபிடிக்க தமிழக அரசு அறிவிப்பு வெள்ளியிட்டதை தொடர்ந்து தற்போது புதிய பணியிடங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இருக்கக்கூடிய பணியாளர்கள் டிஎன்பிஎஸ்சி போன்ற விஷயங்கள் தொடர்பாக புதிய இடங்களுக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பலாம் என்றும் புதிதாக பணியிடங்கள் உருவாக கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. பொருளாதார சீர்திருத்த […]