சென்னை தலைமை செயலகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சரான பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது “தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளில் 1895 கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்புடன், அதற்கான நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. சென்ற 10 வருடங்களில் நியமிக்கப்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் எல்லாம் அந்தந்த கல்லூரி முதல்வர்கள் வாயிலாக நியமிக்கப்பட்டனர். எனினும் அதில் பல்வேறு குளறுபடிகள் இருந்தது. மேலும் பிஹெச்டி பெற்றவர்கள் தகுதியானவர்களுக்கு எல்லாம் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று குற்றச்சாட்டு இருந்தது. […]
Tag: மாநில செய்திகள்
அனைத்து இடை நிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்தை வழங்க வேண்டுமென நாம் தமிழர் கட்சியின் சார்பாக சீமான் வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஆட்சிப் பொறுப்பேற்று 20 மாதங்கள் ஆகியும் தேர்தல் வாக்குறுதிப்படி, இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை களைந்து அவர்களுக்கு சம ஊதியம் வழங்காமல் தி.மு.க அரசு ஏமாற்றி வருவது ஆசிரியர் பெருமக்களுக்கு செய்கிற பச்சை துரோகம் ஆகும். எனவே நாட்டின் வருங்காலத் தலைமுறையை செதுக்கும் சிற்பிகளான ஆசிரியர்கள் மத்தியில் நிலவும் ஊதிய […]
தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி டுவிட் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அவற்றில், கடந்த 10-ம் தேதி போட்டோஷாப் கட்சியின் மாநிலத் தலைவரும், இளைஞரணியின் தேசியத் தலைவரும் விமானத்தில் கிளம்பும்போது பொறுப்பே இல்லாமல் விமானத்தின் “எமர்ஜென்சி” கதவை திறந்து விளையாடி இருக்கின்றனர்” என குறிப்பிட்டுள்ளார். போட்டோஷாப் கட்சி என சமூகவலைதளங்களில் ட்ரோல் செய்யப்படுவது பா.ஜ.க கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே அமைச்சர் செந்தில் பாலாஜி குறிப்பிட்டிருப்பது பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையை தான் என பலர் சமூகவலைதளங்களில் […]
வருடந்தோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் தமிழக அரசு சார்பாக பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் பொங்கல் பரிசுத் தொகுப்பில் முதலில் கரும்பு இடம்பெறவில்லை. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் அதிருப்தியடைந்து தொடர் போராட்டங்களை முன்னெடுத்தனர். அதன்பின் பொங்கல் பரிசுத்தொகுப்பில் முழு கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதேபோன்று பொங்கல் பரிசுத்தொகுப்பில் மஞ்சளும் இடம்பெற்றால் விவசாயிகள் பயனடைவார்கள். ஆகவே அது தொடர்பாகவும் முதல்வர் […]
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது “நான் திருச்சிக்கு பல முறை வந்துள்ளேன். அதாவது, கட்சியின் அடிப்படை உறுப்பினராக, இளைஞரணி செயலாளராக, எம்எல்ஏவாக வந்திருக்கிறேன். தற்போது முதன் முறையாக அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு வருகை தந்திருக்கிறேன். இந்த தி.மு.க ஆட்சியில் பெண்களுக்கான எண்ணற்ற நலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. தமிழகத்தின் திராவிட மாடல் ஆட்சியானது பிற மாநிலங்களுக்கும் முன் உதாரணமாக திகழ்கிறது. முத்தமிழ் அறிஞரின் பேரனாகவுள்ள பெருமையைவிட உங்களது […]
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி சென்னைவாசிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பற்றி காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். அதன்படி நடப்பு ஆண்டு மரணமில்லாத புத்தாண்டாக அனுசரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். முக்கிய சாலையான காமராஜ் சாலை, வாலாஜா சாலை உள்ளிட்டவைகளில் வாகனங்கள் பார்க்கிங் செய்ய அனுமதியில்லை. இதையடுத்து நடமாடும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் அமைக்கப்படும். அதன்பின் பைக்ரேசிங் கட்டுப்பாடுகள் அதிகம் கண்காணிக்கப்படும். இதுவரையிலும் 360 வண்டிகளை பறிமுதல் செய்து உள்ளோம். கடற்கரையில் கூட்டம் போடுவதற்கு தடையில்லை. எனினும் கொரோன […]
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் உறுப்பு கல்லூரிகளில் 2001–2002 ஆம் கல்வி ஆண்டில் பொறியியல் படித்து அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்பட்டது. அந்த வகையில் அம்மாணவர்கள் இந்த மாதம் நடைபெறும் அரியர் தேர்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டனர். தற்போது கடந்த முறை நடந்த இளங்கலை செமஸ்டர் தேர்வுகளில் தேர்ச்சி பெறாமல் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கும் வகையில் அடுத்து நடைபெற இருக்கும் தேர்வில் பங்கேற்கலாம் என பல்கலைக்கழகம் தெரிவித்து […]
தமிழ்நாடு அரசு தரப்பிலிருந்து 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. எனினும் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பை இணைக்கும் நுகர்வோருக்கு மட்டும் மாதம் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது. இந்த அறிவிப்புக்கு பின் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனம் (TANGEDCO) நுகர்வோரின் ஆதார் அட்டையை அவர்களின் நுகர்வோர் எண்ணுடன் இணைக்க துவங்கியுள்ளது. தற்போது இதுகுறித்த புது புகார்கள் வெளியாகி வருகிறது. […]
2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள். இதன் மூலம் அரசுக்கு சுமார் 2,356. 67 கோடி செலவினம் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த பரிசு தொகுப்பில் கரும்பு இடம்பெறாமல் இருந்ததால் தமிழக அரசு […]
கிருஷ்ணகிரி ஓசூர் அருகில் உள்ள உத்தனப்பள்ளி, நாகமங்கலம் ஆகிய பகுதிகளில் தொழிற்பேட்டை அமைக்கவும், பெங்களூருவுக்கு செல்லும் சாட்டிலைட் சாலை அமைக்கவும் விளைநிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு இறங்கி இருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் தீவிர போராட்டத்தில் இறங்கி உள்ளனர். இச்சூழலில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று போராட்டத்தில் பங்கேற்று தன் ஆதரவை தெரிவித்தார். அப்போது சீமான் செய்தியாளர்களிடம் பேசியதாவது “இந்த பகுதியில் 500 ஏக்கர் கையகப்படுத்துவதாக கூறிய […]
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “தற்போது சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. அதேபோல் நமது நாட்டிலும் தொற்று ஏற்படாமல் இருப்பதற்காக மத்திய,மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த2 ஆண்டுகள் தடைப்பட்டிருந்த புத்தாண்டு கொண்டாட்டத்தை இந்த ஆண்டு மிகுந்த உற்சாகத்துடன் நடத்த நட்சத்திர உணவகங்கள் தயாராகி வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை […]
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “அமமுகவிலிருந்து விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கே அ.தி.மு.க-வுக்கு சென்றுள்ளனர். இதற்கிடையில் பலர் என்னை சந்திக்க நேரம் கேட்டுள்ளனர். இதனால் அவர்களை நான் வரச் சொல்லியிருக்கிறேன். அதிமுகவினர் எங்களது கட்சியை சேர்ந்த யாரையாவது பிடித்தால் அடுத்த நாளே திறமையான தகுதியான நபர்களை எங்களால் நியமிக்க இயலும். அ.ம.மு.க வீரர்களின் பட்டாளம் ஆகும். தொண்டர்களை நம்பித்தான் இந்த இயக்கமானது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. விலகி செல்பவர்களின் […]
தி.மு.க அரசு தன் தேர்தல் வாக்குறுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தருவது பற்றி கூறி இருந்தது. அதன்படி லட்சக்கணக்கான இளைஞர்கள் பயன்பெறும் அடிப்படையில் பல கோடிகளை முதலீடு செய்து அரசு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் விதமாக புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்திருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கிருஷ்ணகிரி, தருமபுரி, மதுரை, கரூர், நாமக்கல், திண்டுக்கல், புதுக்கோட்டை, தேனி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி போன்ற […]
நாமக்கல்லில் இன்று (டிசம்பர் 28) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 50 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 40 காசுகளிலிருந்து, டிசம்பர் 24 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 50 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்திலிருந்து பா.ஜ.க சார்பாக மொத்தம் 25 எம்பிக்கள் வெற்றி பெற்று டெல்லி செல்வது உறுதி என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்து இருக்கிறார். மேலும் அவர் கூறியிருப்பதாவது “ஆளும் கட்சி அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு கூட தருவதற்கு அவர்கள் தயாராக இல்லை. இதன் காரணமாக மக்கள் மீது இந்த அரசுக்கு வெறுப்பு வந்து விட்டது. ஆகையால் கண்டிப்பாக வரும் பாராளுமன்ற தேர்தலில் பாஜகவின் வெற்றி மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை […]
தேமுதிக கட்சியின் தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது,”ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை ஆகியவற்றுடன் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தது. ஆனால் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் இந்த தொகுப்பில் இடம்பெறவில்லை. மேலும் ரொக்க பணமும் குறைவாக உள்ளது. இந்நிலையில் சொத்துவரி, மின் கட்டணம், […]
ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “நமது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2023-ஆம் ஆண்டிற்கான புதிய அட்டவணையை வெளியிட்டுள்ளது. அந்த அட்டவணை காலி பணியிடங்களுக்கு ஏற்ப அமையவில்லை. இதனால் தற்போதுள்ள காலியிடங்களுக்கு ஏற்ப அந்த அட்டவணையை மாற்ற அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து இருந்தேன். ஆனால் தமிழக அரசு பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்கு விலை 10 பைசா என்ற பழமொழியை போல் அரசு துறைகள், […]
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள விளவங்கோடு அரசு மேனிலைப் பள்ளியில் 177-வது ஆண்டு விழா நடந்தது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக டி.ஜி.பி சைலேந்திரபாபு பங்கேற்று, மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். இதையடுத்து டி.ஜி.பி சைலேந்திரபாபு நிகழ்ச்சியில் பேசியதாவது, “உலகில் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. கல்வி எனும் ஆயுதத்தை மாணவர்கள் கையில் எடுக்க வேண்டும். நெல்சன் மண்டேலா கூறியது போன்று உலகிலேயே சிறந்த ஆயுதம் கல்வி தான். அதனை மாணவர்கள் கையில் எடுங்கள். அதன்பின் உங்களை வளர்த்த தாய்க்கு நன்றி சொல்லுங்கள். […]
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு சக மாணவன் மஞ்சள் கயிறு கட்டிய சம்பவம் தமிழகத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அந்த விசாரணையில் மாணவனை கைது செய்ததற்கு போலீசை கண்டித்து நீதிமன்றம், வழக்கின் விசாரணையை சிறார் நீதிக் குழுமத்துக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தது. அத்துடன் போக்சோ மற்றும் சிறார் குற்றங்களை காவல்துறை கையாள்வது குறித்தும், அவ்வப்போது உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டி இருப்பதால் இவ்வழக்கை விசாரிக்க சிறப்பு […]
சீனா உட்பட சில நாடுகளில் கொரோனா நோய் பரவல் அதிகரித்து வருவதை அடுத்து, தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி மத்திய, மாநில அரசுகள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதற்கிடையில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. ஒவ்வொரு வருடமும் புத்தாண்டு தினத்தின் போது சென்னை முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டும். இந்த கொண்டாட்டங்களின் போது அசம்பாவித சம்பவங்களை தவிர்ப்பதற்காக சென்னை மாநகரம் முழுவதும் […]
தனியார் ஊழியர்களுக்கும் மாதம் 2 லட்ச ரூபாய் வரை பென்சன் வழங்கப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கு மட்டும் கடைசி காலத்தில் பென்சன் வழங்கப்படும். அதேபோல் தற்போது தனியார் துறையில் வேலை பார்க்கும் ஒவ்வொருவருக்கும் மாதம் கைநிறைய பென்சன் வழங்கப்படுகிறது. இந்நிலையில் வாங்கும் சம்பளம் குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் குடும்ப செலவுகள் போக ஒரு சிறு தொகையை சேமித்து வைத்தாலே அது கடைசி காலத்தில் உங்களுக்கு கை கொடுக்கும். இந்நிலையில் கடைசி காலத்தில் பண பிரச்சினை இல்லாமல் வாழ்வதற்கு […]
தபால் நிறுவனம் மக்களுக்காக பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. நமது நாட்டில் உள்ள தபால் நிறுவனம் புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த நிறுவனம் மீது மக்களுக்கு நம்பிக்கை அதிக அளவில் உள்ளது. இந்நிலையில் அதிக அளவில் மக்கள் தபால் அலுவலக சேமிப்பு கணக்கை தொடங்கியுள்ளனர். அதேபோல் தற்போது தபால் துறை வங்கி Indian Post payments Bank, premium savings account ஆகிய சேவை வழங்குகிறது. இந்த பிரீமியம் சேமிப்பு மூலம் நீண்ட காலம் பணத்தை […]
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஓரளவு மேகமூட்டம், லேசான, முதமான மழை பொழிய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்லது. இந்நிலையில் 7.20க்குள் 6 மாவட்டங்களில் மழை இன்று காலை 7.20 மணிக்குள் மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 6 மாவட்டங்களில் மிதமானமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று முதல் டிச.29ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மிதமானமழை பெய்யக்கூடும். டிச.30 ஆம் தேதி தமிழ்நாடு, […]
சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவர் கோபண்ணா எழுதிய “மாமனிதர் நேரு” நூல் வெளியீட்டு விழாவானது நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று நூலினை வெளியிட்டார். இதையடுத்து முதல்வர் பேசியதாவது “ராகுல்காந்தி பாத யாத்திரை வாயிலாக இந்தியாவில் பூகம்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் ராகுல் பேசுவது நேரு பேசுவது போன்று இருக்கிறது. கோட்சேவின் வாரிசுகளுக்கு காந்தி,நேரு வாரிசுகளின் பேச்சானது எரிச்சலை ஏற்படுத்த தான் செய்யும்” என அவர் தெரிவித்தார்.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மீண்டும் அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. நமது தமிழ்நாட்டில் 2.36 கோடி மின் பயனீட்டாளர்கள் உள்ளனர். அவர்களுடன் விவசாய இணைப்புகள், கைத்தறி விசைத்தறி தொழிலாளர்கள் என 21 லட்சம் பேருக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்தது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது.இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது,” நமது மாநிலத்தில் உள்ள […]
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். மகாகவி பாரதியாரின் பேத்தியான லலிதா பாரதி இன்று உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் பலர் அவரின் இல்லத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் இது குறித்த முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிறந்த கவிஞரான மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் மகள் வழி பேத்தி லலிதா பாரதி அம்மையார். இவர் 40 ஆண்டுகள் இசை ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். மேலும் தனது தாத்தாவின் பாடலை இசை […]
சான்றிதழ்களை ஒரு மாதத்திற்குள் வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தலைமை செயலகத்தில் இன்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பேரிடர் மேலாண்மை துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட பல துறைகளின் முக்கிய திட்டங்கள் மற்றும் பணிகள் குறித்து தகவல் பலகை தரவுகளின் அடிப்படையில் முதலமைச்சர் ஆய்வு செய்தார். இதில் தலைமை செயலாளர் வெ. இறையன்பு, நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் […]
2004ம் வருடம் ஏற்பட்ட ஆழிபேரலையால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார். லான்ச் படகு வாயிலாக நடுக் கடலுக்குள் சென்று பால் ஊற்றியும், மலர்களை தூவியும் மறைந்தவர்களுக்கு மரியாதை செய்தார். இதையடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது “இந்த விடியா அரசு எந்த இயற்கை இடர்பாடுகளுக்கும் மக்களுக்கும் நன்மை செய்யவில்லை. ஓ.பி.எஸ் ஒரு டம்மி, ஒரிஜினல் இல்லை. பண்ருட்டி ராமச்சந்திரன் மேல் எனக்கு […]
சென்னையில் அனைத்து மயானங்களையும் இரண்டு வருடங்களுக்குள் மின்மயானமாக மாற்றும் முயற்சியில் மாநகராட்சி நிா்வாகமானது இறங்கி உள்ளது. சென்னையில் மாநகராட்சியின் வாயிலாக எரியூட்டும், புதைக்கும் வகையில் 209 மயானங்கள் இருக்கிறது. இதில் 49 மயானங்கள் நவீனமான முறையில் எரியூட்டும் அடிப்படையில் உள்ளது. மற்றவை விறகுகள் வாயிலாக எரியூட்டப்படும் விதமாக அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் சிங்கார சென்னை 2.0 திட்டம் வாயிலாக சென்னை மாநகா் முழுவதும் பல பணிகள் மூலம் அழகுபடுத்தப்பட்டு வருகிறது. இவற்றில் ஒன்றாக மயானங்களும் நவீனமயமாக்கப்பட்டு […]
நியாய விலை கடை பணியிடங்கள் நிரப்புவது குறித்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கோமல் கிராமத்தில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருந்ததாவது, “நமது தமிழ்நாட்டின் வேளாண் கூட்டுறவு வங்கியின் கீழ் செயல்படும் நியாய விலை கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுனர் பணிக்கான நேர்முகத் தேர்வுகள் பல மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எந்த தேர்வு நடைமுறைகளும் பின்பற்றாமல், விற்பனையாளராக […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “ஆண்டுதோறும் தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம். அதேபோல் கடந்த ஆண்டு பரிசுத்தொகுப்பில் பச்சரிசி, சர்க்கரை, ஏலக்காய், கரும்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு பச்சரிசி, சர்க்கரை மட்டுமே வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை […]
கோவைக்கு வருகை புரிந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேரு விளையாட்டு அரங்கில் ரூ.7 கோடி மதிப்பில் செயற்கை இழை ஓடுதளப்பாதை அமைப்பதற்கு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தன் துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, கலைஞரின் பேரன், ஸ்டாலின் மகன் என்ற பெருமையை விட நான் உங்கள் வீட்டு செல்ல பிள்ளையாகவே இருக்க ஆசைப்படுகிறேன் என்று உதயநிதி ஸ்டாலின் […]
பிரபல மருத்துவக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றுள்ளது. சென்னையில் உள்ள கே.கே. நகரில் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் 2-வது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்பு துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் ஷஷாங்க் கோயல், மருத்துவக் கல்லூரி டீன் காளிதாஸ் தத்தாத்ரேயா சவான், கல்லூரி பொது இயக்குனர் […]
துணிக்கடையில் 10 ரூபாய்க்கு டி-ஷர்ட் விற்பனை செய்யப்படும் என அறிவித்ததால் மக்கள் கூட்டம் அலைமோதியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம் பகுதியில் இன்று புதிதாக துணிக்கடை ஒன்று திறக்கப்பட்டது. இந்த கடை திறப்பை முன்னிட்டு அறிமுக சலுகையாக 10 ரூபாய்க்கு டி-ஷர்ட் விற்பனை செய்யப்படுவதாக நேற்று விளம்பரம் செய்யப்பட்டது. இந்த விளம்பரம் மக்களை பெரிதும் கவர்ந்த நிலையில், ஏராளமான வாலிபர்கள் அதிகாலை 5 மணி முதல் கடையின் முன்பு குவிந்தனர். ஆனால் கடை காலை 8 மணி […]
இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளர் ஜெ. குமரகுருபரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோவில்களின் சொத்துக்களை 5 ஆண்டுகள் பொது ஏலம் மூலம் குத்தகைக்கு விட அனுமதி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் காலி மனைகளை குத்தகைக்கு விடும்போது அது வணிகம் அல்லது குடியிருப்பு நோக்கில் பயன்படுத்தப்படவுள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். பின்னர் அதற்கு வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும். […]
பெரியார் 49வது நினைவு தினத்தை முன்னிட்டு கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியாரின் சிலைக்கு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “சென்ற அ.தி.மு.க ஆட்சியில் இழந்த பெருமைகளை மீட்டெடுத்து இன்று ஒரு சிறந்த ஆட்சியை முதல்வர் வழிநடத்தி வருகிறார். மேலும் ஒன்றரை வருடங்களில் அ.தி.மு.க ஆட்சியில் சீரழிக்கப்பட்ட நிதி நிலைமைகளை சரிசெய்து 85 விழுக்காடு வாக்குறுதிகளை முழுவதுமாக வழங்கி இருக்கிறார். பா.ஜ.க […]
தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு திருநெல்வேலி மாவட்ட காவல் ஆயுதப் படையில் நகர்புற பகுதிகளுக்கான புது ரோந்து வாகன திட்டத்தையும், ஆயுதப்படை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அறையையும் நேற்று (டிச,.24) திறந்து வைத்தார். இதையடுத்து டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “தமிழ்நாடு முதல்வர் அறிவுறுத்தலின் படி நகர்ப்புற பகுதிகளில் கூடுதல் ரோந்து பணி மேற்கொள்வதற்காக 400 ரோந்து வாகனங்கள் காவல்துறை செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. குற்றவாளிகளை பிடிக்க செல்லும்போது காவல்துறையினரை குற்றவாளிகள் தாக்கும் […]
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாகையில் இருந்து சுமார் 470 கி.மீ. கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து, இன்று இலங்கை கடற்கரை அருகில் நிலவக் கூடும். அதன் பிறகு மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து 26ஆம் தேதி காலையில் இலங்கை வழியாக குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக, தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, […]
நிதிநிலை சரியானதும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் உறுதி தெரிவித்தார். இதுபற்றி அவர், தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் வெளிப்படை தன்மையோடு நிதிநிலை அறிக்கையினை வெளியிட்டார். கடந்த 10 வருடகால அதிமுக ஆட்சியில் பொருளாதாரத்தை சீரழித்து சென்றனர். தற்போது நிதிநிலை சீராகி வரும் நிலையில் தமிழக நிதிநிலை சீராகி வரும் நிலையில் இனிவரும் காலங்களில் அரசு ஊழியர்களுக்கான ஊதியத்தை CM உயர்த்துவார். பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அரசு நடைமுறைபடுத்த வேண்டும் என்பதே […]
எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். நேற்று எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது, “நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தோம். அந்த திட்டங்களுக்கு தற்போது புதிதாக பெயிண்ட் அடித்து ஸ்டிக்கர் ஒட்டும் வேலையை தான் திமுக அரசு செய்து வருகிறது. மேலும் நாங்கள் ஆட்சியில் இருக்கும் போது பள்ளிக்கல்வித்துறையில் ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட சி.எஸ்.ஆர். எனப்படும் நிறுவனங்களின் சமூக பங்களிப்பு நிதி திட்டத்திற்கு தற்போது இவர்கள் நம்ம ஸ்கூல் என்ற […]
விமான நிலையத்தில் நடைபெறும் பணிகள் 2025-ஆண்டில் முடிவடையும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். சென்னையில் உள்ள விமான நிலையத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிலையங்கள் என இரண்டு முனையங்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றை விரிவாக்கம் செய்வதற்கு இந்திய விமான இயக்குனரகம் முடிவு செய்தது. அதற்காக 2,467 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. தற்போது வெளிநாட்டு முனைவும் மற்றும் உள்நாட்டு முனையத்திற்கு இடையே டெர்மினல்-2 விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. அதில் 95 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டதாகவும், […]
வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததாவது,”தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 480 கிலோமீட்டர் கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு திசையில் மெதுவாக இலங்கை வழியாக குமரி கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும். இதனால் நாளை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, ராமநாதபுரம், […]
எம்.ஜி.ஆரின் நினைவு நாளை முன்னிட்டு அவருக்கு பலரும் மரியாதை செலுத்தியுள்ளனர். தமிழக மக்களின் மனதில் நீங்காத இடத்தை பெற்றவர் எம்.ஜி.ஆர் . இவர் மக்களுக்காக பல நலத்திட்டங்களை அறிமுகம் செய்துள்ளார். இன்று இவரது நினைவு நாளை முன்னிட்டு மெரினாவில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக கட்சியை சேர்ந்த பலர் மரியாதை செலுத்தி வந்தனர். அதேபோல் எடப்பாடி பழனிசாமியும், தனது ஆதரவாளர்களுடன் வந்து மரியாதை செலுத்தினார். அவர் சென்ற பிறகு முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம் […]
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது தமிழ்நாடு பாடத்திட்டத்தின் மூலம் படித்த 10-ஆம் வகுப்பு மாணவர்கள் ஜே. இ.இ. எனப்படும் கூட்டு நுழைவுத்தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில் தங்களது மதிப்பெண்களை குறிப்பிட வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த 2020-2021 ஆண்டில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படாததால் மதிப்பெண் வழங்கப்படவில்லை. ஆனால் அப்போது மதிப்பெண்கள் குறிப்பிடப்பட வேண்டும் என […]
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் நினைவு நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவு இடத்தில் ஓபிஎஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது ஓபிஎஸ் உடன் அவரது ஆதரவாளர்களும் கூட்டமாக சென்று எம்ஜிஆர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து ஓபிஎஸ் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதாவது “அதிமுகவை தன்வசமாக்க நினைக்கும் துரோகிகளை வீழ்த்துவோம். இதையடுத்து குறுக்கு வழியில் கட்சியை அபகரிக்கும் முயற்சியை நிறுத்துவோம்” என்று ஓபிஎஸ் தலைமையில் அவர்கள் உறுதிமொழி […]
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அம்மா மரணம் பற்றி சசிகலா செய்தியாளர்களிடம் பேசினார். அதாவது “சிகிச்சைக்கு வெளிநாடு அழைத்து செல்லலாம் என ஜெயலலிதாவிடம் நான் கேட்டபோது வேண்டாம் என்று அவர் மறுத்தார். அவரை வெளிநாடு அழைத்துச்செல்ல வேண்டும் என்ற ஆசை எங்களுக்குள் இருந்தது. ஆனால் தமிழகத்திலேயே நல்ல மருத்துவம் கிடைப்பதாகவும் , சிகிச்சையின் போது தன் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும் ஜெயலலிதா கூறினார். இறக்கும் அன்று மாலை வேளையில் அவர் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார். இதற்கிடையில் அனைத்து […]
இன்று தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. நேற்று தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகப்பட்டினத்தில் இருந்து சுமார் 480 கிலோமீட்டர் கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு திசையில் மெதுவாக இலங்கை வழியாக குமரி கடல் பகுதியை நோக்கி நகரக்கூடும். இதனால் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், […]
பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் நாளை முதல் அடுத்த மாதம் 1-ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. இந்த விடுமுறை காலத்தில் மாணவர்களுக்கு பள்ளியில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. மேலும் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அசைன்மெண்ட்களை வழங்கலாம். இந்நிலையில் 1-ஆம் வகுப்பு முதல் 12 -ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான தேர்வு […]
சசிகலா செய்தியாளர்களை சந்தித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார். சென்னையில் உள்ள ஒரு பகுதியில் இன்று கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதில் சசிகலா கலந்து கொண்டார். பின்னர் அவர் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் கூறியதாவது,”நான் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் சேர்ந்து பல ஆண்டுகள் மக்களின் நலனுக்காக பணிபுரிந்தேன். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதாவை எய்ம்ஸ் மருத்துவர்கள் வந்து பார்த்து சென்றனர். இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதும், அதில் பணிபுரிய மருத்துவர்களும் மத்திய அரசின் […]
பிரபல நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சென்னையில் அமைந்துள்ள தீவுத்திடலில் ஆண்டுதோறும் இந்திய சுற்றுலா மற்றும் தொழிலக பொருட்காட்சியை நடத்துவதற்கான டெண்டர் அறிவிப்பது வழக்கம். அதேபோல் 2023-ஆம் ஆண்டிற்கான டெண்டரை சுற்றுலாத்துறை வெளியிட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரை சேர்ந்த ஃபன் வேர்ல்டு ரீசார்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் எங்கள் நிறுவனம் உள்ளிட்ட 5 நிறுவனங்கள் இந்த டெண்டருக்கு விண்ணப்பித்திருந்ததாகவும், ஆனால் […]