Categories
மாநில செய்திகள்

மதுரை மாவட்டத்திற்கும் இன்று(16.04.22) உள்ளூர் விடுமுறை…. அதிரடி அறிவிப்பு…!!!!

மதுரை மாவட்டத்திற்கு ஏப்ரல் 16-ஆம் தேதி(இன்று ) உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் சார்பாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்தாய்ப்பாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா கொண்டாடப்படுகின்றது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு மதுரை மாவட்ட பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால் கருவூலம் மற்றும் வங்கிகள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |