Categories
மாநில செய்திகள்

ஜூன்-7 கடைசி தேதி…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு கடந்த பிப்ரவரி- மார்ச் மாதத்தில் ஆன்லைன் மூலமாக நடைபெற்றது. இந்த தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது. இதனால் தேர்வில் பெரும்பாலானோரின் முடிவுகள் வெளியிடப்படவில்லை. இதன்காரணமாக மறு தேர்வு நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. மேலும் பொறியியல் மாணவர்களுக்கான மறுதேர்வு எழுதுபவர்கள் மே 24 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் முந்தைய […]

Categories
மாநில செய்திகள்

அனந்தகிருஷ்ணன் மறைவிற்கு…. இரங்கல் தெரிவித்த கனிமொழி…!!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் கொரோனாவால்  காலமானார். அவருடைய வயது 93. சென்னை தனியார் மருத்துவமனையில் சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். இவர் ஐஐடி கான்பூர் தலைவராகவும், தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் கனிமொழி இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், “அவரை சந்திக்கும் வாய்ப்பு பெற்ற போதெல்லாம் கல்வி என்பது சமூகத்தை மேம்படுத்த வழியாகவும், சமூக நீதிக்கான பாதையாக […]

Categories
மாநில செய்திகள்

பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த எண்ணில்…. தயங்காமல் புகார் அளிக்கலாம்…!!!

சென்னையில் வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தனியார் அகாடமி தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தனியார் தடகள அகாடமியில் பயிற்சி பெற்ற வீராங்கனை அளித்த புகாரின் பேரில் பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் தடகளப் பயிற்சியாளர் நாகராஜனால் பாதிக்கப்பட்ட பெண்கள் தயங்காமல் புகார் அளிக்கலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட பெண்கள் காவல் துணை […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (29.05.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மே-29) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 05 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக 95 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 90 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் தொடர்ந்து 5 நாட்களாக […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

2 நாட்களுக்கு பின் மீண்டும்…. அதிகரித்த பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மே-29). இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி இரண்டு நாட்களாக பெட்ரோல் 22 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.95.28க்கும், டீசல் 28 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜூன்-1 முதல் ஜூன்-11 வரை – அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நீதிமன்றங்களில் ஜூன் 1 முதல் 11 வரை 9 நீதிபதிகள் மட்டுமே வழக்குகளை விசாரிப்பார்கள் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. மிகமுக்கிய வழக்காக தாக்கல் செய்யப்படும் மனுக்களை விசாரிக்க மட்டுமே சிறப்பு அமர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மதுரையில் ஜூன் 1 முதல் 7 வரை, 8 முதல் 11 வரை தலா 7 நீதிபதிகள் வழக்குகளை விசாரிப்பார்கள். அனைத்து நாட்களிலும் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

சற்றுமுன் அமலுக்கு வந்தது…. மக்களே இனி அவ்வளவு தான்…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இதன்படி சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 23 காசுகள் உயர்ந்து ரூ 95.51 க்கும், ஒரு லிட்டர் டீசலின் […]

Categories
மாநில செய்திகள்

கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்த…. மாநில அளவில் பணி குழு…. தமிழக அரசு உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதிலிருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில், கருப்பு பூஞ்சை நோய் தொற்று பரவி வருவதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஸ்டீராய்டு மருந்து எடுத்துக்கொள்வதால் தான் இந்த நோய் ஏற்படுவதாகவும் கூறப்படுகின்ற்து. இந்த நோய் தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயை கட்டுப்படுத்தவும், சிகிச்சை தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கில் தளர்வு: ஞாயிறு அன்று – வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை நீட்டித்து மேலும் ஒரு வாரத்திற்கு (மே-31 வரை) தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது . இதனால் தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருவதாக முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரம், அதாவது ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் இந்த மாவட்டத்தில்…. கடுமையான முழு ஊரடங்கு – அமைச்சர் அதிரடி…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை மே 31 வரை அமல்படுத்தி இருந்தது. இதையடுத்து மேலும் ஊரடங்கை ஜூன் 7 வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். இதனால் தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருவதாக முதல்வர் தெரிவித்திருந்தார். இருப்பினும் ஒருசில மாவட்டங்களில், குறிப்பாக கோவை கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ளது. எனவே இன்று முதல் கோவையில் முழு ஊரடங்கு கடுமையாக […]

Categories
மாநில செய்திகள்

கரும்பூஞ்சைக்கான நோய் வார்டு…. ஓமந்தூரார் மருத்துவமனையில் தொடக்கம்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதிலிருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில், கருப்பு பூஞ்சை நோய் தொற்று பரவி வருவதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஸ்டீராய்டு மருந்து எடுத்துக்கொள்வதால் தான் இந்த நோய் ஏற்படுவதாகவும் கூறப்படுகின்ற்து. இந்த நோய் தொற்று நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இன்று ஓமந்தூரார் அரசு […]

Categories
மாநில செய்திகள்

வீராங்கனைக்கு பாலியல் தொல்லை – பயிற்சியாளர் மீது வழக்குப்பதிவு…!!!

சென்னையில் பிஎஸ்பிபி பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர் மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்பில் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் அடுத்தடுத்து வேறு பள்ளி ஆசிரியர்கள் மீதும் பாலியல் புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில் வீராங்கனைக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் தனியார் அகாடமி தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் உள்ள தனியார் தடகள அகாடமியில் பயிற்சி பெற்ற வீராங்கனை அளித்த புகாரின் பேரில் பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ […]

Categories
மாநில செய்திகள்

நிதி வழங்கும் பிஞ்சு உள்ளங்களுக்கு…. திருக்குறள் நூல் வழங்கப்படும் – முதல்வர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளை தாரளமாக அளிக்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து அவருடைய வேண்டுகோளுக்கிணங்க திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் என பலரும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர். குறிப்பாக சில குழந்தைகள் தாங்கள் சேமித்து வைத்த உண்டியல் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: காலை 7 முதல் மாலை 6 மணி வரை – தமிழக அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை நீட்டித்து மேலும் ஒரு வாரத்திற்கு (மே-31 வரை) தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது . இதனால் தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருவதாக முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரம், அதாவது ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழக ரேஷன் கடைகளில் – முதல்வர் உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை நீட்டித்து மேலும் ஒரு வாரத்திற்கு (மே-31 வரை) தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியிருந்தது . இதனால் தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருவதாக முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரம், அதாவது ஜூன் 7-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் கோவையில் இலவச உணவு…. பசியாறும் ஏழை மக்கள்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளற்ற ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பாதிப்பு  அதிகம் உள்ள மாவட்டங்களில் கோவை முதலிடத்தை பிடித்துள்ளது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக கோவை மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதன் ஒருபகுதியாக கோவை மக்களுக்கு வசதியாக அம்மா உணவகங்களில் இன்று முதல் இலவச உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வருமானம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தின் மிக முக்கிய பிரபலம் காலமானார் – சோகம்…!!!.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் காளியண்ண கவுண்டர்(101) வயது முதிர்வு காரணமாக காலமானார். திருச்செங்கோட்டை சேர்ந்த இவர் தனது 27 வயதில் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். எம்பி, எம்எல்ஏ, எம்எல்சி உள்ளிட்ட பதவிகளை வகித்தவர். மகாத்மா காந்தி, அம்பேத்கர், சுபாஷ் சந்திர போஸ், ராஜாஜி, காமராஜருடன் இணைந்து பணியாற்றியுள்ளார். தனது அரசியல் வாழ்க்கையில் 200 அரசு பள்ளிகளை திறந்து வைத்தவர். இவருடைய மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – அமைச்சர் அதிரடி…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதன் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில் 1 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு தேர்வு எழுதாமலேயே ஆல்பாஸ் செய்யப்பட்டது. ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கட்டாயம் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா அதிகரிப்பினால் மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசு ஒப்புதல் வழங்க வேண்டும்…. அன்புமணி கோரிக்கை…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி மையத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு தர வேண்டும் என்று […]

Categories
மாநில செய்திகள்

பேரறிவாளன் 1 மாத பரோலில் விடுவிப்பு…. வெளியான தகவல்…!!!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் உட்பட 7 பேர் புழல் சிறையில் இருக்கின்றனர். இந்த சூழலில் நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வருகிறது. எனவே சிறையில் இருக்கும் தனது மகனான பேரறிவாளனுக்கு மருத்துவ காரணங்களுக்காக நீண்ட  நாட்கள் விடுப்பு வழங்க வேண்டுமென தாயார் அற்புதம்மாள் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் விடுப்பு கொடுத்து உத்தரவிட்டார். இதையடுத்து காவல்துறையினரின் […]

Categories
மாநில செய்திகள்

நாட்டிலேயே தமிழகத்தில் தான்…. அதிக ஆக்சிஜன் படுக்கை வசதி – சுகாதாரத்துறை தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை நீட்டித்து மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருவதாக முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் விரைவில் அறிவிப்பார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். இதன் மூலம் ஜூன் முதல் வாரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து…. விரைவில் முதல்வர் அறிவிப்பார் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை நீட்டித்து மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருவதாக முதல்வர் அறிவித்திருந்தார். இருப்பினும் ஒருசில மாவட்டங்களில் மட்டும் தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை (ஜூன் முதல் வாரம்) நீட்டிப்பது குறித்து மருத்துவ […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசை கலைப்பதை தவிர…. வேறு வழியில்லை – சு.சாமி பரபரப்பு பேச்சு…!!!

சென்னை #PSBB பள்ளியில் மாணவிகளுக்கு ஆசிரியர் ஒருவர் ஆன்லைன் வகுப்பில் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பினரும் தங்களுடைய விமர்சனத்தையும், கண்டனத்தையும் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் பிஎஸ்பிபி பள்ளி விவகாரத்தில் அரசு தரப்பில் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக தெரிய வந்தால் தமிழக அரசை கலைப்பதை தவிர வேறு வழி இல்லை என்று பாஜகவின் மூத்த தலைவர் சுப்ரமணியசாமி எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மே-7 ஆக்சிஜன் கையிருப்பு 230 மெ.டன்…. இப்போது 650 மெ.டன்…. மா.சுப்பிரமணியன் பதிலடி…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கை ஒரு வாரத்திற்கு அமல்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிப்பு குறைந்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.  மேலும் பல்வேறு மாவட்டங்களிலும் சிறப்பு சிகிச்சை மையங்களையும் முதல்வர் தொடங்கி வைத்து வருகிறார். இந்நிலையில் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் கொரோனா இறப்பை அரசு குறைத்து காட்டுவதாகவும், இறப்பு விவரத்தை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றசாட்டு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கை ஒரு வாரத்திற்கு அமல்படுத்தியுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிப்பு குறைந்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.  மேலும் பல்வேறு மாவட்டங்களிலும் சிறப்பு சிகிச்சை மையங்களையும் முதல்வர் தொடங்கி வைத்து வருகிறார். இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டம் எடப்பாடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை […]

Categories
மாநில செய்திகள்

பயணிகள் வரத்து குறைவு: ஜூன் 16ஆம் தேதி வரை ரத்து…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில்  இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக ஏற்கனவே மே-10 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக ரயில்களில் பயணிகளின் போக்குவரத்து குறைந்தததால் சிறப்பு ரயில்கள் மே-31 வரை ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் மேலும் ஊரடங்கு ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே 4 சிறப்பு ரயில் சேவை ஜூன்-16 ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி திருச்சி -திருவனந்தபுரம் இன்டர்சிட்டி, சென்னை-எழும்பூர்-ராமேஸ்வரம் ரயில்கள் முழுமையாக ரத்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (28.05.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மே-28) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 05 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக 95 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 90 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் தொடர்ந்து 2 நாட்களாக […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பூசி: முதல் இடம் பிடித்து…. சென்னை மாநகராட்சி சாதனை…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு முதல்வர் வேண்டுகோள்  விடுத்து வருகிறார். மேலும் அரசியல் பிரபலங்கள், […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

நேற்றைய விலையியேயே இன்றும்…. பெட்ரோல்-டீசல் விலை…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மே-28). இந்நிலையில் இரண்டு நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.95.06 க்கும், டீசல் விலை 24 காசுகள் அதிகரித்து ரூ.89.11 க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று பெட்ரோல் 22 […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசியை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்ய…. மத்திய அமைச்சரை தங்கம் தென்னரசு சந்திப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு முதல்வர் வேண்டுகோள்  விடுத்து வருகிறார். மேலும் செங்கல்பட்டு தடுப்பூசி […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: மஞ்சள் கோட்டை தாண்டினால் இலவசம் – அரசு அதிரடி உத்தரவு…!!!

சுங்கச்சாவடிகளில் இருபுறமும் 100 மீட்டர் தொலைவில் மஞ்சள் கோடுகளை வரையுமாறு சுங்கச்சாவடியின் ஒப்பந்ததாரர்களுக்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த மஞ்சள் கோட்டை தாண்டி வாகனங்கள் வரிசை பிடித்து நின்றால் அனைத்து வாகனங்களையும் கட்டணமின்றி சுங்கச்சாவடியை கடக்க அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. மேலும் சுங்கச்சாவடியை கடக்கவும், தடைக்கம்பியை உயர்த்தவும் 10 வினாடிகளுக்கு அதிகமாக நேரம் எடுக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கில் தெருவிலங்குகளுக்கு உணவளிக்க…. நிதி ஒதுக்க தமிழக அரசுக்கு உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் தளர்வுகளற்ற ஊரடங்கினை ஒரு வாரத்திற்கு அமல்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ள நிலையில் தெரு விலங்குகளுக்கு உணவளிக்க யாருமில்லாததால் அவ்விலங்குகள் உணவின்றி வாடி வருகின்றன. இந்நிலையில் விலங்குகள் நல ஆர்வலர் சிவா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின்படி, கொரோனா ஊரடங்கினாள் உணவின்றி […]

Categories
மாநில செய்திகள்

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில்…. 100 படுக்கைகள் கொண்ட சிறப்பு மையம்…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி நிரம்பி வழிகிறது. இதனால் தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டு வருகின்றது. இதனால் கூடுதல் படுக்கை வசதிகளை கொரோனா சிகிச்சை மையங்களை தமிழக அரசு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: பயிர்க்கடன் – தமிழகத்தில் அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக அரசு விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளையும், நலத்திட்ட உதவிகளையும் அறிவித்து வருகிறது. அதன்படி தமிழக விவசாயிகளுக்கு ரூ.10,000 கோடிக்கு மேல் பயிர்க் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “விவசாய பணிகளுக்காக பயிர் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாகனங்களில் நிர்ணயித்த விலைக்கு மேல் காய்கறிகள் விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும். விவசாயிகளுக்கு பற்றாக்குறை இல்லாமல் அனைத்து உரங்களையும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

Big Alert: தமிழகத்தின் இந்த மாவட்டங்களில்…. அடுத்த 4 நாட்களுக்கு – உச்ச அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இதற்கு மத்தியில் வெப்பச்சலனம் காரணமாக ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. இந்நிலையில் அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் இதர மாவட்டங்கள் புதுவை, காரைக்காலில் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் வெப்பநிலை 3 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை உயரக்கூடும் என்றும், சென்னையில் வெப்பநிலை அதிகபட்சம் 104 டிகிரி குறைந்தபட்சம் 24 […]

Categories
மாநில செய்திகள்

மக்கள் விரோத சட்டங்கள் திணிப்பு – முதல்வர் ஸ்டாலின் கண்டனம்…!!!

லட்சத்தீவில் அடுத்தடுத்து திணிக்கப்படும் புதிய சட்டங்களால் நாடு தழுவிய அளவில் கடும் எதிர்ப்பை எதிர் கொண்டுள்ளது. மேலும் லட்சத்தீவை மத்திய பாஜக அரசு குறிவைத்துள்ளதாகவும் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் முதல்வர் முக ஸ்டாலின், “லட்சத்தீவில் பிரபுல் கோடா படேல் என்ற அதிகாரி மக்கள் விரோத சட்டங்களை வலுக்கட்டாயமாக திணித்து வருகிறார். மேலும் அங்கு வாழும் இஸ்லாமியர்களை அந்நியப்படுத்த அவர் எடுக்கும் நடவடிக்கைகள் வேதனை அளிக்கிறது. இதன் காரணமாக இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி போட்டால் தான்…. நலத்திட்டங்கள் பெற முடியும் – பாமக நிறுவனர் ராமதாஸ்…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு முதல்வர் வேண்டுகோள்  விடுத்து வருகிறார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக்கத்தில் தொடர்ந்து 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு…. வானிலை மையம் அறிவிப்பு…!!!

வெப்பச்சலனம் காரணமாக இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. மே 28 (நாளை) மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மே 29, 30 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி […]

Categories
மாநில செய்திகள்

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.10000 நிதி…. சீமான் வலியுறுத்தல்…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் வேகமெடுத்து வந்ததன் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதனால் தனியார் பள்ளிகளில் குறைந்த அளவு ஆசிரியர்களை வைத்தே ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். இதனால் மற்ற ஆசிரியர்களுக்கு சம்பளம் இல்லாததால் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் வருமானம் இல்லாமல் தவித்து வருவதாக சீமான் தெரிவித்துள்ளார். ஊரடங்கு காலத்தில் அரசு ஆசிரியர்களுக்கு முழு சம்பளம் வழங்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலினின் அசத்தல் முடிவு…. பிரதமருக்கு எழுதிய கடிதம்…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு முதல்வர் வேண்டுகோள்  விடுத்து வருகிறார். இந்நிலையில்  தமிழக முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு நீட்டிப்பு குறித்து…. முதல்வர் தீவிர ஆலோசனை…!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை நீட்டித்து மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால் தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருவதாக முதல்வர் அறிவித்திருந்தார். இந்நிலையில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கை (ஜூன் முதல் வாரம்) நீட்டிப்பது குறித்துமருத்துவ நிபுணர்கள், அரசு உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க ஸ்டாலின் அவசர ஆலோசனையில் […]

Categories
மாநில செய்திகள்

போக்குவரத்து ஊழியர்களையும்…. முன்களப்பணியாளர்களாக அறிவிக்க…. ஓபிஎஸ் கோரிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தடுப்பு பணியில் பத்திரிகையாளர்களை முன்களப்பணியாளர்களாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் போக்குவரத்து பணியாளர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு ஓ பன்னீர்செல்வம் கோரிக்கை வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்கள பணியாளர்களுக்கான உரிமைகள், சலுகைகள் எல்லாவற்றையும் போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். ஏனெனில் பேரிடர் காலத்தில் அர்ப்பணிப்பு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: அரிசி, பருப்பு டெண்டர்…. தமிழக அரசு மேல்முறையீடு…!!!

தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்தின் குறிக்கோள், எல்லா குடிமக்களுக்கும் குறிப்பாக ஏழை மக்களுக்கு உணவு வழங்குதல் ஆகும். பொது விநியோக திட்டம், அத்தியாவசியமான பொருட்களை மலிவான விலையில் ஒவ்வொரு மாதமும் நியாய விலைக் கடைகள் மூலம் ஏழை மக்களுக்கு வழங்குகிறது. இந்நிலையில் 20 ஆயிரம் மெட்ரிக் டன் பருப்பு மற்றும் 50 லட்சம் லிட்டர் பாமாயில் கொள்முதல் டெண்டரில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்ததை எதிர்த்து தமிழக அரசு மேல் […]

Categories
மாநில செய்திகள்

பொது வருங்கால வைப்பு நிதி…. வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை – தமிழக அரசு அறிவிப்பு…!!!

பொது வருங்கால வைப்பு நிதி என்பது இந்தியாவில் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கக்கூடிய முதலீட்டு விருப்பங்களின் மிகவும் பிரபலமான ஒன்றாகும். இதில் கணக்கு முதிர்ச்சியடையும் முன் ஒரு முதலீட்டாளர் 15 வருடங்கள் முதலீடு செய்ய வேண்டும். பொது வருங்கால வைப்பு நிதி அதன் சந்தாதாரர்களுக்கு வருமான வரிச் சட்டத்தின் விலக்கு-விலக்கு-விலக்கு பிரிவின் கீழ் வருவதால் பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இந்த கணக்கின் ஒரு நிதியாண்டில் அதிகபட்ச வட்டி விகிதம் 8% ஆகும். இந்த தொகை முற்றிலும் வரிவிலக்கு கொண்டது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

மேலும் ஊரடங்கு நீட்டிப்பு…? – இன்று காலை 11 மணிக்கு முதல்வர் ஆலோசனை…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஏற்கனவே அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கை நீட்டித்து மேலும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்ற கடுமையான ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. வேண்டுமானால் மேலும் ஊரடங்கை நீட்டிக்க வாய்ப்புள்ளது என முதல்வர் அறிவித்திருந்தார். இந்த முழு ஊரடங்கினால் கொரோனா வெகுவாக குறையவில்லை, மக்களும் அலட்சியமாக வெளியே சுற்றி திரிகின்றனர். இதனால் ஊரடங்கை இன்னும் கடுமையாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் வகுப்பு தொடர்பான புகார்கள்…. உடனடி நடவடிக்கை எடுக்க…. முதல்வர் உத்தரவு…!!!

சென்னை பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகாரை அடுத்து மற்ற பள்ளி ஆசிரியர்கள் மீதான பாலியல் புகார்களும் அடுத்தடுத்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனால் ஆன்லைன் வகுப்பில் படிக்கும் மாணவிகளின் பெற்றோர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் ஆன்லைன் வகுப்பு தொடர்பான புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மாணவ மாணவிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் விசாரித்து துரித நடவடிக்கை எடுக்க […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (27.05.21) முட்டை விலை…!!!

நாமக்கல்லில் இன்று (மே-27) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 05 பைசாவாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 95 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த இரண்டு நாட்களாக 95 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 90 காசுகளாக விற்பனையாகி வந்தது. இந்நிலையில் 15 காசுகள் அதிகரித்து […]

Categories
சென்னை பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இரண்டு நாட்களுக்கு பின்…. அதிகரித்த பெட்ரோல்-டீசல் விலை….!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் சென்னையைப் பொறுத்தவரை இன்று (மே-27). இந்நிலையில் இரண்டு நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு 20 காசுகள் அதிகரித்து ரூ.95.06 க்கும், டீசல் விலை 24 காசுகள் அதிகரித்து ரூ.89.11 க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று பெட்ரோல் 22 […]

Categories
மாநில செய்திகள்

சற்றுமுன் அமலுக்கு வந்தது…. வாகன ஓட்டிகளே இனி அவ்வளவு தான்…!!!

மாதம் இருமுறை பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வந்த எண்ணெய் நிறுவனங்கள் இந்த நடைமுறையை 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் கைவிட்டது. இதனையடுத்து நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை தற்போது அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக ஒருநாள் விட்டு ஒருநாள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 22 காசுகள் உயர்ந்து 95.28க்கும், ஒரு லிட்டர் டீசலின் விலை 28 காசுகள் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் மின்கட்டணம் ஜூன்-15 வரை…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் தாழ்வழுத்த மின் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, சிறு குறு தொழிற்சாலைகள், தாழ்வழுத்த மின் நுகர்வோர், கூடுதல் வைப்பு தொகை செலுத்தவும் கால அவகாசத்தை ஜூன் 15 வரை நீடித்துள்ளது. மேலும் ஏப்ரல் மாத […]

Categories

Tech |