Categories
மாநில செய்திகள்

FLASHNEWS: நாளை முதல் மீண்டும் -மக்களுக்கு செம சூப்பர் அறிவிப்பு…!!

நாளை முதல் யூடிஎஸ் செயலி மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவல் படிப்படியாக குறைந்த நிலையில் ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. இந்நிலையில் நாளை முதல் மீண்டும் யூடிஎஸ் செயலின் மூலம் சென்னை புறநகர் ரயில்களுக்கான டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. புறநகர் ரயில்களுக்கான டிக்கெட் வாங்கும் போது ஏற்படும் கூட்ட […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நன்றி சொல்ல வந்த குழந்தைக்கு…. கைகுலுக்காமல் வணக்கம் சொல்லிய முதல்வர்…!!

கொரோனா காரணமாக நன்றி சொல்வதற்காக கைகுலுக்க வந்த குழந்தைக்கு முதல்வர் இருகரம் கூப்பி வணக்கம் சொல்லியுள்ளார்.  தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், மதுரை மாவட்டம் யானைமலை ஒத்தக்கடை யில் நடைபெறக்கூடிய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்றுள்ளார். அப்போது விமான நிலையத்தில் நடந்த போலியோ சொட்டு மருந்து முகாமில் கலந்து கொண்டுள்ளார். பின்னர் அங்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“சசிகலா ஒழிக” நாங்களும் போஸ்டர் ஓட்டுவோம் – சி.வி சண்முகம் ஆவேசம்…!!

சசிகலா ஒழிக என்று எங்களாலும் போஸ்டர் ஒட்ட முடியும் என்று சிவி சண்முகம் ஆவேசமாக கூறியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா தண்டனை காலம் முடிந்து கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். இதற்கு முன்னதாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருடைய உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து அதிமுகவை சேர்ந்த சிலரை வைத்து சசிகலாவுக்கு ஆதரவான போஸ்டர் ஒட்டி வருகின்றனர். இதையடுத்து அதிமுக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவின் பொதுச்செயலாளர் சின்னம்மா தான்…. பரபரப்பை கிளப்பிய டிடிவி…!!

அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா தான் என்று கூறி டிடிவி தினகரன் பரபரப்பை கிளப்பியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா தண்டனை காலம் முடிந்து கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். இதற்கு முன்னதாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருடைய உடல்நிலை முன்னேற்றம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து மருத்துவமனையிலிருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய அதே காரில் அதிமுக கொடியுடன் சசிகலா வெளியே வந்துள்ளார். இது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எடப்பாடி எம்ஜிஆரை…. என்றைக்காவது பக்கத்தில் போய் பார்த்திருக்கிறாரா…? – ஸ்டாலின் விமர்சனம்…!!

எம்ஜியாரை பக்கத்தில் போய் பழனிசாமி என்றைக்காவது பார்த்துள்ளாரா? என்று ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து ஸ்டாலின் அதிமுகவை நிராகரிப்போ,ம் விடியலை நோக்கி, என்று தன்னுடைய பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக சென்னை பூந்தமல்லியில் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசிய போது, “ஆரணியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BIGNEWS: சசிகலா டிஸ்சார்ஜ் – அதிமுகவில் வெடித்தது பிரச்சினை…!!

மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்த சசிகலாவின் காரில் அதிமுக கொடி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வந்த சசிகலா தண்டனை காலம் முடிவடைந்து பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். இதையடுத்து முன்னதாகவே அவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாகப் விக்ட்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து சசிகலா முழுமையாக குணமடைந்து இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிய சசிகலாவின் […]

Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி செலுத்தப்பட்டவுடன்… மருத்துவர்களுக்கு கொரோனா… கர்நாடகாவில் பரபரப்பு…!!

கர்நாடக மாநிலத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின் மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  கொரோனா தொற்றிற்கு எதிரான தடுப்பூசி உலகின் பல பகுதிகளில் செலுத்தப்பட்டு வருவதைத்தொடர்ந்து தற்போது கர்நாடக மாநிலத்தில் உள்ள முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த வாரத்தில் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் இருக்கும் அரசு மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 5 […]

Categories
மாநில செய்திகள்

அப்படி போடு…. மாணவர்களுக்கு இனி இதுவும் இலவசம் – அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!

இனி பள்ளி மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் தொடங்கப்பட்டு வருகின்றது. இதையடுத்து கொரோனா பரவல் சற்று படிப்படியாக குறைந்த நிலையில்  10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாணவர்களுக்கு பள்ளிகள் திறகாத நிலையிலும் சீருடைகள், சத்துணவு, புத்தகங்கள், நோட்டுகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றன. மேலும் 9 மற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா டிஸ்சார்ஜ்…. தொண்டர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…!!

சசிகலா மருத்துவமனையிலிருந்து விடுதலையாகியுள்ளதால் அவருடைய ஆதரவாளர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வந்த சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்து பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். இதையடுத்து முன்னதாகவே அவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாகப் விட்ட்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இதையடுத்து சசிகலா முழுமையாக குணமடைந்து இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பிப்.8 முதல் பள்ளி, கல்லூரிகள் திறப்பு – அரசு அதிரடி உத்தரவு…!!

தமிழகத்தில் பிப்-8 ஆம் தேதி முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து  பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள்  நடந்து வருகிறது. இந்நிலையில் பெற்றோர்களின் கருத்து கேட்பிற்கு பிறகு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பிப்ரவரி 28ஆம் தேதி வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிக்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

மனைவியை காணமுடியாமல்… தவித்த கணவர் தற்கொலை… இலங்கை அகதிகள் முகாமில் பரபரப்பு…!!

இலங்கை தமிழர் ஒருவர் மனைவி மற்றும் மகனை காண முடியாத விரக்தியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  எருமப்பட்டிக்கு அருகிலிருக்கும் மேட்டுப்பட்டியில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாமில் வசித்து வருபவர் 56 வயதுள்ள கூலித்தொழிலாளி மேத்யூஸ். கடந்த 2017 ஆம் வருடத்தில் குடும்பத்தினருடன் இலங்கைக்கு சென்ற மேத்யூஸ் 2018 ஆம் வருடத்தில் தமிழ்நாட்டிற்கு  திரும்பியுள்ளார். அதன் பிறகு தன் வீட்டிலேயே தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மேத்யூஸ், தன் மனைவி மற்றும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்திற்கு புதிய தலைமை செயலாளர் நியமனம்…!!

தமிழகத்தின் புதிய தலைமை செயலாளராக ராஜிவ் ரஞ்சன் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழக அரசின் தலைமை செயலாளரான சண்முகத்தின் பதவி காலம் கடந்த ஆண்டு ஜூலை 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவரது பதவி காலத்தை மேலும் 3 மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை வைத்தது. இதையடுத்து அவருடைய பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தமிழக அரசின் 47வது தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக பள்ளிகள் பிப்ரவரி மாதம் – அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து வரும் பிப்ரவரி மாதம் முதல்வர் முடிவெடுப்பார் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு வினா வங்கி கையேடு, […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக அமைச்சர் திறந்த உடன்…. சுவர் இடிந்து விழுந்து பரபரப்பு…!!

அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்த உடன் அம்மா மினி கிளினிக் சுவர் இடிந்து விழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் அடிப்படை மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் ஏற்படுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதில் 1 மருத்துவர், 1 செவிலியர், 1 சுகாதாரப் பணியாளர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்றவை இடம் பெற்றிருக்கும். இந்நிலையில் கரூர் குளித்தலையில் அம்மா மினி கிளினிக் கட்டடத்தை சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

10 வருட பசி….. விட்றாதீங்க மக்களே….. அப்புறம் காஞ்சமாடு கதை தான்….. ஸ்டாலினை கலாய்த்த OPS….!!

துணை முதல்வர் பன்னீர் செல்வம் அம்மா கோவில் திறப்பு விழாவின் போது ஸ்டாலினை கடுமையாக கலாய்த்து பேசியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் இந்த வருடம் ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஆளுமை தலைவர்கள் இல்லாமல் நடக்கும் […]

Categories
மாநில செய்திகள்

பிப்ரவரி-1 முதல்…. மற்ற துறையினருக்கும்…. கொரோனா தடுப்பூசி போடப்படும் – விஜயபாஸ்கர் தகவல்…!!

பிப்ரவரி-1 ஆம் தேதி முதல் மற்ற துறையினறை சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்நிலையில் இதற்கான தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இதையடுத்து ஒருசில தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளுக்கு அவசர ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தபோது, “முன் களப்பணியாளர்கள் 900 பேருக்கு இதுவரை ஒரு […]

Categories
மாநில செய்திகள்

காந்தி சிலை உடைப்பு – கவிஞர் வைரமுத்து கண்டனம்…!!

அமெரிக்காவில் காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக வாஷிங்டன் நகரில் காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டது. இவ்வாறு சேதப்படுத்தப்பட்டதற்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்க மண்ணில் காந்தி சிலை வீழ்த்தப்பட்டது கண்டு […]

Categories
மாநில செய்திகள்

“என்ன ஒரு எளிமை” சம்மணம் போட்டு உட்கார்ந்து…. பிரியாணியை ருசித்த ராகுல்…. வைரலாகும் வீடியோ…!!

ராகுல் காந்தி சமையல் கலைஞர்களோடு அமர்ந்து காளான் பிரியாணி சாப்பிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஒரு கை பார்க்கலாம் என்ற முழக்கத்தோடு ராகுல் காந்தி கடந்த வாரம்  கோவை மாவட்டம் வந்தார். இந்நிலையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பக்கத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த சில சமையல் கலைஞர்கள் இணைந்து சமையலுக்கான யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றனர். அசைவ உணவுப் பொருட்களை அதிகளவில் சமைக்கும் அந்த குழுவினர் அதை சமைத்து அருகிலுள்ள குழந்தைகள் மற்றும் முதியோர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாளை சசிகலா டிஸ்சார்ஜ்…. அதிர போகும் அரசியல் களம்…. திக் திக் திக்…!!

சசிகலா நாளை காலை 10.30 மணிக்கு டிஸ்சார்ஜ் ஆக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வந்த சசிகலா கடந்த 4 வருடங்களாக சிறைவாசம் அனுபவித்து வந்த நிலையில் தண்டனை காலம் முடிந்து கடந்த 27ஆம் தேதி விடுதலை ஆனார். இந்நிலையில் முன்னதாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பெங்களூர் விக்டோரியா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “நாளை காலை 10.30 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழ்நாட்டை வழிநடத்த வரும்…. ராஜமாதாவே வருக வருக!…. அதிமுகவினர் ஒட்டிய போஸ்டர்…!!

தேனியில் சசிகலாவை வரவேற்று அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளதால் அதிமுகவில் பிரச்சினை வெடித்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. இதையடுத்து அரசியல் காட்சிகள் தங்களின் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் சகிலா விடுதலைக்குப் பின்னர் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. அந்த வகையில் தேனி ஆண்டிப்பட்டியில் சசிகலாவை வரவேற்று அதிமுகவினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில் “தமிழ் நாட்டை வழிநடத்த வருகை தரும் அதிமுக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கொடூரம்…. பெண்கள் கழிவறையில் கேமரா… மென்பொருள் நிறுவனர் கைது…!!

மென்பொருள் நிறுவனர் பெண்கள் கழிப்பறையில் கேமரா பொருத்தியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த சஞ்சீவ்(29). திருமணமாகாத இவர் சமீபத்தில் செட்டிகுளம் பகுதியில் Z3 இன்போடெக் என்ற மென்பொருள் நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார். இதையடுத்து இந்த நிறுவனத்தில் மூன்று பெண்கள் வேலைக்கு சேர்த்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் பெண்கள் கழிவறையில் கண்காணிப்பு கேமரா இருப்பதை கண்டு அந்த மூன்று பெண்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர் இது குறித்து கேட்டபோது சஞ்சீவ் முறையாக பதில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஒரே விமானத்தில்…. அருகருகில் அமர்ந்து பயணித்த…. OPS – குஷ்பூ…!!

துணை முதல்வர் ஓபிஎஸ்-ம் பாஜக நிர்வாகி குஷ்பூவும் ஒரே விமானத்தில் பயணம் செய்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் மதுரையில் நடைபெறும் விழா ஒன்றிற்காக அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் சென்னையிலிருந்து மதுரைக்கு சென்றார். அப்போது அதே விமானத்தில் பாஜக நிர்வாகி குஷ்புவும் ஓபிஎஸ்-இன் அருகே அமர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

முருகனுக்கு அரோகரா! ஈபிஎஸ் – ஓபிஎஸ் நீங்க பார்க்காத புகைப்படம்…!!

அம்மா கோவில் திறப்பு விழாவில் முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு வேல் கொடுக்கப்பட்டுள்ள புகைப்படம் வைரலாக பரவி வருகின்றது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து ஆனாலும் கட்சியினரும், எதிர்கட்சியினரும் ஒருவரையொருவர் குறைகூறி விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கோவில் திறப்பு விழாவில் முதல்வர் எடப்பாடி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஜெயலலிதா கோவில் திறப்பு – தொண்டர்கள் உற்சாகம்…!!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோவிலை  முதல்வர் மற்றும் துணை முதல்வர் திறந்து வைத்தனர். மதுரை திருமங்கலம் அருகே முன்னாள் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஏற்பாட்டில் கோவில் அமைக்கப்பட்டது. இந்த கோவிலை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர். இந்த விழாவில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுகவில் சசிகலாவை…. சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை…. ஜெயக்குமார் காட்டம்…!!

சசிகலாவை அதிமுகவில் இணைப்பதற்கான பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார்தெரிவித்துள்ளார் . சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வந்த சசிகலா கடந்த நான்கு வருடங்களாக சிறை தண்டனை மகடந்தஅனுபவித்து தற்போது கடந்த 27ஆம் தேதி விடுதலையானார். இதையடுத்து சசிகலா இதற்கு முன்னதாக ஏற்பட்ட கொரோனா காரணமாக மருத்துமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து சசிகலா விரைவில் தமிழகம் திரும்ப இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.  இந்நிலையில் எடப்பாடிபழனிசாமி மற்றும் பாஜகவினரை கடுமையாக சாடி நமது […]

Categories
மாநில செய்திகள்

Vera Level அறிவிப்பு….. பிப்ரவரி-1 முதல்…!!

ரயில் பயணிகள் ஐ.ஆர்.சி.டி.சி அனுமதிக்கப்பட்ட உணவு வகைகளை ஆர்டர் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ரயில் சேவைகள் முடக்கப்பட்டன. இதையடுத்து  கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில் ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன. இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்திலிருந்து ரயிலில் உணவு விற்கப்படாமல் இருந்தது. இதனால் பயணிகள் வீட்டிலிருந்து எடுத்து செல்லும் உணவையே சாப்பிட்டு வந்தனர். இந்நிலையில் பயணிகளின் கோரிக்கை ஏற்று பிப்ரவரி 1 முதல் ஆன்லைன் வழியாக உணவுகளை […]

Categories
மாநில செய்திகள்

உடைந்து விழுந்த புதிய அணை : ரூ25,00,00,000யில் ஊழல்…. மேலும் 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்….!!

தென்பெண்ணை அணை உடைப்பு விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 2 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் தளவானூர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள எனதிரிமங்கலம் இடையே தென்பெண்ணை ஆற்றில் ரூபாய் 25 கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்பணையில் கடந்த 23-ம் தேதியன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திடீரென்று உடைப்பு ஏற்பட்டதால் அதிகப்படியான தண்ணீர் வெளியேறி உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து திமுக துணைப் பொதுச் செயலாளர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கனிமொழி குறித்து சர்ச்சைக்குரிய ட்வீட்… பாஜக பிரமுகர் கோபிகிருஷ்ணனுக்கு கண்டனம் தெரிவிக்கும் திமுக எம்பி…!!

கனிமொழி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பாஜக வடசென்னை  மக்களவை தொகுதி கோபிகிருஷ்ணன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று திமுக எம்.பி. செந்தில்குமார் கூறியுள்ளார்.  பாஜகவைச் சேர்ந்த வடசென்னை மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் கோபிகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் திமுக எம்பி கனிமொழி குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், கண்டவனும்  நுழைய கோயில் கருவறை என்ன கனிமொழியின் பெட்ரூமா என்று பதிவிட்டு இருந்தார். இந்த கருத்திற்கு எதிராக தர்மபுரி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களுக்கு அங்க வேணும்…. திமுக கொடுக்கலைனா தனித்து நிற்போம் – அஇமமக நிறுவன தலைவர்

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சியில் உள்ள துறையூர் தொகுதியில் போட்டியிட திமுக கூட்டணியில்   வாய்ப்பளிக்கவில்லை என்றால் தனித்து போட்டியிடப்போவதாக அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கட்சி நிறுவன தலைவர் பொன். முருகேசன் கூறியுள்ளார். திருச்சி பிரஸ் கிளப்பில் அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கட்சி நிறுவன தலைவர் பொன். முருகேசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கட்சியானது 2000ஆம்  ஆண்டு முதல் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் கடந்த 2019ஆம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிக்கு., உச்சம் தொட்ட சர்க்கரை நோய் – மருத்துவமனை அறிக்கை…!!

சசிகலாவிற்கு சர்க்கரை நோய் உச்சத்தை தொட்டுள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வந்த சசிகலா கடந்த நான்கு வருடங்களாக சிறையில் இருந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி தண்டனைக் காலம் முடிந்து விடுதலையாகி உள்ளார். அவருக்கு முன்னதாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அறிகுறி அல்லாத கொரோனாவுக்காக சிகிச்சை அளிக்கப்படுவதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்நிலையில் சசிகலாவின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வேளாண் சட்டங்களை…. தூக்கி குப்பையில் போடுங்கள் – ராகுல் ஆவேசம்…!!

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களையும் தூக்கி குப்பையில் போடுங்கள் என்று ராகுல் ஆவேசமாக கூறியுள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால் இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. இந்நிலையில் விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தும் தோல்வியில் முடிந்துள்ளன. இதையடுத்து விவசாயிகளின் போராட்டத்திற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்து வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

“தடுப்பூசி போட விருப்பம் இல்லாவிட்டால்” போட்டுக்கொள்ள வேண்டாம் – நீதிமன்றம் கருத்து…!!

தடுப்பூசி போட்டுக்கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் போட்டுக்கொள்ள வேண்டாம் என நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவமாடி வருகிறது. இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர். இதையடுத்து ஒரு சில மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அவசர ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து கடந்த 16ம் தேதி முதல் பொதுமக்களுக்கு தடுப்பு செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக முன் களப்பணியாளர்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சின்னம்மாவை வரவேற்ற…. மீண்டும் ஒரு அதிமுக நிர்வாகி…. அதிரடி நீக்கம்…!!

சசிகலாவை வரவேற்று அதிமுக நிர்வாகி ஒருவர் அதிரடியாக அதிமுக கட்சியிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா கடந்த 4 வருட சிறை தண்டனைக்கு பிறகு  கடந்த 27ம் தேதி விடுதலையானார். இந்நிலையில் சசிகலாவிற்கு ஆதரவாக அமமுக கட்சியை சேர்ந்தவர்கள் அவரை வரவேற்று போஸ்டர் அடித்து, கோவில்களில் சிறப்பு பூஜை செய்தனர். இதையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுக நிர்வாகி சசிகலாவை வரவேற்று போஸ்டர் அடித்ததால் உடனடியாக கட்சியிலிருந்து அதிமுக தலைமை நீக்கியது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் ஸ்மார்ட் பைக் திட்டம்…. 10 நிமிடத்திற்கு 10 ரூபாய் கட்டணம்…. தொடங்கி வைத்த முதல்வர்…!!

சென்னையில் ஸ்மார்ட் பைக் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி  வைத்துள்ளார். காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில் ஏற்கனவே சைக்கிள் திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், தற்போது ஸ்மார்ட் பைக் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்  முதற்கட்டமாக மயிலாப்பூர், நாகேஸ்வரராவ் பூங்கா, மெரினா கடற்கரை, திருமங்கலம், பாண்டிபஜார் உள்ளிட்ட இடங்களில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை பயன்படுத்திக்கொள்ள http://onelink.to/t74gmp என்ற இணையதள முகவரியில் ஸ்மார்ட் பைக் கைபேசி செயலியை தரவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம். இந்த […]

Categories
மாநில செய்திகள்

இருப்பிட சான்று தேவையா..? அலைய வேண்டாம்…. ஆன்லைனில் அப்ளை பண்ணலாம் வாங்க…!!

ஆன்லைன் மூலமாக இருப்பிட சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் முறையை தெரிந்து கொள்ளலாம். இருப்பிட சான்றிதழ் என்பது நாம் எங்கு வசிக்கிறோம் என்பதை காட்டும் ஒரு அடையாளமாகும். ஒருவர் இருப்பிட சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் போது எங்கு வசித்து வருகிறாரோ அந்தப் பகுதியிலுள்ள வட்டாட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அந்த வட்டாட்சியர் தகுந்த விசாரணையின் மூலமாக மனுவில் கூறப்பட்டுள்ள தகவல்களை உறுதி செய்த பின்னரே மனுதாரருக்கு மேற்படி சான்றிதழை வழங்குவார். குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு இருப்பிடச்சான்றிதழ் தேவைபடாது. ஆனால் படிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

எஸ்சி, எஸ்டி, எம்பிசி மாணவர்கள்…. உதவித்தொகை பெறலாம்…!!

ஐஐடி, ஐஐஎம், என்ஐடியில் பயிலும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் உதவித்தொகை பெற சிறுபான்மையினர் நலத்துறையை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் செயல்படும் ஐஐடி, ஐஐஎம், என்ஐடி மற்றும் மத்திய பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி மாணவ மாணவியருக்கு கல்வி உதவித் தொகையாக ரூபாய் இரண்டு […]

Categories
மாநில செய்திகள்

“மது குடிக்காதே” அடடே! இந்த காலத்திலும்…. இப்படியொரு கிராமமா…??

மது குடிப்பதற்கு தடை விதித்து ஊர் எல்லையில் எச்சரிக்கை பலகை வைத்து ஒரு கிராமம் தமிழகத்திற்கு முன் மாதிரியாக விளங்குகிறது. தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர். மதுக்கடைகளில் எப்போதும் கூட்டம் அலைமோதிக் கொண்டு தான் இருக்கிறது. இவ்வாறு மது குடிப்பதனால் பெரும்பாலான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். மது வீட்டுக்கும் நாட்டுக்கும் கேடு என்ற வாசகம் மது பாட்டில்களில் பொறிக்கப்பட்டு இருந்தாலும் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. தன்னுடைய குடும்பத்தையும் தன்னுடைய உயிரையும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

காத்திருங்கள்…. சசிகலாவை ஈசியாக எடை போட்டுவிட கூடாது – கருணாஸ் பேட்டி…!!

சசிகலாவை எளிதில் எடைபோட்டு விடக்கூடாது காத்திருங்கள் என்று கருணாஸ் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை  தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த கருணாஸ், “சசிகலாவை பற்றி இப்போது பேசுபவர்கள், அப்போது என்ன சொன்னார்கள்? என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். எடப்பாடி பழனிசாமி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் கிடையாது என்பது எல்லோருக்கும் தெரிந்த […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பின்வாங்கிய ரஜினிகாந்த்…. கட்சி தொடங்கப்போகும் மனைவி…. கோவிலில் வழிபாடு செய்த மகள்…!!

ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் தான் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்திருந்த ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக தான் கட்சி தொடங்க போவதில்லை என்று அறிவித்தார். இது  அவருடைய ரசிகர்கள் இடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் ரஜினி ரசிகர்கள் ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தில் போராட்டத்தை நடத்தினார்கள். இதையடுத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயபிரதீப் சசிகலாவுக்கு ஆதரவு…. பின்னணியில் ஓபிஎஸ்…. வெளியான தகவல்…!!

சொத்து குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வந்த சசிகலா தண்டனை காலம் முடிவடைந்து கடந்த 27 ஆம் தேதி விடுதலையானார். இதையடுத்து முன்னதாக உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்க்கப்பட்டார். இந்நிலையில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் திடீரென்று சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சசிகலாவுக்கு ஜெயபிரதீப் ஆதரவு கொடுத்ததற்கு பின்னணியில் ஓபிஎஸ் இருப்பதாக கூறப்படுகிறது. துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஓபிஎஸ் இதுவரை சசிகலாவுக்கு எதிராக […]

Categories
மாநில செய்திகள்

தமிழின் முக்கிய பிரபலம் காலமானார் – இரங்கல்…!!

ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர் டோமினிக் ஜீவாவின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஈழத்தின் முதுபெரும் எழுத்தாளர் டோமினிக் ஜீவா காலமானார். அவருக்கு வயது 94. இவர்  1966-இல் மல்லிகை என்ற நவீன தமிழ் இலக்கிய இதழைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தினார். சோவியத் ஒன்றியத்தின் அழைப்பை ஏற்று மாஸ்கோ சென்று வந்த இவர், எண்ணற்ற தமிழ் நூல்களை வழங்கியுள்ளார். அவருடைய மறைவிற்கு படைப்புலக ஆளுமைகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories
அரசியல் மாநில செய்திகள்

கப்சிப்னு இருங்க…. உங்க இமேஜ் கெடுத்துக்காதீங்க… நோட் போட்டு கொடுத்த உளவுத்துறை…!!

சசிகலாவை பற்றி வரும் காலங்களில் எதுவும் பேச வேண்டாம் என உளவுத்துறை முதல்வருக்கு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் நான் சசிகலாவால் முதல்வர் ஆகவில்லை. மக்களால் முதல்வரானேன் கூறுவதால் மக்கள் மத்தியில் உங்களுக்கு நெகட்டிவ் இமேஜை உருவாக்குவது அதுமட்டுமல்லாமல் அதிமுகவின் வாக்கு வங்கியாக கருதப்படும் சசிகலாவின் சமூகத்தினரும் உங்கள் மீது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

புதிய பரபரப்பு – சசிகலாவுக்கு ஓபிஎஸ் மகன் ஆதரவு…!!

துணைமுதல்வரின் இளைய மகன் சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று வந்த சசிகலா தண்டனை காலம் முடிவடைந்து கடந்த 27 ஆம் தேதி விடுதலையானார். இதையடுத்து முன்னதாக உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்க்கப்பட்டார். இந்நிலையில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் இளைய மகன் ஜெயபிரதீப் திடீரென்று சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, “கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெறும் சசிகலா […]

Categories
மாநில செய்திகள்

இனி 3 நாட்கள் விடுமுறை…. ஊதியம் குறைவு – அதிரடி உத்தரவு…!!

ஜவுளி தொழிலாளர்களுக்கு இனி வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பருத்தி, ரயான் உள்ளிட்ட நூல்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் ஜவுளி உற்பத்தியை குறைக்க ஜவுளி உற்பத்தியாளர்கள் திட்டமிட்டுள்ளனர். இதனால் ஜவுளி தொழிலாளர்களுக்கு வாரத்தில் மூன்று நாட்கள் விடுமுறை, நான்கு நாட்கள் வேலை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களுக்கு வாரம் ரூ.4 ஆயிரம் கிடைத்து வந்த கூலித்தொகையும் குறைக்கப்படும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Categories
அரசியல் மாநில செய்திகள்

பரபரப்பு! 6 நாட்களுக்கு பிறகு…. சசிகலாவுக்கு மீண்டும் உயர்ந்த ரத்த அழுத்தம்…!!

சசிகலாவுக்கு திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது . சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைவாசம் அனுபவித்து வந்த சசிகலா தண்டனை காலம் முடிந்து கடந்த 27ஆம் தேதி விடுதலை ஆனார். இந்நிலையில் முன்னதாக சசிகலா உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருடைய உடல்நிலை தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததது. மேலும் சசிகலாவுக்கு சுவாச முறை, ரத்த அழுத்தம், நாடித் துடிப்பு ஆகியவை சீராக இருப்பதாகவும் தெரிவித்திருந்தனர். ஆனால் சர்க்கரை […]

Categories
மாநில செய்திகள்

6 சிறப்பு ரயில்கள்…. 5 நிமிடம் அனுமதி…… மகிழ்ச்சியில் வியாபாரிகள்…..!!

வியாபாரிகளின் உற்பத்தி பொருட்களை அனுப்ப 5 நிமிடம் 6 சிறப்பு ரயில்கள் நிறுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சிறுதொழில் முனைவோர் தங்கள் உற்பத்திப் பொருட்களை அனுப்ப ஏதுவாக 6 சிறப்பு ரயில்கள் முக்கிய நிறுத்தங்களில் 5 நிமிடம் நிற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை – செங்கோட்டை, தூத்துக்குடி – மைசூர் ரயில்கல் விருதுநகரிலும்,  செங்கோட்டை-  சென்னை சிலம்பு ரயில் ராஜபாளையத்திலும், தூத்துக்குடி – சென்னை ரயில் சாத்தூரிலும், கொல்லம் – சென்னை ரயில் கோவில்பட்டியிலும்,  பாலக்காடு – […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாளை திருவண்ணாமலையில்…. பிரச்சாரம் மேற்கொள்ளும் ஸ்டாலின்…!!

நாளை திமுக தலைவர் ஸ்டாலின் திருவண்ணாமலையில் பிரச்சாரம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற தலைப்பில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் ஸ்டாலின். இதையடுத்து அடுத்த கட்ட தேர்தல் பரப்புரையை நாளை திருவண்ணாமலை பகுதியில் தொடங்க இருக்கிறார். இதையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

விரைவில் தமிழக மக்களை சந்திப்பார் சசி…. வழக்கறிஞர் தகவல்…!!

விரைவில் தமிழக மக்களை சந்திப்பேன் என்று சசிகலா கூற சொல்லியதாக அவருடைய வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து கடந்த 27ஆம் தேதி விடுதலையாகினார். இதையடுத்து முன்னதாக அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சசிகலாவின் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சசிகலாவின் உடல்நிலை சரியான பிறகுதான் பெங்களூருவிலிருந்து சுசிலா தமிழகம் வருவார் என்று டிடிவி  தெரிவித்துள்ளார். இந்நிலையில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்க […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சசிகலா பூரண குணமடைய வேண்டும்…. இது மனதில் தோன்றிய பதிவு…. ஓபிஎஸ் இளைய மகன் டுவிட்…!!

சசிகலா பூரண குணமடைய வேண்டுவதாக துணை முதல்வரின் இளைய மகன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து கடந்த 27ஆம் தேதி விடுதலையாகினார். இதையடுத்து முன்னதாக அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சசிகலாவின் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சசிகலாவின் உடல்நிலை சரியான பிறகுதான் பெங்களூருவிலிருந்து சுசிலா தமிழகம் வருவார் என்று டிடிவி  தெரிவித்துள்ளார். இந்நிலையில் சசிகலாவுக்கு ஆதரவாக பலரும் குரல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பிளீஸ்! இந்த இரண்டு நிகழ்வையும்…. ஒன்றாக பார்க்க வேண்டாம் – கடம்பூர் ராஜு பேச்சு…!!

சசிகலா விடுதலையையும், ஜெ., நினைவிட திறப்பு விழாவையும் ஒன்றாக பார்க்க வேண்டாம் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் மன்னர் திருமலை நாயக்கரின் 438வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மகாலில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜெ., மட்டுமே […]

Categories

Tech |