ராகுல்காந்தி தன்னுடன் செல்பி எடுக்க ஆசைப்பட்ட சிறுமியின் மேலாடையை சரிசெய்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த 23, 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் கோவை, ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த போது தன்னுடன் செல்பி எடுக்க ஆசைப்பட்ட சிறுமியை பிரச்சார வாகனத்தில் ஏற்றி செல்பி எடுத்துள்ளார். அப்போது அந்த சிறுமியை வாகனத்தில் ஏறுவதற்கு உதவி செய்ததுடன், […]
Tag: மாநில செய்திகள்
சென்னை – திருப்பதி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை – திருப்பதி இடையே மேலும் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த இரயில் பிற்பகல் 2.15 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மாலை 5.45 க்கு திருப்பதி சென்றடையும். மறுமார்க்கத்தில் மாலை 6.10-க்கு புறப்பட்டு, இரவு 10 மணிக்கு சென்னை வந்தடையும். காச்சிகுடா – மங்களூர் சென்ட்ரல் இடையே வாராந்திர சிறப்பு ரயில் ஜனவரி-29 […]
குமரியில் பயங்கர மோதல் ஏற்பட்டு பள்ளி, கல்லூரிகள் சூறையாடப்பட்டதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் மார்த்தாண்டம் மாமுட்டு கடை பகுதியில் பாதை பிரச்சனையில் பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. கல்லூரி சேர்மன் பிரான்ஸ் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பஞ்சாயத்து தலைவர் ராஜ்குமார் உட்பட 50 பேர் கொண்ட கும்பல் பள்ளி, கல்லூரியை சூறையாடியது. இதையடுத்து நொடிக்கு நொடி பதற்றம் அதிகரிப்பதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக திருச்சி மக்கள் நீதி மையம் பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் “நான் எம்எல்ஏ ஆனால்” என்ற தலைப்பில் பொதுமக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக திருச்சி மக்கள் நீதி மையம் பொதுச்செயலாளர் முருகானந்தம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “அரசியல் விழிப்புணர்வு மூலம் வருங்கால தலைமுறைகளால் வளமான […]
அரியர் தேர்வுகளுக்கு தேர்ச்சி வழங்க வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார் . தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் கருணாநிதி, ஜெயலலிதா என்று இருபெரும் ஆளுமைகள் இல்லாத சூழலில் அதிமுக, திமுக ஆகிய பிரதான கட்சிகள் தேர்தல் களத்தை காண இருக்கின்றனர். ஐந்து மாதங்களுக்கு முன்னரே பிரச்சாரம் தொடங்கப்பட்டது தமிழக அரசியலில் […]
ரஜினி மக்கள் மன்ற தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட அர்ஜுன மூர்த்தி புதிய கட்சி தொடங்க உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர். இந்நிலையில் ரஜினி கட்சி தொடங்கப் போவதாக அறிவித்து பின்னர் உடல் நலக்குறைவு காரணமாக கட்சி தொடங்க போவதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டார். இது அவருடைய ரசிகர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை அளித்தது. இந்நிலையில் […]
சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் பொங்கல் பரிசுத்தொகை ரூ.5000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் கருணாநிதி, ஜெயலலிதா என்று இருபெரும் ஆளுமைகள் இல்லாத சூழலில் அதிமுக, திமுக ஆகிய பிரதான கட்சிகள் தேர்தல் களத்தை காண இருக்கின்றனர். ஐந்து மாதங்களுக்கு முன்னரே பிரச்சாரம் தொடங்கப்பட்டது தமிழக அரசியலில் இதுதான் முதல் முறை […]
தமிழக அரசின் புதிய தலைமை செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு பணியில் இருந்த ராஜீவ் ரஞ்சன் ஐஏஎஸ் தமிழக அரசு பணிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை செயலாளராக இருந்தார். இந்நிலையில் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவி நீட்டிப்பு காலம் முடிவடைய உள்ள நிலையில், தமிழக அரசின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் […]
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேலும் ஒரு பெண் வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பல பெண்களை ஏமாற்றி சீரழித்து பணத்தை பறித்த பிரபல குற்றவாளியான காசி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து பல பெண்கள் காசி மீது புகார் அளித்தனர். இந்நிலையில் மேலும் ஒரு பெண் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார். 2019 பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் அம்பலமானதை பெண்கள் வாக்குமூலம் அளித்திருந்தனர். கடந்த டிசம்பர் மாதம் 3 […]
திமுக முன்னாள் எம்எல்ஏ பழனிவேலன் உடலநலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். நாமக்கல் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ பழனிவேலன் (வயது 85) காலமானார். பரமத்தி வேலூரை அடுத்த கோப்பணம்பாளையம் கிராமத்தில் வசித்து வந்த இவர், உடல்நலக்குறைவால் காலமானார். 21 முதல் 26 ஆம் ஆண்டு வரை நாமக்கல் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவரது மறைவுக்கு திமுக உள்ளிட்ட கட்சி தலைவர்கள் உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தைப்பூசம் விழா எதற்காக கொண்டாடப்படுகின்றது என்று இப்போது பார்க்கலாம். முருகனின் அறுபடை வீடுகளிலும் கொண்டாடப்படும் தைப்பூசம் விழாவானது பழங்காலம் தொட்டே தமிழகத்தில் முருகன், சிவன் கோயில்களில் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. இது முருகன் பிறந்த தினமாக அறியப்படுவதால் தான் இன்றைய தினத்தில் முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த நாளன்று பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து முருகனுக்கு காவடி எடுத்தல், அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்களை செய்வார்கள். மேலும் முருகனை வழிபட்டு செல்வார்கள். தைப்பூசத்தன்று தான் உலகம் […]
சசிகலா அமலாக்கத்துறை கடிதங்களுக்கு பதிலளிக்காத நிலையில் தற்போது அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வந்த சசிகலா 4 ஆண்டு சிறை தணடனைக்கு பிறகு நேற்று விடுதலையானார். இதையடுத்து பொதுவாக விடுதலையாகும் ஒருவருக்கு விடுதலை சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும். ஆனால் நேற்று சசிகலா விடுதலையான போது சிறைத்துறை அதிகாரிகள் அவரிடம் விடுதலை சான்றிதழையும், அமலாக்கத் துறை நோட்டீசையும் வழங்கியுள்ளனர். கடந்த ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினருக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்து […]
விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு 100% கல்வித்தொகையுடன் இடமும் வழங்கப்படும் என்று வேல்ஸ் குழுமம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள மாணவர்கள் கபடி, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் சிறந்து விளங்குகின்றனர். இதையடுத்து விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு கல்வி வசதி மற்றும் தமிழக வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழக அளவில் விளையாட்டுத் துறையில் மிகச் சிறப்பாக செயல்படும் மாணவர்களுக்கு 100 சதவீத கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என வேல்ஸ் குழுமம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு […]
திரையரங்குகளில் 100% இருக்கைக்கு அனுமதியளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அனைத்து பொது இடங்களும் மூடப்பட்டன. இதையடுத்து திரை அரங்குகளும் மூடப்பட்டது. பின்னர் கொரோனா பரவல் சற்று குறைந்தத நிலையில் 50 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படம் வெளியாக இருந்த நிலையில், நடிகர் விஜய்யின் கோரிக்கையை ஏற்று 100% அனுமதி அளித்ததை அடுத்து […]
கருணாநிதி நினைவிடத்தில் அதிமுக தொண்டர்கள் மரியாதை செலுத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் அதிமுக கட்சிமற்றுயினர் ம் திமுக கட்சியினர் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு வருகின்றனர். இதையடுத்து நேற்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அப்போது அதிமுக […]
கொப்பரை தேங்காயின் குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, தஞ்சை உள்பட 21 மாவட்டங்களில் அதிகளவில் தென்னை சாகுபடி செய்யப்படுகின்றது. இதிலிருந்து விவசாயிகள் அதிகமாக கொப்பரை தேங்காயை உற்பத்தி செய்கின்றனர். இந்நிலையில் கொப்பரை தேங்காய் குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு ரூபாய் 375 வரை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வேளாண்மை விலை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு குவிண்டால் […]
ஒவ்வொரு மாவட்டங்களிலும் பிரதான பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க நிதி வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அவற்றின் தட்ப வெட்பநிலைகளுக்கேற்ப ஒவ்வொரு பிரதான தொழில் அல்லது ஒவ்வொரு பிரதான பயிர்கள் பயிர்ப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பிரதான பொருட்களின் உற்பத்தி அதிகரிக்க நிதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரியலூர் -முந்திரி, செங்கல்பட்டு -மீன்கள், கோவை- தேங்காய், கடலூர்- முந்திரி, கிருஷ்ணகிரி- மாம்பழம், தர்மபுரி -சிறுதானியம், […]
பிரபலமான 2 கல்லூரி பெயரில் Spread Love என்ற சுற்றறிக்கை வலைத்தளத்தில் வைரலாக பரவி வருவது போலியானது என்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ஒரு கல்லூரிக்கு தமிழகத்தில் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில் இந்த பிரபல கல்லூரியின் பெயரில் ஒரு சுற்றறிக்கை ஒன்று வாட்ஸ் அப் மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது. அதில் ஆண் நண்பர்கள் வைத்திருக்கும் மாணவிகள் மட்டுமே கல்லூரிக்கு வர அனுமதிக்கப்படுவர் […]
11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 40% அளவிற்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளி திறப்பு குறித்து சந்தேகம் எழுந்த நிலையில் பெற்றோரின் கருத்து கேட்பிற்கு பிறகு 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. இந்நிலையில் 9 ,10, 12ஆம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்ட நிலையில் 11-ம் வகுப்பு […]
வடபழனி முருகன் கோவிலில் நாளை இதற்கெல்லாம் அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. நாளை முருகனின் ஆறுபடை வீடுகளில் தைப்பூச திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது. இதையடுத்து ஏராளமான பக்தர்கள் முருகனை தரிசிக்க வருவதுண்டு. இந்நிலையில் சென்னை வடபழனி முருகன் கோயிலில் தைப்பூசத் தினத்தில் காலை 5.30 முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளியை […]
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நாளை பொதுவிடுமுறை அறிவிக்க தமிழக உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் முருகனின் அறுபடை வீடுகளில் வருடம் தோறும் தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவது உண்டு. மேலும் பக்தர்கள் முருகனுக்கு நேர்த்திக் கடன் செய்வதும் உண்டு. ஆனால் வருடந்தோறும் நடைபெறும் தைப்பூச திருவிழாவிற்கு தமிழக அரசு பொது விடுமுறை கிடையாது. இந்நிலையில் தமிழகத்தில் நாளை தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பொது விடுமுறை அளிக்கப்படுவதாகவும், தைப்பூசத் திருவிழா நாளை […]
பேஸ்புக், யூடியூப் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் பெருமாள்புரம் பகுதியில் வசிப்பவர் உமாமகேஸ்வரன். இவர் யூடியூப், பேஸ்புக் மற்றும் சில சமூக வலைதளங்களில் நேரலை செய்யக்கூடிய வசதிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகரிக்கப்பட்ட செய்தி சேனலில் தவிர மற்ற சேனல்கள் உண்மைக்கு புறம்பான விஷயங்களை நேரலை கொடுத்து வருகின்றனர் என்றும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்துள்ளார். இந்த மனு மதுரை உயர்நீதிமன்ற […]
நடிகர் விவேக் முதல்வர் சந்தித்தற்கான காரணம் குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தினை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் இன்று முகாம் அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமியை நடிகர் விவேக் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார். பின்னர் விவேக் அவருடைய டுவிட்டர் பக்கத்தில், அரசியலுக்காக்கவோ அல்லது என் சொந்த காரணமாகவோ முதல்வர் அவர்களை நான் பார்க்கவில்லை. தமிழ் துறவி […]
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அயராது உழைக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் “அதிமுகவை நிராகரிப்போம்” என்ற தலைப்பில் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் சொன்னதை செய்வோம் செய்வதைச் சொல்வோம் என திமுக தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். […]
சசிகலா தனது ஆதரவாளர்களை பெருந்தொற்று காலத்திலும் சந்திப்பார் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் சசிகலா விடுதலை அதிமுக கட்சியில் பிளவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “அதிமுகவை மீட்டெடுத்து உண்மையான அம்மாவின் ஆட்சியை […]
சசிகலாவுக்கு தான் எப்போதும் ஆதரவு தருவதாக பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் சசிகலா விடுதலை அதிமுக கட்சியில் பிளவை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து ஒரு சில அரசியல் கட்சியினர் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தருமபுரியில் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், […]
ஜெயலலிதா மணிமண்டபத்தின் சிறப்பம்சங்கள் என்னவென்று இப்போது பார்க்கலாம். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சென்னை மெரினா கடற்கரையில் கட்டப்பட்டுள்ள மணிமண்டபத்தினை முதல்வர் ஈபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் திறந்து வைத்தனர். இந்த ஜெயலலிதா நினைவிடத்தின் சிறப்பம்சங்கள் என்னவென்று தெரியுமா? இதோ. மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் நினைவிடம் அருகே நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. 15 மீட்டர் உயரம், 30.5 மீட்டர் நீளம், 43 மீட்டர் அகலத்தில் மிகப்பெரிய பீனிக்ஸ் பறவை அமைப்பில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. நினைவிடத்தில் கருங்கல் […]
ஜெயலலிதா மணிமண்டப திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் பிரம்மாண்டமான நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று திறந்துவைத்தனர். இதில் ஏராளமான தொண்டர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர். இதையடுத்து ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழா பிரமாண்டமாக நடந்து கொண்டிருந்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் […]
விடுதலையான சசிகலாவுக்கு கொடுக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு விலக்கி கொள்ளபபட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா திடீரென்று ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருடைய உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இந்நிலையில் தண்டனை காலம் முடிந்து இன்று சசிகலா விடுதலையாகி உள்ளார். இதையடுத்து விக்டோரியா மருத்துவமனையில் உள்ள சசிகலாவிடம் சிறையில் அவர் பயன்படுத்திய உடமைகளை ஒப்படைக்கப்பட்டது. மேலும் பல மருத்துவமனையில் அவருக்கு வழங்கப்பட்டு வந்த போலீசார் காவல் விலக்கிக் கொள்ளப்பட்டது.
தீரன் பட பாணியில் நகைகளை திருடிய கொள்ளையர்களை போலீசார் என்கவுண்டர் செய்து பிடித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நகை கடை வைத்து வியாபாரம் செய்து வருபவர் தன்ராஜ். இவர் ரயில்வே ரோடு பகுதியில் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருடைய வீட்ட்டில் தீரன் பட பாணியில் மனைவி மற்றும் மகனை கொடூரமாக கொன்று விட்டு 16 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்ற கொள்ளையர்களை தமிழக தனிப்படை போலீசார் என்கவுண்டர் செய்து பிடித்துள்ளது பெரும் […]
நடிகை குஷ்பூ தான் கண் கண்ணாடி போடாததால் கொடியை மாற்றி பதிவிட்டதாக மன்னிப்பு கேட்டுள்ளார். நாடு முழுவதும் நேற்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் நடிகை குஷ்பூ குடியரசு தனது டுவிட்டர் பக்கத்தில் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். இதையடுத்து அந்த பதிவில் இந்தி தேசிய கொடிக்கு பதிலாக நைஜர் நாட்டுக் கொடியை பதிவிட்டு இருந்தது பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது. இதையடுத்து […]
தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகளை நியமித்து தலைமை தேர்தல் ஆணையர் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதனால் தேர்தல் குறித்த ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதையடுத்து அரசியல் கட்சிகளும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை பரபரப்பாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள், உதவி அதிகாரிகளை தலைமை தேர்தல் ஆணையம் சத்யபிரதா […]
ஜெயலலிதாவின் மணிமண்டபத்தை திறப்பு விழாவிற்கு அமைச்சர் அதிமுக தொண்டர்களுடன் ஒரு ரயிலையே புக் செய்து வந்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரினா கடற்கரையில் பிரம்மாண்டமான நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதை முதல்வர் இபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று திறந்துவைக்க இருக்கின்றனர். இந்த விழாவில் பங்கேற்பதற்காக மதுரை மாநகர் பகுதியில் இருந்து 1,500 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் தனி ரயில் மூலம் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ அழைத்துக்கொண்டு சென்னைக்கு புறப்பட்டு […]
10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்த நிலையில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மேலும் பெற்றோர்களின் கருத்து கேட்பிற்கு பிறகு கடந்த 19ஆம் தேதி 10 மற்றும் 10 […]
ஜெயலலிதாவின் நினைவிடம் திறப்பு அதிமுகவினரின் நாடகம் என்று முக ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து அதிமுகவினரும் திமுகவினரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா நன்றி கொன்ற இருவர் நடத்தும் நாடகம் என மு.க ஸ்டாலின் […]
சசிகலா நாளை காலை 10.30 மணிக்கு விடுதலையாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா 4 ஆண்டுகால சிறை வாசம் முடிந்து நாளை விடுதலையாக உள்ளார். இதையடுத்து திடீர் உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவருடைய உடல்நிலை சீராகவும்,ம் சசிகலா சுயநினைவுடன் இருப்பதாகபவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் 4 வருட சிறைவாசத்திலிருந்து நாளை காலை 10.30 மணிக்கு சசிகலா விடுதலை காற்றை சுவாசிக்கிறார். உடல்நிலை […]
விவசாயிகளை நிலைகுலைய செய்திருக்கும் பாஜக அரசின் ஆட்சியாளர்கள் உண்மையான தேசத்துரோகிகள் என்று சீமான் காட்டம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 62 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டிராக்டர் பேரணி நடத்தி வந்த விவசாயிகள் போலீசாரின் தடுப்பை மீறி நுழைந்ததால், காவல்துறையினர் அவர்களின் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியதால் போராட்ட களம் வன்முறை களமாக மாறியது. இதனால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் உள்ள […]
போராடி வரும் விவசாயிகளை மதிக்காமல் மத்திய அரசு உதாசீனப்படுத்தி வருவதாக மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் 62 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டிராக்டர் பேரணி நடத்தி வந்த விவசாயிகள் போலீசாரின் தடுப்பை மீறி நுழைந்ததால், காவல்துறையினர் அவர்களின் மீது தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியதால் போராட்ட களம் வன்முறை களமாக மாறியது. இதனால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் பிற மாநிலங்களில் உள்ள […]
10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வினாவங்கி தொகுப்பை வடிவமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்து வந்து நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இதையடுத்து பெற்றோர்களின் கருத்து […]
63 வயதுள்ள முதியவர் ஒருவர் தன் 6 மனைவிகளையும் விவாகரத்து செய்துவிட்டு 7 ஆவதாக திருமணம் செய்யப்போவதாகக் கூறியுள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் என்ற பகுதியை சேர்ந்த 63 வயதுள்ள முதியவர் அய்யூப் தேகியா. இவருக்கு கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் 42 வயதுடைய பெண் ஒருவருடன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் தேகியா கடந்த வருடம் டிசம்பர் மாதத்திலயே தன் மனைவியை பிரிந்துள்ளார். இதற்கு அவர் கூறிய காரணம் அவரது மனைவியை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அதாவது […]
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி மீண்டும் எழுச்சியுடன் செயல்படும் என்று மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். ஜனவரி 24ஆம் தேதி தாராபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி மக்களை சந்தித்து உரையாற்றினார். அவர் உரையாற்றுவதற்கு முன்பாக அப்பகுதிக்கு நேரில் சென்று மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் ஆய்வு மேற்கொண்டார். அப்போது காங்கிரஸ் கட்சியின் திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் தென்னரசு மற்றும் தாராபுரம் […]
சசிகலாவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலாவின் தண்டனை காலம் முடிவடைந்து வரும் 27ஆம் தேதி விடுதலையாக உள்ள நிலையில் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனையில் கொரோனா தொற்றின் காரணமாக நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சசிகலாவின் உடலில் தொடர்ந்து சீராக உள்ளதாக விக்டோரியா மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. […]
தென்பெண்ணை அணை உடைப்பு விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டம் தளவானூர் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள எனதிரிமங்கலம் இடையே தென்பெண்ணை ஆற்றில் ரூபாய் 25 கோடி செலவில் கட்டப்பட்ட தடுப்பணையில் கடந்த 23-ம் தேதியன்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திடீரென்று உடைப்பு ஏற்பட்டதால் அதிகப்படியான தண்ணீர் வெளியேறி உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து திமுக துணைப் பொதுச் செயலாளர் பொன்முடி . […]
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. இந்நிலையில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல் அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். இதையடுத்து கட்சி நிர்வாகிகளிடம் பேசிய நாராயணசாமி, “புதுச்சேரியில் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக ராகுல் காந்தி மூன்று முறை வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியில் தற்போது திமுக கூட்டணி தொடர்கிறது. […]
உலகின் பழம்பெரும் நடிகர் பார்த்திபனின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் திரை உலகின் பழம்பெரும் நடிகர் பார்த்திபன்(90). இவர் வயது முதிர்வு காரணமாக காலமானார். இவர் சிவாஜி கணேசனுடன் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்து பிரபலமானவர். மேலும் புதுமைப்பித்தன், வஞ்சிக்கோட்டை வாலிபன், கோழி கூவுது உள்ளிட்ட சுமார் 170 படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் ராஜாஜி, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா, என்.டி.ஆர் என முதல்வர்களுடன் தொடர்பில் இருந்தவர். இவரது மறைவுக்கு பலரும் […]
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் அக்கட்சியின் உள்ளாட்சி திட்டங்கள் தொடர்பாக பத்திரிக்கையாளர்களை காணொளி மூலமாக சந்தித்து பேசியுள்ளார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன், அக்கட்சியின் உள்ளாட்சி செயல்பாட்டிற்கான திட்டங்கள் குறித்து ஆழ்வார்பேட்டையில் இருக்கும் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்களை சந்திப்பில் காணொளி வாயிலாக பங்கேற்றுள்ளார். அதில் பேசிய அவர், கிராமபுற ஊராட்சிகளுக்கும் நகரப்புற ஊராட்சிகளுக்குமான 7 உறுதிமொழிகள் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் பேசுகையில் சீரமைப்போம் என்றால் அனைத்தும் தான். மக்களுக்கு உள்ளாட்சி […]
தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்து சென்னை வள்ளுவர் கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார். மதிமுகவின் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழக மீனவர்கள் 4 பேர் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மற்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்எஸ்பாரதி போன்றோர் பங்கேற்றனர். அதில் வைகோ பேசியதாவது, “மோடி அரசே உனக்கு மனசாட்சியே இல்லையா? தமிழ்நாட்டின் மீனவர்கள் இந்திய நாட்டின் […]
சென்னை மெரினாவில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி அன்று நடக்கவிருக்கும் குடியரசு தினத்திற்கான ஒத்திகை நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றுள்ளது. இந்தியாவில் தற்போது வரும் ஜனவரி 26ம் தேதி அன்று கொண்டாடவிருக்கும் குடியரசு தினமானது 72 வது குடியரசு தினமாகும். இதனை கொண்டாட சென்னை மெரினாவில் காமராஜர் சாலையில் இருக்கும் காந்தி சிலையின் அருகே மூன்றாம் நாளாக நேற்று ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் முதல் நிகழ்வாக ஆளுநர் மற்றும் முதலமைச்சர் போன்றோரின் வாகன ஒத்திகை நடைபெற்று […]
சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வி இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. கல்லூரிகளில் சேர்ந்து படிக்க முடியாதவர்கள் தொலைதூர கல்வி மூலமாக படித்து தேர்வு எழுதி வருகின்றனர். இதில் தமிழ் மற்றும் ஆங்கிலம் வழியிலும் படிக்கலாம். இதற்கான தேர்வு சமீபத்தில் நடைபெற்றது. இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைதூர இளநிலை, முதுநிலை மற்றும் எம்பிஏ படிப்புகளுக்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.indeunom.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் கடைகளுக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. ஓதையடுத்து கொரோனா பரவல் குறைந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு நாளையும், வடலூர் ராமலிங்க தேவர் நினைவு தினத்தை முன்னிட்டு ஜனவரி 28 அன்றும் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரு நாட்களும் பார்கள் மூடப்படும். மேலும் விடுமுறை நாட்களில் மது […]