Categories
மாநில செய்திகள்

“பறவைக் காய்ச்சல் எதிரொலி” கேரளா – தமிழகம் எல்லை கண்காணிப்பு…!!

கேரளாவில் பறவைக்காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் தமிழக எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவிலிருந்தே மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில் உருமாறிய கொரோனா பரவி வருகிறது. இதனால் உலக நாடுகளை அச்சத்தில் உள்ளன. மேலும் கொரோனாவிற்கான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென காகங்கள் செத்து விழுந்துள்ளன. அதை ஆய்வு செய்தபோது பறவைக்காய்ச்சல் இருப்பதாக செய்தி வெளியானது. இதையடுத்து கேரளாவின் ஆலப்புழாவில் இருந்து பறவை காய்ச்சல் பரவி வருகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“பொங்கல் பரிசு” டாஸ்மாக் மூலம் திரும்பி வந்துவிடும் – திண்டுக்கல் சீனிவாசன்…!!

பொங்கல் பரிசு பணம் வேறு எங்கேயும் போகாது டாஸ்மாக் கடைக்கு வந்து விடும் என்று திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. எனவே அரசியல் கட்சியினர் தேர்தல் பிரச்சாரத்தை பரபரப்பாக தொடங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து தமிழகம் முழுவதும் மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் – இன்று முக்கிய செய்தி…!!

பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் குறித்து இன்று ஆலோசனை நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளியூர்களில் வசிக்கும் மக்கள் பண்டிகை காலங்களில் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவது வழக்கம். இதனால் பேருந்துகள் மற்றும் ரயில்களில் கூட்டம் நெரிசல் காணப்படும். இதை தவிர்ப்பதற்காக பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படும். இந்நிலையில் தற்போது பொங்கல் பண்டிகை வருவதால் மக்கள் வெளியூர்களில் இருப்பவர்கள், கொரோனா காரணமாக சொந்த ஊர்களுக்கு திரும்பாமல் அச்சத்தில் இருக்கின்றனர். இந்நிலையில் வருடந்தோறும் தமிழகம் வரும் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: இன்று மதியம் 1 மணிக்கு – வெளியான பரபரப்பு அறிவிப்பு…!!

இன்று மதியம் 1 மணிக்கு செம்பரம்பாக்கம் ஏறி திறந்து விடப்படுகின்றது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. இந்நிலையில் செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து இன்று மதியம் 1 மணிக்கு உபரி நீர் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பதால் செம்பரம்பாக்கம் புழல் ஏரியில் இருந்து 5000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. செம்பரம்பாக்கம், புழல் ஏரி திறக்கப்படுவதால் […]

Categories
மாநில செய்திகள்

“குரூப்-1 தேர்வில்” 6 கேள்விகள் தவறானது…. தகுந்த மதிப்பெண் வழங்க கோரிக்கை…!!

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் கேட்கப்பட்ட ஆறு கேள்விகள் தவறானது என்று புகார்கள் எழுந்துள்ளன. டிஎன்பிஎஸ்சி தமிழகம் முழுவதும் வருடந்தோறும் பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகின்றது. இதில் ஏராளமான மாணவர்கள் தேர்வெழுதி அரசு பணிகளுக்கு செல்கின்றனர். இந்நிலையில் ஜனவரி 3ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் குரூப் 1 தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் ஆறு கேள்விகளுக்காண வினா, விடை, மொழியாக்கம் ஆகியவை தவறாக இருந்ததாக புகார் எழுந்துள்ளது. அதாவது 32, 33, 59, 64, 90, 163 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜனவரி 28 பொது விடுமுறை – முதல்வர் அதிரடி உத்தரவு…!!

தைப்பூச திருவிழாவிற்கு ஆண்டுதோறும் பொதுவிடுமுறை அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் ஜனவரி 28ஆம் தேதியன்று தைப்பூச திருவிழா கோலாகலமாக வருடந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏராளமான பக்தர்கள் இந்த விழாவில் பங்கேற்று முருகனை தரிசிப்பார்கள். இந்த விழா வருடந்தோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவிற்கு முருகபக்தர்கள் விரதமிருந்து பல்வேறு நேர்த்திக்கடன் செய்வார்கள். இதற்கு எப்பொழுதும் அரசு விடுமுறை கிடையாது. இந்நிலையில் ஜனவரி 28 கொண்டாடப்படும் இந்த தைப்பூச திருவிழாவை […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே! பள்ளிகள் திறப்பு – அரசு அதிரடி முடிவு…!!

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து  ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து முதுநிலை பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்ப்பிடத்தக்கது. இதையடுத்து பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கலாமா? வேண்டாமா? […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு கிடையாது – அதிர்ச்சி செய்தி…!!

கையெழுத்து போட தெரியாதவர்களுக்கு பொங்கல் பரிசு கிடையாது என்று கூறியதால் பார்ப்பரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2500 வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து அரசு ஊழியர்கள் மூலம் மூலமாக வீடு வீடாக சென்று டோக்கன் வினியோகம் செய்யப்பட்டது. நேற்று முதல் தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பொங்கல் பரிசுத்தொகுப்பை மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் சென்னை, சோழிங்கநல்லூர், மேடவாக்கம் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களின் கல்வி கடன் ரத்து…? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்…!!

தேர்தலுக்குப் பிறகுதான் மாணவர்களின் கல்வி கடன் ரத்து பற்றியும் தெரிய வரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் “தேர்தல் வரும்போதுதான் மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்வது பற்றி தகவலும் தெரியவரும். 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு பொதுத் தேர்வின் போது நிச்சயமாக நடைபெறும். மேலும் […]

Categories
மாநில செய்திகள்

பிரதமர் மோடிக்கு முதல் தடுப்பூசி – ஜோதிமணி வேண்டுகோள்…!!

கொரோனா தடுப்பூசியை முதலில் மோடி போட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி எம்பி ஜோதிமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா பரவி வருவதால், தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் இறங்கி வருகின்றனர். இந்நிலையில் ஒரு சில நிறுவனங்களின் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. இந்தியாவில் கோவிஷில்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகளுக்கு மத்திய அரசு அவசர அனுமதி அளித்துள்ளது. ஆனால் முறையான பரிசோதனை இல்லாமலே அவசரகதியில் அனுமதி வழங்கியதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த குழப்பங்களுக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: ரஜினி திடீர் அதிரடி அறிவிப்பு…!!

ரஜினி ரசிகர்கள் என்று கூறி ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினி ஜனவரியில் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். எனவே பொதுமக்கள் மற்றும் அவருடைய ரசிகர்களும் பெரும் சந்தோஷத்தில் இருந்தனர். இந்நிலையில் ரத்த அழுத்தம் காரணமாக ரஜினி ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து வீடு திரும்பிய அவர் தான் கட்சி தொடங்க போவதில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டாதால் அவருடைய ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவருடைய ரசிகர்கள் பலர் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்! பொங்கல் பரிசோடு “கொரோனாவும் வரும்” – எச்சரிக்கை…!!

பொங்கல் பரிசு வாங்க வருபவர்கள் முகக்கவசம் அணியாததால் கொரோனா ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முதல்வர் எடப்பாடி தேர்தல் பிரச்சாரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசாக ரூபாய் 2500 அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து அரசு ஊழியர்கள் மூலமாக டோக்கன்கள் வினியோகிக்கப்பட்டது. இதையடுத்து இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதில் டோக்கன் வாங்கியவர்களுக்கு பரிசுத்தொகுப்பு கொடுத்து முடித்த மறு நாளிலிருந்து, டோக்கன் வாங்காதவர்களுக்கும் தடையின்றி […]

Categories
மாநில செய்திகள்

“காவல்துறையின் 3வது கண்” சிசிடிவி கேமரா…. உலகளவில் சென்னை முதலிடம்…!!

காவல்துறையினரின் 3வது கண் என்னும் திட்டத்தின் கீழ் சென்னை உலக அளவில் முதல்  பிடித்துள்ளது. சமீபத்தில் ஒரு தனியார் நிறுவனம் ஒன்று உலக நாடுகளிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட 138 நகரங்களில் சிசிடிவி தொடர்பான கணக்கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளது. அதில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 657  கேமராக்களை கொண்ட நகரங்களிலேயே சென்னை முதலிடத்தில் உள்ளது. மேலும் இந்த கணக்கெடுப்பில் உலகத்திலேயே அதிக சிசிடிவி கேமராக்களை கொண்ட நகரமாக சீனாவில் உள்ள பீஜிங் நகரம் முதலிடத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக பொதுச்செயலாளர் “துரைமுருகனுக்கு காய்ச்சல்” – மருத்துவமனையில் அனுமதி…!!

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் இருக்கின்றது. இதையடுத்து பல்வேறு அரசியல் கட்சியினரும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.  இந்நிலையில் காட்பாடி சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கொண்டகுப்பம் உள்ளிட்ட கிராமங்களில் இன்று மக்கள் சபை கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பங்கேற்று பேசியுள்ளார். அப்போது அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் உடனடியாக […]

Categories
மாநில செய்திகள்

மக்களே ஹேப்பி நியூஸ்! டோக்கன் வாங்கலனாலும்…. ரூ.2500 கிடைக்கும்….!!

டோக்கன் வாங்காதவர்களும் பொங்கல் பரிசு வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி தேர்தல் பிரச்சாரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பரிசாக ரூபாய் 2500 அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவிப்பை வெளியிட்டார். இதையடுத்து அரசு ஊழியர்கள் மூலமாக வீடு வீடாக சென்று டோக்கன்கள் வினியோகிக்கப்பட்டது. இதையடுத்து இன்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசுப் பொருட்களாக ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ […]

Categories
மாநில செய்திகள்

“100% இருக்கை” விஜய் & சிம்பு கோரிக்கையை ஏற்று – தமிழக அரசு அதிரடி…!!

விஜய் மற்றும் சிம்புவின் கோரிக்கையை ஏற்று திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவலினால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் பல மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்தன. இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் தான் திரையரங்குகள் திறக்கப்பட்டன. இதையடுத்து கொரோனா பிரச்சினை இன்னும் தீராத நிலையில் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC இல் பரியேறும் பெருமாள்…. நிறைவேறிய நோக்கம்…. மாரி செல்வராஜின் டுவிட்…!!

டிஎன்பிஎஸ்சி தேர்வில் பரியேறும் பெருமாள் படம் குறித்து கேள்வி இருந்ததற்கு மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்துள்ளார். இயக்குனர் மாரி செல்வராஜ் படைப்பில் உருவான படம் பரியேறும் பெருமாள். இது சமூகநீதி சார்ந்த படமாகும். இதனால் இந்த படம் மக்களிடையே அதிகமாக பேசப்பட்ட படமாகும். மேலும் இந்த படத்திற்கு விருதும் கிடைத்துள்ளது. இந்த படம் தூத்துக்குடி மாவட்டம் புளியங்குளம் என்ற கிராமத்தில் எடுக்கப்பட்ட படமாகும். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வில் பரியேறும் பெருமாள் திரைப்படம் குறித்த கேள்வி இடம்பெற்றிருந்தது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

யார் பேச்சையும் நம்பாதீங்க…. மீறினால் என் முடிவு தான்…. எச்சரித்த சிரஞ்சீவி…!!

யார் பேச்சையும் கேட்டு அரசியலுக்கு வந்தால் என் முடிவு தான் என்று சிரஞ்சீவி ரஜினிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் பல வருடங்களாக தான் அரசியலுக்கு இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி  காட்டி வந்தார். இதையடுத்து தற்போது ஜனவரியில் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். எனவே அவருடைய ரசிகர்கள் படு சந்தோஷத்தில் இருந்தனர். இந்நிலையில் ரத்த அழுத்தம் காரணமாக ரஜினி ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயடுத்து ரஜினி தான் கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்று […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பூசி…. முதலில் இவர்களுக்குத் தான் – சுகாதாரத்துறை…!!

கொரோனா தடுப்பூசி முதலில் முன் களப்பணியாளர்களுக்கு செலுத்தப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா கோரத்தாண்டவமாடி வருகிறது. இந்நிலையில் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்இறங்கியுள்ளனர் . இதையடுத்து ஒரு சில நிறுவனங்களின் தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்நிலையில் பிரிட்டனிலிருந்து உருமாறிய கொரோனா தமிழகத்திற்கும் பரவியுள்ளதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31 வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து இன்று தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது. இந்நிலையில் இந்த தடுப்பூசி முதலாவதாக களப் பணியாளர்களுக்கும், […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முக்கிய பிரபலம் – மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதி…!!

அதிமுக எம்எல்ஏ ராஜேந்திரன் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரியலூர் அதிமுக எம்எல்ஏவும், அரசு தலைமை கொறடாவுமான ராஜேந்திரனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு அடைப்பை சீரமைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Categories
மாநில செய்திகள்

குட் நியூஸ்! மேலும் 6 சிறப்பு ரயில்கள் – தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!

பண்டிகை காலத்தை முன்னிட்டு மேலும் 6 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பண்டிகையை முன்னிட்டு 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.தற்போது பண்டிகை காலம் என்பதால் மக்கள் வெளியூர்களில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புவார்கள். இதனால் நெருக்கடியை குறைப்பதற்காக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி ஈரோடு – சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்கள் ஜனவரி 10 முதல். விழுப்புரம்- திருப்பதி, திருச்சி – பாலக்காடு சிறப்பு ரயில்கள் […]

Categories
மாநில செய்திகள்

BigAlert: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு – உச்சகட்ட எச்சரிக்கை…!!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனவரி 5ஆம் தேதி கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேலும் சென்னை மற்றும் புறநகர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 11 நாட்கள் விடுமுறை – அறிவிப்பு…!!

நியாய விலைக்கடைகளுக்கு பல்வேறு பண்டிகைகளை முன்னிட்டு 11 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் பல்வேறு பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களுக்கும், அரசு பணியாளர்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை விடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையடுத்து பல்வேறு பண்டிகையை முன்னிட்டு இந்த வருடம் 11 நாட்கள் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை விடப்படுவதாக உணவு துறை அறிவித்துள்ளது. அதன்படி ஜனவரி 14, ஜனவரி 26 ,ஏப்ரல் 14, மே 1, மே 14, ஆகஸ்ட் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“வருங்கால முதல்வரே” போஸ்டர் ஓட்டினாலும்…. முதல்வராக முடியாது…!!

வருங்கால முதல்வரே என்று போஸ்டர் ஓட்டினாலும் ஸ்டாலின் முதல்வராக முடியாது என்று மு.க அழகிரி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஆளும் கட்சியினரும் எதிர் கட்சியினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர். இந்நிலையில் கருணாநிதியின் மூத்த மகனான மு.க அழகிரி மீண்டும் அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்துள்ளார். இதையடுத்து அவரால் திமுகவுக்கு பாதிப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

Breaking: தயாராக இருங்கள்: விரைவில் அறிவிப்பு – மு.க அழகிரி பரபரப்பு பேச்சு…!!

மக்களே தயாராக இருங்கள் விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று மு.அழகிரி ஆலோசனை கூட்டத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளார்.  தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தொடங்க ஆரம்பித்துள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் மதுரையில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் ஆலோசனை கூட்டத்தில் பேசிய மு.க அழகிரி “சதிகாரர்கள், துரோகிகளை எதிர்ப்பதற்கான முதல் படிக்கட்டு இந்த கூட்டம். எம்ஜிஆரின் கோட்டையாக இருந்த மதுரையை திமுகவின் கோட்டையாக […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 நாட்களுக்கு…. வெளுத்து வாங்கும் மழை – வானிலை ஆய்வுமையம்…!!

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை  வெளுத்து வாங்கப்போவதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ளதில், ஜனவரி 4 ஆம் தேதி வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், தென் தமிழகத்தில்ஓரிரு இடங்களில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அப்படி போடு! திமுக ஆட்சிக்கு வந்தால்…. “கல்விக்கடன் ரத்து” – மு.க ஸ்டாலின் வாக்குறுதி…!!

திமுக ஆட்சிக்கு வந்தால் முதலில் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்று மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இதையடுத்து ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் தங்களுடைய பரபரப்பு பிரச்சாரத்தை தொடங்கி உள்ளனர் . மேலும் பிரச்சாரத்தின் போது ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு வருகின்றனர். மக்களை கவரும் தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கின்றனர். இந்நிலையில் அதிமுக தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கிய நிலையில் “அதிமுகவை நிராகரிப்போம்” என்ற தலைப்பில் திமுக தலைவர் ஸ்டாலின் […]

Categories
மாநில செய்திகள்

புத்தாண்டிற்கு கணவன் விடுப்பு எடுக்கவில்லை… விரக்தியில் மனைவி எடுத்த விபரீத முடிவு…!!

திருக்கனூர் அருகே பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருக்கனூர் அருகே வம்பு பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தம்பதியினர் மணிவண்ணன்- ஜெயபிரதா. மணிவண்ணன் தனியார் நிறுவனத்தில்  கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இத்தம்பதியருக்கு 2 மகன்கள் உள்ளனர். மணிகண்டன் ஓட்டுநராக பணிபுரிந்து வருவதால் மிக முக்கிய தேவைகளுக்கு கூட  விடுப்பு எடுக்காமல் இருந்துள்ளார் . இந்நிலையில் தனது கணவரிடம் புத்தாண்டை கொண்டாடுவதற்காக ஒரு நாள் விடுப்பு எடுக்குமாறு ஜெயபிரதா […]

Categories
மாநில செய்திகள்

ரூ.2,500 வாங்க முடியலையா…? கவலை வேண்டாம்…. பொங்கலுக்கு அப்புறம்கூட வாங்கிக்கலாம்…!!

பொங்கல் பரிசை குறித்த தேதிகளில் வாங்க முடியாதவர்கள் பொங்கல் முடிந்த பிறகு கூட வாங்கிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் பொது மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வண்ணம் கொரோனா மற்றும் நிவரால் மக்கள் பாதிக்கப்பட்டதால்  பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் பரிசாக, ரூபாய் 2500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து பொங்கல் பரிசு வழங்குவதற்காக டோக்கன்கள் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விநியோகிக்கப்பட்டு வருகிறது. வரும் […]

Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ.600 கோடி நிவாரணம் – முதல்வர் அறிவிப்பு…!!

புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் நிவாரணமாக ரூ.600 கோடி வழங்குவதாக முதல்வர் அறிவித்துள்ளார். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பல்வேறு விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகினர். இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். மானாவாரி மற்றும் நீர்ப்பாசன வசதி பெற்ற நெல் பயிர்களுக்கு மற்றும் நீர்ப் பாசன வசதி பெற்ற இதர பயிர்களுக்கும் ஹெக்டேர் ஒன்றுக்கு இடுபொருள் நிவாரணத் தொகையாக 13, 500 ரூபாய் என்பதை 20 ஆயிரம் […]

Categories
மாநில செய்திகள்

கடன் வாங்கப்போகிறீர்களா? – அதிர்ச்சி அறிவிப்பு…!!

மக்கள் கடன் வாங்குவதற்கு ஆன்லைன் செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கீகாரமற்ற கடன் செயலிகள் மூலம் கடன் பெற்று நிறைய பேர் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. எனவே அங்கீகாரம் இல்லாத கடன் செயலி மூலம் கடன் பெற வேண்டாம் எனவும், அங்கீகாரமற்ற ஆன்லைன் கடன் ஆப்  மூலம் கடன் வாங்குவது சட்டத்திற்கு புறம்பானது, அங்கீகாரமற்ற ஆன்லைன் கடன் ஆப்கள் மீது பொதுமக்கள் புகார் கொடுக்கலாம் என ரிசர்வ் வாங்கி ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் கடன் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே மகிழ்ச்சி செய்தி! புயல் நிவாரணமாக ரூ.25,000 – அதிரடி அறிவிப்பு…!!

நிவர் மற்றும் புரெவி புயலினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத்தொகையாக ரூ25, 000 கொடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் நிவர் மற்றும் புரெவி புயல் காரணமாக பல்வேறு விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகினர். இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவாரணம் வழங்க உத்தரவிட்டார். மானாவாரி மற்றும் நீர்ப்பாசன வசதி பெற்ற நெல் பயிர்களுக்கு மற்றும் நீர்ப் பாசன வசதி பெற்ற இதர பயிர்களுக்கும் ஹெக்டேர் ஒன்றுக்கு இடுபொருள் நிவாரணத் தொகையாக 13, 500 ரூபாய் என்பதை 20 […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு கிடைக்கவில்லையா…? இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம் – புதிய அறிவிப்பு…!!

பொங்கல் பரிசுத்தொகை ரூ.2500 தொடர்பான பிரச்சினைகள் இருந்தால் இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தேர்தல் பிரச்சாரத்தின் பொது மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வண்ணம் கொரோனா மற்றும் நிவரால் மக்கள் பாதிக்கப்பட்டதால்  பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் பரிசாக, ரூபாய் 2500 ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து பொங்கல் பரிசு வழங்குவதற்காக டோக்கன்கள் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விநியோகிக்கப்பட்டு வருகிறது. வரும் 6 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கட்சியை பலப்படுத்த நிர்வாகிகள்… அதிகாரமும் பொறுப்பும் இல்ல…. விமர்சித்த கார்த்திக் சிதம்பரம்…!!

காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனத்தால் கட்சிக்கு எந்த பலனும் இல்லை என கார்த்திக் சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். இன்றைய தினம் தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில் அது குறித்த விமர்சனத்தை கார்த்தி சிதம்பரம் முன்வைத்துள்ளார். தேர்தல் வருவதையொட்டி தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி தன்னை பலப்படுத்திக்கொள்ள புதிய நிர்வாகிகள் நியமன பட்டியலை வெளியிட்டு இருந்தார்கள். இது காங்கிரஸ் கட்சியின் தலைவர் பரிந்துரையின் அடிப்படையில் கொடுக்கப்பட்டு அது காங்கிரஸ் தலைமை ஏற்றுக் […]

Categories
மாநில செய்திகள்

வரும் 4 ஆம் தேதி முதல் – இரவு 11.15 மணிக்கு…!!

வரும் 4 ஆம் தேதி முதல் இரவு 11.15 க்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்துபெங்களூரு, மைசூரு, திருநெல்வேலி – பாலக்காடு, திருச்சி – ராமேசுவரம் மார்க்கங்களில் வரும் 4-ம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுடன் பல்வேறு இடங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, 4-ம் தேதி முதல் […]

Categories
மாநில செய்திகள்

JustIn: தமிழகத்தில் பள்ளி திறப்பு, பொதுத்தேர்வு – வெளியான புதிய தகவல்…!!

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு பிறகு வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடந்து வருகிறது. இதையடுத்து முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறந்து வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது மற்ற ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக நடத்தப்படுகிறது. இந்நிலையில் தற்போது பிரிட்டனில் பரவிய உருமாறிய […]

Categories
மாநில செய்திகள்

அரசுப் பள்ளிகளில்…. கணினி அறிவியல் ஆசிரியர் பணி…. இந்த தேதிகளில் கலந்தாய்வு…!!

அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் ஆசிரியர் பணிகளுக்கு ஜனவரி2, 3 தேதிகளில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் கணினி அறிவியல் ஆசிரியர் பணிக்கு முதன் முறையாக  முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான கலந்தாய்வு வரும் ஜனவரி 2(நாளை), 3ம்(நாளை மறுநாள்) தேதிகளில் நடைபெற இருக்கிறது. இந்தப் பணிகளுக்கு, ஆசிரியர் தேர்வு வாரியம்  மூலம் ஆன்லைன் வழியாக தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற 742 பேர் குறித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் […]

Categories
மாநில செய்திகள்

8 வருடக் காதல்…. 1 மாதத்தில் முடிந்த பரிதாபம்… தொடரும் “ஆணவக் கொலைகள்”….!!

காதலித்து திருமணம் செய்து கொண்ட இளைஞர் அடித்து கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்திலுள்ள கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த நாகன்னா – சுவர்தம்மா தம்பதியின் மகன் ஆடம்ஸ்மித். இவர் பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள்  இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர் . இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் ஆடம்ஸ்மித் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் விசாரணை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ரஜினி கட்சி ஆரம்பிக்காதற்கு…. இந்த இரு நடிகர்கள் தான் காரணம்…? வெளியான தகவல்…!!

ரஜினி அரசியல் வராததற்கு இந்த இரு நடிகர்கள் தான் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினி 2017 வருடம் டிசம்பரில் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். இதையடுத்து இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டி வந்தார். ஒரு வழியாக 2020 வருடம் டிசம்பர் இறுதியில் கட்சி ஆரம்பிக்கப் போவதாக முடிவெடுத்தார். ஹைதராபாத் ஷூட்டிங்கில் அப்போது படக்குழுவினருக்கு கட்சி உறுதியானது. இந்நிலையில் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து தான் அரசியலுக்கு வருவேன் என்று […]

Categories
மாநில செய்திகள்

“நலமாக இருக்கிறேன்” மகிழ்ச்சியுடன்…. புத்தாண்டு வாழ்த்து கூறிய ரஜினி…. வெளியான வீடியோ…!!

ரஜினி தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை நிர்வாக குழுவினருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார். இதனால் அவருடைய ரசிகர்கள் கடும் குஷியில் இருந்தனர். அதே நேரத்தில் அரசியல் கட்சியினர் பலரும் பீதியில் இருந்தனர். இதையடுத்து ரஜினி நடிப்பில் உருவாகும் அண்ணாத்த படப்பிடிப்பின்போது படக்குழுவில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ரஜினிக்கு கொரோனா தொற்று உறுதியாகவில்லை. இருப்பினும் ரத்த அழுத்தம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நாளை…. கொரோனா தடுப்பூசி ஒத்திகை – சுகாதாரத்துறை…!!

தமிழகத்தில் நாளை கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்க உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை ஆட்டிப் படைத்து வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல் போன்றவற்றை மக்கள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இதன் மூலம் கொரோனா பரவலை தடுக்க முடியும். இந்நிலையில் “முக கவசம் உயிர்க்கவசம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை அரசு ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தொடங்கி […]

Categories
மாநில செய்திகள்

ரஜினிகாந்த் வீட்டின் முன்பு…. ரசிகர் தீக்குளிக்க முயன்றதால்…. பரபரப்பு…!!

அரசியலுக்கு வர வலியுறுத்தி ரசிகர் ஒருவர் ரஜினி வீட்டின் முன்பு தீக்குளிக்க முயன்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த “இப்ப இல்லன்னா வேற எப்பவும் இல்லை என்று கூறி, வரும் டிசம்பர் 31-ஆம் தேதி கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடுவேன் என்று கூறி வந்தார். இதனால் அவருடைய ரசிகர்கள் கடும் சந்தோஷத்தில் இருந்தனர். இது பல அரசியல் கட்சியினருக்கு பீதியை ஏற்படுத்தியது. இதையடுத்து அண்ணாத்த படப்பிடிப்பின் போது அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பரபரப்பு! முதலமைச்சர் கார் மீது…. மர்மநபர்கள் தாக்குதல்…!!

முதலமைச்சர் எடப்பாடியின் காரை மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் அனைத்து கட்சியினரும் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளர் . எனவே அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குறை கூறிக்கொண்டு வருகின்றனர். இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்கி உள்ளார். இவர் முதன் முதலில் தன்னுடைய […]

Categories
மாநில செய்திகள்

“ரஜினி தான் என் வாழ்க்கை”…. கடைசி பதிவை போட்டுவிட்டு…. உயிரை விட்ட ரஜினியின்…. தீவிர ரசிகர் ராஜ்குமார்…!!

ரஜினிகாந்த் கட்சி தொடங்காததால் விரக்தியில் ரசிகர் ஒருவர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த “இப்ப இல்லன்னா வேற எப்பவும் இல்லை என்று கூறி, வரும் டிசம்பர் 31-ஆம் தேதி கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பு வெளியிடுவேன் என்று கூறி வந்தார். இதனால் அவருடைய ரசிகர்கள் கடும் சந்தோஷத்தில் இருந்தனர். இது பல அரசியல் கட்சியினருக்கு பீதியை ஏற்படுத்தியது. இதையடுத்து அண்ணாத்த படப்பிடிப்பின் போது அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தன்னுடைய […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்வழி மாணவர்கள் புறக்கணிப்பு – டிஎன்பிஎஸ்சி விளக்கம்…!!

தமிழ்வழி மாணவர்களை தேர்வில் புறக்கணித்துள்ளது என்ற தகவல் குறித்து டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடந்து முடிந்த 18 தொல்லியல் அலுவலர்கள் பதவிக்கான தேர்வில் தமிழ்வழியில் படித்த மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக தகவல்  வெளியாகியுள்ளது. ஆனால் இது முற்றிலும் தவறான செய்தி என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தொல்லியல் அலுவலர் பதவிகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு கலந்தாய்வு மூலமாக அனைத்து பணியிடங்களும் நிரப்பப்பட்டுள்ளது. இந்தப் பதவிக்கு முதுகலை […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாவட்டங்களில்…. கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்…!!

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஓரளவுக்கு நல்ல மழையை கொடுத்துள்ளது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் வரும் ஜனவரி 10-ஆம் தேதி வரை வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 6 சதவீதம் அதிகமாகவும், தென்மேற்கு பருவமழை இயல்பைவிட 24 சதவீதம் அதிகமாகவும் பெய்துள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. 2020ஆம் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக ஆட்சிக்கு வந்த பின்…. ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் – ஸ்டாலின்…!!

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ஜெயலலிதா மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் இருக்கின்ற நிலையில் அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களுடைய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதையடுத்து ஆளும் கட்சியினரும், எதிர் கட்சியினரும் தங்கள் பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஒருவரை ஒருவர் பழி கூறி வருகின்றனர். இதையடுத்து தமிழக முன்னாள் முதலமைச்சர்  ஜெயலலிதா கடந்த 2014ஆம் வருடம் அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்களுக்கு மேல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்கள் ஆசீர்வாதம் கிடைத்தால்…. தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றி காட்டுவேன் – கமல்…!!

மக்களின் ஆசீர்வாதம் கிடைத்தால் தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாற்றி காட்டுவேன் என்று கமல் கூறியுள்ளார். மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் தனது மூன்றாம் கட்ட பிரச்சாரத்தை திருச்சியில் தொடங்கி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் முடித்துள்ளார். இதையடுத்து அருப்புக்கோட்டை தனியார் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் பொதுக்கூட்டம் நடத்தியுள்ளார். அதில், “புகழ் என்பது எனக்கு புதியது கிடையாது. உங்கள் தயவால் தான் அதை எனது ஐந்து வயது முதலே அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். உங்களுடைய ஆசீர்வாதம் மட்டும் கிடைத்தால், […]

Categories
மாநில செய்திகள்

திருச்சி டிஎன்பிஎல் ஆலை…. ரூ.2,000 கோடி செலவில் விரிவாக்கம் – முதலமைச்சர்…!!

திருச்சியிலுள்ள டிஎன்பிஎல் ஆலை விரிவாக்கம் செய்யவுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த முதலமைச்சர் எடப்பாடி, பின்னர் ராஜகோபுரம் முன்பாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தமிழகத்தின் முன்னோடி தொகுதியாக ஸ்ரீரங்கம் விளங்குவதாகவும், அதற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா திட்டங்களை அறிவித்து செயல்படுத்தியது தான் இதற்கு காரணம் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து முதலமைச்சர் விவரித்துள்ளார். பிறகு திருச்சி டிஎன்பிஎல் தொழிற்சாலை 2 ஆயிரம் […]

Categories
மாநில செய்திகள்

உங்க பட்டா மற்றும் சிட்டா விவரங்களை…. ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி…? இதோ தெரிஞ்சிக்கோங்க…!!

பட்டா மற்றும் சிட்டா விவரங்களை ஆன்லைனில் சரிபார்ப்பது எப்படி என்று பார்க்கலாம். பட்டா என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தின் உரிமைக்கான சட்டபூர்வமான மற்றும் முக்கியமான ஆவணமாகும். நிலத்தின் உரிமையாளரின் பெயரில் அரசாங்கத்தால் பட்டா வழங்கப்படுகிறது. இது “உரிமைகளின் பதிவு” என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த  உரிமையாளரின் பெயர், முகவரி, பட்டாவின் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்தும் குறிப்பிடப்பட்டிருக்கும். சிட்டா என்பது ஒரு அசையாச் சொத்து குறித்த சட்ட வருவாய் ஆவணமாகும். இது அந்தந்த கிராம நிர்வாக அதிகாரி மற்றும் தலுகா […]

Categories

Tech |