விரைவில் குணமடைந்து வா சூர்யா என்று ரஜினியை நடிகர் மம்முட்டி தளபதி படத்தை குறிப்பிட்டு ரஜினிக்கு டுவிட் செய்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் “அண்ணாத்த” படப்பிடிப்பின்போது படக் குழுவில் இருந்த நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. ஆனால் ரஜினிக்கு தொற்று இல்லை என்றாலும் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இருப்பினும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததுள்ளது. மேலும் […]
Tag: மாநில செய்திகள்
அதிமுகவின் முன்னாள் மூத்த தலைவரான ஆர்.ஜனார்த்தனன் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சரும், அதிமுக மூத்த தலைவருமான ஆர். ஜனார்த்தனன் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரில் 1929ஆம் வருடம் அக்டோபர் 22-ஆம் தேதி விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் படித்த போது அண்ணாவின் பேச்சு ஆற்றல் மூலம் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர் ஆவார். அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய மூன்று தலைவர்களின் காலத்தில் கோலோச்சியவர். மேலும் திருநெல்வேலி தொகுதியில் இருந்து நான்கு முறை மக்களவை […]
ரஜினி மற்றும் கமலை பார்க்க கூட்டம் மட்டும் தான் வரும் அது ஓட்டாக மாறாது என்று விஜய் வசந்த் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவருடைய உடல்நிலை சீராக இருப்பதாகவும் ரத்தஅழுத்தம் கட்டுக்குள் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. ஆனாலும் ரஜினிக்கு தற்போது முழு ஓய்வு தேவை என்று மருத்துவ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் இது அவருடைய கட்சியின் அறிவிப்பை பாதிக்குமா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் மறைந்த […]
காதல் திருமணம் செய்த வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் அனீஷ். இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக அதே பகுதியை சேர்ந்த மாற்று சாதி பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் பெண்ணின் உறவினர்கள் தொடர்ச்சியாக அனிஷ்க்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை அனிஷ் சரமாரியாக […]
ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து நலம் பெற வேண்டுமென்று இணையத்தில் ஹாஷ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அண்ணாத்த படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்றிருந்த நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் படப்பிடிப்பு நடந்து வந்த போதிலும் படப்பிடிப்பில் இருந்த 4 பேர் தொற்று உறுதியாகியுள்ளது. ஆனால் ரஜினிகாந்துக்கு தொற்று இல்லை என்றாலும் அவர் தன்னுடைய இரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருந்ததன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படார். தற்போது […]
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் நல்லகண்ணுவிற்கு முதல்வர் எடப்பாடி பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் 1925ஆம் ஆண்டு பிறந்தவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. இவர் தன்னுடைய பதினெட்டாவது வயதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அக்கட்சியில் சமூகத்திற்காக பாடுபட தொடங்கினார். தன்னுடைய வாழ்நாளில் பல பகுதிகளை சிறையிலேயே கழித்தார். தற்போது வரை எந்த ஆடம்பரமும் இல்லாமல் அரசியல் ஒதுக்கி கொடுத்த குடியிருப்பில் எளிமையாக காலத்தை கழித்து வருகிறார் இந்த சமூக […]
திராவிட இயக்கத்தின் பேரவை நிறுவனர் சுப. தங்கபாண்டியன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து மக்களை பாதித்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். மேலும் நேற்று ஒரே நாளில் மட்டும் 1027 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இந்நிலையில் திராவிட இயக்கத்தின் பேரவை நிறுவனர் சுப. தங்கப்பாண்டி அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுகுறித்து சுப. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்தியில், […]
30 ஆண்டுகளாக திமுகவில் தான் முட்டாளாகவே இருந்து விட்டதாக நடிகர் ராதாரவி பேட்டியளித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே இருக்கின்றன. எனவே அரசியல் கட்சியினர் தங்களுடைய பிரசாரத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் காரைக்குடியில் நடிகர் ராதாரவி செய்தியாளர்களை சந்தித்துப் பேசுகையில், தமிழகத்தில் திமுகவை கருணாநிதி அடகு வைத்து விட்டதால் தான் ஸ்டாலின் தமிழகத்தை மீட்போம் என்று கூறிவருகிறார். மேலும் அதிமுகவை குறை கூற திமுகவுக்கு எந்தவித அருகதையும் கிடையாது. ஊழல் சாம்ராஜ்யம் என்பது திமுகவுக்கு […]
16ம் வருடம் சுனாமி நினைவு தினமான இன்று சுனாமியால் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது. கடந்த 2004ஆம் வருடம் டிசம்பர் 26 ஆம் தேதி இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கு அருகே கடலுக்கு அடியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில நடுக்கத்தால் இந்தியப் பெருங்கடலில் ஒரு சுனாமி உருவானது. இந்த ஆழிப்பேரலை இந்தியாவின் கடலோரப் பகுதிகளில் கோரத் தாண்டவமாடி விட்டு சென்றது. இந்தோனேஷியா மற்றும் இந்தியா மட்டுமல்லாமல் மியான்மர், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட 14 நாடுகளின் கடலோர பகுதிகளை தாக்கி […]
பொங்கல் பரிசுத்தொகைக்கான டோக்கன் இன்று முதல் 30ஆம் தேதி வரை விநியோகிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் திருநாளையொட்டி அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசாக ரூபாய் 2500 வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. மேலும் அதோடு பச்சரிசி, சர்க்கரை, முழுக்கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உணவு பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பொங்கல்பரிசான ரூபாய் 2500 பரிசுத்தொகையை பெற இன்று முதல் 30ஆம் தேதி […]
எம்ஜிஆரை பற்றி பழித்து பேசிய சீமான் ஒரு அரைவேக்காடு என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எம்ஜிஆரின் பிறந்தநாளன்று, அவரின் உருவப்படத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜு வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். அதோடு எம்ஜிஆர் நினைவு நாளுக்காக மொட்டை போட்டுக் கொண்ட அதிமுக தொண்டர்களுக்கு வேஸ்டிகள் மற்றும் சட்டைகளை வழங்கியுள்ளார். இதயடுத்து அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அதில், “எம்ஜிஆரை தமிழக மக்கள் ஒரு தெய்வமாக வணங்குகிறார்கள். அவரை […]
வருடப்பிறப்பன்று மது போதையில் வாகனங்கள் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டையொட்டி சென்னை கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டங்களை மக்கள் கொண்டாடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும் புத்தாண்டு தினத்தன்று சாலைகளில் கொண்டாட்டங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வாகன ஓட்டிகள் மது போதையில் வாகனங்களை ஓட்டிச் சென்று ரகளையில் ஈடுபடுவர்களை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் குடும்பத்துடன் தேவாலயங்கல் மற்றும் […]
இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பிய 40க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாவிலிருந்தே உலகம் இன்னும் மீண்டு வராத நிலையில் தற்போது கொரோனவில் இருந்து உருமாறிய புதிய வைரஸ் பிரிட்டனில் பரவி வருகிறது. இந்த வைரஸ் முந்தைய வைரசை விட வீரியம் மிக்கதாகவும், வேகமாக பரவி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த புதிய வைரஸுக்கான 7 அறிகுறிகள் குறித்து தற்போது சுகாதாரத்துறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள் அனைவரும் தாமாகவே முன்வந்து கொரோனா […]
ரஜினியை நேரில் சந்திக்க வேண்டாம் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளதற்கான காரணம் வெளியாகவில்லை. கொரோனா பரவல் குறைந்த நிலையில் ரஜினி நடித்த “அண்ணாத்த” படப்பிடிப்பு தொடங்கியது. இந்நிலையில் படப்பிடிப்பில் நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது இதனால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. இதையடுத்து ரஜினிக்கும் பரிசோதனை மேற்கொண்ட போது அவருக்கு கொரோனா இல்லை என்பது உறுதியானது. ஆனால் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதால், மருத்துவமனையில் அவரது உடல் நலம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது. மேலும் ரஜினிகாந்துக்கு […]
நண்பரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு சென்ற மாணவர் கடல் அலையில் மூழ்கி மாயமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலத்திலுள்ள தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் வில்லியனூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பாலாஜிக்கு பிறந்த நாள் என்பதால் நண்பர்கள் 7 பேருடன் தவளக்குப்பத்தை அடுத்துள்ள புதுக்குப்பம் கடற்பகுதிக்கு பாலாஜி சென்றுள்ளார் . அங்கு கேக் வெட்டி பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடிய பின் பாலாஜியும் அவனது நண்பர்களும் […]
ரஜினியின் உடல்நிலை தற்போது சீரான நிலையில் உள்ளது என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் தற்போது புதியதாக கட்சி ஆரம்பித்து அரசியலில் இறங்கியுள்ளார். இதனை அவருடைய ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். வரும் வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கின்ற நிலையில் தனது தேர்தல்ரஜினி பிரச்சாரத்தை ஆரம்பித்தார். இந்நிலையில் ரத்த அழுத்தம் காரணமாக ஐதராபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரத்த அழுத்தம் சீராக வைத்திருக்க ரஜினிக்கு […]
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினியின் உடல்நலம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டறிந்துள்ளார். 2021 வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்களுடைய பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்களும் கட்சி ஆரம்பித்து தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். மேலும் எப்போதும் நடைபெறும் தேர்தலைவிட வரும் வருடம் நடக்கப்போகின்ற தேர்தல் சுவாரஸ்யமாக இருக்கப்போகிறது என்று மக்களுடைய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் காரணமாக ஐதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். […]
திமுக ஒரு குடும்ப அரசியல் என்ற குற்றச்சாட்டிற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். திமுக மீது பல வருடங்களாக அனைத்து கட்சியினரால் வைக்கப்படும் முதன்மையான விமர்சனங்களில் ஒன்று குடும்பத்தோடு அரசியல் செய்கிறார்கள் என்பதுதான். மறைந்த கலைஞர் அவர்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஏதாவது ஒரு வழியில் அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். நடிகர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் இளைஞர் அணியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மக்கள் வார்டு கிராம சபை கூட்டத்தில் பேசிய மு.க ஸ்டாலின் […]
அமைச்சர் எஸ்பி வேலுமணி எல்இடி பல்பு வாங்கியதில் 500 கோடி ஊழல் செய்துள்ளதாக திமுக புகார் மனுவை கொடுத்துள்ளது. திமுக நிர்வாகிகள் கடந்த 22ஆம் தேதி அன்று அதிமுக அமைச்சர்கள் குறித்த 22 பக்கங்கள் கொண்ட ஊழல் புகார் மனுவை ஆளுநரிடம் வழங்கியுள்ளனர். இதுகுறித்து ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்ல இருப்பதாகவும் திமுக அமைச்சர்கள் கூறி வந்தனர். மேலும் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி எல்இடி பல்பு வாங்கியதற்காக சுமார் 600 கோடி […]
என்னை அணைக்கவும், சண்டை போடவும் கமலுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது என்று நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பு காங்கிரஸ் கட்சியில் முன்னதாக இருந்தார். இதையடுத்து சமீபத்தில் இந்த கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் பாஜகவில் தன்னுடைய அரசியல் வேலையை கவனித்துக் கொண்டிருக்கிறார். அதேபோல மக்கள் நீதி மைய தலைவர் கமல்ஹாசனும் கட்சியை தொடங்கி தற்போது அடுத்த சட்டமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் மும்முரமாக ஈடுபட்டு வந்துகொண்டிருக்கிறார். கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்குகிறார். அந்த […]
விஜய் ரசிகர்கள் என் மீது கோபப்பட்டு என்ன ஆகப்போகிறது என்று சீமான் விஜய் ரசிகர்களுக்கு பதில் அளித்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் சமீபத்தில் நடிகர் விஜய் பற்றி கருத்து தெரிவித்து பெரிய சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். இதனால் இணையத்தில் விஜய் ரசிகர்கள் சீமானுக்கு எதிராக கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வந்தனர். மேலும் சீமானை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி பரபரப்பை கிளப்பி வந்தனர். அடிக்கிற அடியில் ரஜினி, கமல், […]
கார்களின் பம்பர்களை நீக்காவிட்டால் ரூ 5,000 அபராதம் விதிக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். சாலை விபத்துக்களின் போது ஏற்படும் உயிரிழப்புகளுக்கு, நான்கு சக்கர வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் பம்பர்கள் முக்கிய பங்கு வகிக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இதையடுத்து 2017 ஆம் வருடம் மத்திய போக்குவரத்து அமைச்சகம் காரிலிருந்து பம்பர்களை அகற்ற உத்தரவிட்டது. இது குறித்து தமிழக போக்குவரத்துத் துறை தொடர்ந்து நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்களிடம் தெரிவித்து வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்தகட்ட நடவடிக்கையில் […]
அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என்ற முதல்வர் எடப்பாடியின் செயலை நீதிமன்றம் பாராட்டியுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு பள்ளிமாணவர்களின் மருத்துவ கட்டணத்தை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு கல்விக் கட்டணத்தை அரசே ஏற்பதால் மக்களுக்கு சேவையாற்றும் மருத்துவர்கள் அதிக அளவில் வருவார்கள் என்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்று முதல்வரின் முடிவு பாராட்டுக்குரியது. மருத்துவ சீட்டுக்காக அதிகம் செலவு செய்பவர்கள் சம்பாதிப்பதிலேயே […]
இனி கிராமசபை கூட்டம் நடத்த அனுமதி கிடையாது என்று ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில் கிராமசபை கூட்டம் நடைபெறும். கிராமப் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறும். இதில் கிராமத்திலுள்ள வாக்காளர்கள், ஆண்கள், பெண்கள், முதியவர்கள், பட்டியல் பிரிவினர் என அனைவரும் கலந்துகொள்ளலாம். கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவராவார். சட்டமன்ற நாடாளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கிராமசபை சட்டத்திற்கு உண்டு. […]
மிக முக்கிய பிரபலமான பேராசிரியர் தொ. பரமசிவன் மரணமடைந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளர்களில் மிக முக்கியமான ஒருவர் பேராசிரியர் தொ.பரமசிவன்(75). இவர் நாட்டார் வழக்காறு சார்ந்த பார்வையில் புது வெளிச்சம் பாய்ச்சியவர் ஆவார். மேலும் இவர் “திராவிடம்” எனும் சிந்தனை எப்படி நம் தமிழ் மண்ணில் உருவானது, அதற்கான வரலாற்று – பண்பாட்டுப் பின்னணி என்ன என்று தர்க்கபூர்வமாக நிலைநாட்டியவர். பண்பாட்டுத் தளத்தில் அறிஞர் அண்ணாவின் பங்களிப்புகளை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். பிரபல எழுத்தாளரும்,இந்நிலையில் […]
திறனறிவு தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் கண்டிப்பாக தேர்வை வரும் டிசம்பர் 27 ஆம் தேதி எழுத வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும்கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்கள் வீட்டிலிருந்து தேர்வு எழுதி வருகின்றனர். இந்நிலையில் தேசிய அளவிலான திறனறிவுத் தேர்வு வரும் டிசம்பர் 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பிளஸ்-1 […]
செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜு மக்கள் நீதி மய்யம் தலைவரை கடுமையாக சாடியுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 2021 மே மாதம் நடக்க இருக்கும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தங்களுடைய பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் கோவில்பட்டி அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்துள்ளார். அப்போது “எனது சொத்து கணக்கு பற்றிய வெள்ளை அறிக்கை வெளியிட நான் தயாராக இருக்கிறேன். ஆனால் கமல் தயாராக இருக்கிறாரா ?” […]
வங்கிகள் 3 நாட்களுக்கு விடுமுறை என்பதால் இன்றே ஏடிஎம்களில் சென்று தேவையான பணத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். வங்கிகள் என்பது பணம் தொடர்பான நமது அன்றாட தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில் வங்கிகளில் தொடர் விடுமுறையில் ஏடிஎம் மையங்களில் பணம் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. நாளை முதல் டிசம்பர் 27-ஆம் தேதி வரை வங்கிகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை காரணமாக 25ஆம் தேதி நாலாவது சனிக்கிழமை என்பதால், 26 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வார […]
பொறியியல் பயிலும் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு ஆன்லைன் வழியாக நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் சற்று குறைந்ததால் முதுநிலை பயிலும் கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் நடத்தப்படுகிறது. மற்ற வகுப்பு கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜனவரியில் பொறியியல் செமஸ்டர் தேர்வு தொடங்கும் என்று […]
பொங்கல் பண்டிகைக்கு பிறகு தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது. ஆனால் பள்ளிகள் திறக்க வாய்ப்பே இல்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகள் திறக்கும் என […]
இந்த மூன்று நாட்கள் வங்கிகள் செயல்படாது என்பதால் வங்கி தொடர்பான வேலையை உடனே முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கி என்பாத்து நமது வாழ்க்கையின் தேவையாக ஒன்றாக மாறிவிட்டது. பணம் எடுப்பது, போடுவது, கடன் வாங்குதல் மற்றும் அடகு வைத்தல் போன்ற தேவைகளுக்கு பயன்படுகின்றது. இந்நிலையில் இந்த ஆண்டு முடிவதற்கு இன்னும் எட்டு நாட்களே உள்ளன. இதனால் வங்கி தொடர்பான எந்த வேலையையும் நீங்கள் செய்ய திட்டமிட்டிருந்தால் முன்கூட்டியே முடிப்பது நல்லது. ஏனெனில் நாளை தவிர்த்து டிசம்பர் 25, 26 […]
உலகிற்கே படியளக்கும் விவசாயியாக இருப்பதில் கூடுதல் மகிழ்ச்சியடைகிறேன் என்று முதல்வர் பழனிச்சாமி பதிவிட்டுள்ளார். வருடந்தோறும் டிசம்பர் 23-ம் தேதி தேசிய விவசாயிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் விவசாயிகள் கடின உழைப்பை போற்றுகிறார்கள். அவர்களுக்கு நன்றியும் கூறுகிறார்கள். இதன் அடிப்படையில் இந்தியா ஒரு விவசாய நாடு என்று போற்றப்படுகின்றது. விவசாயிகள் சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்ற பழமொழி கூட இருக்கிறது. ஆகவே நாம் அனைவரும் விவசாயிகள் அனைவரையும் […]
தனுஷ்கோடி நகரம் அழிந்து போன நீங்கா துயர சம்பவம் நடந்து இன்றுடன் 56 வருடங்கள் நிறைவடைந்தது. ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது தனுஷ்கோடி. இந்த நகரம் ராமேஸ்வரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இலங்கையுடன் கடல் வாணிபம் செய்வதற்கு தனுஷ்கோடி சிறந்த துறைமுகமாக விளங்கி வருகிறது. இந்திய பெருங்கடலும் , வங்க கடலும் சேரும் இடம் தனுஷ்கோடி கடல் ஆகும். இங்கு குளித்தால் காசியாத்திரை முடிவது என்பது ஐதிகம். தனுஷ் என்றால் […]
இந்த வருடம் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கிடையாது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலபடுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவர்களுக்கான ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்படாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. வருடந்தோறும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் மாணவர்களுக்கு […]
புதுவகையான கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை குறித்து முதல்வர் முதல்வர் மருத்துவ குழுவுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கிறது. இருப்பினும் தொற்று பரவல் சற்று குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் இயல்பு வாழ்வுக்கு வாழ்க்கைக்கு திரும்பி இருக்கின்றனர். இதையடுத்து கடந்த மாதம் தொடங்கி டிசம்பர் 31-ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்த தமிழக முதல்வர் பழனிசாமி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்துள்ளார். […]
பொங்கலுக்கு ஜல்லிக்கட்டு போட்டியை சில கட்டுப்பாடுகளுடன் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்களின் போது தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் வருடம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் வருடம் 2021 பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு கட்டுப்பாடுகளுடன் நடத்துவதற்கு அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது. இந்த போட்டிகளை நடத்துவதற்கும், பங்கேற்பதற்கும் சில கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் போட்டிகளில் பங்கேற்பதற்கு முன்னதாக கொரோனா […]
பொங்கல் பரிசுத்தொகையை வீடுகளுக்கே வந்து டோக்கன் கொடுக்கப்பட்டு பரிசுத்தொகை வழங்க அரசு உத்தரவு அளித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா மற்றும் புயலால் பாதிக்கப்பட்டதால் பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.2500 வழங்குவதாக அறிவித்தார். மேலும்அரிசி ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இந்நிலையில் பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பபை ஜனவரி-4 ம் தேதி தொடங்கி 13-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சுற்றறிக்கை […]
மின்தடை செய்ய வரும் பணியாளர்களுக்கு பணம் கொடுக்க வேண்டாம் என தமிழக மின்வாரியம் அறிவித்துள்ளது. வீடுகளில் ஏதாவது மின்தடை ஏற்பட்டால் அத சரி செய்ய மின்வாரியதிலிருந்து ஒரு பணியாளர் வந்து சரிசெய்து கொடுப்பர். அவருக்கு அரசாங்கம் மாதாமாதம் சம்பளம் கொடுக்கிறது. இருப்பினும் அவர்கள் மின்தடையை சரிசெய்து கொடுத்துவிட்டு பணம் வாங்குவதாக புகார்கள் வந்தன. இந்நிலையில் மின் இணைப்புகளில் ஏற்படும் மின்தடையை சரிசெய்ய வரும் பணியாளர்களுக்கு பணம் கொடுக்க தேவையில்லை என தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது. மின்தடையை சரிசெய்ய, […]
கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் மக்கள் ரயிலில் பயணம் செய்யலாம் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ரயில் சேவைகள் அனைத்தும் முடங்கின. இந்நிலையில் ஊரடங்கு தளர்வுக்கு பிறகு ரயில் சேவை தொடங்கியதை அடுத்து ஊழியர்களுக்கு மட்டும் ரயில் சேவை தொடங்கியது. இந்நிலையில் சென்னை புறநகர் ரயில்களில் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் நாளை முதல் பொதுமக்கள் பயணம் செய்யலாம் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். […]
பொங்கல் பரிசுத்தொகையை குறிப்பிட்ட இந்த தேதிக்குள் வழங்குமாறு அரசு உத்தரவு அளித்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொரோனா மற்றும் புயலால் பாதிக்கப்பட்டதால் பொங்கல் பரிசுத்தொகையாக ரூ.2500 வழங்குவதாக அறிவித்தார். மேலும்அரிசி ரேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். இந்நிலையில் பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பபை ஜனவரி-4 ம் தேதி தொடங்கி 13-ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சுற்றறிக்கை அனுப்பியது. மேலும் […]
உருமாறி இருக்கும் புதிய தொட்டு தமிழகத்திற்குள் வராமல் இருக்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது தற்போது உருமாறி இருக்கும் கொரோனா தொற்று முந்தைய வைரசை விட கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அனைத்து விமான சேவைகளும் இந்தியாவிற்கு வருவதை தவிர்க்க பிரிட்டனில் இருந்து இந்தியாவிற்கு இயக்கக் கூடிய அனைத்து விமானங்களும் டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் குறிப்பாக சென்னையில் இருந்து இரண்டு விமானங்கள் தினமும் லண்டனுக்கு இயக்கப்பட்டு வந்தது. […]
பொங்கல் பரிசு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றதை பொறுக்க முடியாமல் பொய்யாக ஆளுநரிடம் ஸ்டாலின் புகார் கொடுத்துள்ளதாக முதல்வர் கூறியுள்ளார். இன்று காலை திமுக தலைவர் ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து அதிமுக மீது ஊழல் புகார் கொடுத்தார். இதுகுறித்து முதல்வர் பழனிசாமி கூறுகையில் ” அவர் நான் முதலமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து கூறிக் கொண்டிருக்கிறார் புதிதாக கூறவில்லை. இன்று ஆளுநரை சந்தித்து புகார் கொடுத்திருக்கிறார். இதற்கு காரணம் கொரோனா தொற்றால் பொது மக்கள் வாழ்வாதாரம் இழந்து இருக்கின்ற சூழ்நிலையில் […]
இங்கிலாந்திலிருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதால் புது வகை கொரோனாவோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. பிரிட்டனில் புதியதாக கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இது முந்தைய கொரோனா வைரஸை விட மிகவும் தீவிரமாகப் பரவி வருகிறது என்று பிரிட்டன் அரசு எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் பிரிட்டன் விமான போக்குவரத்தை ஒவ்வொரு நாடுகளாக துண்டித்து வருகின்றன. இந்த புதிய வகை வைரஸுக்கான மாதிரிகள் ஆஸ்திரேலியா, இத்தாலி போன்ற நாடுகளிலும் கண்டறியப் பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் அனைத்து […]
சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்றத்தவர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகை கிடையாது அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரிசி ரேஷன் அட்டை உடைய குடும்பதாரர்களுக்கு பொங்கல் தினத்தையொட்டி பொங்கல் பரிசுத் தொகையாக ரூபாய் 2500 வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய பிரசாரத்தின்போது அறிவித்தார். மேலும் இது புயல், கொரோனா போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டதால் இந்த பரிசுத்தொகை வழங்கப்படுகிறது என்றும் அறிவித்தார். இந்நிலையில் பொங்கல் பரிசுத் தொகை பெறுவதற்காக சர்க்கரை அட்டையை, அரிசி அட்டையாக மாற்றினால் மட்டுமே கிடைக்கும் என்று […]
கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என்று தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு மமுழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதிப்புகளை சந்த்தித்து வருகின்றனர். இந்நிலையில் வெளிநாடுகளில் புதிதாக ஒரு கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து கடற்கரை மற்றும் சாலைகளிலும் 2021 வருட புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை. மேலும் டிசம்பர் 31 நள்ளிரவு மற்றும் ஜன 1ம் தேதி பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். தங்கும் விடுதிகள் மற்றும் […]
ஒய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு பணப்பலன் வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. போக்குவரத்து ஊழியர்கள் தங்களுக்கு போதிய அளவு சம்பளம் கிடைக்கவில்லை மற்றும் பணபலன் ஆகியவை வழங்க வேண்டும் என்று அவ்வப்போது வேலைநிறுத்த போராட்டம் செய்து வந்தனர். இந்நிலையில், ஒய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு பணப்பலன் வழங்க ரூ.972 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 2019-ம் வருடம் ஒய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன் கிடைக்கும் வகையில் அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, 2019 ஜூன் […]
தமிழகம் உட்பட 7 மாநிலங்கள் பேரழிவை சந்திக்க உள்ளதாக யுனெஸ்கோ அறிக்கை வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து புதிய வகை கொரோனா வைரஸ் ஒன்று பரவி வருவதாகவும், அது வேகமாக பரவி வருவதாகவும் அச்சம் நிலவி உள்ளது. இந்நிலையில் தமிழகம், கேரளா, குஜராத், மகாராஷ்டிரா, கோவா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் நீர் கோபுரமாக விளங்கும் மேற்குத்தொடர்ச்சி மலை […]
குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக 2,800 ரூபாய் வழங்குவதற்கான அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது ஒவ்வொரு வருடமும் தமிழர் பண்டிகையான தை பொங்கலை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசாக அரசு வழங்குவது வழக்கம். அதே போன்று இவ்வருடமும் பொங்கல் பரிசு 1000 ரூபாய் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலமைச்சர் அவர்கள் இந்த வருடம் பொங்கல் பரிசு 2500 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது தமிழக அரசு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு […]
காரைக்காலில் முன்னாள் எதிர்க்கட்சி தலைவரின் மனைவி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காரைக்காலை அடுத்த திருப்பட்டினம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் வி.எம்.சி.வி கணபதி-அருமை கண்ணு. வி.எம்.சி.வி கணபதி புதுச்சேரி மாநிலத்தில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். இவர்களது மகன் மற்றும் மகள் இருவரும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். சமீபகாலமாக தம்பதியினருக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அப்போது அருமை கண்ணு தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார். இந்நிலையில் […]
ஒரு பணம் செலவில்லாமல் பான் கார்டை உடனே பெற எப்படி விண்ணப்பிப்பது என்று இப்போது பார்க்கலாம். இன்றைய காலகட்டத்தில் மக்கள் எல்லோரும் பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு வைத்திருப்பது என்பது மிக முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இந்த இரண்டு அட்டைகளும் இல்லாமல் எந்த ஒரு நிதி பணபரிவர்த்தனையும் செய்ய முடியாது. ஆதார் அட்டையை கொண்டு பான் கார்டு சில நிமிடங்களில் வழங்கப்படும். இதில் பத்து இலக்க எண் ஒன்று இருக்கும். இது வருமான வரித்துறை வெளியிடும். […]