Categories
மாநில செய்திகள்

TNPSC நேர்முகத்தேர்வு – தேதிகள் அறிவிப்பு…!!

கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்விற்கான தேதிகள் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக நடத்தப்பட இருந்த தேர்வுகள் மற்றும் நேர்காணல் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் அனைத்தும் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சமீபத்தில் கால்நடை உதவி மருத்துவர் பதவி காலி பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு 1907 பேர் தற்காலிகமாக நேர்முகத் தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஜனவரி 4, 8, 11, 12, 18, 23, 25, 26 […]

Categories
மாநில செய்திகள்

கட்டுப்பாடுகளுடன்…. நீச்சல் குளங்களில் அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு…!!

நீச்சல் குளங்களில் பயிற்சி பெற பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில் பள்ளிகள், கல்லூரிகள், பார்கள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள் உள்ளிட்ட அனைத்தும் மூடப்பட்டன. இதையடுத்து தற்போது கொரோனா சற்று குறையத் தொடங்கிய நிலையில் ஊரடங்கு கட்டுப்பாட்டில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நீச்சல் குளங்களில் பயிற்சி பெற அனுமதி அளிக்கப்பட்டட்டுள்ளது. விளையாட்டு வீரர்களை அனுமதிக்கவும், பயிற்சி பெறவும் பல்வேறு […]

Categories
மாநில செய்திகள்

ஆசிரியரல்லாத பணியிடங்கள்…. நிரப்ப அனுமதி – பள்ளிக்கல்வித்துறை…!!

ஆசிரியரல்லாத அரசு பள்ளிகளில் பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வி துறை அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் உள்ள பல அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லாமல் இருக்கிறது. இந்நிலையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்ப பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது. அதன்படி 389 இளநிலை உதவியாளர், 95 பதிவறை எழுத்தாளர் பணியிடங்களை உருவாக்கி ஆணையிடுவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. புதிய பணியிடங்களால் அரசுக்கு கூடுதல் செலவினங்கள் ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

இந்த 8 மாவட்டங்களில்… மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வுமையம்…!!

வளிமண்டல சுழற்சி காரணமாக இந்த 8 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தென் மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. இதனால் ஆறுகள், குளங்கள்மற்றும் ஏரிகள் நிரம்பியுள்ளன. தற்போது குமரி கடலுக்கு மேலே ஒரு கிலோ மீட்டர் உயரத்திற்கு வளிமண்டல சுழற்சி காணப்படுவதால் தமிழகத்தில் ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா அப்டேட்…. 24 மணி நேரத்தில்…. இவ்வளவு பேருக்கு உறுதி…!!

கொரோனா தொற்று உறுதி, குணமடைந்தோர் மற்றும் உயிரிழந்தோரின் எண்ணிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பாதிப்பு சற்று குறைந்த நிலையில் உறங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. ஆனால் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருவதும் பின்னர் கூடுவதுமாக இருக்கிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 26,624 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிப்பு எண்ணிக்கை […]

Categories
மாநில செய்திகள்

23 நாட்கள் விடுமுறை…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!

வரும் வருடத்தில் இருபத்து மூன்று நாட்கள் விடுமுறை நாட்களாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. 2021ல் 23 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலைக் கொண்டு இப்போது உங்கள் பயணங்களை திட்டமிடலாம். ஜனவரி 1 -நியூ இயர், 14 -16 பொங்கல், 26 -குடியரசு தினம். ஏப்ரல் 1-நிதி ஆண்டு முடிவு ,2-புனித வெள்ளி, 13 -தெலுங்கு வருட பிறப்பு, 14 -தமிழ்ப் புத்தாண்டு, அம்பேத்கர் பிறந்த நாள், 25 -மகாவீர் ஜெயந்தி. மே 1 […]

Categories
மாநில செய்திகள்

Alert: அதிக விடுப்பு எடுப்போருக்கு ஆப்பு – உஷாரா இருங்க…!!

அதிகமாக விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கல்லூரி ஆசிரியர்கள் தங்களுடைய தேவைக்காக விடுப்பு எடுப்பது வழக்கம். தற்போது கொரோனா காரணமாக அதிகமாக விடுப்பும் ஆசிரியர்களுக்கு கொடுக்கப்பட்டு வருகின்றது. இதுதவிர சில ஆசிரியர்கள் மருத்துவ விடுப்பு தவிர மற்ற காரணங்களுக்காகவும் அதிகமாக விடுப்பு எடுத்துள்ளனர். இந்நிலையில் அதிக விடுப்பு எடுக்கும் ஆசிரியர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை தயார் செய்ய அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கும் கல்லூரி கல்வி இயக்ககம் சுற்றறிக்கை […]

Categories
மாநில செய்திகள்

இன்று கடைசி நாள் – அரசு பணம் கிடைக்க உடனே செய்யுங்க…!!

பொங்கல் பரிசு வாங்க சர்க்கரை அட்டையை அரிசி அட்டையாக மாற்ற இன்று கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று இன்று தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தார். ஏற்கனவே பொங்கலுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அரிசி குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த பொங்கல் பரிசை வாங்க முடியும். கொரோனா, […]

Categories
மாநில செய்திகள்

ரஜினி கடும் எச்சரிக்கை – போடு தகிட தகிட…!!

ஓட்டுக்கு பணம் கொடுக்க கூடாது என்று ரஜினி மக்கள் மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சியினர் பரபரப்புடன் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். நேற்று முதல்வர் பழனிசாமி தன்னுடைய சொந்த ஊரிலிருந்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். இதேபோன்று கமலும் தன்னுடைய பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார். இவ்வாறு தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. மேலும் ஒவ்வொரு அரசியல் கட்சியை சேர்ந்தவரும் ஒருவரை ஒருவர் குறை கூறிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் […]

Categories
Uncategorized

பட்டதாரி ஆசிரியர்களுக்கு…. ஓரிரு நாட்களில் பணி நியமனம் – அமைச்சர் செங்கோட்டையன்…!!

பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு  நாட்களில் பணி நியமனம் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கடந்த 2018ஆம் வருடம் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களில் 857 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் மூன்று இடங்களில் 41 பேர் கம்ப்யூட்டர்  பழுது காரணமாக செல்போன் மூலமாக தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. எனவே இந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் இதுகுறித்து வழக்கு தொடர்ந்ததன் காரணமாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு ரூ.2500…. தேர்தலுக்கு – மு.க ஸ்டாலின்…!!

முதல்வர் தன்னுடைய சுயநலத்திற்காக பொங்கல் பரிசை உயர்த்தி வழங்கியுள்ளதாக ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று தேர்தல் பிரசாரத்தின் போது அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கலையொட்டி பொங்கல் பரிசு ரூ.2500 அறிவித்துள்ளார் . இந்நிலையில் கொரோனாவால் மக்கள் கஷ்டப்படும்போது நிவாரணம் தரவில்லை. தேர்தல் நெருங்கும்போது சுயநலத்துக்காக முதல்வர் பொங்கல் பரிசு அறிவித்துள்ளாரா? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சுயநலத்தின் மொத்த உருவமே முதல்வர்தான். சசிகலா காலில் ஊர்ந்து முதல்வரானது சுயநலமா? பொதுநலமா? பதவியை காப்பாற்றிக் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு – முதல்வர் புது அறிவிப்பு…!!

பொங்கல் பரிசை உயர்த்தி வழங்கியதற்கான காரணத்தை முதல்வர் பழனிச்சாமி தற்போது அறிவித்துள்ளார். ஆளும் கட்சியினரும் எதிர் கட்சியினரும் தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் ஒருவரை ஒருவர் மாறி மாறி விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அனைத்து கட்சியினை சேர்ந்தவர்களும் தங்களுடைய தேர்தல் பிரசாரத்தை தொடங்க ஆரம்பித்துள்ளனர். இன்று தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தின்போது பொங்கல் பண்டிகையொட்டி பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று அதிரடியாக புதிய ஒரு அறிவிப்பை அறிவித்தார். இது குறித்து […]

Categories
மாநில செய்திகள்

நாளை கடைசி நாள் – பொங்கல் பரிசு ரூ.2500 கிடைக்காது – Alert…!!

பொங்கல் பரிசுத்தொகை வாங்க சர்க்கரை அட்டையை அரிசி  அட்டையாக மாற்ற நாளை கடைசி நாள் என்று தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று இன்று தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்தார். ஏற்கனவே பொங்கலுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அரிசி குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த பொங்கல் பரிசை வாங்க முடியும். […]

Categories
மாநில செய்திகள்

அவருக்கு தலைவர் அந்தஸ்து இல்லை…. கமலை சாடிய கடம்பூர் ராஜு…!!

கமலுக்கு தலைவருக்கான அந்தஸ்து இன்னும் வரவில்லை என்று கடம்பூர் ராஜு விமர்சனம் செய்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 2021 வருடம் நடக்க இருக்க நிலையில் எதிர் கட்சியினரும், ஆளும் கட்சியினரும் தங்களை ஒருவருக்கொருவர் மாறி மாறி குறை கூறிக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அதிமுக கட்சியினருக்கும், கமலுக்கும் இடையே வார்த்தை போர் மூண்டு வருகிறது. இபிஎஸ் அவர்கள் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி பார்த்தால் குடும்பம் உருப்படாமல் போய்விடும் என்று விமர்சனம் செய்தார். அதற்கு பதிலடி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பெரும் அதிர்ச்சி – WHO தகவல்…!!

தமிழகத்தில் 40% குழந்தைகள் வளர்ச்சி குறைவாக பிறப்பதாக WHO அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. பிறந்த குழந்தையின் எடை சராசரியாக 2.5 கிலோவாக இருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தில் 40 சதவீதம் குழந்தைகள் 2 முதல் 2.2 கிலோ எடையுடன் தான் பிறக்கின்றன. குழந்தை முழுமையாக வளர்ச்சி அடைய 37 முதல் 40 வாரங்கள் வரை ஆகும். 28 முதல் 34 வாரங்களுக்குள் பிறக்கும் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவர். எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 – முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!

அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.2500 வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டை உள்ளவர்களுக்கு ஏற்கனவே ரூபாய் ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த வருடம் தை பொங்கலையொட்டி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 2021 ஜனவரி 4 ஆம் தேதியிலிருந்து ரூ.2500 மற்றும் ஒரு கிலோ அரிசி, ஒரு முழுக் கரும்பு, ஒரு கிலோ சர்க்கரை, […]

Categories
மாநில செய்திகள்

” ஒய்வு பெற்ற அதிகாரிகள்” தேர்தல் பணி கூடாது – தேர்தல் ஆணையம்…!!

தமிழக தேர்தல் ஆணையம் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 2021-ஆம் வருடம் நடைபெற உள்ளது. இதற்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. அதற்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் தற்போது மேற்கொண்டு வருகிறது. முன்னதாக தமிழக அரசியல் கட்சிகளும், தங்கள் சார்பில் தேர்தல் பிரசாரங்களை ஆரம்பித்து உள்ளன. பல சினிமா நடிகர்களும் அரசியலில் இறங்கியுள்ளனர். இதனால் தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தமிழக தலைமை தேர்தல் ஆணையம் நெறிமுறைகளை […]

Categories
மாநில செய்திகள்

உஷார்: வாகன ஓட்டிகளுக்கு பெரிய ஆப்பு – அதிரடி உத்தரவு…!!

போக்குவரத்து விதிமுறைகளை கட்டுப்படுத்தும் பொருட்டு சென்னையில் புதிய முறை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலும் வாகன ஓட்டிகளுக்கு சாலை விபத்துக்கள் ஏற்படும் போது உயிர்காக்கும் கவசமாக ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் இருக்கின்றன. எனவே வாகன ஓட்டிகள் விபத்துகள் ஏற்படும்போது உயிருக்கு ஆபத்து ஏற்படாமல் தடுப்பதற்காக சீட்பெல்ட் மற்றும் ஹெல்மெட் அணியும்படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். ஆனாலும் ஒரு சிலர் விதிமுறைகளை மீறி வருகின்றனர். இருப்பினும் காவல்துறையினர் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். ஹெல்மெட், கார்களில் சீட் பெல்ட் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு – முதல்வர் முக்கிய தகவல்…!!

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து கபரவல் சற்று குறைந்த நிலையில் முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் தொடங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. மேலும் தற்போது அரசு மருத்துவ கல்லூரி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கல்லூரிகள் மூடும் அபாயம் – பெரும் அதிர்ச்சி செய்தி…!!

மாணவர்களுக்கு தொடர் கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, தற்போது முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டது.  எனவே மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு இடையே பெரும் அச்சம் நிலவியுள்ளது. தற்போது […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி மாணவர்களுக்கு…. முக்கிய செய்தி…!!

60 அரசு பள்ளி மாணவர்களுக்கு மறு கலந்தாய்வு நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.  நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன . இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்ததால் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன . தற்போது தமிழகத்தில் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. மேலும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றது. இந்நிலையில் மருத்துவக் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என்ற அறிவிப்பை முன் தேதியிட்டு அமல் […]

Categories
மாநில செய்திகள்

சசிகலா இரவு 9.30க்கு விடுதலை – பரபரப்பு…!!

சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா வரும் 27ம் தேதி விடுதலை செய்யப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா மற்றும் அவருடைய உறவினரின் தண்டனை காலம் முடிவடைய உள்ள நிலையில் மூவரும் எப்போது விடுதலை ஆவார்கள் என்பது மக்களிடையே ஒரு பேசுபொருளாக இருக்கிறது. சசிகலா வரும் ஜனவரி 27ஆம் தேதி இரவு ஒன்பது முப்பதுக்கு விடுதலை செய்யப்பட உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. சசிகலா விடுதலைக்கு முன் மறைந்த முன்னாள் முதல்வர் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி ஆசிரியர்களே!! மிக முக்கிய அறிவிப்பு…!!

முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தற்காலிக தேர்வு பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு வருடந்தோறும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் முதுநிலை வேதியியல் ஆசிரியர் பணியிடங்களுக்கான தற்காலிக தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு எழுதியவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் trb.tn.nic.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வானவர்களுக்கு விரைவில் கலந்தாய்வு நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Categories
மாநில செய்திகள்

BREAKING: ஜெயலலிதா கோவில் இது தான்…!!

மறைந்த ஜெயலலிதா அவர்களுக்கு ஜெயலலிதா பேரவை சார்பில் கோயில் கட்டப்பட்டு வருகிறது. அதிமுக கட்சியின் முன்னாள் முதலமைச்சராக மறைந்த ஜெயலலிதா அவர்கள் இருந்தார். இந்நிலையில் அவர் இறந்ததால் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். மேலும் அதிமுகவின் தற்போதைய கட்சி அம்மாவின் வழியிலே செயல்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் குன்றத்தூர் அருகே அம்மா சாரிட்டபிள் டிரஸ்ட் கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் மாநில அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில் ஜெயலலிதாவிற்கு கோயில் கட்டப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

இனி சமையல் எண்ணெய்…. “சில்லறை விற்பனைக்கு கிடையாது” மதுரை ஐகோர்ட்…!!

சமையல் எண்ணையை சில்லறை விலைக்கு விற்பனை செய்யக்கூடாது என்று மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. உணவு பாதுகாப்பு சட்டத்தை மீறி சமையல் எண்ணெய் தயாரிக்கப்படுவதாக தொடர்ந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரித்துள்ளது. இந்த வழக்கானது நீதிபதி கிருபாகரன் புகழேந்தி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது நீதிபதிகள் சமையல் எண்ணெயின் தரத்தை ஆய்வு செய்ய மொத்தம் எத்தனை ஆய்வுகள் உள்ளன? என்று கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் சமையல் எண்ணெய் ஆய்வில் கடந்த 5 வருடங்களாக […]

Categories
மாநில செய்திகள்

“எடப்பாடி ஒரு ஜெராக்ஸ் முதல்வர்” – செந்தில் பாலாஜி விமர்சனம்…!!

தமிழக முதல்வர் எடப்பாடி ஒரு ஜெராக்ஸ் என்று செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தீவிரப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றன. திமுகவும் தன்னுடைய பங்கிற்கு பிரச்சாரம் செய்து வருகிறது. மேலும் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் தங்களை ஒருவருக்கொருவர் மாற்றி மாற்றி கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் பிரபல நடிகர்களான ரஜினி, கமல் மற்றும் பார்த்திபன் ஆகியோரும் அரசியலில் இறங்கியுள்ளனர். இதனால் வரும் சட்டமன்ற தேர்தல் […]

Categories
மாநில செய்திகள்

மின்சாரவாரியம் தனியார் மயமாக்கப்படாது – அமைச்சர் தங்கமணி…!!

மின்சாரவாரியம் தனியார் மயமாக்கப்படாது என்று அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு மின்சாரவாரியம் எக்காரணத்தைக் கொண்டும் தனியார்மயம் ஆக்கப்படாது என்றும், மின் வாரிய அலுவலகங்களில் 50 சதவீதத்துக்கும் மேல் உள்ள காலிப் பணியிடங்கள் மட்டுமே தனியார் மூலம் நிரப்பப்படுகிறது என்றும், அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார். கேங்க்மன் பணி குறித்த வழக்கு நிலுவையில் உள்ளதால் பத்தாயிரம் கேங்க்மன் பணியிடங்களுக்கு இன்னும் நியமனம் வழங்கப்படவில்லை. வழக்கு தொடர்ந்துள்ளவர்கள், வழக்கை வாபஸ் பெற்றால் உடனே கேங்க்மன் பணி நியமனம் செய்யப்படும் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா நிலவரம் இன்று…. புதிதாக 1,174 பேருக்கு…!!

கொரோனா பரவல் தமிழகத்தில் இன்று புதிதாக 1,174 பேருக்கு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இன்று புதிதாக 1,174 பேருக்கு கொரோனா உறுதியானதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 8,03,516 ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 1,214 பேர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 7,81,745 ஆகவும் உள்ளது. மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த இறப்பு எண்ணிக்கை 11,942 ஆகவும் அதிகரித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

எம்ஜிஆர் பெயரை பயன்படுத்த…. எங்களுக்கு மட்டுமே உரிமை… மல்லுக்கட்டும் முதல்வர்…!!

எம்ஜிஆர் பெயரை பயன்படுத்த அதிமுகவினரை தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை என்று முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி விமர்சித்து வருகின்றனர். மேலும் பிரபல நடிகர்களான ரஜினி மற்றும் கமல் ஆகியோரும் அரசியலில் இறங்கியுள்ளனர். இதையடுத்து நடிகர் பார்த்திபனும் அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். இதனால் வரும் சட்டமன்ற தேர்தல் எதிர்பார்ப்போடும் ,சுவாரசியமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? – முதல்வர் அறிவிப்பு…!!

கொரோனா தொற்று குறையும்போது தான் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் பழனிச்சாமி சற்றுமுன் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. எனவே மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் முதுநிலை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள்  நடந்து வருகின்றன. ஆனால் பள்ளிகள் இன்னும் திறக்கப்படவில்லை. பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் கொரோனா தொற்று குறையும்போது பள்ளிகள் திறப்பது […]

Categories
மாநில செய்திகள்

மோடி அரசின் மிருகத்தனம்…. பிடிவாதத்தை விட்டு விடு – சாடிய ராகுல் காந்தி…!!

மோடி அரசு தன்னுடைய பிடிவாதத்தை விட்டுவிட்டு வேளாண் சட்டங்களை திரும்ப பெறுமாறு ராகுல் காந்தி சாடியுள்ளார். டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் விவசாயிகளின் இந்த போராட்டத்திற்கு மத்திய அரசு எந்த ஒரு முடிவையும் சொல்லவில்லை. மேலும் இந்த போராட்டத்தில் மூன்று விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தற்போது சீக்கிய மதகுரு உயிர் தியாகம் செய்த […]

Categories
மாநில செய்திகள்

“முதல்வரும் BIGG BOSS பார்க்கிறார்” எமோஜி போட்டு…. கலாய்த்த கமல்…!!

EPS அவர்களும் பிக்பாஸ் பார்க்கிறார் என்று நடிகர் கமல் எமோஜி போட்டு கலாய்த்துள்ள புகைப்படம் வெளியாகியுள்ளது. நடிகர் கமல் எம்ஜிஆர் குறித்து கமல் பேசிவருவது அதிமுகவினரிடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. எனவே  “பிக்பாஸ் பார்த்தால் நன்றாக இருக்கும் குடும்பம் உருப்படாமல் போய்விடும்” அப்படி ஒரு நிகழ்ச்சியை நான்கு ஆண்டுகளாக தொகுத்து வழங்கிய அனைத்துக் குடும்பங்களையும் கமல் கெடுத்துள்ளார் என்று பழனிசாமி சாடியுள்ளார். மேலும் கமல் படங்களில் எம்ஜிஆர் படத்தை போல நல்ல கருத்துக்கள் இல்லை என்றும் சினிமா […]

Categories
மாநில செய்திகள்

பிக்பாஸ் பார்க்க வேண்டாம் – முதல்வர் EPS…!!

கமல் மக்களை கெடுக்கிறார் எனவே பிக்பாஸ் பார்க்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். தமிழகத்தில் 2021 சட்டமன்ற தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி விமர்சித்து வருகின்றனர். மேலும் பிரபல நடிகர்களான ரஜினி மற்றும் கமல் ஆகியோரும் அரசியலில் இறங்கியுள்ளனர். இதையடுத்து நடிகர் பார்த்திபனும் அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். இதனால் வரும் சட்டமன்ற தேர்தல் எதிர்பார்ப்போடும் ,சுவாரசியமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

எங்களை பார்த்து எதிர்க்கட்சி மட்டுமல்ல…. “கொரோனாவுக்கும் பயம்” -அமைச்சர்…!!

கொரோனாவுக்கே அதிமுக கட்சியை பார்த்து பயம் என்று சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 2021 தமிழக சட்டமன்ற தேர்தல் நடப்பதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் ஆளும் கட்சியினரும், எதிர் கட்சியினரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். அதிமுக கட்சியினர் திமுக கட்சியினரையும், திமுக கட்சியினர் அதிமுக கட்சியினரையும் குறை கூறி கொண்டு விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் தனி கட்சி ஆரம்பித்து […]

Categories
மாநில செய்திகள்

மத்திய அரசே!! சிலிண்டர் விலை உயர்வை…. திரும்ப பெறு – டிடிவி வலியுறுத்தல்…!!

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை மத்திய அரசு உடனே திரும்ப பெறுமாறு அமமுக பொது செயலாளர் டிடிவி வலியுறுத்தியுள்ளார். பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் வீட்டு உபயோகத்திற்கு 14.2 கிலோ எடையிலும், வர்த்தக பயன்பாடுகளுக்கு 19 கிலோ எடையிலும், மலைப்பாங்கான இடங்களில் உள்ள வீடுகளுக்கு 5 கிலோ எடையிலும் கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ஆண்டிற்கு 12 சிலிண்டர்களை மானிய விலையில் பெற்றுக்கொள்ள முடியும். 12 சிலிண்டருக்கு பிறகு வாங்கும் ஒவ்வொரு சிலிண்டருக்கும் மானியமில்லாமல் தான் […]

Categories
மாநில செய்திகள்

வெவ்வேறு டிகிரி படித்தவரின்…. ஆசிரியர் பணி ரத்து – அதிரடி…!!

வெவேறு டிகிரி முடித்தவரின் ஆசிரியர் பணியை ரத்து செய்ய மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டுவரும் தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி வரையிலான நிறுவனங்களுக்கு ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக இவ்வாரியம் செயல்பட்டு வருகிறது. இந்திய அரசின் மனிதவள மேம்பட்டு அமைச்சகத்தின்  கீழ் இயங்கி வரும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலின் வழிகாட்டுதலின்படி, தமிழக பள்ளிக்கல்வித்துறை  இந்தத் தேர்வுக்கான அரசாணையை வெளியிட்டது. இதன்படி, தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் நியமனத்திற்கு ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை நடத்தும் முகமையாக இயங்கி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

சட்டமன்ற தேர்தல் – டிசம்பர் 21, 22ல் ஆலோசனை…!!

சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து டிசம்பர் 21, 22ல் ஆலோசனை நடத்த இருப்பதாக இந்திய தேர்தல் ஆணைய செயலர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் 2021 சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தல்களை விட வரும் சட்டமன்ற தேர்தல் எதிர்பார்ப்புடனும், சுவாரசியமாகவும் இருக்க போகிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு காரணம் பிரபல சினிமா நடிகர்கள் ரஜினி மற்றும் கமல் கட்சியின் இணைந்துள்ளனர். இதை […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி 9 மற்றும் 10ஆம் தேதி…. TNPSC தேர்வு – அறிவிப்பு…!!

தொழில் மற்றும் வர்த்தகம் உதவி இயக்குனர் பணிக்கான தேர்வு வரும் ஜனவரி 9 மற்றும் 10 தேதிகளில் நடக்கும் என்று TNPSC தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கிராம அலுவலர் நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்கள் தொடர்பாக டிஎன்பிஎஸ்சியிடம் பட்டியல் வழங்கியதாகவும் மிக விரைவில் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். கொரனோ தொற்று காரணமாக டிஎன்பிஎஸ்சி யில் இந்த வருடம் இதுவரை எந்த காலிப்பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. தற்போது பல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதால் அரசு தேர்வுகள் நடத்த […]

Categories
மாநில செய்திகள்

குரூப்1, குரூப்2, குரூப்2 ஏ, குரூப்4 தேர்வு – TNPSC அதிரடி அறிவிப்பு…!!

அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 42 தேர்வுகள் நடத்தப்படும் என்று TNPSC அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கிராம அலுவலர் நிர்வாக அலுவலர் காலிப் பணியிடங்கள் தொடர்பாக டிஎன்பிஎஸ்சியிடம் பட்டியல் வழங்கியதாகவும் மிக விரைவில் தேர்வு நடத்தப்படும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். கொரனோ தொற்று காரணமாக டிஎன்பிஎஸ்சி யில் இந்த வருடம் இதுவரை எந்த காலிப்பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. தற்போது பல தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதால் அரசு தேர்வுகள் நடத்த முடிவு செய்துள்ளது. இந்நிலையில் அரசு துறையில் […]

Categories
மாநில செய்திகள்

சிலிண்டர் விலை உயர்வு…. கமல் கண்டனம்…!!

சிலிண்டர் விலை அதிகரித்துக்கொண்டே இருப்பதற்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.  பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் வீட்டு உபயோகத்திற்கு 14.2 கிலோ எடையிலும், வர்த்தக பயன்பாடுகளுக்கு 19 கிலோ எடையிலும், மலைப்பாங்கான இடங்களில் உள்ள வீடுகளுக்கு 5 கிலோ எடையிலும் கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ஆண்டிற்கு 12 சிலிண்டர்களை மானிய விலையில் பெற்றுக்கொள்ள முடியும். 12 சிலிண்டருக்கு பிறகு வாங்கும் ஒவ்வொரு சிலிண்டருக்கும் மானியமில்லாமல் தான் வாங்க முடியும். சர்வதேச சந்தையில் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களுக்கு கொரோனா – அடுத்த அதிரடி நடவடிக்கை…!!

கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா அச்சம் இருப்பதால் தற்காலிகமாக கல்லூரிகளை மூட கோரிக்கை எழுந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்ததால் கல்லூரிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு தற்போது வகுப்புகள் நடந்து வருகின்றன. இதையடுத்து தற்போது சென்னை ஐஐடி மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள […]

Categories
மாநில செய்திகள்

நம்மை கடந்தொழியும் வரை வகுப்பறைகள் திறக்காதிருப்பதே நலம் – வைரமுத்து டுவிட்…!!

கொரோனா காலம் முடியும் வரை கல்லூரிகளை திறக்க வேண்டாம் என கவிஞர் வைரமுத்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வந்த நிலையில் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டன. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கிய நிலையில் சமீபத்தில் கலோரிகள் திறக்கப்பட்டன. இந்நிலையில் சென்னை ஐஐடியில் கொரோனா தோற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, அண்ணா பல்கலை கழகத்திலும் ஆறு பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் முதுநிலை பயிலும் மாணவர்கள் விடுதியில் சுகாதாரத்துறை […]

Categories
மாநில செய்திகள்

“அடுத்த 48 மணி நேரத்தில்” 5 மாவட்டங்களில்…. மிரட்ட வரும் கனமழை – வானிலை ஆய்வுமையம் தகவல்…!!

அடுத்த 48 மணி நேரத்தில் இந்த 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் கடந்த சில வாரங்களுக்கு முன்பு அடுத்தடுத்து நிவர் மற்றும் புரெவி என்று இரு புயல் தாக்கியது. இதனால் தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு பலத்த மழை கிடைத்துள்ளது. இந்நிலையில் மேலும் ஒரு புயல் தமிழகத்தை தாக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. வங்கக்கடலில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. எனவே இன்றிலிருந்து டிசம்பர் 17, […]

Categories
மாநில செய்திகள்

பழையதை மாற்றி… கலர் வாக்காளர் அட்டை பெற…. மொபைலில் விண்ணப்பிக்கலாம் வாங்க…!!

பழைய வாக்காளர் அட்டையை புதிய வண்ண அட்டையாக மாற்ற செல்போனில் எப்படி விண்ணப்பிக்கலாம் என்று பார்க்கலாம். நம்முடைய பழைய வாக்காளர் அடையாள அட்டை கருப்பு வெள்ளை நிறத்தில் இருக்கும். ஆனால் சமீபகாலமாக வழங்கப்படும் வாக்காளர் அடையாள அட்டை வண்ண அடையாள அட்டையாக உள்ளது. அதை மாற்றி புதிய அடையாள அட்டையாக நீங்களே உங்களுடைய செல்போன் மூலம் விண்ணப்பிக்கலாம். அதில் உங்களுடைய பெயர் முகவரி உள்ளிட்டவற்றை மாற்றி புதிய வண்ண வாக்காளர் அட்டையை பெற முடியும். இதற்கு முதலில் […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் அதிகரிப்பு!! இந்த மாதம் முடிவதற்குள்…. பொதுமக்கள் அதிர்ச்சி…!!

இந்த மாதத்துக்கான வீட்டு மற்றும் வர்த்தக சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மூலம் வீட்டு உபயோகத்திற்கு 14.2 கிலோ எடையிலும், வர்த்தக பயன்பாடுகளுக்கு 19 கிலோ எடையிலும், மலைப்பாங்கான இடங்களில் உள்ள வீடுகளுக்கு 5 கிலோ எடையிலும் கியாஸ் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன. ஆண்டிற்கு 12 சிலிண்டர்களை மானிய விலையில் பெற்றுக்கொள்ள முடியும். 12 சிலிண்டருக்கு பிறகு வாங்கும் ஒவ்வொரு சிலிண்டருக்கும் மானியமில்லாமல் தான் வாங்க முடியும். […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: முதல்வர் பழனிச்சாமி வீட்டின் முன்…. பெரும் பரபரப்பு…!!

முதலமைச்சரின் வீட்டின் முன்பு இரண்டு பெண்கள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டின் முன்பு இரண்டு பெண்கள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் தூத்துக்குடியை சேர்ந்த கிருஷ்ணம்மா(65) பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும் இன்னொரு பெண்ணான மீனாம்பிகை(31) தன்னுடைய கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இவர்கள் இருவரும் தூத்துக்குடியிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு முதல்வரை சந்திக்க அனுமதி மறுத்ததால் […]

Categories
மாநில செய்திகள்

“ஆட்டம் களைகட்ட போகுது” ரஜினியுடன் இணைய தயார் – கமல் அதிரடி…!!

வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினியுடன் கமல் ஒன்றிணைந்து செயல்பட தயாராக இருப்பதாக பதில் அளித்துள்ளார். வரும் 2021 ஆம் வருடம் சட்டமன்ற தேர்தல் தமிழகத்தில் மிக முக்கியமானது மட்டுமல்லாமல் சுவாரசியமாகவும் மாறப்போகிறது. இதுநாள்வரை பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக இடையேதான் கடும் போட்டி நிலவி வந்தது. இந்நிலையில் ரஜினி மற்றும் கமல் என்று இந்த தேர்தல் பலமுனை போட்டியாக சுவாரசியமாக நடக்க போகிறது. கமலஹாசன் தன்னை முதலில் வேட்பாளராக அறிவித்து விட்டார். ஆனால் ரஜினியின் அரசியல் […]

Categories
மாநில செய்திகள்

“மொத்தம் 2391 அரசு பள்ளிகளில்” இந்த வசதி இல்லை…. அதிர்ச்சி தகவல் – பள்ளிக்கல்வித்துறை…!!

கணக்கெடுப்பின் முடிவில் 2391 அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கழிப்பறை மற்றும் குடிநீருக்காக உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத பள்ளிகளை கணக்கெடுக்கும் பணியை கல்வித்துறை அலுவலர்கள் மேற்கொண்டுள்ளனர். இந்த கணக்கெடுப்பின் முடிவில் தமிழ்நாடு முழுவதும் 2391 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கழிப்பறை வசதி இல்லாத இந்த அரசு பள்ளிகளின் பட்டியலை பள்ளிக் […]

Categories
மாநில செய்திகள்

“அடுத்த மூன்று தினங்களுக்கு” நல்ல மழை பெய்யும்…. வானிலை ஆய்வுமையம் தகவல்…!!

அடுத்தடுத்து மூன்று தினங்களுக்கு நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களில் அடுத்தடுத்து நிவர் மற்றும் புரெவி என்ற இரு புயல்கள் தாக்கின. இதனால் தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு நல்ல மழை கிடைத்துள்ளது. இதையடுத்து காலநிலை மாற்றங்களால் இது போன்ற இயற்கை பேரிடர்கள் மேலும் அதிகரிக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த மூன்று தினங்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை […]

Categories
மாநில செய்திகள்

9 மாவட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. பொங்கல் பரிசோடு நெய் வழங்கப்படும்…!!

9 மாவட்டங்களை சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் 100 கிராம் நெய் பாட்டில்கள் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பாக ஒவ்வொரு வருடமும் பொங்கலை முன்னிட்டு பொங்கல் பை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் மதுரை ஆவின் சார்பாக சுமார் 2,52,000 நெய் பாட்டில்கள் தயாரித்து வழங்கப்பட இருக்கின்றன. இந்த 100 கிராம் நெய் பாட்டில்கள் மதுரை, தேனி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி போன்ற 9 மாவட்டங்களைச் […]

Categories

Tech |