கொரோனா வைரஸ் ஒருவருக்கு இருக்கின்றதா என்பதை கண்டறிய இரண்டு விதமான சோதனை முறைகள் உள்ளன. உலகத்தையே ஆளும் மனித இனத்தை இன்று பேரச்சத்தில் ஆழ்த்தி இருக்கிறது இந்த கொரோனா வைரஸ். கொரோனா நம்மைத் தாக்கி இருக்கிறதா என்பதை கண்டறிய இரண்டு விதமாக சோதனை முறைகள் உள்ளன. ஒன்று RT- PCR எனும் Polymerase Chain Reaction Test . மற்றொன்று தற்பொழுது புதிதாக வந்திருக்கும் ஆன்டிபாடி டெஸ்ட் RT-PCR முறை. நம் உடலில் தற்போது கொரோனா வைரஸ் […]
Tag: மாநில செய்திகள்
தலைமை செயலாளர் காவல் துறையினரை கண்டிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மாநில மனித உரிமை ஆணைய பொறுப்புத் தலைவர் ஜெயசந்திரன் மற்றும் உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன் தாஸ் கூட்டாக, தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதம் ஒன்றில் கொரோனா வைரஸ் பாதிப்பைக் கண்டறியவும், பரவுவதை தடுப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. கொரோனோவை தடுப்பதற்கு சுகாதாரமான முறையில் இருப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதுமான அளவிற்கு தண்ணீர் விநியோகம் இல்லை என்றால் சுகாதாரம் என்ற பேச்சுக்கே […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள சூழ்நிலையில் தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கையாக அரசு கபசுர நீரை அருந்த அறிவுரை வழங்கியுள்ளது. கபசுரக் குடிநீர் சுக்கு, மிளகு, திப்பிலி உள்ளிட்ட 15 பொருட்கள் சேர்த்து இயற்கை முறையில் தயாரிக்கப் படுவதால், பக்கவிளைவுகள் இல்லாததால் இதனை ஏராளமானோர் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் சென்னை பாரிமுனை ராசப்பா தெருவில் செயல்பட்டு வரும் நாட்டு மருந்து கடைகளில் தயாரிக்கப்படும் கபசுர குடிநீர் தமிழகம், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் […]
கொரோனாக்கு எதிரொலியாக பிரதமரின் அழைப்பை ஏற்று நாடு முழுவதும் விளக்கு ஏற்றி மக்கள் ஓற்றுமையை வெளிப்படுத்தினர். பிரதமரின் அழைப்பை ஏற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி நின்றார். சென்னையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் அகல் விளக்கு ஏற்றினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது இல்லத்தில் விளக்கு ஏற்றினார். தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார் ஆகியோரும் பிரதமரின் அழைப்பை ஏற்று விளக்கு ஏற்றினர். கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது இல்லத்தில் […]
ஊரடங்கு உத்தரவால் மகாராஷ்டிராவில் வேலை இழந்து தமிழக இளைஞர்கள் அம்மாநிலத்தில் இருந்து ஆயிரம் கிலோமீட்டர்கள் நடந்து தமிழகத்தை அடைந்தனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் அவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தை சேர்ந்த ஏழை இளைஞர்கள் மகராஷ்டிரா மாநிலத்தில் சோலாப்பூரில் பணியாற்றி வந்தனர். ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மகராஷ்டிராவில் சிக்கிக்கொண்ட அவர்களால் தமிழகத்திற்கு வர இயலவில்லை. அவர்கள் பணியாற்றிய நிறுவனம் சார்பில் அடிப்படை வசதிகள் […]
கொரோனா பரவும் அபாய பகுதியாக தமிழ்நாடு முழுவதும் அறிவிப்பு, நடவடிக்கை எடுக்க வெளியிடப்பட்டுள்ள அறிக்கை..!! நோய் தடுப்பு மருந்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் 1939-ஆம் ஆண்டு தமிழ்நாடு பொது சுகாதாரத் சட்டத்தில் 62 ஆவது பிரிவின் கீழ் பொது சுகாதார துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்று நோயாக கொரோனா அறிவிக்கப்பட்டதாகவும். 76 ஆவது பிரிவின் கீழ் தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் எனவும் கூறப்பட்டுள்ளது. 1897ஆம் ஆண்டு கொள்ளை […]
கொரோனாவின் தாக்கம் அறியாத மக்கள், வெளியே செல்கின்றனர் என தமிழக முதல்வர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் அடித்தட்டு மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். சரியான உணவு கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். தமிழகத்தில் உள்ள அம்மா உணவகம் இந்த சமயத்தில் ஏழை மக்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது. குறைந்த விலையில் உணவு வழங்குவதால், அடித்தட்டு மக்கள் மற்றும் ஏராளமானோர் அம்மா உணவகத்தில் சாப்பிடுகின்றனர். இந்நிலையில், சென்னையில் கலங்கரை விளக்கம் பகுதியில் […]
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் வெளி மாநிலங்களில் பரிதவிக்கும் தமிழர்களை உடனடியாக மீட்பதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கொரோனா தொற்று பரவல் காரணத்தினால் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவிலுள்ள பிற வெளி மாநிலங்களில் வேலைக்கு சென்ற, மற்றும் சரக்கு ஏற்றி சென்ற […]
108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் கடவுள் என்று நடிகருமான, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார்..! கொரோனா வைரஸ் நோய் தொற்றி கொள்ளும், வீட்டிற்கு வந்து விடு என்று பெற்றோர்கள் கதற, சேவையே முக்கியம் என்று 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பாண்டி துறையின் மனிதநேயம் குறித்து செய்தி மூலம் அறிந்த மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பாண்டி துறையை நம்பிக்கை நாயகன் என்று பாராட்டியுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள […]
சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரிந்துரை தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இன்று காலை சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டிருந்தார். இந்த சூழ்நிலையில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க வேண்டாம் என தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பரிந்துரைத்தது. தமிழகத்தில் இன்று மாலை 6 மணி முதல் 31ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு […]
திட்டமிட்டபடி இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டிற்கான பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2ம் தேதி தொடங்கியது. இதுவரை மொழிப்பாடம், ஆங்கிலம், கணிதம், இயற்பியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இன்று உயிரியல் தேர்வு நடைபெற உள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பொதுத்தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திட்டமிட்டபடி இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் […]
கொரோனா மற்றும் பறவை காய்ச்சல் அச்சம் காரணமாக தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் கறிக்கோழியின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் கறிக்கோழியின் விலை கடுமையாக சரிந்து உள்ளதால் அதன் உற்பத்தியை குறைக்க பண்ணை உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர். பல்லடத்தில் கொள்முதல் விலை ரூபாய் 28 க்கு விற்கப்பட்டது. சில்லரை விற்பனையில் 60 ரூபாய்க்கு விற்கப்படும் கோழி இறைச்சியை வாங்க பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கோழிப்பண்ணையாளர்கள் வரும் […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பல்கலைக்கழகங்கள் சிலவற்றியிருக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. திருவாரூர் மத்திய பல்கலை கழகத்தில் மார்ச் 31-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு, தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னை எஸ்ஆர்எம் வேலூர் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருச்சி NID பல்கலைக்கழக ஆசிரியர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் விடுமுறை முடிந்து திரும்பி கொண்டிருக்கும் நிலையில், விடுமுறை அளிப்பது குறித்து அரசு […]
வீடியோ கால் மூலமாக தந்தையின் இறுதிச் சடங்கை பார்த்த மகன், கோரோனோ அறிகுறியால் ஏற்பட்ட சோகம் நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!! கொரோனா அறிகுறி இருப்பதாக கருதி மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்ட மகன் அங்கிருந்தபடியே தனது தந்தையின் இறுதி ஊர்வலத்தை பார்க்க நேர்ந்த சோகம், கேரளாவில் நடந்திருக்கிறது. கத்தார் நாட்டில் பணிபுரியும் கேரளாவைச் சேர்ந்த லினோ அபீக் என்ற 30 வயது இளைஞன் கடந்த 8ம் தேதி அவசரமாக சொந்த ஊர் திரும்பினார். கட்டிலிலிருந்து கீழே விழுந்து சிகிச்சை பெற்று […]
நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலுக்காக, அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுளர்னர. அதில் தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தம்பிதுரை, கே.பி.முனுசாமி ஆகியோர் ஆவர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் பழனிசாமி ஆகியோர் சேர்ந்து இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர். இதனை தொடர்ந்துநடைபெறவிருக்கும் நாடாளுமன்ற மாநிலங்களவை தேர்தலுக்கு, அதிமுக சார்பில் போட்டிடுபவர்களை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அதிமுக சார்பில், கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி ஆகியோர் நிறுத்தப்படுவார்கள் என்றும், மேலும் ஒரு இடத்திற்கு, […]
முதல்வர் பழனிச்சாமி, நாகை மாவட்டத்தில் நடைபெறும் மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவிற்கு பங்கேற்க செல்லும் வழியில் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அவரை உற்சாகமாக வரவேற்றனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வழியாக சென்ற முதல்வர் பழனிசாமியை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். அந்த வழி சாலையின் இரண்டு பக்கங்களிலும் திரண்டிருந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் முதல்வருக்கு உற்சாகமாக மகிழ்ச்சியோடு வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில் உணவுத்துறை அமைச்சர் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இவ்வரவேற்பு விழாவில் “விவசாயிகளின் […]
அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டுமென்று தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது.மீறினால் துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பாக அனைத்து துறை முதன்மைச் செயலாளர்களுக்கும் அரசு பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர் சொர்ணா சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். இந்த உத்தரவில் உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி இனி பணிநேரத்தில் அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக அடையாள அட்டை அணிய வேண்டும் என்று கூறியுள்ளார். பெரும்பாலான அரசு […]
ஆசிரியர் தகுதி தேர்வில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள ராதாகிருஷ்ணன் விளையாட்டு மைதானத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகளை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் ஆசிரியர் தகுதி தேர்வு முறைகேடு புகார் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். சேலம் மாவட்டத்தில் கூடுதல் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டதாக சொல்வதையும் அமைச்சர் திட்டவட்டமாக மறுத்தார். தமிழகத்தில் 10 மற்றும் 11,12ஆம் வகுப்பு பொது […]
தமிழக கிராமங்களில் மூன்றில் ஒருவருக்கு நீரிழிவு நோயின் தாக்கம் இருப்பதாக ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. ஸ்காட்லாந் ட்ராண்டி பல்கலைக்கழகமும், சென்னை நீரிழிவு ஆராய்ச்சி மையமும் இணைந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் 25 கிராமங்களைச் சேர்ந்த 15 ஆயிரம் பேரிடம் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. அதன்படி கடந்த 14 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை 4.9 %லிருந்து 3.5 % அதிகரித்துள்ளது. கிராமங்களில் மூன்றில் ஒருவருக்கு சர்க்கரை நோயின் தாக்கம் இருப்பதாக ஆய்வு கூறுகிறது. […]
நடிகர் விஜய் நடித்திருந்த பிகில் திரைப்படத்தின் வசூல் தொடர்பாக சோதனை நடப்பட்டு, கைப்பற்றிய ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கபட்டுள்ளது.. நடிகர் விஜயின் வீடு உள்ளிட்ட இடங்களில் இருந்து வருமான வரித்துறையினர் கைப்பற்றிய ஆவணங்கள் அமலாக்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் திகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் அதற்கு கடன் வழங்கிய பைனான்சியர் அன்புச்செழியன் நடிகர் விஜய் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது. அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்து சட்டவிரோத பண பரிவர்த்தனை ஏதேனும் […]