நடிகை நயன்தாரா அவரது அம்மா ஓமணக்குரியன் பிறந்த நாளை சென்னையில் உள்ள இல்லத்தில் கொண்டாடினார். அவருக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன், வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் மகாபலிபுரத்தில் மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டு வந்தது. திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் சென்று தற்போது தனது பட வேலைகளில் மிகவும் பிசியாக உள்ளனர். […]
Tag: மாமியார்
மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத் பகுதியில் டிவி பார்ப்பதற்காக மாமியாரின் விரல்களை மருமகள் கடித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று மாமியார் விருஷாலி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது மருமகள் விஜயா சத்தமாக டிவி பார்த்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த மாமியார் டிவியை அணைக்க ரிமோட்டை பிடுங்கி உள்ளார். அப்போது நடந்த சண்டையில் விஜயா மாமியாரின் கையை கடித்துவிட்டார். இதனைத் தொடர்ந்து கொடுக்கப்பட்ட புகாரில் மருமகள் மீது காவலர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.ஆனால் இதுதொடர்பாக அவர் இன்னும் கைது செய்யப்படவில்லை […]
தானேவில் டிவியை ஆஃப் செய்ததற்காக மாமியாரின் மூன்று விரல்களை மருமகள் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம், தானேவில் 60 வயது மதிக்கத்தக்க மாமியார் ஒருவர், இரவு நேரத்தில் வழக்கம்போல், தெய்வ வழிபாடு நடத்திகொண்டு கீர்த்தனை பாடிகொண்டிருந்தார். அப்போது, அவரது மருமகள் தொலைக்காட்சியில் சத்தம் அதிகம் வைத்து சீரியல் பார்த்துகொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மாமியார் தனது மருமகளிடம் ஒலியைக் குறைக்கச் சொல்லியும், ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனால், கோபமடைந்த மாமியார் டிவியை ஆஃப் செய்தார். […]
ஆஸ்திரேலியாவில் இலங்கையைச் சேர்ந்த ஒரு நபர் தன் பிள்ளைகளை கொன்று விட்டு தற்கொலை செய்த சம்பவம் குறித்து பல அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள Huntingdale என்னும் பகுதியில் வசித்த இலங்கையைச் சேர்ந்த இந்திகா குணத்திலகா என்ற 40 வயது நபர் தன் மகன் மற்றும் மகளை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்தார். எனவே, இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், குணத்திலகா பற்றி பல தகவல்கள் தெரியவந்திருக்கிறது. இவர் ஆஸ்திரேலியாவிற்கு […]
மனைவியுடன் ஏற்பட்டதகராறில் மாமியாரை குத்தி கொன்ற மருமகன் மற்றும் அவரது நண்பரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை வியாசர்பாடி அன்னை நகர் 4வது தெருவில் லதா என்பவர் வசித்து வந்தார். இவருக்கு சுதா என்ற மகளும், இரு மகன்களும் உள்ளனர். இதில் சுதாவுக்கும், மாதவரம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவருக்கும் திருமணம் முடிந்து 2 குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களில் பெயிண்டராக வேலை பார்த்து வரும் பாலாஜிக்கும், சுதாவிற்கும் இடையே கடந்த சில தினங்களாகவே தகராறு இருந்து வந்ததாகக் […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் வீட்டோட மாப்பிள்ளையாக இருந்த இளைஞர் மனைவியையும், மாமியாரையும் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் என்பவரின் மனைவி சுப்ரியா. சுப்ரியாவின் தந்தை சமீபத்தில் இறந்து விடவே, அவர் தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் தாயார் வீட்டில் வந்து வசித்து வருகிறார். இதில் ஜெகதீஷ்க்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ஒரு நபருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் மனைவியும் மாமியாரும் தனக்கு சாதகமாக […]
இங்கிலாந்து இளவரசியின் கணவர் அரைகுறை ஆடை அணிந்த பெண்ணுடன் இருப்பது தொடர்பான புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையான நிலையில் தற்போது அவருடைய மாமியார் இது குறித்த முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். இங்கிலாந்து இளவரசி யூஜீனியின் கணவரான ஜாக் ப்ரூக்ஸ் பேங்க் என்பவர் தீவு ஒன்றில் அரைகுறை ஆடை அணிந்த பெண்ணுடன் இருப்பது தொடர்பான புகைப்படம் வெளியாகி அனைவரது மத்தியிலும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்நிலையில் ஜாக் ப்ரூக்ஸின் மாமியார் இந்த புகைப்படம் தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை […]
அமெரிக்காவை சேர்ந்த ஒரு மருமகள் தனது மாமியாருக்கு பாய்பிரெண்ட் தேவை என்று விளம்பரம் கொடுத்து இருந்த சம்பவம் பெரும் வைரலாகி வருகிறது. அமெரிக்காவை சேர்ந்த மருமகள் ஒருவர் 40 – 60 வயது இருக்கும் தனது மாமியாருக்கு பாய் பிரண்டாக இருக்க வேண்டுமென்று அமெரிக்காவின் பிரபல விளம்பர வலைத்தளமான கிரெய்க்ஸ்லிஸ்டில் விளம்பரம் ஒன்றை கொடுத்துள்ளார். மேலும் அதில் பாய் பிரண்டாக வருபவர் இரண்டு நாட்களுக்கு மட்டுமே என்று ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. […]
கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்ட மாமியார் ஒருவர் மருமகளை கட்டிப் பிடித்து தொற்றை பரப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொருநாளும் கொரோனா தொற்று காரணமாக பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் பலரும் வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்கின்றனர். இவர்கள் மனதளவில் பெரும் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். இப்படியிருக்கும் பொழுது தெலுங்கானா மாநிலம், ராஜஸ்தான், சிர்சில்லா என்ற பகுதியை சேர்ந்த 20 வயது பெண் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சகோதரி வீட்டில் தனிமை படுத்தி இருந்தார். இதையடுத்து அவருக்கு சிகிச்சை […]
குழந்தையின்மையை காரணம் காட்டி மருமகளை மாமியார் தொடர்ந்து சித்திரவதை செய்து வந்த காரணத்தினால், மருமகள் அவரை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பர்சா பஜார் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் லலிதா தேவி. 33 வயதாகும் இவருக்கு நீண்ட நாட்களாக குழந்தை இல்லை. இதனால் லலிதா தேவியை அவரது மாமியார் தொடர்ந்து சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று இருவருக்கும் இடையே குழந்தை இல்லாததை காரணம் காட்டி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் கோபமடைந்த […]
சென்னையில் மருமகன் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மாமியார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு போலீசாரிடம் சிக்கினார். சென்னை திருவல்லிக்கேணி அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் என்பவர். இவர் பெயிண்டர் ஆக பணிபுரிந்து வந்தார். சென்னை மற்றும் மதுரையில் இவர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், ஆவடி அடுத்த காட்டூர் அந்தோணி நகரில் உள்ள காலி மைதானத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் 10ஆம் தேதி பிரகாஷை மர்ம நபர்கள் சிலர் வெட்டிக் கொலை செய்துள்ளனர். இச்சம்பவம் […]
திருமணம் முடிந்தவுடன் மாமியார்கள் மருமகனுக்கு விதவிதமாக சமைத்து விருந்து படைப்பது வழக்கம். ஏனெனில் தங்கள் வீட்டில் மகள் இப்படிப்பட்ட உணவுகளை சாப்பிட்டு தான் வந்துள்ளார்கள் என்பதை மருமகனுக்கு உணர்த்தவே அவ்வாறு செய்வார்கள். இதை புரிந்துகொண்டு புகுந்த வீட்டில் தனது மகளுக்கு இதே போன்ற உணவு அளிப்பார்கள் என்பது நம்பிக்கை. அந்த வகையில் தற்போது பலரும் நூற்றுக்கணக்கில் உணவுகளை சமைத்து மருமகனுக்கு வழங்கி வருகின்றனர். ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் மாமியார் ஒருவர் தனது மருமகனுக்கு 125 வகை […]
உயிரிழந்த மாமியாருக்கு கூட்டுக்குடும்பத்தில் வாழும் 11 மருமகள்கள் ஒன்றுசேர்ந்து கோயில் கட்டி வழிபாடு நடத்தியுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிலாஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் சிவபிரசாத் தம்போலி – கீதா தேவி. இத்தம்பதியரின் வீட்டில் மகன்கள், மருமகள்கள் , பேரக்குழந்தைகள் என 39 குடும்ப உறுப்பினர்கள் வசித்து வருகின்றனர். அளவில்லா அன்பை பரிமாறிக்கொள்ளும் இந்த குடும்பத்தினருக்கு முன்னுதாரணமாக வாழ்ந்தவர் கீதா தேவி. இக்குடும்ப உறுப்பினர்களின் ஒற்றுமைக்கு காரணம் கீதா தேவி தான். தனது மனைவி குறித்து சிவபிரசாத் […]
மாமியார் மற்றும் கணவர் செய்த கொடுமையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருபுவனை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருபுவனை அருகே பி.எஸ்.பாளையம் காலனியை சேர்ந்தவர் மதிராஜா (30) என்பவர். இவருக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அமலா என்னும் பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. மதி ராஜாவுக்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது. அதனை மறைத்து இரண்டாவதாக தன்னை திருமணம் செய்து கொண்டது அமலாவுக்கு தெரியவந்தது. இதுபற்றி அமலா தன் கணவரிடம் கேட்டபோதுஅவர் அமலாவை அடித்து துன்புறுத்தியுள்ளார். […]
நாகர்கோவிலில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட சண்டையில் போலீஸ்கார கணவர் மாமியார் வீட்டில் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் ஆட்லின் ரிபா (33) என்பவர். இவருக்கும் குலச்சல் பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடந்து தற்போது இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஆட்லின்ரிபாவின் கணவர் நெல்லை மாவட்டத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு ஆட்லின் ரிபா தன் குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு […]
வீட்டு வேலை செய்யச் சொன்னதால் மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாட்டூர் கிராமத்தை சேர்ந்த தம்பதியினர் வெங்கடேசன்-தீபா.வெங்கடேசன் கூலித்தொழில் செய்து வருகிறார் .நேற்று முன்தினம் தீபாவை வெங்கடேசனின் தாயார் உண்ணாமலை வீட்டு வேலை செய்ய அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த தீபா தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீபாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு […]
பாகிஸ்தானில் புதிதாக திருமணம் நடந்து முடிந்த மாப்பிள்ளைக்கு மாமியார் ஏகே 47 ரக துப்பாக்கியை வரதட்சணையாக கொடுத்துள்ளார். பாக்கிஸ்தானில் புதிதாக திருமணம் நடந்து முடிந்த புது தம்பதியர்கள் மேடையில் அமர்ந்து இருந்தனர். அப்போது அங்கு வந்த பெண்ணின் அம்மா மாப்பிள்ளைக்கு ஒரு அன்பளிப்பை வழங்கினார். அது ஏகே 47 ரக துப்பாக்கி ஆகும். அதனை அவர் கொடுத்த போது அருகில் இருந்தவர்கள் அனைவரும் ஆனந்த கூச்சலிட்டு கொண்டாடுகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி […]
சொத்துத் தகராறினால் மருமகனை மாமியார் கூலிப்படையை ஏவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த வழக்கறிஞரான கபில் பவார் என்பவருக்கும் அவரது மாமியார் சிம்லா பவார்க்கும் சொத்து தகராறு இருந்து வந்தது. இதனால் அடிக்கடி மாமியார் மருமகன் சண்டையிட்டு வந்தனர். இந்நிலையில் தனது மருமகனை சொத்துக்காக மாமியார் கொலை செய்ய முடிவெடுத்தார். இதனால் ஹர்ஷ் என்பவரிடம் 10 லட்சம் ரூபாயை கொடுத்து தனது மருமகனை கொலை செய்ய கூலிப்படையை ஏவினார். 10 லட்ச […]
மாமியாருக்கு கொரோனா உறுதியானதால் பயத்தில் மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரத்தில் பெண்ணொருவருக்கு கொரோனாதொற்றுக்கான அறிகுறி இருந்ததால் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் அவரது மருமகள் தனது மாமியாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தனக்கும் தனது கணவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருக்கலாம் என்று பயந்து உள்ளார். இதனால் இவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். தனக்கும் கொரோனா இருக்கும் […]
மாமியாரை இழுத்துப்போட்டு மருமகள் கடுமையாகத் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஹைதராபாத்தில் உள்ள மல்லேபள்ளி பகுதியை சேர்ந்தவர் தனிஷிகா சுல்தானா. இவருக்கும் அவரது மருமகள் உஜ்மாவுக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தனது தாயுடன் சேர்ந்து சுல்தானாவை உஜ்மா கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. இது குறித்து காவல் நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரித்ததில் சுல்தானாவின் மகன் சவுதி அரேபியாவில் பத்து […]
தஞ்சாவூரில் கர்ப்பிணியின் வயிற்றில் மாமியார் தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் பொட்வாச்சாவடி பகுதியில் கர்ப்பிணியின் வயிற்றில் மாமியார் புஷ்பவல்லி தீ வைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பலத்த தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. வயிற்றில் தீ வைத்ததால் பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது குழந்தையும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே மாமியார் புஷ்பவல்லியை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். […]