உத்திரபிரதேசம் மாநிலத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேசம் கான்பூரில் அனுஜ் பாண்டே என்ற 16 வயது சிறுவன் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென கீழே விழுந்த சிறுவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் பிரேத பரிசோதனை செய்ய உறவினர்கள் அனுமதிக்கவில்லை. அதன் பிறகு சிறுவனின் இறுதி சடங்குகள் […]
Tag: மாரடைப்பால் மரணம்
கர்நாடக மாநிலத்தில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் ஹுப்ளி கலகதகி நபரை சேர்ந்த முக்தம் மஹ்மதாஃப்ரி என்ற சிறுவன் அங்குள்ள மான்யாரா அரசு தொடக்கப்பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் சிறுவன் வழக்கம் போல காலையில் பள்ளிக்குச் சென்றுள்ள நிலையில் தனது வகுப்பறையில் உள்ளே நுழைந்தவுடன் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அங்கேயே சிறுவன் சுருண்டு விழுந்தான். இதனை கண்டு பதறிப் போன […]
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் சித்தார்த். இவர் kkusum, kasauti zingadi key போன்ற சீரியல்களில் நடித்து மிகவும் பிரபலமானவர். இந்நிலையில் நடிகர் சித்தார்த் ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்து விட்டார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தவர்கள் சித்தார்த்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்குசித்தார்த்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். உடற்பயிற்சி செய்யும் போது அதிக அளவில் மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக சித்தார்த் […]
ஒடியா சினிமா மற்றும் சின்னத்திரை நடிகையாக வலம் வந்தவர் திலோத்தமா குந்தியா. கடந்த 5 ஆம் தேதி இவர் உடல்நலக்குறைவால் புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீர் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 49. அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம் வாராங்கல் மாவட்டத்தில் உள்ள லிங்யா தண்டா கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுவனுக்கு கடந்த 4ஆம் தேதி நடந்த விபத்து ஒன்றில், வலது கை உடைந்துள்ளது. சிறுவன் சிகிச்சைக்காக வாராங்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். நேற்று சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். சிகிச்சைக்கு முன்னதாக மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. அடுத்த சில வினாடிகளில் சிறுவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. செயற்கை சுவாசம் கொடுத்து காப்பாற்ற மருத்துவர்கள் முயன்றபோதும், சிறுவன் […]
கர்நாடக மாநில உணவுத் துறை அமைச்சர் உமேஷ் கட்டி (61) மாரடைப்பால் மரணமடைந்தார். பெங்களூருவில் உள்ள டாலர்ஸ் காலனியில் குடும்பத்துடன் வசித்து வந்த உமேஷ் கட்டிக்கு நேற்று இரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதில், வீட்டில் உள்ள கழிவறையில் உமேஷ் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்ட குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். உமேஷை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
பாஜக எம்பி மாரடைப்பினால் திடீரென காலமானார். உத்திரபிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி அரவிந்த் கிரி. இவர் கோலா கோக்ரநாத் சட்டப்பேரவை தொகுதியில் 5 முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். இவர் மேல் சிகிச்சைக்காக லக்னோவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அரவிந்த் கிரி திடீரென மாரடைப்பின் காரணமாக உயிரிழந்தார். இவருடைய மரணம் உ.பியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் அரவிந்த் கிரியின் […]
பாடகர் பம்பா பாக்கியாவின் உடலுக்கு பிரபல இசை அமைப்பாளர் அஞ்சலி செலுத்தியுள்ளார். இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் இசையில் ராவணன் படத்தில் இடம்பெற்ற கிடா கிடா என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் பாடகராக அறிமுகமானவர் பம்பா பாக்யா (49). அதன்பிறகு சர்கார் படத்தில் இடம்பெற்ற சிம்டாங்காரன், எந்திரன் 2.0 படத்தில் இடம்பெற்ற புள்ளினங்காள் பாடல், பிகில் படத்தில் இடம்பெற்ற காலமே காலமே பாடல், பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெற்ற பொன்னி நதி பாடல் உள்ளிட்ட பல்வேறு பாடல்களை […]
கர்நாடக மாநிலத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கிய நிலையில் தேர்வு எழுதி கொண்டிருந்தபோதே திடீரென மாணவி ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மைசூரில் உள்ள டி-நரசிபுரா நகரத்தில் உள்ள அக்கூர் கிராமத்தை சேர்ந்த அனுஸ்ரீ என்ற மாணவி அரசுப் பள்ளி ஒன்றில் தேர்வு எழுதிக் கொண்டிருந்தார். கன்னட மொழி பாடத் தேர்வு எழுதிக் கொண்டிருந்த அந்த மாணவி விடைகளை எழுதிக் கொண்டிருந்த போதே திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து தேர்வு அறையில் இருந்த ஆசிரியர், […]
இந்திய கால்பந்து அணி முன்னாள் வீரர் பிரணாப் கங்குலி (75) மாரடைப்பால் காலமானார். கோலாலம்பூரில் நடந்த மெர்டேக்கா கோப்பையில் இந்திய கால்பந்து அணியில் இடம்பெற்றிருந்தார். 1969இல் ஐஎப்ஏ கோப்பை கால்பந்து போட்டியில் மோகன் பகான் அணிக்காக விளையாடிய இவர் 2 கோல் அடித்து அணிக்கு கோப்பை வாங்கிக் கொடுத்தவர். பல அகாடமிகளில் பயிற்சியாளராக இருந்துள்ளார். மோகன் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றவர்.
கனடாவில் பணியாற்றி வரும் இந்திய இளைஞர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த ரேணு சூரிய பிரசாத் முரிகிபிடி என்ற 29 வயது இளைஞர் கனடாவில் பணியாற்றி வந்துள்ளார். இவர் முதுகலை பொறியியல் பட்டதாரி ஆவார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி ரேணுவின் பெற்றோர் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளனர். அவர் தொலைபேசி அழைப்பை ஏற்காததால் அவரது நண்பர்களை தொடர்பு கொண்டுள்ளனர். இதனால் அவரின் நண்பர்கள் ரேணுவின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது […]
மயிலாடுதுறையில் சாகுபடி செய்யப்பட்ட பயிர் மழையின் காரணமாக நாசமான வேதனையில் விவசாயி மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தை சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொடைகாரமூலை கிராமத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வந்தார். இவர் விவசாயி. கிருஷ்ணமூர்த்தி கடன்வாங்கி 4 ஏக்கர் சம்பா பயிர் சாகுபடி செய்துள்ளார். மழையின் காரணமாக சம்பா நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி நாசமாகிவிட்டது. இதனால் கிருஷ்ணமூர்த்தி மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 8000 வீதம் அரசு […]