திருப்பதி தேவஸ்தானத்தின் நிர்வாக அலுவலர் தர்மா ரெட்டியின் மகன் சந்திரமௌலி (26) ரெட்டிக்கு நேற்று டிச..18-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “சந்திரமௌலி ரெட்டி முதலில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பிறகு கேத்லாப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். தற்போது அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. எனினும் அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து வருவதால் கவலைக் கிடமாக இருக்கிறார். ஆகவே […]
Tag: மாரடைப்பு
பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான அவதார் படம் உலக அளவில் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து அவதார் 2 திரைப்படத்தை ஜேம்ஸ் கேமரூன் இயக்கியுள்ளார். இந்த படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமி ரெட்டி ஸ்ரீனு என்ற நபர் பெட்டபுரம் பகுதியில் உள்ள ஒரு தியேட்டரில் அவதார் […]
இப்போதெல்லாம் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு ஏராளமான மரணங்கள் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. தினம்தோறும் செய்திகளிலும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக வட மாநிலங்களில் தான் இது போன்ற மரணங்கள் நிகழ்ந்து வருகிறது அந்த வகையில் உ.பி, கான்பூர் மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 16 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழந்துள்ளான். அனுஜ் என்ற சிறுவன் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடியபோது ரன்கள் எடுக்க ஓடியுள்ளான். அப்போது ஆடுகளத்தின் நடுவில் சுருண்டு விழ, உடனே நண்பர்கள் அவனை மருத்துவமனைக்கு […]
பெங்களூருவில் சாலையோரம் சடலம் கிடந்த விவகாரத்தில் போலீசார் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளனர். பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள புத்தேனஹள்ளியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம். இவர் 35 வயது வீட்டுப்பணிப்பெண் ஒருவருடன் நீண்ட நாட்களாக உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார். இதனிடையே கடந்த நவம்பர் 16ஆம் தேதி அந்த முதியவர் அந்த பெண்ணின் வீட்டிற்கு வந்துள்ளார். அவருடன் உடலுறவில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததால் அந்தப் பெண் இறந்தவரை பையில் போட்டு சாலையில் வீசியுள்ளார். வேலைக்காரப் பெண்ணை போலீசார் கைது […]
கர்நாடகாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மயங்கி கீழே விழுந்து 23 வயதான இளம் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் கோலலகிரியில் உள்ள ஹவாஞ்சே என்ற பகுதியில் ஜோஸ்னா கோத்தா என்ற இளம்பெண் பெண் தனது உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். 23 வயதான ஜோஸ்னா அந்த நிகழ்ச்சியில் நடனமாடி விட்டு உறவினரிடம் பேசிக்கொண்டு நடந்து வந்துகொண்டிருந்தபோது, திடீரென அவர் மயங்கி விழுகிறார். அதாவது இவர் புதன்கிழமை மாலை […]
பழம்பெரும் நடிகை தபாசும் காலமானார். இவருக்கு வயது 78. நேற்று மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று உயிரிழந்தார். இரண்டு நிமிடத்தில் அவருக்கு இரண்டு முறை மாரடைப்பு வந்ததாக கூறப்படுகிறது. குழந்தை நட்சத்திரமாக 1947ம் ஆண்டு அறிமுகமான இவர், தூர்தர்ஷனில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். 1990கள் அவரை 30க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் பயணி மாரடைப்பால் உயிரிழந்தார். மராட்டிய மாநிலத்திலுள்ள புனேவை சேர்ந்த டைட்டல் மேத்தா என்பவர் மங்களூரிலிருந்து சென்னை வழியாக புனேச் செல்லும் விமானத்தில் சென்னைக்கு வந்தார். சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு நிலையத்தில் இருந்து அதிகாலை செல்லும் புனே விமானத்திற்காக காத்திருந்தார். எதிர்பாரா விதமாக அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து உடனடியாக விமான நிலைய மருத்துவக் குழுவினர் அவரை பரிசோதனை செய்தார்கள். ஆனால் அவர் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்ததாக டாக்டர்கள் கூறினார்கள். இது […]
தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவரின் தந்தையான நடிகர் கிருஷ்ணா திரை வாழ்க்கையில் 300 க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக 2016 ஆம் ஆண்டு ஸ்ரீ ஸ்ரீ படம் வெளியானது. இதனய டுத்து பழம்பெரும் நடிகருமான இவரின் தந்தையுமான கிருஷ்ணாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு […]
ரஜினி, விஜய், சூர்யா, விக்ரம், செல்வராகவன் போன்ற முன்னணி திரை நட்சத்திரங்களின் படங்களில் பணியாற்றிய கலை இயக்குனர் சந்தானம் மாரடைப்பால் காலமானார். இவர் சர்க்கார், தர்பார், டிமான்டி காலனி ஆகிய படங்களில் கலை இயக்குனராக இருந்திருக்கிறார். மகான், ஜகமே தந்திரம் உள்ளிட்ட படங்களுக்கு தயாரிப்பு நிர்வாகியாகவும் அவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று (23/10/2022) அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் உயிரிழந்துள்ளார். சமகால மற்றும் மன்னர்கால வாழ்வியலை ஆயிரத்தின் ஒருவன் திரைப்படத்தில் தன் கலை இயக்கத்தின் […]
உத்தரபிரதேசத்தின் காசியாபாத் நகரில் ஷாலிமார் கார்டன் பகுதியில் உடற் பயிற்சிகூடம் (ஜிம்) ஒன்று இருக்கிறது. இதன் உரிமையாளராக அடில் (33) என்பவர் இருந்தார். இவர் வாடிக்கையாளர்களுக்கு உடற்பயிற்சிகளை கற்றுதரும் பயிற்றுனராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் சென்ற சில நாட்களாக அவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் ஜிம்முக்கு தொடர்ந்து சென்றுவந்துள்ளார். அத்துடன் அவரும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொள்வது வழக்கம் ஆகும். அண்மையில் ரியல் எஸ்டேட் தொழிலை துவங்கி, அதற்குரிய அலுவலகம் ஒன்றையும் ஷாலிமார் கார்டன் பகுதியில் […]
மணிப்பூர் ஆளுநரும், மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநருமான இல.கணேசன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை வந்திருந்த இல.கணேசனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில், அவர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆந்திரா அன்னமையா மாவட்டத்தைச் சேர்ந்தவர் துளசி பிரசாத். இவர் சிரிஷா என்ற பெண்ணை காதலித்து இருவீட்டார் சம்மததுடன் திருமணம் செய்து கொண்டார். மறுநாள் குடும்பத்தினர் முதலிரவுக்கான ஏற்பாடுகளைச் செய்து, தம்பதியரை அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் முதலிரவு அறையில் எதிர்பாராதவிதமாக துளசி பிரசாத் சுயநினைவை இழந்து வீழ்ந்துள்ளார். பதறிப்போன சிரிஷா, குடும்பத்தினர் உதவியுடன் அவரை மருத்துவமனையில் சேர்த்த போது அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாகத் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஓடும் போதும் […]
பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த நடுவர் ஆசாத் ரவூப். இன்று மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இந்த செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 66 வயது கிரிக்கெட் நடுவரான அசாத் ரவூப் மாரடைப்பு காரணமாக இன்று மரணமடைந்தார். இந்த செய்தியை அவரது சகோதரர் உறுதி செய்துள்ளார். மேலும் லாகூரில் உள்ள லாண்ட் பஜாரில் தனது துணி கடையை மூடிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது திடீரென்று அவருக்கு நெஞ்சில் ஒருவித வலி ஏற்பட்டதை உணர்ந்ததாக தெரிவித்துள்ளார். 13 […]
ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு பிரிவில் ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்துள்ளார். அப்போது மாணவன் சேக் சஜிதாவிடம் ஆசிரியர் பாடம் சம்பந்தமாக கேள்வி கேட்டுள்ளார். அப்போது கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்த மாணவனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார். இதை பார்த்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். ஆனால் சஜித் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்த […]
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள வாரங்கால் என்ற மாவட்டத்தை சேர்ந்த எட்டு வயது சிறுவனுக்கு கடந்த நான்காம் தேதி நடந்த விபத்தில் வலது கை உடைந்து உள்ளது. அதனால் சிறுவன் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுவனுக்கு நேற்று முன்தினம் அறுவை சிகிச்சை செய்வதற்காக ஆபரேஷன் தியேட்டருக்கு மருத்துவர்கள் அழைத்துச் சென்றுள்ளனர்.அப்போது சிறுவனுக்கு சிகிச்சைக்கு முன்னதாக மயக்க மருந்து கொடுக்கப்பட்டது. ஆனால் சில வினாடிகளில் சிறுவனுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் செயற்கை சுவாசம் கொடுத்து காப்பாற்ற மருத்துவர்கள் […]
ஜம்முவின் ரஜோரி மாவட்டத்தில் நவ்ஷேரா செக்டர் பகுதியிலுள்ள கட்டுப்பாட்டு எல்லைப் பகுதி வழியாக ஊடுருவ முயற்சி செய்த பயங்கரவாதியை இந்திய இராணுவ வீரர்கள் சுட்டுக் கைது செய்தனர். இதையடுத்து மேற்கொண்ட விசாரணையில், அவன் பாகிஸ்தானை சேர்ந்த தபாரக் உசேன் என்பது தெரியவந்தது. இவர் இந்திய இராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இந்தியாவில் நாச வேலை செய்வதற்காக பாகிஸ்தானை சேர்ந்த கர்னல் யூனுஸ் என்பவர் 30 ஆயிரம் ரூபாய் வழங்கியதாக அவர் தெரிவித்தார். இதேபோன்று […]
விமானநிலையத்தில் பயணி ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மதுரை அண்ணா நகரை அடுத்த தாசில்தார் நகரில் வசித்து வருபவர் குமரேச பாண்டியன்(72). இவர் தன் மகளுடன் மும்பை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வந்தார். இதையடுத்து விமான நிலையத்தில் காத்திருப்போர் அறையிலிருந்தபோது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அவருக்கு விமான நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டு பின் ஆம்புலன்ஸ் வாயிலாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இருப்பினும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே […]
டிக் டாக் பிரபலமும் பாஜக நிர்வாகியுமான சோனாலி போகத் கோவாவில் மாரடைப்பால் உயிரிழந்தார். 2006ம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலம் அடைந்த சோனாலி போகத் பின் டிக் டாக் மூலம் மேலும் பிரபலம் அடைந்தார். 2020ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் அரியானா சட்டமன்ற தேர்தலில் அதம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு இருந்தார். ஆனால் அதில் அவர் வெற்றி பெறவில்லை. தேர்தலில் வென்று எம்எல்ஏவான குல்தீப் பிஷ்ணோய் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து […]
பிரபல நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா ‘மைனே பியார் கியா’, ‘பாசிகர்’, ‘பாம்பே டூ கோவா’, ‘ஆம்தானி அத்தானி கர்ச்சா ரூபாயா’ உள்ளிட்ட பாலிவுட் படங்களில் நடித்து பிரபலமானவர். டெல்லியில் ஜிம்மில் உடற்பயிற்சியின் போது மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது பயிற்சியாளர் உடனடியாக அவரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காமெடி நடிகர் ஸ்ரீவஸ்தவா உடல்நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது உடல்நிலை குறித்து பேசிய மருத்துவர்கள், அவரது உடல்நிலை […]
59 வயதாகும் பாலிவுட் திரையுலகை சேர்ந்த காமெடி நடிகரும், குணச்சித்திர நடிகருமான பிரபல காமெடி நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் இன்று உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது, திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் ட்ரெட்மில்லில் சரிந்து விழுந்தார். இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது அவருக்கு எந்த ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா, சில பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் […]
தைவான் நாட்டினுடைய பாதுகாப்பு அமைச்சக ஆய்வு மற்றும் மேம்பாட்டு பிரிவினுடைய துணை தலைவராக இருக்கும் ஓ யாங் லி-ஹ்சிங் மாரடைப்பால் ஓட்டலில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவான் நாட்டினுடைய பாதுகாப்பு அமைச்சக ஆய்வு மற்றும் மேம்பாட்டு பிரிவினுடைய துணை தலைவராக இருக்கும் ஓ யாங் லி-ஹ்சிங் தனிப்பட்ட பணிக்காக ஓட்டல் ஒன்றில் தங்கியிருக்கிறார். இந்நிலையில், அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. அந்த சமயத்தில், அவருடன் யாருமில்லாததால் சிறிது நேரமாக போராடி பரிதாபமாக மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]
பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் வாழப்பள்ளி. இவர் ஆண்ட்ராய்டு குஞ்சப்பன், மாஸ்டர்பீஸ், காயாங்குளம் கொச்சுண்ணி, நந்தனம், பிரேக்கிங் நியூஸ், அர்ச்சனா 31 நாட் அவுட் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து இருக்கிறார். கோழிகோட்டில் உள்ள குதுரசால் என்ற இடத்தில் குடும்பத்துடன் வசித்து வந்த அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து ஓமச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 59. இவரது […]
தெலுங்கானா மாநிலம் ராஜா போர் தாலுகா திருமலாப்பூர் என்ற கிராமத்தில் ஜெயஸ்ரீ (25) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் ஜெயஸ்ரீயின் உடல்நிலை மிகவும் மோசமானது. அதனால் அவரின் கணவர் பிரசாந்த் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து மருந்துகள் எடுத்துக் கொண்டால் சரியாகிவிடும் என்றும் கூறியுள்ளனர். இந்நிலையில் நேற்று அதிகாலை ஜெயஸ்ரீ தனது குழந்தைக்கு தாய்ப்பால் […]
நடிகர் விக்ரம் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனையில் அனைவருக்கும் ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில் நடிகர் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்படவில்லை லேசான நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவரது மேனேஜர் விளக்கம் அளித்துள்ளார். வதந்திகள் வேதனை அளிக்கிறது. யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் .அவர் நலமுடன் இருக்கிறார். நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று தெரிவித்துள்ளார்.
மாரடைப்பால் சப் – இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையிலுள்ள அசோக் நகரில் ரத்தினவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பொருளாதார குற்றப்பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றும் விஜய் பாபு என்ற மகன் இருந்துள்ளார். இவருடைய மனைவி சரண்யா வடபழனி காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் விஜய் பாவுக்கு திடீரென லேசான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் விஜய்பாபு வீட்டில் இருப்பவர்களிடம் தான் மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து கிளம்பி சென்றுள்ளார். ஆனால் விஜய்பாபு மருத்துவமனைக்கு செல்லாமல் […]
மதுரையில் ஜிம்மில் கடும் உடற்பயிற்சி செய்த ஸ்ரீ விஷ்ணு என்ற 27 வயதான இளைஞர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். மதுரை பழங்காநத்தம் திருவள்ளூர் நகர் பகுதியை சேர்ந்த கமலேஷ்வரன் என்பவரின் மகன் ஸ்ரீ விஷ்ணு. இவர் ஐடியில் வேலை பார்த்து வருகிறார். தினமும் மாடக்குளம் பிட்னஸ் சென்டரில் உடற்பயிற்சி செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அதிக எடை கொண்டு பளு தூக்கும் போது திடீரென […]
கேகே கடந்த செவ்வாய்க்கிழமை அன்று இரவு மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். கிருஷ்ணகுமார் குன்னத்திற்கு பல இதய அடைப்புகள் இருந்துள்ளன. சரியான நேரத்தில் முதலுதவி சிகிச்சையான சிஆர்பி வழங்கப்பட்டிருந்தால் அவரை காப்பாற்றியிருக்கலாம் என்று பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொல்கத்தா போலீஸ் விரிவான பிரேத பரிசோதனை அறிக்கையை சனிக்கிழமை வெளியிட்டுள்ளது. மருத்துவ அறிக்கையின்படி இதயம் செயல்பாடு குறைந்தால் கடுமையான நுரையீரல் வீக்கம் ஏற்பட்டு அதன் காரணமாக ஏற்பட்ட ஹைபோக்சியாவின் விளைவுகளை தொடர்ந்து மரணம் ஏற்பட்டுள்ளது. இதயக் […]
ஒமிக்ரோன் தொற்று காரணமாக குழந்தைகளுக்கு மாரடைப்பு உண்டாகும் வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியிருக்கிறது. ஒமிக்ரான் வைரஸ் தொடர்பில் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் சுமார் 18,849 குழந்தைகளிடம் ஆய்வு மேற்கொண்டது. இதில், ஒமிக்ரானால் பாதிப்படைந்த பின் மூக்கு, தொண்டை, குரல்வளை அடங்கிய மேல் சுவாசக்குழாயில் தொற்றின் தீவிரம் அதிகமாக இருப்பது தெரியவந்திருக்கிறது. எனவே, இயல்பாக உண்டாகும் வறட்டு இருமல், நெஞ்சு வலி, மூக்கடைப்பு போன்றவற்றைக் காட்டிலும் கொரோனாவிற்குப்பின் உண்டாகும் பாதிப்புகள் குழந்தைகளுக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுத்துவதோடு, சுருங்கிய சுவாசக்குழாய் […]
ரஷ்யாவின் பாதுகாப்பு துறை அமைச்சரான செர்ஜெய் ஷிகோவிடம் அதிபர் புடின் உக்ரைன் நாட்டின் முக்கிய நபர்களை ஏன் ஆக்கிரமிக்க முடியவில்லை? என்று கோபத்துடன் கேள்வி எழுப்பியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் போர்தொடுக்க தொடங்கியது. அந்நாட்டின் பல முக்கிய நகர்களில் தாக்குதல் மேற்கொண்டு நிலைகுலையச் செய்திருக்கிறது. எனினும், உக்ரைனின் பெரிய நகர்களை ரஷ்யாவால் கைப்பற்ற முடியவில்லை. எனவே, ரஷ்யா இந்தப் போரில் ஏறக்குறைய முதல்கட்ட தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று […]
ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே (வயது 52) மாரடைப்பால் காலமானார். இவர் தாய்லாந்தில் உள்ள சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து அவரை சோதித்துப் பார்த்த மருத்துவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே 90-களில் உலக அளவில் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ராட் மார்ஷ் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்தார். 1970 முதல் 19784 வரையிலான காலக்கட்டத்தில் ஆஸ்திரேலியாவின் விக்கெட் கீப்பராக இருந்த இவர் 96 டெஸ்ட் உட்பட 188 சர்வதேச ஆட்டங்களில் ஆடியுள்ளார். விக்கெட் கீப்பராக 479 விக்கெட்டுகளை வீழ்த்தியது அன்றைய சாதனையாக இருந்தது. ஆஸியின் டெனிஸ் லில்லி – ராட் மார்ஷ் ஜோடி உலகின் தலைசிறந்த பவுலர் – கீப்பர் ஜோடியாக பார்க்கப்பட்டது.
பிரபல கன்னட ஆர்.ஜே. ரச்சனா திடீர் என்று மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை எற்படுதிள்ளது. பிரபல கன்னட ஆர்.ஜே. ரச்சனா கன்னட படம் ஒன்றிலும் நடித்திருக்கிறார். பெங்களூரில் இருக்கும் ஜே.பி. நகரில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அவர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக தெரிவித்துள்ளார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரச்சனா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும்39 வயதான ரச்சனா உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்தி வந்துள்ளார். […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி நகராட்சி தேர்தலில் திமுக 23 இடங்களில் வெற்றி பெற்றது. இதனை திமுக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் மேளதாளங்கள் முழங்க நடனங்கள் ஆடி கொண்டாடினர். அப்போது கிருஷ்ணகிரி 1-வது வார்டு கோட்டை பகுதி வாக்குச்சாவடி திமுக முகவராக செயல்பட்ட 40 வயது கொண்ட பயாஸ், வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே திமுக […]
தமிழ் திரையுலகின் இளம் பாடலாசிரியரான லலிதா ஆனந்த் மாரடைப்பு காரணமாக இன்று சென்னையில் உயிரிழந்தார். இவர் சிறுநீரக பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2-வது முறையாக மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இவர் இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் “உன் வீட்டுல நான் இருந்தேனே”, ரவுத்திரம் படத்தில் “அடியே உன் கண்கள் இரண்டும்” உள்ளிட்ட பல பாடல்களை எழுதியுள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பிரபல மலையாள நடிகர் கோட்டயம் பிரதீப் ( வயது 61 ) இன்று அதிகாலை 4.30 மணி அளவில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, ராஜா ராணி, நண்பேன்டா, தெறி உள்ளிட்ட படங்களிலும், மலையாளத்தில் மம்மூட்டி, பிரித்விராஜ், திலீப், மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவரது மறைவிற்கு சினிமா நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் கொளத்தூர் பகுதியை அடுத்த செட்டியூரை சேர்ந்தவர் தங்கராஜ். 40 வயதாகும் இவர் மேட்டூர் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் பிரிவு அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு இவர் தேர்தல் பணிக்காக வந்த போது திடீரென எதிர்பாராத விதமாக இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து உடன் இருந்த அதிகாரிகள் உடனடியாக ஆம்புலன்ஸை அழைத்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தங்க ராஜை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக […]
பாலிவுட் சினிமாவில் நடிகர் மற்றும் தயாரிப்பாளரான அமிதாப் தயால் நேற்று காலை 4.30 மணியளவில் திடீரென வந்த மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். அமிதாப் தயால் என்பவர் பாலிவுட் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்தவர். இவர் ரங்கதாரி உட்பட பல படங்களில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார். இதனையடுத்து இவருக்கு கடந்த 17ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அமிதாப் தயால் நேற்று காலை […]
அமிதாப் பச்சனுடன் கடந்த 2005-ஆம் ஆண்டில் வெளியான “விருத்” என்ற படத்தில் இணைந்து நடித்திருந்த நடிகர் அமிதாப் தயாள் சினிமாத்துறையில் நடிகரும், திரைப்பட தயாரிப்பாளருமாக பயணித்து வந்தார். மேலும் இவர் ரங்தரி, லைப் ஆன் தி எட்ஜ், துஹான் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றியுள்ளார். இவர் தனது 51-வது வயதில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். அதாவது கடந்த ஜனவரி 17-ஆம் தேதி அன்று இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் அமிதாப் தயாள் […]
ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். திருப்பதி கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் சிலர் மாரடைப்பால் அவதிப்படுகின்றனர். அவர்கள் இறப்பை தடுக்க விலை உயர்ந்த இலவச தடுப்பூசி தயார் நிலையில் இருக்கிறது. இதற்காக திருமலையில் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் சிறப்பு இருதய சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. இது நடைபயணமாக வரும் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக […]
உத்தரபிரதேச மாநிலத்தில் உரத் தட்டுப்பாடு என்பது கடமையாக நிலவி வருகிறது. இதனால் உரக் கடைகளில் விவசாயிகள் பல மணி நேரம் காத்திருந்து உரத்தை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் லலித்பூர் மாவட்டத்தை சேர்ந்த போகிலால் பால் என்ற விவசாயி ஜக்லான் என்ற உர கடையில் உரம் வாங்குவதற்கு நேற்று முன்தினம் சென்றார். அங்கு நீண்ட வரிசை இருந்ததால் அவரால் நேற்று முன்தினம் உரம் வாங்க முடியவில்லை. பிறகு கடைக்கு வெளியிலேயே தூங்கி நேற்று மீண்டும் வரிசையில் உரத்தை வாங்குவதற்கு […]
தமிழ் சினிமாவில் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நகைச்சுவை நடிகர் சீனிவாசன். இவர் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார். தற்போது பெயரிடாத புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசன் படப்பிடிப்பு தளத்தில் மயங்கி விழுந்ததால் படக்குழுவினர் அவரை தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக பவர் ஸ்டார் சீனிவாசன் மயக்கமடைந்த கூறப்பட்டு […]
அமெரிக்காவில், சினிமாவில் நடப்பது போன்று அதிசயமான மற்றும் ஆச்சர்யமான சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவில் வசிக்கும், கேத்தி பேடன் என்பவர், மைதானத்தில் கோல்ப் விளையாடிக் கொண்டிருந்தபோது, அவரின் தொலைபேசிக்கு வந்த அழைப்பில், ஒரு நபர் உங்கள் மகள் பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருக்கிறார். மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறோம் என்று கூறியிருக்கிறார். இதனால் கேத்தி, பதறியடித்துக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார். அப்போது, அதிக பதற்றமடைந்தால் அவருக்கு மாரடைப்பில் மயங்கி விழுந்து விட்டார். உடனே அவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு […]
வங்கதேசத்தின் விமானி, விமானம் நடுவானில் பயணித்தபோது மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வங்காளதேச விமான நிறுவனமானது, கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டிருந்த விமான சேவைகளை சமீபத்தில் தான் தொடங்கியிருக்கிறது. எனவே, கடந்த வெள்ளிக்கிழமை அன்று, வங்கதேசத்தின் பிமன் பங்களாதேஷ் விமான நிறுவனத்தின் ஒரு விமானத்தில், 124 பயணிகள், ஓமன் மஸ்கட்டிலிருந்து, தலைநகர் டாக்காவிற்கு பயணித்துள்ளனர். அப்போது, இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்பூர் அருகில் விமானம் சென்றபோது திடீரென்று விமானி நவுசாத் அதுல்க்கு மாரடைப்பு […]
வங்கதேசத்தை சேர்ந்த விமானம் ஒன்று மஸ்கட்டில் இருந்து டாக்காவுக்கு 126 பயணிகளுடன் வந்து கொண்டிருந்தது. இந்திய விமான எல்லைக்குள் வரும் பொழுது திடீரென்று விமானிக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பின்னர் மற்றொரு விமானி கொல்கத்தா விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து கொல்கத்தா கட்டுப்பாட்டு நிலையம் அருகில் உள்ள நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் படி கேட்டுக் கொண்டது. நாக்பூர் விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டு ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டது. […]
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே சாத்தாங்குப்பம் பகுதியில் சுஷில் ஹரி இன்டர் நேஷனல் பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் புகார் கூறினர். இதுகுறித்து விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபாவை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவரை விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். அதனைத்தொடர்ந்து நேற்று மதியம் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. […]
தேசிய விருது வென்ற பிரபல இயக்குனர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் இயக்குனர் டென்னிஸ் ஜோசப். இவர் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான மனு அங்கிள் என்ற திரைப்படம் தேசிய விருதை பெற்றுள்ளது. கோட்டயத்தில் உள்ள ஏற்றமானூர் பகுதியில் வசித்து வரும் இவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதை தொடர்ந்து உறவினர்கள் அனைவரும் சேர்ந்து டென்னிஸ் ஜோசப்பை ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவமனையில் அவரை பரிசோதித்த டாக்டர்கள் டென்னிஸ் […]
வீட்டில் தனியாக இருக்கும் போது மாரடைப்பு வந்தால் உங்களை நீங்களே எப்படி காப்பாற்றிக்கொள்வது என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். ஆனால் உங்களால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது. இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம். துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர்கள் அதிகமாக தனியாக இருந்திருப்பவராக […]
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திரைப்பட படப்பிடிப்புகளில் பங்கேற்று வந்த நிலையில், திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள். இவர் நேற்று தான் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் குமரராஜன் மாரடைப்பால் மட்டுமே உயிரிழந்தார் என அவரது குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர். தமிழ் நடிகரும் தயாரிப்பாளருமான குமரராஜன் நாமக்கல்லில் உள்ள தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக. இந்நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் மாரடைப்பால் மட்டுமே உயிரிழந்தார் என அவரது குடும்பத்தினர் விளக்கம் அளித்துள்ளனர்.இவர் சந்தித்ததும் சிந்தித்ததும் என்ற படத்தை தயாரித்து நடித்துள்ளார். மேலும் துப்பார்க்குத் துப்பாய, ரெண்டுல ஒன்னு […]
பொது சேவை மையத்தில் கொள்ளையடித்த திருடனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது . உத்தரபிரதேசம் பிஜ்னோர் மாவட்டம் கோத்வாலி தேஹாத் கிராமத்தில் உள்ள பொது சேவை மையத்தில் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி 7 லட்சம் ரூபாய் திருட்டு போனதாக அந்த பொது சேவை மையத்தின் உரிமையாளர் நவாப் ஹைதர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் நுஷாத் […]