Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

ஐபிஎல்லில் சிறப்பாக ஆடி…. இந்திய அணியில் இடம்பிடிப்பேன்…. நம்பிக்கையுடன் நடராஜன்..!!

ஐபிஎல் தொடரில் நான் நன்றாக விளையாடி இந்திய அணியில் இடம்பிடிப்பேன் என்று கிரிக்கெட் வீரர் நடராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் கலந்து கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் மன வலிமையையும், ஆரோக்கியத்தையும் கொடுக்கும் மாரத்தான் விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமானது கிடையாது. அனைவருமே மாரத்தான் ஓடலாம், அனைத்து விளையாட்டுக்குமே ரன்னிங் என்பது தேவைப்படுகிறது என்றார். மேலும் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் நான் நன்றாக […]

Categories
உலக செய்திகள்

புகைபிடித்துக்கொண்டே மாரத்தான் ஓட்டம்…. முதியவர் அசத்தல் சாதனை….!!!

சீன நாட்டில் நடந்த மாரத்தான் போட்டியில் ஒரு முதியவர் புகைப்பிடித்துக் கொண்டே ஓடி  போட்டியின் தூரத்தை கடந்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார். விளையாட்டு வீரர்கள் என்றாலே எந்தவித கெட்ட பழக்கங்களும் இல்லாமல் இருக்க வேண்டும்  என்பது பொதுவாக கூறப்படும் கருத்து. ஆனால், அதனை முற்றிலுமாக மாற்றி சாதித்திருக்கிறார் 50 வயதுடைய ஒரு முதியவர். அங்கிள் சென் என்ற அந்த நபர் ஜியாண்ட் பகுதியில் நடந்த மாரத்தான் போட்டியில் பங்கேற்றார். அதில் சுமார் 1500 பேர் பங்கேற்று ஓடினர். அதில் இவர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தேசிய ஒற்றுமை தினம்… மினி மாரத்தான் போட்டி… தொடங்கி வைத்த கலெக்டர்…!!!!

தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு மினி மாரத்தான் போட்டியை கலெக்டர் தொடங்கி வைத்துள்ளார். சர்தார் வல்லபாய் படேல் பிறந்த நாளை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தேசிய ஒற்றுமை தினம் கடைபிடிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு தேசிய ஒற்றுமையினால் உறுதி மொழியை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி படிக்க அனைத்து அரசு அலுவலர்களும் திரும்பப் படித்து உறுதி மொழியை ஏற்றுக் கொண்டுள்ளனர். முன்னதாக கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தேசிய ஒற்றுமை மினி மாரத்தான் போட்டியை கலெக்டர் […]

Categories
மாநில செய்திகள்

42 கிலோ மீட்டர் ஓடி அசத்திய 9 வயது சிறுமி….. வாயடைத்துப்போன சக போட்டியாளர்கள்…..!!!!

தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நான்காவது நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதனையொட்டி மூன்றாவது முறையாக கருணாநிதியை நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. அந்தப் போட்டியில் கொட்டிவாக்கத்தில் உள்ள நெல்லை நாடார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் 9 வயது சிறுமி அக்ஷிதா 42 கிலோமீட்டர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டார். இதனை கண்ட சக ஓட்டப்பந்தய வீரர்கள் அதிர்ச்சியுடன் பார்த்தனர்.ஆனால் அந்த சிறுமி 42 கிலோமீட்டர் தூரத்தை முழுமையாக […]

Categories
மாநில செய்திகள்

இன்று ஆசியாவிலேயே மிகப்பெரிய…. “கலைஞர் மாரத்தான்” போட்டி தமிழகத்தில்….!!!!

இளைஞர்களிடையே உடற்பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தும் விதமாக கடந்த 2020 ஆம் வருடம் கலைஞர் கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் என்ற அமைப்பு அரசு சார்பாக தொடங்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் மாரத்தான் நடத்த முடிவெடுக்கப்பட்டது. கடந்த 2020 ஆம் வருடம் நடைபெற்ற மாரத்தானில் 28 நாடுகளைச் சேர்ந்த 8,541 கலந்து கொண்டனர். அதேபோன்று 2021 ஆம் வருடம் 37 நாடுகளைச் சேர்ந்த 19 ஆயிரத்து 599 ஒரு பேரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இயற்கை வளம் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாரத்தான் போட்டி…. பரிசுகளை வழங்கிய மாவட்ட தடகள சங்க தலைவர்….!!!!!

மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி வ. உ. சி. அரசு மேல்நிலைப் பள்ளியில் வைத்து ராஜீவ் காந்தி விளையாட்டு கழகம் சார்பில் மாணவ-மாணவிகளுக்கு இயற்கை வளம் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது. இதில் மாவட்ட தடகள சங்க தலைவர் எஸ். வி. எஸ் .பி. மாணிக்கராஜா, ராஜீவ்காந்தி விளையாட்டு கழக செயலாளர் குருசித்திர சண்முகபாரதி,  துணை போலீஸ் சூப்பிரண்டு  கே. வெங்கடேஷ், பள்ளி தலைமை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“செஸ் ஒலிம்பியாட் மினி மாரத்தான் போட்டி”…. கலந்து கொண்ட அதிகாரிகள்….!!!!!!

சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் வருகின்ற 28ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தொடங்க உள்ளது. இது தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செஸ் போட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றது. இந்த நிலையில் திண்டுக்கல்லில் இன்று செஸ் ஒலிம்பியாட்  விழிப்புணர்வு மினி மராத்தான் ஓட்டம் நடைபெற்றுள்ளது. திண்டுக்கல் ஆர்டிஓ அலுவலகம் அருகில் இருந்து தொடங்கிய மினி மராத்தான் ஓட்டத்தை கலெக்டர் விசாகன் கொடியசைத்து  தொடங்கி வைத்துள்ளார். இதில் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், மாணவ மாணவிகள் என 250க்கும் […]

Categories
மற்றவை விளையாட்டு

ஹைதராபாத் மாரத்தான் போட்டி 2022… லோகோ ம்ற்றும் டி-ஷர்ட் அறிமுகம்….!!!!

தெலுங்கானா மாநில ஐதராபாத்தில் ஆகஸ்ட் 27 மற்றும் 28 ஆம் தேதிகளில் மாரத்தான் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏற்பாட்டில் 15,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து ஆகஸ்ட் 27ஆம் தேதி அன்று நடைபெறும் முன்னோட்ட மாரத்தான் நிகழ்ச்சியில் 5 கிலோமீட்டர் ஓட்டம் நடைபெறும். 28ஆம் தேதி 10 கிலோமீட்டர் அரை மாரத்தான் மற்றும் முழுமாரத்தான் ஆகிய போட்டிகள் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேசிய சுரங்க நிறுவனமான என்.எம்.டி.சி. இந்த மாரத்தான் போட்டிகளுக்கு […]

Categories
தேசிய செய்திகள்

முதல்வர் யோகியை சந்திக்க 200 கிமீ ஓடிய சிறுமி….. குவியும் பாராட்டு….!!!!

உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் மாரத்தான் ஓட்டத்தில் சென்று முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்துள்ளார். பிரக்யராஜை சேர்ந்த காஜல் என்ற சிறுமி பல்வேறு ஓட்டப் பந்தயங்களில் கொள்வது மட்டுமல்லாமல் மாரத்தான் போட்டி களிலும் பங்கேற்பார். தடகள வீராங்கனையாக வேண்டும் என்ற கனவை கொண்ட அந்த சிறுமி சுமார் 200 கிலோ மீட்டர் தூரத்தை 5 நாட்களில் கடந்து மாநில தலைநகர் லக்னோவில் சென்றடைந்தார். அங்கு சென்ற முதல்வர் […]

Categories

Tech |