ஆப்பிரிக்கா நாட்டில் ஒன்று மாலி. இங்கு ஜனநாயக ரீதியில் அமைந்த அரசு கடந்த 2020 ஆம் ஆண்டு கவிழ்க்கப்பட்டு, ராணுவம் ஆட்சி செய்கிறது. இந்த நாட்டில் ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா ஆதரவினைப் பெற்ற பயங்கரவாத அமைப்புகள் இயங்கி வருகின்றன. இந்த பயங்கரவாத குழுக்கள் மேற்கு ஆப்பிரிக்காவில் சாஹல் பிராந்தியம் முழுவதும் பரவிக்கிடக்கின்றது. அவர்களை ஒழிக்கிற நடவடிக்கைகளில் அந்த நாட்டின் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. இருப்பினும் பயங்கரவாத அமைப்புகளை வேரறுக்க முடியாமல் ராணுவமும் திணறி வருகிறது. இந்நிலையில் அங்கு […]
Tag: மாலி
பிரான்ஸ் அரசு மாலியிலிருந்து தங்கள் துருப்புகளை திரும்ப பெறுவதாக தெரிவித்திருக்கிறது. மாலி நாட்டில் உள்நாட்டுப் போர் நடக்கிறது. அந்நாட்டில் மத போராளிகளுக்கு எதிராக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த படை வீரர்கள் போரில் ஈடுபட்டு வந்தார்கள். இந்நிலையில் பிரான்ஸ் அரசு தங்கள் துருப்புகளை அந்நாட்டிலிருந்து திரும்பப் பெற்றுக் கொள்வதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து பிரசல்ஸ் நகரத்தில் ஐரோப்பிய கூட்டமைப்பு-ஆப்பிரிக்கா மாநாட்டிற்கு முன்பாக அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில், ‘‘மாலி நாட்டிலிருந்து பிரான்ஸ் துருப்புகள் திரும்ப பெறப்படுகின்றன. இது ஐரோப்பிய நட்பு […]
ராணுவ ஆட்சியை நடைமுறைப்படுத்தி இருக்கும் புர்கினோ பாசோ, மேற்கு ஆப்பிரிக்க கூட்டமைப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க கூட்டமைப்பு, இது பற்றி வெளியிட்ட அறிக்கையில், மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சியை கலைத்துவிட்டு, அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியிருப்பதால் தங்களின் கூட்டமைப்பிலிருந்து புர்கினா பாசோ தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, மேற்கு ஆப்பிரிக்க கூட்டமைப்பு, கடந்த 2020 ஆம் வருடத்தில், ஆட்சியை ராணுவம் கைப்பற்றிய காரணத்தால், மாலி நாட்டையும், கடந்த வருடத்தில் கினியா நாட்டையும் விலக்கி வைத்திருக்கிறது […]
மாலியில் பயங்கரவாதிகளால் பஸ் எரிக்கப்பட்ட சம்பவத்தில் 33 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகள் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். இவர்கள் அவ்வப்போது பொதுமக்கள் மீது தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். இதனால் பயங்கரவாதிகளுக்கும் ராணுவத்திற்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து அந்த நாட்டிலுள்ள மொப்தி மாகாணம் சொவிரி நகரில் இருந்து பென்டிய்ஹரா நகருக்கு நேற்று பஸ் சென்று கொண்டிருந்தது. […]
மாலி நாட்டில் ராணுவ வீரர்கள் 4 பேர் பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மாலி நாட்டில் இராணுவ சோதனைச் சாவடி ஒன்று தென்மேற்கு கவுலிகொரோ பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இராணுவ சோதனைச் சாவடியில் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த நிலையில் பயங்கரவாத கும்பல் ஒன்று சாவடி மீது திடீர் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஆயுதப்படை ராணுவ வீரர்கள் நான்கு பேர் தாக்குதலில் பயங்கரமாக கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 14 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் […]
பிரெஞ்சு ராணுவ வீரர் உயிரிழந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. பிரெஞ்சு ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தகவல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ” Adrien Quelin என்பவர் மாலியில் உள்ள Timbuktu-வில் இருக்கும் ரிலே பாலைவனம் முகாமில் ராணுவ வீரராகவும் வாகனங்களை பழுது பார்ப்பவராகவும் பணிபுரிந்துள்ளார். இந்த நிலையில் அக்டோபர் 12 ஆம் தேதி ஒரு டிரக்கில் ஏற்பட்ட பழுதை சரி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக […]
மாலி நாட்டில் கடத்தபப்ட்ட கன்னியாஸ்திரி மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளார். ஆப்பிரிக்காவிலுள்ள மாலி நாட்டில் இருக்கும் கொலம்பியாவைச் சேர்ந்தவர் 59 வயதான கன்னியாஸ்திரி குளோரியா. இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி பிணைக்கைதியாக அந்நாட்டு பயங்கரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டார். மேலும் இவரை மீட்பதற்கான பணிகளை மாலி அரசு தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் அந்நாட்டு பயங்கரவாதிகளிடம் நடத்திய தொடர் பேச்சுவார்த்தையை அடுத்து குளோரியாவை மாலி அரசு தற்போது […]
மாலியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு கருவின் 7 குழந்தைகள் உள்ளதாக மருத்துவர்கள் கூறிய நிலையில் அவர் ஒன்பது குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக ஒரு கருவியில் இரண்டு குழந்தைகள் உருவாவது உண்டு. அதையும் மீறி சில சமயங்களில் 3, 4 கருவும் உருவாவது உண்டு. அப்படி உண்டாகும்போது அனைத்து குழந்தைகளும் உயிர் பிழைப்பது இல்லை. அதையும் மீறி அபூர்வமாக நான்கு குழந்தைகளும் உயிர் பிழைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையெல்லாம் மீறி ஆப்பிரிக்க நாடான […]
பிரான்ஸ் நாட்டின் ராணுவ வீரர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அல்கொய்தா அமைப்பினர் உரிமை கோரியுள்ளனர். மாலி நாட்டில் கடந்த 2ஆம் தேதி அன்று பிரான்ஸின் ராணுவ வீரர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அதாவது அவர்கள் வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வாகனம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளது. இதில் அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் Al-zallaqa எனும் சிறு அமைப்பு தான் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது. மேலும் இதற்கான வெடிகுண்டுகளை வழங்கியுள்ளது நாங்கள்தான் அல்கொய்தா அமைப்பு […]
மாலி நாட்டில் கிளர்ச்சியாளர்கள் திடீரென நடத்திய தாக்குதலால் ராணுவ வீரர்கள் உட்பட 23 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்கள் மற்றும் ராணுவத்தினருக்கும் இடையே மோதல் நடந்து கொண்டிருக்கிறது. அந்நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள பெரும்பாலான இடங்களை கிளர்ச்சியாளர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.அதனால் பொதுமக்கள் மீது குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற பகுதிகளை மீட்கும் நடவடிக்கையில் ராணுவத்தினர் தீவிரமாக ஈடுபட்டு […]