தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி ஆகிய 9 மாவட்டங்களில் மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள தாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் வளிமண்டல கீழடித்து சுழற்சி […]
Tag: மாலை
குஜராத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்துக்கு பிறகு, ரன்திக்பூர் கிராமத்தில் நடந்த கலவரத்தின்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு என்ற பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது குழந்தை உட்பட குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த 11 குற்றவாளிகளையும், கடந்த 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு பொது மன்னிப்பு வழங்கி […]
கோவை மாவட்டம் வால்பாறைபகுதியில் அவ்வப்போது காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நடுமலைஆறு உட்பட ஆறுகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. அதேபோன்று சோலை ஆறு அணைக்கு வினாடிக்கு வினாடி தண்ணீர் வரத்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் 7வது நாளாக சோலை ஆறு அணையின் நீர்மட்டமானது முழு கொள்ளளவை தாண்டிய நிலையில் இருக்கிறது. ஆகவே பாதுகாப்பு கருதி அணையிலிருந்து உபரிநீர் கேரளாவுக்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த மழை காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு 11 […]
கர்நாடகா மாநிலம், விஜயநகர மாவட்டம் பாபிநாயக்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹோண்ணூறு ஸ்வாமி. இவருக்கும் அதேகிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கோயிலில் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திடீரென மணமகன் ஸ்வாமிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. ஆனால் சாதாரண வலியாக இருக்கும் என நினைத்த உறவிர்கள் அவருக்குச் சோடா குடிக்கக் கொடுத்துள்ளனர். அதைக் குடித்துக் கொண்டிருக்கும்போதே ஸ்வாமி மேடையிலேயே மயங்கிய விழுந்துள்ளார். பிறகு அவரை உறவினர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு […]
இன்று பரபரப்பான சூழ்நிலையில் அதிமுகவின் பொதுக்குழு சென்னை வானகரத்தில் தொடங்கியது. காலை முதலே வானகரத்தில் கட்சி தொண்டர்கள் குவிந்தனர். பொதுக்குழுவில் ஒற்றை தலைமை குறித்து விவாதிக்க ஈபிஎஸ் தரப்பு முடிவு செய்தது. அதேசமயம் ஓபிஎஸ் தரப்பினர் ஒற்றை தலைமை வேண்டாம் என்று தெரிவித்தனர். பிரச்சினை ஏற்படாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் வைத்தியலிங்கத்தை இபிஎஸ் ஆதரவாளர்கள் பேச விடவில்லை. இதனால் கோபமடைந்த ஓபிஎஸ் சட்டத்திற்குப் புறம்பான பொதுக்குழு என்று முழக்கமிட்டு பொதுக்குழுவை […]
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமை ஏற்க தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தகவல் வெளியான நிலையில் பொதுக்குழு கூட்டத்தை உறுப்பினர்கள் புறக்கணிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு நாளை கட்டாயம் நடைபெறும் என்று எடப்பாடிபழனிசாமி தரப்பினர் உறுதியாக தெரிவித்து இருந்தனர். மேலும் ஒற்றை தலைமை விவகாரத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் கையை ஓங்கி உள்ளது. இதனால் பொதுக்குழுவை புறக்கணிக்க ஓபிஎஸ் முடிவு செய்திருந்தார். மேலும் அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர் […]
மாலையில் உணரப்பட்ட நிலநடுக்கத்தினால் மக்கள் பீதியடைந்துள்ளனர் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலின் வடமேற்கில் 202 கிலோ மீட்டர் தூரத்தில் நேற்று மாலை 4.09 மணி அளவில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கமானது பூமியில் இருந்து 150 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்துள்ளது. இது குறித்தான தகவலை தேசிய நிலநடுக்கவியல் மையம் வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு விவரங்கள் […]
இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருசெந்தூரில் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு பகத்சிங் பேருந்து நிலையம் முன்பு அவரது உருவப்படத்திற்கு எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் விடுதலைச்செழியன் தலைமையில் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது மாவட்ட அமைப்பாளரான ரகுவரன், மாநில துணை செயலாளரான தமிழ்க்குட்டி, ஒன்றிய துணை செயலாளரான சுரேந்தர், தொகுதி அமைப்பாளரான லட்சுமணன் மற்றும் பெரும்பாலானோர் […]
நிகழ்ச்சி ஒன்றில் மாலை அணிந்து கொண்ட படி முன்னணி நடிகர்கள் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். மாஸ்டர் பட வெற்றியை தொடர்ந்து விஜய் தற்போது ‘தளபதி 65’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப் குமார் இயக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரபல தெலுங்கு நடிகை பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. […]
இன்று மாலைக்குள் எல்லாத் தொகுதிகளிலும் பூத் சிலிப்கள் வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பல கட்சிகள் போட்டியிடுகின்றன. நேற்றோடு தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்தது. இந்நிலையில் நாளை தேர்தல் நடைபெறும் இடங்களில் தீவிர கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் விவிபேட் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு வாக்காளர்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் பெறலாம். இன்று மாலைக்குள் அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் சிலிப்கள் […]
தமிழகத்தில் எத்தனை வேட்புமனுக்கள் ஏற்பட்டது என்பது இன்று மாலை போல் தெரியவரும். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை தொகுதி தொகுதியாக சென்று செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் தேர்தல் வாக்குறுதிகளையும் அளித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தவர்களில் அத்தனை வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பது குறித்த முழு விவரம் இன்று மாலை தெரிய வரும் என தேர்தல் ஆணையர் […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை 6 மணிக்கு தமிழக மக்களுக்கு உரையாற்றுகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தொலைக்காட்சி மூலம் தமிழக மக்களுக்கு முதல்வர் உரையாற்றுள்ளார். கொரோனா வைரஸ் பரவல் தொடர்பாக அவரின் உரையில் பல்வேறு அறிவிப்புகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் மிகவும் அதிகமாக பரவி வருகிறது. நேற்று மட்டும் முன்னெப்போதும் இல்லாத அளவில், 527 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக உறுதியாகியுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த […]