பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள சேரிபாளையம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு தாமரைக்குளம், நல்லடிபாளையம், பட்டணம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் பேருந்தின் மூலம் பயணம் செய்து படித்து வருகின்றனர். இந்த கிராமங்களுக்கு இயக்கப்பட்டு வந்த தனியார் பேருந்து கொரோனா தொற்றின் காரணமாக நிறுத்தப்பட்டது. இதனால் தற்போது ஒரே ஒரு அரசு பேருந்து மட்டும் கிணத்துக்கடவிலிருந்து இயக்கப்படுகிறது. […]
Tag: மாவடடச்செய்திகள்
கியாஸ் கசிந்து தீ பற்றிய விபத்தில் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சானூர்மல்லாவரம் கிராமத்தில் ஏழுமலை-பரிமளா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிரியங்கா, கீர்த்தனா என்ற 2 மகள்கள் இருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று வீட்டில் ஏழுமலையின் தாயாரான தனம்மாள் மற்றும் 2 குழந்தைகளும் இருந்தனர். இதனையடுத்து தனம்மாள் சமையலறைக்கு சென்று அடுப்பைப் பற்ற வைத்துள்ளார். அப்போது திடீரென கியாஸ் கசிந்து சமையல் அறை முழுவதும் தீ பிடிக்க தொடங்கியுள்ளது. இந்த […]
ராம நவமியை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தி.சூரக்குடி பகுதியில் பிரசித்தி பெற்ற சிவ ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ராமநவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் நேற்று ராம நவமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்நிலையில் ராமர், சீதை, ஆஞ்சநேயர் ஆகியோருக்கு பல்வேறு வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் பின்னர் ஆஞ்சநேயருக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு […]
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சாலைக்கிராமம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சாலைக்கிராமம், கோட்டையூர் சூராணம், வண்டல் அளவிடங்கான் பூலாங்குடி, பஞ்சனூர், சாத்தனூர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் மனோகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று காலை 10 […]
சுத்திகரிப்பு குடிநீர் இயந்திரம் தொடக்க விழா நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியன், நகராட்சி தலைவர் துரை ஆனந்த், நகரசபை தலைவர் கார் கண்ணன், நகர்மன்ற உறுப்பினர் சரவணன், ஜெயகாந்தன், விஜயகுமார், சண்முகராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் நகராட்சி தலைவர் துரைஆனந்த் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரத்தை தொடங்கி வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பழுதடைந்த […]
காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அரண்மனை வாசலின் முன்பு காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் பெட்ரோல் டீசல், கேஸ் ஆகியவற்றின் விலையை மத்திய அரசு உயர்த்தியதை கண்டித்தும், அதனை திரும்பப பெற வலியுறுத்தியும் மோட்டார் சைக்கிள், சிலிண்டர் ஆகியவற்றிற்கு மாலை போட்டு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட முன்னாள் தலைவர் ராஜரத்தினம், துணைத்தலைவர் […]
தமிழ்நாடு மண்டல செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பர்மா காலனி பகுதியில் அமைந்துள்ள சிவானந்தா மண்டபத்தில் வைத்து ஐயப்பசேவா சமாத்தின் தென் தமிழ்நாடு மண்டல செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில தலைவர் ராஜகோபால துறைராஜா, மாநில பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம், மாநில செயலாளர் கமலம் நீலகண்டன், மாவட்ட தலைவர் சுந்தரராஜன், பொது செயலாளர் ராஜன், தேசிய செயலாளர் கணேசன், ஐயப்ப சேவா சமாத்தின் மாவட்ட உறுப்பினர் மதி, சுந்தர், செல்வமணி, அண்ணாமலை, கணேசன், கரூர்செல்வம், […]
இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தென்மாபட்டி கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து பூமாரியம்மன் பூச்சொரிதல் விழா குழு மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் டாக்டர் சுபாஸ்ரீ, ஷாலினி, சிவானி, வாசுதேவ், ஜித்து நாயர், அஜித், செவிலியர்கள், ஒருங்கிணைப்பாளர் வினோத நாதன், முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்பின்னர் இந்த முகாமில் திருப்பத்தூர், திருக்கோஷ்டியூர், திருவிடையார்பட்டி, காட்டாம்பூர், […]
லாரி மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மணக்கால் பகுதியில் வினேஷ், துரைசிங் என்பவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களது விவசாய நிலத்தில் பயிரிடப்பட்ட சம்பா பயிர்களை அறுவடை செய்வதற்கு கர்நாடகா மாநிலத்தில் உள்ள ரைசூர் மாவட்டத்தை சேர்ந்த எமனூரப்பா மற்றும் ஹனுமேஷ் ஆகியோரின் வண்டியை வரவழைத்தனர். இவர்கள் மணக்கால் கிராமத்தில் 45 நாட்களாக தங்கி அறுவடை பணியை செய்து வந்துள்ளர்னர். இந்நிலையில் கடந்த 20-ஆம் தேதி எமனூரப்பா அறுவடை இயந்திரம் […]
நீதிபதியின் கணவரை தாக்கிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடியில் நவீன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காரைக்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் நிதித்துறை நடுவராக பணிபுரியும் நர்மதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் 2 பேரும் சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அப்போது அங்கு பாலாஜி, கார்த்திக் என்ற இரண்டு வாலிபர்கள் செல்போனில் செல்பி எடுத்து கொண்டு விளையாடி உள்ளனர். இதனால் நவீன்குமார் அவர்களிடம் வழி விடுமாறு கூறியுள்ளார். ஆனால் கார்த்திக் மற்றும் பாலாஜி […]
ஆண்டாள் நாச்சியாருக்கு-ரெங்கமன்னாருக்கும் திருவிழா நடைபெறுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரசித்தி பெற்ற ஆண்டாள் நாச்சியார் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் வரும் பவுர்ணமியை முன்னிட்டு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு வருகின்ற 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்குகிறது. இந்நிலையில் விழாவின் முக்கிய நாளான 18-ஆம் தேதி காலை 7 மணிக்கு ஆண்டாள் நாச்சியார்-ரெங்கமன்னார் சுவாமிக்கும் ரத வீதிகள் ஊர்வலம் நடைபெறும். அதன் பின்னர் மாலை 4 மணிக்கு […]
பள்ளி நிலத்தை ஆக்கிரமித்ததை பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வீரணம் கிராமத்தில் பள்ளிக்கூடத்திற்கு சொந்தமான நிலத்தை அதே பகுதியை சேர்ந்த ஒருவர் ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளார். இதனை அகற்ற கோரி பொதுமக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த தாசில்தார் பரிமளா, வட்டார வளர்ச்சி அலுவலர் மகாதேவன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி, […]
100 நாள் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காட்டுக்காநல்லூர் பகுதியில் 100 நாள் வேலைக்கு செல்லும் பணியாளர்கள் காளை 7 மணிக்கு பணிக்கு வரச்சொல்லுவதை கண்டித்தும், வேலை நேரத்தை 9 மணியாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட உதவி ஆட்சியர் காமராஜ் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் […]
வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் தங்க நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தளரப்பாடி கிராமத்து சுதாகர்-தங்கம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் தங்கம் வீட்டை பூட்டி விட்டு 100 நாள் வேலைக்கு சென்று விட்டனர். இதனையடுத்து சுதாகர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன் பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது லாக்கரில் இருந்த 10 பவுன் […]
உக்ரேனில் இருந்து வந்த தமிழக மாணவர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மம்சாபுரம் பகுதியை சேர்ந்தவர் விசுவா. இவர் உக்ரைனில் உள்ள மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் விசுவா கடந்த 18 ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தால் இந்திய தூதரகம் இந்தியா செல்ல விரும்பும் மாணவர்கள் செல்லலாம் என அறிவித்தது. இதனையடுத்து விசுவா உள்ளிட்ட சில மாணவர்கள் கடந்த 18ஆம் தேதி ஏர் அரேபியா விமானம் […]
குடிநீர் வசதி வேண்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மங்களம் கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சுமார் ஒரு வாரங்களுக்கு மேலாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கோபம் அடைந்த பொதுமக்கள் மங்கலம்- அவலூர்பேட்டை சாலையில் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ […]
வந்தவாசி தொகுதியில் வெற்றி பெற்ற வேட்பாளர்களை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசி நகர மன்ற உள்ளாட்சித் தேர்தலில் 24- வார்டுகளில் பதிவான வாக்குகளுக்கான முடிவுகளை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதில் 1-வது வார்டில் அ.தி.மு.க. தீபா செந்தில், 2-வது வார்டில் சுயேச்சை ஷீலா, 3-வது வார்டில் அன்பரசு, 4-வது வார்டில் பிபி ஜான், 5-வது வார்டில் ஜொஹராபிவி, 6வது வார்டில் சுயச்சை நூர் முகமது, 7-வது வார்டில் ரதி காந்தி, 8வது வார்டில் ஜெரினா, 9-வது வார்டில் […]
12-வார்டு வகை பதிவான வாக்குகளை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள நெற்குப்பை பேரூராட்சிகள் பதிவான வாக்குகளை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதில் 1-வது வார்டில் 648 வாக்குகளில் 570 வாக்குகளும், 2- வது வார்டில் 390 வாக்குகளில் 311 வாக்குகளும், 3-வது வார்டில் 642 வாக்குகளில் 511 வாக்குகளும், 4-வது வார்டில் 769 வாக்குகளில் 623 வாக்குகளும், 6-வது வார்டில் 260 வாக்குகளில் 181 வாக்குகளும், 7-வது வார்டில் 362 வாக்குகளில் 279 வாக்குகளும், 8-வது வார்டில் […]
வாக்குச்சாவடியில் புகுந்த பாம்பு தீயணைப்பு வீரர்கள் பிடித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சி. எம். எஸ். தனியார் பள்ளியில் வாக்கு சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது . இங்கு தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென காட்டு பகுதியில் இருந்து பாம்பு ஒன்று வாக்கு சாவடிக்குள் நுழைந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பல […]
தம்பி மகனின் திருமணப் பத்திரிக்கையில் பெயர் போடாததால் முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல் அய்யம்பட்டி கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் இவரது தம்பி குடும்பத்தினருக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக தம்பி மகனின் திருமண பத்திரிக்கையில் சுப்பிரமணியின் பெயர் சேர்க்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சுப்பிரமணி கடந்த-15 தேதி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்த அக்கம் […]
உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த 1 லட்சத்து 91 ஆயிரத்து 560 ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள புல்லல்கோட்டை பகுதியில் தாசில்தார் பொன்ராஜ் தலைமையிலான காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனைகள் சரவணகுமார் என்பவர் உரிய ஆவணம் இன்றி 1 லட்சத்து 91 ஆயிரத்து 560 ரூபாய் பணத்தை மோட்டார் சைக்கிளில் கொண்டு […]
சிவகங்கை அருகே திருநாவுக்கரசர் எம்.பி.யுடன் வந்தவர்கள் கார்கள் மோதி கொண்ட விபத்தில் அதிர்ஷ்டவசமாக அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற்காக திருநாவுக்கரசர் எம் .பி தன்னுடைய காரில் வந்துள்ளார். அவரைத் தொடர்ந்து அவரது ஆதரவாளர்களும் காரில் வந்தனர். அப்போது சிவகங்கை அருகே வரும்போது திருநாவுக்கரசரின் காரை பின் தொடர்ந்து வந்த கார் ஒன்று திடீரென்று பிரேக் போட்டது. இதனால் […]
ஓட்டப்பிடாரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . தூத்துக்குடி மாவடடம் ஓட்டப்பிடாரம் அருகே அமைந்துள்ள கீழசெய்தலை கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி ஆவார். இவருக்கு 27 வயதான மாரிமுத்து என்ற மகன் இருந்தார்.அவர் அரசடியில் மோட்டார் மெக்கானிக் ஒர்க் ஷாப் வைத்திருந்தார். இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த தனது உறவினரான சக்கையா என்பவரின் மகனான 25 வயது அருணும், மாரிகண்ணன் மகன் 21 அரசமுத்து ஆகிய […]
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காத்திருப்பு கூடம் திறக்கப்பட்டுள்ளது. உலகிலுள்ள பணக்கார கோவில்களில் ஒன்று திருப்பதி வெங்கடாஜலபதி கோவில். திருப்பதியில் இருப்பதை போன்று திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் தரிசனம் செய்யும் பக்தர்களின் வசதிக்காக காத்திருப்பு கூடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன் முதல் கட்டமாக பொது தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் அமர்ந்து செல்வதற்கு வசதியாக ராஜகோபுரம் அருகில் இருந்த காவடி மண்டபம் பக்தர்கள் காத்திருக்கும் கூடம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் […]
வேலூர் பழைய பஸ் நிலையத்தில் போதையில் ஒருவர் சுமார் 2 மணி நேரம் பஸ் பயணிகளை அலற விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூரில் உள்ள பழைய பஸ் நிலையத்தில் இன்று காலை ஓருவர் குடித்துவிட்டு பாட்டு பாடி ஆடிக் கொண்டிருந்தார். அப்போது பஸ்சுக்காக காத்திருந்த பயணிகள் இவர் செய்வதை பார்த்து சிரித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் பஸ்ஸை தூக்க முயற்சித்தார். இதனை கிண்டல் செய்யும் பயணிகளை ஆபாச வார்த்தையால் பேசியுள்ளார். இதனால் மக்கள் அங்கிருந்து […]