சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 3 சிறுவர்களைக் போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமானூர் பகுதியில் வசித்து வரும் பெண்ணுக்கு 5 வயதில் மகள் இருக்கின்றார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் மூன்று சிறுவர்கள் 5 வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர். இதனையறிந்த சிறுமியின் தாய் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து அரியலூர் மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ […]
Tag: மாவட்டச்செய்திகள்
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள உடையார்பாளையம் பகுதியில் சங்கர்- சுமதி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு விஜய் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விஜய் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். மேலும் விஜய்க்கு மதுப்பழக்கமும் இருந்துள்ளது. இதனையடுத்து விஜய் தனது தாயிடம் செலவுக்கு பணம் கேட்டுள்ளார். ஆனால் அவரது தாய் பணம் தர மறுத்ததால் விஜய் மிகுந்த மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் மனமுடைந்த விஜய் தனது […]
மணல் கடத்தலில் ஈடுபட்ட வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள தா.பழூர் பகுதியில் தினேஷ் என்பவர் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் தினேஷ் மற்றும் அவரின் உதவியாளர்கள் இடங்கண்ணி அருகே திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு வந்த வேனை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை செய்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகளை பார்த்ததும் வேன் ஓட்டுநர் உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அதன்பின் வேனில் கடத்திச் செல்லப்பட்ட 6 […]
நீரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் கணேசன்- பாப்பாத்தி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதிகளுக்கு 3 மகன்களும் மற்றும் ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் இளைய மகனான ராமேஷ் ஸ்வீட் கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து இவர் வேலையை முடித்துவிட்டு வண்ணான் ஏரியில் குளிக்க சென்றுள்ளார். அதன்பின் நீண்ட நேரமாகியும் ரமேஷ் வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். […]
தண்ணிரில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நக்கசேலம் பகுதியில் முனியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அகிலன் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் அகிலன் தனது தோழர்களான முத்துமணி, மோகன் மாரிமுத்து ஆகியோருடன் அணைக்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது ஆழமான பகுதிக்கு சென்ற அகிலன் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணிரில் மூழ்கிய அகிலனை சடலமாக மீட்டனர். […]
பலத்த சூறை காற்று வீசியதில் சாலையில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் அப்பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்துள்ளது. இதனால் தாண்டிக்குடி- வத்தலகுண்டு மலைப்பகுதியில் இருக்கும் மரம் சாலையின் குறுக்கே விழுந்துவிட்டது. இதுபற்றி தகவல் அறிந்த நெடுஞ்சாலைதுறையினர் அங்கு விரைந்து சென்று சாலையில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக […]
அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடியில் சப்ளை தாசில்தாரான பாலகிருஷ்ணன் என்பவர் பள்ளத்தூர் பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது அப்பகுதியில் செயல்பட்டு கொண்டிருக்கும் ஒரு நவீன அரிசி ஆலையில் 1டன் எடையுள்ள 23 மூட்டை ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் பார்த்துள்ளனர். இதனையடுத்து அந்த ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து அதிகாரிகள் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைத்துவிட்டனர். இந்நிலையில் உணவு கடத்தல் […]
நடைபெற்ற குடிநீர் தொட்டி திறப்பு விழாவிற்கு பல்வேறு அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிறுவயல் ,முத்துப்பட்டினம், நேமம் ஆகிய கிராமத்தில் மாவட்ட கவுன்சில் நிதியிலிருந்து சுமார் 4.6 லட்சம் செலவில் குடிநீர் தொட்டி, குளியல் தொட்டி போன்றவை கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் அதன் திறப்பு விழாவானது நடைபெற்றுள்ளது. இந்த திறப்பு விழாவிற்கு மாவட்ட கவுன்சிலரான திரு. ராதாபாலசுப்ரமணியன் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் இளைஞர் அணியை சேர்ந்த ரவி, ஊராட்சி மன்ற தலைவர்களான மலர்மாணிக்கம் […]
சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பஞ்சம்பட்டி பகுதியில் மோகன், ஆறுமுகம் என்ற வாலிபர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் இரு சக்கர வாகனத்தில் சென்ற மோகன்,ஆறுமுகம் ஆகிய இருவரையும் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன்பின் காவல்துறையினர் நடத்திய சோதனையில் அவர்கள், வைத்திருந்த பையில் தடை செய்யப்பட்ட […]
மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி உரிய ஆவணங்கள் இன்றி இயக்கப்பட்ட 12 சரக்கு வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் சரக்கு வாகனங்களில் அனுமதியின்றி பயணிகளை ஏற்றி செல்வதாக மாவட்ட நிர்வாகத்திற்கு அடிக்கடி புகார்கள் வந்துள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கடப்ரியா திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது வெண்கலம் பகுதியில் பயணிகளை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனத்தை பார்த்த மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்குமாறு போக்குவரத்து அலுவலர் பழனிசாமிக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில் […]
காரின் கண்ணாடியை அடித்து நொறுக்கிய 15 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடி பகுதியில் சந்துரு-வாணி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் குடும்பத்திற்கும் அதே பகுதியில் வசிக்கும் அழகர்சாமி என்பவரின் குடும்பத்திற்கும் முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து முன்விரோதம் காரணமாக அழகர்சாமியின் மகன்களான அஜித், பிரபு மற்றும் அவர்களின் உறவினர்கள் கூட்டமாக சென்று வாணியின் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கியுள்ளனர். இது குறித்து வாணி […]
மாவட்ட ஆட்சியர் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வடமதுரை பகுதியில் சுமார் 3 கோடியே 6 லட்சம் செலவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரான திரு.விசாகன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் வேடச்சந்தூர் எம்.எல்.ஏ-வான காந்திராஜன் என்பவர் முன்னிலை வகித்துள்ளார். இந்நிலையில் விழாவின் வரவேற்புரையை திட்ட இயக்குனர் தினேஷ்குமார் தொடங்கியுள்ளார். […]
பெண்ணிடம் தங்க நகையை பறிக்க முயன்ற மர்மநபர்கள் காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கமலம் என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் கமலம் தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் ஆத்தூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த 2 மர்ம நபர்கள் கமலம் அணிந்திருந்த தங்க நகைகளை பறிக்க முயன்றுள்ளனர். இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட கமலம் தங்க நகையை கையால் பிடித்துக் கொண்டு சத்தம் போட்டுள்ளார். […]
பணத் தகராறு காரணமாக அறக்கட்டளை நிர்வாக இயக்குனரை கல்லால் தாக்கி வாலிபர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் தேவேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அறக்கட்டளை நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ராமசாமி மகன் கருணாநிதி என்பவருக்கும், தேவேந்திரனுக்கும் இடையே அடிக்கடி பண தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கருணாநிதி தேவேந்திரனின் கார் கண்ணாடியை உடைத்ததோடு […]
வாக்காளர் அட்டைகள் விரைவாக வழங்குவதற்காக அச்சிடும் எந்திரங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டுவரப்படுகிறது. தமிழகத்தில் 18 வயது நிரம்பியவர்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுள்ளனர். மேலும் புதிய வாக்காளர்கள் ஆன்லைன் மூலமாகவும் அல்லது வாக்காளர் சேர்க்கை முகாம் மூலமாகவும் வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பிக்கின்றனர். இதன் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெறுகின்றனர். இந்நிலையில் புதிய வாக்காளர் அட்டை புனேவில் இருந்து அச்சிடப்பட்டு கொண்டு வரப்படுவதால் வாக்காளர் அட்டை உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. இதனை சரி செய்ய […]
வாலிபரை கொலை செய்த வழக்கில் கைதான லாரி டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் சில தினங்களுக்கு முன்பு இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி சென்றதில் லாரி டிரைவர் மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்ற மணிகண்டன், அருண் என்பவருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தகராறு முற்றிய போது லாரி டிரைவர் அவர்கள் இருவரையும் சரமாரியாக கத்தியால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். […]
சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்த மூதாட்டியை தொண்டு நிறுவனத்தினர் மீட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் நகரில் மூதாட்டி ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்த ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் தொண்டு நிறுவனத்தினர் மூதாட்டியை தண்ணீர் தெளித்து எழுப்பியுள்ளனர். அதன்பின் அவர்கள் மூதாட்டியிடம் அவரைப் பற்றி விசாரித்தபோது என் மகன் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக இங்கு கொண்டு வந்து விட்டதாக கூறியுள்ளார். இதுபற்றி அரக்கோணம் காவல்துறையினருக்கு தொண்டு நிறுவனத்தினர்கள் தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் […]
மிகவும் குறுகிய வளைவுகளால் அடிக்கடி வாகனங்கள் விபத்துக்குள்ளாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தட்சனேந்தல் விலக்கு பகுதியில் குறுகிய வளைவுகள் காரணமாக அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல்லில் வசிக்கும் மார்க்ஸ் மகாதேவன் என்ற பாதிரியார் தட்சனேந்தல் வளைவு பகுதியில் காரில் வந்து கொண்டிருந்த போது காரானது விபத்துக்குள்ளாகி கவிழ்ந்துள்ளது. இதில் லேசான காயங்களுடன் மார்க்ஸ் மகாதேவன் உயிர் தப்பியுள்ளார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் […]
பெட்ரோல், டீசல், சிலிண்டரின் விலை உயர்வை கண்டித்து பெண்கள் ஒப்பாரி வைத்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சேலம் மாவட்டத்தில் உள்ள ஜலகண்டாபுரத்தில் மாதர் சங்கத்தின் சார்பில் பெண்கள் கேஸ் சிலிண்டரின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒப்பாரி வைத்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு மாதர் சங்க செயலாளராக கவிதா தலைமை தாங்கியுள்ளார். இதனைதொடர்ந்து மாவட்ட பொறுப்பாளர்களான பரமேஸ்வரி, ராசாத்தி ஆகியோர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியுள்ளார்கள். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் சிலிண்டருக்கு […]
சட்ட விரோத செயலில் ஈடுபட்ட வாலிபர்களை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மானூர் பகுதியில் பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுந்தர்ராஜ் என்ற மகன் இருக்கின்றார். இந்நிலையில் சுந்தர்ராஜ் கஞ்சா கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோதமான செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் காவல்துறையினர் சுந்தர்ராஜை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து சுந்தர்ராஜை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவு அளிக்குமாறு நெல்லை காவல்ஆய்வாளர் மணிவண்ணன் மாவட்ட ஆட்சியர் […]
உறவினர் வீட்டிற்கு வந்த சிறுவன் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபுரந்தான் பகுதியில் சீமான்-பூங்கோதை என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு சிவசண்முகம் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் சீமான் தனது குடும்பத்துடன் திருப்பனந்தாள் பகுதியில் இருக்கும் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து சிவசண்முகம் தனது நண்பர்களுடன் திருப்பனந்தாள் ஆற்றிற்கு குளிக்கச் சென்றுள்ளார். அதன் பின் திடீரென தண்ணீரின் வேகம் அதிகரித்ததால் […]
குப்பைத் தொட்டியில் கிடந்த மனித எலும்புக்கூடைப் பார்த்து சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான கொடைக்கானல் பகுதியில் தற்போது ஊடரங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் வந்து குவிகின்றனர். இதனையடுத்து சுற்றுலா பயணிகள் ஜிம்கானா பகுதியில் குப்பை தொட்டியில் வீசப்பட்ட மனித எலும்புக்கூடுகளை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். அதன்பின் கொடைக்கானல் காவல்துறையினருக்கு இது குறித்து தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் குப்பையில் மனித […]
ஏ.டி.எம் கார்டில் இருந்து பணத்தை திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் பகுதியில் ஓமன்ந்த் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ஓமன்ந்த் வேடசந்தூர் ஏ.டி.எம் மையத்தில் 10 நாட்களுக்கு முன்பு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து ஓமன்ந்த் அங்கு வந்த வாலிபர் ஒருவரிடம் தன்னுடைய பணத்தை ஏ.டி.எம்-யில் எடுத்து தருமாறு கூறியுள்ளார். அதன்பின் பணம் எடுத்துக் கொடுத்த வாலிபர் ஏ.டி.எம் கார்டு மற்றும் ரகசிய எண்ணை தெரிந்து கொண்டு கார்டை பறித்துச் சென்றுள்ளார். […]
அட்டகாசம் செய்த ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் விரட்டியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் சுற்றுவட்டாரப் பகுதியில் பல்வேறு கிராமங்கள் வனப்பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருக்கும் காட்டெருமை, காட்டுயானைகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருவது வாடிக்கையாக உள்ளது. இந்நிலையில் பேத்துப்பாறை ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை அட்டகாசம் செய்ததை பார்த்த மக்கள் பயத்தில் ஓட்டம் பிடித்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர். அதன்பின் […]
கீழடியில் நடைபெறும் அருங்காட்சியகத்தின் கட்டிட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்துள்ளார். சிவகங்கை மாவட்டத்திலுள்ள கீழடி பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆராய்ச்சியில் கிடைக்கும் அரிய வகை பொருள்கள் அனைத்தையும் பொதுமக்களின் பார்வைக்கு விரைவில் வைக்கப்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கீழடி பகுதியில் அருங்காட்சியகம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து அருங்காட்சியக கட்டிட பணிகள் எவ்வாறு நடைபெறுகின்றது என சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதனன் ரெட்டி மற்றும் […]
குடிநீர் வழங்காததை கண்டித்து கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரமங்கலம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் தொட்டி மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் தற்போது குடிநீர் தொட்டியானது சேதம் அடைந்திருப்பதால் தண்ணீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. அதன்பின் ஆழ்துளை கிணற்றின் மூலம் தண்ணீர் வருவதற்காக பழுதான மோட்டாருக்கு பதில் ஊராட்சி நிர்வாகம் ஒன்றரை லட்சத்திற்கு புதிய மோட்டார் வாங்கி பொருத்தியுள்ளது. ஆனாலும் தங்கள் பகுதிக்கு இன்னும் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை […]
கர்நாடகாவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உருவபொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவிரி உரிமை மீட்பு குழுவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரான மணியரசன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட செயலாளர் வைகரை இந்த போராட்டத்தில் முன்னிலை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் கர்நாடகாவில் புதிதாக அணை கட்டினால் தமிழகத்திற்கு தண்ணீர் வரத்து […]
லாரியில் மணல் கடத்திய நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விளாம்பட்டி பகுதியில் வெள்ளைச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலாஜி, கார்த்தி, மூர்த்தி என்ற மூன்று மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்கள் காரையூர் பகுதியில் லாரியில் மணல் கடத்திச் சென்றுள்ளனர். அப்போது தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட கிராம நிர்வாக ஊழியர்களான சுரேஷ் ,முருகராஜ் ஆகியோர் லாரியை நிறுத்தியுள்ளனர். அதன்பின் அவர்கள் கிராம அலுவலர்கள் மீது லாரியை ஏற்றுவது போல கொலை முயற்சியில் […]
குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் குழந்தையின் உடலை மீட்டு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள கிச்சிப்பாளையம் பகுதியில் மீனா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மீனா தனது வீட்டின் அருகில் இருக்கும் குப்பை தொட்டியில் குப்பை கொட்டுவதற்காக சென்றுள்ளார். அப்போது குப்பைத் தொட்டியில் இருந்த பையில் பச்சிளம் குழந்தையின் உடல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் மீனா காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார் அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து […]
ரயில் மோதியதால் 6 மாடுகள் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடி வழியாக ராமேஸ்வரத்திற்கு பயணிகள் ரயில் சென்றுள்ளது. அப்போது காரைக்குடி பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் மாடுகள் நின்று கொண்டிருந்தன. அதனை கவனித்த ரயில் என்ஜின் டிரைவர் தொடர்ந்து அலாரம் அடித்துக்கொண்டு ரயிலின் வேகத்தை குறைத்துள்ளார். ஆனால் மாடுகள் அலாரம் சத்தத்தைக் கேட்டு அங்கிருந்து நகராமல் இருந்தது. இதனால் ரயில் தண்டவாளத்தில் நின்ற மாடுகள் மீது மோதியுள்ளது. இதனையடுத்து தண்டவாளத்தில் நின்ற ஆறு […]
கந்து வட்டி கொடுமையை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கந்து வட்டி கொடுமையை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்னால் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது . இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு மாவட்ட செயலாளர் முத்துசாமி என்பவர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டுள்ளனர். இதனையடுத்து அய்யம்பாளையம், பெரும்புள்ளி […]
ஆதார் கார்டு திருத்தம் செய்யும் மையத்தில் கூடுதல் பணியாளர்களை பணியமர்த்துமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் ஆதார் கார்டு திருத்தம் செய்யும் மையம் ஒன்று அமைந்துள்ளது. இந்த மையத்திற்கு தினமும் ஆதார் கார்டு திருத்தம் செய்வதற்காக பல்வேறு பொது மக்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஆதார் மையத்தில் குறைந்தளவே பணியாளர்கள் இருப்பதால் பொதுமக்கள் அதிக நேரம் காத்திருக்கின்றனர். மேலும் இன்டர்நெட்டின் வேகம் குறைவாக இருப்பதால் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் ஆதார் கார்டில் இருக்கும் […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகளை விரைந்து வழங்க வலியுறுத்தி இளைஞர் மன்றத்தின் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் நடைபெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் தேவையான அளவு தடுப்பூசிகளை வழங்க வேண்டுமென இளைஞர் மன்றத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இளைஞர் மன்ற தலைவர் பாலன் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். மேலும் ஒன்றியச் செயலாளராக இருக்கும் திருமணி என்பவர் முன்னிலை வகித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளரான சுகுமாரன் நகர செயலாளர் முத்துவேல் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் […]
சின்ன சங்கரன் கோவிலில் ஆடித்தபசை முன்னிட்டு கொடியேற்றும் விழா கோவில் நிர்வாகத்தினரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பாசமுத்திரம் பகுதியில் உள்ள சின்ன சங்கரன்கோவிலில் ஆடித்தபசை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் கோவிலின் அறங்காவலரான முருக சாமிநாதன், நிர்வாக குழு உறுப்பினர்களான வேலாயுதம், ராஜகோபால், வள்ளிநாயகம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து கோவில் நிர்வாக அதிகாரிகள் கொரோனா ஊடரங்கு காரணமாக கொடியேற்றும் விழா பக்தர்கள் இன்றி நடைபெற்றதாக தெரிவித்துள்ளனர். மேலும் ஆடித்தபசின் முக்கிய நிகழ்வுகளான […]
வாழை தோட்டத்தில் புகுந்து அட்டகாசம் செய்த யானைகளை வனத்துறையினர் விரட்டியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆடலூர் பகுதியில் பிச்சைமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராமுத்தாய் என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் இவர்களுக்கு சொந்தமான தோட்டத்திற்குள் புகுந்த காட்டு யானைகள் அங்கிருந்த வாழை மரங்களை நாசப்படுத்தியது. இதனையடுத்து இன்று காலையில் வழக்கம்போல் தோட்டத்திற்கு வந்த ராமுத்தாய் காட்டு யானைகள் முகாமிட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் இது குறித்து ராமுத்தாய் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து […]
தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குரும்பலூர் பகுதியில் முகமது ஹனிபா என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் அடிக்கடி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றும்அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதனால் மனமுடைந்த முஹம்மது ஹனிபா தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து மயங்கிய நிலையில் கிடந்த […]
தமிழகத்தில் கொரோனா ஊடரங்கில் கூடுதல் தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இரண்டாவது அடியின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மே 24-ஆம் முழு ஊடரங்கு போடப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இதனால் ஊடரங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி இரவு 8 மணி வரை செயல்படும் கடைகள் 9 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பெரம்பலூர் மாவட்டத்தில் 9 மணி வரை அனைத்து கடைகளும் […]
விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு திருவோடு ஏந்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் விவசாயிகள் சங்கத்தினர் சார்பில் ஏராளமான விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு திருவோடு ஏந்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தலைவர் விஸ்வநாதன் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பருத்தி போன்ற பயிர்களுக்கு சரியான விலையை நிர்ணயம் செய்யுமாறும், நெல்லை அரசு கொள்முதல் செய்வதுபோல தானிய பயிர்களுக்கும் கொள்முதல் நிலையங்கள் அமைத்து […]
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் திருவுருவப் படத்தை உதடுகளால் கல்லூரி மாணவன் வரைந்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வாலிகண்டபுரம் பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நரசிம்மன் என்ற மகன் இருக்கின்றார். மேலும் நரசிம்மன் பட்டப் படிப்பான கட்டிட வரைகலை படிப்பைத் தனியார் கல்லூரியில் படிக்கின்றார். இந்நிலையில் நரசிம்மன் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என நினைத்துள்ளார். இதனையடுத்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் திருவுருவப்படத்தை வெள்ளை நிறத் துணியில் வாட்டர் கலர் […]
குடும்பத்தகராறு காரணமாக தாய் தனது மகளுடன் சேர்ந்து தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பந்தட்டை பகுதியில் சத்திராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகந்தி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு சுபஸ்ரீ என்ற 2 வயது மகள் இருக்கிறார். இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக கணவன் மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சுகந்தி தனது குழந்தையுடன் உடல் முழுவதும் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து […]
சட்டவிரோதமாக மணல் கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மணி டிராக்டரில் மணல் ஏற்றி கொண்டு கீரனூர் சாலை பகுதியில் சென்றுள்ளார். அப்போது அங்கு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் டிராக்டரில் மணல் கொண்டு சென்ற மணியை நிறுத்தியுள்ளனர். இதனையடுத்து மணி உரிய அனுமதி இன்றி டிராக்டரில் மணலை கடத்திச் சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் சட்டவிரோதமாக மணல் […]
சம்பளம் வழங்காததால் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப் பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி பணியாளர்களுக்கு மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படாததால் ஒன்றிய அலுவலகம் முன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு ஊரக வளர்ச்சி பொதுச்செயலாளர் கே. ஆர்.கணேசன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட நபர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.இது குறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது […]
கல்குவாரி செயல்பட அனுமதிக்க மாட்டோம் எனக்கூறி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கிராமம் நடுமண்டலம் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் போரட்டத்தில் ஈடுப்பட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். பின்பு பொதுமக்கள் தங்கள் கோரிக்கை கலெக்டரிடம் மனுவை கொடுத்துவிட்டு அங்கிருந்து போராட்டத்தை கைவிட்டு சென்றனர். இந்நிலையில் பொதுமக்கள் அந்த மனுவில் எங்கள் கிராமத்தில் […]
பெண்கள் அரசு டவுன் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய கட்டணமில்லா டிக்கெட்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்ற திரு மு.க ஸ்டாலின் அவர்கள் முதற்கட்டமாக 5 முக்கிய அம்சங்களில் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி அரசு டவுன் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதி கிராமம் ஆகும். அந்த கிராமப் பகுதியில் இருந்து வரும் டவுன் பேருந்துகளில் பெண்களின் கூட்டம் அலைமோதியது. இதனையடுத்து பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு கட்டணமில்லா […]
விலை வீழ்ச்சியின் காரணமாக எதிர்பார்த்த அளவுக்கு வியாபாரம் இல்லாததால் குப்பையில் கொய்யாப்பழங்களை விவசாயிகள் கொட்டிச் சென்றுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஆய்க்குடி பகுதியில் கொய்யாபழங்கள் சாகுபடி அதிகமாக நடைபெற்று வருகிறது. இங்கு சாகுபடி செய்யப்பட்ட கொய்யாப் பழங்கள் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது. தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ளதால் ஆயக்குடி சந்தை திறக்கப்பட்டு வியாபாரிகள் கொய்யாப்பழ விற்பனையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆனால் எப்போதும் ரூபாய் 500 முதல் 1000 வரை விற்பனையாகும் 20 கிலோ கொய்யாபழங்கள், தற்போது […]
சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்தில் அடிக்கடி சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை நடைபெற்று வந்துள்ளது. இதனையடுத்து காவல்துறை ஆய்வாளர் மணிவண்ணன் சட்டத்தை மீறி மது பாட்டில்கள் விற்பனை செய்வோர் மீது வழக்குப்பதிந்து அவர்களை கைது செய்ய வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில் காவல்துறையினர் அனைத்து பகுதிகளிலும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் மது பாட்டில்களை விற்பனை செய்த குற்றத்திற்காக காவல்துறையினர் […]
மர்மமான முறையில் இறந்த அரசு ஊழியரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு சுமதி என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ரவி பல மணி நேரமாக வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சுமதி ரவியை பல்வேறு இடங்களில் […]
மதுபான கடைக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள பரமத்திவேலூர் பகுதியில் மதுபான கடை ஒன்று அமைந்துள்ளது.இந்த மதுபான கடையில் மேற்பார்வையாளராக அதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வனும், விற்பனையாளராக சண்முகமும் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்ச்செல்வன் திருச்சிக்கு சென்றதால் சண்முகம் மட்டும் மதுபான கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.அதன் பின் மறுநாள் காலை மதுபான வந்த சண்முகம் கடையின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். […]
மாணவர்கள் சுமார் ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு குறுங்காடு அமைத்துள்ள நிகழ்வு பலரின் பாராட்டையும் பெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கீரமங்கலம் பகுதியில் லட்சக்கணக்கான மரங்கள் புயலின் தாக்கத்தின் காரணமாக வேரோடு சாய்ந்து விழுந்து அழிந்து விட்டன. இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் சாலை ஓரங்களில் பல்வேறு மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இந்நிலையில் அஞ்சுரங்காடு கிராமத்தில் மாணவர்கள் இணைந்து மரக்கன்றுகளை வளர்த்து குறுங்காடு அமைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். இதற்காக தன்னார்வ […]
விவசாயி உயிரிழந்ததை அடுத்து தவறான சிகிச்சை அளித்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள இளம்பிள்ளை பகுதியில் அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் இருந்துள்ளார்.இந்நிலையில் மணிகண்டன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனது வீட்டின் அருகில் சிவகுமார் என்பவர் நடத்தும் கிளினிக்கிற்கு சென்று ஊசி போட்டுள்ளார்.இதனையடுத்தது மணிகண்டனின் உடல்நிலை மோசமானதால் உறவினர்கள் அவரை அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை […]