Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

புதுச்சேரியில் முழு அடைப்பு போராட்டம்…. பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் அவதி…!!

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து தர மத்திய அரசை வலியுறுத்தி அதிமுக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றதால் தனியார் பேருந்துகள் முழுமையாக ஓடவில்லை. ஒரு சில பேருந்துகள் மட்டுமே போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டது. இந்நிலையில் கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு தனியார் பேருந்துகள் இயக்கப்படாததால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னைக்கு இயக்கப்பட்ட அரசு பேருந்துகளில் ஏராளமான பயணம் செய்ததால் கூட்டம் அதிகமாக இருந்தது. சிலர் கடலூரில் இருந்து புதுச்சேரி சென்ற அரசு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தாயிடம் அழுத 4-ஆம் வகுப்பு மாணவி….. முதியவர் போக்சோவில் கைது…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அப்பட்டுவிளை பகுதியில் கூலி வேலை பார்க்கும் செல்வராஜன் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவி கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது செல்வராஜன் சிறுமியை தடுத்து நிறுத்தி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் குளச்சல் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தடுப்பூசி காரணமில்லை”…. பச்சிளம் குழந்தை திடீர் இறப்பு…. பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்நத்தம் பகுதியில் ஆட்டோ டிரைவரான விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரித்வீர் என்ற மகன் உள்ளான். இந்நிலையில் கர்ப்பிணியான சுகன்யாவுக்கு கடந்த 50 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு குருபிரசாத் என பெயரிட்டனர். நேற்று முன்தினம் சுகன்யா பிள்ளையார் நத்தம் அங்கன்வாடி மையத்தில் நடந்த மருத்துவ முகாமிற்கு சென்றார். அங்கு குழந்தையின் 2 தொடைகளில் தலா ஒரு ஊசியும், […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை வைத்து பாலியல் தொழில்…. ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் உள்பட 9 பேர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தொழிற்பேட்டை பகுதியில் இருக்கும் வீட்டில் 16 வயது சிறுமியை அடைத்து வைத்து பாலியல் தொழில் செய்வதாக அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபாடுபவர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட வீட்டில் அதிரடி சோதனை நடத்தி 3 பெண் தரகர்கள், 5 வாலிபர்கள் ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் 16 வயது சிறுமியை மீட்டு விசாரித்தனர். அந்த விசாரணையில் கரூர் பகுதியை சேர்ந்த மேகலா, மாயா, […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ரூ.80 லட்சம் கேட்டு சிப்ஸ் கடைக்காரர் கடத்தல்…. 6 பேர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் கூத்துப்பாடி மடம் பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் மும்பையில் சிப்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பரவல் காரணமாக ஊருக்கு வந்த விஸ்வநாதன் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் விஸ்வநாதன் தனது மனைவி மஞ்சுளாவிடம் பென்னாகரம் செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார் ஆனால் அவர் வீட்டிற்கு திரும்பி வராததால் அதிர்ச்சியடைந்த மஞ்சுளா தனது கணவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டார். அப்போது செல்போன் ஸ்விட்ச் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குடிநீருடன் கழிவு நீர் கலப்பதாக புகார்…. சிரமப்படும் பொதுமக்கள்…. சுகாதாரத்துறையினரின் தகவல்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு வி.எம்.எஸ் காலனி பகுதியில் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. அப்போது குடிநீருடன் கழிவு நீர் கலந்து வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது, கடந்த சில நாட்களாகவே குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது எனவே பேரூராட்சி நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். இதுபற்றி சின்னாளப்பட்டி பேரூராட்சி சுகாதாரத்துறையினர் கூறியதாவது, குடிநீர் கலங்களாக வருவதாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

போலி ஆவணம் தயாரித்தார்களா…? தனியார் மருத்துவமனையில் “24.50 லட்சம் ரூபாய் மோசடி”…. நிர்வாகி அளித்த புகார்…!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள கே.கே. நகரில் தனியார் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனை நிர்வாகி டாக்டர் முத்துவேல் ராஜன் என்பவர் மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, எங்கள் மருத்துவமனையில் திருமால்புரம் தங்கவேல் நகரை சேர்ந்த முத்து மனைவி அங்கம்மாள், சக்தி நகரை சேர்ந்த ஜெயசீலனின் மனைவி வைடூரியம் ஆகிய இரண்டு பேரும் காசாளர்களாக பணிபுரிந்து வந்தனர். இந்நிலையில் அங்கம்மாளும், வைடூரியமும் இணைந்து போலியான ஆவணம் தயாரித்து 24.5 லட்சம் மோசடி செய்துள்ளனர். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பயிர்களை நாசம் செய்த காட்டு யானைகள்…. பொதுமக்களை விரட்டியதால் பரபரப்பு…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிக்கனபள்ளி வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக 3 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்நிலையில் யானைகள் மேலுமலை சூளகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் முகாமிட்டு விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்கிறது. நேற்று காலை எண்ணெகொள் புதூர் கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானைகள் விவசாய பயிர்களை தின்றும், மிதித்தும் நாசப்படுத்தியதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து பொதுமக்களும், விவசாயிகளும் இணைந்து யானைகளை விரட்ட முயன்றனர். அப்போது யானைகள் பொதுமக்களை விரட்டிய சம்பவம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தண்டவாளத்தில் கிடந்த காருக்குள் சிக்கிய 3 பேர்…. டார்ச் லைட் அடித்து ரயிலை நிறுத்திய பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் ரீத்தாபுரம் பகுதியில் வர்கீஸ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வர்கீஸ் தனது மகள் ஆஷா, பேத்தி சரியா ஆகியோருடன் திங்கள்சந்தையில் இருந்து காரில் அழகிய மண்டபம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர்கள் நெய்யூர் அருகே ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த கார் 25 அடி ஆழமுள்ள பள்ளத்திற்குள் பாய்ந்து தண்டவாளத்தில் கிடந்தது. அந்த சமயம் நாகர்கோவில் நோக்கி பரசுராம் எக்ஸ்பிரஸ் ரயில் சென்றது. இதனை பார்த்த பொதுமக்கள் டார்ச்லைட் அடித்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மண் கடத்தல் குறித்து புகார் அளித்ததாக கருதி…. தே.மு.தி.க ஒன்றிய செயலாளரை தாக்கிய கும்பல்…. வைரலாகும் வீடியோ…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஏ.மரூர் கிராமத்தில் தே.மு.தி.க ஒன்றிய செயலாளரான சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி நீலாவதி ஊராட்சி மன்ற துணைத் தலைவியாக இருக்கிறார். இந்நிலையில் சேகருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சத்தியமூர்த்தி என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. சத்தியமூர்த்தி சிலருடன் இணைந்து கிராமத்திற்கு அருகே கிராவல் மண் கடத்தியதாக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு புகார்கள் சென்றது. இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் சத்தியமூர்த்தியை அழைத்து எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனால் கோபமடைந்த சத்தியமூர்த்தி, சேகர் தான் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“தந்தை செய்து வந்த தொழில்”…. நஷ்டம் ஏற்பட்டதால் மகன் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி மண்டபம் தெருவில் விவசாயியான ஜெயச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தந்தை நாராயணன் கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் கடந்த ஒரு வருட காலமாக தந்தை செய்து வந்த விவசாய தொழிலை ஜெயச்சந்திரன் செய்து வந்துள்ளார். ஆனால் விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் ஜெயச்சந்திரன் கடன் தொந்தரவால் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் கரும்புக்கு பயன்படுத்தும் பூச்சி மருந்தை தின்று ஜெயச்சந்திரன் வயலில் மயங்கி கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து மீது மோதிய கார்…. அண்ணன்-தம்பி உள்பட 5 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!!

அரசு பேருந்து மீது கார் மோதிய விபத்தில் அண்ணன் தம்பி உள்பட 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் அண்ணன் தம்பியான மணிகண்டன்(25), பாலமுருகன்(21) ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அண்ணன் தம்பி இருவரும் நண்பர்களான நவீன்(19), விஷ்வா(20) ஆகியோருடன் பழனி முருகன் கோவிலுக்கு காரில் சென்றுள்ளனர். இந்த காரை இஸ்மாயில்(19) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி பிரிவு அருகே சென்ற போது […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த வேன்…. இடுபாடுகளில் சிக்கி அலறிய ஐயப்ப பக்தர்கள்…. போலீஸ் விசாரணை…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூரில் இருந்து 15-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் வேனில் சபரிமலை நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்த பேருந்து தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாளையம்புதூர் தேசிய நெடுஞ்சாலை கூட்ரோடு அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் ஐயப்ப பக்தர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி அலறி சத்தம் போட்டனர். சிலர் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து அறிந்த போலீசாரும், சுங்க சாவடி ரோந்து படையினரும் சம்பவ இடத்திற்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

விடுதியில் 10- ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை…. கடிதத்தை கைப்பற்றிய போலீசார்…. பரபரப்பு சம்பவம்…!!!

பத்தாம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனுமந்தபுரம் பகுதியில் பெயிண்டரான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இவரது மனைவி தீபா இறந்துவிட்டார். இந்த தம்பதியினருக்கு குரு பிரகாஷ்(15), மனோ(14) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இருவரும் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் தங்கி இருந்து ராயக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 10-ஆம் வகுப்பு மற்றும் 9-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளனர். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

120 கடைகளுக்கு சீல்…. மாநகராட்சி அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!!

சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 4000-க்கும் மேற்பட்ட கடைகள் இயங்கி வருகிறது. இந்த கடைகளுக்கு அறிவிப்பு நோட்டீஸ் வழங்கி உரிமம் பெறவும், தொழில் வரி செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. அதனை மீறி வரி செலுத்தாத கடைகளை மூடி சீல் வைக்குமாறு சென்னை மாநகராட்சி கமிஷனர் சுகன்தீப் சிங் பேடி அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி ராயபுரம் மண்டல உதவி வருவாய் அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் சென்னை பூக்கடை நைனியப்பன் தெரு, தங்கசாலை தெரு, அண்ணா […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

விதிமுறைகளை மீறி வந்த ஓட்டுநர்…. 10-க்கும் மேற்பட்டோர் காயம்…. கோர விபத்து…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் தனியார் நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களை வேன் ஒன்று ஏற்றி கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதேபோல் மற்றொரு வேன் தனியார் நிறுவன ஊழியர்களுடன் ஶ்ரீபெரும்புதூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் பாப்பான் சத்திரம் அருகே சென்றபோது போக்குவரத்து நெரிசல் காரணமாக விதிமுறைகளை மீறி ஸ்ரீபெரும்புதூர் நோக்கி வந்த வேன் ஓட்டுநர் சாலையின் எதிர் திசையில் வேகமாக சென்றுள்ளார். அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு வாகனங்களும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கூகுள் மேப்பை பார்த்து லாரி ஓட்டிய டிரைவர்…. கடலூர் பேருந்து நிலையத்திற்குள் சென்றதால் பரபரப்பு….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள சிப்காட் ரசாயன தொழிற்சாலையில் இருந்து மூலப்பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை முருகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் குறுக்கு வழியை தேடிய முருகன் கூகுள் மேப் உதவியை நாடியுள்ளார். அதன்படி கூகுள் மேப் மூலம் முருகன் புதுநகர், இம்பீரியல் சாலை வழியாக லாரன்ஸ் ரோட்டுக்கு வந்தார். அங்கு ஒரு சுரங்கப்பாதை இருந்தது. அப்போது அங்கிருந்து ஆட்டோ ஓட்டுநர்கள் கனரக வாகனங்கள் இந்த வழியாக செல்ல முடியாது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மான் இறைச்சி சமைத்து விற்பனை…. ஹோட்டல் மேலாளர் உள்பட 3 பேர் கைது…. வனத்துறையினரின் நடவடிக்கை…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள குள்ளட்டி வனப்பகுதியில் ஒட்டி அமைந்துள்ள ஹோட்டலில் கேரளாவைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் குடிசலூரை சேர்ந்த மல்லேசன், மாதேஷ் ஆகியோர் ஹோட்டலில் மான் இறைச்சி விற்பனை செய்வதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி ஓசூர் வனகோட்டை வனக்காப்பாளர் கார்த்திகேயனி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய போது பிரசாந்த், மல்லேசன், மாதேஷ் ஆகிய 3 பேரும் இணைந்து மான்களை வேட்டையாடி ஹோட்டலில் சமைத்து விற்பனை செய்தது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களுடன் மது அருந்திய ரவுடி…. மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை விநாயகபுரம் 10-வது தெருவில் ரவுடியான ராஜா(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேதாஜி நகர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த தேசிங்கு(30), காசிமேடு ஜீவரத்தினம் பகுதியை சேர்ந்த குகன்(27) ஆகியோருடன் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் பழைய மீன் ஏலம் விடும் இடத்தில் அமர்ந்து மது குடித்துள்ளார். இந்நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணனிடம் ராஜா மயங்கி கிடப்பதாக குகனும், தேசிங்குவும் தெரிவித்தனர். பின்னர் போலீசார் அங்கு சென்று பார்த்த போது […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மகளின் படிப்பு செலவிற்காக வாங்கிய பணம்…. கந்து வட்டி கேட்டு மிரட்டிய பெண்…. போலீஸ் விசாரணை…!!

கந்து வட்டி கேட்டு மிரட்டல் விடுத்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள அரவேனு கீழ்கேரி கிராமத்தில் சந்தானம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சர்மிளா என்ற மனைவி உள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சர்மிளா தனது மகளின் படிப்பு செலவிற்காக கோர்ஹவுஸ் பகுதியில் வசிக்கும் பூங்கொடி என்பவரிடம் 40 ஆயிரம் ரூபாய் கடனாக கேட்டுள்ளார். அதற்கு பூர்த்தி செய்யப்படாத இரண்டு காசோலைகள், ப்ரோ நோட் ஆகியவற்றில் கையெழுத்து பெற்றுக் கொண்டு பூங்கொடி அந்த […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மகன்கள் தான் காரணமா….? ரயில்வே பாதுகாப்பு படை வீரர் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்…!!!

ரயில்வே பாதுகாப்பு படை வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள காட்டுக்கோட்டை நேரு நகரில் அண்ணாதுரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஜோலார்பேட்டையில் ரயில்வே பாதுகாப்பு படை வீரராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு நரேஷ் குமார்(27), நிர்மல் குமார்(25) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் மகன்கள் இருவரும் வேலைக்கு செல்லாமல் இருந்ததால் மன உளைச்சலில் இருந்த அண்ணாமலை விடுமுறை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

போலீஸ் கூண்டில் ஏறி ரகளை…. மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட வாலிபர்…. திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பரபரப்பு….!!!

போலீஸ் கூண்டில் ஏறி ரகளை செய்த வாலிபர் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் அருகே இருக்கும் எம்.ஜி.ஆர் சிலையை ஒட்டி போலீஸ் கூண்டு அமைந்துள்ளது. நேற்று அதிகாலை 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் போலீஸ் கூண்டில் ஏறி நின்று தன்னை சிலர் தாக்கியதாக கூறி சத்தம் போட்டு ரகளை செய்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் கீழே இறங்கி வருமாறு கூறியதற்கு அந்த வாலிபர் மறுப்பு தெரிவித்து தொடர்ந்து சத்தம் போட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புதிதாக வாங்கிய வீட்டில் இறந்து கிடந்த “மத்திய அரசு அதிகாரி”…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி கௌரி பேட்டை பகுதியில் பால்பாண்டி(58) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சி.வி.ஆர்.டி.இ- யில் அதிகாரியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் பால்பாண்டி ஆவடி ஜே.பி எஸ்டேட் 4-வது தெருவில் புதிதாக ஒரு வீடு வாங்கியுள்ளார். அங்கு பழுது பார்க்கும் பணியால் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் அந்த வீட்டிற்கு சென்ற பால்பாண்டி திரும்பி வரவில்லை. இந்நிலையில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குழந்தைக்கு பால் கொடுத்த தாய்…. திடீரென நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!!

மூச்சு திணறல் ஏற்பட்டு 3 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஆட்டையாம்பட்டி நேருஜி தெருவில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தேவிக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தேவி நேற்று முன்தினம் தனது குழந்தைக்கு பால் கொடுத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் உடனடியாக குழந்தையை சேலம் அரசு மருத்துவமனைக்கு […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

இரை தேடி வந்த போது…. பரிதாபமாக இறந்த காட்டெருமை…. கயிறு கட்டி மீட்ட தீயணைப்பு வீரர்கள்….!!

கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் சிங்கம்பட்டு காட்டுப்பகுதியில் இருந்து இரை தேடி காட்டெருமை வெளியே வந்தது. இந்நிலையில் மூலக்காடு கிராமத்தில் வசிக்கும் குமரேசன் என்பவரது விவசாய கிணற்றில் காட்டெருமை எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. பின்னர் தண்ணீரில் மூழ்கி காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது. இதனை பார்த்த குமரேசன் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் காட்டெருமையின் உடலை கயிறு கட்டி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியுடன் பழக்கம்…. மிரட்டி பணம் பறித்த வாலிபர்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மதுரவாயல் சத்தியமூர்த்தி நகரில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அரசு பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டதால் சிறுமியின் பெற்றோர் ஆன்லைன் வகுப்பில் படிப்பதற்காக விலை உயர்ந்த செல்போனை வாங்கி கொடுத்துள்ளனர். அந்த போனில் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை சிறுமி பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் குத்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவரான ஜார்ஜ் (19) என்பவருடன் சிறுமிக்கு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

சம்பள பணத்தை வாங்கிய தொழிலாளி…. ஓடும் பேருந்தில் நடந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!!

ஓடும் பேருந்தில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள தாராநல்லூர் காமராஜ் நகரில் சிவசந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் காந்தி மார்க்கெட்டில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வேலை முடிந்து 500 ரூபாய் சம்பள பணத்தை வாங்கிக்கொண்டு சொந்த வேலை காரணமாக சிவசந்திரன் நண்பருடன் அரசு பேருந்தில் ஏறி பயணம் செய்துள்ளார். இந்நிலையில் தெப்பக்குளம் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது அருகில் நின்று கொண்டிருந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கார் மீது மோதிய லாரி…. முதியவர் பலி; 6 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

கார் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் பலியான நிலையில், 6 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள வளந்தாங்கோட்டை பகுதியில் வசிக்கும் 7 பேர் கரூர் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் க.ஒத்தக்கடை அருகே சென்ற போது ஈரோடு நோக்கி வந்த லாரியும், காரும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ரவிக்குமார் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கார்த்திக், செந்தில், […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“இப்போ வாங்கி தர முடியாது” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லாறை கைதக்கல் காலணியில் கூலித் தொழிலாளியான செல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரவணன், சஜின்(20) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் சஜின் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து விட்டு வெல்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சஜின் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்கி தருமாறு தனது தந்தையிடம் கேட்டுள்ளார். அதற்கு புதிதாக வீடு கட்டியதால் பண நெருக்கடியில் இருக்கிறோம். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மலைப்பாதையில் கடும் பனிமூட்டம்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…. போலீசாரின் அறிவுரை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறையில் நேற்று காலை கடும் பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிர செய்தபடி வாகனங்களை ஓட்டி சென்றனர். இதனையடுத்து கடும் குளிரால் பொதுமக்கள் வீடுகளுக்குள்ளையே முடங்கினர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது, பொதுவாக கவர்க்கல் எஸ்டேட் பகுதியில் மட்டுமே பனிமூட்டம் நிலவும். ஆனால் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக வால்பாறை-பொள்ளாச்சி மலை பாதையில் அதிகமாக பனிமூட்டம் காணப்படுகிறது. எனவே சுற்றுலாப் பயணிகள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு….. சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் பெருஞ்சாணி, சிற்றாறு, பேச்சிபாறை ஆகிய அணைகள் நிரம்பி வழிகிறது. பேச்சிப்பாறை அணையில் இருந்து வினாடிக்கு 316 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதால் கோதை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. விடுமுறை தினமான இன்று சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்காக வந்தனர். ஆனால் தடை விதிக்கப்பட்டிருந்ததால் சுற்றுலா பயணிகள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“அலுவலக பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்” தூய்மை பணியில் ஈடுபட்ட மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள நாகர்கோவிலில் இருக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தூய்மை பணி மேற்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், ஆயுதப்படை போலீசாருடன் இணைந்து அலுவலக வளாகத்தின் முன்புறத்தில் இருக்கும் புதர்களை அகற்றி, தேவையின்றி கிடந்த பொருட்களை அப்புறப்படுத்தினார். இதனையடுத்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பை மற்றும் கழிவு பொருட்களை அகற்றியுள்ளனர். இதுபற்றி போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் கூறியதாவது, பராமரிப்பின்றி கிடந்த கட்டிடத்தை புதுப்பித்து அலுவலக பயன்பாட்டிற்கு கொண்டு வர […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விவசாய பொருட்களை வாங்கி….. பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது…. போலீஸ் அதிரடி….!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் பகுதியில் மகேந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் விவசாயிகளிடம் நெல் மற்றும் இயல் மூட்டைகளை வாங்கி தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவரிடம் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மகேந்திரன் சுமார் 8000 மூட்டை விவசாய பொருட்களை 62 லட்சத்து 64 ஆயிரத்து 628 ரூபாய்க்கு ஆனந்திடம் விற்பனை செய்துள்ளார். ஆனால் ஆனந்த் பணத்தை கொடுக்காமல் மோசடி செய்துவிட்டார். இதுகுறித்து மகேந்திரன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

செல்போனை பறித்த ஓட்டுநர்…. பின்தொடர்ந்து வந்த மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

பள்ளி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த ஓட்டுனர் கைது செய்யப்பட்டார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மதுக்கரை பகுதியில் 15 வயதுடைய சிறுமி 10- ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சிறுமிக்கும், அதே பகுதியில் வசிக்கும் வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து பேசியுள்ளனர். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ஓட்டுனரான குணசேகரன் என்பவர் மாணவியை ஒருதலையாக காதலித்து அவரை பின்தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது மாணவி வேறு ஒரு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“செல்பி” புகைப்படத்தை கணவருக்கு அனுப்பிய நபர்….. கர்ப்பிணி பெண் தற்கொலை முயற்சி…. போலீஸ் வலைவீச்சு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளி கிழங்குவிளை பகுதியில் பிஜூ (38) என்பவர் வசித்து வருகிறார். இவர் பேன்சி கடை நடத்தி வருகிறார் இந்த கடையில் 20 வயதுடைய இளம்பெண் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பெண்ணை மிரட்டி அருகில் நிற்க வைத்து பிஜூ செல்போனில் செல்பி எடுத்து வைத்துள்ளார். அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆனது. தற்போது இளம்பெண் 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாலும், பிஜூவின் நடவடிக்கை சரியில்லாததாலும் இனி வேலைக்கு வரமாட்டேன் என கூறியுள்ளார். இதனால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“3டி பிரிண்ட் டெக்னாலஜி உதவியுடன் ரோபோட்” புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான போட்டி…. வெற்றி பெற்ற மாணவர்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் என்.பி.ஆர் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மதுரை தியாகராஜர் கல்லூரியில் தனியார் அமைப்பின் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான போட்டியில் கலந்து கொண்டனர். இந்நிலையில் கழிவு நீர் குழாய், பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்வதற்கு மனிதர்களை பயன்படுத்துவதற்கு பதிலாக 3டி பிரிண்ட் டெக்னாலஜி உதவியுடன் ரோபோட்டை வடிவமைத்து மாணவர்கள் காட்சிப்படுத்தியுள்ளனர். இந்த படைப்பு இரண்டாவது இடத்தை பிடித்ததால் மாணவர்களுக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. இதனையடுத்து எந்திரவியல் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“குறைந்த வட்டியில் கடன் கிடைக்கும்” தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.40 ஆயிரம் அபேஸ்…. போலீஸ் விசாரணை…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பனமரத்துப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவில் விக்னேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். கடந்த நான்காம் தேதி விக்னேஷ் குமாரின் செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அந்த குறுந்தகவலில் குறைந்த வட்டியில் கடன் தருவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்த செல்போன் எண்ணை விக்னேஷ்குமார் தொடர்பு கொண்டு பேசிய போது மறுமுனையில் பேசிய நபர் குறைந்த வட்டியில் பணம் தருவதாக கூறியுள்ளார். அதற்கான நடைமுறை செலவுகளுக்காக 40 ஆயிரம் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

டிராக்டர்-மோட்டார் சைக்கிள் மோதல்…. பள்ளி மாணவன் பலி; வாலிபர் படுகாயம்…. கோர விபத்து…!!!

டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பள்ளி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சித்தனப்பள்ளி பகுதியில் சிவா(15) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓசூர் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளான். நேற்று முன்தினம் சிவா ஒரு வாலிபருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தான். இந்நிலையில் முகுலப்பள்ளி கேட் அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் நின்ற டிராக்டர் மீது பயங்கரமாக மோதியது. […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

திருமணமான 7 மாதத்தில்…. புது மாப்பிள்ளைக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கே.புதூர் கிராமத்தில் தச்சரான பசுபதி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு பசுபதிக்கும், கோகிலா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. பசுபதி வேலைக்காக வெளியூர் சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அத்திகானூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே இருக்கும் வளைவில் திரும்ப முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த பனைமரத்தின் மீது பலமாக மோதியது. இந்த […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“இனிமேல் யாரும் பெண் தர மாட்டார்கள்” மனநலம் பாதிக்கப்பட்டு வாலிபர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முட்டாஞ்செட்டி ஊராட்சி மேல தெருவில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு எலக்ட்ரீசியனான பாலகுமார்(31) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த சில நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட வேலைக்கு செல்லாமல் இருந்த பாலகுமார் திருமணம் ஆகவில்லை என மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனையடுத்து இனிமேல் தனக்கு யாரும் பெண் தர மாட்டார்கள் என நினைத்து பாலகுமார் விஷம் குடித்து மயங்கி […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

தரை பாலத்தை மூழ்கடித்த தண்ணீர்…. வெள்ளத்தில் சிக்கிய டிராக்டர்…. நொடியில் உயிர் தப்பிய ஓட்டுநர்…!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாத்தனூர் அணையில் இருந்து உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில் கொங்கராயனூர் கிராமத்தில் ஓட்டுநரான ராமு என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று மதியம் அருளவாடி கிராமத்தில் உள்ள நிலத்தை உழுவதற்காக டிராக்டரில் சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து கொங்கராயனூர்- அருளவாடி இடையே […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பலத்த போலீஸ் பாதுகாப்புடன்…. விருதாச்சலத்தில் பிரபல மருத்துவமனை கட்டிடம் இடிப்பு…. அதிரடி நடவடிக்கை….!!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள 4 1/2 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் முல்லா ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள், 66 கடைகள் மற்றும் அலடி ரோட்டில் இருக்கும் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 95 கடைகள் மற்றும் வீடுகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவின்படி விருதாச்சலம் தாசில்தார் தனபதி தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் விருதாச்சலம் பேருந்து நிலையம் சுற்றுச்சுவரை ஒட்டி இருக்கும் பிரபல மருத்துவமனையை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு விருதாச்சலம் உதவி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“யூடியூப்” பார்த்து ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்த 5 பேர்…. போலீசாரிடம் சிக்கியது எப்படி…? பரபரப்பு சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பொம்மசந்திரா அருகே ஸ்ரீராம்புராவில் இருக்கும் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. கடந்த 22-ஆம் தேதி கியாஸ் கட்டர் மூலம் மர்ம நபர்கள் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த ஜிகனி போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ஆட்டோவில் வந்த 5 பேர் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்தது தெரியவந்தது. இதனால் ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்திய […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மாவட்ட அளவிலான போட்டி…. சாதனை படைத்த ஓசூர் அரசு பள்ளி மாணவிகள்…. குவியும் பாராட்டுகள்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே கைப்பந்து போட்டி நடைபெற்றுள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர் மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் 14 வயதிற்குட்பட்ட பிரிவிலும், 17 வயதிற்குட்பட்ட பிரிவிலும் ஓசூர் காமராஜர் காலணியில் இருக்கும் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைபள்ளி மாணவிகள் வெற்றி பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். இதன் மூலம் மாணவிகள் இந்த மாதம் இறுதியில் நடைபெற உள்ள மாநில […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பள்ளிக்கூடத்தில் படித்த போது பிரச்சனை…. வாலிபரை தாக்கிய கல்லூரி மாணவர்கள்…. போலீஸ் விசாரணை…!!!

கல்லூரி மாணவரை தாக்கிய பாலிடெக்னிக் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அலங்காரபேரிகை பகுதியில் கணேசபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 31-ஆம் தேதி கணேச பெருமாள் பாளையங்கோட்டையிலிருந்து தனியார் பேருந்தில் வண்ணாரப்பேட்டைக்கு சென்று கொண்டிருந்தார் அந்த பேருந்தில் 18 வயது நிரம்பிய பாலிடெக்னிக் மாணவர்கள் ஐந்து பேர் பயணித்தனர். அந்த மாணவர்களுக்கும், கணேச பெருமாளுக்கும் பள்ளிக்கூடத்தில் படித்த போது பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை மனதில் வைத்துக்கொண்டு அந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

காதணி விழாவுக்கு வந்த இடத்தில்…. வாலிபரை மரத்தில் கட்டி வைத்து அடித்த 3 பேர்…. வைரல் வீடியோ…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாத்தாம்பாடி பகுதியில் நெசவு தொழிலாளியான ராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராஜேஷ் என்பவரிடம் கடன் வாங்கி வட்டி செலுத்தி வந்துள்ளார். கொரோனா காலகட்டத்தில் வேலை இல்லாததால் வட்டி செலுத்த இயலவில்லை. இதனால் ராஜேஷ் ராமன் மற்றும் அவரது குடும்பத்தினரை கந்து வட்டி கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இந்நிலையில் சொந்த ஊரில் நடைபெற்ற காதணி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பல்லடத்தில் இருந்து ராமன் தனது மனைவி சுமதி, மகன் ஜோதிமணி ஆகியோருடன் வந்துள்ளார். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காய்ச்சலுக்கு சிகிச்சை பெற சென்ற சிறுமி…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. பரபரப்பு சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி பகுதியில் 17 வயது சிறுமி தனது தந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் காய்ச்சல் அதிகமாக இருந்ததால் சிறுமியை அவரது தந்தை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அப்போது டாக்டர் பரிசோதனை செய்து சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சிறுமியிடம் நடத்திய விசாரணையில் செண்பகராமன்புதூர் பகுதியில் வசிக்கும் ஆதி கண்ணன் என்பவரை காதலித்ததாகவும் கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ஒரே வீட்டில் குடும்பமாக வசித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“வாங்கிய சில நாட்களிலேயே பழுது” தனியார் நிறுவனத்திற்கு ரூ.10,000 அபராதம்…. அதிரடி உத்தரவு…!!!

தனியார் நிறுவனத்திற்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சிந்தன்விளை பகுதியில் சசிகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ராஜபாளையத்தை சேர்ந்த மரம் அறுக்கும் எந்திரம் தயாரிக்கும் நிறுவனத்தினரிடம் மரம் அறுக்கும் எந்திரங்களை வாங்கியுள்ளார். சில நாட்களிலேயே பழுதான எந்திரங்களை சரி செய்து தருமாறு சசிகுமார் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினரிடம் கூறியுள்ளார். அப்போது அவர்கள் 29 ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என கூறியுள்ளனர். இதனால் சசிகுமார் வழக்கறிஞர் மூலம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியும் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கழிவு நீர் குழாய்க்குள் நுழைந்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த போலீசார்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!!

காவல் நிலையத்திற்குள் நுழைந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தியாகதுருகம் காவல் நிலையத்திற்குள் நல்ல பாம்பு ஒன்று நுழைந்தது. சிறிது நேரத்தில் அந்த பாம்பு கழிவு நீர் குழாய்க்குள் சென்றதை பார்த்து போலீசார் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1/2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு குழாய்க்குள் நுழைந்த பாம்பை பத்திரமாக பிடித்தனர். இதனை அடுத்து 5 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீர்…. சிரமப்படும் வாகன ஓட்டிகள்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நாளை முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நேற்று இரவு அரல்வாய்மொழி, சாமிதோப்பு, மார்த்தாண்டம், குளச்சல், நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனை அடுத்து பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் மழை நீர் சுமார் 2 அடி அளவுக்கு தேங்கி வடிந்ததால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். சில இடங்களில் மழைநீருடன் […]

Categories

Tech |