விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் 17ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை முழு கடை அடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ராஜபாளையம் நகராட்சியில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் இதனால் பெரும் அவுதி அடைந்து வருகின்றன. அடிக்கடி விபத்து ஏற்பட்டு பலர் காயமடைகின்றனர். நகரில் திட்டப்பணிகள் மிக மிக சுணக்கத்துடன் சரியான திட்டமிடுதல் இல்லாமல் நடந்து வருகிறது. […]
Tag: மாவட்டம்
கேரளா முழுவதும் நாளை ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. கேரள மாநிலத்தில் மட்டுமல்லாமல் தமிழகத்திலும் சில மாவட்டங்களில் கேரள மக்கள் அதிக அளவில் இருப்பதால் அந்த மாவட்டங்களுக்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஓணம் பண்டிகைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று செங்கல்பட்டு மாவட்ட ஆசிரியர் ராகுல்நாத் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாளை ஓணம் பண்டிகையை முன்னிட்டு சில மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்துள்ளது. இந்த […]
திருவனந்தபுரம்: தென்-மத்திய வங்கக்கடலில் உருவாகி உள்ள சூறாவளி சுழற்சி காரணமாக நாட்டின் தென் மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக கேரளாவில் புதன்கிழமை வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. இதனால் கடலோரப் பகுதிகள், மலைப்பாங்கான பகுதிகள் மற்றும் நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படக்கூடிய இடங்களில் வசிப்பவர்கள் விழிப்புடன் இருக்குமாறு கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. சில நாட்களில் குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று நடைபெற உள்ளது. இதனால் அந்த மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தினம்தோறும் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் செலுத்தப்பட்டு வருகின்றது. அவ்வபோது சிறப்பு தடுப்பூசி முகாமும் நடத்தப்படுகின்றது. 18 வயதிலிருந்து 60-வது வயதுக்குட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தியதில், முதன்மை மாவட்டமாக காஞ்சிபுரம் மாவட்டம் இருந்தது. இருந்தாலும் இரண்டாவது தவணை தடுப்பூசியில் குறைந்த […]
சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஊக்கப்படுத்த மாவட்டம்தோறும் செஸ் போட்டிகளை நடத்த அகில இந்திய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. அதன்படி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா ரூபாய் ஒரு லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
9 மாவட்டங்களில் 3,000 பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்து பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒன்பது வடமாவட்டங்களில் 3,000 பட்டதாரி ஆசிரியர்களை கூடுதலாகவும், காலி பணியிடங்களிலும் நியமனம் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் சம்பளம் வழங்கப்படும் என்று அரசாணை வெளியாகியுள்ளது. பள்ளிக்கல்வி அரசு, நகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 1.8.2021 ஆண்டு நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் மேற்கொண்டதன் அடிப்படையில் கூடுதல் பணியிடம் தேவை உள்ள […]
ஆந்திர மாநிலத்தில் இப்போது 13 மாவட்டங்கள் இருக்கின்றன. இந்த 13 மாவட்டங்களை 2-ஆக பிரிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். முன்னதாக சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது ஆந்திராவின் தலைநகராக அமராவதியை தலைநகராக அறிவித்து பல பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்றவுடன் ஆந்திராவின் தலைநகராக 3 இடங்களை அறிவித்தார். அதன்பின் ஆந்திராவிலுள்ள 13 மாவட்டங்கள் 2ஆக பிரிப்பது […]
ஆந்திர மாநிலத்தில் இப்போது 13 மாவட்டங்கள் இருக்கின்றன. இந்த 13 மாவட்டங்களை 2-ஆக பிரிக்க வேண்டும் என்று அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். முன்னதாக சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது ஆந்திராவின் தலைநகராக அமராவதியை தலைநகராக அறிவித்து பல பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்றவுடன் ஆந்திராவின் தலைநகராக 3 இடங்களை அறிவித்தார். அதன்பின் ஆந்திராவிலுள்ள 13 மாவட்டங்கள் 2ஆக பிரிப்பது […]
மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சம் மேற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் முரளிதரன் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கடந்த ஆண்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்த நோய்க்கான மருந்துகளை அவர்களின் வீட்டிற்கே சென்று வழங்கி வருகின்றனர். […]
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணத்தினால் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்தமிழகம், வடதமிழகம், புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் இன்றும் நாளையும் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தென்தமிழகத்தில் இருந்து ராயலசீமா வரை இருக்கும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இந்த மழை பெய்யும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், 27ஆம் தேதி தென்தமிழக மாவட்டங்களான புதுக்கோட்டை, திருவாரூர், காரைக்கால், […]
தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகின்றது. தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழை இருக்கும் என்பதால் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்றும் நாளையும் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அதி கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அந்த மாவட்டத்திற்கு மட்டும் ரெட் அலர்ட் […]
தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தென் மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்றும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது: ” டிசம்பர் 4ஆம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் […]
வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் தூத்துக்குடி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது தாழ்வு மண்டலமாக மாறுவதற்கு வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இருப்பினும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்யும் என கூறியுள்ளது. அதன்படி அடுத்த இரண்டு மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், […]
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த ரெட்அலர்ட் திரும்ப பெறப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது:” குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த சிவப்பு எச்சரிக்கை விலக்கப்பட்டு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரி- சென்னைக்கு இடையே வடதமிழகம் அதை ஒட்டிய தெற்கு ஆந்திரா பகுதியில் நாளை கரையை கடக்கும்” எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை மற்றும் வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் கன மழை பெய்து வருகின்றது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 3 வாரத்திற்கு மேலாக கனமழை நீடித்து வருகின்றது. நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை விடிய விடிய பெய்த கனமழை காரணமாக நாகர்கோவில் நகரம் முழுவதும் வெள்ளத்தில் மிதந்து வருகின்றது. மழை வெள்ளத்தில் சிக்கிய வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் கனமழை காரணமாக பல்வேறு […]
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த காரணத்தால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது. தீபாவளி பண்டிகைக்கு பிறகு கனமழை கொட்டி தீர்த்து வருவதால் பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று காலை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ரூபாய் ஏழு லட்சத்து 20 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து நாடகமாடிய லாரி டிரைவர் கைது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மேலக்கோட்டை பகுதியில் தங்ககுமார் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு முட்டை வியாபாரம் செய்யும் ராஜகுமாரி என்ற மனைவி உள்ளார். இவர்களிடம் உதயகுமார் என்பவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராஜகுமாரி ரூபாய் 7 லட்சத்து 20 ஆயிரம் பணத்தை லாரி டிரைவர் உதயகுமாரிடம் கொடுத்து நாமக்கல் சென்று முட்டைகளை கொள்முதல் செய்து வருமாறு கூறியுள்ளார். அவர் பணத்தை […]
கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதிய விபத்தில் இரண்டு டாக்டர்கள் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் ராம் குமார் என்பவர் டாக்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தென்காசியில் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக குருவிகுளம் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணிபுரியும் சிதம்பர ராஜா, மருந்து விற்பனைப் பிரதிநிதி கார்த்திக் மற்றும் டாக்டர் முத்து கணேஷ் போன்றோருடன் ஒரே காரில் சென்றுள்ளார். அந்தக் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு நான்கு […]
ஜாமீனில் வெளியே வந்தவரை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது வழிப்பறி, கொலை போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த ஆண்டு கார்த்திகேயனை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். அதன் பின்னர் கார்த்திகேயன் ஜாமினில் கடந்த 4ஆம் தேதி சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் மது […]
ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பதிவு முறையில் தளர்வுகள் இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று காரணமாக தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக பல மாவட்டங்களில் தொற்று குறைந்து கொண்டு வருகின்றது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். ஊரடங்கு நீட்டிக்கப் பட்டால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இப்பதிவு முறையில் தளர்வுகள் இருக்குமென்றும், வெளிநாடு மற்றும் […]
மனநிலை பாதிக்கப்பட்டவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சிராப்பள்ளி மாவட்டம் எரகுடி ஏ.வி.ஆர்.காலனியில் வசிக்கும் 85 வயதான நாகம்மாள் என்பவர் சில காலமாக மனநிலை பாதிக்கப்பட்டிருந்தார். அவரை கடந்த 2 நாட்களாக காணவில்லை என்று உறவினர்கள் காவல் துறையிடம் புகார் கொடுத்தனர். இதனை அடுத்து நேற்று எரகுடியில் உள்ள தோட்டத்து கிணற்றில் அவர் சடலம் மிதப்பது தெரிய வந்தது. காவல்துறையினருக்கு இதுபற்றிய தகவல் கிடைத்ததும் உடனடியாக தீயணைப்பு துறையினர் மூலம் அவரது உடலைை […]
தடுப்பூசி போடுவதற்காக நீண்டநேரம் காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவும் காரணத்தினால் ஆங்காங்கு தடுப்பூசி போடப்படும் முகாம் நடத்தி வருகிறது. அதேபோல உடுமலைப்பேட்டை பகுதியிலும் தடுப்பூசி முகாம்கள் நடக்கின்றன. இந்த தடுப்பூசி 18 முதல் 44 வயது உட்பட்டவர்களுக்கு போடப்படுகிறது. மக்கள் பலர் தடுப்பூசி போடுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதைத்தொடர்ந்து முகாம்களில் வரிசை எண் படி டோக்கன் கொடுத்து தடுப்பூசியை செலுத்துவதால் மக்கள் கூட்டம் காலை ஆறு மணியிலிருந்து […]
சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டம் பூனாம்பாளையத்தில் சாராயம் காய்ச்ச படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் வடக்கிபட்டியை சேர்ந்த 46 வயதான தமன்னான் என்பவர் முள்காட்டில் சாராயம் காய்ச்சுவதற்காக பானையில் ஊறல் போட்டிருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் ஊறல் போட்டிருந்ததை அடித்து உடைத்து அங்கிருந்த பொருட்களையும் பறிமுதல் செய்து தமன்னானையும் கைது செய்தனர். இதேபோன்று உப்பிலியபுரம் பகுதியில் நடப்பதாக காவல்துறைக்கு […]
ஊரடங்கு விதிமுறைகளை மீறி நூற்பாலையை இயக்கிய தொழிற்சாலைக்கு தாசில்தார் சீல் வைத்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் வேடப்பட்டி என்னும் பகுதியில் 10 வருட காலமாக நூற்பாலைகள் பல இயங்கி வருகின்றன. தமிழகத்தில் இப்போது கொரோனா தாக்குதலால் முழு ஊரடங்கு போடப்பட்ட நிலையில் தொழில் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று நூற்பாலையில் உரிமையாளர்களுக்கு முன்கூட்டியே அறிவிப்பு விடப்பட்டது. அப்படி அறிவிப்பு விடப்பட்ட நிலையிலும் ஒரு நூற்பாலை மட்டும் இரண்டு நாட்களாக இயங்கி வந்துள்ளது. இதனை அடுத்து தகவல் அறிந்து வந்த […]
தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட இடங்களை தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கஸ்தூரிபாய் காலனி மார்க்கெட், இந்திரா நகர், குருசடி காலனி போன்ற பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக காந்தலில் மூவுலக அரசியம்மன் கோவிலில் இருந்து பென்னட் மார்க்கெட் வரை இருக்கும் சாலையை தகரம் வைத்து அடைத்து விட்டனர். […]
தேவையில்லாமல் வெளியே சுற்றி திரிந்தவர்களுக்கு காவல்துறையினர் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆகையால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் காவல் துறையினர் சோதனை சாவடிகளை அமைத்து பல்வேறு முக்கிய பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு தேவையில்லாமல் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினர் மூலப்பட்டறை, காளைமாட்டு சிலை, பி.பி.அக்ரஹாரம், கருங்கல்பாளையம் போன்ற […]
இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சுற்றியுள்ள சில கிராமங்களில் மின்சாரம் இருக்காது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கல்லாக்கோட்டை கிராமத்தில் துணை மின் நிலையத்திற்கான உயர் மின்னழுத்த கோபுர மின்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள சில கிராமங்களில் 4 நாட்களுக்கு ஒரு மணி முதல் 4 மணி வரை மின்சாரம் தடைபட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமங்கள்: வெள்ளாளவிடுதி, கந்தம்பட்டி, மங்களா கோவில், ஆத்தியடி பட்டி, […]
தமிழகத்தில் ஆரணியை புதிய மாவட்டமாக அறிவிக்கப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பல கட்சிகள் போட்டி போட்டு தங்களது பிரச்சாரங்களை நடத்தி வருகின்றனர். தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு மக்களை கவர்ந்து வருகின்றனர். அதிமுக எப்படியாவது இந்த முறையும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. நேற்று திருவண்ணாமலை மாவட்டம் ,ஆரணியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஆரணியை தலைமையாகக் கொண்டு புதிய […]
மணல்மேல்குடியில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிக்கொண்டிருக்கும் போது வசமாக மாட்டிய வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மணமேல்குடியில் அத்தாணி காட்டாறு உள்ளது. அப்பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாமுவேல்ஞானம் முன்னிலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் திருட்டுத்தனமாக 3 பேர் மணல் அள்ளிக் கொண்டிருந்ததை போலீசார் பார்த்துள்ளனர். இதனையடுத்து போலீசார் விசாரித்த போது, அவர்கள் ராம நாதன், செல்லதுரை, செல்வராஜ் என்றும், அத்தாணி பகுதியில் வசிப்பதாகவும் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் அம்மாட்டு வண்டிகளை […]
தனியாருக்கு சொந்தமான ரத்த வங்கியில் இருந்த உரிய ஆதாரம் இல்லாத 11 யூனிட் ரத்தம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சங்கர் நகரில் தனியாருக்கு சொந்தமான ரத்த வங்கி செயல்பட்டு வருகின்றது. அங்கு நேற்று மருத்துவ ஆய்வாளர் சந்திராமேரி தலைமையில் குழுவினர் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் 11 யூனிட் ரத்தம் முறைகேடாக இருந்ததால் அவற்றை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து சந்திராமேரி கூறும் போது ஒரு நபரிடம் ரத்தம் எடுத்தால் 350 மில்லி தான் எடுக்க […]
சேர்ந்தமங்கலத்தில் வீட்டை இடிக்கும் போது சுவர் சரிந்து மேலே விழுந்ததால் தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள சேந்தமங்கலம் பேரூராட்சியில் ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டை இடித்து புது வீடு கட்ட வேண்டும் என்பதற்காக நேற்று காலை கட்டிட தொழிலாளி ராமசாமியுடன் 5 தொழிலாலார்களை அவர் வீட்டிற்கு வர செய்துள்ளார். இதனையடுத்து வீட்டின் மேற்கூரையை அகற்றிய பின்பு இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது திடீரென பக்கவாட்டில் இருந்த மண் சுவர் சரிந்து, […]
ராசிபுரத்தில் சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். நாமக்கல் மாவட்டத்திலுள்ள ராசிபுரத்தில் இருக்கும் வெங்காயபாளையத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் மூர்த்தி மோகனூரிலுள்ள அக்கா வீட்டிற்கு சென்று வந்துள்ளார். அந்த சமயத்தில் மூர்த்திக்கும், அப்பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த சிறுமியின் பெற்றோர்கள் அவர்களை கண்டித்துள்ளனர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு அந்த சிறுமி வீட்டில் […]
தேர்தலை காரணமாக வைத்து திருவிழா நடத்த கூடாது என்று அதிகாரிகள் தெரிவித்ததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் பலபட்டரை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் திருவிழா நடத்துவது குறித்து மக்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இதனை தொடர்ந்து திருவிழா தொடங்குவதற்கு முன்பு மாடு பிடித்து வந்து பூஜை செய்த பின்பே கம்பு நாட்டப்பட்டு திருவிழா தொடங்குவதை வழக்கமாக கொண்டிருந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் மாடு பிடிப்பதற்கு […]
பொன்னமராவதியிலிருந்து ஆட்களை ஏற்றி சென்று கொண்டிருந்த சரக்கு வாகனம் திடீரென கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதியிலிருந்து, பிடாரம்பட்டிக்கு ஒரு சரக்கு வாகனம் ஆட்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது. வாகனத்தை டிரைவர் ஜீவா ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் காயாம்புஞ்சை என்ற இடத்தில் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று கார்த்திக்கின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் கவிழ்ந்தது. இதனால் வாகனத்தில் பயணித்த கைக் குழந்தைகள் உட்பட 17 பேர் மிகவும் காயமடைந்துள்ளார்கள். இதுக்குறித்து தகவலறிந்த காவல் […]
கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் உயரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அன்னவாசல் வேளாண் தெருவில் மூக்கன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆறுமுகம் என்ற மகன் இருந்தார் (வயது 20). கடந்த சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் விருத்தபுரீஸ்வரர் கோவில் திருவிழா நடைப்பெற்றது. அத்திருவிழாவின் போது ஆறுமுகத்துக்கும், அப்பகுதியில் உள்ள கலைஞர் காலனியில் வசிக்கும் பாலமுருகன் உட்பட 6 நபருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பால முருகனின் நண்பர்கள் ஒன்று சேர்ந்து […]
கடன் தொல்லையால் லாரி ட்ரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது அரியலூர் மாவட்டத்திலுள்ள ஆமணக்கந்தோன்டி கிராமத்தில் கார்மேகம் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் லாரி ட்ரைவர் . இவருக்கு திருமணமாகி கௌசல்யா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் கார்மேகம் வேலைக்கு சென்றால் 10 அல்லது 15 நாட்கள் கழித்த பின்பே வீட்டிற்கு வருவது வழக்கம். இதனை தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பே வேலைக்கு சென்றவர் கடந்த […]
கிணற்றில் விழுந்த சிறுவனும் அச்சிறுவனை காப்பாற்ற முயன்ற பெண்னும் உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள வண்டலூரை அடுத்த ஊனமாஞ்சேரியில் சாலையோரம் பழைய பொருட்களை சேகரிக்கும் பணியில் இருக்கும் மக்கள் மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் அங்கு மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அனீஸ் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அவரது மகன் அப்துல் நேற்று முன்தினம் விளையாடிக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் உள்ள கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்தான். இதைப் பார்த்த அதே […]
ஆஸ்துமா நோயால் அவதிப்பட்ட பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மறைமலைநகரை அடுத்த கீழக்கரணை பகுதியில் வேண்டாம்மாள் (வயது 58) என்பவர் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக இவர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 13 ம் தேதி ஆஸ்துமா அதிகரித்து மிகுந்த அவதிக்குள்ளான வேண்டாம்மாள் பூச்சி மருந்தை குடித்து விட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மற்றும் […]
நியாபக மறதியால் செய்த தவறில் சிலிண்டர் வெடித்து மூதாட்டி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மறைமலைநகரில் இருக்கும் பாவேந்தர் பகுதியில் யமுனா (வயது 65) என்பவர் வசித்து வந்தார். இவர் நேற்று மாலை வீட்டில் சமையல் செய்ய வேண்டும் என்று கியாஸ் அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது லைட்டர் சரியாக வேலை செய்யவவில்லை. இதனால் அடுப்பை ஆப் பண்ணாமல் மறதியால் அப்படியியே வைத்து விட்டு தீப்பெட்டி எடுக்க சென்றுள்ளார். அந்நேரத்தில் கியாஸ் கசிந்து கொண்டே இருந்திருக்கிறது. […]
காணமல் போன மூதாட்டி கிணற்றில் விழுந்து உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள காட்டாங்கொளத்தூர் பகுதியில் சுசீலா (வயது 65) என்பவர் வசித்து வந்தார் .நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்ற சுசிலா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடி அலைந்தனர் . ஆனால் அவர் எங்கும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கொருக்கதாங்களில் உள்ள கிணற்றில் ஒருவர் மூழ்கி இறந்து கிடப்பதாக அப்பகுதியில் உள்ள மக்கள் மறைமலைநகர் காவல் […]
உரிய ஆவணம் இன்றி கொண்டுவரப்பட்ட ஐந்தரை லட்சம் பணத்தை திருவையாறு பகுதியில் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் எந்தவித ஊழல் ஏற்படக்கூடாது என்பதற்காக பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தஞ்சை மாவட்டத்திலுள்ள திருவையாறு மெயின் ரோட்டில் நேற்று பறக்கும் படை அலுவலர் புனிதா தலைமையில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வாகன சோதனையில் ஈடுபட்டு ஒவ்வொரு […]
சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் பூக்கள் குறைந்த விலைக்கு ஏலம் போனதால் மகிழ்ச்சியுடன் வியாபாரிகள் வாங்கி சென்றார்கள். ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் பகுதியில் பூ மார்க்கெட் உள்ளது. இந்நிலையில் நேற்று அங்கு பூக்கள் ஏலம் விடப்பட்டது. மொத்தம் 4 டன் பூக்களை, சத்தியமங்கலம் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து விவசாயிகளும் விற்பனைக்காக கொண்டு வந்தார்கள். இதில் ஒரு கிலோ முல்லை ரூபாய் 800 க்கும் , செண்டுமல்லி ஒரு கிலோ 30 க்கும் , பட்டு […]
ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் இல்லாததால் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்புத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கல்லாங்காடு பாளையம் மற்றும் சூரிபாளையம் ஆகிய பகுதிகள் நம்பியூர் பேரூராட்சிக்கு உட்பட்டது. அப்பகுதியில் குடிநீர் விநியோகம் செய்து ஒரு மாதம் காலம் ஆகிறது என்றும் அப்படியே தண்ணீர் வந்தாலும் மிகக் குறைந்த அளவிலேயே வருகிறது என்பதால் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி, நேற்று காலை 9 மணியளவில் கோவை- நம்பியூர் சாலையில் , குடத்துடன் ரோட்டில் உட்கார்ந்து […]
பாதுகாப்பு கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் 3 குழந்தைகளுடன் குடும்பமே திக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்திலுள்ள தொண்டராம்பட்டு கிழக்குப் பகுதியில் பிச்சைக்கன்னு என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சமுத்திரம் என்ற மனைவி உள்ளார். மேலும் இத்தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் பிச்சைக்கன்னுவின் சொத்தை அபகரிப்பதற்காக அவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் அடிக்கடி தகராறு செய்து வந்திருக்கின்றனர். இத்தகறாரில் பிச்சைக்கன்னு மற்றும் அவருடைய மனைவிக்கு காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் சிகிச்சை […]
நச்சலூர் பகுதியில் சமைக்கும் போது தீடிரென தீப்பற்றியதால் குடிசை எரிந்து சாம்பலான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கரூர் மாவட்டத்திலுள்ள நச்சலூர் பகுதியில் இருக்கும் ரத்தினபுரி காலனியில் ராதிகா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் வீட்டில் நேற்று முன்தினம் மாலை சமையல் செய்து கொண்டிருக்கும் போது திடிரென குடிசையில் தீப்பற்றியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீ வேகமாக குடிசை முழுவதும் பரவி எரிந்து சாம்பலானது. இதில் ரேஷன் […]
நாமக்கல்லில் ஆட்டோ மீது சரக்கு லாரி மோதி விபத்து ஏற்பட்டதால் சம்பவ இடத்திலே பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையத்தில் இருக்கும் காவேரி நகர் பகுதியில் சந்திரா என்பவர் தனது மகனுடன் வசித்து வந்தார். மேலும் சந்திரா பல் வலி ஏற்பட்டதால் சிகிச்சை பெறுவதற்காக வட்டமலைப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றவுடன் வீட்டிற்கு செல்வதற்காக ஒரு ஆட்டோவில் ஏறினார். ஆட்டோ குமாரபாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது சாலையை கடக்கும் […]
சீலநாயக்கன்பட்டியில் மாற்றுத்திறனாளி பெண்ணை ஏமாற்றி பலாத்காரம் செய்த வாலிபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டத்திலுள்ள சீலநாயக்கன்பட்டியில் ஐயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமணமாகி அவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார் . மேலும் அப்பகுதியில் கட்டிடம் கட்டும் பணி செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஐயப்பன் , வீராணம் பகுதிக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குடியேறினார். அப்போது அங்கு மாற்றுத்திறனாளி பெண் ஒருவருக்கும் ஐயப்பனுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நட்புடன் பழகி வந்த ஐயப்பன் […]
பெற்றோர் கண்டித்ததால் விஷம் குடித்து பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூரில் இருக்கும் டேனிஷ்பேட்டை பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கார்த்திகேயன் என்ற மகன் உள்ளான். இவன் அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் கார்த்திகேயன் கடந்த 10ஆம் தேதி நண்பர்களுடன் மிகவும் நெருக்கமாக மற்றும் அதிக நேரம் அவர்களுடனே சுற்றி வந்துள்ளார். இதை பெற்றோர்கள் கண்டித்ததால் மனமுடைந்த கார்த்திகேயன் வீட்டில் யாரும் இல்லாத போது […]
வாகன சோதனையின் போது மொபட்டில் புகையிலை பொருட்களை கடத்திய வாலிபர்களை காவல் துறையினர் மடக்கி பிடித்தனர். சேலம் மாவட்டத்திலுள்ள செவ்வாய்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் முன்னிலையில் வாகன சோதனை நேற்று முன்தினம், திருச்சி மெயின் ரோட்டில் நடைப்பெற்றது. அப்பொழுது ஒவ்வொரு வாகனமாக சோதனை செய்யும் பொழுது ஒரு மொபட்டில் புகையிலைப் பொருட்கள் இருப்பதை கண்டு பிடித்தனர். இதனை தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் மகேந்திரகுமார் , ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் தாதகாபட்டியில் பலசரக்கு கடை வைத்திருப்பதும் […]
பணிபுரியும் இடத்தில் எதிர்பாரத விதமாக மின்சாரம் தாக்கியதில் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இழுப்பூரில் இருக்கும் புதூர் பகுதியில் செல்வராஜ் வயது (35) என்பவர் வசித்து வருகிறார் . இவர் திருவப்பூரில் உள்ள மாவு மில்லில் தொழிலாளியாக பணியாற்றி வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுது எந்திரத்தில் இருந்து மின்சாரம் எதிர்பாராதவிதமாக செல்வராஜ் உடலில் பாய்ந்தது. இதனால் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காவல் துறையினருக்கு தகவல் […]