Categories
தேசிய செய்திகள்

சாதிய பாகுபாட்டின் உச்சம்… குடிநீரில் மலம், இரட்டைக் குவளை… அடுத்தடுத்து பாயும் வழக்குகள் … மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் இறையூர் அடுத்த வேங்கை வயல் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் நிலவி வந்த சாதிய பாகுபாட்டின் உச்சமாக தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தப்படும் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவுகளை சிலர் கலந்து இருக்கின்றனர். இந்நிலையில் இந்த நீரை அருந்திய குழந்தைகள் உட்பட பொதுமக்களுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குடிநீரில் தான் பிரச்சனை என மருத்துவர்கள் கூறியுள்ளார். உடனடியாக மேல்நிலை நீர் தேக்க தொட்டியை  சென்று பார்த்தபோது குடிநீரில் மலம் கலந்த விஷயம் […]

Categories
உலக செய்திகள்

பெரு நாட்டில் தீவிரமடைந்த போராட்டம்…. பரிதாபமாக உயிரிழந்த 7 பேர்…. அச்சத்தில் நாட்டு மக்கள்….!!!!

பிரபல நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். பெரு நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக அரசியலில் நிலையற்ற தன்மை நிலவுகிறது. இந்த நாட்டில் கடந்த 2020-ஆம் ஆண்டு 5 நாளில் 3 அதிபர்கள் மாறினர். இதனையடுத்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெட்ரோ காஸ்டிலோ  வலதுசாரியான கெய்கோவை  வீழ்த்தி அதிபர் ஆனார். ஆனால் இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது.  கடந்த சில நாட்களுக்கு முன்பு   பெட்ரோ காஸ்டிலோ  கூறியதாவது, “நாட்டில் அவசர நிலை அமல்படுத்தப்படும். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(14.12.22) முதல் 3 நாட்களுக்கு….. இவர்களுக்கு மட்டும்…. மறக்காம போயிடுங்க….!!!!

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நாடு முழுவதும் சுமார் 12 கோடி மக்கள் வேலை இழந்ததாக இந்திய கணிப்பு மையம் கூறுகின்றது. இதன் பிறகு இயல்பு நிலைக்கு திரும்பியதனால் வேலையின்மை விகிதம் ஜூலை மாதத்தில் 6.80 சதவீதமாக குறைந்தது. இது கடந்த ஆறு மாதங்களில் ஒப்பீடுகையில் மிக குறைந்த அளவாகும். இந்தியாவில் கிராமப்புற வேலையின்மை ஒருபுறம் குறைந்தாலும் நகர்புற வேலையின்மை அதிகரித்து வருகிறது. இப்படி வேலையின்மையால் போராடுபவர்களை கருத்தில் கொண்டு  அந்த வகையில் சென்னை கோட்டை ரயில் நிலையத்தின் […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து மாவட்டங்களுக்கும் உத்தரவு பறந்தது: BIG ALERT…!!

வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. சென்னைக்கு தென் கிழக்கே 830 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாறி, நாளை காலை வட தமிழகம் – புதுச்சேரியை ஒட்டி வரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கையை அடுத்து, நீர் தேக்கங்களை கண்காணிக்க, தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை மீட்க, நிவாரண முகாம்களில் உணவு போன்றவற்றை தயார் செய்ய அனைத்து மாவட்ட […]

Categories
திருவண்ணாமலை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு…! தீபத் திருவிழாவிற்கு “இதன்” பிறகே அனுமதி…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவானது வருகிற டிசம்பர் 6ஆம் தேதி அன்று பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. இதனால் கிட்டத்தட்ட 40 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக லட்சக்கணக்கான மக்கள் வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் கலந்து கொள்வார்கள். எனவே திருவிழாவை பாதுகாப்பாக கொண்டாடுவதற்கு மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நாளில் விடுமுறை அளிக்கப்பட்டதோடு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலை சுற்றி இருக்கும் டாஸ்மாக் கடைகளுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

இந்த மாவட்டத்தில் இன்று (15.11.22)….. பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை….. வெளியான அறிவிப்பு…..!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் பல்வேறு மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. இந்த கனமழையினால் மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி உள்ளிட்ட பகுதிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன குறிப்பாக சீர்காழி பகுதியில் மட்டும் 122 வருடங்களில் இல்லாத அளவுக்கு மழை கொட்டி தீர்த்துள்ளது. இந்த நிலையில் கனமழையால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி, தரங்கம்பாடி பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அப்பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பொதுமக்கள் பயனடைய… நிறைவேற்றப்படும் வளர்ச்சி திட்டங்கள்… ஆட்சியர் தலைமையில் நடந்த கூட்டம்….!!

மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஊராட்சியில் அனைத்து அடிப்படை வசதிகளும் விரைவில் நிறைவேற்றப்படும் என கூறியுள்ளார்.  ஊட்டி கடநாடு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் தலைமையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு, மக்கள் திட்டமிடல் இயக்கம் என பல்வேறு திட்டங்கள் குறித்து பேசப்பட்டது. அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர் கடநாடு பகுதியில் புதிதாக அரசு ஆரம்ப […]

Categories
மாநில செய்திகள்

தீபாவளி பண்டிகை… “தென் மாவட்ட பயணிகள் இனி கோயம்பேடு போக வேண்டாம்”… மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட முக்கிய…!!!!!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த பேருந்துகள் சென்னை, கோயம்பேடு, பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, திருநெல்வேலி, திருச்சி, விழுப்புரம், கன்னியாகுமரி, பாபநாசம், தென்காசி போன்ற மாவட்டங்களுக்கு இந்த பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பேருந்தில் பயணம் செய்ய ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்திலும் சிறப்பு பேருந்துகளிலும் ஏறி பயணம் மேற்கொள்ளலாம். அதிலும் குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம், குடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், […]

Categories
மாநில செய்திகள்

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்…. டிசம்பர் 19ஆம் தேதிக்குள்…. வெளியான உத்தரவு… !!!!

தமிழகம் முழுவதும் 2748 கிராம உதவியாளர் காலி பணியிடங்கள் இருப்பதாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக ஆணையர் கடிதம் எழுதியுள்ளார். அதில் இந்த காலி பணியிடங்களை விதிகளுக்கு உட்பட்டு உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி எந்தவித விதிமீறல்களும் இல்லாமல் கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதற்காக பெறப்படும் விண்ணப்பங்களை நவம்பர் 14ஆம் தேதி பரிசீலனை செய்து முறையான நேர்காணல் நடத்தி டிசம்பர் 19ஆம் தேதிக்குள் பணி நியமன ஆணைகளை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

செல்வ மகளை பெற்றெடுத்த பெற்றோருக்கு ஹேப்பி நியூஸ்…. கலெக்டர் வெளியிட்ட முக்கிய ‌ அறிவிப்பு….!!!

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ. மேகநாத ரெட்டி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள போஸ்ட் ஆபீஸில் செல்வமகள் சேமிப்பு திருவிழா நடைபெறுகிறது. இந்த திருவிழா அக்டோபர் 11-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த செல்வமகள் சேமிப்பு திட்டமானது பெண் குழந்தைகளின் நலனை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பெண் குழந்தைகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ரூபாய் 250 செலுத்தி கணக்கை தொடங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் குறைந்த பட்சம் 250 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் வேலை வாய்ப்பு பற்றி இளைஞர்களுக்கான உதவித்தொகை… யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? முழு விபரம் இதோ..!!!!!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் அரசு பல்வேறு வகையான நலத்திட்டங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை குறித்து அறிவிப்பை திருச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கிறார். இந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயனடைய ஆதிதிராவிடர் பழங்குடியினர் உள்ளிட்ட அனைத்து வகுப்பினரும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி அடைந்தவர்களும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதே போல் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பட்டப்படிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

தமிழக சிறுபான்மையின மாணவ மாணவிகளுக்கான ஹேப்பி நியூஸ்… மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

தமிழகத்தில் சிறுபான்மை இன மாணவ, மாணவிகள் கல்வி படிப்பை மேற்கொள்வதற்கு அரசு பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் சிறுபான்மை இன மாணவ மாணவிகளுக்கு கல்வித்தொகை குறித்து அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டு இருக்கிறார். இந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, அரசு உதவி பெறும் மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றது. மேலும் இந்த உதவித்தொகை நடப்பு கல்வியாண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நேற்று விடுமுறை அளிக்காத….. 56 நிறுவனங்கள் மீது நடவடிக்கை….. தொழிலாளர் உதவி ஆணையர் அதிரடி…!!!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்காத 56 நிறுவனங்கள் மீது கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார். நாடு முழுவதும் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதனால் தனியார் அலுவலகங்கள். அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மேலும் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகரன் தலைமையில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“பள்ளிக்கூடம் மணி அடிச்சாச்சு” இடைநின்ற மாணவிகளுடன் பேருந்தில் பயணித்த கலெக்டர்….!!!

பள்ளியிலிரு66ந்து இடைநின்ற மாணவிகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. கரூர் மாவட்டத்தில் பள்ளிக்கூடம் மணி அடிச்சாச்சு என்ற மிகப்பெரிய திட்டம் தொடங்கப் பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலமாக பள்ளியில் இருந்து இடை நின்றவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் வாளியாம்பட்டி கிராமத்தில் 25-க்கும் மேற்பட்ட மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் வீடு வீடாக சென்று மாணவிகளின் தேவைகளின் மற்றும் பிரச்சனைகள் குறித்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

29,172 பயனாளிகளுக்கு நகை கடன் தள்ளுபடி….. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்…!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று சட்டமன்ற பேரவை விதி எண் 110 கீழ் கூட்டுறவு நிறுவனங்களில் பொது நகை கடன் தள்ளுபடி ஒரு குடும்பத்திற்கு 5 பவுன் மற்றும் அதற்கு கீழ் உள்ள நகை கடன்களை சில தகுதிகளின் கீழ் ஏழை, எளிய மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அறிவித்தார். அதன்படி இந்த திட்டத்தின் கீழ் கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஆட்டோ டிரைவர்களே!…… “இனி இந்த தவறு செய்தால்” கடும் நடவடிக்கை….. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!!!

தூத்துக்குடியில் ஆட்டோவில் அளவுக்கு அதிகமான பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்று செல்வதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிவர கண்காணிப்பு நடைபெறுகிறது ஈடுபடவில்லை என்று புகார்கள் எழுந்து உள்ளது. இதனை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் உத்தரவின் பேரில் தூத்துக்குடியில் பள்ளி குழந்தைகளை அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக ஆட்டோவில் ஏற்றி செல்வது குறித்து கண்காணிப்பதற்கான 4 குழுக்களாக போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மயிலேறும் பெருமாள் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக 21 […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு…. புதிய ஆட்சியர், புதிய எஸ்பி பதவியேற்பு….!!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகில் உள்ள கனியமூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மர்ம முறையில் உயிரிழந்த விவகாரம் பரவி வருகிறது. இது சமூகவலைதளத்தில் justice for srimathi என்ற ஹஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. அதனைத் தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தின் போது வன்முறை சம்பவங்கள் பெரிய அளவில் அரங்கேறியது. வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். மாணவியின் மரணம் குறித்து பள்ளி தாளாளர் ரவிக்குமார், […]

Categories
அரியலூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தனியார் பள்ளிகள் இன்று வழக்கம் போல இயங்கும்….. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு….!!!!!

தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி படித்துவந்த 12-ம் வகுப்பு மாணவி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு செயலாளர் நந்தகுமார்  இன்று முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் தனியார் பள்ளிகள் ஈடுபட உள்ளது. பள்ளிகள் நடக்காது, என்று கூறினார். இந்த நிலையில் தனியார் பள்ளிகள் இதுபோல் விடுமுறை விட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திருச்சிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…. “மாணவர்கள் இதனை செய்யாதீர்கள்”…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு…!!!!

திருச்சியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாகி கன மழை பெய்து வருகிறது. இது குறித்த மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெளியிட்ட செய்தியில், கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று மாலை 4 மணிக்கு 115.730 அடியை எட்டி உள்ளது. அடுத்த ஓரிரு தினங்களுக்கு 120 அடியை எட்டும் என்றும் எந்த நேரத்திலும் அணையில் இருந்து உபநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே காவிரி கரையோரம் கிராமங்களில் வசிக்கும் மற்றும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இவர்களுக்கு மட்டும் எளிதான வேலை வழங்க வேண்டும்”….. மாவட்ட கலெக்டர் அதிரடி….!!!!

திண்டுக்கல் மாவட்டம் கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி கூட்ட அறங்கில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைகேட்பு முகாம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். அவரைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டார். மேலும் அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். அதன்பிறகு மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்திரவிட்டார். அப்போது பேசிய அவர், “தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுதிறனாளிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். ஒவ்வொரு […]

Categories
மாவட்ட செய்திகள்

மேல்நிலை பள்ளி முடித்த மாணவர்களுக்கு…. வழிகாட்டு நிகழ்ச்சி… கலெக்டர் ஸ்ரீதர் அறிவிப்பு…!!!

கள்ளக்குறிச்சியில் மேல்நிலை பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்களுக்காக வழிகாட்டு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கூறியிருக்கிறார்.  மேல்நிலை பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்களுக்கு தமிழ்நாட்டு முதல்வரின், ‘நான் முதல்வன்’ என்னும் திட்டப்படி, கல்லூரி கனவு வழிகாட்டுதல் நிகழ்ச்சி குறித்த கலந்தாய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக நடந்த இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். அப்போது அவர் தெரிவித்ததாவது, மேல்நிலை பள்ளி படிப்பை முடித்த […]

Categories
மாவட்ட செய்திகள்

முன்னாள் படைவீரரை சார்ந்தவர்கள் சான்றுக்கு விண்ணப்பிக்கலாம்… கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

கள்ளக்குறிச்சியின் மாவட்ட ஆட்சியரான ஸ்ரீதர் முன்னாள் படை வீரரின் குடும்பத்தினர் சான்று பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறியிருக்கிறார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தினுடைய ஆட்சியரான ஸ்ரீதர் தெரிவித்திருப்பதாவது, தமிழக அரசு இந்த கல்வி ஆண்டுக்கான இந்திய மருத்துவம், பி.வி.எஸ்.சி., பி.எஸ்சி (விவசாயம்), பி.எட். பி.எப்.எஸ்.சி, ஆசிரியர் பயிற்சி, மருத்துவம், பொறியியல், டி.பார்ம், பி.பார்ம், பி.எஸ்சி. (நர்சிங்), பட்ட மேற்படிப்புகள் மற்றும் பட்டய படிப்புகள் போன்ற பல பாட பிரிவுகளுக்காக கல்லூரியில் சேர இட ஒதுக்கீடு அளித்திருக்கிறது. இதில் விண்ணப்பிக்க முன்னாள் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

வேலூரில் “நான் முதல்வன் நிகழ்ச்சி”…. மாவட்ட ஆட்சியர் கையேடு வெளியிடு….!!!

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 படிக்கும் மாணவ மாணவிகளுக்கான “நான் முதல்வன்” என்ற நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சி வேலூர் மாவட்ட காட்பாடியில் உள்ள விஐடி பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மாணவர்களுக்கான கையேட்டை வெளியிட்டார். இதில் டி.எம். கதிர் ஆனந்த், எம்.பி., வி.ஐ.டி. பல்கலைக்கழக துணை தலைவர் ஜி.வி. செல்வம், அமலு விஜயன், எம்.எல்.ஏ., வேலூர் […]

Categories
மாநில செய்திகள்

“சுபநிகழ்ச்சிகள், இறப்பு வீடுகளில் மக்கள் கூட தடை”….. மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்….!!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுப நிகழ்ச்சிகளில் 100 நபர்களும், இறப்பு வீடுகளில் 50 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களக கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் விதித்தித்து வருகிறார்கள். அந்தவகையில் வேலூர் மாவட்டத்தை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் திருமண மண்டபங்களில் 100 நபர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். வணிக வளாகங்களில் […]

Categories
மாநில செய்திகள்

“நான் ஏசி ரூம் ஆபீசர் இல்ல”….. மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு செய்யணும்….. கூட்டுறவுத் துறை செயலாளர் அதிரடி….!!!!

சென்னை கோபாலபுரத்தில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் கூட்டுறவு மற்றும் உணவு பாதுகாப்பு துறை செயலாளராக பொறுப்பேற்றுள்ள ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் ரேஷன் அரிசி கடத்தல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தேவைக்கேற்ப நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நான் ஏசி ரூம் அதிகாரி அல்ல, கீழ்மட்டத்தில் இருப்பவர்களின் கருத்தையும் கேட்டு பணியாற்றுவேன், மேலும், மாவட்ட ஆட்சியர்கள் குறைந்தபட்சம் 10 ரேஷன் கடைகளை […]

Categories
மாநில செய்திகள்

விண்ணப்பித்த 15 நாட்களில்….. “புதிய ரேஷன் கார்டு”….. ஆட்சியர் அறிவித்த ஹேப்பி நியூஸ்…..!!!!

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் நபர்கள் இடைத்தரகர்கள் யாருமில்லாமல் இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பித்தால் 15 நாட்களுக்குள் குடும்ப அட்டை வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழக முதல்வர் அவர்கள் சட்டமன்றத்தில் 15 நாட்களில் புதிய குடும்ப அட்டை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் பொதுமக்கள் இடைத்தரகர்கள் யாருடைய உதவியும் இல்லாமல் கைபேசி வாயிலாக பதிவேற்றம் செய்து கொள்ளும் வகையில் இலவசமாக ஒரு […]

Categories
மாநில செய்திகள்

திடீர் ரெய்டு… மாற்றப்பட்ட மாவட்ட ஆட்சியர்….. அதிரடியில் இறங்கிய முதல்வர்…!!!!

முதல்வர் மு.க ஸ்டாலின் அவ்வப்போது அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஒரு சில இடங்களில் நேரடியாகவே சென்று ஆய்வு மேற்கொள்கிறார். அந்தவகையில் சென்னை கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் நேற்று திடீரென்று ஆய்வு நடத்தினார். அதிகாரிகள் முறையாக நடவடிக்கை எடுப்பதில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதையடுத்து சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயராணி அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆட்சியராக அமிர்த ஜோதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Categories
மாநில செய்திகள்

“டிசம்பருக்குள் சேலத்தில் இந்த மாற்றங்கள் எல்லாம் நடக்கும்”….. ஆட்சியர் கார்மேகம் அறிவிப்பு…!!!!

சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக முக்கிய அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் எஸ் கார்மேகம் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் 2021 நடந்த சட்டப்பேரவை தேர்தலில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இருப்பினும் கொங்கு மண்டலத்தில் பெரிதாக திமுக கட்சி வெற்றி பெறவில்லை. இதனால் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவதற்காகவே முழு உழைப்பை செலுத்தி வருகின்றது. இதனை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இதற்கிடையில் கோவை, […]

Categories
மாநில செய்திகள்

சிலிண்டருக்கு பூஜைசெய்து….. நூதன முறையில் போராட்டம் நடத்திய மக்கள்….!!!!

கடந்த சில மாதங்களாக சமையல் சிலிண்டரின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. சமையல் சிலிண்டர் விலை மட்டுமல்லாமல் அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் பெரும் பொருளாதார சிக்கலில் உள்ளனர். ஏற்கனவே கடந்த இரண்டு ஆண்டுகளாக தொற்று காரணமாக ஊரடங்கு போடப்பட்ட நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. தற்போது அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வரும் நேரத்தில் இதுபோன்ற விலை உயர்வு அவர்களை மீண்டும் கவலை அடைய வைத்துள்ளது. இந்நிலையில் சமையல் […]

Categories
மாநில செய்திகள்

ஜாலியோ ஜாலி…. வரும் திங்கட்கிழமை….. அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை….!!!!

அரியலூர் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்திற்கு வரும் திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவில் கள்ளக்குறிச்சி அருள்மிகு கலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோயில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி என்று தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், அரியலூர் மாவட்டத்திற்கு மட்டும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மானியமாக வழங்கப்பட்ட மரக்கன்று…. மாவட்ட ஆட்சியரின் நேரடி ஆய்வு…!!

மாவட்ட ஆட்சியர் குளித்தலை ஊராட்சி பகுதிகளில் நடக்கும் பல்வேறு பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார்.  தமிழ்நாடு நீடித்த நிலையான பசுமை போர்வை திட்டம் மூலம் மானிய விலையில் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில்   கரூர் மாவட்டத்திலுள்ள  கீழ் குளித்தலை வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் மூலமாக ஒரு மரக்கன்றுக்கு ரூ.14 விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இவ்வாறு மானியமாக செம்மரம், தேக்கு மற்றும் மகோகனி போன்ற மரக்கன்றுகள் மானியமாக விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் பராமரிப்பு செலவுக்கு ஒரு மரக்கன்று […]

Categories
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்… அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு சுதந்திர போராட்ட தலைவர்களின் கருத்துக்களை கொண்டு சேர்க்கும் வகையில் பேச்சு போட்டிகள் நடத்தப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்களின் சிந்தனைகளை இளைய தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடத்தப்படும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிவித்திருந்தார். இதுபற்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, அண்ணல் அம்பேத்கர், முத்தமிழ் கலைஞர், பேரறிஞர் அண்ணா, […]

Categories
மாநில செய்திகள்

தோழியாக மாறிய கலெக்டர்…. நெகிழ்ந்து போன மாணவர்கள்…. மகிழ்ச்சியான உரையாடல்….!!!!

மாவட்ட ஆட்சியர் பள்ளி மாணவர்களுடன் கலந்து ஆலோசனை நடத்தியுள்ளார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் பள்ளி மாணவர்களுடன் உளவியல் ரீதியாக கலந்து ஆலோசனை நடத்தினார். இவர் மாணவிகளின் குடும்ப சூழ்நிலை, அரசின் நலத்திட்டங்கள், ஆசிரியர்களின் செயல்பாடுகள், அரசு பள்ளிகளின் கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகள் ஆகியவற்றை கேட்டறிந்தார். இவர் மாணவிகளின் மனதில் இருக்கும் கருத்தை எளிமையான முறையில் அறிந்துகொண்டார். இவர் பள்ளிகளில் இருக்கும் குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, சத்துணவு போன்றவற்றையும் அறிந்து கொண்டார். இதனையடுத்து நம் பள்ளி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மகளிர் சுயஉதவிக்குழு…. எல்லாம் சரியா நடக்குதா…. ஆய்வு செய்ய ஆட்சியர் உத்தரவு….!!

மகளிர் சுயஉதவிக்குழுவினர் பெற்ற கடன்உதவியை சரியாக பயன்படுத்தினார்களா என்று ஆய்வு செய்ய ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம்  சார்பாக ஆய்வுக் கூட்டம்  ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நேற்று  நடைபெற்றுள்ளது . இந்த கூட்டத்தில் ஆட்சியர் கூறியது, நமது மாவட்டத்தில் ஊரக மற்றும் நகர்ப்புறத்தில் 7 ஆயிரம் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உள்ளன. அதில்  5,119 மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

தேர்தல் அலுவலர்களே!…. இன்று (பிப்.22) காலை 7 மணிக்குள்…. கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 19-ஆம் தேதி நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேர்தல் பணியில் ஈடுபட்ட தேர்தல் அலுவலர்கள் தபால் வாக்கு கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அதன்படி 1,532 பேருக்கு தபால் வாக்குகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனை அனைவரும் முறையாக விண்ணப்பித்து இன்று காலை 7 மணிக்குள் தேர்தல் அலுவலரிடம் தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

மது பிரியர்களுக்கு ஷாக்!…. நாளை (பிப்.22) டாஸ்மாக் கடைகள் மூடல்…. கலெக்டர் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழக முழுவதும் நேற்று முன்தினம் (பிப்.19) நகர்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்கு பதிவின் போது ஏற்பட்ட சில குளறுபடிகள் காரணமாக இன்று (பிப்.21) ஒரு சில இடங்களில் மறுவாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது. அதன்படி இன்று 7 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து நாளை (பிப்.22) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் டாஸ்மாக் கடைகளை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பக்தர்களே!…. இன்று இரவு 10.30 மணி முதல் நாளை இரவு 10.30 மணி வரை தடை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

நாளை ( பிப்.16 ) பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கோவில்களில் தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, “திருவண்ணாமலையில் தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. மேலும் நோய் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பௌர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி […]

Categories
மாநில செய்திகள்

“விவசாயிகளுக்கு ஜாக்பாட்!”…. ரூ.15,000 பெற உடனே அப்ளை பண்ணுங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் இனத்தை சேர்ந்த விவசாயிகள் விவசாய பைப்லைன் அமைக்க ரூ.15,000 மற்றும் புதிய மின் மோட்டார் வாங்க ரூ.10,000 மானியம் பெறுவதற்காக விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் இந்த மானியத்தொகையை பெறுவதற்கு விவசாயிகள் http://tahdco.com/ என்ற தாட்கோ இணையதளத்தின் மூலம் விவசாய நிலத்திற்கான அடங்கல், சிட்டா புலப்பட நகலுடன் சேர்த்து விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள்…. பிரச்சார ஊர்வலம்…. தொடங்கி வைத்த ஆட்சியர்….!!

குழந்தை திருமணம் தடுப்பு குறித்த பிரச்சார ஊர்வலம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றுள்ளது. தமிழக அரசின் சார்பில் தேனி மாவட்டத்தில் குழந்தை திருமண தடுப்பு குறித்த விழிப்புணர்வு பிரச்சார ஊர்வலம் நடைபெற்றுள்ளது. இதில் குழந்தை திருமணம் தடுப்பு குறித்தும், குழைந்தகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊர்வலத்தை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் கொடி அசைத்து தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில் பங்களாமேட்டில் தொடங்கிய இந்த ஊர்வலம் பழைய பேருந்து நிலையம், பெரியகுளம் சாலை வழியாக […]

Categories
மாநில செய்திகள்

பள்ளிக்கு திடீர் விசிட்…. சத்துணவில் சுவை இல்லை…. எச்சரித்த மாவட்ட ஆட்சியர்….!!!

சத்துணவில் சுவையில்லை, உணவு சரியாகச் சமைக்கப்படவில்லை என்று மாவட்ட ஆட்சியர் சமையல்காரர்கள் எச்சரித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பள்ளியில் சத்துணவு கூடத்தில் நுழைந்த அவர் சத்துணவு உணவை சாப்பிட்டு பார்த்தார். அது சரியாக சமைக்கபடவில்லை எனவும், உணவில் எந்த சுவையும் இல்லை என்றும் கூறி அங்குள்ள சமையல் செய்பவர்களை எச்சரித்தார். தொடர்ந்து அப்பகுதியில் இருந்த நியாயவிலைக் கடைக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் […]

Categories
தேசிய செய்திகள்

“எங்க சார் அடுப்பே எரியல சமைச்சிட்டு இருக்கீங்க?”…. கலெக்டரை கலாய்த்து தள்ளிய மக்கள்…. வைரல்….!!!!

உத்திரபிரதேசம் கான்பூர் மாவட்ட கலெக்டர் ராஜ் சேகர். இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்தில் அடுப்பில் பாத்திரத்தில் ஏதோ உணவுப்பண்டம் இருக்கிறது. அந்த கரண்டியை பிடித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்திருந்தார். அந்தப் படத்துடன் அவர் போட்டிருந்த கேப்ஷனில் என்னை எல்லோரும் வாழ்த்துங்கள். சமையலில் எனது அதிர்ஷ்டம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம். காலை உணவுக்கு போஹா தயாரித்துக் கொண்டிருக்கிறேன். என் வீட்டு ஹோம் மினிஸ்டர் தனக்கு உதவிகிறார் என்று கூறியிருந்தார். ஆனால் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஏற்காடு மலைப்பாதையில் சாலை வசதி…. நடந்தே சென்று ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர்….!!!!

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அனைத்து துறை அரசு அலுவலர்களும் முகாமிட்டு பொதுமக்களின் அடிப்படை தேவைகளான சாலை மின்சாரம் குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும் சுற்றுலா பயணிகளை அதிக அளவில் கவரக்கூடிய வகையில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் சேலம் மண்டல வனப்பாதுகாவலர் பெரியசாமி, மாவட்ட வன அதிகாரி கௌதம், […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : ஒமிக்ரான் பரவல்…..  மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்….!!!!

ஒமைக்ரான் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். தென்னாப்பிரிக்காவில் உருவான உருமாறி ஒமைக்ரான் தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. இதனால் இவற்றை எப்படி கட்டுப்படுத்துவது என்று அனைத்து நாடுகளும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 நெருங்கியது. தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஒமைக்ரான்  தொற்று பரவி வருகிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : மானியத்துடன் 50 லட்சம் வரை கடன்…. சிறப்பு கடன் முகாம்…. உடனே போங்க….!!!

மதுரையில் டிசம்பர் 8-ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை சிறு குறு தொழில்களுக்கான சிறப்பு கடன் முகாம் நடைபெறுகின்றது. இதில் 25 சதவீத மானியத்துடன் 50 லட்சம் வரை கடன் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “சிறு குறு தொழில்களுக்கான சிறப்பு முகாம் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம். இதில் 25 சதவீத மானியத்துடன் 50 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இந்த முகாம் டிசம்பர் 8ஆம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

மூக்கு வாயை மூடாதவர்கள்…. தண்டம் விதித்த ஆட்சியர்….!!!!

தேனியில் சாலையில் வாகனங்களை நிறுத்தி, முகக்கவசம் அணியாத பொதுமக்களை மாவட்ட ஆட்சியர் கடிந்து கொண்டதுடன், அவர்களுக்கு தண்டம் விதிக்கவும் உத்தரவிட்டார். கொரோனா பரவலை கட்டுபடுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்வதுடன் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இந்த நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். முகக் கவசம் […]

Categories
மாவட்ட செய்திகள்

மதுரை மக்களே…. தடுப்பூசி போடாதவர்களுக்கு மாநகராட்சி அதிரடி உத்தரவு…. உடனே போங்க….!!!!

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு போடப்பட்டது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமாக குறைந்து நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கடந்த ஜனவரி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மிக தீவிரமாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள்  பொது இடங்களுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்படுகிறது […]

Categories
மாவட்ட செய்திகள்

‘குடியுரிமையை ரத்து செய்து கருணைக்கொலை செய்யுங்கள்’…. மாவட்ட ஆட்சியரிடம் திருநங்கை கண்ணீர் மல்க மனு….!!

தேனி மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது தேனி பாரஸ்ட்ரோடு 6 வது தெருவை சேர்ந்த திருநங்கை ஆராதனா என்பவர் கண்ணீர் மல்க ஒரு மனுவை கொடுத்தார். இவர் தேனி ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். அவர் கொடுத்த மனுவில், “நான் 2018 ஆம் ஆண்டு கோர்ட் உத்தரவின்படி இரண்டாம் நிலை காவலர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றேன். ஆனல் அடுத்த கட்ட தேர்வுக்கு இதுவரை அழைப்பு வரவில்லை. தேர்வில் […]

Categories
மாநில செய்திகள்

Hi ஒரு SMS போடுங்க…. ரகசியம் பாதுகாக்கப்படும்… கரூர் ஆட்சியர் அதிரடி…!!!

கரூரில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயது மாணவி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதனால் கரூர் மாவட்ட ஆட்சியர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் பெண் குழந்தைகள் மாவட்ட நிர்வாகத்தின் உதவியை நாட 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் உதவிகளுக்கு ‘89033 31098’ […]

Categories
மாவட்ட செய்திகள்

“அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்”…. நரிக்குறவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை….!!

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திரன் ரெட்டி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து உதவி தொகை, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, சாலை வசதி, மின் இணைப்பு மற்றும் வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட 191 மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கொடுத்துள்ளனர். அந்த மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி அதன் மீது 3 […]

Categories
மாவட்ட செய்திகள்

குப்பனூர் மலை பாதையில் போக்குவரத்து அனுமதி… 30கி.மீ செல்ல வேண்டும்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு….!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 4ஆம் தேதியன்று அதிக கனமழை பெய்தது. இதனால் குப்பனூர் வழியாக ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டதால் அந்த வழியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதையடுத்து மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள மண்சரிவு சீரமைப்பு பணிகள் கடந்த 7ஆம் தேதி நிறைவடைந்துள்ளது. ஆனால் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதற்கிடையில் சேலம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சிவசண்முகராஜா மற்றும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் ஆகியோர்கள் மண்சரிவு சரி செய்யப்பட்ட […]

Categories

Tech |