உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழா இன்று இரவு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதற்க்கு நாகை மாவட்டத்தில் மட்டுமல்லாது, அனைத்து மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்களும் திரளாக பங்கேற்பார்கள். இன்று மதியம் கொடி ஊர்வலம் நாகையிலிருந்து தொடங்கி நாகூரில் முடிவடைந்து, இரவு 8 மணிக்கு கொடியேற்ற நிகழ்வு தொடங்கப்படும். இதனை தொடர்ந்து 14 நாட்கள் கந்தூரி விழாவானது நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் வந்து இரண்டாம் தேதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான பெரியாண்டவருக்கு […]
Tag: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் மாரியம்மன் கோவிலில் வருடம் தோறும் குடமுழுக்கு விழா கொண்டாடப்படுவது வழக்கம். இதற்கு உள்ளூர் மட்டும் இல்லாது வெளியூர்களிலிருந்து பக்தர்கள் வருவார்கள். இந்த நிலையில் இந்த வருடம் நத்தம் மாரியம்மன் கோயில் குடமி குடமுழுக்கு விழாவையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறை நாளை ஈடு செய்வதற்காக அக்டோபர் 1ஆம் தேதி வேலை நாள் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நியாயவிலைக் கடைகளில் சிறப்பு முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நியாயவிலைக் கடைககளுக்கு சென்று பொருட்கள் வாங்குவதில் மிகவும் சிரமப்படுகின்றனர். இவர்களின் நலனை கருத்தில் கொண்டு தங்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நியாயவிலைக் கடைகளில் உள்ள படிவத்தினை பெற்று அதில் தங்களுக்கு பதிலாக பொருட்கள் வாங்கும் மாற்று நபரின் விவரங்கள் குறித்து பூர்த்தி செய்ய வேண்டும். […]
மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் ஏப்ரல் 22-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருக்கும் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாம் மூலமாக தனியார் துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஊழியர்களை நேரடியாக தேர்ந்தெடுக்கிறது. இந்த முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருக்கும் பதிவு ரத்து செய்யப்பட மாட்டாது. இந்த […]
கலை விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவர் கடந்த 2020-21 ஆம் ஆண்டிற்கான கலை விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார். இந்த விருது மொத்தம் 15 பேருக்கு வழங்கப்படும். இந்த விருது தகுதியின் அடிப்படையில் 5 பிரிவுகளாக வழங்கப்படுகிறது. அதாவது 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு கலைஇளமணி விருதும், 19-35 வயதுடையவர்களுக்கு கலைவளர் மணி விருதும், 36-50 வயதுடையவர்களுக்கு கலைச்சுடர் […]
கொரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினர் கருணைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது கொரோனா தொற்றால் இறந்தவர்களின் வாரிசுகள் கருணைத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார். இதற்கான விண்ணப்பங்கள் www.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக பெறப்படுகிறது. இதன் மூலமாக பெறப்படும் விண்ணப்பங்கள் அதிகாரிகளால் பரிசீலனை செய்யப்பட்ட பிறகு கருணைத் தொகை வழங்கப்படும். இதுவரை 865 மனுக்கள் பெறப்பட்டு உள்ளது. இதில் 781 மனுதாரர்களுக்கு […]
நாளை மதுபான கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மகாவீரர் ஜெயந்தி முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது நாளை அரசு மற்றும் தனியார் மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என கூறியுள்ளார். இந்த விதிகளை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
நாளை மதுக்கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை மகாவீரர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு வாணிப கழக மதுபான கடைகள் மூடப்படும். இதனையடுத்து எப்.எல்-1, எப்.எல்-2, எப்.எல்-3, எப்.எல்-3ஏ, எப்.எல்-3ஏஏ உரிமம் பெற்ற மதுபான கடைகள் மூடப்படும். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஒருங்கிணைந்த சேவை மைய பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த சேவை மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலமாக நடத்தப்படுகிறது. இந்த மையத்தில் கூடுதலாக 6 பணியாளர்களை நியமிக்குமாறு சமூகநல இயக்குனர் அறிவித்துள்ளார். அதன்படி ஒருங்கிணைந்த சேவை மையங்களில் ஆலோசகர் பணிக்கு 4 காலியிடங்கள் உள்ளது. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் முதுகலை சமூகப்பணி மற்றும் சட்டப் படிப்பு முடித்திருக்க வேண்டும். இதற்கு பெண்கள் ஆலோசனை […]
பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தடை செய்யப்பட்ட நெகிழி பொருட்களை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக மஞ்சப்பை உபயோகப்படுத்தப்பட வேண்டும் என கூறப்பட்டது. இதன்பிறகு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில், தமிழக முதல்வரின் பிளாஸ்டிக் மாசில்லா திட்டத்தின்படி பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து மஞ்சள் பையை உபயோகப்படுத்த […]
மார்ச் 26 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஒன்று நடக்க உள்ளதாக அம்மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவினால் கடந்த 2 ஆண்டுகளாக படித்து முடித்த இளைஞர்கள், வேலை இல்லாமல் தவித்து வருகின்றன. இந்த நிலையில், சென்ற வருடம் இறுதியில் தமிழகத்தில் போடப்பட்டிருந்த ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. எனவே தற்போது தான் தமிழகம் முன்பு இருந்த நிலைக்கு மீண்டும் திரும்பி வருகிறது. இதையடுத்து அரசுத் தரப்பில் பல வேலை வாய்ப்புகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு […]
எட்டாம் வகுப்பு படித்து இருந்தாலே போதும் இதோ உங்களுக்கான வேலை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாதரெட்டி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழக அரசின் உரிய அனுமதியால், விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் மூலமாக மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஒன்று நடத்தப்பட உள்ளது. அதன் அடிப்படையில் விருதுநகர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள V.V.வன்னியபெருமாள் பெண்கள் கல்லூரியில், வருகின்ற மார்ச் 31-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாமானது நடக்க உள்ளது. […]
சிறுபான்மையினர் மக்களுக்கு கடன் வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரசீயர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் போன்ற சிறுபான்மையினர் மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதில் சிறு தொழில் கடன்கள், கறவை மாடுகள் கடன், கல்விக் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான கடன்கள், தனிநபர் கடன்கள் போன்றவைகள் வழங்கப்படுகிறது. இந்தக் கடன்களை பெற 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். இது குடும்பத்தில் […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து இலவச தையல் மெஷின் வழங்கப்படுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தையல் மெஷின் வழங்கப்பட இருக்கிறது. இதற்காக விண்ணப்பிக்க வருபவர்கள் 20 முதல் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இவர்கள் தையல் கலை படித்த சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அதன்பிறகு ஆண்டு வருமானம் 1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். இதற்கு சிறுபான்மையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் விண்ணப்பிக்கலாம் எனவும், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் விதவை […]
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளதாக ஆட்சியர் அறிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக கடலூர் மாவட்டத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறாமல் இருந்துள்ளது. இந்நிலையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மீண்டும் மாவட்ட ஆட்சியர் வாரந்தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் என கூறியுள்ளார். இந்த கூட்டம் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று நடைபெறும். இந்த குறைதீர் கூட்டங்களில் மக்கள் நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் தங்களது குறைகளை மனுவாக எழுதி கொடுக்க வேண்டும். இந்த குறைதீர் கூட்டங்களுக்கு […]
தமிழகத்தில் புதிய தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் ராமநாதபுரத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு தற்போது ஜூன் 14 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் தளர்வுகளுடன் கூடிய புதிய கட்டுப்பாடு விதிகளை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ளார். அதன்படி ராமநாதபுரத்தில் உள்ள முதுகுளத்தூர், கமுதி பேருந்து நிலையம், சாயல்குடி பள்ளி மைதானம், ராமேஸ்வரம் ரயில் நிலையம், ஆர்.எஸ்.மங்கலம், அபிராமம், பார்த்திபனூர், தொண்டி பஸ் நிலையம், கீழக்கரை, […]
சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம், மத்திய அரசால் தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், புத்த மதத்தினர், சீக்கியர், பார்சி மற்றும் ஜைன மதத்தவர்களை சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களாக அறிவிக்கபட்டிருந்தனர். இந்நிலையில் இந்த சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு தனியார் கல்வி நிலையங்களில் 2020-2021 ம் கல்வி ஆண்டில் 1-10 வகுப்பு […]