கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் 2022-23 நிதி ஆண்டுக்கான மஞ்சப்பை விருதுகளை சட்டப்பேரவையில் அறிவித்தார். அதன்படி ஒருமுறை உபயோகப்படுத்தி தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் தடையை திறம்பட செயல்படுத்தி, தங்களது பள்ளி, கல்லூரி மற்றும் வணிக வளாகங்களை பிளாஸ்டிக் இல்லாமல் மாற்றுபவர்களுக்கு இந்த விருது வழங்கப்படும். பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக பாரம்பரியமாக சுற்றுச்சூழலுக்கு உகந்த மஞ்சப்பை […]
Tag: மாவட்ட ஆட்சியர் தகவல்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஜெயச்சந்திர பானு ரெட்டி சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டத்தின் கீழ் புதிதாக தொழில் தொடங்க விருப்பம் இருப்பவர்கள், ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழில் செய்பவர்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்பினர், உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள், மற்றும் குரு நிறுவனங்கள், சுய உதவி குழுவினர் ஆகியோர் பயன்பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் உதவி பெற 1 கோடி ரூபாய் வரையிலான திட்ட தொகை கொண்ட […]
கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, 2023- ஆம் ஆண்டு உலக மகளிர் தினம் முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் சாதனை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது வழங்கப்பட உள்ளது. தமிழக முதலமைச்சர் 8 கிராம் எடையில் தங்க பதக்கம், 1 லட்ச ரூபாய்கான காசோலை, மற்றும் சால்வை ஆகியவற்றை வழங்க உள்ளார். வருகிற 10-ஆம் தேதிக்குள் தகுதி வாய்ந்த நபர்கள் தமிழக அரசின் http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் […]
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, நாளை இந்திலியில் இருக்கும் டாக்டர் ஆர்.கே.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் வேலை வாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், இ.எம்.ஆர்.ஐ கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இங்கு 108 ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. […]
டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வேலைவாய்ப்பு மைய வளாகத்தில் நடத்தப்பட்டு வருகின்றது. தேனி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்காக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த மையத்தில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-2, குரூப்-4க்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் சிறந்த வல்லுனர்களை கொண்டு சிறப்பான முறையில் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதனைதொடர்ந்து வகுப்புகளில் இலவச பாடக்குறிப்புகள், குழு விவாதங்கள், வினாடி-வினா போன்ற பயிற்சிகள் அளிக்கப்படும். மேலும் […]
சிவகங்கையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக இதுவரை 41 வழக்குப்பதிவுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தனது செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது ;- சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், காரைக்குடி, மானாமதுரை, சிவகங்கை ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் இந்த நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் முழு கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் 4 சட்டமன்ற தொகுதிகளிலும் 3 […]
தேர்தலை முன்னிட்டு இணையதளம் மூலம் நடைபெறும் தேர்தல் விழிப்புணர்வு போட்டியில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல்லில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட ‘பேட்ஜ்’கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ‘பேட்ஜ்’கள் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு மாவட்ட […]
சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக பெயர் சேர்க்கப்பட்ட வாக்காளர்களில் 659 வாக்காளர்களுக்கு அடையாள அட்டை சிறப்பு முகாமில் பதிவிறக்கம் செய்து வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்திருக்கும் 659 வாக்காளர்களுக்கு அடையாள அட்டை பதிவிறக்கம் செய்யப்பட்டு சிறப்பு முகாமில் வழங்கப்பட்டது என்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். புதிய புகைப்பட அடையாள அட்டைகள் e-EPIC செயலி மூலம் சிறப்பு முகாமில் பதிவிறக்கம் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. இந்த […]
புதிதாக வாக்காளர் அட்டை விண்ணப்பித்தவர்களுக்கு தபால் மூலம் புகைப்பட அடையாள அட்டை அனுப்பி வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். வாக்காளர் அடையாள அட்டை புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு e-EPIC என்ற செயலி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கூறியிருந்தார். இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் சிறப்பு முறை திருத்தம், தேர்தல் ஆணையம் அறிவுரையின்படி மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 9,871 வாக்காளர்களும், […]
சிவகங்கையில் ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட பணம் மற்றும் பொருள்களை வாகன சோதனையின் போது தேர்தல் நிலை கண்காணிப்பு குழு மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழு மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் இதுவரை ரூ.54 லட்சத்து 4 ஆயிரத்து 180 பணம் பறிமுதல் செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் பணியில் ஈடுபட்டுவரும் அலுவலர்களின் வாகனத்தில் ஜி.பி.எஸ். கருவி […]
திருவள்ளூர் மாவட்டத்தில் 70 இடங்களில் எந்த தளர்வும் கிடையாது என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ஊரடங்கு குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. இதையடுத்து நேற்று செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று (நேற்று) வரை 9 ஆயிரத்து 315 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர். மேலும் 3 ஆயிரத்து 937 பேர் மட்டுமே […]