நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் நீலகிரி மாவட்டத்தை கொரோனாவில் இருந்து மீட்க கடும் கட்டுப்பாடுகளை விதித்தார். இவரது முயற்சியால் நீலகிரி மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 100 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த வாரம் அவருடைய மகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து தற்போது அவருக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த மாவட்ட மக்கள் சோகத்தில் உள்ளனர்.
Tag: மாவட்ட ஆட்சியர்
ஆட்சியரின் உத்தரவின்படி உத்தமபாளையத்தை சேர்ந்த 15 திருநங்கைகளுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள உத்தமபாளையம், சின்னமனூர், கம்பம், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் திருநங்கைகள் தங்களுக்கும் புதிய ரேஷன் கார்டு வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்த கோரிக்கைகளில் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்திருந்த திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் உத்தமபாளையத்தில் வைத்து 15 திருநங்கைகளுக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் அரசு விடுமுறை நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் கோயில்கள், தேவாலயங்கள் மற்றும் மசூதிகள் ஆகிய வழிபாட்டுத் தலங்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மட்டுமே பொதுமக்கள் செல்வதற்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் அரசு விடுமுறை தினங்களான இன்று முதல் 17ஆம் தேதி வரை […]
தூத்துக்குடி மாவட்டத்தில் தபால் தந்தி காலனியில் தெய்வானை என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் கடந்த மே மாதம் இறந்துவிட்டார். இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.அதில் ஒருவர் மனவளர்ச்சி குன்றியவர், மற்றொருவர் இருதயநோய் குறைபாட்டுடன் பிறந்தவர். இந்நிலையில் வருமானம் ஏதும் இல்லாமல் இரண்டு பிள்ளைகளை வைத்து கஷ்டப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. அந்த முகாமிற்கு சென்று மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜாவை சந்தித்து மனு […]
தமிழகம் முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வரை 4 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதையடுத்து தமிழகம் முழுவதும் நாளை ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் நாளை 5 மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. இது குறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் அரவிந்த், நாளை குமரி மாவட்டத்தில் நடைபெற உள்ள 5-வது மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தி கொள்ளும் […]
சேலம் மாவட்டத்தில் வருகின்ற 10-ஆம் தேதி வரை தடுப்பூசி முகாம் நடத்தப்பட உள்ளது. அதில் 2 லட்சத்து 10 பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியர்தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள மொத்த மக்கள்தொகை 38 லட்சத்து 33 ஆயிரத்து 280 பேர். இதில் 18 வயதுக்கு மேற்பட்ட 27 லட்சத்து 98 ஆயிரத்து 194 பேர் இருக்கின்றனர். இவர்களில் 17 லட்சத்து 17 ஆயிரத்து 306 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இதில் 61%.மீதமுள்ள […]
மதுரை மாவட்டத்தில் பொதுமக்கள் 24 மணி நேரமும் புகார் அளிக்கும் வகையில் புதிய குறைதீர்ப்பு கட்டுப்பாட்டு மையம் திறக்கப்பட்டுள்ளது.. புகாரின் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகர் தெரிவித்துள்ளார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.. புகார் மைய எண் : 0452-2526888, 99949 09000
மதுரையில் உள்ள, கோரிப்பாளையத்தில் திருநங்கைகள் புதிதாக திறந்துள்ள ட்ரான்ஸ் கிச்சன் என்ற உணவகம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேல் வீட்டிலேயே உணவை சமைத்து சிறிய நிகழ்ச்சிகளுக்கு வழங்கிவந்த ஜெயசித்ரா சக திருநங்கைகளுடன் சேர்ந்து, இந்த உணவகத்தை தொடங்கியுள்ளனர். திருநங்கைகளின் முயற்சியை பாராட்டும் விதமாக இந்த உணவகத்தை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர் நேரில் வந்து திறந்து வைத்தார். உணவு சமைத்தல் மற்றும் பரிமாறுதல் போன்ற அனைத்து விதமான பணிகளையும் திருநங்கைகளை செய்கின்றனர். […]
தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்ட ஆட்சியருக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: “மக்களுடைய பிரச்சினைகளை மாவட்ட அளவிலேயே தீர்த்து வைக்க மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்கள் கனவுகள் நிறைந்த கண்களோடு, கவலைகள் நிறைந்த இதயத்தோடு, காத்திருப்பதை பார்க்கும் பொழுது மனம் கரைகின்றது. அதிக மனுக்களை தீர்த்து வைக்கும் மாவட்ட ஆட்சியர்களுக்கு கேடயம் வழங்குவதை விட, குறைவான மனுக்கள் எந்த மாவட்டத்தில் இருந்து வருகிறதோ அவர்களுக்கு கேடயம் அளிக்கும் நடைமுறையை […]
அரசு பழங்குடியினர் மேல்நிலைபள்ளி மற்றும் விடுதியில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வில் ஈடுபட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்துள்ள முள்ளுகுறிச்சியில் அரசு பழங்குடியினர் நல உண்டு உறைவிட மேல்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயாசிங் திடீரென அந்த பள்ளிக்கு சென்று ஆய்வு செய்துள்ளார். அப்போது பள்ளியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா எனவும், வகுப்பறைகளில் கிருமிநாசினிகள் வைக்கப்பட்டுள்ளதா எனவும் பார்வையிட்டார். இதனையடுத்து பள்ளியில் குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் […]
நாளை மறுநாள் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால் அனைத்து மாவட்ட ஆட்சியர் உங்களிடம் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை செய்ய உள்ளார்.கடந்த ஆண்டு முதல் பரவி வந்த கொரோனா தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே பகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. நடப்பு ஆண்டிற்கான பள்ளிகள் செப்டம்பர் 1ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதனால் பள்ளிகள் திறப்பதற்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், அந்த மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட ஆட்சியரிடம் […]
கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த சூழலில் தொடர்ச்சியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்ததன் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் பாதிப்பு குறைந்து வருகிறது. ஆனால் கேரள மாநிலத்தில் மட்டும் தொற்று குறைந்தபாடில்லை. முதல் அலையை சிறப்பாகக் கையாண்ட கேரள அரசு இரண்டாவது அலையை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கை மீண்டும் அமல்படுத்தியுள்ளது . இவ்வாறு கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்திலும் பரவ வாய்ப்புள்ளதால், கோவையில் திருமண மண்டபங்களில் […]
பாரத பிரதமர் கிராம சாலை திட்டம் சார்பாக ஊரக சாலைகளை தரமாக அமைப்பது குறித்து கருத்தரங்கம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ஆட்சியர் விஷ்ணு அதிக விபத்துக்கள், உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு காரணம் சரிவர சாலைகள் இல்லாதது என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், நம்முடைய பகுதிகளில்தான் அதிக விபத்துகள் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.இதற்கு காரணம் சாலைகள் சரிவர போடாதே. எனவே சாலைகளை தரமானதாக அமைக்க வேண்டும். சாலைகள் போடும் ஒப்பந்ததாரர்கள் தரமானதாக போடுகிறார்களா? […]
கொரோனா காலத்திலும் ரத்தத்தை தானம் செய்த 25 தன்னார்வலர்களை பாராட்டி மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் அவர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கியுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் 14 ரத்த சேமிப்பு நிலையங்களும், 3 அரசு ரத்த வங்கிகளும் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டில் மாவட்டத்தில் உள்ள ரத்த வங்கிகள் மூலம் 5,077 யூனிட்டுகள் ரத்தம் சேகரிக்கப்பட்ட நிலையில் அதில் 2,308 யூனிட்டு ரத்தம் கர்பிணிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த ஆண்டில் ஜூன் மாதம் வரை 2,912 யூனிட்டு […]
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துரையின் சார்பில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமில் 100 க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இந்த முகாம் திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றுள்ளது. இங்கு திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்திவேலூர், பள்ளிபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் திருநங்கைகளுக்கான அடையாள அட்டை, ஆதார் […]
தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைப்பட்டுள்ள சிறப்பு கண்காட்சியை ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சிறப்பு கைத்தறி கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில் கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் குறித்தும் கைத்தறி தொழிலை மேம்படுத்தி நெசவாளர்களின் வருவாயை உயர்த்தி கௌரவிக்கும் வகையிலும் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய கைத்தறி […]
கிராமங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் பகுதிக்குட்பட்ட கிராமங்களில் நடைபெற்றுவரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இந்நிலையில் தாழையூத்து கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்காக தலா 3 லட்சம் மதிப்பீட்டில் சோலார் விளக்குகளுடன் கூடிய பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகின்றது. அதனை நேரில் சென்று பார்வையிட்ட ஆட்சியர் அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின பொதுமக்களிடம் […]
நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலையில் காப்பி மற்றும் மிளகு உற்பத்தி செய்யப்படும் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 28 தொழில் குழுக்களை கொண்ட ஒருங்கிணைத்த மிளகு மற்றும் அரப்பளி காபி உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிலையம் உள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் நேற்று நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். இந்நிலையில் கொல்லிமலையில் வசிக்கும் மக்கள் அவர்கள் உற்பத்தி செய்யும் காப்பி மற்றும் மிளகை […]
தேனி மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவித்து வரும் பழங்குடியின மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். தேனி மாவட்டம் போடி அடுத்துள்ள சிறைக்காடு பகுதியில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் 45 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பு அரசு சார்பில் அவர்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டி கொடுத்துள்ளனர். இந்நிலையில் பழங்குடியின மக்கள் வசிக்கும் குடியிருப்புகளில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாததால் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து […]
முககவசம் அணியாத வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்தால் அந்த கடைக்கு சீல் வைக்கப்படும் என்று நாகை மாவட்ட எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்ட வருகிறது. ஆனால் பொதுமக்கள் சிலர் இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் ,முக கவசம் அணியாமலும் அலட்சியமாக நடந்து கொள்கின்றன . இந்நிலையில் நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் முக கவசம் […]
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் அடங்கிய தொகுப்பை மாவட்ட ஆட்சியர் லலிதா வழங்கி தொடங்கி வைத்தார் . மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மற்றும் குழந்தை பருவ பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவுகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. கடந்த மே மாதம் 1-ம் தேதி முதல் தற்போது வரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சுமார் 964 குழந்தைகளில் மயிலாடுதுறை, குத்தாலம் ,சீர்காழி மற்றும் கொள்ளிடம் ஆகிய பகுதிகளில் உள்ள […]
கடந்த இரண்டு ஆண்டுகளில் 188 போலி மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கத்தின் கீழ் செயல்படும் அமலாக்கத்துறை மருத்துவ குழுவினர் 2019 2020 ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் 157 போலி மருத்துவர்களை கண்டறிந்து ஐபிசி 419, 420 பிரிவின் கீழ் சிறையில் அடைத்தனர். இதேபோன்று 2020-2021 ஆண்டுகளில் 31 பேரை கண்டறிந்துள்ளனர். இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் போலி கால்நடை மருத்துவர்கள் செயல்பட்டு வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருப்பதால் போலி கால்நடை மருத்துவர்கள் பிடிபட்டால் […]
தேனி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மாநில பூச்சிக்கொல்லி ஆய்வகத்தை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வைகை அணை பகுதியில் வேளாண்மை துறை சார்பில் செயல்பட்டு வரும் மாநில பூச்சிக்கொல்லி ஆய்வகம் மற்றும் குறியீட்டு மையத்தை மாவட்ட ஆட்சியர் முரளிதரன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நெல்லை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் உள்ள தனியார் பூச்சிமருந்து விற்பனை நிலையத்தில் இருந்து விவசாயிகளுக்கு […]
நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட ஆட்சியர் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் வளர்ச்சித்திட்ட பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் புதிதாக மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்ற ஸ்ரேயா சிங் மாவட்டத்தில் பகுதிகளுக்கு சென்று ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் நேற்று பரமத்திவேலூர் நகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகளை நேரில் ஆய்வு செய்துள்ளார். இதனையடுத்து வளம் மீட்பு பூங்காவில் அமையவுள்ள மட்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் எந்திரம் அமைக்கும் இடத்தையும், அதன் […]
தேனி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் விபத்தடைந்த இருவருக்கு மாவட்ட ஆட்சியர் உதவிய சம்பவம் அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது. தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்ச்சல் முகாம்களை நேரில் சென்று பார்வையிடுவதற்காக வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது தேனி-போடி செல்லும் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் புறவழி சாலையில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஓன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக […]
நெல்லையில் நேற்று கொரோனா நிவாரண நிதி 2,000 ரூபாய் மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழக்கும் பணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க அரசு பல்வேறு வழிமுறைகளை மேற்கொண்டு வருகின்றது. தடுப்பூசி போடும் பணிகள் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தும் செயல்படுத்தி வருகின்றனர். இதனால் பல்வேறு மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழக அரசு அவர்களுக்கு உதவும் வகையில் கொரோனா நிவாரண நிதி வழங்கியுள்ளது. ஏற்க்கனவே ஒரு […]
மருத்துவச் சீட்டு இல்லாமல் நோயாளிகளுக்கு மருந்துகளை தரக்கூடாது என்று திருப்பூர் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் பல மாவட்டங்களில் தொற்று குறைந்திருந்தாலும், சில மாவட்டங்களில் தொற்று அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது. இதனால் அந்த மாவட்டங்கள் அனைத்திற்கும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அந்தவகையில் திருப்பூர் மாவட்டத்திலும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மாவட்ட ஆட்சியர் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பூரில் கொரோனா […]
விருதுநகர் மாவட்டத்தில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு 1,000 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. மறைந்த தமிழா முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் தலா ஆயிரம் மரக்கன்றுகளை நட வேண்டும் என தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட கலெக்டர் கண்ணன் தலைமையில் 1000 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கியுள்ளது. இதனையடுத்து அவர் விருதுநகர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகளை நடும் பணியை தொடங்கிவைத்துள்ளார். இதனை தொடர்ந்து […]
சுரஜ்பூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் இளைஞரை அறைந்து செல்போனை உடைத்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலான நிலையில் அந்த இளைஞருக்கு புது போன் வாங்கித் தருமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சுரஜ்பூர் மாவட்டத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஊரடங்கை மீறி வாகனத்தில் சென்றதாக இளைஞர் ஒருவரை பிடித்த மாவட்ட ஆட்சியர் ரன்பீர் ஷர்மா அந்த இளைஞரை கன்னத்தில் அறைந்தது மட்டுமல்லாமல் அவரது செல்போனை வாங்கி உடைத்துள்ளார். அது மட்டுமில்லாமல் அந்த இளைஞர் மருந்து வாங்க தான் வந்ததாக தெரிவித்த பின்னரும் […]
சத்தீஸ்கர் மாநிலத்தில், வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் மாவட்ட ஆட்சியரை பணியிட மாற்றம் செய்து முதல்வர் பூபேஷ் பாகல் உத்தரவிட்டுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் தனது இருசக்கர வாகனத்தில் அருகில் உள்ள மருந்து கடைக்கு மருந்து வாங்க சென்றவரை அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மடக்கிப்பிடித்தனர். வண்டியின் ஆவணங்களை போலீசார் இடம் காட்டியபோது அவரின் செல்போனை பிடுங்கி காலில் போட்டு உதைத்தது மட்டுமில்லாமல் அந்த இளைஞரை ஓங்கி கன்னத்தில் அறைந்தார் மாவட்ட ஆட்சியர். […]
சத்தீஸ்கர் மாநிலத்தில் மருந்து வாங்கச் சென்ற இளைஞரை மாவட்ட ஆட்சியரும் காவல் துறையினரும் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சுராஜ்பூரில் சேர்ந்த இளைஞர் செல்போனில் படம் பிடித்ததாக கூறி மாவட்ட ஆட்சியர் ரன்பீர் ஷர்மா இளைஞரின் செல்போனை கேட்கிறார். செல்போனை இளைஞர் கொடுத்ததும் அதை கீழே போட்டு சேதப்படுத்தி விட்டு அவரையும் கடுமையாகத் தாக்கினார். இதையடுத்து அங்கு வந்த காவல் துறையினர் அந்த இளைஞனை கடுமையாகத் தாக்கினர். This brute is […]
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி 50 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நிருபர்களிடம் கூறியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தடுப்பூசி 50 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி நிருபர்களிடம் கூறியுள்ளார். மேலும் சிவகங்கை மாவட்டத்தில் 40 லிருந்து 50 வயதிற்கு உட்பட்டவர்கள் 6 சதவீதம் பேரும், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் 10 சதவீதம் பேரும் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் கொரோனா […]
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி கொரோனா பாதித்தவர்களை இரண்டு மணி நேரத்தில் அரசு மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்தார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் கொரோனா தடுப்புபணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் அவர் பேசியதாவது, பொதுமக்களை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வண்ணம் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் மருத்துவ முகாம் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று […]
பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றத்திற்காக அகிம்சை மற்றும் பிற காந்திய கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்பான பங்காற்றியவர்கள் அமைதிக்கான காந்தி விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;- பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றத்திற்காக அகிம்சை மற்றும் பிற காந்திய கோரிக்கைகளை வலியுறுத்தி சமூகத்தில் புறக்கணிக்கப்பட்ட பிரிவினருக்கு எதிராக இழைக்கப்படும் சமூக நீதி மற்றும் அமைதிக்கான பங்களிப்பு, பொருளாதார மற்றும் […]
கொரோனா சிகிச்சை மையம் திண்டுக்கல் புறநகர் பகுதியில் 150 படுக்கைகளுடன் அமைக்கப்பட உள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் 200 படுக்கை வசதி கொண்ட தனி சிகிச்சை பிரிவு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க செயல்பட்டு வருகிறது. இதுதவிர கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் 30 படுக்கை வசதி கொண்ட தனி சிகிச்சை பிரிவும், பழனி அரசு மருத்துவமனையில் 50 படுக்கை வசதி கொண்ட தனி சிகிச்சை பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேலும் பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் சூழ்நிலை […]
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி காரைக்குடியில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, திருப்பத்தூர் என 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அழகப்பா பொறியியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை மாவட்ட […]
சிவகங்கையில் தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறையை பணியாளர்களுக்கு வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு நாளன்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ள அறிவுரையின்படி தமிழ்நாட்டில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அனைத்து கடைகள், தொழிற்சாலைகள், உணவு நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் பிடி மற்றும் சுருட்டு […]
காஞ்சிபுரம் மாவட்டம், தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் பல்வேறு துறைகள் ஈடுபட்டுவருகின்றன. சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் நிலையில் 100 சதவீத வாக்குப்பதிவு பெற வேண்டும் என்பதற்காக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பல்வேறு துறைகளுடன் இணைந்து தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அந்த வகையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் திட்டம் சார்பில் மாதிரி வாக்குப்பதிவு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் திறந்து வைத்து , தனது வாக்கினையும் பதிவு செய்தார் […]
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் உறுதி மொழி ஏற்று மாற்றுத்திறனாளிகள் உடன் இணைந்து கையொப்பமிட்டுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் முன்னேற்பாடுகளை செய்யுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி பல்வேறு இடங்களில் தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வாக்காளர் விழிப்புணர்வு, உறுதிமொழி கையொப்பம், உறுதிமொழி ஏற்றல் ஆகிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இளையான்குடி பகுதியில் நடைபெற்றது. இளையான்குடி பகுதியில் உள்ள […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிவன்அருள், தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதை தடுத்திட வங்கியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சிவன்அருள், வாக்காளர்களுக்கு தேர்தலையொட்டி பணம் வழங்கப்படுவதை தவிர்க்க வங்கியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். அதில் அவர் பேசுகையில், கிளை வங்கிகளுக்கிடையே வாகனங்களில் பணம் கொண்டு செல்ல முறையான ஆவணங்களை கொடுத்து அனுப்புவது அவசியம். வங்கிகள் நாள்தோறும் ஏ.டி.எம் இயந்திரங்களில் […]
மானாமதுரையில் மண்பாண்ட தொழிலாளர்கள் 100 சதவீதம் வாக்களிப்போம் என்று மண்பாண்ட பொருள்களை வைத்து வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதை மாவட்ட ஆட்சியர் பாராட்டியுள்ளார். சிவகங்கை மாவட்டத்திலுள்ள மானாமதுரையில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு ஏற்படுத்தப்பட்ட பல்வேறு விழிப்புணர்வுகளை மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டி மேற்பார்வையிட்டார். வாக்காளர் தகவல் மையத்தினனை மானாமதுரையில் தாலுகா அலுவலகத்தில் தொடங்கி வைத்துள்ளார். அதன்பின் வாக்குப்பதிவு எந்திரங்களை இயக்குவது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார். அனைவரும் அச்சமின்றி வாக்களிப்போம் என்று பேரூராட்சி முன்பு வைக்கப்பட்டிருந்த வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டாலில் மணி […]
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடத்தப்படும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணைய தலைவர் சுனில் அரோரா தெரிவித்தார். மேலும் தேர்தலை கண்காணிப்பதற்காக அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.பொதுவாக அரசின் சட்டப்படி தேர்தல் தேதி அறிவித்த பிறகு எந்த ஒரு அரசியல் கட்சிகளும் மக்களை கவரும் வண்ணம் எந்தவொரு அறிவிப்பையும் வெளியிட கூடாது. இதனாலேயே கடந்த சில தினங்களுக்கு முன்னதாகவே முதல்வர் எடப்பாடி அதிரடியாக மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். 9 முதல் 12-ம் […]
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உணவு உட்கொள்ளுதல் குறித்த விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறையினர் சார்பில் சரிவிகித உணவு உட்கொள்ளுதல் குறித்து மக்களுக்கு பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கேன்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் ஒட்டி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், ஊரக வளர்ச்சி […]
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்ட ஆண் குழந்தைக்கு இன்று பெயர் சூட்டினார். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜனவரி 1ஆம் தேதி பிறந்த ஆண் குழந்தையை அதன் குடும்பத்தினர் வளர்க்க இயலாத சூழ்நிலை காரணத்தால் அரசுத் தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் சேர்க்க விருப்பம் தெரிவித்தனர். அதன்படி அக்குழந்தை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்க்கப்பட்டது. இந்நிலையில் அரசுத் தொட்டில் குழந்தை […]
தேனி மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதால் அவருடன் பணியாற்றிய அலுவலர்களுக்கு பரிசோதனை செய்யப்படவுள்ளது. தேனி மாவட்ட ஆட்சியரான மரியம் பல்லவி பல்தேவ் கடந்த 3 தினங்களாக காய்ச்சல், உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளால் ஆட்சியர் அலுவலகத்திற்கு வராமல் இருந்துள்ளார். இதனால் அவருக்கு நேற்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு அவர் உடனடியாக சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவிற்கான தனிமைப்படுத்தப்பட்ட […]
தாமிரபரணி தண்ணீர் கடலில் கலக்கும் இடமான முக்காணி ஆற்றுப்பாலத்தில் தடையாக இருந்த அமலைச் செடிகளை ஆட்சியர் அப்புறப்படுத்த செய்தார். தூத்துக்குடி நெல்லை மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்துவருவதினாலும், அணைகளில் தண்ணீர் திறக்கப்பட்டு இருப்பதாலும் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாமிரபரணி ஆறு கடலில் கடக்கும் இடமான ஆத்தூர் பகுதியில் முக்கானி ஆற்றுப்பாலத்தில் தண்ணீர் செல்லும் பாதையை அமலைச் செடிகள் தடுத்துக் கொண்டிருந்தன. இந்த தகவலை அறிந்தவுடன் ஆட்சியர் செந்தில்குமார் அப்பகுதிக்கு விரைந்து சென்று ஆய்வு செய்தார். ஆத்தூர் […]
பெண் ஊராட்சி தலைவர் பணிகளை செய்ய விடாமல் தன்னை அவதூறாக பேசுவதாக சிலர் மீது ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நடைபெறும். ஊரடங்கு காலத்தில் இந்தக் கூட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. மனு கொடுக்க வருபவர்களுக்காக புகார் பெட்டி ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் அதில் தங்கள் மனுக்களை செலுத்தினார். இந்நிலையில் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ஜம்புதுரைக்கோட்டையின் பெண் ஊராட்சி தலைவர் பவுன் தாய் […]
கால்களில் வலுவில்லாத மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கான வாகனத்தை பெற விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பது, “நடப்பு நிதியாண்டில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட கால்களில் முழுமையான வழுவில்லாத மாற்றுத்திறனாளிகளுக்கும் அதற்காக வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படும். இதனை பெறுவதற்கு மாற்றுதிறனாளிகள் விண்ணப்பிக்கலாம். முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டு கால்களில் முழுமையாக வலுவில்லாத மாற்றுத்திறனாளிகள்,மாற்றுத்திறனாளி அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அலுவலக […]
அம்மா மினி கிளினிக் திட்டம் தங்கள் கிராமத்தில் நிறுத்தி வைக்கப்பட்டதால் மேலநெட்டூர் கிராம மக்கள் ஆட்சியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள மேட்டூர் பகுதியில் 5 ஆயிரத்திற்கும் மேல் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அரியலூர், ஆலம்பச்சேரி, மணக்குடி, கார்குடி, ஆலங்குளம், நாடார் குடியிருப்பு ஆகிய கிராமங்கள் இருக்கின்றன. இங்கே உள்ள மக்கள் தங்களுக்கு தலைவலி காய்ச்சல் என அவதிப்படும் பொது மருத்துவ வசதிக்காக மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு 16 கிலோ மீட்டர் தொலைவுக்கு […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கொண்டாடப்படும் ஜல்லிக்கட்டு போட்டியில் புதிய கட்டுப்பாடுகளை மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் நேற்று அறிவித்தார். பொங்கல் தினத்தை முன்னிட்டு, வருகின்ற 14ஆம் தேதி அவனியாபுரத்திலும், 15ஆம் தேதி பாலமேட்டிலும், 16ஆம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. ஆனால் தமிழக அரசு, இந்த ஆண்டு கொரோனா தொற்றின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் […]