தமிழகத்தில் அதிமுக கடந்த சில மாதங்களுக்கு முன்பே இரண்டாக பிரிந்து விட்டது. இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இருவரும் இரண்டு அணிகளாக பிரிந்து மோதிக் கொண்டிருக்கின்றனர். அதே சமயம் மாறி மாறி போட்டி போட்டுக் கொண்டு பல கூட்டங்களையும் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி ஈபிஎஸ் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் காலை 10 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்து கொள்ள […]
Tag: மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 21ஆம் தேதி நடைபெறும் என்று ஓபிஎஸ் சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. பன்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் புதியதாக நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சிநிர்வாகிகள், வெப்பேரியிலுள்ள ஒய்எம்சிஏ திருமண மண்டபத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டு இருக்கும் அந்த அறிவிப்பில், அ.தி.மு.க தலைமை செயலகம் லெட்டர் பேட் மற்றும் சீலுடன் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கான அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு […]
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காணொலிக் காட்சி மூலம் நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை 5 மணி அளவில் எனது தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் அப்போது மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாமல் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என அவர் கூறியிருந்தார். அதன்படி தற்போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. […]
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது. மு. க. ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் தொடங்கியுள்ளது. திமுக நிர்வாகிகள் மீது தொடுக்கும் வழக்குகள், நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. முன்னாக கடந்த பிப்ரவரி 15ம் தேதி திமுக இளைஞரணி சார்பில், அன்பகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சை கிளப்பியது. இதனை தொடர்ந்து ஆதித் தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண சுந்தரம் […]