மானிய விலையில் விதை நிலக்கடலையை அரசே வழங்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயி ஒருவர் கோரிக்கை விடுத்து இருக்கின்றார். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கூட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று முன்தினம் காலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித் தலைமை தாங்க விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் என பலரும் தங்களின் கருத்துக்களை கூட்டத்தில் முன் வைத்தார்கள். அப்போது சிவவிடுதி ராமசாமி என்பவர் கூறியுள்ளதாவது, காடுவெட்டி விடுதி, சிவவிடுதி […]
Tag: மாவட்ட செய்திகளை
தனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்ததில் மூன்று மாணவர்கள் காயமடைந்தார்கள். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளி பேருந்து வழக்கம் போல் நேற்று முன்தினம் 30-க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக்கொண்டு மன்னார்குடி நோக்கி சென்றது. அப்போது ராஜகோபாலபுரம் என்ற இடத்தில் வந்து கொண்டிருக்கிற போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் தாழ்வான இடத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் மூன்று மாணவர்கள் லேசான காயங்களுடன் தப்பினார்கள். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு […]
புலியூரில் 230 நபர்களுக்கு பழங்குடியின மலையாளி சாதிச் சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள புலியூரில் 230 நபர்களுக்கு பழங்குடியினர் மலையாளி சாதி சான்றிதழ் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தாசில்தார் சிவப்பிரகாசம் தலைமையில், மண்டல துணை தாசில்தார் ரேவதி வரவேற்று பேசினார். இதில் கலெக்டர் அமர் குஷ்வாஹா, சி.என். அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஏ.நல்லதம்பி, க. தேவராஜ் போன்றோர் பங்கேற்று சாதி சான்றிதழ் வழங்கினார். இதுகுறித்து கலெக்டர் கூறியபோது, 4 வருடங்களுக்கும் மேல் […]
வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உமர்நகர் பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகின்றார். இவரது மனைவி சாயிதா என்ற சைதமா தனது கணவரை பிரிந்து 18 வயது மகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். இதனையடுத்து ஒரு திருமண நிகழ்ச்சிக்காக மகள் மட்டும் சென்றதால் சைதமா வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் மகள் திருமண நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு வந்தபோது அவருடைய தாய் சைதமா நிர்வாண […]
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்புசி செலுத்தி வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் வட்டாரம் கோவில்வெண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தடுப்பூசி செலுத்தும் முகாம் இரண்டு பள்ளிகளில் வைத்து நடைபெற்றது. இந்த முகாம் டாக்டர் ராணிமுத்துலட்சுமி தலைமையிலும், சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் மேற்பார்வையிலும் நடத்தப்பட்டது. இந்த இரண்டு முகாம்களிலும் 18 வயது முதல் 44 வயது வரை இருப்பவர்கள் 278 பேரும், 45 வயது முதல் 60 வயது வரை […]