Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“தீபாவளி சீட்டு நடத்தி ஏமாற்றம்”… பாதிக்கப்பட்டோர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார்…!!!

தீபாவளி சீட்டு நடத்தி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு தாலுகாவிற்குட்பட்ட எடத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, மாரி, தீபா, ருக்மணி, ரேகா, பரிமளா உள்ளிட்டோர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, சென்ற 2021 ஆம் வருடம் நவம்பர் மாதத்தில் எங்கள் பகுதியில் சுமார் 350 பேரிடம் 500, 200 முறையில் 10 மாதங்கள் என்ற அடிப்படையில் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பழனி முருகன் கோவிலுக்கு படையெடுத்த பக்தர்கள்…. 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர் தற்போது சபரிமலை சீசனை முன்னிட்டு வெளி மாநிலங்களில் இருந்து அய்யப்ப பக்தர்கள் பழனிக்கு சென்று சாமியை தரிசனம் செய்வதால் அனைத்து இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று விடுமுறை தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் ரோப்கார் நிலையம், மின் இழுவை ரயில் நிலையத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து கோவிலுக்கு சென்றனர். இதனையடுத்து சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமியை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உருண்டோடி தலைக்குப்புற கவிழ்ந்த கார்…. படுகாயடைந்த 5 பேர்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்..!!

கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள பெரியசேமூரில் பாலதண்டாயுதம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மோகன்(22), கிருஷ்ணன்(19) என்ற 2  மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் அண்ணன் தம்பி இருவரும் உறவினர்களான சதீஷ்(35) மணிகண்டன்(32), ஐயப்பன்(27) ஆகியோருடன் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக காரில் சென்றனர். அந்த காரை கிருஷ்ணன் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காசிபாளையம் பகுதியில் நான்கு வழி சாலையில் இருக்கும் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வேடிக்கை பார்த்த சிறுவன்…. நொடியில் பறிபோன உயிர்…. 8 மணி நேர போராட்டம்…!!!

தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நல்லாம்பிள்ளை கிராமத்தில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரமோத்(14) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் சிங்காரப்பேட்டையில் இருக்கும் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளான். நேற்று விடுமுறை தினம் என்பதால் பிரமோத் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் இருக்கும் தோட்டத்திற்கு சென்றுள்ளான். இதனையடுத்து அங்குள்ள 80 அடி ஆழ கிணற்றில் நண்பர்கள் குளித்து கொண்டிருந்த போது நீச்சல் தெரியாத பிரமோத் கிணற்றின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“செல்பி” எடுத்தவர்களை துரத்திய யானை…. வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்த வனத்துறையினர்…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி மைசூரு தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து செல்வது வழக்கம். தற்போது அந்த பகுதி பசுமையாக இருப்பதால் சாலையோரம் முகாமிட்டு யானைகள் தீவனம் உண்ணுகின்றன. நேற்று மதியம் ஒரு யானை திம்பம் செல்லும் சாலையில் நின்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக சென்ற 2 பேர் யானையுடன் செல்பி எடுக்க முயன்ற போது கோபமடைந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் “செல்போன்” பார்த்த மகனை கண்டித்த தாய்…. திடீரென நடந்த சம்பவம்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள காலிங்கராயன் பாளையம் மனக்காட்டூர் பகுதியில் சுரேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுமித்ரா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு எம்.பி.ஏ முதலாமாண்டு படிக்கும் ராமகிருஷ்ணன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாக செல்போன் பார்த்து கொண்டே ராமகிருஷ்ணன் வீட்டில் யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 7-ஆம் தேதி நள்ளிரவு நேரமாகியும் ஏன் செல்போன் பார்த்து கொண்டிருக்கிறாய்? போய் தூங்கு என சுமித்ரா தனது மகனை கண்டித்துள்ளார். இதனால் தூங்க […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நாய் குட்டிகளை பாதுகாத்து நின்ற பாம்பு…. பிரம்மிப்புடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள பாலூர் பகுதியில் சம்பத் என்பவர் புதிதாக வீடு கட்டி வருகிறார். அதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் ஒரு நாய் 3 குட்டிகளை பாதுகாப்பாக வைத்து விட்டு சென்றது. இந்நிலையில் அந்த இடத்திற்கு வந்த நல்ல பாம்பு யாரையும் குட்டிகளிடம் நெருங்க விடாமல் அவற்றை பாதுகாத்து நின்றது. இதனையடுத்து அங்கு வந்த தாய் நாய் பாம்பு இருப்பதை பார்த்து குட்டிகளை பாதுகாக்க வேகமாக சென்றது. ஆனாலும் நல்ல பாம்பு தாய் நாயையும் குட்டிகளிடம் விடாமல் இருந்ததால் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கொசத்தலை ஆற்று வெள்ளத்தில்… சிக்கிய 18 பேர்… பேரிடர் படையினர் மீட்பு…!!!

ஆற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்த 18 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மாண்டஸ் புயல் காரணமாக பெய்த மழையால் பூண்டி ஏறி தண்ணீர் அளவு உயர்ந்தது. இதனால் ஏறியின் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து பத்தாயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் 7000 கன அடியாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில் கொசத்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கோட்டகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த 42 பேர் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறி உறவினர் வீட்டில் தஞ்சம் அடைந்தார்கள். இதில் 18 பேர் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிமெண்ட் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால்…. நள்ளிரவில் அலறி துடித்த மூதாட்டி…. பரபரப்பு சம்பவம்…!!!

வீட்டில் சிமெண்டு மேற்கூரை பெயர்ந்து விழுந்து மூதாட்டி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள அழகியநத்தம் காலனி தொகுப்பு வீட்டில் ராஜலட்சுமி(70) என்பவர் வசித்து வருகிறார் . இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் தொகுப்பு வீட்டின் மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் மூதாட்டி படுகாயமடைந்து அலறி சத்தம் போட்டார். அந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை…. மருத்துவ குழுவினரின் துரிதமான செயல்….!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கே.மேட்டுப்பாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான கார்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வள்ளி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான வள்ளிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் குழுவினர் வள்ளியை கோபி அரசு மருத்துவமனைக்கு பிரசவத்திற்காக அழைத்து சென்றனர். இந்நிலையில் கடுக்காம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பிரசவ வலி அதிகரித்ததால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சக்திவேல் வாகனத்தை ஓரமாக […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

பிஞ்சிவாக்கம் தடுப்பணையில்… ஆபத்தை உணராமல் குளித்த பொதுமக்கள்… எச்சரித்த போலீசார்..!!!

ஆபத்தை உணராமல் பிஞ்சிவாக்கம் தடுப்பணையில் குளித்து மகிழ்ந்த பொதுமக்களை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்ததனர். திருவள்ளூர் மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கேசாவரம் அணையில் இருந்து கூவம் ஆற்றிற்கு உபரி நீர் திறந்து விடப்பட்டிருக்கின்றது. இதனால் கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பிச்சைவாக்கத்தில் இருக்கும் தடுப்பணை நிரம்பி வழிய ஆரம்பித்துள்ளது. தடுப்பணை முழுவதும் தண்ணீர் நிரம்பி கடல் போல காட்சி அளிக்கின்றது. நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

வீட்டுமனை பட்டா வழங்குங்க… இல்லைனா, குடியரசு தினத்தன்று கால வரையற்ற உண்ணாவிரதம்… ஆட்சியரிடம் மனு…!!!

வீட்டுமனை பட்டா வழங்கவில்லை என்றால் காலவரையற்ற உண்ணாவிரதம் இருப்போம் என ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இச்சிப்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர்கள் மனு ஒன்றை அளித்தார்கள். அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது, எங்கள் பகுதியைச் சேர்ந்த கல்குவாரி உரிமையாளர்கள் எங்களுக்கு பட்டா வழங்காமல் இருப்பதற்கு அதிகாரிகள் துணையுடன் நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள். சென்ற 2021 ஆம் வருடம் பட்டா வழங்குவதற்கான நிலத்தில் பூங்கா அமைப்பதற்கு செடிகளை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

2 மாதங்களாக… முழு கொள்ளளவில் நீடித்து வரும் அமராவதி அணை… மகிழ்ச்சியில் விவசாயிகள்..!!!

அமராவதி அணையில் சென்ற 2 மாதங்களாக முழு கொள்ளளவு நீடித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றார்கள். வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததால் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் இருக்கும் காந்தளூர், மூணார், மறையூர் உள்ளிட்ட அமராவதி அணையின் நீர் ஆதாரங்களில் சாரல் மழையும் சில நேரங்களில் கனமழையும் பெய்கின்றது. இதன் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டிருப்பதால் அணைக்கு வந்து கொண்டிருக்கும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரித்து அணையின் நீர் இருப்பு சென்ற மாதம் 10-ம் தேதியிலிருந்து முழு கொள்ளவில் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கணவரை கண்டித்த மனைவி…. தொழிலாளியின் அவசர முடிவால்…. கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

தொழிலாளி விஷம் குடித்த தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீமுஷ்ணம் கோ.ஆதனூரில் கூலி தொழிலாளி பழனிச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஒரு மனைவியும், இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பழனிச்சாமி தனது மனைவியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அதற்கு பழனிச்சாமியின் மனைவி சங்கீதா பணம் இல்லை என கூறி தனது கணவரை கண்டித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் பழனிச்சாமி வீட்டில் இருந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த லாரி.. ஓட்டுநர் உள்பட 2 பேர் காயம்…. 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு…!!!

லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் உள்பட 2 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் இருந்து பூக்கள் பாரம் ஏற்றி கொண்டு லாரி நிலக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை வேல்முருகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கிளீனரான ராஜேஸ்வரன் என்பவர் உடன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் லாரி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கணவாய் கட்டமேடு பகுதியில் சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

2 நாட்களுக்கு பிறகு…. கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மாண்டஸ் புயல் காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் சுற்றுலா இடங்களுக்கு செல்ல 2 நாட்களுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். பின்னர் புயல் கரையை கடந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. விடுமுறை தினமான நேற்று ஏராளமான பக்தர்கள் கொடைக்கானலுக்கு படை எடுத்தனர். இந்நிலையில் வட்டக்கானல் அருவி, பிரயண்ட் பூங்கா, மோயர் பாயிண்ட் ,பில்லர் ராக்ஸ் உள்ளிட்ட பல்வேறு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கோவிலில் வினோத வழிபாடு…. மலை கிராம மக்களின் நம்பிக்கை….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தாண்டிக்குடியில் முத்தாலம்மன், பட்டாளம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் திருவிழாவில் பக்தர்கள் வினோத வழிபாடு நடத்துவார்கள். அதன்படி பண்ணைக்காடு, கானல்காடு, காவனூர், கோடங்காடு உள்ளிட்ட மலை கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் 3 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தாண்டிக்குடி முத்தாலம்மன், பட்டாளம்மன் கோவில் திருவிழாவில் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆண்கள் மட்டும் சேத்தாண்டி வேடம் அணிந்து ஊர்வலமாக வந்து ஒருவருக்கொருவர் உடலில் சேற்றை வாரி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

மண்டஸ் புயல் எதிரொலி… வீடுகளில் புகுந்த மழைநீர்… ஆட்சியர் உத்தரவு… மக்கள் முகாமில் தங்க வைப்பு..!!!!

மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்டவர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொன்னேரி அடுத்திருக்கும் பழவேற்காடு பகுதியில் மாண்டஸ் புயல் தாக்கத்தினால் கடல் சீற்றம் ஏற்பட்டு மீனவ கிராமங்களில் கடல் நீர் சூழ்ந்தது. இதனால் மழையால் பாதிக்கப்பட்டவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகாமில் தங்க வைக்கப்பட்டார்கள். இவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன் பேரில் பொன்னேரி துணை ஆட்சியர், தாசில்தார் நேரடியாக சம்பவ இடத்திற்கு சென்று அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தார்கள். இதுபோல […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

விவசாயிகளே.! நிலக்கடலை சாகுபடி செய்கிறீர்களா…? இதோ உங்களுக்காக மானியம்..!!!

நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் அளிக்கப்படும் என வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள். வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உதவி பேராசிரியர் பெரியார் ராமசாமி உள்ளிட்டோர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, நிலக்கடலை சாகுபடி 100% மானியத்துடன் செயல்படுத்துவதற்கு வேளாண் அறிவியல் நிலையம் தயாராக இருக்கின்றது. இதற்காக விதைகள், ஜிப்பம், நடமாடும் நீர் தெளிப்பான் என பல இலவசமாக வழங்கப்படுகின்றது. இத்திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

OMG..! ரேஷன் அரிசியில் எலிகள்… ஆண்டிபட்டி அருகே பரபரப்பு..!!!

ரேஷன் அரிசியில் எலிகள் இருந்ததால் ஆண்டிப்பட்டி அருகே பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே இருக்கும் ரேஷன் கடையில் ரேஷன் அரிசி விநியோகம் செய்யப்பட்டது. இதை பொதுமக்கள் வாங்கிச் சென்றார்கள். அப்போது பாலசமுத்திரத்தைச் சேர்ந்த மோகன் என்பவர் சாக்கு பையில் அரிசியை வாங்கிக்கொண்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் அதை வீட்டில் எடுத்து பார்த்தபோது சாக்கு பையில் ஐந்துக்கும் மேற்பட்ட எலிகள் ஓடியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அரிசியை எடுத்துக் கொண்டு ரேஷன் கடைக்கு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி திட்டம்… ரேஸ்கோர்ஸில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள்…!!!

ரேஸ்கோர்ஸில் 25 இடங்களில் மழைநீர் சேகரிப்பு திட்ட பணி நடைபெற்று வருகின்றது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் ரேஸ்கோர்ஸ் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல பணிகள் நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக ரேஸ்கோர்ஸ் சாலையில் 25 இடங்களில் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கூறியுள்ளதாவது, மழை நீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக கோவையில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ரேஸ்கோர்ஸ் சாலையில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தொழிலதிபர்…. நடுரோட்டில் பற்றி எரிந்த கார்…. பரபரப்பு சம்பவம்….!!!

நடுரோட்டில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி டவுன் சிவா தெருவில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் கணபதி விஜய் தொழிலதிபராக இருக்கிறார். நேற்று கோவில்பட்டியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விஜய் காரில் சென்றுள்ளார். இதனையடுத்து விஜய் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் காரில் மீண்டும் நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மதுரை- நெல்லை நான்கு வழி சாலையில் இருந்து குறிச்சிகுளம் வழியாக நெல்லை நோக்கி வந்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வியாபாரி விஷம் குடித்து தற்கொலை…. என்ன காரணம்…? போலீஸ் விசாரணை…!!

வியாபாரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள மேலபட்டமுடையார் புரம் ராமர் கோவில் தெருவில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடைகளுக்கு தின்பண்டங்கள் விற்பனை செய்து வந்துள்ளார். கடந்த 5-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கணேசன் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர்…. வேறு பெண்ணுடன் திருமணம்…. போலீஸ் வலைவீச்சு…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வயலப்பாடி பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கும் முகேஷ் என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர் சிறுமியை காதலிப்பதாக ஆச வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர் சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதனைக் கேட்டு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

80 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை வனப்பகுதியில் ஏராளமான மன விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இதனால் நகராட்சி நிர்வாகத்தினர் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்து சுற்றுலா பயணிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நகராட்சி ஆணையாளர் பாலுவின் உத்தரவின் படி துப்புரவு ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ஒரு குடோனில் அதிரடியாக சோதனை நடத்தி தின்பண்டங்களை பேக்கிங் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொட்டிலில் தூங்கிய குழந்தை இறப்பு…. பிரேத பரிசோதனையில் தெரிந்த உண்மை…. கதறும் பெற்றோர்…!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளிரவெளி பகுதியில் மதிவாணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு கோகுல ஸ்ரீ என்ற 3 மாத பெண் குழந்தை இருந்துள்ளது. தற்போது முத்துலட்சுமி ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி பெரியகுறவன் பாளையத்தில் இருக்கும் தாய் வீட்டில் தங்கி இருக்கிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு முத்துலட்சுமி தனது குழந்தைக்கு பால் கொடுத்துவிட்டு தொட்டிலில் தூங்க வைத்துள்ளார். சிறிது […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

விவசாயி வீட்டின் கதவை உடைத்து…. 1 கோடி ரூபாய் கொள்ளை…. பரபரப்பு சம்பவம்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சாமியார் கிணறு பகுதியில் விவசாயியான லோகநாதன்(45) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இவர்கள் தங்களது தோட்டத்து வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த 7-ம் தேதி இரவு கார்த்திகை மாத பௌர்ணமியை முன்னிட்டு அப்பகுதியில் இருக்கும் புற்று மாரியம்மன் கோவிலுக்கு லோகநாதன் குடும்பத்தினருடன் சாமி கும்பிடுவதற்காக சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்ட […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மேய்ந்து கொண்டிருந்த போது…. மின்சாரம் தாக்கி 3 பசு மாடுகள், 2 ஆடுகள் பலி….!!!

மின்சாரம் தாக்கி 3 பசு மாடுகள், 2 ஆடுகள் உயிரிழந்தன. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அரக்கோணம் சோமசுந்தரம் நகரில் துரைக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 2 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் துரைகண்ணுவின் பசு மாடுகளும் குமாரசாமி என்பவரின் ஒரு பசுமாடும் வயலில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது மின்வயர் அறுந்து விழுந்ததால் மின்சாரம் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

பணம் எடுக்க சென்ற பெண்…. நூதன முறையில் திருடிய வாலிபர்…. போலீஸ் வலைவீச்சு…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காரணப்பட்டியில் துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜலட்சுமி பொன்னமராவதியில் இருக்கும் வங்கி ஏ.டி.எம்-மில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். இதனையடுத்து அங்கிருந்த ஒரு வாலிபரிடம் ஏ.டி.எம் கார்டை கொடுத்து பணம் எடுத்து தருமாறு ராஜலட்சுமி கூறினார். அந்த நபர் இரண்டு முறை ஏ.டி.எம் கார்டை போட்டு பார்த்துவிட்டு பணம் வரவில்லை என கூறி வேறு ஒரு ஏ.டி.எம் கார்டை ராஜலட்சுமியிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றார். சிறிது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான துப்பாக்கி சூடு… உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு மேலும் 5 லட்சம்… எம்.பி கனிமொழி வழங்கல்..!!!

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மேலும் 5 லட்சம் நிதி உதவி. தூத்துக்குடி மாவட்டத்தில் சென்ற 2018 ஆம் வருடம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் உயிரிழந்தார்கள். அவர்களின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே அரசு மூலமாக தலா 20 லட்சம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் இச்சம்பவம் பற்றி விசாரணை மேற்கொண்ட ஓய்வு பெற்ற நீதிபதி பரிந்துரையின் பேரில் மேலும் கூடுதலாக தலா 5 […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

யோகா குறித்து விழிப்புணர்வு…. நடைபயணமாக செல்லும் கர்நாடக வாலிபர்…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூரில் யோகா பயிற்சியாளரான கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் யோகா குறித்து பொதுமக்களுக்கும், மாணவ மாணவிகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்பினார். எனவே கடந்த அக்டோபர் மாதம் 16-ஆம் தேதி கிருஷ்ணன் மைசூரில் இருந்து நடை பயணத்தை தொடங்கி ஒவ்வொரு ஊராக நடந்து சென்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். நேற்று கிருஷ்ணன் புதுக்கோட்டை வந்து அங்கிருந்து தஞ்சாவூர் நோக்கி கையில் தேசிய கொடியுடன் நடை பயணம் செய்து பொதுமக்களிடம் யோகா குடித்து விழிப்புணர்வை […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர்…. அதிரடியாக கைது செய்த போலீஸ்…!!!

லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கைது செய்யப்பட்டார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தேனூர் தொட்டியபட்டி பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திராணி(40) என்ற மனைவி உள்ளார். இவர் ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் வருவாய் ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அய்யலூர் குடிகாட்டில் வசிக்கும் முருகானந்தத்தின் மனைவி முத்தரசி தனது மாமனார் பெயரில் இருக்கும் நிலத்தை தனது கணவரின் பெயருக்கு பட்டா மாற்றம் செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அப்போது இந்திராணி அவரிடம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில்…. உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி..!!!

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்சந்தூரில் இருக்கும் ஆதித்தனார் கல்லூரியில் சர்வதேச மனித உரிமைகள் தினம் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் மகேந்திரன் தலைமை தாங்க அலுவலக கண்காணிப்பாளர் பொன்துறை மற்றும் கல்லூரி அலுவலர்கள் அனைவரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் உறுதி மொழியை படிக்க அனைவரும் சர்வதேச மனித உரிமைகள் தின உறுதி மொழியை எடுத்துக் கொண்டார்கள்.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

ஸ்டெர்லைட் ஆலை குறித்து வதந்தி… தூத்துக்குடி ஆட்சியர் வேண்டுகோள்…!!!

ஸ்டெர்லைட் ஆலை குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பத்திரிக்கையாளர்களிடம் சந்தித்தபோது பேசியுள்ளதாவது, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு கூட்டமைப்பினரிடம் மூன்று முறை பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. தமிழக அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் பற்றியும் முதல்வர் அறிவித்த நடவடிக்கை தொடரும் எனவும் சிபிஐ அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்ற ஒன்றரை வருடங்களில் அரசியல் நடவடிக்கை பற்றியும் தெளிவுபடுத்தி இருக்கின்றோம். மேலும் முக்கிய நிர்வாகிகள் 50 பேர் மட்டுமே […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சாலையின் நடுவே நின்ற காட்டெருமைகள்…. அணிவகுத்து நின்ற வாகனங்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் உணவு மற்றும் தண்ணீரை தேடி காட்டெருமைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து சாலைகளில் உலா வருகிறது. நேற்று குன்னூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலை அருவங்காடு பகுதியில் முகாமிட்ட காட்டெருமைகள் சாலையின் குறுக்கே நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர். மேலும் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதுகுறித்து அறிந்த போலீசார் காட்டெருமைகள் செல்வதற்கு வழி ஏற்படுத்தி கொடுத்தனர். அந்த வழியாக […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

5 ஆண்டுகளாக பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு…. கண்காணிப்பாளர் கைது…. அதிரடி நடவடிக்கை…!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் மோகன கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊட்டியில் இருக்கும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவில் உறுப்பினராக இருக்கிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் அலுவலகத்தில் வேலை பார்க்கும் திருமணமான 38 வயது பெண்ணிற்கு கிருஷ்ணன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த பெண் எச்சரித்தும் அதனை பொருட்படுத்தாமல் ஒரு கட்டத்தில் கிருஷ்ணன் அந்த பெண்ணின் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கஞ்சா கடத்தி சென்ற 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆலங்கோடு பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் ஆலங்கோடு புளியமூடு சந்திப்பு பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு வாலிபர்களை போலீசார் நிறுத்தி சோதனை செய்தபோது ஒரு அவர்களிடம் 1 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் போலீசார் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வன்முறை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்…. உறுதிமொழி எடுத்த பெண்கள்…!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலையில் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு ஒன்றிய ஆணையர்கள் விஜயகுமார், சரவணன் ஆகியோர் தலைமை தாங்கியுள்ளனர். இதற்கு திட்ட இயக்குனர் சீனிவாசன், வட்டார இயக்க மேலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்நிலையில் தோகைமலை ஒன்றிய அலுவலகத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு தீர்வு காண வேண்டும், குடும்ப வன்முறை சட்டத்தில் பெண்கள் புகார் அளிப்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

4 கால்களுடன் பிறந்த அதிசய கோழிக்குஞ்சு…. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!

கரூர் மாவட்டத்திலுள்ள பிள்ளபாளையம் பகுதியில் பிரபு என்பவர் வசித்து வருகிறார். இவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது வீட்டில் சில நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கோழி முட்டையிட்டு அடைகாத்து வந்தது. இந்நிலையில் முட்டைகள் பொரிந்து அடுத்தடுத்து பிறந்த 10 கோழிக்குஞ்சுகளில் ஒரு கோழிக்குஞ்சுக்கு மட்டும் நான்கு கால்கள் இருந்தது. இதனை அறிந்த அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோழிக்குஞ்சை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றுள்ளனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கொள்ளையனாக மாறிய மின்வாரிய ஊழியர்…. இதற்காக தானா…? விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொற்றிக்கோட்டில் சி.எஸ்.ஐ ஆலயம் அமைந்துள்ளது. நேற்று முன்தினம் ஆலயத்தில் இருக்கும் உண்டியல் பணத்தை ஒருவர் குச்சி மூலம் திருடிக் கொண்டிருந்ததை சபை செயலாளர் பார்த்துள்ளார். பின்னர் பொதுமக்கள் அந்த நபரை பிடித்து ஆட்டோவில் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது முட்டைக்காடு டாஸ்மாக் கடை அருகே சிறுநீர் வருகிறது என கூறி நைசாக அந்த நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சித்தரங்கோடு பேருந்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நீயாவது முன்னுக்கு வர வேண்டும்”…. மகனை கண்டித்த தந்தை…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

10- ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள சித்தாலப்பாக்கம் ஏரிக்கரை தெருவில் முருகன் என்பவர் விஷத்தை வருகிறார். இவர் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுதீப்(15) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கோபத்தில் முருகனின் மனைவி கடந்த சில நாட்களுக்கு முன்பு தாய் வீட்டிற்கு […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கரும்பு தோட்டத்திற்கு கடத்தி சென்ற வாலிபர்…. 6 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிமன்றம் அதிரடி…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கிளிமங்கலம் பகுதியில் பட்டுசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜோதிவேல் என்ற மகன் உள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு தெருவில் விளையாடி கொண்டிருந்த 6 வயது சிறுமியை ஜோதிவேல் கரும்பு தோட்டத்திற்கு கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் விருதாச்சலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிந்த போலீசார் ஜோதிவேலை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கடலூர் சிறப்பு நீதிமன்றம் ஜோதிவேலுக்கு 7 […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

கால்வாய்க்குள் பாய்ந்த பேருந்து…. பயணிகள் உள்பட 3 பேர் படுகாயம்…. போலீஸ் விசாரணை….!!

மொபட் மீது மோதி தனியார் பேருந்து கால்வாயில் பாய்ந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாரண்டஅள்ளி பகுதியில் இருந்து பயணிகளுடன் தனியார் பேருந்து சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சரவணன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக ரவி என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் கோடியூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதே பகுதியில் வசிக்கும் திருப்பதி என்பவர் மொபட்டை தள்ளி சென்றார். திடீரென அவர் பேருந்துக்கு குறுக்கே வந்ததால் சரவணன் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சாலையோரம் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!

சடலமாக கிடந்த நபரின் விவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தர்மபுரி-கிருஷ்ணகிரி சாலையோரத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆணின் சடலம் கிடந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தர்மபுரி டவுன் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் சடலமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதனையடுத்து போலீசார் அந்த நபரின் சடலத்தை கைப்பற்றி தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வாலிபர் கொலை வழக்கு…. அண்ணன்-தம்பிக்கு ஆயுள் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்தழகுப்பட்டி நல்லக்கேணி தெருவில் ராயப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவரது இவருக்கு தாமஸ் செல்வம், சுரேஷ் அந்தோணி என்ற 2 மகன்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ராயப்பனுக்கும், அவரது அக்காள் பத்மாவிற்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2017-ஆம் ஆண்டு பத்மாவின் மகனான ராஜ்குமார் மொபட்டில் திண்டுக்கல் நோக்கி சென்றுள்ளார். அப்போது தாமஸ் செல்வம், சுரேஷ் அந்தோணி, அவரது நண்பர்கள் அஜித் பாண்டி, சார்லஸ் ஆகியோர் இணைந்து ராஜ்குமாரை வழிமறித்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இறந்து கிடந்த யானை…. சண்டை போட்டது தான் காரணமா…? வனத்துறையினரின் தகவல்…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் யானைகள் அடிக்கடி கிராமங்களுக்குள் நுழைந்து பயிர்களை நாசம் செய்கிறது. நேற்று அருள்வாடி கிராமத்தில் இருந்து மீன்கரை செல்லும் சாலையில் ஓடை அருகே யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினரும், கால்நடை துறை மருத்துவர் சதாசிவமும் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். இதனையடுத்து யானையின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது. இதுகுறித்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தரிசுநிலத்தை விளைநிலமாக மாற்றி பயிர் சாகுபடி திட்டம்… மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு..!!!

விளாத்திகுளம் வட்டாரத்தில் தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி பயிர் சாகுபடி செய்யும் திட்டத்தை ஆட்சியர் ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளத்தில் தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2021-22 செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தத் திட்டத்தின் கீழ் தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்றி அமைக்கப்பட்டு பயிர் சாகுபடி செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றது. இந்த நிலையில் தரிசு நிலங்களில் அமைக்கப்பட்டிருக்கும் பண்ணை, குட்டைகள், ஆழ்துளை கிணறு ஆகிய […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

கோவில் குளத்தில்… செத்து மிதந்த 2 லட்சம் மதிப்பிலான மீன்கள்.. காரணம் இதுதான்… பொதுமக்கள் குற்றச்சாட்டு..!!!

கோவில் குளத்தில் 2 லட்சம் மதிப்பிலான மீன்கள் செத்து மிதந்தது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி ஒத்த தெருவில் பிள்ளையார் கோவில் இருக்கின்றது. இந்த கோவில் அருகிலேயே குளம் ஒன்று இருக்கின்ற நிலையில் ஒருவர் குத்தகைக்கு எடுத்து அங்கு மீன்களை வளர்த்து வருகின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலையில் பிள்ளையார் கோவில் குளத்தில் 2 லட்சம் மதிப்பிலான மீன்கள் செத்து மிதந்தது. இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகர்மன்ற தலைவர் சோழராஜன் அங்கு […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

எந்திரம் மூலம் செலுத்தப்பட்ட பணம்…. வங்கியின் சேவை குறைபாடு…. நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் ஜெய மாரிஸ் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கன்னியாகுமரியில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் எந்திரம் மூலம் தனது மனைவியின் வங்கி கணக்கிற்கு 4000 ரூபாய் அனுப்பியுள்ளார். ஆனால் அந்த பணம் மனைவியின் வங்கி கணக்கிற்கு செல்லாததால் ராஜ் எழுத்து மூலமாக வங்கிக்கு சென்று புகார் அளித்துள்ளார். ஆனாலும் பணம் திரும்ப கிடைக்காததால் மன உளைச்சலில் ராஜ் குமரி மாவட்ட நுகர்வோர்  குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

9-ஆம் வகுப்பு மாணவி தற்கொலை…. இதுதான் காரணமா….? கதறும் பெற்றோர்…!!

9- ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மேல் சாமல்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சத்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் ஊத்தங்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமியை அவரது பெற்றோர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வந்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்து […]

Categories

Tech |