Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

குளிக்க சென்ற சப்-இன்ஸ்பெக்டர்…. சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்… பெரும் சோகம்…!!!

சப்-இன்ஸ்பெக்டர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாரநாடு கிராமத்தில் கருப்பையா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வீரசோழன் காவல் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கருப்பையா நேற்று காவல் நிலையத்திற்கு எதிரே இருக்கும் கண்மாயில் குளிப்பதற்காக சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்ப வராததால் சந்தேகமடைந்த சக போலீசார் அங்கு சென்று பார்த்த போது கரையில் கருப்பையாவின் சட்டை, செல்போன் ஆகியவை இருந்தது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தற்கொலை செய்ய போவதாக கூறிய கணவர்”…. காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!!

சினிமா சண்டைக்கலைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி ஏகாங்கிபுரம் பகுதியில் அரவிந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சினிமாவில் சண்டை கலைஞராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த ஆண்டு அரவிந்தன் அதே பகுதியில் வசிக்கும் ரீனா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த அரவிந்தன் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக மனைவியிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து பற்றி எரிந்த குடிசை வீடுகள்…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் கம்பர் சாலை பகுதியில் இருக்கும் குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்நிலையில் வேகமாக அடுத்தடுத்து 5-க்கும் மேற்பட்ட வீடுகளில் தீ பரவியதால் வீட்டிலிருந்தவர்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். மேலும் தீக்காயமடைந்த இருவரையும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எண்ணெய் மில்லில் பயங்கர தீ விபத்து…. 2 மணி நேரம் போராட்டம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்துலிங்கபுரத்தில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் மில் அமைந்துள்ளது. இங்கு நேற்று திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை அதிகாரி குருசாமி மற்றும் அந்தோணி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு எண்ணெய் மில்லில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீ விபத்து […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மேளதாளங்கள் முழங்க…. மரங்களுக்கு வினோத திருமணம் நடத்திய கிராம மக்கள்…!!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் அடுத்த காரணைமண்டபம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த கன்னியம்மன் கோவிலில் அரசமரம் ஒன்று இருக்கிறது. அதனை ஒட்டியவாறு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வேப்பமரம் தானாக வளர்ந்தது காலை, மாலை என இரு வேளைகளிலும் கிராம மக்கள் அதனை வழிபட்டுள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் நோயின்றி வாழவும், உலக நன்மைக்காகவும், அரச மரத்திற்கும் வேப்ப மரத்திற்கும் திருமணம் செய்ய கிராம மக்கள் முடிவு எடுத்து அழைப்பிதழ் அச்சடித்தனர். இதனையடுத்து மணமகன் அரசன் என்றும், […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

1 கி.மீ தூரம் வாலிபரை துரத்தி சென்று பிடித்த “பெண் போலீஸ்”…. பாராட்டிய பொதுமக்கள்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் காவல் நிலையத்தில் காளீஸ்வரி என்பவர் குற்றப்பிரிவு போலீசாக வேலை பார்த்து வருகிறார். இவர் தாம்பரம் பேருந்து நிலைய பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கூடுவாஞ்சேரி செல்லும் அரசு பேருந்தில் ஏறிய வட மாநில வாலிபர் சிறிது நேரத்தில் கீழே இறங்கினார். இதனால் சந்தேகமடைந்த காளீஸ்வரி வாலிபரிடம் விசாரிக்க முயன்ற போது அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனாலும் காளீஸ்வரி வாலிபரை சுமார் 1 கி.மீ விரட்டி சென்று பிடித்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சிறுமி பாலியல் பலாத்காரம்…. வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காக்கநல்லூரில் தங்கபாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தியாகராஜன்(26) என்ற மகன் உள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு தியாகராஜன் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் அம்பை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

வேடிக்கை பார்க்க சென்றபோது…. இரு தரப்பினரிடையே மோதல்…. பரபரப்பு சம்பவம்…!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயில் கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு நேற்று இரவு சொக்கப்பனை கொளுத்தப்பட்டுள்ளது. அதனை பார்ப்பதற்காக வந்த இரு தரப்பினருக்கு திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது வாலிபருக்கு அரிவாள் வெட்டு விழுந்து படுகாயமடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதனையடுத்து அந்த வாலிபர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில் காயமடைந்த வாலிபரின் உறவினர்கள் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி பேருந்து […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

கனமழையால் இடிந்து விழுந்த வீடு…. தாய்-மகன் காயம்…. பரபரப்பு சம்பவம்…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள மலையன்குளம் பகுதியில் சாமிகண்ணு(66) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாக்கியலட்சுமி(65) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 மகன்கள் இருக்கின்றனர். இதில் கடைசி மகனான மகேஷ்(22) எழுந்து நடக்க முடியாத நிலையில் மாற்றுத்திறனாளியாக இருக்கிறார். நேற்று முன்தினம் கடையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாமிகண்ணுவின் வீடு இடிந்து பாக்கியலட்சுமி, மகேஷ் ஆகிய இருவரும் காயமடைந்தனர். அவர்களது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…! 39 3/4 லட்ச ரூபாய் மோசடி செய்த வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!!

39 3/4 லட்ச ரூபாய் மோசடி செய்த வாலிபர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள பீரங்கிகுள தெருவில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாலக்கரை பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவரிடம், தான் பெங்களூருவில் இருக்கும் இந்திய தனித்துவமான அடையாள ஆணையத்தில் வேலை பார்ப்பதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து 40 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் தினமும் 800 ரூபாய் கிடைக்கும் வகையில் வீட்டிலிருந்து இணையதளம் மூலமாக தொழில் செய்ய […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

1 1/2 வயது பெண் குழந்தைக்கு…. பாலியல் தொந்தரவு அளித்த “தந்தை”….. பரபரப்பு சம்பவம்…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி அருகே 31 வயதுடைய கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவியும், 1 1/2 வயதில் பெண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் கூலி தொழிலாளி இரவில் வீட்டிற்கு கஞ்சா மற்றும் மது போதையில் வருவது வழக்கம். சம்பவம் நடைபெற்ற அன்று திடீரென குழந்தை அழுததால் தொழிலாளியின் மனைவி அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது தங்களது குழந்தைக்கு கணவரே பாலியல் தொந்தரவு அளித்ததை அறிந்து பெண் அதிர்ச்சியடைந்தார். பின்னர் தனது குழந்தையை திருச்சி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“மிஸ் இந்தியா போட்டி”…. திருச்சியை சேர்ந்த திருநங்கை தேர்வு…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லுக்குழி பகுதியில் ரியானா சூரி(26) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருநங்கை ஆவார். இந்நிலையில் எம்.எஸ்.சி படித்து முடித்த ரியானா கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் மாடலிங் துறையில் கவனம் செலுத்தி வந்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் விழுப்புரத்தில் நடைபெற்ற மாடலிங் போட்டியில் கலந்து கொண்ட ரியானா இந்த மாதம் புதுடெல்லியில் நடைபெற இருக்கும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கான மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளார்.

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மூதாட்டி கொடுத்த மனு…. சிறிது நேரத்திலேயே ஆணையை வழங்கிய ஆட்சியர்… பாட்டி ரொம்ப ஹாப்பி…!!!!

மூதாட்டி கொடுத்த மனுவிற்கு சிறிது நேரத்திலேயே உதவித்தொகை வழங்குவதற்கான ஆணையை ஆட்சியர் கொடுத்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது‌. அப்போது வாசலில் மனுக்கொடுப்பதற்காக மூதாட்டி தங்கம்மாள் அமர்ந்திருந்தார். அவரிடம் இருந்த மனுவை பெற்றுக் கொண்ட ஆட்சியர் உடனடியாக உதவித்தொகை வழங்குமாறு உத்தரவிட்டார். அதன்படி சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை ரூபாய் 1000 வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கான ஆணையை ஆட்சியர் மூதாட்டியிடம் வழங்கினார். மனு கொடுத்த […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஒரு தண்ணீர் பாட்டில் 250-க்கு விற்பனை… ஷாக்கான பக்தர்கள்..!!!

திருவண்ணாமலை மலை உச்சியில் தண்ணீர் பாட்டில் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை காண்பதற்காக ஏராளமான மக்கள் கரடு முரடான மலை பாதையை கடந்து உச்சிக்கு சென்று மகா தீபத்தை தரிசனம் செய்வார்கள். மலை உச்சிக்கு ஏறும் போது ஆக்சிஜனை சமன் செய்ய தண்ணீர் தேவை. தண்ணீர் குடித்தால் தான் களைப்பு நீங்கும். இதனால் பலர் தண்ணீர் பாட்டில்களை கொண்டு செல்வார்கள். ஒரு சிலர் தண்ணீர் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பதக்கம் வென்ற வீரர், வீராங்கனை… உற்சாக வரவேற்பளித்த பொதுமக்கள்..!!!

பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைக்கு சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பட்டுக்கோட்டையை சேர்ந்த லோகப் பிரியா என்பவர் எம்பிஏ முடித்திருக்கின்றார். இவரும் ரவிச்சந்திரன் என்பவரும் பட்டுக்கோட்டையில் இருந்து காமன்வெல்த் போட்டியில் பங்கேற்பதற்காக நியூசிலாந்து சென்றார்கள். அங்கு பெண்கள் பிரிவுக்காக நடைபெற்ற வலுதூக்கும் போட்டியில் லோகபிரியா தங்கப்பதக்கம் பெற்றார். ஆண்களுக்கான போட்டியில் ரவிச்சந்திரன் வெள்ளி பதக்கம் பெற்றார். இந்த நிலையில் இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் காலை பட்டுக்கோட்டைக்கு வந்தார்கள். அப்போது இரண்டு பேருக்கும் கிராம மக்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து மீது மோதிய லாரி…. கண்டக்டர் உள்பட 2 பேர் காயம்…. போலீஸ் விசாரணை…!!!

அரசு பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதிய விபத்தில் 2 பேர் காயமடைந்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள பாரி முனையில் இருந்து அரசு பேருந்து மணலி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சாத்தங்காடு பக்கிங்காம் கால்வாய் ரயில்வே தண்டவாளம் பகுதியில் சென்ற போது பின்னால் வேகமாக வந்த கண்டெய்னர் லாரி பேருந்து மீது மோதியது. இந்த விபத்தில் பின்புற கண்ணாடி நொறுங்கி பேருந்து லேசாக சேதம் அடைந்தது. மேலும் கண்டக்டர் ரவி, பேருந்தில் பயணம் செய்த தேன்மொழி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“பெரியார் பல்கலைக்கழக அளவிலான போட்டிகள்”…. சேலம் அரசு கல்லூரி மாணவிகள் சாதனை…. குவியும் பாராட்டுகள்…!!!

நாமக்கல் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் பெரியார் பல்கலைக்கழக அளவில் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இலையில் சேலம் அரசு பெண்கள் கலை கல்லூரியில் படிக்கும் மாணவிகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றனர். அதாவது மாணவி மீனாட்சி, 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி பதக்கமும், தொடர் ஓட்டத்தில் வெண்கல பதக்கமும், மனோன்மணி 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், சரண்யா 100 மற்றும் 200 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சினிமா பாணியில் விரட்டி சென்ற போலீஸ்…. வாலிபர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் தப்பி சென்றனர். அவர்களை போலீசார் விரட்டி சென்றதால் அச்சத்தில் நேரு வீதி பகுதியில் மோட்டார் சைக்கிள் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தனர். அதில் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு சென்றனர். அவர் வைத்திருந்த பையில் கையுறை பிளேடு, கம்பி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தது. […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த நபர்…. சாக்லேட் வாங்கிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி டி.வி.எஸ் காலனியில் பொன் ராணி என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று இரவு நேரத்தில் வீட்டில் தனியாக இருந்தபோது கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்த ஒருவர் தெருவில் நின்ற நபர்களுக்கு சாக்லேட் கொடுத்துக் கொண்டே வந்தார். இந்நிலையில் வீட்டு வாசலில் நின்றபடியே பொன்ராணியும் கிறிஸ்துமஸ் தாத்தாவை பார்த்துக் கொண்டிருந்தார். இதனையடுத்து அவர் பொன்ராணிக்கு சாக்லேட்டை கொடுத்தார். அதனை வாங்கியவுடன் கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் பொன்ராணியின் கழுத்தில் கிடந்த 6 1/2 பவுன் தங்க […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“இவ்வளவு பணத்தை செலுத்த முடியாது” கல்லூரி மாணவர் தற்கொலை…. கதறும் தாய்…!!!

கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள இஞ்சிப்பாறை எஸ்டேட் பகுதியில் கணவரை இழந்த நஞ்சம்மாள் என்பவர் தனது மகன் முறுகேஷுடன் வாழ்ந்து வந்துள்ளார். முருகேஷ் தனியார் கல்லூரியில் பி.பார்ம் படித்து வந்துள்ளார். வருகிற 10- ஆம் தேதிக்குள் கல்லூரி கட்டணமாக 30 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டிய நிலை இருந்தது. இதனால் தனது தாய் இவ்வளவு பெரிய தொகையை செலுத்த இயலாது எனக் கூறி மன உளைச்சலில் இருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம்…. புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!!

காதல் திருமணம் செய்த தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கே.செவல்பட்டி பகுதியில் முனியாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக காதலித்த முனியாண்டியும், லட்சுமியும் பெற்றோர் எதிர்ப்பை மீறி 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கட்டிட வேலைக்கு சென்று வந்த முனியாண்டி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததால் லட்சுமி தனது கணவரை கண்டித்தார். இதனால் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“ரூ.5 லட்சம் கடன் தருகிறேன்”…. முன்பணம் வாங்கி ஏமாற்றியதால் தம்பதி தற்கொலை…. வாலிபர் அதிரடி கைது…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எஸ்.வி.பி.என்.எஸ் தெருவில் கார்த்திகேயராஜா அருணா மகா ஸ்ரீ தம்பதியினர் வசித்து வந்தனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில் அருணா போலீசருக்கு எழுதிய கடிதத்தில், 5 லட்ச ரூபாய் கடன் தருவதாக கூறி மகாராஜா என்பவர் எங்களிடம் இருந்து முன்பணம் வாங்கினார். ஆனால் அவர் முன்பணத்தை திருப்பி தராமலும், கடனை தராமலும் எங்களை ஏமாற்றிவிட்டார் என குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மகாராஜாவை பிடித்து விசாரித்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் அபகரிப்பு”…. குடும்பத்துடன் கலெக்டரிடம் மனு அளித்த விவசாயி….!!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அவ்வை நடுகுப்பத்தில் விவசாயியான இளைய முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது குடும்பத்தினருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, எங்களது குடும்பத்திற்கு சேமங்கலம் மதுரா ராமநாதபுரம் கிராமத்தில் 1 ஏக்கர் 84 சென்ட் பூர்வீக நிலம் அமைந்துள்ளது. இதில் பாகப்பிரிவினை மூலம் எனக்கு 92 சென்ட் நிலம் அளிக்கப்பட்டது. அதே கிராமத்தில் வசிக்கும் ஒருவர் எனது நிலத்தை அபகரித்து விளைநிலங்களுக்கு செல்ல […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சுக்குநூறாக நொறுங்கிய கார்…. உயிருக்கு போராடிய தம்பதி…. கோர விபத்து…!!

கார் மீது லாரி மோதிய விபத்தில் தம்பதியினர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள விருகம்பாக்கம் நடேசன் நகர் பகுதியில் சங்கரன்-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் காரில் சென்னையில் இருந்து காரைக்குடி நோக்கி சென்றுள்ளனர். இதனையடுத்து மீண்டும் தம்பதியினர் காரில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சாரம் மெயின் ரோட்டில் சென்ற போது திடீரென சாலையின் குறுக்கே வந்த லாரி கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

விவசாயியின் கவனத்தை திசை திருப்பி…. 1 1/2 லட்ச ரூபாய் கொள்ளை…. போலீஸ் வலைவீச்சு…!!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மங்களமேடு மேற்கு தெருவில் விவசாயியான சோமு என்பவர் வசித்து வருகிறார். இவர் பெரம்பலூர் புறநகர் பகுதியான துறை மங்கலத்தில் இருக்கும் வங்கியில் 5 பவுன் தங்க காசுகளை அடகு வைத்து 1 லட்சத்து 45 ஆயிரம் ரூபாயை பெற்றுள்ளார். பின்னர் சோமு அந்த பணத்தை மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்துக்கொண்டு சொந்த ஊர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் உங்களது பணம் கீழே […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மனைவி எடுத்த விபரீத முடிவு… 2 ஆண்டுக்கு பிறகு… கணவர் கைது… கூடலூர் அருகே பரபரப்பு…!!!

குடும்ப பிரச்சனையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் இரண்டு வருடங்களுக்கு பிறகு போலீசார் கணவரை கைது செய்துள்ளார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியை சேர்ந்த பர்ஷானாவுக்கும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் சமதுவுக்கும் சென்ற 2020 ஆம் வருடம் திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த பர்ஷானா 2020 ஆம் வருடம் ஜூன் மாதம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி வழக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

அரசு பேருந்தை நிறுத்திவிட்டு சென்ற டிரைவர்… நாமக்கல் பேருந்து நிலையத்தில் பரபரப்பு..!!!

அரசு டவுன் பேருந்தை நிறுத்திவிட்டு டிரைவர் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து எருமைப்பட்டி, பவித்ரம் வழியாக வேலம்பட்டிக்கு 10 சி என்ற அரசு டவுன் பேருந்து இயக்கப்படுகின்றது. இந்த பேருந்தில் நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட இருந்தது. 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் அமர்ந்திருந்தார்கள். அப்போது திடீரென டிரைவர் மணிவண்ணன் தொடர்ந்து நான்கு நாட்கள் பேருந்து இயக்குவதால் உடல்நிலை சரியில்லை. இதனால் பேருந்தை இயக்க மாட்டேன் என […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கலில்… 108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு முகாம்..!!!

நாமக்கலில் 108 ஆம்புலன்ஸ் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது. நாமக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸில் டிரைவர் மற்றும் மருத்துவ உதவியாளராக பணியாற்றுவதற்காக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு சென்னை மனிதவளத்துறை அதிகாரிகள் தலைமை தாங்க மாவட்டத்திலிருந்து 70-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றார்கள். இதில் அவர்களுக்கு பலவகையான தேர்வுகள் நடத்தப்பட்டது. பின்னர் இறுதியாக 16 டிரைவர்கள், 7 மருத்துவ உதவியாளர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு சென்னையில் பயிற்சி வழங்கப்பட்டு பின்னர் பணியில் அமர்க்கப்படுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு… ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்..!!!

திருச்சியில் கிராம உதவியாளர் பணிக்கான தேர்வு நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு 10,363 பேர் அனுமதிக்கப்பட்டார்கள். இதில் தேர்வு எழுத 8375 மட்டுமே வந்தார்கள். 1988 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதற்கு முன்னதாக மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வனத்தொழில் பழகுனர் மற்றும் கிராம உதவியாளர் உள்ளிட்ட இரண்டு தேர்வுகளும் நடைபெற்ற மையங்களில் ஆய்வு மேற்கொண்டார்

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வனத்தொழில் பழகுனர் தேர்வு… 16.37 சதவீதம் மட்டுமே தேர்வெழுதினர்..!!!

வனத்தொழில் பழகுனர் பணிக்கான தேர்வு நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் வனத்தொழில் பழகுனர் பதவிகளுக்கான போட்டித் தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. இதில் மாவட்டத்தில் இருந்து 2486 தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்கள். தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு எந்த வித மின்சாதனங்களையும் கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை. இத்தேர்வினை 2486 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 407 பேர் மட்டுமே எழுதினார்கள். இத்தேர்வினை 16.37 சதவீத பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள். மீதம் இருக்கும் 83.71% […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

நிலுவையில் இருந்த 50 மனுக்கள்… வீரபாண்டி காவல் நிலையத்தில் தீர்வு…!!!

நிலுவையில் இருந்த 50 மனுக்களுக்கு வீரபாண்டி காவல் நிலையத்தில் தீர்வு காணப்பட்டது. தேனி மாவட்டத்திலுள்ள வீரபாண்டி காவல் நிலையத்தில் நிலுவையில் இருக்கும் மனுக்கள் மீதான விசாரணை நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமை தாங்க வீரபாண்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட 60 மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. இதில் மனுதாரர்கள் மற்றும் புகாரில் சம்பந்தப்பட்டவர்கள் என இரு தரப்பினர் இடையே விசாரணை நடத்தப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சரக்கு வாகனங்களில் ஆபத்தான பயணம்… நடவடிக்கை எடுக்கப்படுமா…? சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..!!!

சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பயணிகளை ஏற்றி செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றார்கள். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பகுதியில் 32 ஊராட்சிகளும்  92 கிராமங்களும் இருக்கின்றது. இதில் கிராம பகுதிகளை சேர்ந்த மக்கள் திருத்துறைப்பூண்டி நகரப் பகுதியை நம்பியே இருக்கின்றார்கள். இந்த நிலையில் திருத்துறைப்பூண்டி பகுதியில் புதுமனை புகுவிழா, காதணி விழா, திருமணம், வளைகாப்பு, துக்க நிகழ்ச்சி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு செல்பவர்கள் சரக்கு வாகனங்களில் பயணம் செய்வது அண்மைகாலமாகவே […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

குளிர்பானம் என நினைத்து விஷம் குடித்த “பெண் டாக்டர்”…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை பகுதியில் அருமைராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் தேயிலை தோட்டத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு டாக்டரான ஜாஸ்மின்(67) என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த மாதம் 30-ஆம் தேதி அருமைராஜ்குமார் ஓய்வு பெற்றதால் எஸ்டேட் நிர்வாகத்திற்கு சொந்தமான வீட்டை காலி செய்துவிட்டு சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு செல்ல முடிவெடுத்தனர். அதன்படி கூலி ஆட்கள் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் காலி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது குளிர்பானம் வைக்கும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்டு போலீஸ் ஏட்டு…. கட்டையால் தாக்கிய வாலிபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் காவல் நிலையத்தில் செல்வராஜ் என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன் தினம் செல்வராஜ் விருதாச்சலம் பேருந்து நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் 4 பேர் வேகமாக வந்தனர். அவர்களை செல்வராஜ் தடுத்து நிறுத்தி விசாரித்த போது கோபமடைந்த இரண்டு பேர் அருகே கிடந்த கட்டையால் செல்வராஜை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. வேன் டிரைவரை கரம் பிடித்த கல்லூரி மாணவி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பிலாத்து பகுதியில் வேன் ஓட்டுனரான சூர்யா என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களாக சூர்யாவும் தனியார் கல்லூரியில் பி.காம் 2- ஆம் ஆண்டு படிக்கும் வினோதினி என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி திருப்பூரில் இருக்கும் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர் புதுமண தம்பதியினர் பாதுகாப்பு கேட்டு வடமதுரை காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து போலீசார் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மரத்தின் மீது மோதிய சரக்கு வேன்…. சாப்பாடு வாங்க சென்ற வாலிபர் படுகாயம்…. கோர விபத்து…!!!

சரக்கு வேன் மரத்தின் மீது மோதிய விபத்தில் வாலிபர் படுகாயமடைந்தார். திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இசக்கி ராஜா என்பவர் சொந்தமாக சரக்கு வேன் வைத்து தொழில் செய்து வருகிறார். தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் நடக்கும் சாலை பணிக்காக இசக்கி ராஜா தனது வாகனத்தை பயன்படுத்தி வருகிறார். அதாவது சாலை அமைக்கும் பணிக்கு வரும் தொழிலாளர்களை வேனில் ஏற்றி வருவதும், வேலை முடிந்ததும் அவர்களை ஊரில் கொண்டு விடுவதும் இசக்கி ராஜாவின் பணியாகும். இந்நிலையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மணக்கோலத்தில் கணவருடன் தேர்வு எழுத வந்த பெண்…. நெகிழ்ச்சி சம்பவம்…!!!

ஈரோடு மாவட்டத்தில் காலியாக இருக்கும் 107 கிராம உதவியாளர் காலி பணியிடங்களுக்கு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நேற்று பல்வேறு மையங்களில் எழுத்து தேர்வு நடைபெற்றுள்ளது. அந்தியூரில் இருக்கும் தனியார் பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் 1100 பேர் தேர்வு எழுதியுள்ளனர் . இந்நிலையில் வரதநல்லூரை சேர்ந்த பட்டதாரியான ஹரிணி(24) என்பவருக்கும் வினோத் என்பவருக்கும் உறவினர்கள் முன்னிலையில் நேற்று திருமணம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கிராம உதவியாளர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த ஹரிணி தான் தேர்வு எழுத விரும்புவதாக கணவரிடம் தெரிவித்துள்ளார். […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருமண நிகழ்ச்சிக்கு சென்ற போது… கார்-லாரி நேருக்கு நேர் மோதி… திருப்பூரில் நடந்த துயரச் சம்பவம்..!!!!

கார்-லாரி நேருக்கு நேர் மோதியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகே இருக்கும் காட்டுப்புத்தூரை சேர்ந்த விஸ்வநாதன் என்பவரின் உறவினர் வீட்டு திருமணம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சென்னிமலையில் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக விஸ்வநாதன் தனது உறவினர் மணி, உமாவதி, ரமணன் உள்ளிட்டோரை தனது காரில் அழைத்துக் கொண்டு நேற்று காலை வீட்டிலிருந்து புறப்பட்டார்கள். கார் காங்கயம்-சென்னிமலை சாலை அருகே சென்ற போது காலை திடீரென 6 மணி அளவில் எதிரே வந்த […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கு ஹேப்பி நியூஸ்… உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்… ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!

விளையாட்டு வீரர்கள் இணையவழியில் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக திறன்மிகு விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவி தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் ஒலிம்பிக்கில் இடம் பெற்றுள்ள விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான சிறப்பு உதவித்தொகை, பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டம், வெற்றியாளர்கள் மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

50,000 விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்… அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேட்டி..!!!

தூத்துக்குடியில் புதிய துணை மின் நிலையம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி உபகோட்டம் படுக்கப்பத்து கிராமத்தில் துணை மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று அடிக்கல் நாட்டினார். இதன்பின் அவர் கூறியுள்ளதாவது, புதியதாக ஒரு லட்சம் விவசாயிகளுக்கு முதல்வர் இலவச மின்சாரம் வழங்கி இருக்கின்றார். மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. இதன் அடிப்படையிலேயே […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

கணக்கு வழக்குகளை தணிக்கை செய்த அதிகாரி…. ரூ. 37 லட்சம் மோசடி செய்த ஊழியர்…. போலீஸ் விசாரணை….!!

வங்கி ஊழியர் 37 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் கோவை செல்லும் சாலையில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியின் 2017-2020 ஆம் ஆண்டிற்கான கணக்கு வழக்குகளை மண்டல மேலாளர் பல்ராம்தாஸ் தணிக்கை செய்துள்ளார். அப்போது வங்கியில் வேலை பார்த்த தற்காலிக பணியாளர் உள்ளிட்டவர்களின் வங்கி கணக்கில் இருந்து பள்ளப்பட்டி அண்ணாநகரை சேர்ந்த கிருஷ்ணவேணி என்ற வங்கி ஊழியர் 36 லட்சத்து 62 ஆயிரத்து 892 ரூபாயை மோசடி […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த வாலிபர்…. 4 மாதங்களில் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு….. சோகத்தில் குடும்பத்தினர்….!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அகூர் கிராமத்தில் விக்னேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார் கடந்த 4 மாதத்திற்கு முன்பு விக்னேஷ் மாலினி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு மாலினியின் பெற்றோர் சம்மதம் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மன உளைச்சலில் இருந்த மாலினி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாலினியின் உடலை மீட்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அரசு முத்திரையுடன் போலி சான்றிதழ் தயாரித்து மோசடி…. முதியவர் உள்பட 2 பேர் கைது…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

அரசு முத்திரையுடன் போலியான சான்றிதழ் தயாரித்து மோசடி செய்த முதியவர் உள்பட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் சிலர் அரசு துறை ஆவணங்களை அரசு முத்திரையுடன் போலியாக தயாரித்து, நிலம் தொடர்பான ஆவணங்களை போலியாக தயாரித்து மோசடியாக பத்திர பதிவு செய்து பணம் சம்பாதிப்பதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மகளை அழைப்பதற்காக சென்ற வங்கி மேலாளர்…. விபத்தில் சிக்கி பலியான சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில் தனியார் வங்கி மேலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள விளாங்காடு பக்கம் நியூ ஸ்டோர் சிட்டி பகுதியில் விவேக் சுகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆர்.கே நகரில் இருக்கும் தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் விவேக் மாதவரத்தில் படிக்கும் தனது மகளை அழைத்து வருவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மஞ்சம்பாக்கம் ரவுண்டானா அருகே சென்ற போது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. வாலிபரை சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை மாவட்டத்தில் உள்ள நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரம் மெயின் ரோட்டில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் ஊரப்பாக்கம் பகுதியில் வசிக்கும் விக்னேஷ் என்பது தெரியவந்தது. அவர் சட்டவிரோதமாக அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

திருச்செந்தூர் ரயில் நிலையத்திற்கு செல்லும் சாலையில்… குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீர்… பொதுமக்கள் கோரிக்கை..!!!

திருச்செந்தூர் ரயில் நிலையத்துக்கு செல்லும் சாலையில் மழைநீர் தேங்கி நிற்கும் நிலையில் சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூருக்கு தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றார்கள். மேலும் திருச்செந்தூரில் இருந்து தினமும் 7 ரயில்கள் இயக்கப்படுகின்றது. குறிப்பாக நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு வரும் ரயிலில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் வந்து செல்கின்றார்கள். இந்த நிலையில் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் எதிரே ரயில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

விபத்தில் காலை இழந்த இளைஞர்… ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பாக… செயற்கைக்கால் வழங்கல்..!!!

விபத்தில் காலை இழந்த இளைஞருக்கு செயற்கை கால் வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பண்டாரம்பட்டியை சேர்ந்த கட்டிட தொழிலாளியான விக்னேஷ் என்பவர் சென்ற சில மாதங்களுக்கு முன்பாக இரு சக்கர வாகனத்தில் வேலைக்குச் சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவர் விபத்தில் சிக்கி அவரின் வலது காலை இழக்கும் துயரத்திற்கு ஆளானார். இந்நிலையில் அவருக்கு செயற்கைக்கால் ஒன்றை கொடுக்க ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அதற்கான மருத்துவர் வரவழைக்கப்பட்டு அவர் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுமியை கடித்த நாய்.. காயத்துடன் காவல் நிலையத்தில் புகார்..!!!

நாய் கடித்த சிறுமியுடன் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்கள். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் வக்கணம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவரின் 7 வயது மகள் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று விட்டு பெற்றோருடன் சந்தைகோடியூர் பகுதியில் இருக்கும் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த நாய் சிறுமியின் கையை கடித்தது. இதை தொடர்ந்து சிறுமியை பெற்றோர்கள் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கரும்பு விநியோகம் செய்த விவசாயிகளுக்கு… 54 லட்சம் ஊக்கத்தொகை..!!!

கரும்பு விநியோகம் செய்த விவசாயிகளுக்கு 54 லட்சம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கின்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கேக்கத்தாண்டபட்டியில் கூட்டுறவு சர்க்கரை ஆலை இருக்கின்றது. இந்த ஆலையில் 2021-22 வருடம் அரவை பருவத்திற்கு பதிவு செய்து கரும்பு விற்பனை செய்த விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூபாய்.195 வீதம் ஊக்க தொகை வழங்கப்படுகிறது. இது குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 2021-22 ஆம் வருடம் அறுவைக்கு கரும்பு அனுப்பி வைத்த விவசாயிகளின் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஆசிரியர்கள் இடமாற்றம்… மாணவிகள் எதிர்ப்பு… பள்ளியில் உள்ளிருப்பு போராட்டம்… வேலூரில் பரபரப்பு..!!!!

நான்கு ஆசிரியர்கள் இடமாற்றப்பட்டதால் மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள கொசப்பேட்டையில் இருக்கும் ஈ.வே.ரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 11-ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றார்கள். இப்பள்ளியில் மேல்நிலை வகுப்புக்கு பாடம் எடுக்கும் தமிழ், வேதியல், பொருளாதாரம், இயற்பியல் ஆசிரியர்கள் நான்கு பேர் அண்மையில் பணி நிரவல் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டார்கள். இதற்கு மாணவிகள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. ஆசிரியர்கள் […]

Categories

Tech |