திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் ஆத்துமேட்டில் இருக்கும் பிரியாணி கடையில் முகமது கனி என்பவர் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் ஒட்டன்சத்திரம் சாலையில் இருக்கும் மதுபான கடைக்கு சென்று குவாட்டர் பாட்டில் மதுபானத்தை வாங்கியுள்ளார். அதில் ஈ மற்றும் தூசுக்கள் மிகுந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த முகமதுவும், மது பிரியர்களும் அதனை செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இதனை அறிந்த டாஸ்மார்க் ஊழியர்கள் முகமது கனியை சுற்றிவளைத்து அவரிடம் இருந்த மதுபாட்டிலை […]
Tag: மாவட்ட செய்திகள்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் சத்தியமங்கலம்-மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு பாரம் ஏற்றி வரும் லாரிகளை எதிர்பார்த்து யானைகள் நிற்கும். இதனால் அங்கு அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சில நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகளை யானைகள் துரத்துவதால் கரும்பு கட்டுகளை சாலையில் வீச வேண்டாம் என வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் ஆசனூரில் இருந்து காரப்பள்ளம் செல்லும் சாலையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எருக்கம்பட்டி கிராமத்தில் ராணுவ வீரரான பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமுதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் குமுதா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குமுதாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் குமுதா தற்கொலை செய்து […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மனநலம் பாதித்தவர்கள் முதியவர்கள் சுற்றி திரிகின்றனர். இவர்கள் கோவிலில் வழங்கப்படும் அன்னதானம் மற்றும் தன்னார்வலர்கள் வழங்கும் உணவுகளை சாப்பிட்டு வாழ்கின்றனர். மேலும் இரவு நேரத்தில் தூங்குவதற்கு இடமின்றி கடும் பனிப்பொழிவில் சிரமப்படும் முதியவர்களை மீட்டு காப்பகங்களில் சேர்க்கும் முயற்சியில் போலீசாரும், சமூக நலத்துறையினரும் ஈடுபட்டுள்ளனர். அதன்படி நேற்று மாவட்டம் முழுவதும் சமூக நலத்துறை அலுவலர்கள் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டு 64 பேரை மீட்டு […]
திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் இருக்கும் குப்பை தொட்டிகளில் கிடந்த குப்பைகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது ரத்த வங்கிக்கு எதிரே இருக்கும் குப்பை தொட்டியில் பெண் குழந்தையின் உடல் கிடப்பதை பார்த்து தூய்மை பணியாளர்கள் உடனடியாக டாக்டர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து டாக்டர்கள் குழந்தையின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு குறை பிரசவத்தில் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையை டாக்டர்கள் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஆனால் குழந்தையை […]
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபிரகாசம் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வடக்கு வீதியில் இருக்கும் கடையில் பதிவு எண் இல்லாத இருசக்கர வாகனத்தில் சாக்கு முட்டைகளை ஏற்றி கொண்டிருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ஷ்ரவன்குமார்(22) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் வைத்திருந்த சாக்கு முட்டைகளை பிரித்து பார்த்தபோது அதில் புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து […]
கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, 2023- ஆம் ஆண்டு உலக மகளிர் தினம் முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் சாதனை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது வழங்கப்பட உள்ளது. தமிழக முதலமைச்சர் 8 கிராம் எடையில் தங்க பதக்கம், 1 லட்ச ரூபாய்கான காசோலை, மற்றும் சால்வை ஆகியவற்றை வழங்க உள்ளார். வருகிற 10-ஆம் தேதிக்குள் தகுதி வாய்ந்த நபர்கள் தமிழக அரசின் http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் […]
வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள மணக்கொல்லை கிராமத்தில் அருணாச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேன் குமார்(23) என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் குமார் இளவரசன் என்பவருக்கு சொந்தமான மாட்டு கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் குமாரை மீட்டு விருதாச்சலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளனூரில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பட்டதாரியான அன்பழகன் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் அன்பழகனுக்கு வேலைவாய்ப்பு சம்பந்தமாக முகநூலில் ஒரு லிங்க் வந்தது. அதிலிருந்த செல்போன் எண்ணை அன்பழகன் தொடர்பு கொண்டு பேசிய போது, மறுமுனையில் பேசிய நபர் விளம்பர வீடியோவை பார்த்தால் ஒரு வீடியோவுக்கு 50 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என தெரிவித்தார். இதனை நம்பி அன்பழகன் அவர் அனுப்பிய 7 வீடியோக்களை பார்த்த பிறகு அவரது […]
பவர் டில்லர் எந்திரம் ஏறி இறங்கியதால் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காட்டம்பட்டி அரசூர் பகுதியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஆகாஷ் குமார் என்பவர் தங்கியிருந்து அப்பகுதியில் இருக்கும் தோட்டத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ஆகாஷ்குமார் நிலத்தை உழுவதற்கு பயன்படுத்தும் பவர் டில்லர் எந்திரம் மீது அமர்ந்தபடி தோட்டத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆகாஷ்குமார் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் அவர் […]
மூவர்ண விளக்குகளால் சாத்தனூர் அணை அலங்கரிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தண்டாம்பட்டு அருகில் இருக்கும் சாத்தனூர் அணை 119 அடி உயரத்தைக் கொண்டது. இந்த அணையில் 117 அடி உயரத்திற்கு தண்ணீரை தேக்கி வைக்கலாம். இந்த அணையை காண்பதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வருகை புரிகின்றார்கள். சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வண்ணம் அணையில் இருக்கும் 9 ஷட்டர்களும் மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்குகள் இரவில் ஒளிர வைக்கப்படுகின்றது. மாலை 6 மணிக்கு […]
காய்கறி சாகுபடி பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வந்தவாசியை அடுத்திருக்கும் மேல்பாதி கிராமத்தில் மாநில விரிவாக்க திட்டம் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் கீழ் காய்கறி பயிர் சாகுபடியில் அதிக லாபம் ஈட்டும் முறை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விநாயகபுரம், வணக்கம்படி, மலையூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் இந்த பயிற்சிக்கு வந்து ஆர்வத்துடன் பங்கேற்றார்கள். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சித் தலைவர் பிள்ளையார் செய்திருந்தார்.
பள்ளி கட்டிடங்களை அகற்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோவில் அருகே அமைந்திருக்கும் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன் தலைமை தாங்க துணைத் தலைவர் வேலாயுதம் முன்னிலை வகித்தார். மேலும் வட்டார வளர்ச்சி அலுவலர் வெ.திலகவதி வரவேற்க அலுவலக கணக்காளர் சிவா தீர்மானங்களை படிக்கும்போது பாமக உறுப்பினர், துணைத் தலைவர் வேலாயுதம் உள்ளிட்டோர் கேள்வி எழுப்பினார்கள். […]
தஞ்சை ரயில் நிலையத்திற்கு 162-வது வயது ஆரம்பித்ததால் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தஞ்சை ரயில் நிலையத்தில் ஏராளமான எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாள்தோறும் இயக்கப்படுவதால் எப்போதும் பரபரப்புடன் காணப்படுகின்றது. இந்த ரயில் நிலையத்தில் 5 நடைமேடைகளும் 7 ரயில்வே பாதைகளும் இருக்கின்றது. பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவு என்பதால் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே தேர்ந்தெடுக்கின்றார்கள். இதனால் ரயில் பயணிகள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. திருச்சி கோட்டத்தில் திருச்சிக்கு அடுத்தபடியாக அதிக […]
கோவில்பட்டியில் பள்ளி ஆசிரியர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி புது ரோட்டில் இருக்கும் நகரசபை நடுநிலைப்பள்ளி முன்பாக நேற்று முன்தினம் காலையில் பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் ஆசிரியர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். கடலையூர் ரோடு வழியாக வரும் மினி பேருந்துகள் பள்ளிவாசல் முன்பு நிறுத்தி பயணிகளை ஏற்றி இறக்குவதை தடுக்க வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு […]
தூத்துக்குடியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 இலவச பயிற்சி நேற்று முதல் தொடங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் குரூப் 2 5,446 காலிப்பணியிடங்களுக்கான முதல் நிலை தேர்வு நடத்தப்பட்ட நிலையில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு முதன்மை தேர்வு அடுத்த வருடம் பிப்ரவரி 25ஆம் தேதி நடத்தப்பட இருக்கின்றது. முதன்மை தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் […]
காட்டு யானையை பிடிக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே வீடு புகுந்து ஒருவரை அடித்துக் கொன்ற காட்டு யானையை பிடிக்க நடவடிக்கை முடிக்கி விடப்பட்டுள்ளதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். கூடலூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த பாப்பாத்தி வீட்டில் இருக்கும் போது அங்கு வந்த காட்டு யானை ஒன்று கடுமையாக தாக்கியதில் அவர் கொல்லப்பட்டார். இந்த நிலையில் அங்கு சென்று பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை […]
சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் போதுமான அளவு தண்ணீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 8 மாதங்களுக்கு தேவையான தண்ணீர் இருப்பு உள்ளதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை தொடக்கத்தின் போது நல்ல மழை பெய்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் அதிக அளவில் தண்ணீர் இருப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் இன்னும் எட்டு மாதங்களுக்கு போதுமான தண்ணீர் இருப்பு உள்ளது […]
சக்ராசனத்தில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவன் உலக சாதனை படைத்துள்ளார். திருவள்ளூர் அருகே சக்கராசனத்தை பின்னோக்கி வளைந்து 29 முறை வாயால் பேப்பர் கப்புகளை கவ்வியபடி முன்பக்கம் வீசி பள்ளி மாணவன் புதிய உலக சாதனை படைத்துள்ளார். கும்முடிபூண்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த யஸ்வந்த் தனியார் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகின்றார். இந்நிலையில் அங்கு இயங்கி வரும் யோகா பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் யோகா பயிற்சி பெற்ற வருகிறார். இதையடுத்து இவர் […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள மைலாடி வெள்ளியங்காடு பகுதியில் விவசாயியான சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது தோட்டத்தில் ஆழ்குழாய் கிணறு அமைத்து விவசாயம் செய்து வருகிறார் மேலும் வீட்டு உபயோகித்திருக்கும் அந்த தண்ணீரை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் மழை பெய்ததால் சீனிவாசன் கிணற்று தண்ணீரை பயன்படுத்தாமல் இருந்துள்ளார். நேற்று மோட்டாரை இயக்கி கிணற்றுத் தண்ணீரை எடுத்த போது கருப்பு நிறத்தில் துர்நாற்றத்துடன் தண்ணீர் வந்ததை பார்த்து சீனிவாசன் அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மூலச்சல் ஆலுவிளை பகுதியில் சீமான் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் விலவூர் பேரூராட்சி துணைத் தலைவர் ஞான ஜெபின், அவரது மனைவி பெனிலா, நண்பர் அஜீமோன் ஆகிய 3 பேரும் இணைந்து கந்துவட்டி வசூலிக்கின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட குற்றப்பிரிவுக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு பிறப்பித்தார். […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் பகுதியில் சட்டவிரோதமாக போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் குழித்துறை வாவுபலி திடல் அருகே சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் ஒருவர் பெங்களூரு எலக்ட்ரானிக்ஸ் சிட்டியை சேர்ந்த ராஜேஷ் என்பதும், மற்றொருவர் மார்த்தாண்டத்தில் துணிக்கடை நடத்தி வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பதும் தெரியவந்தது. இருவரும் இணைந்து 300 கிராம் போதை […]
மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்பட்டி பகுதியில் மரம் வெட்டும் கூலி தொழிலாளர்களான சின்னதுரை, வடிவேல் ஆகியோர் வசித்து வந்தனர். நேற்று காலை 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வேலைக்காக காவல்காரன்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கன்னிமார்பாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது முன்னால் சென்ற ஆட்டோவை சின்னதுரை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே நிலக்கரி லோடு […]
கரூர் மாவட்டத்திலுள்ள மலைக்கோவிலூர் பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மனநலம் பாதிக்கப்பட்டும், உடைகள் அணியாமலும் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் சுற்றி திரிகிறார். தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் யாராவது உணவு கொடுத்தால் முதியவர் அதனை வாங்கி சாப்பிடுவார். இந்நிலையில் ஒரு மர்ம கும்பல் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை சித்தர் எனக்கூறி நாகம்பள்ளி பிரிவு அருகே குடிசை போட்டு அவரை அமர வைத்தனர். மேலும் முதியவருக்கு அருகே அவர்கள் ஒரு உண்டியலை வைத்து பணம் வசூல் […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள குருவரெட்டியூர் காந்திநகர் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருவதுடன், 32 செம்மறி ஆடுகள் மற்றும் மாடுகளை வளர்த்து வருகிறார் கடந்த 17-ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் பட்டியில் அடைக்கப்பட்டிருந்த ஆடுகள் அலறி சத்தம் போட்டதால் சக்திவேல் வெளியே வந்து பார்த்துள்ளார். அப்போது 16 ஆடுகள் கழுத்து, முதுகு பகுதிகளில் கடித்து குதறப்பட்ட நிலையில் இறந்து கிடந்ததை பார்த்த அதிர்ச்சியடைந்த சக்திவேல் வருவாய்த்துறை மற்றும் வனத்துறை […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக இருக்கும் 50 கிராம உதவியாளர்கள் பணிக்கு நாளை எழுத்து தேர்வு நடக்கின்றது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக இருக்கும் 50 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக இணைய வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த விண்ணப்பங்களை தாசில்தார்கள் மூலம் கூறாய்வு செய்யப்பட்டது. இதில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மூலமாக நாளை எழுத்து தேர்வு மாவட்டத்தில் 10 இடங்களில் நடைபெறுகின்றது. அவை கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக்கல்லூரி, மகளிர் மேல்நிலைப் பள்ளிகள், அரசு ஆண்கள் மேல்நிலைப் […]
பழமை வாய்ந்த அகஸ்தியா திரையரங்கம் இடிக்கப்பட்டு வருகின்றது. சென்னை மாவட்டத்தில் உள்ள வடசென்னை 1967-ம் வருடம் திறக்கப்பட்ட திரையரங்கம் அகஸ்தியா திரையரங்கம். இந்த திரையரங்கில் ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் திரையிடப்பட்டது. அந்த பகுதியில் கூலி தொழிலாளர்கள் அதிகம் என்பதால் பெண்கள் பெரும்பாலானோர் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு சினிமா பார்க்க காலை 10 மணி காட்சிக்கு வருவார்கள். அவர்களுக்கு டிக்கெட் விலையில் சலுகை வழங்கப்பட்டது. இந்த திரையரங்கில் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல் தொடங்கி தற்போதைய நடிகர்கள் […]
கடற்படை தினத்தையொட்டி கடற்படையின் செயல்பாடுகளை மாணவர்கள் அறிந்து கொள்வதற்கு இந்திய கடற்படை ஏற்பாடு செய்திருந்தது. இந்திய கடற்படை தினத்தையொட்டி பள்ளி மாணவ-மாணவிகளை கடற்படைக்கு சொந்தமான கப்பலில் அழைத்துச் சென்று அதன் செயல்பாடுகளை மாணவர்கள் அறிந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்தது. அந்த வகையில் சென்னையில் இருக்கும் நான்கு பள்ளிகளை சேர்ந்த 540 மாணவர்கள் கடற்கரைக்கு சொந்தமான காப்பலில் அழைத்துச் செல்லப்பட்டார்கள். அப்போது மாணவர்களுக்கு ஆயுதப்படையில் சேர்வதற்கு ஊக்கமளிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தந்தை பெரியார் தெருவில் லாவண்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2021- ஆம் ஆண்டு விழுப்புரம் பாகர்ஷா தெருவில் இருக்கும் பல்பொருள் அங்காடிக்கு சென்று 992 ரூபாய்க்கு மளிகை பொருட்களை வாங்கியுள்ளார். ஆனால் கடை ஊழியர்கள் 1001 ரூபாயை வாங்கிக் கொண்டு 992 ரூபாய்க்கு ரசீது கொடுத்தனர். இது குறித்து லாவண்யா கேட்டபோது பிளாஸ்டிக் கவர் ஒன்றுக்கு 3 ரூபாய் வீதம் 9 ரூபாய் சேர்த்து பெற்றுக் கொண்டதாக கடை ஊழியர்கள் […]
மினி லாரி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பூபதி நகரில் கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் மினி லாரியில் கனரக வாகனத்திற்கான இன்ஜின் பாகத்தை ஏற்றி சென்றுள்ளார். இந்நிலையில் ஆற்காட்டில் இருந்து செய்யார்- திண்டிவனம் செல்லும் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோபால் […]
இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருமங்கலத்தில் ஏஞ்சலின்(26) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்குன்றத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் காலை 8 மணி அளவில் ஏஞ்சலின் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை வாவின் அருகே சென்றபோது தனியார் பள்ளிக்கு மாணவர்களை ஏற்றி சென்ற கார் ஏஞ்சலினின் இருசக்கர வாகனம் மீது […]
இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 3-வது தெருவில் இஸ்மாயில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வத் பிவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பி.பி.ஏ பட்டதாரியான ஆஷா(24) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த ஆண்டு ஆஷாவுக்கு புழல் சக்திவேல் நகரை சேர்ந்த அமீன் பாஷா என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 40 நாட்களுக்கு முன்பு ஆஷாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனையடுத்து […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மார்தோமா நகரில் இருந்து புத்தூர் வயல் செல்லும் சாலையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கடந்த 25-ஆம் தேதி சிறுத்தை தாக்க முயன்ட்ற போது மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்நிலையில் கூடலூர் அரசு கல்லூரியில் சுசிலா(18) என்பவர் படித்து வருகிறார். மாலை நேரத்தில் சுசீலா கூடலூரில் இருக்கும் ஜவுளி கடையில் பகுதி நேர ஊழியராக வேலை பார்த்தது வருகிறார். கடந்த 2 […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு சாஸ்திரி நகரில் தனியாருக்கு சொந்தமான சோலார் பல்புகள் மற்றும் டயர்கள் விற்பனை செய்யும் நிறுவனம் அமைந்துள்ளது. இதன் மற்றொரு கிளை பெங்களூருவில் இருக்கிறது. அங்குள்ள மேலாளரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட நபர் தன்னை ராணுவ அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டார். இதனையடுத்து சோலார் பல்புகள், அதன் விலை விவரங்கள் தெரிய வேண்டும் என அவர் கூறியுள்ளார். இதனால் அந்த நிறுவனத்தினர் அவரின் செல்போன் எண்ணிற்கு விவரங்களை அனுப்பி வைத்தனர். மீண்டும் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு காந்திநகர் பகுதியில் கட்டிட காண்டிராக்டரான தாஜூதீன்(33) என்பவர் வசித்து வருகிறார். தற்போது இவர் கோவை கணபதி பகுதியில் இருக்கும் விடுதியில் தங்கி இருந்து கட்டிடப் பணிகளை கவனித்து வருகிறார். நேற்று தாஜூதீன் தனது தந்தை அப்துல்லாவுடன் வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது தாஜூதீனின் உடலில் கம்பியால் தாக்கிய காயங்களும், சூடு வைத்த அடையாளங்களும் இருந்ததை பார்த்து மருத்துவர்கள் விசாரித்த போது, மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் அடித்து சித்திரவதை செய்து பணம் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு சுப்ரமணிய சிவா பேருந்து நிலையத்தில் கொடைரோடு செல்லும் அரசு பேருந்து நின்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 20-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அமர்ந்திருந்தனர். அந்த பேருந்தின் ஓட்டுநர் அருகில் இருந்த டீக்கடைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் பேருந்து நிலையத்திற்குள் வந்த மற்றொரு பேருந்து கொடைரோடு செல்வதற்காக நின்ற அரசு பேருந்து மீது மோதியது. இதனால் அரசு பேருந்து ஓட்டுநர் இல்லாமல் நகர்வதை பார்த்த மாணவிகள் அபாய குரல் எழுப்பியுள்ளனர். இதைக் கேட்டு ஓடி […]
அரசு பள்ளி தலைமையாசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலை பெரியபாலம் அருகே ரவிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோட்டைமேடு பகுதியில் இருக்கும் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு நிவேதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு லோகித் என்ற மகனும், பார்கவி என்ற மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான ரவிக்குமார் […]
லாரியும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 14 பேர் காயமடைந்தனர். பெங்களூரில் இருந்து அரசு பேருந்து விருதாச்சலம் நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மிட்டப்பள்ளி தனியார் பள்ளி அருகே அதிகாலை 2 மணி அளவில் சென்றபோது ஊத்தங்கரை நோக்கி வந்த லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதியது. இதனால் பேருந்தில் தூங்கிக் கொண்டிருந்த பயணிகள் அலறி சத்தம் போட்டனர். இந்த விபத்தில் வாகனங்களின் முன்பகுதி சேதமானது. இதுகுறித்து தகவல் அறிந்த […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கஞ்சம்பட்டி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் வளர்த்து வந்த ஆடு கடந்த 20 நாட்களுக்கு முன்பு 3 குட்டிகளை ஈன்றது. இதனையடுத்து தொற்று ஏற்பட்டதால் தாய் ஆடு பரிதாபமாக இறந்தது. இதனால் குடிக்க பாலின்றி தவித்த 3 ஆட்டுக்குட்டிகளையும் சக்திவேல் திருமலைபுரத்தில் வசிக்கும் பதினெட்டு என்பவரிடம் வளர்ப்பதற்காக கொடுத்தார். அவர் ஏற்கனவே பத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். ஆனால் அந்த 3 குட்டிகளுக்கும் பிற ஆடுகள் […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி தனது மனைவி உமாதேவி மற்றும் 2 குழந்தைகளை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் அச்சம்பட்டி பகுதியில் வசிக்கும் மருதுபாண்டி என்பவர் உமாதேவி 9 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்து விட்டு தலைமறைவானதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். […]
போதை ஒழிப்பு மற்றும் போக்சோ விழிப்புணர்வு முகாம் சிஎஸ்ஐ பள்ளியில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் திருப்பூர் மாவட்ட பணிகள் ஆணைக்குழு உத்தரவின்படி பள்ளி மாணவர்களுக்கான போதை ஒழிப்பு மற்றும் போக்சோ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதற்கு தாராபுரம் வட்டம் சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான எம்.தர்மபிரபு மற்றும் குற்றவியல் நடுவர் எஸ்.பாபு உள்ளிட்டோர் தலைமை தாங்கி உரையாற்றினார்கள். அவர்கள் சட்டம் மற்றும் […]
புதிய தார் சாலை அமைக்கும் பணியை எம்எல்ஏ தொடங்கி வைத்தார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஏரல் அருகே இருக்கும் முக்காணி ரவுண்டானா அருகில் இருந்து கொற்கை விலக்கு வரை புதிய சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கு 1 1/4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணியை ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ தலைமை ஏற்று கொடியசைத்து பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர், திமுக செயலாளர், யூனியன் கவுன்சிலர், […]
எரிவாயு குழாய் பதிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பூமி பூஜை பாதியில் நிறுத்தப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அருங்குளம் கிராமத்தில் இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்கு பூமி பூஜை போட எரிவழி குழாய் பதிக்க தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கிராம ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாசில்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். இங்கு எரிவாயு திட்டம் வருவது குறித்து இதுவரை எங்கள் ஊராட்சிக்கு எந்த ஒரு தகவலையும் […]
விபத்து ஏற்படுத்தும் பாறைகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் லோயர் கேம்ப் இருக்கின்றது. இங்கே போலீஸ் மற்றும் வனத்துறை சோதனை சாவடிகள் இருக்கின்றது. குமிளி செல்வதற்கு வனப்பகுதியில் ஆறு கிலோமீட்டர் தூரம் மலைப்பாதை அமைந்திருக்கின்றது. இந்த மலைப்பாதையில் ஏராளமான கொண்டை ஊசி வளைவுகளும் சில இடங்களில் சாலைகள் குறுக்கலாகவும் இருக்கின்றது. சில இடங்களில் பெரிய பாறைகள், மரங்கள் சாலையில் உருண்டு செல்லும் நிலையில் இருக்கின்றது. அதில் இரண்டாவது மேம்பாலத்திலிருந்து […]
தமிழகத்தில் வருடம் தோறும் வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 12 சதவீதம் அதிகரித்து இருப்பதாக வருமான வரித்துறை முதன்மை தலைமை ஆணையர் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள காந்தி ரோட்டில் இருக்கும் வருமானவரித்துறை அலுவலகத்தில் வருமான வரி செலுத்துவோர் மற்றும் பட்டய கணக்காளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதன்மை தலைமை ஆணையர் ரவிச்சந்திரன் பங்கேற்றார். அப்போது அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது, தமிழ்நாடு, புதுச்சேரி வருமான வரித்துறையில் 1 லட்சத்து 8000 கோடி வரை வசூல் செய்ய […]
ரயில்களில் கட்டணச் சலுகை மீண்டும் கிடைக்குமா என விளையாட்டு வீரர், வீராங்கனைகள் எதிர்பார்க்கின்றார்கள். வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் நலனை கருதி ரயில்வே வாரியம் சார்பாக டிக்கெட் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டு வந்த நிலையில் சென்ற 2020 ஆம் வருடம் கொரோனா தொற்று பரவல் உச்சத்தில் இருந்தபோது மூன்று மாதங்கள் ரயில் சேவை முடங்கியது. இதனால் வருவாய் இழப்பை சமாளிப்பதற்கு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு கட்டண சலுகை […]
கைதிகளுடன் உறவினர்கள் பேசுவதற்கு சேலம் மத்திய சிறையில் இன்டர்காம் தொலைபேசி வசதி செய்யப்பட்டு இருக்கின்றது. சேலம் மத்திய சிறைச்சாலையில் 800க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளார்கள். சிறையில் இருக்கும் கைதிகளை சந்திப்பதற்காக அவர்களின் உறவினர்கள் கொடுக்கும் மனுக்களின் அடிப்படையில் ஏராளமானோர் அனுமதிக்கப்படுகின்றார்கள். அப்போது கைதிகள் ஒருபுறமும் உறவினர்கள், வக்கீல்கள் மற்றொருபுறமும் நின்று பேசுகின்றார்கள். இடைப்பட்ட தூரம் அதிகமாக இருப்பதால் இருதரப்பினரும் கத்தி பேசுகின்றனர். இந்நிலையில் கம்பி வலையில் உள்ளே இருக்கும் கைதி தன்னுடைய உறவினரின் முகத்தை பார்த்து பேசும் […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சின்னசேலம் பகுதியில் வசிக்கும் 25 வயதுடைய இளம்பெண்ணுக்கு முகநூல் மூலம் ஒரு வாலிபர் அறிமுகமானார். தாமோதரன் என்கிற ரவிக்குமார் என்ற பெயரில் அறிமுகமான வாலிபர் தான் சினிமா துறையில் வேலை பார்ப்பதாக இளம்பெண்ணிடம் கூறியுள்ளார். மேலும் நீங்கள் சினிமாவில் நடித்தால் பெரிய ஆளாக வருவீர்கள் என ஆசை வார்த்தைகள் கூறியதால் அந்த பெண் சினிமாவில் நடிக்க என்ன செய்ய வேண்டும் என அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு நீங்கள் விதவிதமான ஆடையில் உங்களை போட்டோ […]
கள்ளக்குறிச்சியில் இருக்கும் பள்ளி கல்லூரிகளில் கல்வராயன் மலை அடிவாரப்பகுதியான புதுப்பட்டு, மூலக்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் தினமும் அரசு பேருந்து மூலம் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் சேராப்பட்டு பகுதியில் இருந்து சங்கராபுரம் வழியாக கள்ளக்குறிச்சிக்கு ஒரு அரசு பேருந்து மட்டுமே இயக்கப்படுவதால் வேறு வழி இல்லாமல் படிக்கட்டில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பேருந்து கண்டக்டர்களுக்கும், மாணவர்களுக்கும் […]
சிவகங்கை மாவட்டத்திலுள்ள வி.மலம்பட்டி பகுதியில் ஹோட்டல் தொழிலாளியான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு வள்ளியப்பன்(20), சின்னையா(17), விஜயகுமார்(15) ஆகிய மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இதில் விஜயகுமார் வேலங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று பள்ளியில் நடைபெற்ற சிறப்பு வகுப்புக்கு வழக்கம் போல காலை 7 மணிக்கு விஜயகுமார் சென்றுள்ளார். இதனையடுத்து காலை உணவு இடைவேளையின் போது விஜயகுமார் பள்ளிக்கு வெளியே சென்றுள்ளார். […]