உடன்குடியில் ஊருக்குள் புகுந்த மிளாவை கயிறு கட்டி பிடித்ததால் பரிதாபமாக உயிரிழந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி அருகே இருக்கும் குலசேகரப்பட்டினம் அருகே அடர்ந்த காட்டுப்பகுதி இருக்கின்றது. இங்கே மிளா,மான் உள்ளிட்ட வனவிலங்குகள் இருக்கின்றது. இவை அவ்வப்போது உணவுக்காக ஊருக்குள் புகுந்து விடுகின்றது. இந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக காட்டுப்பகுதியில் இருந்து மிளா ஒன்று ஊருக்குள் புகுந்தது. அப்போது அங்கே நின்று கொண்டிருந்த மாடுகளுடன் இரவு 10 மணி அளவில் உடன்குடி பஜார் பகுதிக்கு மிளா […]
Tag: மாவட்ட செய்திகள்
இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் விவசாயியான ராஜகோபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த கார் ராஜகோபாலின் வாகனம் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜகோபாலை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராஜகோபால் பரிதாபமாக […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கன்னிச்சேரி- முதலிப்பட்டி சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பழக்கடை வைத்திருக்கும் சிவசக்தி என்பவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை குறுந்தகவல் மூலம் விற்பனை செய்து வந்துள்ளார். இதனை அறிந்த போலீசார் சிவசக்தியை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த லாட்டரி சீட்டுகள், செல்போன் மற்றும் ஐந்தாயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சிவசக்திக்கு உடந்தையாக இருந்த மற்றொரு நபரை தீவிரமாக […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அருகே காரனூர் கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அருள்மணி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். வெளிநாட்டில் வேலை பார்த்த செந்தில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்துள்ளார். பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்ட செந்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் தான் மீண்டும் வெளிநாடு செல்ல போவதாக செந்தில் தனது மனைவிடம் தெரிவித்துள்ளார். இதற்கு அருள்மணி மறுப்பு தெரிவித்ததால் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாமிநாதபுரம் பகுதியில் தனியார் பேப்பர் மில் மற்றும் நூற்பாலை நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நூல்களுக்கு சாயம் ஏற்றும் பிரிவு ஆலையில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த தொழிலாளர்கள் உடனடியாக அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர். சிறிது நேரத்தில் தீ வேகமாக பரவி பயங்கர சத்தத்துடன் பாய்லர் வெடித்து சிதறியது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]
சென்னை மாவட்டத்தில் உள்ள தண்டையார்பேட்டை தமிழர் நகரில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு லேப் டெக்னீசியனான ரேகா(35) என்ற மகள் இருந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி வடபழனி முருகன் கோவிலில் வைத்து ரேகாவுக்கும், ராஜாசேகரன் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. கடந்த 19-ஆம் தேதி ரேகா தாய் வீட்டிற்கு சென்று அங்கிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ராஜசேகரன் தனது மனைவியை வீட்டிற்கு […]
பிரியாணி சாப்பிட்ட வாலிபர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள லக்கம்பட்டி காலனியில் தீர்த்தகிரி என்பவர் வசித்து வருகிறார். இவர் அருண்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தேன்கனிக்கோட்டை பகுதியில் இருக்கும் பர்னிச்சர் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அருண்குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரியாணி சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கி விழுந்த அருண்குமாரை நண்பர்கள் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அருண்குமாரை […]
மதுரை மாவட்டத்திலுள்ள வீரப்பட்டி கிராமத்தில் இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்றுவதற்காக போலீஸ் பாதுகாப்புடன் தாசில்தார் சிவராமன், வருவாய் துறை அலுவலர்கள் ஆகியோர் அங்கு சென்றனர். அப்போது ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பெண் வீட்டிற்குள் சென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனை பார்த்ததும் போலீசார் அந்த பெண்ணை குண்டு கட்டாக தூக்கி வெளியே கொண்டு வந்தனர். இதனையடுத்து வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது, 50 ஆண்டுகளாக நாங்கள் […]
மதுரை மாவட்டத்திலுள்ள மீனாட்சி அம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மாதம் ஒரு முறை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அதனை சார்ந்த உப கோவில்களில் இருக்கும் உண்டியல்கள் எண்ணப்படுவது வழக்கம். நேற்று மீனாட்சி அம்மன் கோவிலில் இருக்கும் பழைய திருக்கல்யாணம் மண்டபத்தில் வைத்து உண்டியல் காணிக்கையை எண்ணியுள்ளனர். இந்த பணியில் கோவில் பணியாளர்கள், வங்கி பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். அதில் காணிக்கையாக 1 கோடியே 4 லட்சத்து 37 ஆயிரத்து […]
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டையை சேர்ந்த அய்யா என்பவர் மதுரை ஐகோர்ட்டில் மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, ஆன்லைன் சூதாட்டம் மற்றும் விளையாட்டு செயலிகள் போன்றவற்றில் பலர் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு செல்கின்றனர். ஆன்லைன் விளையாட்டுகள் காரணமாக விவாகரத்து, வறுமை மற்றும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. மேலும் சிறுவர்களும் சூதாட்டம் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளில் கவனம் செலுத்துவதால் குற்றவாளிகளாக மாறும் சூழ்நிலை அதிகரித்துள்ளது. எனவே 18 வயதிற்கு கீழ் […]
மதுரை மாவட்டத்திலுள்ள கல்லம்பல் பகுதியில் வசிக்கும் சிவலிங்கம் என்பவர் நேற்று முன் தினம் தனது தம்பியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது 3 வாலிபர்கள் லிஸ்ட் கேட்பது போல் நடித்து கத்தியை காட்டி மிரட்டி சிவலிங்கம் மற்றும் அவரது சகோதரரிடம் இருந்த செல்போன்களை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அந்த மர்ம நபர்கள் புதுப்பட்டி, ஒத்தக்கடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வாகன சோதனையில் […]
80 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த நபரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெத்தானூர் கிராமத்தில் விவசாயியான குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரை செல்போன் மூலம் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சுதர்சன் என்பவர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது உங்களது மகன் மனோஜ் குமாருக்கு சென்னை எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் பட்ட படிப்பு படிக்க ஏற்பாடு செய்கிறேன் என சுதர்சன் கூறியுள்ளார். அதற்கு 80 ஆயிரம் ரூபாய் பணம் செலவாகும் என கூறியுள்ளார். அதனை […]
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த சில மாணவர்களை மர்ம நபர் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த நபர் உங்களுக்கு கல்வி உதவி தொகை வந்துள்ளது எனவும், அதனை வாங்க ஆன்லைனில் 3000 ரூபாய் அனுப்ப வேண்டும் என கூறி மோசடி செயலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மாணவர்கள் தங்களது பள்ளி ஆசிரியரை தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அப்போது ஆசிரியர், யாரிடமும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம். அரசு மூலம் உதவித்தொகை வழங்கினால் உங்களது வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும். […]
முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று 60 வயது மதிக்கத்தக்க முதியவர் சென்றுள்ளார். இந்நிலையில் திடீரென அந்த முதியவர் தான் மறைத்து கொண்டு வந்த மண்ணெண்ணெயை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த போலீசார் முதியவரிடம் இருந்து மண்ணெண்ணெய் கேனை பறித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் முதியவர் கூறியதாவது, எனது பெயர் சிகாமணி. நான் பண்ருட்டி கீழ்மாம்பட்டை பகுதியில் வசித்து வருகிறேன். பிரதம மந்திரி […]
சுற்றுலா வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள சோட்டானிக்கரை பகுதியை சேர்ந்த 13 பேர் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு ஒரு வேனில் சுற்றுலா சென்றுள்ளனர். இந்த வேனை என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.vஅவர்கள் கொடைக்கானலில் இருக்கும் பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்துவிட்டு மோர்பாயிண்ட் பகுதிக்கு வேனில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்குள்ள வளைவில் திரும்ப முயன்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சங்கர்களம் பகுதியில் விவசாயியான சடையப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 10 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசுமாடு எதிர்பாராதவிதமாக 50 அடி ஆழமுடைய கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. மாட்டின் சத்தம் கேட்டு ஓடி வந்த சடையப்பனின் குடும்பத்தினர் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களின் உதவியுடன் […]
கல் உப்பின் விலை உயரக்கூடும் என வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தேவிபட்டினம் அருகே இருக்கும் கோப்பேரி மடம், திருப்பாலைக்குடி, உப்பூர், சம்பை, பத்தனேந்தல், திருப்பாலைக்குடி ஆகிய ஊர்களில் ஏராளமான உப்பளபாத்திகள் இருக்கின்றது. இங்கே வருடம் தோறும் பிப்ரவரி மாதம் முதல் செப்டம்பர் வரை உப்பு உற்பத்தி செய்யும் சீசன் ஆகும். இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை சீசன் ஆரம்பித்திருப்பதால் உப்பளங்கள் முழுவதும் மழை நீரில் மூழ்கியுள்ளது. இதனால் பாத்திகளில் சேகரித்து வைத்த கல் உப்புகள் […]
குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருவதால் ஊராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு கோஷமிட்டனர். தேனி மாவட்டத்தில் உள்ள கடுமலைகுண்டுவை அடுத்திருக்கும் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இருக்கின்றது. இப்பகுதியில் குடிநீர் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருகின்றது. இதனால் மக்கள் காய்ச்சல், தொண்டை வலி, சளி என உடல்நிலை பாதிக்கப்படுகின்றது. இதன் காரணமாக பணம் கொடுத்து கேன்களில் தண்ணீர் வாங்கி குடித்து வருகின்றார்கள். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் […]
விடிய விடிய பெய்த கனமழையால் கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தேனி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்ததால் ஆறு, குளம், அணைகள் உள்ளிட்டவற்றில் நீர்வரத்து அதிகரித்தது. சென்ற சில நாட்களாக மழை பெய்யவில்லை. வெயிலில் தாக்கவும் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் நேற்று முன் தினம் போடியில் திடீரென கனமழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் சாலையில் மழைநீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்த மழையால் […]
மதுரை வீரன் கோவிலை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆட்டையாம்பட்டி பிரிவு அருகே சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற 2008 ஆம் வருடம் நில அளவீடு செய்த போது சாலையின் இரு புறங்களிலும் மரக்கன்றுகள் நடுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை மரங்கள் நடவில்லை. இதனால் அப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்கு இருக்கின்றது. இதனிடையே ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் இருந்து மசக்காளிபட்டி பேருந்து […]
மாமனாரை கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வடுகப்பட்டி கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரரான ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் ரவிச்சந்திரன் இரட்டை குழல் துப்பாக்கியால் தனது மாமனார் செல்வராஜை சுட்டு கொன்றார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று முன்தினம் ரவிச்சந்திரனை அதிரடியாக கைது செய்தனர். இதனையடுத்து கந்தர்வகோட்டை சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரவிச்சந்திரன் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆறு மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தக்கோட்டை பகுதியில் சாமிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ராதிகா(25) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. இந்நிலையில் 6 மாத கர்ப்பிணியாக இருந்த ராதிகா நல்லம்மாள்சத்திரத்தில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு பின்புறம் சென்றபோது பாம்பு கடித்ததால் மயங்கி விழுந்த ராதிகாவை குடும்பத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]
சுவர் இடிந்து விழுந்து இரண்டு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள சின்னையன் பேட்டை கிராமத்தில் மாரிமுத்து- கண்மணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு வயதுடைய ரித்விக் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாமியார் வீட்டிற்கு மாரிமுத்து தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வந்துள்ளார். நேற்று முன்தினம் ரித்விக் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக சுவர் இடிந்து ரித்விக் மீது விழுந்தது. இதனால் […]
மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ராசநாயக்கன்பட்டி பகுதியில் ஏழுமலை(70) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று ஏழுமலை மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கசாவடி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ஏழுமலையின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஏழுமலையை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை […]
ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேலபுலியூர் கிராமத்தில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் ஜெயசக்தி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் விடுமுறை தினத்தை முன்னிட்டு ஜெயசக்தி கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்லாநத்தம் கிராமத்தில் இருக்கும் தாத்தா வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் தாத்தாவுடன் ஊனத்தூர் ஏரி பகுதிக்கு மாடு மேய்க்க சென்ற ஜெயசக்தி ஏரியில் விளையாடி கொண்டிருந்தார். இதனையடுத்து திடீரென ஜெய்சக்தி காணாமல் போனதால் […]
சேலம் மாவட்டத்தில் வாகன விபத்துகளை தடுக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதனால் சேலம் மாநகரில் இருக்கும் முக்கிய இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனைகள் ஈடுபட்டு, போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கின்றனர். இதுகுறித்து போக்குவரத்து அதிகாரிகள் கூறியதாவது, விதிமுறைகளை மீறி செல்போன் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 118 பேரின் […]
சேலம் மாவட்டத்தில் உள்ள வாழப்பாடி பேளூர் பகுதியில் ஜெயினுலாதீன்(54) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஜெயினுலாதீனின் கடைக்கு டிப்-டாப் உடையணிந்த வாலிபர்கள் சென்று குறைந்த விலைக்கு தங்கமணி மாலை இருக்கிறது எனவும், 60 லட்ச ரூபாய் கொடுத்து அதனை வாங்கிக் கொள்ளுமாறும் கூறியுள்ளனர். அதனை பார்த்த ஜெயினுலாதீன் பணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன் என தெரிவித்துள்ளார். இதனால் அவர்கள் குரங்குசாவடி பகுதியில் நாங்கள் தங்கி இருக்கிறோம், பணத்தை ஏற்பாடு செய்துவிட்டு […]
லாரி சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரியில் இருந்து ஓமலூர் வரை சாலை விரிவாக்க பணிக்காக இருபுறமும் இருக்கும் மரங்களை வெட்டி அகற்றியுள்ளனர். அங்கு சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் எட்டிகுட்டை மேடு பகுதி சாலையின் இருபுறங்களிலும் ஒரு அடி பள்ளம் இருக்கிறது. நேற்று பழைய இரும்பு பொருட்கள் ஏற்றிக்கொண்டு மைசூரில் இருந்து சரக்கு லாரி திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள எனதிரிமங்கலம் தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல் மற்றும் வரலாற்று ஆர்வலர் மோகன கண்ணன் ஆகியோர் கள ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆய்வாளர்கள் 15 சென்டிமீட்டர் உயரமும், 7 சென்டிமீட்டர் அகலமும் உடைய சூடு மண்ணால் ஆன விநாயகர் சிலையை கண்டெடுத்தனர். இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறியதாவது, கண்டெடுக்கப்பட்ட விநாயகர் சிலையின் தலையில் கரண்ட மகுடமும், இரு காதுகளில் ஓட்டையும், துதிக்கை நீண்டும் காணப்படுகிறது. சிலையின் தோள்களிலும் காப்பு அணிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிலை […]
வெளிநாட்டு வேலைக்கு சுற்றுலா செல்ல சுற்றுலா விசா மூலம் இளைஞர்களை அனுப்பி வைத்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்த போலி முகவரை போலீசார் கைது செய்துள்ளார்கள். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜோஷ்பின் ராயன் என்பவர் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சென்னை வடபழனியில் இருக்கும் தனியார் வளாகத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அலுவலகம் நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்று வருகின்றது. இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க […]
கிசான் பயனாளிகள் தவணை தொகையை பெறுவதற்கு ஆதார் எண்ணை 30ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டம் சென்ற 2018 ஆம் வருடம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதன் மூலம் சொந்தமாக நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்களுக்கு உதவி தொகையாக நான்கு மாதத்திற்கு ஒரு முறை 2000 வீதம் வருடத்திற்கு 6000 என மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படுகின்றது. நடைபாண்டில் 13வது தவணையாக டிசம்பர் முதல் […]
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கருப்பமூப்பன்பட்டி பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மரம் வெட்டும் தொழிலாளி. இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமி வீட்டிற்கு வெளியே நின்று விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது செல்வம் சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் தாய் வத்தலகுண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திண்டுக்கல் மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கடைகளில் பயன்படுத்தப்படுகிறதா? என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் படி மாநகர் நல அலுவலர் இந்திரா தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நேற்று அதிகாரிகள் பல்வேறு கடைகளில் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் லாரியில் திண்டுக்கல்லுக்கு கொண்டுவரப்பட்ட […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் விவசாயியான பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் வளர்த்த பசுமாடு அதிசயமாக ஆறு கால்கள் உடைய கன்று குட்டியை ஈன்றது. இதுகுறித்து அறிந்ததும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கன்று குட்டியை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த கன்று குட்டி இறந்துவிட்டது. இதுகுறித்து தகவலறிந்த கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கன்று குட்டியை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் கன்று குட்டியின் […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள காமையன்புரம் கிராமத்தில் விவசாயியான மல்லிகார்ஜுனா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 7 ஆடுகள் மற்றும் 3 மாடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று மல்லிகார்ஜுனா தொட்டியில் தண்ணீர் நிரப்பி வைத்திருந்தார். அந்த தண்ணீரை 5 ஆடுகள் மட்டும் குடித்தது. சிறிது நேரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக மயங்கி விழுந்த 5 ஆடுகளும் பரிதாபமாக இறந்துவிட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மல்லிகார்ஜுனா கால்நடை டாக்டருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கால்நடை […]
மருத்துவக் கல்லூரி மாணவர் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த ஆல்வின் நாயகம் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் வில்லியம்ஸ் உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பு இறுதி ஆண்டு படித்து வந்தார். அங்கு போர் நிலவிய காரணத்தினால் வில்லியம்ஸ் இந்தியா வந்து தேர்வு எழுதுவதற்காக டெல்லியில் தங்கியிருந்து படித்து கொண்டிருந்தார் பின்னர் வில்லியம்ஸ் தனது நண்பர்கள் 6 பேருடன் டெல்லியில் இருந்து இமாச்சல பிரதேசத்திற்கு […]
கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என ஆட்சியர் கூறியுள்ளார். தேனி மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தில் கனிம வளங்கள் ஏற்றிச்செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்துவது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, குவாரிகளில் இருந்து கனிம வளங்களை ஏற்றி செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருக்கின்றது. தேனி மாவட்டத்தில் இயங்கி வரும் 32 […]
மாநகரப் பேருந்துகளில் பேருந்து நிறுத்தத்தை முன் கூட்டியே தெரிவிக்கும் ஒலிக்கருவி திட்டத்தை எம்எல்ஏ உதயநிதி தொடங்கி வைத்தார். சென்னையில் மாநகர் பேருந்துகளில் ஜிபிஎஸ் கருவி மூலமாக பேருந்து நிறுத்தம் குறித்து ஒலி அறிவிப்புத் திட்டம் நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி சென்னையில் உள்ள பல்லவன் சாலை பணிமனை வளாகத்தில் நடத்தப்பட்டது. இதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமை தாங்க இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முன்னிலை வகித்தார். மேலும் அதிகாரிகள் பலரும் பங்கேற்றார்கள். […]
மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பாக நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை மாவட்டத்தில் உள்ள மீஞ்சூர் ஒன்றிய ஆரம்ப சுகாதார நிலையத்தை தலைமை இடமாக கொண்டு மீஞ்சூர் மருத்துவமனை இயங்குகின்றது. இங்கு மருத்துவ அலுவலராக நிஜந்தன் என்பவர் வேலை செய்து வருகின்றார். இவர் நேற்று முன்தினம் காலை வட்டார மருத்துவர் அலுவலரின் உத்தரவின்படி பயிற்சி டாக்டர் ஒருவரை அத்திப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாற்றுப் பணிக்கு செல்ல கூறி இருக்கின்றார். ஆனால் அங்கு பயிற்சி […]
புளியந்தோப்பு சாலையில் 15 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது. சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் புளியந்தோப்பு போலீசார் இரண்டு நாட்களுக்கு முன்பாக நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்போது அதிகாலை 2 மணி அளவில் திடீரென 15 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டு இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தார்கள். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூரில் 40 வயதுடைய பெண் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 16 மற்றும் 17 வயதில் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வாகன விபத்தில் பேராசிரியையின் கணவர் இறந்துவிட்டார். கடந்த 2014- ஆம் ஆண்டு மருந்து விற்பனை பிரதிநிதியை பேராசிரியர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். அவர் தனது 2 மனைவிகளுடனும் வாழ்ந்து வந்துள்ளார். கடந்து சில நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த பேராசிரியையின் […]
புது மாப்பிள்ளை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திம்மணநல்லூர் பகுதியில் கட்டிட தொழிலாளியான முத்து என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு முத்து துர்காதேவி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சின்னியம்பாளையம் பகுதியில் இருக்கும் கண்ணன் என்பவரது வீட்டு மாடியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது முத்து நீளமான இரும்பு கம்பியை வளைக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக இரும்பு கம்பி மேலே சென்ற மின் […]
கபிஸ்தலம் அருகே இருக்கும் தனியார் சர்க்கரை ஆலை தமிழக அரசே எடுத்து நடத்த வேண்டும் என விவசாயிகள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். தஞ்சை மாவட்டத்திலுள்ள சுவாமிமலையில் கரும்பு விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு விவசாயி நாக முருகேசன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் பின்வருமாறு, கபிஸ்தலம் அருகே இருக்கும் திருமன்றங்குடி தனியார் சர்க்கரை ஆலை, விவசாயிகள் பெயரில் வாங்கிய வங்கி கடன் மற்றும் கரும்பு கிரயத்தில் விவசாயிகள் […]
பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் தாளாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். சென்னை மாவட்டத்தில் உள்ள திருநின்றவூரில் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் தாளாளர் வினோத் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் அளிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வினோத்தை கைது செய்ய வலியுறுத்தி மாணவர்களின் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதற்கிடையில் வினோத் பேசுவது போன்ற […]
பெண்கள் குளித்து கொண்டிருந்த போது குற்றால மெயின் அருவியில் உடும்பு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்திற்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது ஐயப்ப பக்தர்களும் குற்றால அருவிகளில் குளித்து சொல்கின்றனர். நேற்று முன்தினம் பெண்கள் குளிக்கும் பகுதியில் இருக்கும் பாதுகாப்பு விளைவின் மீது திடீரென உடும்பு ஒன்று விழுந்தது. இதனை பார்த்த பெண்கள் அலறியடித்து கொண்டு அருவியில் இருந்து வெளியே ஓடினர். இந்நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு […]
தென்காசி மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் கிராமத்தில் பட்டங்காடு காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் கோயிலுக்கு எதிரே இருக்கும் இடத்தில் தென்னங்கன்று நடுவதற்காக டிராக்டரில் நிலத்தை உழுது கொண்டிருந்தனர். அப்போது தென்பட்ட நடராஜர் சிலையை வெளியே எடுத்ததால் ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனையடுத்து பொதுமக்கள் அப்பகுதியில் இருக்கும் சிவ பாக்கிய விநாயகர் கோவில் முன்பு 52 கிலோ எடையும் 2 1/2 அடி உயரமும் உடைய ஐம்பொன் நடராஜர் சிலையை வைத்து மாலை அணிவித்து பூஜைகள் செய்து […]
சென்னை மாவட்டத்தில் உள்ள ஆவடி ஜே.பி எஸ்டேட் முதல் மெயின் ரோட்டில் இன்ஜினியரான அவினாஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வைத்துள்ளார். இவருக்கு பவித்ரா தேவி என்ற மனைவி உள்ளார். திருமணமாகி 7 ஆண்டுகளாகியும் இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டதால் கடந்த 6 மாதத்திற்கு முன்பு பவித்ரா தேவியின் குடும்பத்தினர் அவினாஷ் மீது அயனாவரம் அனைத்து மகளிர் காவல் […]
தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொரட்டூர் சிவசக்தி நகர் முதல் தெருவில் தொழிலதிபரான பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்த பாலகிருஷ்ணன் வங்கியில் 1 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை திருப்பி செலுத்த இயலவில்லை. இதனால் வங்கி அதிகாரிகள் வீட்டை ஜப்தி செய்து சீல் வைத்தனர். இதனால் மன […]
சென்ற வருடத்தை விட நவம்பர் மாதத்தில் மழை குறைந்திருப்பதால் ஏரி, குளங்கள் நிரம்ப வில்லை. கடலூர் மாவட்டத்தில் நவம்பர் 26ம் தேதி வரை பருவமழை சராசரியாக 305.2 மி.மீ ஆகும். சராசரியை விட தற்போது அதிகமாக மழை பெய்துள்ளது. ஆனால் சென்ற வருடத்துடன் ஒப்பிடும் போது குறைந்த அளவே மழை பெய்து இருக்கின்றது. சென்ற வருடம் வடகிழக்கு பருவ மழை நவம்பர் 26ம் தேதி வரை 537 மி.மீட்டர் மழை பெய்திருந்தது. சராசரியை விட அதிக அளவு […]
வடலூரில் லாரி மோதியதில் என்.எல்.சி தொழிலாளர்கள் இரண்டு பேர் உயிரிழந்துள்ளார்கள். கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி அருகே திருமுருகன் என்பவரும் சுகுமார் என்பவரும் நெய்வேலியில் இருக்கும் என்.எல்.சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை செய்து வருகின்றார்கள். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் காலை 6 மணிக்கு மோட்டார் சைக்கிள் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு பின்னால் என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளி சந்திரகலா தனது பெற்றோர் வீட்டில் இருந்து மொபட்டில் நெய்வேலி நோக்கி சென்று […]