ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அலுவலகம் வெறுச்சோடி காணப்பட்டது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் இரண்டு நாட்களுக்கு சிறு விடுப்பு போராட்டமும் அடுத்த மாதம் டிசம்பர் 14ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டமும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று முன்தினம் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் ஊழியர்கள் 36 பேர் சிறு விடுப்பு […]
Tag: மாவட்ட செய்திகள்
சமூக வலைதளங்களில் வரும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இளைஞர்கள் மத்திய அரசின் தகுதி பெற்ற முகவர்களை அணுகி விசா, என்ன பணி, முறையான ஒப்பந்தம் ஆகியவற்றை சரி பார்க்க வேண்டும். ஆன்லைன் மூலமாக ஏமாற்றுகின்றார்கள். ஆகையால் சோசியல் மீடியாவில் வரும் போலியான விளம்பரங்களைக் கண்டு யாரும் ஏமாற வேண்டாம். […]
கல்லூரி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து நர்சிங் மாணவி குதித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். தேனி மாவட்டத்திலுள்ள உத்தமபாளையம் அருகே இருக்கும் பண்ணைப்புரத்தை சேர்ந்த பாண்டி என்பவரின் மகள் லட்சிதா. இவர் பெரியகுளம் அருகே இருக்கும் கைலாசபட்டியில் உள்ள தனியார் மகளிர் நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்திருக்கின்றார். இவர் கல்லூரி வளாகத்தில் செயல்படும் மாணவிகளுக்கான விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்திருக்கின்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை விடுதியின் மூன்றாவது மாடிக்கு சென்று யாரும் […]
லஞ்சம் வாங்கிய துணை தாசில்தார் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தலையாரிப்பட்டி பகுதியில் இளமுருகன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு இளமுருகன் தனது பாட்டி திருமலை அம்மாளுக்கு இறப்பு சான்றிதழ் கேட்டு ஆர்.டி.ஓ அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இது தொடர்பான விசாரணை கடந்த மாதம் நிறைவடைந்த நிலையில் துணை தாசில்தார் ஜெயபிரகாஷ் இறப்பு சான்றிதழ் வழங்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என இளமுருகனிடம் கேட்டுள்ளார். அப்போது கூலி தொழிலாளியான […]
ஆட்டோ சாலையில் கவிழ்ந்த விபத்தில் 6 மாணவர்கள் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு காமராஜபுரத்தில் ஆட்டோ ஓட்டுனரான தங்கபாண்டி என்பவர் வசித்து வருகிறார்.vஇவர் வத்தலகுண்டுவிலிருந்து பள்ளி மாணவர்களை ஏற்றிகொண்டு பட்டிவீரன்பட்டியில் இருக்கும் தனியார் பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் விவேகானந்த நகர் பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்ற போது சாலையின் குறுக்கே வந்த நாய் மீது மோதாமல் இருப்பதற்காக தங்கபாண்டி சடன் பிரேக் பிடித்துள்ளார். இதனால் நிலைதடுமாறிய ஆட்டோ […]
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஈரோட்டில் இருக்கும் தறிபட்டறையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் தெருவில் இருக்கும் மின் கம்பத்தில் சாய்ந்தபடி விஜயகுமார் செல்போன் பேசி கொண்டிருந்தார். அப்போது மின் கம்பத்தோடு இணைத்து தரையில் பதிக்கப்பட்ட எர்த் கம்பியை பிடித்ததால் திடீரென தீப்பொறி பறந்து விஜயகுமாரை மின்சாரம் தாக்கியது. இதனால் அவரது நெஞ்சு பகுதியும், 2 கைகளும் கருகி வலி தாங்க முடியாமல் அலறி சத்தம் போட்டுள்ளார். […]
கன்னியாகுமரி மாவட்ட கிளியூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜேஷ்குமார் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, எனது பெயரில் புகைப்படத்துடன் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சமூகவிரோதிகள் எனது நற்பெயரை கெடுக்கும் நோக்கத்தில் இந்த கணக்கை தொடங்கி பலருக்கு குறுந்தகவல் அனுப்பியுள்ளனர். மேலும் அதில் பண உதவியும் கேட்டுள்ளனர். இதனால் சிலர் என்னை தொடர்பு கொண்டு இது உண்மையா? என கேட்டபோது அது சமூக விரோதிகளால் உருவாக்கப்பட்ட போலியான இன்ஸ்டாகிராம் என தெரிவித்து, உதவி செய்யும் நோக்கத்தில் பணம் போடாதீர்கள் […]
தமிழ்நாடு அமைச்சூர் மல்யுத்த சங்கம் சார்பில் கரூரில் மாநில அளவிலான சீனியர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மல்யுத்த போட்டி நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கரூர் அரசு கலை கல்லூரி மாணவி சினேகா 65 கிலோ எடை பிரிவிலும், மகுடேஸ்வரி 50 கிலோமீட்டர் எடை பிரிவிலும் வெற்றி பெற்று வெள்ளி பதக்கங்களை வென்றனர். இதே போல் கிருத்திகா மற்றும் மனோஜ் 55 கிலோ எடை பிரிவில் கலந்துகொண்டு வெண்கல பதக்கங்களை வென்றனர். […]
பெண்கள் ஆசைகளை புறந்தள்ளி இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என ஆட்சியர் உரையாற்றியுள்ளார். வேலூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இனிய குற்றங்களை தடுப்பது பற்றி விழிப்புணர்வு கூட்டம் டி.கே.எம் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த குற்றங்கள் யார் மூலம் நடைபெறுகின்றது என்பது நமக்கு […]
காட்பாடி அருகே ஓடும் ரயிலில் பெண்ணிடம் கத்தி முனையில் செல்போனை பறித்துக் கொண்டு தள்ளிவிட்டு கொல்ல முயற்சித்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளார்கள். சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது திருமண அழைப்பிதழை சத்துவாச்சாரியில் இருக்கும் உறவினருக்கு கொடுப்பதற்காக சென்னையிலிருந்து மின்சார ரயில் மூலம் நேற்று முன்தினம் அரக்கோணம் வந்தார். அதன்பின் அங்கிருந்து கன்டோன்மென்ட் நோக்கி செல்லும் மின்சார ரயில் பயணம் மேற்கொண்டார். மாலையில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தது. ரயில் பெட்டியில் அந்த பெண் தனியாக […]
சென்னை மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் நேரு நகரில் 40-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. இங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 21-ஆம் தேதி அரசு நீர்வளத்துறையினர் அரசுக்கு சொந்தமான இடத்தில் நீங்கள் குடியிருக்கிறீர்கள். எனவே உடனடியாக வீடுகளை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனால் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாதவரம் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தண்டையார்பேட்டை கோட்டாட்சியர் ரங்கநாதன், மாதவரம் தாசில்தார் நித்தியானந்தம் ஆகியோர் […]
காதலர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பீர்க்கன்காரணை கண்ணன் தெருவில் எம்.காம் பட்டதாரியான ஜெயராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது சொந்த ஊர் உத்திரமேரூர் ஆகும். கடந்த 6 ஆண்டுகளாக ஜெயராமனும், பி.டெக் பட்டதாரியான யுவராணி என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் யுவராணி தனது காதலனை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது ஜெயராமனின் தாயும் […]
சென்னை மாவட்டத்தில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை கூவம் ஆற்றங்கரையோரம் வாகனத்தில் மூட்டை கட்டி வைக்கப்பட்டிருக்கும் மாட்டு இறைச்சியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக உணவு பாதுகாப்பு துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ராஜா மற்றும் மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று வாகனத்தை சோதனை செய்தபோது 100 கிலோ மாட்டிறைச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் கால்நடை துறை மருத்துவர்களை வரவழைத்து சோதனை செய்து பார்த்த […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெரைட்டிஹால் ரோடு சாமி ஐயர் புது வீதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் நகை பட்டறை நடத்தி வருகிறார். வழக்கமாக சங்கர் தான் தயாரிக்கும் நகைகளை வெளியூர்களுக்கு கொண்டு சென்ற விற்பனை செய்வது வழக்கம். இவரிடம் கடந்த 3 ஆண்டாக மேற்கு வங்கத்தை சேர்ந்த அனிமேஷ் ஹசரே, அவரது மனைவி சோம ஹசரே, உறவினர் சுரஜித் ஹசரே, ஸ்டேயாஜித் ஆகிய 4 பேர் பணிபுரிந்து வந்தனர். இவர்கள் சங்கர் வீட்டின் மேல் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வேலாண்டிபாளையம் பகுதியில் பாரத் டோலியா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தில் நவீன்குமார்(45) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நவீன் குமார் தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். அதில் 3 3/4 லட்ச ரூபாயை நவீன்குமார் திரும்ப கொடுத்துவிட்டார். மீதமுள்ள 1 1/4 லட்ச ரூபாயை கொடுக்காமல் நவீன்குமார் மோசடி செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து பாரத் […]
சென்னை மாவட்டத்தில் உள்ள திருநின்றவூர் இ.பி காலணியில் ஏஞ்சல் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் தாளாளரான வினோத்(34) என்பவர் 12-ஆம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுப்பதாக கூறி பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அறிந்த மாணவிகளின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் நேற்று காலை 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், பெற்றோர் மற்றும் பொதுமக்கள் இணைந்து வினோத் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேவாலா வாழவையல் பகுதியில் பாப்பாத்தி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 19-ஆம் தேதி வீட்டில் இருந்த போது வனப்பகுதியில் இருந்து வந்த யானை தாக்கியதால் பாப்பாத்தி உயிரிழந்தார். அவரது அண்ணன் படுகாயத்துடன் உயிர் துப்பினர். அந்த காட்டு யானை தொடர்ந்து வீடுகளை உடைத்து உணவு பொருட்களை தின்று நாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் தொடர் போராட்டம் நடத்தியதால் தமிழக முதன்மை தலைமை வன பாதுகாவலர் சீனிவாச ரெட்டி […]
ஆட்டோ சாலையில் கவிழ்ந்த விபத்தில் மாணவிகள் உள்பட 4 பேர் காயமடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாமண்டூரை சேர்ந்த நமிதா, உத்திரம்பட்டை சேர்ந்த கீதா, ஓச்சேரியை சேர்ந்த பிரேமலதா ஆகிய மாணவிகள், இரண்டு ஆசிரியர்கள், ஒரு செவிலியர் என 9 பேர் ஓச்சேரியில் இருந்து ஷேர் ஆட்டோவில் பனப்பாக்கம் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் மேலப்புலம் மோட்டூர் அருகே சென்றபோது எதிரே வந்த வாகனம் ஆட்டோ மீது மோதுவது போல […]
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஜோலார்பேட்டையில் இருந்து சென்னை சென்ட்ரல் வரை ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலில் தினமும் அரசு, தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என பலரும் பயணம் செய்கின்றனர். இந்நிலையில் ஆபத்தை உணராமல் சில வாலிபர்கள் 2 ரயில் பெட்டிகளை இணைக்கும் கொக்கி மீது நின்று பயணம் செய்வதாகவும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து ரயில்வே போலீசார் சோதனை நடத்தி ரயில் பெட்டியில் […]
சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் பகுதியில் கூலி தொழிலாளியான அண்ணாமலை என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு அண்ணாமலை ஏலச்சீட்டு நடத்தி பலரிடம் பணம் வாங்கியுள்ளார். ஆனால் குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகு அண்ணாமலை பணம் கொடுக்காமல் பொதுமக்களை ஏமாற்றியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அண்ணாமலையை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி […]
திருச்சி மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் பகுதியில் ராஜசேகர்(33) என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் கௌசல்யா(28) என்ற பெண்ணை ராஜசேகர் இரு வீட்டாரின் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினர் திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென ராஜசேகருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சொந்த ஊருக்கு செல்ல முடிவெடுத்தனர். ஆனால் பெற்றோரும், உறவினர்களும் அவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் மன […]
மெக்கானிக் கடையில் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் துப்புகுட்டிபேட்டை பகுதியில் ஷக்கீர் என்பவருக்கு சொந்தமான மெக்கானிக் கடை உள்ளது. அதற்கு அருகே சிறிய ஹோட்டலும் இருக்கிறது. நேற்று முன்தினம் காலை மெக்கானிக் கடையின் மேற்கூரை வழியாக புகை வெளியேறியதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு தீ விபத்து ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனையடுத்து தீயணைப்பு துறையினர் […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோக்குடல் கிராமத்தில் 30 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு 10 வீடுகளின் சுவர்களில் திடீரென விரிசல் ஏற்பட்டதை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, இரவு நேரத்தில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு குறைந்த அளவு நில அதிர்வு ஏற்பட்டிருக்கலாம். இதனால் சமுதாயக்கூடம் வீடுகள் உட்பட 10 கட்டிடங்களில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு இதே பகுதியில் சாலையில் பிளவு ஏற்பட்டது என கூறியுள்ளனர். […]
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வத்தனாக்கோட்டை பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் சுப்ரமணியனுக்கு சொந்தமான ஒரு பசு மாடு மேய்ந்து கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக தரைமட்ட கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சுப்பிரமணியன் உடனடியாக தீயணைத்து துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கி பசு மாட்டை பத்திரமாக மீட்டனர்.
நாமக்கல்லில் இன்று (நவம்பர் 24) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 17 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 35 காசுகளிலிருந்து, அக்டோபர் 24 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு விழிப்புணர்வு மீம்ஸ் போட்டி நடைபெற இருக்கின்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு தூய்மை மற்றும் பாதுகாப்பான தீபம் 2022 என்ற தலைப்பில் விழிப்புணர்வு மீம்ஸ் போட்டி காவல்துறை சார்பாக நடைபெற இருக்கின்றது. தீபத் திருவிழாவின்போது பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான குற்ற விழிபுணர்வு, நகை பறிப்பு, பிக் பாக்கெட், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள், குழந்தை கடத்தல், சுற்றுச்சூழல் தூய்மை, மூத்த குடிமக்களுக்கான உதவி, தீயணைப்பு பாதுகாப்பு, […]
நண்பர் இறந்த சோகத்தில் இருந்த முதியவர் பேருந்தில் அடிபட்டு உயிரிழந்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்குளி ரோடு மண்ணரை பகுதியைச் சேர்ந்த சுப்ரமணியம் என்பவர் திருப்பூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் ஹோட்டலில் காசாளராக வேலை செய்து வந்தார். இவர் தினமும் ண்ணரை பகுதியில் நடைப்பயிற்சிக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் நடைப்பயிற்சிக்கு சென்ற அவர் பாரப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே ரோட்டை கடந்து சென்ற போது திருப்பூரில் இருந்து […]
அவிநாசி சுற்றுவட்டார பகுதியில் மான், மயில்கள் பயிர்களை நாசம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முடிவு செய்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி ஒன்றியத்தில் 31 ஊராட்சிகளில் ஆயிரக்கணக்கான கிராமங்கள் இருக்கின்றது. சென்ற 40 , 50 வருடங்களுக்கு முன்பு தென்னை, வாழை, மஞ்சள் உள்ளிட்ட விவசாயம் செழித்து வளர்ந்து எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என இருந்தது. காலப்போக்கில் பருவ மழை சரியாக பெய்யாமல் விவசாயம் நலிவடைந்ததால் பலர் திருப்பூர் […]
தேனீ வளர்ப்புக்கு பயிற்சி உடன் கூடிய மானியம் வழங்கப்படுவதாக அதிகாரி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது தேனீ வளர்ப்பு முறையில் விவசாயிகள் சிறப்பாக செய்வதன் மூலம் தங்கள் நிலங்களில் தேனீக்களில் அயல் மகரந்த சேர்க்கை மூலமாக கூடுதல் மகசூல் பெறுவதோடு தேன் விற்பனை மூலம் கூடுதல் வருமானமும் ஈட்ட முடியும். தேனீ வளர்ப்பு முறையை நேரடியாக அறிந்து கொள்வதற்கு […]
தேசிய தடகள போட்டியில் பதக்கம் வென்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது. அசாம் மாநிலத்தில் உள்ள கவுக்காத்தியில் 37-வது தேசிய தடகள உயரம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது. இதில் 16 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் தூத்துக்குடி விக்டோரியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஆலிஸ் தேவ பிரசன்னா வெண்கல பதக்கம் வென்றார். மேலும் 20 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வ.ஓ.சி கல்லூரி மாணவி சஹானா வெண்கல பதக்கம் வென்றார். போட்டியில் […]
தூத்துக்குடியில் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் செயல்பட்ட இரண்டு குடோன்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உணவு பாதுகாப்பு துறை சார்பாக உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பெற்று உணவு வணிகர்கள் தொழில் செய்ய வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் உரிமை வழங்கும் மேளா நடத்தப்பட்டு இருக்கின்றது. ஆனால் பல உணவு தொழில் சார்ந்த நிறுவனங்கள் உரிமம் இல்லாமல் இயங்கி வருகின்றது. இதனால் அதிகாரிகள் தூத்துக்குடி துறைமுக சாலையில் இருக்கும் குடோன்களில் ஆய்வு […]
கள்ளக்குறிச்சியில் இருந்து அரசு பேருந்து கீழ்பாடி வழியாக லாலாபேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் மேல தேவனூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்த போது சேர்ந்தாங்கல் மற்றும் கோமாளூர் கிராமங்களை சேர்ந்த மாணவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த மாணவர்கள் ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொண்டனர். ஓடும் பேருந்தில் மாணவர்கள் தகராறு செய்ததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த […]
ஆயுதப்படை பெண் போலீஸ் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் உள்ள அமைந்தகரை வ.உ.சி நகரில் வசிக்கும் ஸ்டெல்லா ஆயுதப்படையில் போலீசாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஓட்டுனரான பாண்டியன் என்ற கணவர் உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கிறார். நேற்று முன்தினம் தனது தாயை செல்போன் முலம் தொடர்பு கொண்டு பேசிய ஸ்டெல்லா தனக்கு 8 லட்ச ரூபாய் வரை கடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் கடன் […]
கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை மாவட்டத்தில் உள்ள ஆதம்பாக்கம் சாஸ்திரி நகரில் மோரிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் நடத்தி வருகிறார். இந்நிலையில் மோரிஸ் போலீஸ்காரரான பாவடியான் என்பவருக்கு சொந்தமான காரை 3 1/2 லட்ச ரூபாய்க்கு விலை பேசியுள்ளார். முன்பணமாக 50,000 ரூபாய் கொடுத்துவிட்டு மோரிஸ் காரை வாங்கி பழுதை சரி பார்ப்பதற்காக நண்பருடன் வடபழனி கங்கை அம்மன் கோவில் […]
கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் பெருமாள் மலைப்பகுதியில் ராஜகோபால்-அங்காள ஈஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு விஜேஷ் பாண்டியன்(17) என்ற மகன் இருந்துள்ளார். இவர் திண்டுக்கல்லில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் பாண்டியன் நண்பர் ஒருவர் இறந்து விட்டதால் துக்கம் விசாரிப்பதற்காக கடந்த 19-ஆம் தேதி கொடைக்கானலுக்கு சென்று விட்டு நண்பர்கள் தினேஷ், சுபாஷ் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது பெருமாள்மலை-பழனி […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செவரக்கோடு- மருதாக்கவிளை பகுதியில் வசிக்கும் 32 வயது வாலிபருக்கும், வெள்ளாங்கோடு பகுதியில் வசிக்கும் 23 வயது இளம்பெண்ணுக்கும் திருமணம் நடத்த இரு விட்டாரும் நிச்சயம் செய்தனர். இவர்களது திருமணத்தை நேற்று தேமானூரில் இருக்கும் கிறிஸ்தவ ஆலயத்தில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்தனர். இந்நிலையில் திருமண விழாவிற்கு ஏராளமானார் வந்த நிலையில், மணப்பெண்ணின் வீட்டில் இருந்து யாரும் வராத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரித்த போது மணமகனுக்கு மஞ்சள் காமாலை நோய் இருப்பதால் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் டெல்லியில் இருந்து வந்த சுற்றுலா பயணி பூங்காவில் கைப்பையை தவறவிட்டார். இதனையடுத்து பூங்காவிற்கு சென்ற தற்காலிக ஊழியர் கலைச்செல்வி கைப்பையை எடுத்து பூங்கா அலுவலகத்தில் இருக்கும் அதிகாரியிடம் அதனை ஒப்படைத்தார். அதில் செல்போன், தங்க வளையல்கள், பணம் ஆகியவை இருந்தது. இதனையடுத்து சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வடமாநில சுற்றுலா பயணியிடம் அந்த கைப்பை ஒப்படைக்கப்பட்டது. அவர் டெல்லியில் இருக்கும் […]
சென்னை மாவட்டத்தில் உள்ள புரசைவாக்கம் போலீஸ் குடியிருப்பில் தங்கராஜ்(53) என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமங்கலம் போக்குவரத்து போலீசில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் தங்கராஜ் இரவு நேரத்தில் 100 அடி சாலை, திருமங்கலம் 2-வது அவன்யூ சந்திப்பில் பணியில் இருந்துள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்ற வாலிபர் நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதனை பார்த்த தங்கராஜ் அந்த வாலிபரை தூக்கிவிட்டு விசாரித்த போது அவர் மது குடித்திருந்தது தெரியவந்தது. […]
பனிமூட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கிணத்துக்கடவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் இரவு நேரங்களில் பனிப்பொழிவு கடுமையாக இருக்கிறது. நேற்று அதிகாலை கோவில்பாளையம், தாமரைக்குளம், கிணத்துக்கடவு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றன. இந்நிலையில் கோவை- பொள்ளாச்சி சாலையில் காலை 8:30 மணி வரை பனிமூட்டம் நிலவியது. […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு பள்ளி வாகனங்கள் கொண்டுவரப்பட்டது. அங்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் வாகனங்களில் சென்சார் வசதி, கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என ஆய்வு செய்துள்ளார். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் கூறியதாவது, பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு வசதிகள் சரியாக இருக்கிறதா என ஆய்வு செய்து வருகிறோம். விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு பள்ளி வாகனங்களின் முன்புறமும், பின்புறமும் கேமராக்கள் சென்சார் வசதியுடன் பொருத்த உத்தரவிடப்பட்டது. இது தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் […]
செங்கல் சூளையில் வேலை பார்த்த 3 சிறுமிகள் உட்பட 11 பேரை அதிகாரிகள் மீட்டனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நாரணபுரி மாவட்டத்தை சேர்ந்த 14 வயதிற்குட்பட்ட மூன்று சிறுமிகள் திடீரென காணாமல் போய்விட்டனர். இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் அந்த மாவட்ட போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதனையடுத்து சிறுமிகளின் செல்போன் எண்களை வைத்து விசாரணை நடத்திய போது, அவர்கள் கரூர் மாவட்டத்தில் இருப்பது தெரியவந்தது. இதனால் சத்தீஸ்கர் மாநில சமூக நல அலுவலர்கள் […]
பூர்வீக வீட்டிற்குச் சென்ற கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் கீர்த்தி சுரேஷ். இவர் முன்னாள் நடிகை மேனகாவின் இரண்டாவது மகளாவார். தற்போது கீர்த்தி சுரேஷ் மாமன்னன், சைரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இவர் படபிடிப்பு இல்லாத நேரத்தில் வெளிநாடுகளுக்கு செல்வது உறவினர்களை பார்க்க கிராமங்களுக்கு செல்வது உள்ளிட்ட பழக்கங்களை கடைபிடித்து வருகின்றார். இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருங்குடியில் இருக்கும் […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானியில் பாலதேவகுரு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை கல்லூரி முடிந்து பாலதேவகுரு காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ஈரோடு பேருந்து நிலையத்தை கடந்து சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்ற 2 மோட்டார் சைக்கிள்கள், சரக்கு வேன் மீது பயங்கரமாக மோதிவிட்டு, மின்கம்பத்தில் மோதி நின்றது. இந்த விபத்தில் பாலதேவகுரு லேசான காயத்துடன் […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள சங்கராபுரம் பகுதியில் இருக்கும் கடைகளில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பால்ஏசுதாஸ் தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அரசு ஆண்கள் பள்ளி, கள்ளக்குறிச்சி மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் 5 பெட்டி கடைகளில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள குமாரமங்கலம் கிராமத்தில் கூலி தொழிலாளியான செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபலட்சுமி(21) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சுபலட்சுமி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த மாதம் 22-ஆம் தேதி லட்சுமிக்கு சுக பிரசவத்தில் மூன்று பெண் குழந்தைகள் பிறந்தது. இந்நிலையில் ஒரே பிரசவத்தில் பிறந்த பெண் குழந்தைகளை மருத்துவ கண்காணிப்பில் வைக்க வேண்டும் என டாக்டர்கள் […]
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காட்டுநெமிலி கிராமத்தில் விவசாயியான வேல்முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மற்றொரு விவசாயியான குமார் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் உளுந்தூர்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலை அருகே சென்ற போது சாலையில் பை ஒன்று கிடந்தது. இதனை பார்த்த 2 பேரும் மோட்டார் சைக்கிள் ஓரமாக நிறுத்திவிட்டு பையை எடுத்தனர். இதனையடுத்து பையை திறந்து பார்த்தபோது அதில் சில ஆவணங்கள் மற்றும் 90 ஆயிரம் ரூபாய் பணம் இருந்ததை கண்டு […]
கருக்கலைப்பு செய்த இளம்பெண் உயிரிழந்த வழக்கில் மருந்தாக உரிமையாளர் மருத்துவம் படிக்காமல் சிகிச்சை அளித்தது தெரியவந்தது . கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்குறிச்சி கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா(28) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் மூன்றாவது முறையாக கர்ப்பமான அமுதா அசகளத்தூரில் இருக்கும் மருந்தகத்திற்கு சென்று கருவில் இருப்பது ஆணா? பெண்ணா? என்பதை பரிசோதனை செய்துள்ளார். அங்கிருந்து மருந்தாக உரிமையாளர் வடிவேல் என்பவர் அமுதாவை […]
கிறிஸ்மஸ் பண்டிகை டிசம்பர் மாதம் 25-ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் நட்சத்திர ஏரி பகுதியில் தனியார் நட்சத்திர விடுதி அமைந்துள்ளது. இங்கு வெளிநாடுகளில் தயாரிப்பதை போலவே 80 கிலோ எடையுடைய பிளம் கேக் தயாரிக்க திட்டமிட்டனர். இதற்காக முந்திரி வகைகள், உலர் திராட்சை, பாதாம், பிஸ்தா, கிறிஸ்மஸ் பழம் உள்ளிட்ட உலர் ரக 15 வகை பழங்கள் மற்றும் உயர்ரக மதுபானங்கள் அடங்கிய கலவையை தயாரித்தனர். இந்நிலையில் 13 […]
விசாரணைக்கு பயந்து கொத்தனார் விஷம் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள கல்லுப்பட்டியில் கொத்தனாரான செந்தில்குமார்(35) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வத்தலகுண்டு, கல்லுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் குறைந்த செலவில் வீடு கட்டி தருவதாக தனியார் தொண்டு நிறுவனத்தினர் பிரச்சாரம் செய்தனர். பின்னர் கட்டிடம் கட்டுவதற்காக கொத்தனார் தேவை என அறிவிக்கப்பட்டதால் செந்தில் அந்த நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்துள்ளார். இந்நிலையில் கல்லுப்பட்டி, வத்தலகுண்டு பகுதியில் இருக்கும் பொதுமக்களை வீடு கட்டும் […]
கேரள தம்பதி பழனி தங்கும் விடுதியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி படிவாரத்தில் இருக்கும் தங்கும் விடுதிக்கு கேரள மாநிலம் பல்லுருத்தி பகுதியை சேர்ந்த சேர்ந்த கூலி தொழிலாளி ராமன்ரகு மற்றும் அவரது மனைவி உஷா ஆகியோர் வந்தனர். அவர்கள் சாமி தரிசனம் செய்ய வந்ததாக கூறி அறை எடுத்து தங்கியுள்ளனர். நேற்று மாலை அறையின் கதவு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த விடுதி ஊழியர்கள் போலீசாருக்கு […]