புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிக்கப்பட்டி கிராமத்தில் அரசு வழக்கறிஞரான கணேசன் என்பவர் வசித்து வருகிறார். நேற்று கணேசன் புதுக்கோட்டை நீதிமன்றத்திற்கு சென்று விட்டு ஆலங்குடி நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் கணேசன் ஒட்டி வந்த காரும் எதிரே வந்த லாரியும் பலமாக மோதியது அதே நேரத்தில் சந்தோஷ் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் லாரியின் பின்புறத்தில் மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த கணேசன் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு […]
Tag: மாவட்ட செய்திகள்
ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள தாழனூர் இந்திரா நகர் பகுதியில் சரக்கு ஆட்டோ ஓட்டுநரான ஜானகிராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசி(21) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. தற்போது தமிழரசி 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு செல்போனில் பேசிக் கொண்டிருந்த தமிழரசியிடம் ஜானகிராமன் யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய் என கேட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் தமிழரசி தனது தாய் வள்ளியம்மாளிடம் […]
இன்ஜினியர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் செல்லும் சாலையில் இருக்கும் பாலத்தின் கீழே மர்மமான முறையில் ஒரு ஆண் இறந்து கிடந்தார். இதனை பார்த்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய […]
விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கூத்தனூர் கிராமத்தில் விவசாயியான செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு லிங்கேஷ், இனியா என்ற 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் பிரியா தனது குழந்தைகளுடன் தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் மனைவி பிரிந்து சென்றதால் மன உளைச்சலில் […]
டிராக்டரும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டுநர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து கண்டெய்னர் லாரி சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் புறவழிச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது கண்டெய்னர் லாரியும் அவ்வழியாக வந்த டிராக்டரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது. மேலும் கண்டெய்னர் லாரி சாலையோரம் நின்ற கார் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த டிராக்டர் ஓட்டுனரான ரங்கராஜன் என்பவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு […]
மின்சாரம் தாக்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அத்தனூர்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நித்திய பிரியா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஆதிஷ், சூரியகுமார் என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இதில் ஆதிஷ் வாழப்பாடியில் இருக்கும் தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் வீட்டில் இருந்தவர்கள் அருகே உள்ள துக்க நிகழ்ச்சிக்காக சென்றுள்ளனர். அப்போது ஆதிஷ் சுவிட்ச் பெட்டியில் கை […]
சேலம் மாவட்டத்தில் உள்ள கொங்கணாபுரம் அருகே 50 ஏக்கர் பரப்பளவிலான புதிய ஏரி கடந்த 50 ஆண்டுகளாக வறண்டு காணப்பட்டது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழையால் ஏரி தற்போது முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்கிறது. இதனை அறிந்த சங்ககிரி உதவி கலெக்டர் சௌமியா, எடப்பாடி தாசில்தார் லெனின் மற்றும் வருவாய்துறையினர் மதகு பகுதிக்கு சென்று மலர் தூவியுள்ளனர். இதனையடுத்து ஏரி உபரி நீர் வெளியேறும் கால்வாயில் புதர்கள் மண்டி கிடப்பதால் போர்க்கால அடிப்படையில் […]
தாய்-மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி மணக்காடு கிழக்கு முதல் தெரு சுல்தானா(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சம்சு(22), ஜாபியா(21) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இவரது கணவர் முகமது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டார். இதனால் கூலி வேலைக்கு சென்று சுல்தானா தனது மகள்களை வளர்த்து வந்துள்ளார். கடந்த 9- ஆம் தேதி வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த ஜாபியா தனது தாயும், […]
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் நான்கு நாட்களாக கலாச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் 43-வது கலை கலைசாரா நிகழ்ச்சி சென்ற பத்தாம் தேதி ஆரம்பமானது. இதனை டாக்டர் கனிமொழி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரி மாணவர்களும் தென்னிந்தியாவில் இருக்கும் நூறுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களும் பங்கேற்றார்கள். இதில் ஆடை அணிவகுப்பு, ஆணழகன், மெஹந்தி, வினாடி வினா, பாடல், நடனம், இசை, நாடகம், சோப்பில் உருவம் […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரிகியம் மலை கிராமத்தை சேர்ந்த சித்துமாரி (55) என்பவர் உடல் நலகுறைவு காரணமாக கோவை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் சித்துமாரி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் உறவினர்கள் ஆம்புலன்ஸில் சித்துமாரியின் உடலை மாக்கம்பாளையம் நோக்கி ஆம்புலன்ஸில் ஏற்றி வந்து கொண்டிருந்தனர். ஆம்புலன்ஸ் குரும்பூர் பள்ளம் வரை சென்றது. கடந்த சில நாட்களாக கனமழை பெய்ததால் குரும்பூர் பள்ளத்தில் மழை நீர் பெருக்கெடுத்து […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் இருந்து அரசு பேருந்து பயணிகளுடன் பண்ணாரி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பேருந்தின் மேற்கூரையில் இருக்கும் துவாரம் வழியாக மழைநீர் சொட்டு சொட்டாக வழிந்து இருக்கைகள் நனைந்ததால் பயணிகள் உட்கார முடியாமல் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். பேருந்துக்குள் அனைவரும் நின்று கொண்டே பயணித்த காட்சியை ஒருவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதுகுறித்து அறிந்த சத்தியமங்கலம் மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன் சம்பந்தப்பட்ட அரசு பேருந்தை பார்வையிட்டு அதன் தகுதி சான்றை […]
ரேஷன் அரிசி கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சத்திர ரெட்டியப்பட்டி விலக்கில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த வேனை போலீசார் நடத்தி சோதனை செய்துள்ளனர். அதில் 40 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், வேனை ஒட்டி வந்த நபர் மதுரை சேர்ந்த ரவி(31) என்பதும், விருதுநகர் அல்லம்பட்டி, பாண்டியன் நகர் ஆகிய […]
மரம் வேரோடு சாய்ந்து விழுந்ததால் வீடு சேதமானது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலையில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. நேற்று முன்தினம் பலத்த சூறாவளி காற்று வீசியதால் திரௌபதி அம்மன் கோவில் வீதியில் வசிக்கும் நடராஜன் என்பவரது வீட்டிற்கு அருகில் நின்ற மரம் வேருடன் சாய்ந்தது. இந்த மரம் விழுந்ததால் நடராஜன் வீடு சேதம் அடைந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது குறித்து நெடுஞ்சாலைதுறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் இருக்கும் கோவை குற்றால அருவி அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இங்கு வனவிலங்குகளின் நடமாட்டம் இருப்பதால் சோதனை சாவடியில் இருந்து வனத்துறையினர் வாகனங்களில் சுற்றுலா பயணிகளை அருவிக்கு அழைத்து செல்கின்றனர். கடந்த 3 நாட்களாக அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்வதால் கோவை குற்றால அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் வனத்துறையினர் சுற்றுலா பயணிகள் அங்கு செல்வதற்கு தடை விதித்தனர். மேலும் வனத்துறையினர் சோதனை சாவடி அருகே தீவிர கண்காணிப்பு […]
ரேஷன் கடையை காட்டு யானைகள் உடைத்து அட்டகாசம் செய்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இவை உணவு மற்றும் தண்ணீரை தேடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்கிறது. இந்நிலையில் ஊசிமலை டாப் எஸ்டேட் பகுதியில் தொழிலாளர்கள் குடியிருப்புக்குள் நுழைந்த 3 காட்டு யானைகள் ரேஷன் கடையை உடைத்து அட்டகாசம் செய்தது. இதனையடுத்து அங்கிருந்த அரிசியை தின்றும், சிதறியடித்தும் நாசம் செய்த […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வரதராஜபுரத்தில் சுரேஷ்- அனிதா தம்பதியினர் வசித்து வருகின்றனர். வெளிநாட்டில் வேலை பார்த்த சுரேஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் ஆன்லைனில் பிரபல தனியார் நிறுவனத்தில் வேலை இருப்பதாக விளம்பரம் வந்தது. அதனை நம்பி அனிதா அதிலிருந்த செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். எதிர்முனையில் பேசிய நபர் பிரபல நிறுவனத்தின் பெயரை கூறி வேலை இருப்பதாக தெரிவித்தார். அந்த வேலையில் சேர்ந்தால் மாதம் 50 ஆயிரத்திற்கும் மேல் […]
திருவாரூர் மாவட்டத்திலுள்ள வேளாங்குடி பகுதியில் வசிக்கும் 31 வயதுடைய பெண் காந்திபுரத்தில் இருக்கும் மத்திய மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் பட்டப்படிப்பை படித்து முடித்துவிட்டு கோவையில் இருக்கும் தனியார் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் அரசு வேலைக்காக பயிற்சி பெற்று வந்தபோது செல்போன் கடையில் வேலை பார்க்கும் அப்துல் ரஹீம்(34) என்பருடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் கடந்த 2019-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டோம். […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக அப்பகுதியில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. வழக்கமாக விடுமுறை நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். ஆனால் மழை பெய்யும் காரணத்தினால் பக்தர்கள் குறைந்த அளவிலேயே கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இதனையடுத்து சாலைகள் இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி செல்கின்றனர். தொடர்ந்து பெய்யும் மழையினால் பொதுமக்களின் இயல்பு […]
நாமக்கல்லில் இன்று (நவம்பர் 14) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 30 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 12 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 25 காசுகளிலிருந்து, அக்டோபர் 14 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 30 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சேலம் மாவட்டத்தில் இரண்டாம் நாளாக நேற்றும் சிறப்பு முகாம் நடைபெற்றது. சேலம் மாவட்டத்தில் இருக்கும் 11 சட்டசபையில் தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை சென்ற 9-ம் தேதி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். இதில் 11 சட்டசபை தொகுதிகளிலும் 14,29,231 ஆண்களும் 14,94, 721 பெண் வாக்காளர்களும் இதர வாக்காளர்களாக 248 பேரும் என மொத்தமாக 29,74,250 வாக்காளர்கள் பெயர் பட்டியலில் இருக்கின்றார்கள். திருத்தம் செய்யும் பணி வருகின்ற 8-ம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இதற்காக சிறப்பு […]
வீட்டில் துப்பாக்கி தயாரித்த சேலம் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாப்பேட்டையை சேர்ந்த என்ஜினியர் சஞ்சய் பிரகாஷ், எருமாபாளையம் பகுதி சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் youtube-யை பார்த்து ரகசியமாக துப்பாக்கி தயாரித்த வழக்கில் சென்ற மே-19 தேதி கைது செய்யப்பட்டார்கள். இந்த நிலையில் இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சென்ற நவ-11 தேதி, கைது செய்யப்பட்ட நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய்பிரகாஷ் […]
ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜையை முன்னிட்டு கேரளாவுக்கு சேலம் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது. கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது. இதனால் பக்தர்களின் கூட்டம் ரயிலில் அலைமோதும். நெரிசலை தடுப்பதற்காக ஆந்திர மாநிலத்தில் உள்ள நரசபூரில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை வழியாக கேரளா கோட்டயத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றது. அந்த வகையில் நரசபூர்-கோட்டையம் சிறப்பு ரயில் வருகின்ற வெள்ளிக்கிழமை நரசபூரிலிருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு […]
மின்கம்பி அறுந்து விழுந்து எருமை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கீழ் பாலப்பட்டி பகுதியில் கணேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் எருமை மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் எருமைகள் மேய்ந்து கொண்டிருந்த போது மேலே சென்ற மின் கம்பி அறுந்து எதிர்பாராதவிதமாக ஒரு எருமை மீது விழுந்தது. இதனால் மின்சாரம் தாக்கி எருமை இறந்து கிடந்ததை பார்த்த பொதுமக்கள் மின்வாரியத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி மின்வாரிய ஊழியர்கள் மின் […]
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஆலம்பட்டி பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மணிகண்டனுக்கும் அர்ச்சனா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. அர்ச்சனா கரூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அர்ச்சனா வேலைக்கு சென்று விட்டு பேருந்தில் அரூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கியுள்ளார். அப்போது அங்கு வந்த மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தனது மனைவியை சரமாரியாக வெட்டினார். இதனால் காயமடைந்த அர்ச்சனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு […]
மின்னல் வருவதை முன்கூட்டியே அறிய புதிய செயலியை பதிவிறக்கம் செய்துக்கொள்ள ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். தொடர் மழை காலங்களில் குடிசை வீடுகள், இடியும் நிலையில் இருக்கும் வீடுகள், தாழ்வான பகுதிகளில் இருக்கும் இருக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான பகுதிக்கு செல்ல வேண்டும். பழுதடைந்த நிலையில் இருக்கும் மின் கம்பங்கள், தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் உள்ளிட்டவற்றை சரி செய்யும் போது வெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளில் இருக்கும் மக்கள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தெரிவிக்க பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக […]
பணம் மோசடி செய்ததாக மூன்று பேர் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் தாலுகாவை சேர்ந்த ராம்குமார், பேபி, மணிமேகலை, பிரசாந்த் உள்ளிட்டோர் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று தனித்தனியாக புகார் மனு கொடுத்திருக்கின்றார்கள். இதில் பாடலூரைச் சேர்ந்த ஒரு தம்பதி மற்றும் சென்னையை சேர்ந்த ஒருவர் என 3 பேர் ராம்குமார் மற்றும் பிரசாந்திடம் வேலை வாங்கி தருவதாக தலா 2 லட்சத்து 50 ஆயிரம், பேபி என்பவரிடம் எல்ஐசி […]
கடலூர் மாவட்டத்தில் உள்ள புகழூர் நகராட்சியை பசுமை ஆக்குவோம் திட்டத்தின் கீழ் தூய்மைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன் படி பிளாஸ்டிக் இல்லாத நகராட்சியாக மாற்றும் வகையில் பிளாஸ்டிக் பயன்படுத்த முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டது. நேற்று புகழூர் நகர மன்ற தலைவர் சேகர் முன்னிலையில் நகராட்சி பணியாளர்கள் 1900 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றி வாகனம் மூலம் வெளியேற்றினர். அப்போது நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், அலுவலக பணியாளர்கள் உடன் இருந்தனர்.
தமிழகத்தில் தனியார் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா பொறுத்த கால அவகாசம் வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என மாநில பொதுச் செயலாளர் கூறியுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் நேற்று தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிக் பள்ளிகளின் சங்க கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மருத்துவ படிப்பிற்கு தேர்வான மாணவி ஸ்ரீமதிக்கு கேடயம் வழங்கப்பட்டது. இதன்பின் மாநில பொதுச் செயலாளர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் […]
கத்தியை காட்டி பணம் மற்றும் நகையை பறித்த 4 திருநங்கைகளை போலீசார் கைது செய்தனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் மூலூரில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கரூர் பேருந்து நிலையத்தில் இருக்கும் கழிவறைக்கு நேற்று அதிகாலை நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த திருநங்கைகளான ராகவி, இனியா, இசைபிரியா, தில்ஷிகா ஆகிய 4 பேரும் செந்தில் குமரை கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். பின்னர் நான்கு பேரும் செந்தில் குமார் அணிந்திருந்த 2 பவுன் […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கொராட்டகிரி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகின்றனர். இங்கு இயங்கி வரும் 6 கல் குவாரிகளில் இருந்து எம்.சாண்ட் மணல், ஜல்லி கற்களை டிப்பர் லாரியில் ஏற்றி செல்வதால் சாலைகள் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் கல்குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் மனு அளித்து, பல்வேறு கட்டமாக போராட்டம் நடத்தியும் எந்த தீர்வும் எட்டப்படவில்லை. இதனால் கோபமடைந்த கிராம மக்கள் கடந்த 2- ஆம் தேதி […]
வீடு இடிந்து விழுந்து முதியவர் காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள சிறுநெசலூர் மாரியம்மன் கோவில் தெருவில் பெரியசாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகே சிறுநீர் கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தொடர் மழை காரணமாக முத்து கருப்பன் என்பவரது கூரை விட்டு சுவர் இடிந்து விழுந்தது. இதனால் இடிபாடுகளில் சிக்கிய பெரியசாமிையை அக்கம் பக்கத்தினர் மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காரமடை பகுதியில் எஸ்.வி.ஜி.வி மெட்ரிக் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் தாத்தா பாட்டிகள் தினம் கொண்டாடப்பட்டுள்ளது. இந்த விழாவிற்கு பள்ளியின் தாளாளர் பழனிசாமி தலைமை வகித்துள்ளார். இந்நிலையில் பள்ளி செயலாளர் ராஜேந்திரன், நிர்வாக அதிகாரி சிவ சதீஷ்குமார், அறங்காவலர் தாரகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகிக்க, மாணவர் மாணவிகளின் தாத்தா, பாட்டிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இந்த விழாவின் போது நடனம் மற்றும் விளையாட்டு உட்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றுள்ளது. பின்னர் வெற்றி […]
தோட்டக்கலை துறை சார்பாக சூரிய சக்தியின் பயன்பாடு பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் வட்டார தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறையில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் சூரிய சக்தியின் பயன்பாடு குறித்தும் பயிற்சி முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு தோட்டக்கலை உதவி இயக்குனர் தலைமை தாங்கி தோட்டக்கலை துறை மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள் குறித்து விவரித்தார். இதன்பின் தோட்டக்கலை அலுவலர் தயானந்தன் வேளாண்மையில் சூரிய ஒளி […]
சீர்காழியில் 122 வருடத்தில் இல்லாத அளவிற்கு மழை கொட்டி தீர்த்து இருக்கின்றது. வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதால் தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் இடி முன்னுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கன மழை முதல் மிக கனமழை வரை பெய்தது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாகை, திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. நேற்று […]
சீர்காழி அருகே மழையால் கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். மயிலாடுதுறை மாவட்டத்தில் சென்ற சில நாட்களாகவே மழை பெய்து வந்தது இதன் காரணமாக சீர்காழி அருகே இருக்கும் வெள்ளபள்ளம், திருக்கருக்காவூர், , குன்னம், காட்டூர், குமரகோட்டம், வேட்டங்குடி, பழையாறு சுனாமிநகர், திருமுல்லைவாசல், அரசூர், புளியந்துறை, வாலங்காடு, சிவக்கொல்லை, வேம்படி, வடகால், கீராநல்லூர் உள்ளிட்ட பல கிராமங்களை மழை வெள்ளம் சூழ்ந்து இருக்கின்றது. இதனால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள். மேலும் கீழாநல்லூர் கிராமத்தில் இடியுடன் கூடிய […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள விருப்பாச்சிபுரத்தில் ஸ்ரீ ராகவேந்திரா சாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு நேற்று ஒரு லட்சம் தீப விழா நடைபெற்றுள்ளது. இதனை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து கார்த்திகை தாமோதர ஹோமம், துளசி பூஜை, அலங்கார சேவை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பக்தர்கள் கோவில் முழுவதும் ஒரு லட்சம் விளக்கேற்றி வழிபாடு நடத்திய பிறகு மகா தீபாராதனையும் உபகார பூஜையும் நடைபெற்றுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் […]
கிணற்றுக்குள் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மரியமங்கலம் பகுதியில் விவசாயியான பீட்டர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் வீட்டிற்கு சொந்தமான பசுமாடு தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக 60 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு […]
அரசு பள்ளி கட்டிடத்தில் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராமபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பள்ளி கட்டிடத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு பராமரிப்பு பணிகள் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று மதியம் அப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் பள்ளி கட்டிடத்தில் உட்புறம் இருக்கும் கான்கிரீட் சிமெண்ட் பூச்சுகளும், மேல்புற பக்கவாட்டு சுவரின் […]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கண்டியூர் காப்புக்காடு வன எல்லையை ஒட்டி நடேசன் என்பவருக்கு சொந்தமான தோட்டம் அமைந்துள்ளது. இந்நிலையில் நடேசன் ஒரு மரத்தில் கன்று குட்டியை கட்டி விட்டு தோட்ட வேலைகளை பார்ப்பதற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் படுகாயத்துடன் கன்று குட்டி இறந்து கிடந்தது. இதுகுறித்து நடேசன் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின் படி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த கால் தடயத்தை ஆய்வு செய்தபோது கன்று […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மணிஹட்டி பகுதியில் இருந்து லாரி ஒன்று நேற்று முன்தினம் தேயிலை இலைகளை ஏற்றிக்கொண்டு வால்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை விக்னேஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். மேலும் கிளீனரான சிவகுமார் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் பொள்ளாச்சி- வால்பாறை மலைபாதை 2-வது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முயன்ற போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தடுப்பு சுவரைத் தாண்டி 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது. அப்போது பள்ளத்தில் […]
சென்னை மாவட்டத்தில் உள்ள ஜாபர்கான்பேட்டையில் மனோஜ் சார்லஸ்(33) என்பவர் வசித்து வருகிறார். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் டாக்டருக்கு படித்து முடித்தார். இந்நிலையில் மனோஜ் அசோக் நகர் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். அந்த இளம்பெண்ணின் தந்தை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் மனோஜும், இளம்பெண்ணும் பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றி திரிந்தனர். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி இளம்பெண்ணின் இருந்து மனோஜ் 60 […]
மீனவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோவளம் பகுதியில் மீனவரான சகாயம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும், இரண்டு வயதில் ஒரு குழந்தையும் இருக்கின்றனர். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சகாயத்தின் முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு அவரால் வேலைக்கு செல்ல இயலவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த சகாயம் நேற்று மதியம் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மீன்பிடித் துறைமுகத்தை தங்குத்தளமாக கொண்டு 1000-க்கும் மேற்பட்ட வள்ளம், கட்டு மரங்கள், 300-க்கும் மேற்பட்ட விசை படகுகளில் மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன் பிடிப்பதற்காக செல்கின்றனர். இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் எனவும், கடலில் காற்றின் வேகம் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திற்கு வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இடையன்விளை பகுதியில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வயிற்று வலி காரணமாக நாகர்கோவிலில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகேஸ்வரனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகும் அவரது வயிறு வலி குறையவில்லை. இதனால் வேறொரு மருத்துவமனையில் மகேஸ்வரன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் முறையான ரசீது மற்றும் மருத்துவ சிகிச்சை சம்பந்தமான ஆவணங்களை தருமாறு முதலில் அறுவை சிகிச்சை செய்த தனியார் மருத்துவமனையில் மகேஸ்வரன் கேட்டுள்ளார். ஆனால் மருத்துவமனை நிர்வாகம் அதனை […]
கடைகளில் போதை பொருட்கள் விற்பனை செய்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, வேலூரில் இருக்கும் அனைத்து கடைகளிலும் போதை பொருட்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. இந்நிலையில் சில வியாபாரிகள் கள்ளத்தனமாக தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்கின்றார்கள். இதனால் நடவடிக்கை எடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சிறப்பு குழுக்கள் அமைத்துள்ளது. இவர்கள் சோதனை செய்யும்போது […]
சிஎம்சி மருத்துவ மாணவர்கள் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள சிஎம்சி மருத்துவ கல்லூரியில் விடுதி செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் முதலாம் ஆண்டு மாணவர்களை சீனியர் மாணவர்கள் அரை நிர்வாணப்படுத்தி டவுசர் உடன் விடுதி வளாகத்தில் ஓட விட்டு ராக்கிங்யில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் குட்டி கரணம் அடித்தல், தண்டால் எடுத்தல், மாணவர்களை கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க செய்தல் என அவர்களை கொடுமை செய்திருக்கின்றார்கள். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் கல்லூரி […]
நாமக்கல்லில் இன்று (நவம்பர் 13) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 25 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 20 காசுகலிலிருந்து, அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 25 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. […]
குற்றம் நடைபெறாமல் இருப்பதற்கு போலீசார் புதிய செல்போன் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர். குற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க ரோந்து செல்லும் போலீசார் தொடர் கண்காணிப்பை உறுதிப்படுத்துவதற்காக போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் புதிய செல்போன் செயலியை அறிமுகப்படுத்தி வைத்தார். தமிழக காவல்துறையில் புதியதாக இ-பீட் முறை அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றது. இந்த புதிய முறை திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் 7 போலீஸ் உட்கோட்டங்களில் தலா ஒரு காவல் நிலையம் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த செயலியை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் […]
எனது மனைவியின் உடலை என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என மாலத்தீவில் இறந்த பெண்ணின் கணவர் கேட்டுக் கொண்டுள்ளார். மாலத்தீவில் தீ விபத்து ஏற்பட்டதில் 13 பேர் இறந்து போனார்கள். இதில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தண்டராம்பட்டு தாலுக்கா மலையனூர் மல்காபூர் கிராமத்தைச் சேர்ந்த தேன்மொழியும் ஒருவராவார். இவரின் கணவர் பாலகிருஷ்ணன். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அருகே இருக்கும் பையர் நாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் சென்ற 20 வருடங்களுக்கு முன்பாக தேன்மொழியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு […]
அமைப்புசாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தரத்தில் பதிவு செய்வதற்கு சிறப்பு முகாம் நடத்தப்பட இருக்கின்றது. அமைப்பு சாரா தொழிலாளர்கள் தேசிய தரவு தளத்தில் பதிவு செய்ய சிறப்பு முகாம் நடத்தப்பட இருக்கின்றது என தூத்துக்குடி தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன் கூறியுள்ளார். இதுப்பற்றி அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, அமைப்புசாரா தொழிலாளர்களின் விவரங்களை பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தி இருக்கின்றது. ஆகையால் www.cshram.gov.in என்ற தேசிய இணையதளம் மூலமாக உறுப்பினர் சேர்க்கையானது நடைப்பெற்று வருகின்றது. இதற்கு […]