Categories
ஆன்மிகம் மதுரை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற அழகர் கோவிலில்…. தைலக்காப்பு திருவிழா…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

மதுரை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அழகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐப்பசி மாதத்தில் தைலக்காப்பு திருவிழா நடைபெற்று வருகின்றது. இந்த விழாவினுடைய இரண்டாவது நாளான நேற்று சுந்தரராஜ பெருமாள் தேவியர்களுடன் பாம்பனையில் அருள் பாலித்தார். மேலும் சிராப்தீநாதன் சேவையும் நடைபெற்றது. இதனை பக்தர்கள் கண் குளிர கண்டு மகிழ்ந்தனர்.

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

என்ஜினில் சிக்கிய வலையை…. எடுக்க முயன்ற மீனவர்க்கு நேர்ந்த பரிதாபம்…. துரித நடவடிக்கையில் மீனவர்கள்….!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் காரைக்கால் பகுதியில் வினோபா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 15 மீனவர்கள் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் கோடியக்கரைக்கு தென்கிழக்கு மீன்பிடித்து கொண்டிருந்தபோது குகன் என்ற மீனவர் என்ஜினில் சிக்கிய வலையை எடுப்பதற்காக கடலில் குதித்துள்ளார். அப்போது படகில் பொருத்தப்பட்டிருந்த காத்தாடி கருவி அவருடைய காலை வெட்டியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த குகனை கோழியக்கரை கடற்கரைக்கு மீனவர்கள் படகுமூலம் கொண்டு வந்துள்ளனர். அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் குகனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மழையில் இருந்து நோயாளிகள் தப்பிக்க…. மூன்று பேட்டரி கார்கள் இயக்கம்…. தகவல் அளித்த ஓமந்தூரார் அரசு மருத்துவமனையின் டீன்….!!!!

சென்னை மாவட்டத்தில் பல இடங்களில் வடகிழக்கு மழை கொட்டி தீர்த்து வருகின்றது. இதற்காக பொது மக்கள் நலனுக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மழைக்காலத்தை முன்னிட்டு நோயாளிகளுக்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. இது குறித்து அந்த மருத்துவமனையின் டீன் டாக்டர்.ஜெயந்தி கூறியதாவது “ஓமந்தூரார் மருத்துவமனையில் வளாகத்தின் நுழைவு வாயிலில் இருந்து புற நோயாளிகள் பிரிவுக்கு நோயாளிகள் மற்றும் அவர்களுடைய உறவினர்களை அழைத்து வருவதற்கு மூன்று பேட்டரி கார்கள் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உடனே நிலுவைத் தொகையை செலுத்துங்க…. கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு…. மாவட்ட கலெக்டரின் அதிரடி அறிவிப்பு….!!!!

கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உடனடியாக நிலுவை தொகையினை செலுத்த வேண்டும் மீறினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் இலவசமாக செட்டாப் பாக்ஸ்களை வழங்கி 200க்கும் மேற்பட்ட சேனல்களை குறைவான மாத சந்தா தொகையில் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றது. இந்த சேவையை தமிழக அரசு உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கி வருகின்றது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்…. ஆறு மணி நேரம் தாமதம்…. பயணிகள் கடும் அவதி….!!!!

மதுரை மாவட்டத்தில் ராமேஸ்வரத்தில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனை அமைந்துள்ளது. இங்கு கட்டுமான மறுசீரமைப்பு பணிகளும் நடைபெற்று வருகின்றது. இதற்காக அங்கிருந்து இயக்கப்படும் ரயில்கள் மதுரை பணிமனைக்கு பராமரிப்பிற்காக கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் அந்த ரயில்கள் போக்குவரத்திற்கு தாமதம் ஏற்பட்டு வருகின்றது. இதற்கிடையில் ராமேஸ்வரத்திலிருந்து மதுரை வழியாக திருப்பதிக்கு வாரம் மூன்று முறை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த ரயில் நேற்று மாலை 4:20 மணிக்கு பதிலாக இரவு 11 மணிக்கு இராமேஸ்வரத்தில் இருந்து திருப்பதி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலத்தில் பள்ளி வகுப்பறை பூட்டுகளில் பசையை வைத்து ஒட்டிய மர்ம நபர்கள்”….. பெற்றோர்களின் போராட்டத்தால் பரபரப்பு….!!!!!!

தீவட்டிபட்டியில் பள்ளி வகுப்பறை பூட்டுகளில் பசையை வைத்து ஒட்டிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள தீவட்டிபட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி இருக்கின்றது. இப்பள்ளியில் 350 க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளிக்கு வந்திருக்கின்றார். அப்போது அவரின் அறை பூட்டு மற்றும் வகுப்பறை பூட்டுகளை திறக்க முயன்ற போது சாவி போடும் துவாரத்தில் பசை போட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“வங்கி லிங்க் அனுப்பி டாக்டரிடம் மோசடி”… 24 மணி நேரத்திற்குள்…. துரிதமாக செயல்பட்ட போலீசார்….!!!!!!

2 லட்சம் மோசடி செய்யப்பட்ட நிலையில் துரிதமாக சைபர் க்ரைம் போலீசார் செயல்பட்டு பணத்தை மீட்டு ஒப்படைத்தார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்ட பிரபு என்பவர் ஆர்.எஸ்.மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராக பணியாற்றி வருகின்றார். இரண்டு நாட்களுக்கு முன்பாக இவரின் செல்போன் எண்ணிற்கு வங்கியிலிருந்து அனுப்புவது போல குறுஞ்செய்தி ஒன்று வந்திருக்கின்றது. அந்த லிங்க் இணைப்பைத் தொட்ட போது வாங்கி செயலி பக்கத்திற்கு சென்று இருக்கின்றது. அதில் அவரின் பான் கார்டு பதிவு செய்து செயலாக்கம் […]

Categories
கிரிக்கெட் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

“ஆசிய கிரிக்கெட் 20-20 போட்டிகள்”..‌‌… ராமநாதபுரம் வீரர் கேப்டனாக தேர்வு….!!!!!

ராமநாதபுரம் மாவட்ட வீரர் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் அருகே இருக்கும் கீழச்செல்வனூர் ஊரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வினோத் பாபு மருத்துவ கல்லூரி படிப்பு படித்து வந்தார். வறுமை காரணமாக அவர் பாதியிலேயே படிப்பை நிறுத்திவிட்டார். இதன்பின் இவர் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி வருகின்றார். சக்கர நாற்காலி ஆசிய கிரிக்கெட் 20-20 போட்டிகள் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பாக நடைபெற இருக்கின்றது. இப்போட்டியானது டிசம்பர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“தொண்டியில் பெய்த கனமழை”…. இடிந்து விழுந்த வீடு…. அரசின் நிவாரணத் தொகை வழங்கல்….!!!!!!

மழையால் வீடு இடிந்து சேதம் அடைந்தது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டியில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் பெருமாள் கோவில் சன்னதி தெருவில் இருக்கும் சித்திக் அலி என்பவரின் வீடு முழுமையாக இடிந்து விழுந்து சேதமடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை. சில இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த தாசில்தார் மற்றும் பேரூராட்சி தலைவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டார்கள். பின் வீடு இடிந்து விழுந்து பாதிக்கப்பட்ட சித்திக் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகள்”…. சென்ற 2 நாட்களில் இம்புட்டு அபராத தொகையா‌‌….!!!!

போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகளிடம் 1 லட்சத்து 34 ஆயிரத்து 500 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் சென்ற 2-ம் தேதி முதல் போக்குவரத்து விதி மீறுபவர்களுக்கான அபராத தொகை உயர்த்தப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டார்கள். அப்போது ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள், போக்குவரத்து விதிகளை மீறியவர்கள் என 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் 55 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுபோல […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“நடைபாதையை ஆக்கிரமித்த கடைகள்”…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!!!!

ஊட்டியில் நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்து நடத்தி வந்த கடைகளை அதிகாரிகள் அப்புறப்படுத்தினார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டியில் கிராமப்புறங்களில் இருந்து அரசு பேருந்துகள் மூலம் வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நடைபாதைகளில் நடந்து செல்ல முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்து கடைகள் வைக்கப்பட்டிருக்கின்றது. இதனால் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாமல் சாலையில் இறங்கி நடந்து செல்வதால் விபத்து ஏற்படும் அபாயம் இருக்கின்றது. இதுபோலவே அனுமதிக்க படாத இடங்களில் ஆட்டோக்கள் நிறுத்தப்படுவதால் போருக்குவரத்து பாதிப்புக்குள்ளாகின்றது. இது குறித்து பல […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பிளஸ்-1 மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபர்…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. பரபரப்பு சம்பவம்…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள பவானிசாகரில் இருக்கும் இலங்கை தமிழர் முகாமில் நவீன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவர் மீது காவல் நிலையங்களில் அடிதடி உள்ளிட்ட 4 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக சத்தியமங்கலத்தில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை நவீன்குமார் காதலித்து வந்துள்ளார். அவர் தொடர்ந்து மாணவிக்கு தொந்தரவு அளித்ததால் மாணவியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள்….. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் அதிரடி…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள சூளை பூசாரி தோட்டத்தில் கட்டிட காண்ட்ராக்டரான மகேந்திரன்(45) என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டிற்கு அருகில் இருக்கும் தகர கொட்டகையில் கட்டிட வேலைக்கு தேவையான பொருட்களை வைத்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் தகர கொட்டகையின் பூட்டை உடைத்து 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கட்டுமான இந்திரங்களை திருடிவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து மகேந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

மாநில அளவிலான கேரம் போட்டி…. குரும்பப்பட்டி அரசு பள்ளி மாணவிகள் தேர்வு…. குவியும் பாராட்டுகள்…!!!

கரூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் குரும்பப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் போட்டிகளில் கலந்துகொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இதில் 14 வயதிற்கு உட்பட்ட மாணவிகள் இரட்டையர் பிரிவில் குரும்பப்பட்டி அரசு உயர்நிலைபள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் ச.மகாலட்சுமி, 8- ஆம் வகுப்பு படிக்கும் ம.ஹர்ஷினிபிரியா ஆகியோர் கலந்துகொண்டு முதலிடம் பிடித்தனர். இந்த மாணவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இரணியல் சார்பதிவாளர் அலுவலகத்தில் திடீர் சோதனை…. கட்டு கட்டாக சிக்கிய பணம்…. பரபரப்பு சம்பவம்….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் பகுதியில் இருக்கும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு புரோக்கர்கள் மூலம் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தை கண்காணித்து வந்தனர். நேற்று மாலை 6:30 மணிக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு பீட்டர்பால் தலைமையிலான போலீசார் இரணியல் சார் பதிவாளர் அலுவலகத்திற்குள் நுழைந்து அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மேஜைக்குள் கட்டு கட்டாக இருந்த […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

ஆங்காங்கே ஒழுகிய மழைநீர்…. பேருந்துக்குள் குடை பிடித்தபடி பயணித்த பொதுமக்கள்…. வைரலாகும் காட்சிகள்…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று திருக்கோவிலூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து அரசு பேருந்து வில்லிவலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திடீரென மழை பெய்ததால் பயணிகள் தண்ணீர் உள்ளே வராமல் இருக்க பேருந்தின் பக்கவாட்டு கண்ணாடிகளை மூடினர். ஆனால் பேருந்தின் மேற்கூரையில் ஓட்டை இருந்ததால் அதன் வழியாக மழை நீர் ஒழுகி பயணிகள் மீது விழுந்தது. இதனால் சிலர் கைகளில் இருந்த குடைகளை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தலை துண்டிக்கப்பட்டு ஏரியில் மிதந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் அருகே சென்னசந்திரம் ஏரியில் 40 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த இடத்தில் கொலை நடந்ததற்கான தடயம் கிடைக்கவில்லை. எனவே வேறு எங்காவது அவரை வெட்டிக்கொலை செய்து விட்டு உடலை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அசால்டாக உலா வரும் கரடி…. புதர்களில் பதுங்கியிருக்க வாய்ப்பு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஜிகினியில் நந்தனவனா லேஅவுட் என்ற குடியிருப்பு பகுதி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு நேரத்தில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த கரடி சாதாரணமாக அங்கும் இங்கும் உலா வந்தது. இதுகுறித்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்து பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். இதனால் கரடியின் நடமாட்டம் குறித்து பொதுமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் கரடியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து புதர்களுக்குள் கரடி பதுங்கியிருக்க வாய்ப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

14 வயது சிறுமிக்கு தொந்தரவு…. வாலிபர்களின் அத்துமீறிய செயல்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் பகுதியில் விஜய்(23), காளிமுத்து(28) ஆகியோர் வருகின்றனர். கடந்த 2018-ஆம் ஆண்டு இருவரும் இணைந்து 14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் விஜய் மற்றும் காளிமுத்து ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் விஜய் மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுமிக்கு நடந்த திருமணம்… வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் பகுதியில் கூலித் தொழிலாளியான சதீஷ்குமார்(24) என்பவரை வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு சதீஷ்குமார் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி 16 வயது சிறுமியை திருமணம் செய்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் சதீஷ்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 6 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“கூடலூரில் தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழி ஏற்பு”…. தூய்மை பாரதம் குறித்து பேச்சு….!!!!!

கூடலூர் காபி வாரியம் சார்பாக தூய்மை இந்தியா திட்ட உறுதிமொழி எடுக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் காபி வாரியம் சார்பாக மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் தொடக்க விழா அலுவலக வளாகத்தில் நடந்தது. இவ்விழாவிற்கு காபி வாரியம் முதுநிலை தொடர்பு அலுவலர் ஜெயராமன் தலைமை தாங்க உதவி அலுவலர் ராமஜெயம் வரவேற்றார்‌. இதன்பின் கூடலூர் அரசு கல்லூரி முதல்வர் சண்முகம் மற்றும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் அர்ஜுனன் உள்ளிட்டோர் தூய்மை பாரதம் குறித்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடர் மழையால் இடிந்த வீடு…. இடிபாட்டிற்குள் சிக்கி மூதாட்டி பலி…. போலீஸ் விசாரணை…!!!

கனமழைக்கு தாக்கு பிடிக்காமல் வீட்டு சுவர் இடிந்ததால் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சைமகத்துவாழ்க்கை கிராமத்தில் ஓய்வு பெற்ற கிராம உதவியாளரான குமரவேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி கலியம்மாளுடன்(60) கூரை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக எதிர்பாராதவிதமாக நேற்று வீட்டு சுவர் இடிந்து விழுந்ததால் மூதாட்டி இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார். இதனையடுத்து வெளியே வர முடியாமல் சிரமப்பட்ட மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை…. தாயின் பரபரப்பு புகார்…. கணவர், மாமியார் அதிரடி கைது…!!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள நந்திமங்கலம் கிராமத்தில் விஜய்(26) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் விஜயலட்சுமி(24) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதில் ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் விஜய் ஈரோட்டில் தங்கி அங்குள்ள டெக்ஸ்டைல் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் சொந்த ஊரான நந்திமங்கலத்திற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“போலியான குறுந்தகவல்” மூலம் டாக்டரிடம் 4 3/4 லட்ச ரூபாய் மோசடி…. சைபர் கிரைம் போலீஸ் அதிரடி…!!!!

தர்மபுரியைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்நிலையில் கே.ஒய்.சி அப்டேட் செய்ய வேண்டும் எனவும், இல்லையென்றால் வங்கி கணக்கு முடக்கப்படும் எனவும் டாக்டரின் செல்போனிற்கு குறுந்தகவல் வந்தது. இதனை நம்பிய டாக்டர் குறுந்தகவலில் இருந்த லிங்கை கிளிக் செய்து, வங்கி கணக்கு விவரம் மற்றும் ஓ.டி.பி எண் ஆகியவற்றை பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்தில் வங்கிக் கணக்கிலிருந்து 4 லட்சத்து 70 ஆயிரத்து 829 ரூபாய் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனால் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாமியார் வீட்டில் திடீர் சோதனை…. 300 கிலோ எடையுடைய சிலை மீட்பு…. போலீஸ் அதிரடி…!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள உக்கடம் பேரூர் பைபாஸ் சாலையில் பாஸ்கர சுவாமிகள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஜோதிடம் பார்த்து வருகிறார். இவரது வீட்டில் முருகர் சிலை இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தி 4 அடி உயரமுள்ள முருகர் சிலையை மீட்டனர். இதனையடுத்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ரயில் நிலைய த்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர்…. என்ன காரணம் தெரியுமா….? பரபரப்பில் பெரம்பூர்….!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தனது செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அதில் அவர் கூறியதாவது “பெரம்பூர் ரயில் நிலையத்தில் வெடிகுண்டுகளுடன் சிலர் சுற்றித்திரிகின்றார்கள். அவர்கள் கண்டிப்பாக வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வார்கள். என்று கூறிவிட்டு தன்னுடைய இணைப்பை துண்டித்துள்ளார். இது குறித்த உடனடியாக பெரம்பூர் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் சென்னை ரயில்வே காவல்துறையினரும் செம்பியம் காவல்துறையினரும் இணைந்து மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டுக்கு வந்த மின்சார ரயில்…. துணிப்பையில் கிடைத்த பெண் குழந்தை…. தீவிர விசாரணையில் போலீசார்….!!!!

சென்னையில் இருந்து செங்கல்பட்டிற்கு நாள்தோறும் ஏராளமான ரயில்கள் வந்து செல்வது வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் 12.45 மணிக்கு செங்கல்பட்டுக்கு சென்னை கடற்கரையில் இருந்து மின்சார ரயில் ஒன்று வந்துள்ளது. இந்த ரயிலில் பெண்களுக்கான பெட்டியில் அனைத்து பயணிகளும் இறங்கிய பிறகு ரயில்வே பாதுகாப்பு படை பெண் போலீஸ் லதா ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது அவருக்கு திடீரென குழந்தை சத்தம் கேட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பெண் போலீஸ் லதா அந்த பெட்டியில் கேட்பாரற்றுக் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆர்டர் கொடுக்கணும்…. ஓனர் எங்கே….? நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்ட பணம்…. போலீஸ் வலைவீச்சு….!!!!

நூதன முறையில் ஹோட்டலில் இருந்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை மாவட்டத்தில் நசரத்பேட்டை பகுதியில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இங்கு நேற்று ஊழியர் ஒருவர் ஹோட்டலை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் அங்கு வந்து பிரியாணி ஆர்டர் கொடுக்க வேண்டும் என ஊழியரிடம் பேச்சு கொடுத்துள்ளார். அது மட்டுமல்லாமல் ஆர்டர் குறித்து கடையின் உரிமையாளரிடம் பேச […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ராட்சத குழாய் உடைப்பு…. சீறிப்பாய்ந்த கழிவுநீர்…. அவதியில் வாகன ஓட்டிகள்….!!!!

ராட்சத குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக சாலையில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடியது. சென்னை மாவட்டத்தில் அம்பத்தூர், கொரட்டூர், திருமங்கலம், கோயம்பேடு, மாதவரம், முகப்பேர், கொளத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் கொடுங்கையூர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ராட்சத குழாய் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றது. இந்த ராட்சத குழாய் பாடி, மாதவரம் மற்றும் மூலக்கடை வழியாக செல்லும். இந்த நிலையில் ராட்சத குழாய் அமைந்துள்ள பகுதியான தாதங்குப்பதில் நேற்று காலை 11 மணியளவில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது. […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (05.11.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (நவம்பர் 05) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 10 காசுகலிலிருந்து, அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

மாவட்ட அளவிலான கலை மற்றும் பண்பாட்டுத் திருவிழா…. தனித்திறமையை வெளிப்படுத்திய மாணவ மாணவிகள்….!!!!

மாவட்ட அளவிலான கலை மற்றும் பண்பாட்டு திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். வேலூர் மாவட்டத்தில் காட்பாடி பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவிலான கலை மற்றும் பண்பாட்டுத் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த திருவிழாவில் வாய்ப்பாட்டு இசை கருவி இசை ஆகிய போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் ஒன்றிய அளவில் தேர்ச்சி பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மாவட்ட அளவிலான போட்டிகளும் நடந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. கடத்தல் புகார் அளித்த இன்ஜினியர்…. காதலியை கரம்பிடித்த சம்பவம்…!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பஞ்சல் பெருமணல் பகுதியில் போஸ்கோ என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாப்ட்வேர் இன்ஜினியரான அந்தோணி சுமிதா(24) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான பார்த்தசாரதி(29) என்பவரை சுமிதா காதலித்து வந்துள்ளார். இருவரும் ஐ.டி கம்பெனியில் வேலை பார்த்த போது காதலித்து வந்துள்ளனர். தற்போது பார்த்தசாரதி மும்பையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதுகுறித்து அறிந்த சுமிதாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சுமிதாவை […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அகில இந்திய சப்-ஜூனியர் பாட்மிண்டன் போட்டி…. தங்கம் வென்ற வண்ணார்பேட்டை பள்ளி மாணவி…!!!

அகில இந்திய சப்-ஜூனியர் பாட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற மாணவியை அனைவரும் பாராட்டுகின்றனர். அகில இந்திய சப்-ஜூனியர் பாட்மிண்டன் போட்டி தெலுங்கானாவில் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் வண்ணாரப்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி ரேஷிகா கலந்து கொண்டார். இந்நிலையில் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளில் ரேஷிகா தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இந்த மாணவியை பள்ளியின் சேர்மன் சிவசேதுராமன், தாளாளர் திருமாறன், பள்ளியின் முதல்வர் முருகவேல் மற்றும் பிற ஆசிரியர்கள் பாராட்டியுள்ளனர்.

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

காலை முதல் மாலை வரை…. கரூரில் இடைவிடாமல் பெய்த மழை…. சிரமப்பட்ட பொதுமக்கள்…!!!

இடைவிடாது மழை பெய்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். கரூர் மாவட்டத்தில் நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. ஆனால் மதியம் 1 மணி அளவில் கரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனைய்டுத்து நொய்யல் மற்றும் வேலாயுதம்பாளையம் பகுதிகளில் காலையிலிருந்து மாலை வரை இடைவிடாமல் மலை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

நிற்காமல் சென்ற அரசு பஸ்…. வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மாணவர்கள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை….!!

கூடலூர் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்து நிற்காமல் சென்றதால் மாணவர்கள் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் முக்கிய இடங்களில் மட்டுமே அரசு பஸ் இயக்கப்படுகின்றன. இதனால் 10 கிலோமீட்டர் தூரம் பள்ளி கல்லூரிக்கு நடந்து சென்று மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு கல்லூரியில் வகுப்பு முடிந்து மாணவர்கள் தங்களது வீடுகளுக்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அரசு பஸ் ஒன்று பந்தலூருக்கு பயணிகள் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

அதிகரிக்கும் வாகன விபத்துகள்…. நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி…. குறைந்த விலையில் ஹெல்மெட் வழங்கிய போலீஸ்….!!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் காவல்துறையினர் கூடலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை முன்பு தனியார் அமைப்பு சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. அதில் அவர் கூறியதாவது, தற்போது வாகன விபத்துக்கள் அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசு அதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் வாகன விதிமீறலுக்குரிய அபராதம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

சமூக விரோத செயல்கள் நடைபெறும் இடமா மாறிடுச்சு…. புகார் தெரிவித்த பொதுமக்கள்…. அதிரடி நடவடிக்கையில் கலெக்டர்….!!!!

வேலூர் மாவட்டத்தில் கழிஞ்சூர் கிராமத்தில் இ.பி.காலனிக்கு செல்லும் வழியில் ஒரு பெரிய கட்டிடம் இருந்தது. அந்த கட்டிடத்தில் இருந்த கடைகள் சில ஆண்டுகளுக்கு முன்பு காலி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கிருந்த கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அனைத்தும் மர்ம நபர்களால் திருடி செல்லப்பட்டுள்ளது. இதனால் தற்போது அந்த இடம் பாழடைந்த நிலையில் உள்ளது. இந்த இடத்தில் சமூக விரோத செயல்கள் நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் கலெக்டரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் பேரில் பாழடைந்த கட்டிடத்தை இடிக்க […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வீட்டை வாடகைக்கு கேட்பது போல நடித்து…. மூதாட்டியை தாக்கி நகையை பறித்த வாலிபர்கள்…. போலீஸ் வலைவீச்சு….!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னதிருப்பதி பாண்டியன் தெருவில் ஹபீஸ்கான் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெடுஞ்சாலை துறையில் மண்டல பொறியாளராக வேலை பார்த்தவர். இவருக்கு நசீர் ஜஹான்(82) என்ற மனைவி உள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஹபீஸ்கான் இறந்து விட்டதால் மூதாட்டி அப்பார்ட்மெண்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று காலை 2 வாலிபர்கள் மூதாட்டியிடம் அப்பார்ட்மெண்டில் இருக்கும் ஒரு வீட்டை வாடகைக்கு கேட்டுள்ளனர். இதனையடுத்து மூதாட்டி வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த வாலிபர்கள் மதியம் 3 […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மீன் பிடிப்பதற்காக மறுக்கரைக்கு நீந்தி சென்ற நபர்…. 2 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட சடலம்…. பெரும் சோகம்…!!!

சேலம் மாவட்டத்தில் உள்ள குழந்தான்பட்டி ஏரிக்கு கடந்த 31-ஆம் தேதி கஞ்சமலையூர் பகுதியில் வசித்த கூலி தொழிலாளியான சுப்பிரமணி என்பவரும், அவரது நண்பர் குமாரும் மீன்பிடிப்பதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் சுப்பிரமணி மறுக்கரைக்கு நீந்தி சென்று மீன் பிடிக்கப் போவதாக கூறிவிட்டு நீச்சல் அடித்து சென்றுள்ளார். அப்போது ஏரியின் நடுவே எதிர்பாராதவிதமாக சுப்பிரமணி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் கடந்த 2 நாட்களாக சுப்பிரமணியின் உடலை தேடி வந்தனர். நேற்று 3-வது நாளாக […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

“மாநில அளவிலான போட்டிக்கு தகுதி”…. சாதனை படைத்த மாணவிகளுக்கு குவியும் பாராட்டுகள்…!!!

தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரம் த.பி சொக்கலால் மேல்நிலை பள்ளியில் கீழப்பாவூர் வட்டார பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இதில் 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் சுரண்டை ஸ்ரீ ஜெயந்திரா பள்ளி மாணவிகள் கைப்பந்து போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். இதன் மூலம் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிக்கு மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து தென்காசியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் ஸ்ரீஜெயந்திரா […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல்…. போராட்டத்தில் ஈடுபட்ட ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள்….!!!!

தமிழ்நாடு முழுவதும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் சி.பி.எஸ் திட்டம் ரத்து, இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு, உயர்த்தப்பட்ட 4 சதவீத அகவிலைப்படி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருச்சி மாவட்ட கிளை சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு மாவட்ட தலைவர் பீட்டர் மைக்கேல்ராஜ் தலைமை தாங்கியுள்ளார். மேலும் மாவட்ட செயலாளர் ஆரோக்கியராஜ் வரவேற்றார். இந்நிலையில் மாநில செயலாளர் சகிலா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வாய்க்காலில் மூழ்கி கிடக்கும் கார்…. வைரலாகும் வீடியோ…. போலீஸ் விசாரணை…!!!

கார் வாய்க்காலில் மூழ்கி கிடக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. திருச்சி மாவட்டத்தில் உள்ள உத்தமர்சீலி அருகே இருக்கும் வாய்க்காலில் சொகுசு கார் தண்ணீரில் மூழ்கிய நிலையில் கிடப்பதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த காரில் வந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதனையடுத்து விபத்து ஏற்பட்டு கார் வாய்க்காலில் இறங்கி மூழ்கியதா? என்பது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைக்கவில்லை. ஆனாலும் […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“எங்களை அசிங்கப்படுத்தி விட்டாய்” கடன் கொடுத்தவரை தாக்கிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!!

கரூர் மாவட்டத்தில் உள்ள சின்னகவுண்டன்பட்டி பகுதியில் கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் புரசம்பட்டி நாயக்கர் தெருவில் வசிக்கும் சக்திவேல் என்பவர் வெளிநாடு செல்வதாக கூறி கருப்பசாமியிடம் 2 லட்ச ரூபாயை கடனாக வாங்கியுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கருப்பசாமி சக்திவேலின் வீட்டிற்கு சென்று பணத்தை திரும்ப கேட்டு அவரை தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு அங்கிருந்து சென்றார். இதனையடுத்து கள்ளை மெயின் ரோட்டில் கருப்பசாமி நின்று கொண்டிருந்த போது, பணம் கேட்டு வீட்டிற்கு வந்து […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

“வித்தியாசமாக கேட்ட சத்தம்”…. ஏ.சி எந்திரத்தில் புகுந்த பாம்பு…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!!

ஏ.சி எந்திரத்திற்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர். கரூர் கோவை சாலையில் ஒரு தனியார் யோகா மையம் அமைந்துள்ளது. இந்நிலையில் யோகா மையத்தில் இருக்கும் ஏசி எந்திரத்தில் இருந்து நேற்று வித்தியாசமாக சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து ஏ.சி எந்திரத்திற்குள் பாம்பு இருந்ததை பார்த்தவர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் 1/2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஏ.சி எந்திரத்தில் இருந்த பாம்பை பிடித்தனர். இதனையடுத்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பீடிக்கு காசு கேட்ட கடைக்காரர்….. சோடா பாட்டிலால் தாக்கிய 4 பேர்…. போலீஸ் விசாரணை…!!!

கடைக்காரர்களை தாக்கிய நான்கு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராமதாஸ் நகரில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை மற்றும் மொபைல் கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் வெங்கடாசலபதி என்பவர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் 4 பேர் கடைக்கு வந்து பீடி வாங்கியுள்ளனர். அப்போது வெங்கடாசலபதி பணம் கேட்டதால் கோபமடைந்த 4 பேரும் அவரை தாக்கியுள்ளனர். இதனை தட்டிக் கேட்ட பார்த்திபனையும் சோடா பாட்டிலால் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நிலம் வாங்க திட்டமிட்ட நண்பர்கள்…. ரூ.38 லட்சம் மோசடி செய்த ரயில்வே ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தென்னக ரயில்வேயில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு செந்தில்குமார் தன்னுடன் வேலை பார்க்கும் நண்பர்களான ஜெகன், சண்முக மூர்த்தி, கண்ணன், முத்துக்குமார் ஆகியோருடன் இணைந்து ஒரு ஏக்கர் நிலம் வாங்குவதற்காக முடிவு செய்தார். இதற்காக 5 பேரும் நவதி கிராமத்தில் வசிக்கும் தென்னக ரயில்வேயில் டெக்னீசியனாக வேலை பார்த்த சீனிவாசன்(45) என்பவரிடம் கடந்த 2014-ஆம் ஆண்டு 43 லட்ச ரூபாயை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

3 பெண் குழந்தைகளை தவிக்க விட்டு…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோட்டு புள்ளம்பாளையம் காமராஜர் நகரில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். கிருஷ்ணா(27) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு தனுஷா(6), ஹரிஷா(4), அபி(2) என்ற மூன்று பெண் குழந்தைகள் இருந்துள்ளனர். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட கிருஷ்ணா தனது கணவர் வேலைக்கு சென்ற பிறகு சமையல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து மதிய உணவு சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்த சதீஷ்குமார் தனது மனைவி தூக்கில் தொங்குவதை பார்த்து […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கழிவறையில் தொங்கிய சடலம்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!!

தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்டரக்கோட்டை பகுதியில் தொழிலதிபரான தேவராஜ்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசூர் பகுதியில் ஆயில் மில் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கழிவறைக்கு சென்ற தேவராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு வந்த குடும்பத்தினர் தேவராஜ் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

“எங்களுக்கு பாதுகாப்பு தாங்க”…. பட்டதாரி இளம்பெண் காதலனுடன் தஞ்சம்…. போலீஸ் விசாரணை…!!!

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரங்காட்டுகொட்டாய் பகுதியில் எம்.எஸ்.சி பட்டதாரியான சுவேதா(21) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளாக சுவேதாவும், அதே பகுதியில் வசிக்கும் பரத் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த சுவேதாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதனையடுத்து புதுமணத் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய வேன்…. பெண் உள்பட 2 பேர் பலி…. கோர விபத்து…!!!

தனியார் பள்ளி மாற்று வேன் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள காலப்பனஅள்ளி புதூர் பகுதியில் அலமேலு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளி அருகே நடந்து சென்றுள்ளார். அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் என்பவரும் பள்ளி அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் பள்ளியின் மாற்று வேன் கட்டுப்பாட்டை இழந்து அலமேலு, விஜயகுமார் ஆகியோர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த […]

Categories

Tech |