Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

15 மணிநேர போராட்டம்…. கிடைத்த வெற்றி….. உயிருடன் மீட்கப்பட்ட யானை…!!

விவசாய கிணற்றில் விழுந்த யானை 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.  தர்மபுரியில் யானை ஒன்று உணவு தேடி ஊருக்குள் நுழைந்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. 50 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் இருந்து யானையை மீட்பதற்கு முதலில் மயக்க ஊசி செலுத்தி வெளியில் கொண்டுவர திட்டமிடப்பட்டது. கிணற்றிலிருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு யானைக்கு தேவையான உணவு கொடுக்கப்பட்டது. யானையை தூக்குவதற்கு கிரேன் வர காலதாமதம் ஆனதால் யானைக்கு இரண்டு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

அப்பாவுடன் சென்ற மகனின்…. “விபரீத ஆசையால்” தாழையூத்தில் சோகம்…!!

அப்பாவுடன் சென்ற மகன் ரயில் மேல் ஏறி செல்பி எடுத்த போது உடல் கருகி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து கிராமத்தில் வசிப்பவர் மகேஷ்குமார். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு ஜானேஸ்வரன் என்ற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளார். இந்நிலையில் இவர் தன்னுடைய அப்பாவுடன் இன்று காலை ரயில் நிலையம் அருகே உள்ள அப்பா வேலை பார்க்கும் குடோனுக்கு சென்றுள்ளார். இதையடுத்து மகேஷ்குமார் தன்னுடைய வேலைகளை […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“பழையபடி முறுக்கு மீசை வரணும்” பார்க்க சென்ற பிரபலம்…. தவசியின் நம்பிக்கையான பதில்…!!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தவசியை நடிகர் ரோபோ ஷங்கர் நேரில் சந்தித்து பண உதவி அளித்து ஆறுதல் கூறியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் முறுக்கு மீசையோடு அவருக்கு அப்பாவாக வலம் வந்தவர் தவசி. இவர் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எனவே உடல் மெலிந்து போய் மிகவும் எலும்பும் தோலுமாக இருக்கும் தவசி தனது புற்றுநோய் சிகிச்சைக்காக பண உதவி கேட்டு வீடியோ வெளியிட்டதையடுத்து நடிகர் சிம்பு, விஜய் சேதுபதி, […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

எத்தனை பேருக்கு இந்த மனசு….? குண்டும் குழியுமான சாலை…. தனி ஆளாக காவலர் செய்த செயல்…. குவியும் பாராட்டு….!!

வாகன ஓட்டிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்திய பள்ளங்களை போக்குவரத்து காவலர் சமன் செய்ததற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கனமழை பெய்து வருவதால் குண்டும் குழியுமாக இருக்கும் சாலையில் நீர் தேங்கி போக்குவரத்திற்கு இடையூறாக மாறியுள்ளது. இதனால் வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனை பார்த்த கம்பம் பகுதி போக்குவரத்து காவலர் தாமரை மாணிக்கம் சாலையை சமன் செய்வதற்காக ஜல்லி கற்கள் ஆகியவற்றை தனியாளாக கொண்டுவந்து சீரமைப்பு பணியை தொடங்கினார். இதனை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சிதம்பர நடராஜருக்கு மட்டும் பெய்த மழை…. வியப்பில் ஆழ்ந்த பக்தர்கள்….!!

நடராஜர் கோவிலில் அதிசய நிகழ்வாக நடராஜர் சிலைக்கு மட்டும் மழை பெய்துள்ளது  பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் தற்போது பக்தர்களுக்கு தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு அந்த கோவிலில் அதிசயக்கத்தக்க நிகழ்வு ஒன்று நடந்தது. என்னவென்றால் இந்த கோவிலில் உள்ள ஒரு பகுதியில் மட்டும் மழை பெய்துள்ளது. அதுவும் குறிப்பாக நடராஜர் சிலைக்கு மட்டும் மழை பெய்துள்ளதால் பக்தர்கள் அதை பார்த்து வியப்படைந்துள்ளனர். இதையடுத்து […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பணி…. 21, 22 தேதியில் போட்டித்தேர்வு…. miss பண்ணிராதீங்க…!!

கூட்டுறவு வங்கிக்கான உதவியாளர் பணிக்கு போட்டித்தேர்வு வரும் 21,22 தேதிகளில் நடைபெற உள்ளது. சேலத்தில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் கடன் சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடத்திற்கான போட்டித்தேர்வு வரும் 21- 22-ம் தேதிகளில் நடக்கிறது. தமிழகத்தில் 23 மாவட்டங்களில் கூட்டுறவு வங்கிகள் மற்றும் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. இவற்றில் வங்கி மற்றும் சங்க உறுப்பினர்களிடமிருந்து டெபாசிட்டுகள் சேகரித்தல், சுயதொழில் கடன் உதவி, நகை கடன், பயிர் கடன், […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

குறைந்த விலையில் “SONY TV”….. நம்பி ஏமாந்துட்டாங்க….. நீங்க பார்த்து வாங்குங்க….!!

போலியாக சோனி பெயரில் குறைந்த விலைக்கு டிவி விற்பனை செய்த 3 பேரை காவல்துறையினர் கைது திருச்சி மாவட்டத்தில் இருக்கும் நந்தர்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த சவுக்கத் அலி என்பவர் குறைந்த விலையில் சோனி டிவி கிடைப்பதாக பீமநகர் பழைய தபால் நிலைய சாலையில் அமைந்துள்ள எலெக்ட்ரானிக்ஸ் கடை ஒன்றில் இருந்து 32 இன்ச் சோனி டிவியை 9 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கிச் சென்றார். பில் வாங்காமல் சென்ற அவர் வீட்டிற்கு சென்று டிவியை ஆன் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஒரு செல்போன் நம்பரால்” கர்ப்பமாகி கையில் குழந்தை…. வீட்டிற்கு திரும்பி வந்த இளம்பெண்ணின் நிலை..!!

நபர் ஒருவர் காதலிப்பதாக கூறி இளம்பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றியதைப்போல பல பெண்களை ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது.  சேலம் மாவட்டத்திலுள்ள ஓமலூர் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர்  இந்திரகுமார். இவருடைய மகள் நர்மதா(20) கோயம்புத்தூர் நூல் தொழிற்சாலையில் வேலை பார்த்துக்கொண்டே தனியார் கல்லூரியில் நர்சிங் படித்து வந்துள்ளார். அப்போது அவருடன் இருந்த நர்மதாவின் தோழி ஒருவர் இந்த நம்பரில் இருந்து எனக்கு அடிக்கடி போன் வருகிறது என்று ஒரு நம்பரை கொடுத்து அவரிடம் பேசு என்று […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மனநலம் பதித்தவருக்கு புத்தாடை….. ரோந்து பணியில்…. காவலர்களின் நெகிழ்ச்சி செயல்….!!

மனநலம் பாதிக்கப்பட்டு அரைகுறை ஆடையுடன் சுற்றி திரிந்தவருக்கு புது ஆடை அணிவித்த காவலர்களுக்கு பாராட்டுகிறது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் பிரகாஷ் மற்றும் கார்த்திகேயன் என இரண்டு காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மன்னார்குடி பேருந்து நிலையத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் அரை குறை ஆடையுடன் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார். இதனை பார்த்த இரண்டு காவலர்களும் கடை வீதிக்கு சென்று புது ஆடைகளை வாங்கி வந்து அந்த நபருக்கு அணிவித்து விட்டனர். இது தொடர்பான காணொளி சமூக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

நிச்சயதார்த்தம் முடிந்து…. ஹோட்டல் விருந்து…. தொண்டையில் சிக்கிய பொருள்…. அதிர்ச்சியில் மணமக்கள் வீட்டார்….!!

நிச்சயதார்த்தம் முடிந்து ஹோட்டலில் சாப்பிட்ட உணவில் ட்யூப் லைட் துகள்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது வேலூர் மாவட்டத்தில் உள்ள அலமேலுமங்காபுரம் பகுதியில் வசிப்பவர் வாசு. இவர் மகளின் நிச்சயதார்த்தம் சத்துவாச்சாரி வள்ளலார் பகுதியில் அமைந்துள்ள ஜூனியர் குப்பண்ணா ஹோட்டலில் வைத்து நேற்று நடந்து முடிந்தது. அதன் பிறகு அதே ஹோட்டலில் 100 பேருக்கு சாம்பார் சாதம் ஆர்டர் கொடுத்து சாப்பிட அமர்ந்தனர். ஹோட்டல் ஊழியர்கள் உணவு பரிமாற உணவை சாப்பிட்ட விருந்தினர்கள் சாப்பிட்டபிறகு தங்கள் தொண்டையில் ஏதோ […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து அட்டகாசம்…. கிராம மக்களின் யுக்தி….. தெறித்து ஓடிய குரங்கு கூட்டம்….!!

தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த குரங்குக் கூட்டத்தை மலையடிவார கிராம மக்கள் புலி பொம்மை வைத்து கட்டு படுத்தியுள்ளனர் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை பகுதியை சேர்ந்த மலையடிவார கிராம மக்களின் வீடுகளுக்குள் குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்வதாக புகார்கள் எழுந்தது. சிலர் இதனை இடையூராக நினைக்கவில்லை என்றாலும் பொதுமக்கள் பலர் தொடர்ந்து வனத்துறையினரிடம் குரங்குகளைப் பிடிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளனர். இதனால்  புகார்கள் அடிக்கடி வரும் பகுதிகளில் கூண்டு வைத்து வனத்துறையினர் குரங்குகளை பிடித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகனின் முதலாம் ஆண்டு நினைவு தினம்….. 6,00,000 செலவு செய்து….. தந்தையின் நெகிழ்ச்சி செயல்…!!

உயிரிழந்த மகனுக்கு ஆறு அடி உயரத்தில் மெழுகு சிலை செய்த தந்தையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மதுரை மாவட்டத்திலுள்ள அவனியாபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன்-சரஸ்வதி தம்பதியினருக்கு கீதா, சுதா  என இரண்டு மகள்களும் மாரிகணேஷ் என்ற ஒரே மகனும் இருந்துள்ளார். மாரிகணேஷ்க்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். சிறுவயது முதலே ரேஸில் அதிக ஆர்வம் கொண்ட மாரிகணேஷ் தனது புல்லட் பைக்கில் சாகசம் நிகழ்த்தி பல பரிசுகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த வருடம் உடல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வேணும்னு தான் இடிச்சேன் என்ன பண்ண போற?” வடிவேலு பாணியில் வம்பிழுத்த…. வாலிபர்கள் வசமா மாட்டிக்கிட்டாங்க…!!

போலீஸ் என்று தெரியாமல் குடிபோதையில் வாலிபர்கள் கலாய்த்ததால் காவல்துறையினரிடம் மாட்டிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக  பணியாற்றுபவர் ராமலிங்கம். இவர் மாம்பலம் குடியிருப்பு பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ராமலிங்கம் கடையில் மருந்து வாங்கி விட்டு தி.நகர் பேருந்து நிலையம் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது குடிபோதையில் அவ்வழியாக வந்த வாலிபர்கள் ராமலிங்க மீது மோதி உள்ளனர். எனவே ராமலிங்கம் அவர்களைப் பார்த்து செல்லுமாறு கூறியுள்ளார். […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

“தனியாக வீட்டில் இருந்த மனைவி” காலையில் வந்து பார்த்த கணவருக்கு…. காத்திருந்த அதிர்ச்சி…!!

பெண் ஒருவரை முன்விரோதம் காரணமாக இரண்டு பேர் வெட்டி கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டத்தில் வசிக்கும் தம்பதிகள் முத்துப்பாண்டி (40) – முப்புடாதி (35). இவர்களுக்கு 11 வயதில் மாரிசெல்வம் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முத்துப்பாண்டி வேலைக்கு சென்றுள்ளார். மேலும் அவருடைய மகன் மாரிசெல்வம்  தனது பாட்டி வீட்டிற்கு தூங்க சென்றுள்ள நிலையில் முப்புடாதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இதையடுத்து காலையில் வேலை முடிந்து வீட்டிற்கு வந்து முத்துப்பாண்டி […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உயிரிழந்த காளை மாடு…. மேளதாளம், கண்ணீர் அஞ்சலி போஸ்டர்…. அஞ்சலி செலுத்த குவிந்த மக்கள்…!!! !

நோய்வாய் பட்டு உயிரிழந்த காலை மாட்டிற்கு அதனை வளர்த்த விவசாயி இறுதிச்சடங்கு நடத்தி கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள கெலமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயியான சின்னப்பா கரியன் எனும் பெயர் கொண்ட காளை மாட்டை வளர்த்து வந்தார். ஒவ்வொரு வருடமும் சுற்றுவட்டார பகுதிகளில் நடக்கும் எருது விடும் விழாவில் பங்கேற்கும் இந்த காளை மாடு பல பரிசுகளை வாங்கிக் குவித்துள்ளது. இந்நிலையில் நோய்வாய்ப்பட்ட கரியன் பரிதாபமாக உயிரிழந்தது. தனது வீட்டில் சக […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

1 ரூபாய்க்கும் கீழ் போன வெண்டைக்காய்….. வாங்கவும் ஆளில்லை…. லாரி லாரியாக ஆற்றில் கொட்டிய அவலம்…!!

வெண்டைக்காயின் சாகுபடி அதிகமாக இருந்ததால் லாரி லாரியாக ஆற்றில் கொட்டி விவசாயிகள் அழித்துள்ளனர் . தேனி மாவட்டத்தில் வெண்டைக்காய் சாகுபடி அதிக அளவு செய்யப்பட்டு வருகின்றது. வெண்டைக்காயின் விலை ஏற்றத்தாழ்வு இல்லாமல் எப்போதும் சராசரியாக இருப்பதனால் ஆர்வத்துடன் விவசாயிகள் வெண்டை சாகுபடியில் ஈடுபட்டனர். இந்த வருடம் அதிக பட்சமாக ஒரு கிலோ வெண்டைக்காய் 120 ரூபாய் வரை ஓணம் பண்டிகையை முன்னிட்டு விற்பனையானது. எனவே வெண்டைக் காயின் விலை தொடர்ந்து உயரும் என்று எண்ணிய விவசாயிகள் அதிக […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

உங்கள் மாவட்டத்தில் வேலை…!! மாதம் 1.12 லட்சம் ரூபாய் சம்பளம்…. நண்பர்களே உடனே apply பண்ணுங்க…!!

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தில் காலியாக உள்ள இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நிர்வாகம்: தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை – கன்னியாகுமரி. மேலாண்மை: தமிழக அரசு பணி ஜூனியர் ஆபீசர். கல்வித்தகுதி: டிப்ளமோ சிவில் பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணி: Junior Draughting Manager. தகுதி: வயது வரம்பு 35 வயதிற்கு உட்பட்ட இருக்கவேண்டும். சம்பளம்: ரூ.35,400 […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

ஆண் நண்பர்களுடன் ரகசிய பழக்கம்…. பெண்ணுக்கு நேர்ந்த கதி…. மனைவிக்காக கதறிய கணவன்…!!

கணவருக்கு தெரியாமல் ஆண் நண்பர்களுடன் பழகி வந்த பெண் அவர்களாளேயே வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பாப்பாகுடியை சேர்ந்தவர் முத்துப்பாண்டி-முப்பிடாதி தம்பதியினர் இவர்களுக்கு 12 வயதில் மகன் உள்ளான். முத்துப்பாண்டி சுமைதூக்கும் தொழிலுக்காக தினமும் தூத்துக்குடிக்கு சென்றுவிடுவார். கணவன் வேலைக்கு சென்றதும் முப்பிடாதி அதே பகுதியை சேர்ந்த ஆண்களுடன் நட்புடன் பழகி வந்துள்ளார். இந்நிலையில் முப்பிடாதியுடன் பழகி வந்த சிலருக்கு அவருடன் பிரச்சினை ஏற்பட நேற்று முப்பிடாதி இருவர் அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

முதியவர் தற்கொலை…. மார்த்தாண்டத்தில் பரபரப்பு…!!

முதியவர் ஒருவர் உடல்நலம் சரியாகாததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் வசித்து வந்தவர் ராஜமணி (வயது 70). வயதான இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகமல் இருந்துள்ளது. இதனால் மனமுடைந்த முதியவர், வீட்டிலிருந்த விஷத்தை எடுத்துக்  கொண்டு பக்கத்திலுள்ள கோவில் பகுதிக்கு சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இதையடுத்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“ரோட்டில் விழுந்த வாலிபர் தலை” அலறியடித்து ஓடிய மக்கள்…. மதுரையில் பரபரப்பு…!!

கும்பல் ஒன்று பழிக்கு பழியாக வாலிபரின் தலையை வெட்டி ரோட்டில் வீசியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் கீழக்கரை பகுதியில் வசிப்பவர் திமுக பிரமுகர் பிரமுகர் வி.கே குருசாமி. இவருக்கும் மறைந்த முன்னாள் அதிமுக மண்டல தலைவர் ராஜபாண்டியன் என்பவருக்கும்  பதினைந்து வருடங்களாக அரசியல் பகை இருந்து வந்துள்ளது. இந்த பகை காலப்போக்கில் இரு கும்பல்களுக்கு இடையேயான பகையாக மாறி ஒருவரை ஒருவர் பழி தீர்க்க ஆரம்பித்துள்ளனர். இந்த கும்பல்களால் இதுவரை சுமார் 15 பேர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

இன்னைக்கு தீபாவளி….. பணம் தா இல்ல சரக்கு வாங்கி தா…. பீர் பாட்டிலால் இளைஞர் தாக்குதல்…!!

தீபாவளி என்பதால் பணம் அல்லது மது வேண்டும் என்று தகராறு செய்து இளைஞரை பீர் பாட்டிலால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னையில் இருக்கும் கொடுங்கையூர் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் கௌதம். தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வரும் இவர் தீபாவளி அன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அவரது வீட்டின் அருகே சென்ற சமயம் மூன்று இளைஞர்கள் கௌதமை மடக்கி அவரிடம் பணம் இருக்கிறதா என கேட்டு தகராறு செய்துள்ளனர். கௌதம் தன்னிடம் பணம் இல்லை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

500 கொடு, 5000 கொடு…. போலீஸ் சீருடையில் அதிரடி வேட்டை…. பின் தெரிந்த உண்மை….!!

பொலீஸ் எனக்கூறி வசூல் வேட்டையில் இறங்கிய இளைஞரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் குழித்துறை பகுதியில் சொகுசு வாகனத்தில் காவல் சீருடையில் வந்த நபர் ஒருவர் தன்னை காவல்துறை அதிகாரி எனக் கூறி வாகன சோதனையில் ஈடுபட்டார். பின்னர் அவ்வழியாக முகக்கவசம் மற்றும் தலைக்கவசம் அணியாமல் வருபவர்களிடம் 500 முதல் 5000 வரை வசூல் செய்ய தொடங்கியுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த வாலிபர் ஒருவர் அந்த நபரின் சீருடையை பார்த்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“இப்பவே தாலி கட்டுடா” 42 வயது பெண்ணுடன் இல்லறம்….. 24 வயது பிரதீப்புக்கு நேர்ந்த கொடூரம் …!!

42 வயது பெண் ஒருவர் தன்னுடன் வாழ மறுத்த 24 வயது வாலிபரை கத்தியால் வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் பகுதியில் வசிப்பவர் பிரதீப் (24 ). டிரைவர்  வேலை செய்து வரும் இவருடைய வீட்டின் அருகே பிரமிளா (42) என்ற பெண் வசித்து வந்துள்ளார். பிரமிளாவின் கணவன் கடந்த ஆறு வருடங்களுக்கு முன் இறந்துவிட்ட நிலையில், இவர் கொடைக்கானல் அதிமுக மகளிர் அணியில் தீவிரமாகச் செயல்பட்டு வந்துள்ளார். இதையடுத்து தனிமையில் வசித்து […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மக்களே உஷாரா இருங்க… ரெட் அலர்ட் கொடுத்தாச்சு… தூத்துக்குடிக்கு எச்சரிக்கை …!!

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கடந்த சில தினங்களாகவே பரவலாக மழை பெய்து வருகின்றது. மேலும் தென் மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகின்றது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் சில நாட்களாக கனமழை பெய்து வருகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை, இதுவரை அதிகபட்சமாக துறைமுகம் பகுதியில் 126 மி.மீட்டர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறுமியுடன் காதல் திருமணம்…. இடையில் வந்த அண்ணன்…. பின் நடந்தகொடூரம்…!!

திருமணத்தை கெடுத்த காதலியின் அண்ணனை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஜலகண்டாபுரம் பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் நாமக்கல் மாவட்டத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அருண் குமாரின் சித்தப்பா மகளான 17 வயதே நிரம்பிய சிறுமி அவரது வீட்டின் அருகே வசிக்கும் பாஸ்கரன் என்பவரை காதலித்து வீட்டைவிட்டு வெளியேறினார். பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இது குறித்து சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“அடை மழையில் அயராது உழைப்பவர்” தூத்துக்குடி காவலருக்கு…. குவியும் பாராட்டுகள்…!!

போக்குவரத்து காவலர் ஒருவர் கனமழையை பொருட்படுத்தாமல் வாகனங்களை கவனித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருவதால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்கள் மற்றும் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதையடுத்து தூத்துக்குடி மாவட்டத்திலும் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இந்தக் கன மழையையும் பொருட்படுத்தாமல் போக்குவரத்து காவலரான முத்துராஜா என்பவர் வாகனங்கள் செல்வதை கண்காணித்து வழி நடத்தியுள்ளார். இந்தப் போக்குவரத்து […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தள்ளாடும் வயதிலும் துணிந்து” துப்பாக்கியால் சுட்ட முதியவர்…. திகில் நிறைந்த வீடியோ…. பழனியில் பரபரப்பு…!!

முதியவர் ஒருவர் பட்டப்பகலில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி அருகே அக்கரைப்பட்டியில் வசிப்பவர் இளங்கோவன். இவருக்கு சொந்தமாக பழனி அப்பர் தெருவில் 12 சென்ட் காலி மனை இருந்துள்ளது. அந்த இடத்தின் பக்கத்தில் திரையரங்கு உரிமையாளரான நடராஜன் வசித்து வந்துள்ளார். இந் நிலையில் இளங்கோவனுக்கு சொந்தமான இடத்தில், தனக்கும் கொஞ்சம் நிலம் இருப்பதாக நடராஜன் தொடர்ந்து கூறி வந்ததால் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று தனது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தீபாவளிக்கு டிரெஸ் வேணும்ப்பா” பணம் இல்லை என்ற அப்பா…. மகளின் பரிதாப முடிவு…!!

சிறுமி ஒருவர் தீபாவளிக்கு புது ஆடை வாங்கி தராததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் கோவில்பட்டியிலுள்ள கழுகாசலபுரம் பகுதியைச் சேர்ந்தவர் குருசாமி. விவசாயியான இவருக்கு அமுதா(17) என்ற பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த மகள் உள்ளார். இந்நிலையில் தீபாவளியன்று அமுதா தனது தந்தையிடம் புதிய ஆடை எடுத்து தருமாறு கேட்டுள்ளார். ஆனால் புத்தாடை வாங்க தன்னிடம் பணம்  இல்லை என்பதால், பொங்கலுக்கு உடை வாங்கி தருவதாக தனது மகளிடம் குருசாமி கூறியுள்ளார். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“என்னடா பஸ் தன்னால ஓடுது” பின்னால் ஓடிய டிரைவர்…. பஸ்சில் காத்திருந்த அதிர்ச்சி…!!

போதையில் இருந்த நபர் அரசு பேருந்தை ஒட்டி சென்ற சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த, ஈரோடு கொடுமுடி பகுதிக்கு அரசு பேருந்து ஒன்று தீபாவளிக்காக சிறப்பு பஸ்சாக இயக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கரூரில் இருந்து திருச்சி வந்த பேருந்தை ஓட்டுநர் சரவணகுமார் ஓட்டி வந்துள்ளார். பின்னர் திருச்சி வ.உ.சி. சாலையில் பயணிகளை இறக்கி விட்டு விட்டு, பேருந்தை சரவணக்குமார் ஓரமாக நிறுத்தி டீ குடித்து விட்டு நேரக்காப்பாளர் அறைக்கு சென்றுள்ளார். அச்சமயம் அந்த […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கார் மோதியதில்…. மேய்ச்சலுக்கு சென்ற 9 ஆடுகள் பலி…!!

மேய்ச்சலுக்கு சென்று திரும்பிய ஆடுகள் மீது கார் மோதி விபத்து ஏற்படுத்திய ஓட்டுனரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சென்னை மாவட்டம், பூந்தமல்லி மேல்மா நகர் பகுதியில் வசிப்பவர்கள் ராஜி மற்றும் ஜீவா. இவர்கள் இருவரும் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வந்துள்ளனர். இந்த ஆடுகள் காலை நேரத்தில்  மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடப்படும். இதையடுத்து அவை பூந்தமல்லி – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள வயல்வெளிகளில் மேய்ந்து விட்டு மாலையில் வீட்டிற்கு திரும்பி விடுவது வழக்கம். இந்நிலையில், சம்பவத்தன்று […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு 3 நாட்களில்….. குமரியில் ரூ.10 1/2 கோடிக்கு…. மது விற்பனை…!!

  தீபாவளியை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளில் விற்பனை அமோகமாக நடந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் 113 டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. இந்த மதுக்கடைகளில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகள், விழாக்காலங்கள் மற்றும் பண்டிகை கால விடுமுறைகள் போன்ற தினங்களில் வழக்கத்தைவிடவும் மதுபானங்களின் விற்பனை அதிகமாக நடைபெறுவது வழக்கம். அதாவது சாதாரண நாட்களில் 2½ கோடி ரூபாய்க்கு விற்பனையாகும் மதுபானம் விடுமுறை தினங்களில் 4 கோடி ரூபாய் வரையிலும், அதற்கு மேலும் விற்பனையாகும். இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு தீபாவளிக்கு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தேவாலய வாசலில் வெட்டப்பட்ட தலை…. சாலையில் நடந்த கொடூரம்…. போலீஸ் விசாரணை…!!

இளைஞர் கொலை செய்யப்பட்டு அவரது தலை தேவாலயத்தின் வாசலில் வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் இருக்கும் கீழவெளி வீதியில் செயின்ட் மேரிஸ் தேவாலயம் அமைந்துள்ளது. நேற்று மாலை அப்பகுதியில் இளைஞர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்த 6 பேர் அரிவாளால் சரமாரியாக இளைஞரை வெட்டிக்கொலைச் செய்ததோடு, அவரது தலையை துண்டித்து தனியாக எடுத்து அங்கிருந்த தேவாலயத்தின் வாசலில் வைத்தனர். பின்னர் சடலத்தை தேவாலயத்தின் சுற்றுச்சுவர் அருகே வீசிவிட்டு தப்பிச் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மனைவிக்கு கேன்சர் நோய்…. தாங்கிக்க முடியாத கணவர்… இறுதியில் இருவரும் எடுத்த முடிவு…!!

கணவன் மற்றும் மனைவி இருவரும் ஒரே நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் கிராப்பட்டியிலுள்ள சின்கோ காலனி 2வது தெருவில் வசிக்கும் தம்பதிகள் மோகன்தாஸ்(70)-சுமதி(64). மோகனதாஸ் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து ஓய்வு பெற்று வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் தீபாவளியன்று இத்தம்பதியினர் பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளனர். சந்தோசமாக தீபாவளியை கொண்டாடி விட்டு அவர்கள் வீட்டிற்குள் சென்று தூங்க சென்று விட்ட நிலையில் காலை வெகுநேரமாகியும் வீடு திறக்கப்படாததால் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கணவன் மனைவி சண்டை…. விஷம் குடித்து மனைவி சாவு…. விழுப்புரத்தில் சோகம்…!!

கணவன் மனைவி சண்டையில் விரக்தியடைந்த மனைவி விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கண்ணமங்கலம் பகுதியிலுள்ள குடுமி குடிசை கிராமத்தில் வசிக்கும் தம்பதிகள் ஏழுமலை(51)-சாந்தி(46). ஏழுமலை தனியார் பள்ளி ஒன்றில் பேருந்து ஓட்டுநராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஏழுமலைக்கும் அவரது மனைவிக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஏழுமலை சாந்தியை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் விரக்தியடைந்த சாந்தி வீட்டில் நெற்பயிருக்கு அடிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

தூங்கியவர்களின் முகத்தில் மயக்க ஸ்ப்ரே…. நகை & பணத்தை ஆட்டய போட்ட….. திருடர்களை தேடும் போலீசார்…!!

வீட்டில் தூங்கியவர்களின் முகத்தில் மயக்க ஸ்ப்ரே அடித்து நகை மற்றும் பணம் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை லால்சிங் குமரன் தெருவில் வசிப்பவர் திருநாவுக்கரசு (43). இவர் கண்ணமங்கலத்தில் உள்ள மருந்து கடையில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று  இரவு இவருடைய மனைவி மஞ்சுளா, குழந்தை மற்றும் உறவினர்கள் இரண்டு பேர் வீட்டில் தூங்கி கொண்டிருந்துள்ளனர். இவரின் குழந்தை தூங்கும் சமயத்தில் அழுது கொண்டிருந்ததால் கதவை மூட மறந்துள்ளனர். இதையடுத்து மர்ம […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பிரபல டிவி சீரியலின்…. துணை நடிகர் வெட்டிக்கொலை…. சென்னையில் அதிர்ச்சி…!!

பிரபல தொலைக்காட்சியின் துணை நடிகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில், பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வரும் “தேன்மொழி பி.ஏ ஊராட்சி மன்ற தலைவி” சீரியலில் தொகுப்பாளினி ஜாக்லின் நடிகையாக நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக சித்தார்த் நடித்துள்ளார். மேலும் துணை நடிகராக செல்வரத்தினம்(45) என்பவர் நடித்து வந்துள்ளார். இவர் எம்ஜிஆர் நகரில் உள்ள வள்ளல் பாரி தெருவில் வசித்து வந்துள்ளார். இலங்கை தமிழரான இவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை…. விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.  கன்னியாகுமரி மாவட்டம், மத்திய அரசால் தமிழ்நாட்டில் உள்ள இஸ்லாமியர், கிறிஸ்தவர், புத்த மதத்தினர், சீக்கியர், பார்சி மற்றும் ஜைன மதத்தவர்களை சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்களாக அறிவிக்கபட்டிருந்தனர். இந்நிலையில் இந்த சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு தனியார் கல்வி நிலையங்களில் 2020-2021 ம் கல்வி ஆண்டில் 1-10 வகுப்பு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கிணற்றில் விழுந்த 70 வயது மூதாட்டி…. கயிற்றை பிடித்துக் கொண்டதால்…. உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்…!!

மூதாட்டி ஒருவர் எதிர்பாராமல் கிணற்றில் தவறி விழுந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பெருந்துறையிலுள்ள சென்னிமலை பகுதியில் வசிப்பவர் கோபாலசாமி(80). இவரின் மனைவி சங்கரம்மாள்(70). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் மற்றும்  இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் திருமணம் ஆன நிலையில், வயதான இத்தம்பதியினர் தள்ளுவண்டியில் பஜ்ஜி மற்றும் போண்டா கடை வைத்து வியாபாரம் செய்து வாழ்க்கை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று காலை 6 மணியளவில் சங்கரம்மாள் அங்குள்ள ஊர் பொதுக் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

விளையாட செல்போன் கொடுக்கலனா…. இப்படியா பண்ணுவாங்க…. தங்கையின் செயல்…!!

தங்கை ஒருவர் தான் விளையாட அக்கா செல்போன் தராததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் ராமலட்சுமி – முருகன். இவர்களுக்கு கார்த்திகா(19) மற்றும் அபிநிக்கா(15) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் கார்த்திகா செவிலியர் படிப்பை முடித்துள்ளார். மற்றும் அபிநிக்கா பத்தாம் வகுப்பு படித்து முடித்துள்ளார். தற்போது கொரோனா முடக்கம் என்பதால் இவர்கள் இருவரும் நேரம் போவதற்காக தங்கள் அப்பாவின் செல்போனில் மாறி மாறி கேம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“தீபாவளி பட்டாசு சத்தம் அல்ல துப்பாக்கி சத்தம்” என் வாழ்க்கையே போச்சு…. மொத்த குடும்பத்தையும் குறி வைத்த பெண்…!!

பெண் ஒருவர் தன் கணவர் உள்பட குடும்பத்தில் உள்ள அனைவரையும் சுட்டு கொன்ற சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  சென்னை மாவட்ட சவுகார்பேட்டை பகுதியில் உள்ள விநாயகர் மேஸ்திரி தெருவில் வசிக்கும்  தம்பதிகள் தலித் (74) – புஷ்பா (70). இவர்களுக்கு ஷீத்தல் மற்றும் பிங்கி என்ற இரு பிள்ளைகள் உள்ளனர். இதில் ஷீத்தல் என்பவருக்கு ஜெயமாலா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்து, பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். இதனால் ஜெயமாலா தற்போது புனேவில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“மக்களே உஷார்” முகநூலில் வந்த செய்தியால்…. ரூ.2,15,000 இழந்த வாலிபர்…

நபர் ஒருவர் தங்கநகை மற்றும் பணத்திற்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரஞானம்பட்டியில் வசிப்பவர் சந்தியா. இவருக்கு ஒரு நாள் தன்னுடைய முகநூல் பக்கத்தில் இருந்து டோனி மைக்கேல் என்பவரிடம் இருந்து ஒரு தகவல் வந்துள்ளது. அதில் அவர் தான் லண்டனில் உள்ளதாகவும், பிறருக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்ய விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்துள்ளார். எனவே சந்தியா தன்னுடைய சகோதரன் ஜோதியின் செல்போன் எண்ணை டோனி மைக்கேலுக்கு கொடுத்துள்ளார். இதையடுத்து டோனி […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

5 ஆண்டு ஆசைக்காதல்…. காதலி சொன்ன செய்தியால்…. காதலன் செய்த செயல்…!!

வாலிபர் ஒருவர் தன் காதலி நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக கூறியதால் விஷம் அருந்தி தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் வசிப்பவர் சிவா என்பவரின் மகன் சந்தோஷ்(26). இவர் கோயம்புத்தூரில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இவரும் கேரளாவைச் சேர்ந்த உறவுக்கார பெண்ணாண சுவேதா என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இருவரும் போனில் பேசி தங்களது காதலை வளர்த்துக் கொண்டு வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென்று ஒருநாள் சுவேதா தன்னுடைய காதலன் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

தீபாவளி சிறப்பு…. சாலையோரம் வசிப்பவர்களுக்கு பிரியாணி…. காவல் கண்காணிப்பாளருக்கு குவியும் பாராட்டு….!!

காவல்துறை அதிகாரி சாலையோரம் வசித்து வரும் ஆதரவற்றவர்களுக்கு பிரியாணி வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத் துணை காவல் கண்காணிப்பாளராக இருப்பவர் மணிமாறன். இவர் தீபாவளி தினத்தை முன்னிட்டு நேற்று சாலையோரம் வசிக்கும் 150 முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரியாணி இலவசமாக வழங்கியுள்ளார். இதனை மகிழ்ச்சியுடன் வாங்கிய அவர்கள் பசியாற உண்டு மகிழ்ந்தனர். கல்லுக்குள்ளும் ஈரம் இருக்கும் என்பதை உணர்த்தும் விதமாக துணை காவல் கண்காணிப்பாளரின் செயல் அமைந்தது என பொதுமக்கள் பலரும் மணிமாறனை பாராட்டி […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“ஆண்களே உஷார்” முகநூலில் இளம்பெண்ணின் புகைப்படம்…. நேரில் 40 வயது பெண்…. வாலிபருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!

பெண் ஒருவர் தான் காதலிப்பதாக கூறி வாலிபர் ஒருவரை ஏமாற்றி பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் வசித்து வருபவர் மருது பாண்டியன். இவர் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் மூழ்கியிருப்பதை வழக்கமாக கொண்டவர். மேலும் இவர் தனது முகநூல் பக்கத்தில் பெண்களின் புகைப்படங்கள் ஏதாவது இருந்தால் உடனே அந்த நபருக்கு நட்பு அழைப்பு விடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் மருது பாண்டியனின் முகநூல் பக்கத்தில் அனுசுயா என்ற பெண் அறிமுகமானதால் அவருடன் பேசி வந்துள்ளார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஒரு நாள் விடுமுறை …. வெளியான முக்கிய அறிவிப்பு…!!

கோயம்பேடு மார்க்கெட் தொழிலாளர்களுக்கு இன்று விட இருந்த விடுமுறை ஞாயிற்றுக்கிழமை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வருடந்தோறும் தீபாவளியை பண்டிகையை மக்கள் கோலாகலமாக கொண்டாடுவர். இதனால் அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அரசு விடுமுறை அளித்து வருகிறது. இதேபோன்று மார்க்கெட்டில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும் தீபாவளியை முன்னிட்டு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வழக்கமாக விடப்படும் விடுமுறை விடப்படவில்லை. அதற்கு பதில் வரும் 15ஆம் தேதி ஞாயிறு […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

பக்தர்களுக்கு அனுமதியில்லை…. மாவட்ட நிர்வாகம் திடீர் அறிவிப்பு…!!

அண்ணாமலையார் கோவிலில் தீபத் திருவிழா அன்று கோவிலுக்குள் செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து கோவில்களுக்குள் பக்தர்கள் சென்று தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எனவே கோயில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் பக்தர்கள் 5000 பேர் மட்டுமே ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீப திருவிழா நவம்பர் 20 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஐயோ எதுவும் வேணாம் விட்டுருங்க…. கதறியழும் பாதிக்கப்பட்ட பெண்கள்…. காசி விசாரணையில் திடுக் தகவல்…!!

பெண்களை ஏமாற்றி சீரழித்த காசி வழக்கின் விசாரணையின் பின்னணியில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் 27 வயதான காசி. இவர் சமூக வலைதளம் மூலமாக பல பெண்களிடம் பழகி அவர்களுடைய வாழ்க்கையை சீரழித்த குற்றத்திற்காக தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் மீது ஆறு புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சிபிசிஐடி காவல்துறையினர் காசி மீது பலாத்கார வழக்கு பதிவு செய்து ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரணை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெளிநாட்டில் அண்ணன்…. வீட்டில் அண்ணியுடன் தகாத உறவு…. புது மனைவி எடுத்த திடீர் முடிவு…!!

பெண் ஒருவர் தனது கணவரின் தகாத உறவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதிகள் கௌசல்யா(19) – பாக்யராஜ்(32). இவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பாக்யராஜ் வெளியில் சென்றிருந்த போது கௌசல்யா தூக்கில் தொங்கி பிணமாக கிடந்துள்ளார். மேலும் அவரின் கை மற்றும் கால்களில் ரத்த காயங்கள் இருந்துள்ளன. வீட்டின் சுவர்களிலும் ரத்தக் கறைகள் படிந்துள்ளன. இதனால் கௌசல்யாவின் இறப்பில் பல்வேறு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

இப்படி பண்ணிட்டியே…. கல்வி பணிக்காக பெண்ணின் முடிவு…. குவியும் பாராட்டுகள்…!!

மாணவ மாணவிகளுக்கு கற்பிக்கும் கல்விப் பணிக்காக வாழ்க்கையை சேவையாக மாற்றிய ஆசிரியரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கரூரில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியின் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் கிறிஸ்டினா இலங்கை தமிழ் பிள்ளைகள் உட்பட பலரது கல்விக் கனவை நினைவாக்குவதற்கு தொடர்ந்து போராடி வருகின்றார். 1997ம் வருடம் இடைநிலை ஆசிரியராக ஆரம்பப் பள்ளி ஒன்றில் சேர்ந்த இவர் சில வருடங்கள் சம்பளம் வாங்கவில்லை. அச்சமயத்தில் பேருந்துக்கு கூட பணம் இல்லாமல் இருந்த இவருக்கு நடத்துனர்கள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர்…. மோதியதில் ஒருவர் பலி…. ஏரல் பகுதியில் சோகம்…!!

இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டதிலுள்ள ஏரல் கீழக்காட்டு ரோடு பகுதியில் வசிப்பவர் மாரியப்பன். இவருடைய மகன் முருகன் (வயது 20). இவர் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். முருகன் சம்பவத்தன்று இரவில் புன்னக்காயலில் வேலையை முடித்து விட்டு தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டு இருந்துள்ளார். அப்போது இருசக்கர வாகனம் ஏரல் அம்மாள் தோப்பு அருகே வந்து கொண்டிருந்துள்ளது. […]

Categories

Tech |