தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பூமரத்தூர் கிராமத்தில் பிரவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரவீன் குமார் குணநந்தினி(23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த குணநந்தினி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு பிரவீன்குமார் தனது மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். நேற்று மாலை உடல் […]
Tag: மாவட்ட செய்திகள்
நாமக்கல்லில் இன்று (நவம்பர் 04) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய்யிலிருந்து, அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 10 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 61 போலீஸ் ஏட்டுகள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்றுள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் சென்ற 1997 ஆம் வருடம் அக்டோபர் 31 ஆம் தேதி அன்று தமிழக போலீஸ் துறையில் இரண்டாம் நிலை காவலராக பணியில் சேர்ந்து 25 வருடங்கள் நிறைவு செய்தவர்களுக்கு தற்போது பதவி உயர்வு அளிக்கப்பட்டு இருக்கின்றது. இதன்படி நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவேஷ் குமார் உத்தரவின் பேரில் 61 போலீஸ் ஏட்டுகளுக்கு சிறப்பு போலீஸ் சப் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு […]
தறி தொழிலாளிடம் ரூபாய் 10 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டலாம்பட்டியை சேர்ந்த கோபிநாத் என்பவர் தறி தொழிலாளியாக இருக்கின்றார். இவரின் செல்போன் எண்ணிற்கு முகநூலில் வந்த நிறுவனம் ஒன்றின் ஆன்லைன் விளம்பரத்தை பார்த்தார். அதில் பணத்தை முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது. இதனால் இவர் முதலில் ரூபாய் 100 முதலீடு செய்து இருக்கின்றார். இதைத்தொடர்ந்து அவருக்கு 250 கிடைத்தது. இதன்பின் அவர் சிறிது சிறிதாக பணத்தை முதலீடு செய்ய […]
பட்டப்பகலில் வீட்டின் மேற்கூரையை பிரித்து நகையை திருடிய மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர் அருகே இருக்கும் எலவந்தியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் அப்பகுதியில் இருக்கும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தின் செயலாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அவரின் மனைவி கோயிலுக்கு சென்ற வீட்டார். மகன் வேலைக்கு சென்று விட்டார், இவரும் இவரது மகளும் கள்ளிப்பாளையத்தில் இருக்கும் வங்கிக்கு சென்று விட்டார்கள். ஒரு மணி நேரம் கழித்து […]
பெரியகுளம் அருகே மதுராபுரி பகுதிகளில் இரண்டு நாட்கள் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகின்றது. தேனி மாவட்டத்திலுள்ள பெரிய குளம் அருகே இருக்கும் மதுராபுரி துணை மின் நிலையத்தில் உயர் அழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் இன்று (நவம்பர் 4) மற்றும் நாளை ( நவம்பர் 5) நடைபெற இருக்கின்றது. இதன் காரணமாக மதுராபுரி, பெரியகுளம், தேனி மெயின் சாலை பகுதி, அன்னஞ்சி, கோம்பை, அனுக்கிரக நகர், மணிநகர் மற்றும் அதனைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் இன்றும் நாளையும் […]
கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ஊரை காலி செய்துவிட்டு ஆட்சியர் அலுவலகத்தில் குடியேற சென்றார்கள். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை கிராமத்தைச் சுற்றி 6 கல் குவாரிகள் இயங்கி வருகின்றது. இந்த குவாரிகளில் இருந்து எம்.சாண்ட், ஜல்லிக்கற்கள் கொட்டைகிரி கிராமத்திற்குள் செல்வதால் சாலைகள் பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகின்றது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்கள். இதனால் இக்கிராமத்தின் வழியாக லாரிகள் செல்லக்கூடாது என தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கு அதிகாரிகள் தலைமையில் […]
கலப்படம் செய்யப்பட்ட 450 கிலோ கருப்பட்டி கடலில் கரைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரபட்டினம் பகுதியில் சென்ற சில மாதங்களுக்கு முன்பாக மினி வேனில் சிலர் வேம்பார் பகுதியில் கருப்பட்டி வியாபாரம் செய்து வந்தார்கள். அப்பகுதியில் கருப்பட்டி பிரசித்தி பெற்றதால் வெளிநபர் கருப்பட்டி வியாபாரம் செய்து வருவதை பார்த்த வியாபாரிகள் கருப்பட்டியை பார்த்தபோது அது முற்றிலும் கலப்படம் என்பது தெரிய வந்தது. இதையடுத்து 450 கிலோ கலப்பட கருப்பட்டி பறிமுதல் செய்யப்பட்டு வேம்பார் கிழக்கு கடற்கரை சாலையில் […]
தூத்துக்குடியில் மழை பாதிப்பால் உப்பு விலை உயர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகின்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20,000 ஏக்கரில் உப்பளங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றது. இங்கு 30,000 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றார்கள். தூத்துக்குடியில் வருடத்திற்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகின்றது. உப்பு உற்பத்தி செய்வதற்கான உச்சகட்ட சீசன் காலங்களாக ஜூலை, ஆகஸ்ட் உள்ளிட்ட மாதங்களில் அவ்வபோதும் மழை பெய்தாலும், மேல்திசை காற்று சரிவர வீசாதாலும் உப்பு […]
அனுமதி இன்றி செயல்பட்டு வந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் அபி பில்டிங் மெட்டீரியல் சப்ளையர்ஸ் என்ற கட்டுமான உபயோகப் பொருட்களை வாடகைக்கு விடும் கடை அமைந்துள்ளது. இந்த கடைக்கு எல்லா நேரத்திலும் பொருட்களை ஏற்றுவதற்கு அதிக அளவில் லாரிகள் மற்றும் கனரக வாகனங்கள் வந்து கொண்டே இருக்கும். மேலும் உபகரணங்களை ஏற்றிச்செல்லும் போது வாகனத்தில் இருந்து ஒரு சில நேரத்தில் இரும்பு தட்டுகள் வழியில் வந்து விழும். […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜோலார்பேட்டை பகுதியில் ராஜா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருடைய மனைவி உமா ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு செல்போன் ஹெட்செட் வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து சென்னை நோக்கி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஹெட்செட் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது கோத்தான்டபட்டி- வாணியம்பாடி ரயில் நிலையங்களுக்கு இடையில் ஓடும் ரயிலில் இருந்து அவர் தவறி கீழே விழுந்துள்ளார். இந்த விபத்தில் […]
43 கிலோ எடை கொண்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பூச்சி அத்திபேடு கிராமத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையிலான காவல்துறையினர் பூச்சி அத்திப்பேடு பஜார் பகுதிகளில் உள்ள கடைகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சோதனையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 43 கிலோ எடை கொண்ட குட்கா மற்றும் […]
ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளின் முன் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டத்தில் துவரங்குறிச்சி பகுதியில் பூதநாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் அரசுக்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் ராமசாமி என்பவர் வீடு கட்டி தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இதனை அடுத்து ஆக்கிரமிப்பு இடத்தில் இருக்கும் ராமசாமியின் வீட்டை அகற்ற சென்னை ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் பேரில் பொன்னாம் பட்டி பேரூராட்சி […]
புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் வேலை பார்த்து வந்த தொழிலாளி தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் தோளூர்பட்டி கிராமத்தில் திருமுருகன் என்ற சென்ட்ரிங் தொழிலாளி வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று அரசலூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் வேலை செய்வதற்காக திருமுருகன் சென்றுள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக திருமுருகன் கட்டிடத்தின் மேல் பகுதியில் இருந்து தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த திருமுருகனை அக்கம் பக்கத்தில் […]
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து 5 முதல் 7 விமானங்கள் வரை தினமும் அந்தமானுக்கு இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் சுற்றுலா தளமான அந்தமானுக்கு ஏராளமான பயணிகள் சென்று வந்தனர். இதனால் தினமும் விமானங்களில் பயணிகள் கூட்டம் நிறைந்து காணப்படும். ஆனால் அந்தமானில் பகல் 3 மணியில் இருந்து தரைக்காற்று வீச தொடங்கிவிடும். இதனால் விமானங்கள் தரையில் இறங்கவும் புறப்படவும் முடியாது. எனவே அந்தமானில் பகலிலிருந்து பிற்பகல் வரை மட்டுமே விமான சேவைகள் செயல்படும். இரவு நேரங்களில் […]
மதுரை மாவட்டத்திலுள்ள கருப்பாயூரணி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப் பள்ளியில் புகார் பெட்டியில் கடந்த மாதம் கடிதம் ஒன்று கிடந்துள்ளது. அதில் மாணவிகளிடம் 2 ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் தவறாக நடந்து கொள்வதாக கூறப்பட்டிருந்தது. இது குறித்து அந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஊமச்சிகுளம் அணைத்து மகளிர் காவல்துறையினர் மற்றும் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கும் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி இதுகுறித்து நடத்திய விசாரணையில் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் 2 ஆசிரியைகள் ஆகிய 3 […]
மதுரை முடக்காத்தான் பகுதியில் கஜகிரியா என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, எனது கணவர் விவேகானந்தகுமார் சிம்மக்கல் பகுதியில் கடை ஒன்றை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் விவேகானந்தகுமார் மற்றும் வேலை பார்க்கும் சக தொழிலாளி ஒருவரும் கடையை மூடிவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு சோதனையில் நின்று கொண்டிருந்த காவல்துறையினர் லத்தியை காட்டி மோட்டார் சைக்கிளை நிறுத்தினர். அப்போது […]
பேருந்து-ஆட்டோ மோதியதில் பெண் உயிரிழந்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம் அருகே இருக்கும் பனையூர் கிராமத்தைச் சேர்ந்த மல்லிகா தனது மகள் மற்றும் மகனுடன் விளாத்திகுளம் மருத்துவமனைக்கு செல்வதற்காக பனையூரில் இருந்து ஆட்டோவில் சென்றார்கள். துளசிபட்டி விளக்கு பகுதியில் ஆட்டோ சென்றபோது, அவ்வழியாக வந்த தனியார் பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியது. இதில் மல்லிகா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரின் மகனும் மகளும் காயம் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இது […]
கீழப்பாவூரில் மழை வேண்டி கோலாட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரத்தில் இருக்கும் கீழப்பாவூரில் ஐப்பசி மாதம் தீபாவளி முடிந்து அம்மாவாசை அன்று குளத்தில் இருந்து களிமண் எடுத்து வரப்பட்டு பசு செய்து பசுவனுக்கு அலங்காரம் செய்வார்கள். இதன்பின் மழை வேண்டி விவசாயம் செழிப்பதற்காகவும் நாடு வளம் பெறுவதற்காகவும் அக்கிராமத்து பெண்கள் கோலாட்டம் பண்டிகையை இரண்டு நாட்கள் கொண்டாடுவார்கள். இந்த நிகழ்ச்சியானது ராம பஜனை மடத்தில் நடைபெற்றது. இதில் பெண்கள் கோலாட்டம், கும்மியடித்து சுவாமி நாமங்களை பாடி […]
வாடகை வீட்டில் தனியாக வசித்து வந்த தாயை போலீசார் மகனுடன் சேர்த்து வைத்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் ஈச்சம்பட்டி பகுதியில் கல்கி என்ற மூதாட்டி வசித்து வருகின்றார். இவருக்கு வயது 75 ஆகும். இவருடைய கணவர் 20 வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். அதன்பின்பு மூதாட்டியை அவருடைய மகன் கவனிக்காததால் அவர் ஆதரவின்றி ஒரு வாடகை வீட்டில் தங்கி வசித்து வருகின்றார். இதனை அடுத்து வயதான காலத்தில் மூதாட்டிக்கு ஏதேனும் நிகழ்ந்து விட்டால் என்ன செய்வது என்று நினைத்து […]
வழிந்து ஓடும் கழிவு நீரால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கும் வெளிமாவட்டங்களுக்கும் பேருந்துகள் இயக்கப் படுகின்றது. இங்கிருந்து ஏராளமான பயணிகள் பயணம் மேற்கொள்கின்றனர். இந்த நிலையில் இந்த பேருந்து நிலையத்தில் பெங்களூரு, திருப்பதி உள்ளிட்ட பேருந்துகள் நிற்கும் இடத்தில் கட்டண கழிப்பிடம் அமைந்துள்ளது. இங்கிருந்து நேற்று முன்தினம் இரவு கால்வாய் நிரம்பி பேருந்துகள் நிற்கும் இடத்தில் வழிந்து ஓடியது. இதனால் பயணிகள் பெரிதும் அவதி அடைந்துள்ளனர். அது […]
ரூபாய் 82 ஆயிரத்து மோசடி செய்த மர்ம நபருக்கு போலீஸ் வலைவீசி உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் திருவானைக்காவல் பகுதியில் வசந்தவேலு என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஆன்லைன் முதலீடு என்ற பெயரில் whatsapp மற்றும் telegram வாயிலாக பதிவு ஒன்று வந்துள்ளது. இதனை வசந்த வேலுவும் திறந்து பார்த்துள்ளார். இதனை அடுத்து மர்ம நபர் ஒருவர் அவரை தொடர்பு கொண்டு ரூபாய் 1600 முதலீடு செய்தால் 600 லாபம் கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதனை நம்பி வசந்த […]
பல கடைகளில் கைவரிசை காட்டிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் மண்ணச்சநல்லூர் பகுதியில் அன்பழகன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பால் ஏஜென்சி கடையை நடத்தி வருகின்றார். இவர் இவருடைய கடையின் பூட்டை உடைத்து ₹2900மும், பக்கத்து தெருவில் உள்ள மீரா மொய்தின் என்பவருடைய செருப்பு கடையில் ரூ.2000மும், சீனிவாசன் என்பவருடைய கடையில் 1700 ரூபாயும், பக்கத்து தெருவில் உள்ள சாமுவேல் ராஜ் என்பவருடைய பழக்கடையில் ரூபாய் 2500, கோகுல்ராஜ் என்பவர் நடத்தி வரும் […]
தஞ்சை மாவட்டத்தில் பள்ளியக்ரஹாரம் பகுதியில் ரேவதி என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் நேற்று முன்தினம் பகல் 12 மணிக்கு வெண்ணாற்றங்கரைக்கு அருகே ரேவதி நடந்து சென்று கொண்டிருந்தார். இதனையடுத்து அவர் திடீரென ஆற்றுக்குள் இறங்கி வெகுநேரமாக நின்று கொண்டிருந்தார். இதனை கண்டதும் வழியாக சென்றவர்கள் அவரை வெளியே வருமாறு கூறியுள்ளனர். ஆனால் அவர் வெளியே வர மறுத்துள்ளார். இது குறித்து அவருடைய குடும்பத்திற்கு […]
தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு பகுதியில் தியாகராஜர் சமாதி மற்றும் புகழ் பெற்ற கோவில்கள் அமைந்துள்ளது. இந்தப் பகுதிக்கு செல்வதற்கான சாலைகள் மிக குறுகலாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதேபோல் கண்டியூர் போன்ற பகுதிகளிலும் சாலை குறுகலாக இருப்பதினால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றது. இதனால் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை அடுத்து திருவையாறு கண்டியூர் பகுதிகளில் அரசூரில் இருந்து விளாங்குடி வரை சாலையை இணைக்கும் வகையில் […]
வடிகால் உடைந்து வீட்டிற்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தஞ்சை மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை நேற்று மாலை சுமார் 3:30 மணி நேரத்திற்கு மேல் கொட்டி தீர்த்தது. இதனால் கொடி மரத்து மூளை பகுதியில் இருக்கும் அகழியில் தண்ணீர் நிரம்பியுள்ளது. இங்கிருந்து வடியும் தண்ணீர் வடிகால் மூலம் வடவாற்றிற்கு சென்று சேரும். இந்த நிலையில் வடிகாலில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் வெளியேறி நூற்றுக்கும் […]
மாநில அளவிலான சிலம்பம் போட்டிக்கு அரசு பள்ளி மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள் தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் ஜூனியர் பிரிவில் அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் அப்துல் ரகுமான் முதலிடத்தை பிடித்துள்ளார். மேலும் சீனியர் பிரிவில் அதே பள்ளியில் படிக்கும் மாணவன் பாசில் முதல் இடத்தை பிடித்துள்ளார். இவர்கள் இருவரும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களையும் […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள நியூஹோப் பகுதியில் கணவனை இழந்த முத்தம்மா(81) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவருக்கு 3 மகன்களும், 4 மகள்களும் இருக்கின்றனர். அனைவரும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். நேற்று முத்தம்மா கூடலூர் ஆர்.டி.ஓ அலுவலகத்திற்கு சென்று வயதான காலத்தில் பிள்ளைகள் யாரும் கவனிக்காததால் பல்வேறு இன்னல்களை சந்திப்பதாக கண்ணீர் மல்க பொதுமக்களிடம் கூறி அழுதுள்ளார். அப்போது ஆர்.டி.ஓ இல்லாததால் கிராம நிர்வாக அலுவலர் சாம் சுந்தரி, கிராம உதவியாளர் சதீஷ் ஆகியோர் மூதாட்டியிடம் […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் நேற்று உணவு பொருள் வணிகர்களுக்கான உரிமம் பதிவு மற்றும் புதுப்பித்தல் முகாம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் சுரேஷ் நிருபர்களிடம் கூறியதாவது, வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களுக்கு கண்டிப்பாக ரசீது வழங்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும் உபயோகப்படுத்த கூடாது. இதனை அடுத்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், பைகள் மற்றும் குட்காவை வணிகர்கள் விற்பனைக்கு வைக்கவும், சாப்பிடும் உணவு பண்டங்களின் […]
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஓவேலி பேரூராட்சி பாரதிநகர் பகுதியில் தனியார் தேயிலை தோட்டம் அமைந்துள்ளது. இந்த தோட்டத்தில் சிறுத்தை இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். ஆனால் சிறுத்தை இறந்ததற்கான காரணம் தெரியவில்லை. இதனை அடுத்து முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் சிறுத்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் சிறுத்தையின் உடல் தீ வைத்து எரிக்கப்பட்டது. இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, இறந்து […]
சாப்ட்வேர் இன்ஜினியரிடம் 5 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பகுதியில் சாப்ட்வேர் இன்ஜினியரான கோசிக் ராம் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைனில் வேலை தேடி வந்துள்ளார். இந்நிலையில் கோசிக் ராமை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட சிலர் ஹைதராபாத்தை தலையிட தலைமை இடமாகக் கொண்டு தனியார் நிறுவனம் செயல்படுவதாக தெரிவித்துள்ளனர். அதில் 1 லட்ச ரூபாய் சம்பளத்தில் மேலாளர் பதவி தருவதாக […]
சென்னையில் உள்ள ரயினோ பிரைன் அமைப்பு சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான அபாகஸ் போட்டியில் 6 முதல் 14 வயதிற்குட்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட போட்டியில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் வசிக்கும் மாணவர் ஹரிஹரன் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். ஹரிஹரன் ஏற்கனவே மாநில அளவிலான போட்டியில் 2 முறையும், தேசிய அளவிலான போட்டியில் 2 முறையும் சாம்பியன் பட்டம் […]
வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை கடத்திச் சென்ற ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை சிட்லப்பாக்கம் திருமலை நகரில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெருங்களத்தூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 4 வயதில் வர்ஷா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் வர்ஷா வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருக்கும் போது ஆட்டோவில் வந்த மர்ம நபர் ஒருவர் சிறுமியை கடத்தி சென்றுள்ளார். இதனை பார்த்த அங்குள்ள குழந்தைகள் வர்ஷாவின் […]
மகன் தகராறு செய்தால் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி மோதிரபுரம் இளங்கோ வீதியில் எலக்ட்ரீசியனான ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிமேகலை என்ற மனைவி இருந்துள்ளார். இவர் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 18 வயதுடைய சஞ்சய்குமார் என்ற மகன் உள்ளார். இவர் கல்லூரியில் டிப்ளமோ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கல்லூரிக்கு சென்று வருவதற்கு புதிதாக மோட்டார் சைக்கிள் […]
கேட்பாரற்று கிடந்த பெட்டியால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலம் ரயில் நிலையத்தின் முன்புறம் ஒரு பெட்டி கிடந்தது. கடந்த மூன்று நாட்களாக கேட்பாரற்று பெட்டி கிடந்ததால் பொதுமக்களும், ஊழியர்களும் அதில் வெடிகுண்டு ஏதும் இருக்கலாம் என அச்சமடைந்தனர். இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நவீன கருவி மூலம் சோதனை செய்து பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் எந்த பொருட்களும் இல்லை. அதன் பிறகே அனைவரும் […]
விபத்துக்குள்ளான டிப்பர் லாரியை போலீசார் மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தத்திலிருந்து கட்டிடக்கழிவுகளை ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி சமுத்திராபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை ராமு என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் நத்தம் பேருந்து நிலையம் அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோரம் இருந்த கழிவு நீர் ஓடையில் மோதி கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக ராமு உட்பட யாருக்கும் காயம் ஏற்படவில்லை. […]
கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 61 வயதுடைய வழக்கறிஞர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, வழக்கறிஞரான நான் பெரிய வணிக நிறுவனங்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கி வருகிறேன். தொலைபேசி மூலம் என்னை தொடர்பு கொண்ட பெண் ஒருவர் தனியார் நிறுவனத்திற்கு சட்ட ஆலோசனை வழங்குமாறு கேட்டுள்ளார். இதனால் எனது வீட்டில் இருக்கும் அலுவலகத்திற்கு அந்த பெண்ணை வருமாறு கூறினேன். சம்பவம் நடைபெற்ற அன்று அந்த பெண்ணின் மகன் எனக்கூறி ஒருவர் செல்போன் மூலம் அழைத்து […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள டான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றுள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் கடகத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 24 வயதுக்கு உட்பட்ட மாணவிகள் ஜூனியர் பிரிவு போட்டியில் கலந்து கொண்டனர். இந்த மாணவிகள் போட்டியில் முதலிடம் பிடித்து சாதனை படைத்து மாநில அளவில் நடைபெறும் போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர். இந்த மாணவிகளுக்கு பரிசு மற்றும் […]
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு கன்னிவாடியில் இருந்து அரசு பேருந்து கடந்த 31- ஆம் தேதி வந்தது. இந்நிலையில் உரிய நடைமேடையில் பேருந்தை நிறுத்துவதற்காக ஓட்டுநர் வாகனத்தை திருப்பி உள்ளார். அப்போது கண்டக்டர் மாணவர்களை விலகி நிற்குமாறு கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபம் அடைந்த மாணவர்கள் ஓட்டுநர் மற்றும் கண்டக்டரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா […]
ஈரோடு மாவட்டத்தில் உள்ள திருவேங்கடம்பாளையம் புதூரில் ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தா(57) என்ற மனைவி உள்ளார். கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ராஜா இறந்து விட்டதால் சாந்தா பெருந்துறை சந்தைப்பேட்டை வணிக வளாகத்தில் தங்கி இருந்து கட்டிட வேலைக்கு சென்று வந்துள்ளார். இவருடைய மகன் கார்த்திக்கும் தாயுடன் இரவு நேரத்தில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாய் மகன் இருவரும் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகினர். அவ்வபோது இருவரும் சண்டை போடுவதும் உண்டு. நேற்று […]
மழை வேண்டி அம்மன் கோவில் திருவிழா பூஜை நடைபெற்றுள்ளது. தென்காசி மாவட்டத்தில் மறுகாலங்குளம் பகுதியில் வடகாசி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் வளாகத்தில் மழை வேண்டி திருவிளக்கு பூஜை நேற்று நடைபெற்றது. இந்த பூஜையில் காளியம்மன், வடக்காசி அம்மன், பிரித்தியங்கரா அம்மன், நவகிரகம், கணபதி ஆகிய ஸ்வாமிகளுக்கு சிறப்பு பூஜைகளும் அலங்காரங்களும் செய்யப்பட்டது. அதன் பின் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதே கோவிலில் நடந்த திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்து கொண்டு சுவாமியை […]
ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட ரத்தின அங்கி பெருமாளுக்கு சாத்தப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி பகுதியில் வெங்கடாஜலபதி பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள சீனிவாச பெருமாளுக்கு புதிய ரத்தின அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சியானது நேற்று நடைபெற்றுள்ளது. இதனை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று உள்ளது. அத்துடன் ரத்திண அங்கி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு பின்னர் பெருமாளுக்கு சாத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சீனிவாச பெருமாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை […]
நாமக்கல்லில் இன்று (நவம்பர் 03) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 15 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய்யிலிருந்து, அக்டோபர் 3 ஆம் தேதி முதல் 10 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் 10 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நீட் தேர்வு பயிற்சி மையத்தின் மாடியிலிருந்து மாணவி குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் ரங்கம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மகள் ஆனந்தி. அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு சென்ற ஆகஸ்ட் மாதம் முதல் திருப்பூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் தனியார் போட்டி தேர்வு பயிற்சி மையத்தில் நீட் பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்து வந்தார். இந்த நிலையில் சென்ற அக்டோபர் 31ஆம் தேதி மகளை அழைத்துச் செல்வதற்காக மணிகண்டன் […]
நீர்நிலைகளை பாலக்குபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஏழு குள பாசன குளங்களில் ஒன்றான உடுமலை பெரியகுளம் தற்போது பராமரிப்பின்றி புதர் மண்டி கிடக்கின்றது. இதனால் நீர்த்தேக்க பரப்பு குறைவதோடு பாசனத்திற்கு நீர் எடுப்பதிலும் சிக்கல் ஏற்படுகின்றது. குளத்தினுடைய கரைகள் உரிய பராமரிப்பு இல்லாமலும் புதர் மண்டி கிடைப்பதாலும் கரைகள் சேதம் அடையும் அபாயமும் இருக்கின்றது. இதன் காரணமாக நீர் வழித்தடங்கள் அடைக்கப்பட்டு பெருமளவு […]
திருப்பூர் மாவட்டத்தில் மடத்துக்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட 11 ஊராட்சிகளில் உள்ளாட்சிகள் தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் ஒன்றியத்திற்குட்பட்ட 11 ஊராட்சிகளில் உள்ளாட்சிகள் தினத்தையொட்டி கிராம சபை கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் முதல்வருக்கு நன்றி தெரிவித்தல், பள்ளி குழந்தைகள் இடைநிறுத்தம் தவிர்த்தல் உள்ளிட்ட 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கிராம சபா கூட்டத்தில் கூட்டுறவு சார்பதிவாளர், வங்கி செயலர், தோட்டக்கலை உதவி அலுவலர், கிராம […]
தூத்துக்குடியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ஆட்சியர் தெரிவித்திருக்கின்றார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வ.உ.சி துறைமுகம் திருச்செந்தூர் ரோடு ரவுண்டானாவில் தற்போது மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் தற்போது 32 ராட்சத கான்கிரீட் தூண்கள் பொருத்தும் பணி நடைபெறுகின்றது. இதனால் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகின்றது. இந்தப் பணி நேற்று முதல் தொடங்கி பதினொன்றாம் தேதி வரை நடைபெறுகின்றது. இதன் காரணமாகவே போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகின்றது. நேற்று முதல் வருகின்ற 6-ம் தேதி வரை பாலத்தின் வடக்கு புறத்தில் […]
காசோலை மோசடி செய்த வழக்கில் தொழிலாளிக்கு ஆறு மாத சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் தேவர் தெருவை சேர்ந்த சங்கர் என்பவர் தனியார் லாரி சர்வீஸ் வேலை பார்த்து வந்தார். இவர் சென்ற 2002 ஆம் வருடம் மார்ச் மாதம் 4-ம் தேதி கோவில்பட்டியில் இருக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் வாகனம் வாங்குவதற்காக 2 லட்சத்து 40 ஆயிரம் கடன் வாங்கி இருக்கின்றார். இந்த நிலையில் கடனை வட்டியுடன் செலுத்துவதற்காக […]
குமரி கேரளா எல்லை பகுதியான பாறசாலை மூறியன்கரை பகுதியில் ஜெயராமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷாரோன் ராஜ்(23) என்ற மகன் இருந்துள்ளார். இவர் பிஎஸ்சி ரேடியாலஜி படித்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி நண்பர் ஒருவருடன் காதலியான கிரீஷ்மா வீட்டிற்கு சென்று வந்த ராஜ் தனது நண்பரிடம் வயிறு வலிப்பதாக கூறியுள்ளார். அப்போது தனது காதலி குடிப்பதற்கு குளிர்பானமும், கஷாயமும் கொடுத்ததாக அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட […]
தேசிய நீச்சல் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு அதிகாரிகள் பரிசு வழங்கி பாராட்டினர். தமிழ்நாடு பாராலிம்பிக் சங்கம் சார்பாக சென்னை வேளச்சேரி நீச்சல் குளத்தில் சீனியர் தேசிய நீச்சல் போட்டிக்கான தேர்வு நடைபெற்றது. அந்த போட்டியில் மதுரையை சேர்ந்த நீச்சல் வீரர் மணிகண்டன் 100 மீட்டர் ப்ரிஸ்டையில், பேக் ஸ்டாக்கில் தங்கம், 50 மீட்டர் ப்ரிஸ்டையில் வெள்ளி ஆகிய மூன்று பதக்கங்களை வென்றார். பிரகாஷ் 50 மீட்டர் ப்ரஸ்டோக் தங்கம், 50 மீட்டர் பேக் ஸ்டோக் […]