மழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து நாதஸ்வர கலைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் இருக்கும் அவனியாபுரம் பகுதியை சேர்ந்தவர் மூக்கையா. நாதஸ்வர கலைஞரான இவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு இவர் வீடு இருந்த பகுதியில் கனமழை பெய்து வந்தது. இதனால் பழுதடைந்து இருந்த அவர் வீட்டின் சுவர் தூங்கி கொண்டிருந்த மூக்கையா மீது விழுந்தது. ஆனால் இதுகுறித்து அக்கம்பக்கம் இருந்தவர்களுக்கு தெரியவரவில்லை. இந்நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் […]
Tag: மாவட்ட செய்திகள்
சமையல் செய்யும் போது சேலையில் தீ பிடித்து பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திண்டுக்கல் மாவட்டத்தின் அருகே குள்ளனம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜீவா. 45 வயதான இவர் கணவருடன் விவாகரத்து ஆனதால் தனது தந்தை சின்னச்சாமியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஜீவா சமையல் செய்வதற்காக அடுப்பை பற்ற வைத்தபோது எதிர்பாராமல் அவருடைய சேலையில் நெருப்பு பற்றியது. பின்னர் அவரது உடல் முழுவதும் தீ பரவி வலியால் அலறினார். இதனை கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து […]
வாலிபர் ஒருவரோடு உல்லாசமாக இருந்த பாலியல் தொழிலாளி அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருக்கும் மண்டிபட்டியில் வசிக்கும் ஆறுமுகத்தின் மகன் பழனிச்சாமி(30). இவர் அங்குள்ள ஒரு சுவீட் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பழனிச்சாமி தியாகதுருகம் பக்கத்திலுள்ள பிரிதிவிமங்கலம் ஏரியின் அருகில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்தததால், விரைந்து வந்த காவல்துறையினர் பழனிசாமியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு […]
தாயை கொலை செய்துவிட்டு மகன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் இசக்கியம்மாள். 48 வயதான இவர் பீடி சுற்றும் தொழிலாளி ஆவார். இவருக்கு மாரிச்செல்வம் மற்றும் மணிரத்னம் என்ற இருமகன்கள் மகன்கள் உள்ளனர். இசக்கியம்மாளின் மூத்த மகன் செல்வம் வெளியூரில் வேலை பார்த்து வருகிறார். இளைய மகனான மணிரத்தினம் உள்ளூரில் கூலி வேலை பார்த்து வந்தார். ஒரு வருடத்திற்கு முன்பு விபத்தில் சிக்கிய மணிரத்தினம் மனநலம் பாதிக்கப்பட்டார். அதன் பிறகு […]
கணவன் மற்றும் மகன் இறந்ததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மனைவியும் விஷம் அருந்தி இறந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் அருகே கலங்கல் பகுதியில் வசித்து வருபவர்கள் ஜெயபால்-லீலாவதி (வயது 45) தம்பதியினர். இத்தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஜெயபால் இறந்துவிட்டார். இதனால் லீலாவதி தனது 2 மகன்களுடன் வசித்து வந்த நிலையில் இவரது மூத்த மகன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். எனவே கணவன் […]
நீட் தேர்வு எழுதும் மாணவிகள் தாலியை கழற்ற வேண்டும் என்ற நிபந்தனையை எதிர்த்த மனுவுக்கு தேசிய தேர்வு மையம் பதிலளிக்குமாறு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு அறிவிக்கப்பட்டது. இதில் தேர்வெழுதும் மாணவிகள் ஆபரணங்கள் அணியக்கூடாது மற்றும் கைக்கடிகாரம் அணியக்கூடாது போன்ற கடுமையான நிபந்தனைகளை விதித்து வருகிறது. இதன் காரணமாக மாணவிகள் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக சென்னை வழக்கறிஞர் அரவிந்த் ராஜ் ஐகோர்ட்டில் […]
சானிடைசர் வைத்து விளையாடிய போது சிறுவர்கள் மேல் தீப்பிடித்து எரிந்து காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் அருகே சிறுகாவேரிப்பாக்கத்திலுள்ள சாந்தி நகரில் வசிக்கும் சிறுவர்கள் பிரகாஷ் மற்றும் முகுந்தன். இவர்கள் வீட்டின் அருகே சானிடைசரை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சானிடைசரை மரக்கட்டைகளின் மீது ஊற்றி தீ வைத்ததில் திடீரென அச்சிறுவர்கள் மீது தீப்பற்றி எரிந்தது. இதனால் அவர்கள் பதட்டத்தில் அருகிலிருந்த தண்ணீரை எடுத்து தங்கள் மேல் ஊற்றி விட்டனர். இச்சம்பவத்தில் பிரகாஷிற்கு மார்பு பகுதியிலும், […]
தாலி கட்டும் நேரத்தில் கொஞ்சம் பொறுங்கள் என் காதலன் வருவான் என்று கூறி மணப்பெண் திருமணத்தை தடுத்து நிறுத்திய சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் ஆனந்த் மற்றும் பிரியதர்ஷினி ஆகிய இருவருக்கும் திருமணம் நடத்த ஏற்பாடு செய்ருந்தனர். திருமணத்தின்போது மணமேடையில் மணமக்கள் இருந்தனர். அப்போது அவர்களின் குடும்ப முறைப்படி திருமணத்திற்கு சம்மதமா என மாப்பிள்ளை கேட்க, மணப்பெண் அதற்கு சம்மதம் இல்லை என்று கூறியதோடு தன் காதலன் வருவான் நான் அவனுடன் செல்வேன் என்று […]
சமீபத்தில் மணமேடையில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண் அதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் மட்டக்கண்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும் துனேரியை சேர்ந்த பிரியதர்ஷினி என்பவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கப்பட்டது. இதனையடுத்து திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு மணமேடையில் மணமக்கள் அமர்ந்திருந்தனர். அவர்களது முறைப்படி திருமண மேடையில் வைத்து மூன்று முறை மணப்பெண் திருமணத்திற்கு சம்மதம் கூற வேண்டும். அதன் பிறகு தான் தாலி கட்ட முடியும். ஆனால் மூன்றாவது முறை பிரியதர்ஷனிடம் கேட்டபோது அவர் […]
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் வடவள்ளி பகுதியை சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இருவர் அதே பகுதியை சேர்ந்த சிறுமிகளை தங்கள் வீட்டிற்கு விளையாட வரும்படி அழைத்துள்ளனர். இதனால் சிறுமிகள் இருவரும் அங்கு சென்றபோது இரண்டு மாணவர்களும் அவர்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து பெற்றோரிடம் சிறுமிகள் கூறிய நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை […]
மகள் இறந்த செய்தி கேட்டதும் தாய் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சண்முகம். இவர் தங்கள் வீட்டில் பூச்சி மருந்து அடித்து விட்டு குடும்பத்துடன் தூங்கியுள்ளார். மருந்தின் விஷத்தன்மை பரவி சண்முகம் மற்றும் அவரது மகள் அனுராதா உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து மருத்துவமனைக்கு இருவரும் அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் சண்முகத்தின் மகளான அனுராதா சுவாசப் பிரச்சனை காரணமாக செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். சண்முகம் […]
பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி இளம்பெண் தர்ணா போராட்டத்தை மேற்கொண்டார். வேலூர் மாவட்டத்தில் இருக்கும் விருதம்பட்டு பகுதியை சேர்ந்த புனிதா என்பவர் காந்தி நகரில் இருக்கும் ஷாப்பிங் சென்டரில் பணிபுரிந்து வந்தார். அந்த கடையின் உரிமையாளர் கருணாகரன் என்பவர் புனிதாவுக்கு தெரியாமல் மயக்க மருந்து கொடுத்து அவரை ஆபாசமாக வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அதனை காட்டி புனிதாவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து புனிதா விருதம்பட்டு காவல் நிலையத்தில் கருணாகரனை கைது செய்ய […]
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மலைவாழ் மக்கள் பகுதியை ஆய்வு செய்ய சென்ற போது கையில் காலணியுடன் ஆற்றை கடந்த வீடியோ வைரலாகியுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடியில் இருக்கும் மேலப்பரவு கிராமதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மலைவாழ் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நெல், வாழை, கரும்பு, தென்னை போன்ற பல்வேறு விவசாய பணிகளை மக்கள் செய்து வருகின்றனர். இக்கிராமத்தின் குறுக்கே குரங்கணி – கொட்டகுடி ஆறு பாய்வதால் மழை காலங்களில் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு […]
திருமணம் முடிந்து இரண்டு மாதத்தில் கணவனுடன் ஏற்பட்ட தகராறில் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கொடைக்கானலை சேர்ந்தவர்கள் ஷோபனா-அஜித்குமார் தம்பதியினர். கடந்த ஆகஸ்ட் மாதம் 30ஆம் தேதி இவர்களுக்கு திருமணம் முடிந்த நிலையில் இருவரும் அப்சர்வேட்டரி செல்வபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே நேற்று முன்தினம் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து போன ஷோபனா விஷம் குடித்துவிட்டு மயங்கியுள்ளார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கொடைக்கானலில் […]
காதலன் திருமணத்திற்கு மறுத்ததால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் சின்னவரிகம் பகுதியை சேர்ந்தவர் ஜாய்ஸ் பிரியா. இவர் சென்னையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் தொழில்நுட்ப வல்லுனராக பணியாற்றினார். இவருக்கு பெரியவரிகம் பகுதியை சேர்ந்த பரத் என்பவருடன் காதல் ஏற்பட்டு நான்கு வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் ஜாய்ஸ் பிரியாவை திருமணம் செய்ய முடியாது என்று பரத் கூறியதாக தெரிய வந்துள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஜாய்ஸ் […]
புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ் சத்தியாகிரக போராட்டம் நடத்தியது. மத்திய அரசு அமல்படுத்திய புதிய வேளாண் சட்டத்திற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிலும் குறிப்பாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பல வகையில் போராட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். அதே போன்று தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் வாணியம்பாடி அருகே மத்திய அரசு அமல்படுத்திய வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியின் சார்பாக சத்தியாக்கிரகம் செய்துள்ளனர். […]
13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை காவல்துறையினர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர் திருச்சி மாவட்டத்தில் இருக்கும் நடராஜபுரம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். 13 வயது சிறுமியான இவர் தனது சாதி சான்றிதழை பள்ளியில் சமர்ப்பிப்பதற்காக எடுத்துக்கொண்டு வயல் வழியாக நடந்து சென்றார். அப்போது அவ்வழியாக வந்த பாலமுருகன் என்பவர் மாணவியை வலுக்கட்டாயமாக சோளக்காட்டுக்குள் இழுத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் பாலமுருகன் […]
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்தவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பலரும் தங்கள் ஸ்மார்ட்போனின் அதிக நேரத்தை செலவிடுகின்றனர். குறிப்பாக பணம் செலுத்தி விளையாடும் விளையாட்டுகளில் ஏராளமானோர் ஈடுபட தொடங்கினர். அவற்றில் ஒன்றான ஆன்லைன் ரம்மி இதுவரை பலரது உயிரை காவு வாங்கியுள்ளது. தொடர்ந்து ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழப்பவர்கள் மனது வெறுத்து தற்கொலை செய்யும் முடிவை எடுத்து விடுகின்றனர். அவ்வகையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் சீரநாயக்கன்பாளையத்தை சேர்ந்த மதன்குமார் என்பவரும் ஆன்லைன் ரம்மி […]
மிளகாய் பொடியை தூவி விட்டு வாலிபரிடம் செல்போன் பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழனியில் உள்ள கோட்டைமேட்டு தெருவில் வசிப்பவர் மணிகண்டன் (வயது 18). இவர் சம்பவத்தன்று இரவு பட்டத்து விநாயகர் கோவில் பக்கமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த மூன்று நபர்கள் மணிகண்டனை வழி மறித்து அவர் மேல் மிளகாய்பொடியை தூவியுள்ளனர். அதன்பின்னர் அவர் வைத்திருந்த 300 ரூபாய் பணம் மற்றும் செல்போனை பறித்துவிட்டு தப்பி ஓடினர். இதனால் மணிகண்டன் திருடன், திருடன் என்று […]
வங்கி அதிகாரி ஒருவர் தனது உயிரை சாமிக்கு காணிக்கையாக கொடுக்க தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாகர்கோவிலில் உள்ள பந்தன்காட்டில் வசிக்கும் செல்ல சுவாமியின் மகன் நவீன்(32). இவர் படித்து முடித்தவுடன் வேலை கிடைக்காததால் விரக்தியுடன் இருந்துள்ளார். அச்சமயம் நவீன் தனக்கு ஒரு வேலை கிடைத்தால் தன் உயிரை காணிக்கையாக கொடுப்பதாக கடவுளிடம் வேண்டி இருந்தார். இந்நிலையில் மும்பையில் இருக்கும் பாங்க் ஆப் இந்தியாவில் நவீனுக்கு உதவி மேலாளராக வேலை கிடைத்து பணிபுரிந்து வந்துள்ளார். […]
தவறி விழுந்த செல்போனை பிடிக்க முயற்சி செய்த இளம்பெண் மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் அயனாவரத்தில் உள்ள நம்மாழ்வார்பேட்டையில் வசிக்கும் தாட்சாயினி என்பவரின் மகள் யாமினி(25). இவர் அண்ணா சாலையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு யாமினி, அவரது தாயார் மற்றும் உறவினர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு இரண்டாவது தளத்தில் உள்ள தங்களது வீட்டின் பால்கனியில் ஒன்றாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளனர். ஆனால் யாமினி மட்டும் […]
சேர்ந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூறி கள்ளக்காதலிக்கு விஷம் கொடுத்து கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் வேல்முருகன்-லதா தம்பதியினர். வேல்முருகனின் இரண்டாவது மனைவியான லதா ஏழுமலை என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில் லதாவிற்கு ஏழுமலைக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதனால் அவ்வப்போது தனிமையில் சந்தித்து பழகி வந்தனர். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு திடீரென […]
தாடியை கிண்டல் செய்த நண்பர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பெருமாள் என்பவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருடன் லட்சுமணன் என்பவரும் பணிபுரிந்து வந்தார். வேலை முடிந்து இருவரும் மணிக்கூண்டு அருகே சாலையோரமாக தங்கியிருந்தனர். இந்நிலையில் நண்பர்கள் இருவரும் நேற்று முன்தினம் மது அருந்திக் கொண்டிருந்த போது கோவிலுக்கு வேண்டி கொண்டு லட்சுமணன் வளத்தை தாடியை பெருமாள் கிண்டல் செய்துள்ளார். இதனால் இருவரிடையே தகராறு உருவாகியுள்ளது. இதில் கோபம் […]
17 வயதே ஆன சிறுமிக்கு இரண்டு முறை திருமணம் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு அவரின் பெற்றோர் திண்டுக்கல்லில் உறவினர் ஒருவரான கூலித் தொழிலாளிக்கு போன வருடம் திருமணம் செய்து வைத்துள்ளனர். தனது கணவரோடு குடும்பம் நடத்தி வந்த நிலையில் சிறுமிக்கு 25 வயது வாலிபரான சிவா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த காதல் விவகாரம் சிறுமியின் கணவருக்கு தெரிந்ததால் அவரை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த சிறுமி கணவருடன் […]
தலை தீபாவளிக்கு கணவருக்கு விடுமுறை கிடைக்காததால் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் பொறையாறு அருகே செம்பனார்கோவில் பகுதியில் வசிக்கும் தம்பதியினர் பாபு-சங்கீதா (வயது 25). இத்தம்பதியினருக்கு ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்கு பிறகு பாபு வேலைக்காக வெளிநாடு சென்று அங்கு ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து தற்போது தீபாவளி நெருங்கி வரும் நிலையில், சில நாட்களுக்கு முன்பு சங்கீதா, தன் கணவரிடம் தொலைபேசி […]
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் அவரது பிறந்தநாளையொட்டி தேவர் ஜெயந்தி குரு பூஜை கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து மதுரை கோரிப்பாளையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் மற்ற அமைச்சர்களும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மற்றும் […]
வீட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த வெடிகள் வெடித்ததில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் 15 தினங்களுக்கு முன்பு பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியேறினார். ராஜாவும் அவரது குடும்பத்தினரும் தீபாவளி பலகார சீட்டு நடத்திவந்தனர். அதனால் சீட்டு போட்டிருக்கும் அனைவருக்கும் கொடுக்க பட்டாசு பெட்டிகளை வாங்கி வந்து நேற்று மாலை வீட்டில் அடுக்கி வைத்திருந்தார். இந்நிலையில் இரவு எதிர்பாராதவிதமாக பட்டாசுகள் வெடித்து உள்ளன. இதனால் […]
உணவகத்தில் சப்பாத்தி வருவதற்கு தாமதம் ஆனதால் ஏற்பட்ட தகராறில் வாடிக்கையாளரின் தலை உடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கடலூர் மாவட்டத்தில் இருக்கும் விருதாச்சலத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ்-கவிதா தம்பதியினர். இவர்கள் உணவகம் ஒன்றிற்கு சென்று சப்பாத்தி ஆர்டர் செய்துள்ளனர். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்கள் ஆர்டர் செய்த சப்பாத்தி வராததால். கோபம் கொண்ட சுரேஷ் தான் இருந்த மேஜையை உடைத்துள்ளார். இதனால் கடையின் ஊழியருக்கும் சுரேஷுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஊழியர்கள் சுரேஷை கடுமையாகத் தாக்கினர். […]
17 வயது சிறுவன் ஆன்லைன் வகுப்பு புரியாததால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருக்கும் திருவிக நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ஹேமந்குமார்-சண்முகப்பிரியா தம்பதியினர். இவர்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாதவன் என்ற மகன் இருந்தான். கொரோனா பரவலால் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் நிலையில், ஆன்லைன் மூலமாக பாடம் எடுக்கப்படுகின்றது. ஆனால் மாதவனுக்கு ஆன்லைன் வகுப்புகளில் நடத்தும் பாடங்கள் புரியாததால் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளார். இந்நிலையில் நேற்று தனது அறையில் இருந்த மாதவன் […]
போளூர் அருகே குட்டையில் மூழ்கி அக்காள்- தங்கை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூரை அடுத்த பெரியகரம் கிராமத்தில் வசித்து வருபவர் ஸ்ரீ பக்சிங் இவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர். இங்கு கூர்காவாக பணிபுரிகின்றார். இவருக்கு 7 பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளன. இவர்களில் சாந்தி பெரியகரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பும் , பகவதி காந்தி நகரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் மூன்றாம் வகுப்பும் […]
வீட்டின் கதவை உடைத்து பீரோவில் இருந்த நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரதிலுள்ள சூரப்பள்ளி ஊராட்சிகுட்பட்ட நொரச்சி வளவு பகுதியில் வசிப்பவர் வர்ணன். மெக்கானிக் வேலை பார்க்கும் இவர் சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டார். மற்றும் இவருடைய மனைவி வீட்டின் கதவை பூட்டி விட்டு, உறவினரின் வீட்டிற்கு சென்று விட்டார். அதன்பின் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த அவர்கள், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சிச்சிக்குள்ளாயினர். இதனையடுத்து வீட்டிற்குள் […]
கருணையுள்ளம் கொண்ட காவல் ஆய்வாளரை இடமாற்றம் செய்யக்கூடாது என்று பொதுமக்கள் போஸ்டர் ஒட்டி வேண்டுகோள் வைத்துள்ளனர், மதுரை திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிபவர் மதனகலா இவர் புறநானூற்று பரவிய காலத்தில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு உணவின்றி தவித்த மலையடிவார குரங்குகளுக்கு தனது சொந்த செலவில் உணவு வழங்கினார். இந்நிலையில் தேனி மாவட்டத்திலிருக்கும் போடிக்கு ஆய்வாளரை இடமாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் பொறுப்பேற்ற மதனகலா சட்ட ஒழுங்கை மனிதாபிமானத்துடன் […]
சிறை கைதி எஸ்டிபிஐ உடன் வைரமுத்து இருப்பதுபோன்று வரைந்த ஓவியத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் கவிஞர் வைரமுத்து பகிர்ந்துள்ளார். மதுரை மாவட்டத்தில் இருக்கும் மத்திய சிறையில் கைதியாக இருப்பவர் வைரமுத்துவிற்கு பரிசு ஒன்றை வழங்கினார். அது அவர் கைப்பட வரைந்த ஓவியம் ஆகும். தற்போது சமூக வலைதளத்தில் அந்த ஓவியம் வைரலாக பரவி வருகிறது. கோயம்புத்தூரை சேர்ந்த பாதமுத்து என்பவர் ஆயுள் தண்டனை பெற்ற சிறைக் கைதியாக சிறையில் இருந்து கொண்டு ஏராளமான ஓவியங்களை வரைந்து வருகிறார். […]
கருணையுள்ளம் கொண்ட காவல் ஆய்வாளரை இடமாற்றம் செய்யக்கூடாது என்று பொதுமக்கள் போஸ்டர் ஒட்டி வேண்டுகோள் வைத்துள்ளனர் மதுரை திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிபவர் மதனகலா. இவர் கொரோனா தொற்று பரவிய காலத்தில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு உணவின்றி தவித்த குரங்குகளுக்கு தனது சொந்த செலவில் உணவு வழங்கினார். இந்நிலையில் தேனி மாவட்டத்திலிருக்கும் போடிக்கு ஆய்வாளரை இடமாற்றம் செய்ய இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் பொதுமக்கள் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் பொறுப்பேற்ற மதனகலா சட்ட […]
மாட்டு வண்டி மூலம் தண்ணீர் விநியோகம் செய்து வரும் முதியவர் தன் உடலில் பலம் உள்ள வரையிலும் உழைத்துக் கொண்டே இருப்பேன் என கூறினார். தென்காசி மாவட்டதில் உள்ள ஆலங்குளத்தில் வீடுகள் மற்றும் கடைகளில் குடிநீர் இணைப்பு, ஆழ்துளை கிணறு வசதி உள்ளிட்ட அதிக தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் இளைஞனாக இருந்த சிவன் ஆறுமுகம் ( தற்போது அவருடைய வயது(67)) என்பவருக்கு மாற்று யோசனை தோன்றியது. தண்ணீர் கிடைக்காமல் கஷ்டப்படும் பொதுமக்களுக்கு அவர்கள் வீடுகளுக்கு கொண்டு போய் […]
கால் சென்டரில் வேலை பார்த்த மனைவியை கணவர் வெட்டிக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூரிலுள்ள மாதனூர் பகுதியில் குமார் என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து அதில் ஐந்து பேரை நியமித்து கால் சென்டர் வணிகம் செய்து வருகிறார். இதில் வளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுரேகா கடந்த 3 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். இவருக்கும், விருப்பாச்சி புரத்தை சேர்ந்த தினேஷ் என்பவருக்கும் திருமணம் நடந்து இருவரும் சண்டை காரணமாக கடந்த சில வருடங்களாக பிரிந்து […]
ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த நபர் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தற்போதைய காலத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கையில் ஸ்மார்ட் போன்களை வைத்துக்கொண்டு கேம் விளையாடி நேரத்தை போக்கி வருகின்றனர். அவர்கள் ஏனோ சாதாரணமான கேம் விளையாடுவதில்லை. ஆன்லைனில் பணம் செலுத்தி விளையாடும் கேம் அதிகமாக விளையாடப்படுகிறது. இதனால் ஏற்படும் ஆபத்து பற்றி அறிந்திருந்தாலும் இதிலிருந்து பலரும் விலக மறுக்கின்றனர். இந்நிலையில் சென்னை பெரம்பூர் அருகே விழுப்புரத்தை சேர்ந்த குமரேசன் […]
வாகனம் ஓட்டுபவர்களின் கவனக்குறைவால் தான் 15 சதவீத விபத்துகள் ஏற்படுவதாக போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தெரிவித்துள்ளார். கோவை மாவட்டதில் கடந்த 2 நாட்களில் அன்னூர் – மேட்டுப்பாளையம் சாலையில் விபத்து ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்துள்ளனர். வாகனங்களின் வேகத்தை குறைக்க விபத்து நடந்த இடத்தில் சாலை தடுப்பான்கள் அமைத்து வாகன சோதனை நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதன் மூலமாக இனி அங்கு விபத்து நடைபெறுவது தடுக்க வாய்ப்பு இருக்கிறது. கடந்த ஆண்டு ஜனவரி- அக்டோபர் 25-ந் தேதி […]
கோழி கூட்டில் இருந்த குஞ்சுகளை சாப்பிட்டு நாகப்பாம்பு உரிமையாளருக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது தேனி மாவட்டத்திலிருக்கும் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவர் தனது வீட்டில் 30க்கும் அதிகமான நாட்டுக்கோழிகளை வளர்த்து வந்தார். சமீப நாட்களாக இவரது வீட்டிலிருந்து கோழிக்குஞ்சுகள் மாயமாகியுள்ளன. ஒரு மாதத்திற்குள் 15 கோழி குஞ்சுகள் காணாமல் போனதால் செல்வம் குழப்பத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் சண்டை சேவல்கள் கோழிக்குஞ்சுகள் என அனைத்தையும் கூண்டில் அடைத்து விட்டு உறங்கச் சென்றுவிட்டார். இதனையடுத்து நேற்று […]
நடிகர் வடிவேலுவின் பாணியில் கிணற்றை காணவில்லை என்று தென்காசியில் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தென்காசி மாவட்டம் கொடிக்குறிச்சி பஞ்சாயத்துகுட்பட்ட சிவராமபேட்டை பிள்ளையார் கோவில் தெருவில் பஞ்சாயத்துக்கு சொந்தமான கிணற்றின் மேல் நாகம்மன் கோவில் கட்டப்பட்டுள்ளதால் அதை அகற்றுமாறு அந்த ஊரைச் சேர்ந்த சுடலைமணி என்பவர் கடையநல்லூர் யூனியன் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கியதையடுத்து அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற சென்ற போது பொதுமக்கள் திரண்டதால் அதிகாரிகள், கிணற்றின் மீதுள்ள கோவிலை அகற்றாமல் திரும்பி சென்று விட்டனர். இதுதொடர்பாக […]
குழந்தை இல்லாத வெறுப்பில் பெண் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . உளுந்தூர்பேட்டையில் உள்ள ப.கிள்ளனூர் கிராமத்தில் வசிப்பவர்கள் வெங்கடேசன்(வயது 31)-கஸ்தூரி(29) தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்பதால் கஸ்தூரி மிகுந்த மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ […]
கணவருடன் தகராறு ஏற்பட்டதால் தாய் தனது 2 மாத கைக்குழந்தைக்கு விஷத்தை கொடுத்து தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை மாவட்டத்தில் உள்ள நெகமம் அருகே வடுகபாளையத்தில் வசிக்கும் மணிகண்டன் என்பவர் கூலித்தொழிலாளி. இவருக்கு சிந்து (வயது 24) என்ற மனைவி மற்றும் 2 மாதத்தில் ஜஸ்வந்த் என்ற ஆண் குழந்தை உள்ளது. வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்குமாறு சிந்து தனது கணவரிடம் கேட்டால் உடனே பொருட்களை வாங்கி கொடுக்காமல் மணிகண்டன் […]
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்தூரிலுள்ள மதனப்பள்ளி அடுத்த சீக்கலபைலு பகுதியை சேர்ந்தவர் அமர் (வயது 22). ஆட்டோ டிரைவரான இவர் வலசப்பள்ளி கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சிரவந்தி (21) என்பவரை காதலித்து வந்தார். இருவரும் காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதல் விவகாரத்தைப் பற்றி அறிந்த இரு குடும்பத்தினரும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே இருவீட்டாரும் தங்களை பிரித்து விடுவார்கள் எனக்கருதினர். இதனால் […]
துணை காவல் கண்காணிப்பாளரின் தொடர் மிரட்டலால் திமுக நிர்வாகியான மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் அருகே பறக்கை பகுதியைச் சேர்ந்த மருத்துவர் டாக்டர் சிவராம பெருமாள், திமுக மருத்துவர் அணியின் மாவட்ட துணை அமைப்பாளராக இருந்தார். இவர் அப்பகுதியில் மருத்துவமனை வைத்திருந்தார். இவருடைய மனைவி சீதா, அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். சிவபெருமாள் கடந்த ஜூலை 12 ஆம் தேதி, கொரோனா தொற்று தொடர்பான பணிக்குச் சென்று வந்த மனைவியை […]
பண்டிகை காலம் என்பதால் மதுரையில் மீண்டும் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக அதிகாரிகள் அச்சத்தில் உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை தற்போது மதுரையில் முழுவதுமாக குறையாமல் தினசரி 100-க்கும் குறைவான நபர்கள் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மதுரையில் இதுவரை 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் 17 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டவர்கள் நோய் தொற்று குணமாகி தங்கள் வீடுகளுக்கு சென்றிருக்கிறார்கள். கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களில் இருந்ததை விட தற்போது […]
தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் காலி தண்ணீர் பாட்டில்களை கொண்டு சுகாதார வளாகம் கட்டும் பணியை மேற்கொண்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தில் தடுப்பு பணியில் ஈடுபட்டு இருந்த தூத்துக்குடி மாநகராட்சி அலுவலர்களுக்கு தண்ணீர் பாட்டில் இலவசமாக வழங்கப்பட்டது. அவர்கள் பயன்படுத்திய காலி பாட்டில்கள் அனைத்தும் மாநகராட்சி மூலம் சேகரித்து வைக்கப்பட்டு பெருமாள்புரம் திடக்கழிவு மேலாண்மை மையத்துக்கு கொண்டு வரப்பட்டன. இந்த காலி தண்ணீர் பாட்டில்களை கொண்டு சுகாதார வளாகம் மற்றும் குளியல் அறை கட்டும் பணியை சோதனை முயற்சியாக […]
பப்ஜி கேமுக்கு அடிமையான சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் சத்தியமங்கலம் பகுதியை பேருந்த பள்ளிச் சிறுவன் அருண். ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் அருண் ஊரடங்கு நாட்களில் அதிகமாக பப்ஜி கேம் விளையாடி அடிமையாக இணைந்துள்ளார். இதனிடையே சமீபத்தில் பப்ஜி கேம் மத்திய அரசால் தடைசெய்யப்பட்டது. இதனால் கேம் விளையாட முடியாத அருண் மன உளைச்சலுக்கு ஆளானார். இதனால் அருணை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மனநல சிகிச்சை […]
பெரியகுளம் டாஸ்மாக் கடை ஊழியர்கள் ஆயுத பூஜையை முன்னிட்டு மதுபாட்டில்களுக்கு மாலை அணிவித்து வழிபட்டதால் குடிமகன்கள் வியப்படைந்தனர். தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜையை முன்னிட்டு வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் வழிபாடு நடைபெற்றது. அங்கு தாங்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கு தொழிலாளர்கள் பூஜை செய்து வழிபாடு நடத்தினர். இந்நிலையில் பெரியகுளம் டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடையில் வாழை மரம் மற்றும் மாவிலை கட்டி , மாலை அணிவித்து வழிபட்டனர். அதோடு மதுபாட்டில்களுக்கும் மாலை அணிவித்து தீபாராதனை காட்டினர் […]
மன உளைச்சல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ராமநாதபுரம் மாவட்டம் வாணிவிலக்கு ரோடு பகுதியை சேர்ந்த தங்கப்பன் (வயது48) என்பவர் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இவருக்கு திருமணமாகவில்லை. சில நாட்களாக அவர் மன உளைச்சல் காரணமாக வாழ்க்கையில் வெறுப்படைந்து காணப்பட்டார். எனவே தங்கப்பன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததார். இந்நிலையில் அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் கேணிக்கரை காவல்துறையினர் வழக்குப்பதிவு […]
செஞ்சி அருகே குட்டையில் குளிக்க சென்ற சிறுமிகளில் ஒருவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். செஞ்சி சத்தியமங்கலம் கிராமத்தில் வசிப்பவர் அய்யனார். இவருக்கு வனிதா(வயது 12), வினிதா(12), அபிநயா(14) என்ற 3 மகள்கள் உள்ளனர். இதில் இருவர் இரட்டை சகோதரிகள் ஆவர். சம்பவத்தன்று இவர்கள் 3 பேரும் தங்கள் மாட்டிற்கு தண்ணீர் வைத்துவிட்டு, அருகில் உள்ள குட்டையில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது குட்டையில் ஆழம் அதிகமாக இருந்ததால் திடீரென 3 பேரும் அடுத்தடுத்து தண்ணீரில் மூழ்கி விட்டனர். […]