விஜயமங்கலத்தில் சொத்து பிரிப்பதில் தகராறு ஏற்பட்டதால் சித்தப்பாவை மகனே அடித்து கொன்றது பெரும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அடுத்த காட்டுத்தோட்டத்தை சேர்ந்த மூர்த்திக்கு (வயது 62) சுப்பிரமணி, மாரப்பன் என இரண்டு அண்ணன்களும் கருப்பசாமி என்ற தம்பியும் உள்ளனர். இவர்களுக்கு சொந்தமாக கொங்கன்பாளையதில் 6 ஏக்கர் நிலம் உள்ளது. இதை கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாகப்பிரிவினை செய்து கிரையம் செய்துள்ளனர். ஆனால் மாரப்பனின் மகன் தினேஷ் மட்டும் சொத்து பிரிப்பதில் தங்களை சித்தப்பா மூர்த்தி […]
Tag: மாவட்ட செய்திகள்
பில்லி சூனியம் எடுப்பதாக கூறி 2 லட்சம் ரூபாயும் இரண்டு கொழியும் வாங்கி மோசடி செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது தென்காசியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் சொந்தமாக லோடு வண்டி ஓட்டி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜ்குமார் சாமியார் ஒருவரை சாலையில் வைத்து சந்தித்துள்ளார். அவரை பார்த்ததும் தனது குடும்பத்தையும் குடும்பத்தில் அடிக்கடி அனைவரும் உடல் நலக்கோளாறு பாதிக்கப்படுவதையும் கூறி அதற்கு ஒரு தீர்வு கேட்டுள்ளார். இதனை கேட்ட சாமியார் ராஜ்குமாரிடம் உங்கள் குடும்பத்திற்கு […]
தூத்துக்குடி மாவட்டத்தில் முடிதிருத்தும் நிலையம் நடத்திவருபவரிடம் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் உரையாடினார். மாதந்தோறும் கடைசி ஞாயிறு அன்று ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் அகில இந்திய வானொலி மூலம் பிரதமர் மோடி அவர்கள் நாட்டு மக்களிடையே காலை 11 மணி அளவில் கலந்துரையாடுகிறார். அவ்வகையில் இன்று நடைபெற்ற ‘மன் கி பாத் ‘நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, தமிழகத்தின் தூத்துக்குடியில் வசித்து வரும் முடி திருத்தும் தொழிலாளி […]
மகனைக் காப்பாற்ற நீச்சல் தெரியாமல் கிணற்றில் குறித்த தாயும் சேர்ந்து மகனுடன் இறந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மதுரை மாவட்டத்தில் இருக்கும் கல்மேடு பகுதியை சேர்ந்த பள்ளி மாணவரான யோகேஷ் என்பவர் நேற்று மதியம் தனது வீட்டின் அருகே இருந்த கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த யோகேஷ் திடீரென நீரில் மூழ்கி உள்ளார். இதனால் தன்னை காப்பாற்ற வேண்டும் என்று யோகேஷ் சத்தமிட மகனின் அழுகுரல் கேட்டு தாய் செல்வி சென்று பார்த்தபோது யோகேஷ் தண்ணீரில் […]
பெரம்பலூரில் டைனோசர் முட்டைகள் கிடைத்ததாக பரவிய வதந்தி தொடர்ந்து நெட்டிசன்கள் பல மீம்களை தயாரித்து இணையத்தை கலக்கி வருகின்றனர். பெரம்பலூர் அருகே இருக்கும் குன்னம் கிராமம் அடுத்து உள்ள வெங்கட்டான் குளத்தில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் சில தினங்களுக்கு முன்பு வண்டல்மண் எடுத்தனர். அப்போது சில கடல்வாழ் உயிரினங்களின் தொல்லியல் படிவங்கள் அவர்களது கைக்கு கிடைக்கப்பெற்றது. அப்போது உருண்டை வடிவத்தில் பல தொல்லியல் பொருட்கள் கிடைத்ததால் அதனை பார்த்த மக்கள் டைனோசர் முட்டை கிடைத்ததாக வதந்திகளை பரப்ப […]
கிராம நிர்வாக அதிகாரி தகாத வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்தியதாக கூறி இளம்பெண் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் துவரிமான் அருகே இருக்கும் இந்திராகாலனியை சேர்ந்த அன்னலட்சுமி என்பவர் வீட்டின் அருகே கீழ சின்னம்பட்டி கிராம நிர்வாக அலுவலராக வேலை செய்யும் திலீபன் என்பவர் தங்கியிருந்தார். கடந்த 22ஆம் தேதி அன்னலட்சுமின் வீட்டிற்குள் திலீபனின் வீட்டில் உள்ள பசு சென்றுள்ளது. இதுகுறித்து அன்னலட்சுமி திலீபன்டம் கூறியுள்ளார். இதனையடுத்து திலீபன் மற்றும் அவரது குடும்பத்தினர் அன்னலட்சுமியின் […]
பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டு இறந்தவர்களுக்கு ஜி .கே வாசன் தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து தமிழக மாநில காங்கிரஸ் தலைவர் ஜி .கே வாசன் கூறுகையில் , “மதுரை மாவட்டம் செங்குளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தின் போது அங்குள்ள தொழிலாளர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர் அதில் 7 பெண்கள் தீயில் உடல் கருகி இறந்துள்ளனர் அதோடு 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற செய்தி […]
வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் மாங்கல்ய தோஷம் இருப்பதாக கூறி தாலிச் செயினை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் இருக்கும் கீரைத்துறை பகுதியை சேர்ந்தவர்கள் முருகன்-மாரியம்மாள் தம்பதியினர். முருகன் வேலைக்கு சென்றிருந்த போது மாரியம்மாள் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அச்சமயம் கையில் குடுகுடுப்பையுடன் காவி வேஷ்டி அணிந்து கொண்டு மூன்று பேர் கொண்ட கும்பல் அப்பகுதிக்கு வந்துள்ளது. அதில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் மாரியம்மாளிடம் உங்களுக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாகவும் உடனடியாக பரிகாரம் […]
பள்ளி மாணவியை கோவைக்கு கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர் . தர்மபுரி மாவட்டம் காரியமங்கலம் பகுதியில் மைனர் பெண்ணான 16 வயது மாணவி அங்குள்ள பள்ளியில் படித்து கொண்டிருந்தார் . வீட்டிலிருந்து வெளியே சென்ற மாணவி வெகுநேரம் ஆகியும் வரவில்லை என்பதால் மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர் . பின்னர் அவரை கும்பார அள்ளியை சேர்ந்த பாலமுருகன் (22) என்பவர் கடத்தியது தெரியவந்ததை அடுத்து அருகிலுள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்தனர் . […]
குடும்பத் தகராறில் இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள அம்மச்சியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ்குமார்-செண்பகவல்லி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு சுரேனா(10) சுரேஸ்ரீ(7) என்ற 2 மகள்களும் சுதர்சன்(3) என்ற மகனும் இருந்தனர். கொத்தனார் வேலை செய்யும் சுரேஷ்குமார் அடிக்கடி மனைவி செண்பகவள்ளியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் மிகுந்த வேதனையில் இருந்த செண்பகவல்லி தற்கொலை செய்ய முடிவெடுத்தார். இந்நிலையில் நேற்று கணவன் மற்றும் மகன் வீட்டில் இல்லாத […]
கணவனுடன் வீடியோ காலில் தகராறு ஏற்பட்டபோது மனைவி கணவன் கண்ணெதிரே பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் செல்வராஜ் ஆக்னஸ் நந்தா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு 4 வயதில் மகளும் இரண்டரை வயதில் மகனும் இருக்கின்றனர். செல்வராஜ் ஓமனில் இருக்கும் என்ணெய் நிறுவனமொன்றில் பொறியாளராக பணிபுரிந்து வருகின்றார். தனது கணவர் வெளிநாட்டில் இருப்பதால் பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் இருந்து வந்தார் ஆக்னஸ் நந்தா. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக கணவன் மனைவி […]
மாமியாருக்கு கொரோனா உறுதியானதால் பயத்தில் மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரத்தில் பெண்ணொருவருக்கு கொரோனாதொற்றுக்கான அறிகுறி இருந்ததால் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் அவரது மருமகள் தனது மாமியாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் தனக்கும் தனது கணவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருக்கலாம் என்று பயந்து உள்ளார். இதனால் இவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளார். தனக்கும் கொரோனா இருக்கும் […]
10 நாட்களுக்கு ஒரு முறை 10 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாகக் கூறி 60 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க மனு கொடுக்கப்பட்டுள்ளது ஈரோடு மாவட்டத்தில் அதிக வட்டி கொடுப்பதாக கூறி 60 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி அலுவலகத்திற்கு சென்று மனு கொடுத்தனர். அந்தியூர் அடுத்திருக்கும் தவுட்டுபாளையத்தை சேர்ந்த பாரதி என்பவர் பவானி நகர கூட்டுறவு வங்கியில் […]
தெருவில் செல்லும் சிறுவர்களை பிடித்து வலுக்கட்டாயமாக மது ஊற்றிக் கொடுத்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக சிறுவர் சிறுமிகள் மீது நடக்கும் பாலியல் குற்றங்கள் மற்றும் துன்புறுத்தல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அதேபோன்று பிறந்தநாள் கொண்டாட்டம் என்று கூறி இளைஞர்கள் ஒன்றுகூடி மது அருந்துவது தகராறு செய்வது போன்ற சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகின்றது . இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் விவேகானந்தர் தெருவின் ஓரமாக இளைஞர்கள் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தனர். அப்போது அந்த தெரு வழியாக […]
மகன் மற்றும் மகள் கைவிட்டதால் 75 வயது முதியவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் அல்பர்ட் ராஜ். இவருக்கு யாபேஸ் என்கிற மகனும் மூன்று மகள்களும் இருக்கின்றனர். எட்டு வருடங்களுக்கு முன்பு அல்பர்ட் ராஜின் மகன் யாபேஸ் தந்தைக்கு தெரியாமல் அவரது வீட்டை விற்று பணத்துடன் வெளியூர் சென்று விட்டார். இதனால் போக இடமில்லாமல் அல்பர்ட் ராஜ் தனது கடைசி மகள் கெர்சி வீட்டில் இருந்து வந்தார். மகள் […]
மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு வர மறுத்த பெண்ணிடம் அண்ணன் என்று பாசத்துடன் கூறி அழைத்து சென்ற காவல் ஆய்வாளருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. பழனி காவல்துறையினருக்கு பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் பலர் மீது தாக்குதல் நடத்துவதாக புகார் வந்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்தப் பெண்ணை பிடித்தனர். அவரிடம் விசாரித்தபோது அவர் மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. அதோடு அவரது உறவினர்கள் வெளியூரிலிருந்து வந்து பழனியில் அந்த பெண்ணை விட்டு சென்றதும் […]
விஜய்யை நாளைய தமிழக முதல்வர் என்று குறிப்பிட்டு போஸ்டர் அடித்து ஒட்டியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. பிரபல இயக்குனரும் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் சமீபத்தில் பேட்டியளித்த போது மக்கள் அழைத்தால் விஜய் அரசியலுக்கு வருவார் என்றும் தேவைப்பட்டால் விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திருச்சி மாவட்டத்தின் தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக விஜய்யை அடையாளப்படுத்தி நாளைய முதல்வர் என்று போஸ்டர்கள் சுவர் எங்கும் ஒட்டப்பட்டுள்ளன. அதோடு […]
குடிபோதையில் தகராறு செய்த கணவனை பெட்ரோல் ஊற்றிக் எரித்துவிட்டு மனைவி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சுதாகர் லட்சுமி தம்பதியினர். லட்சுமி தனது முதல் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் சுதாகரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு லட்சுமிக்கும் சுதாகருக்குமிடையே தொடர்ந்து குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சுதாகர் வீட்டில் இருந்து நேற்று முன்தினம் கரும்புகை வந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் […]
20 வயது இளம் பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ்-இசக்கியம்மாள் தம்பதியினர். இசக்கியம்மாள் கர்ப்பமாக இருக்கும் நிலையில் பிரசவத்திற்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்தபோது அவரது வயிற்றில் 4 குழந்தைகள் இருப்பது உறுதியானது. ஆனால் பெண்ணின் உடல் நிலை மோசமாக இருந்ததால் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து அறுவை […]
பில்லி சூனியம் எடுப்பதாகக் கூறி ஓட்டுனரிடம் 2 லட்சம் ரூபாய் மோசடி செய்த போலி சாமியாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மினிவன் ஓட்டுனராக இருந்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு இவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது சாமியார் ஒருவரை சந்தித்துள்ளார். அப்போது தனது குடும்பத்தில் அனைவரும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் அதற்கான காரணம் என்ன என்றும் அந்த சாமியாரிடம் கேட்டுள்ளார். அதற்கு சாமியார் சிலர் உனக்கு பில்லி […]
மக்கள் தேவை அறிந்து செயலியை உருவாக்கிய பள்ளி மாணவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் எட்டிமடையை சேர்ந்த கோபாலன் என்பவரது மகன் திரிஷாந்து. தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வரும் இவர் சிறு வயது முதலே கணினி, ஸ்மார்ட்போன் போன்றவற்றில் அதிக ஆர்வம் கொண்டவர். ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது தெரிந்த ஒருவர் மூலமாக ஐடி நிறுவனத்தில் பயிற்சி பணியாளராக தனது வேலையை தொடங்கியுள்ளார். அதனை தொடர்ந்து தானாக ஆண்ட்ராய்டு செயலி […]
காதல் திருமணம் செய்த மூன்று மாதத்தில் பெண் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பொள்ளாச்சியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் தனியார் கல்லூரியில் படித்து வந்தார் ஸ்டெல்லா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இருவரும் வீட்டின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை தொடர்ந்து சென்னையில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்த நிலையில் ஸ்டெல்லா மிகுந்த தலைவலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சையும் எடுத்துக்கொண்டார். இந்நிலையில் நேற்று தனது […]
முன்விரோதத்தில் காய்கறி வியாபாரியை நண்பர்களே உயிருடன் எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் இருக்கும் உமச்சிகுளம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். காய்கறி வியாபாரம் செய்து வரும் இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அரசு மதுபான கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது நண்பர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கைகலப்பு ஏற்பட்டு மணிகண்டனின் நண்பர்கள் அவர் மீது தாங்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டனர். உடல் முழுவதும் […]
முதல் கணவருக்கு பிறந்த ஏழு வயது சிறுவனை தாய் தனது இரண்டாவது கணவருடன் சேர்ந்து அடித்து கொடுமைப் படுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் தூத்தூர் பகுதியை சேர்ந்தவர் சசிகலா. இவருக்கும் இவரது முதல் கணவருக்கும் மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் இரண்டு குழந்தைகள் சசிகலாவின் தங்கை பராமரிப்பில் வளர்ந்து வருகின்றனர். மூன்றாவது குழந்தையான 7 வயது சிறுவன் அனிஸ்க்கன் சசிகலாவிடம் வளர்ந்து வந்தார். இதனிடையே கடந்த 10 மாதங்களுக்கு முன்பு சசிகலா தக்கலையை சேர்ந்த […]
மனைவி தற்கொலை செய்து கொண்ட அதே இடத்தில் கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னையில் இருக்கும் நெற்குன்றத்தில் சேர்ந்தவர்கள் தியாகராஜன்-சத்யா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில், கடந்த 11ஆம் தேதி நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்த சத்யா, வீட்டின் சமையல் அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். குடும்பத்தினர் நேற்று முன்தினம் அவரது இறுதி சடங்குகளை நடத்தினர். இந்நிலையில் மனைவி இறந்த சோகத்தில் இருந்த தியாகராஜன் மிகுந்த மன […]
புதிதாக திறக்கப்பட்ட பிரியாணி கடையில் பத்து பைசா கொடுத்து பிரியாணி வாங்க கூட்டம் அலைமோதியது. தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் பொன்னகரம் அடுத்து உள்ள ஒகேனக்கல் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் கடந்த மூன்று வருடங்களாக பெங்களூரு மற்றும் சென்னை பகுதிகளில் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். தற்போது புதிதாக உணவகம் தொடங்கிய இவர் வாடிக்கையாளர்களை கவர முதல் நாளில் அதிரடி ஆஃபர் ஒன்று அறிவித்தார். சற்று வித்தியாசமாக பாலாஜி பத்து பைசா கொண்டு வருபவர்களுக்கு சிக்கன் பிரியாணி என்ற […]
வாட்ஸ்அப்பில் ஆண் நண்பர்களுடன் பேசிய மனைவியை கணவன் கொலை செய்த கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் லக்ஷ்மி நாராயண நகரைச் சேர்ந்தவர்கள் மணிகண்டன் சிந்துஜா தம்பதியினர். தம்பதியினருக்கு மூன்று வயதில் யாஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது. மணிகண்டன் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் சிந்துஜா வீட்டிலிருந்து கணவன் மற்றும் குழந்தையை கவனித்து வந்தார். இதனிடையே அவர் தனது ஆண் நண்பர்களுடன் வாட்ஸ்அப்பில் பேசி வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி […]
பாஸ்ட்புட்க்கு அடிமையான சிறுவன் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் சண்முகம்-கீதா தம்பதியினர் இவர்களது மகன் ஹரிகுமார் பாஸ்ட்புட்க்கு அடிமையானவர். எப்போதும் பாஸ்ட்புட்களை மட்டுமே விரும்பி சாப்பிட்டு வந்த இவர் வேறு உணவுகள் வாங்கி கொடுத்தால் சாப்பிட மறுத்துள்ளார். பெற்றோர்கள் பலமுறை பாஸ்ட்புட் உடல் நலத்திற்கு கேடு என்று கூறியும் அதை அவர் பொருட்படுத்தவில்லை. பாஸ்ட்புட் வாங்கி கொடுக்காவிட்டால் சாப்பிடாமல் பட்டினி கிடந்து அடம்பிடித்துள்ளார். இதனால் பெற்றோர் […]
விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டு 5 நோயாளிகள் மறுவாழ்வு பெற்றுள்ளனர் திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் பரவாக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன்-தமிழரசி தம்பதியினர். இவர்களது மகன் குபேரன் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி தனது தாத்தாவுடன் மளிகை பொருட்கள் வாங்குவதற்காக பைக்கில் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக விபத்து ஏற்பட்டு படுகாயமடைந்த குபேரன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 5ஆம் தேதி சிகிச்சை பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்தார். இதனை தொடர்ந்து குபேரனின் […]
உடல் நலத்துடன் இருந்தவரை ஃப்ரீசர் பாக்ஸ் உள்ளே வைத்து ஆன்மா பிரிவதாக உயிருக்குப் போராட வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் கந்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணிய குமார். இவர் தனது தம்பி சரவணன் மற்றும் தங்கை மகள்கள் ஜெயஸ்ரீ, கீதா ஆகியோருடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் பாலசுப்பிரமணிய குமாரின் தம்பி சரவணன் ஃப்ரீசர் பாக்ஸ் நிறுவனத்திற்கு போன் செய்து தனது அண்ணன் பாலசுப்பிரமணிய குமார் இறந்து விட்டதாகவும் அவரது சடலத்தை வைக்க ஃப்ரீசர் […]
திருமணம் செய்வதாக ஆசை கூறி நகை மோசடி செய்த வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் மஞ்சூரில் வசித்து வருபவர் கார்த்திக் ராஜ். திருவண்ணாமலையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வரும் இவர் தனக்கு மணமகள் வேண்டும் என்று இணையதளம் மூலம் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்தார். இதனைப் பார்த்த விதவைப் பெண்கள், திருமணத்திற்கு தயாராக இருக்கும் பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என பலரும் கார்த்திக்கின் […]
மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டில் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் நெடுஞ்சாலைத்துறையில் காண்ட்ராக்டர் வேலை பார்த்து வருகிறார். செல்வராஜ் தனது மனைவி மற்றும் 3 மகள்களுடன் மொட்டை மாடியில் படுத்து தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தார். இதனை அறிந்த திருடர்கள் அவரது வீட்டிற்குள் நுழைந்து திருடி உள்ளனர். இது தெரியாத செல்வராஜ் மற்றும் குடும்பத்தினர் மொட்டை மாடியில் தூங்கிக் கொண்டிருந்த போது மழைக்கான அறிகுறியுடன் […]
கடைக்கு பொருட்கள் வாங்க சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உரிமையாளர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் அறந்தாங்கி அருகே இருக்கும் மணமேல்குடியில் மளிகை கடை வைத்திருப்பவர் முகமது ராவுத்தர். இவரது கடைக்கு 9 வயது சிறுமி அடிக்கடி பொருள் வாங்க செல்வது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று சிறுமி பொருள் வாங்கச் சென்றபோது முகமது ராவுத்தர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அழுதுகொண்டே கடையில் இருந்து வீட்டிற்கு திரும்பிய சிறுமி தாயிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். […]
இரண்டு தினங்களாக வீட்டில் திருட முடியாததால் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு சக்கர வாகனத்தை கொளுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது வேலூர் மாவட்டத்தில் உள்ள செங்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் பிரேம் நவாஸ். இவர் தனது நண்பரின் இரண்டு சக்கர வாகனத்தை தனது வீட்டு வாசலில் நிறுத்திவிட்டு இரவு தூங்கச் சென்றார். இந்நிலையில் திடீரென அக்கம்பக்கத்தினர் அலறல் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்தபோது நவாஸ் நண்பரது வாகனம் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து […]
திருமணம் செய்ய மறுத்த காதலியை காதலன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னை மாவட்டம் சோலையூர் சேர்ந்தவர் கோவிந்தன். இவர் தனது மனைவி செல்வி, மகன் மற்றும் மகளுடன் தனது சொந்த ஊரு தொட்டியம் கிராமத்திற்கு சென்றார். கோவிந்தனின் பத்தாம் வகுப்பு படிக்கும் மகள் சென்னையில் இருந்தபோது நாமக்கல்லை சேர்ந்த சதீஸ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தொட்டியம் கிராமத்திற்கு தான் காதலித்த பெண்ணை தேடிச் சென்றுள்ளார் சதீஷ். அங்கு இருவர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. […]
சூப்பர் மார்க்கெட்டில் திருடியதோடு மன்னிப்பு கடிதம் எழுதி வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மதுரை மாவட்டத்தை அடுத்து இருக்கும் உசிலம்பட்டியை சேர்ந்தவர் ராம்பிரகாஷ் இவர் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகின்றார். சமீபத்தில் இவரது சூப்பர் மார்க்கெட்டில் திருடர் ஒருவர் 65,000 ரூபாய் மதிப்பிலான பொருட்களையும் 5,000 ரூபாய் பணத்தையும் திருடிச் சென்றார். அதுமட்டுமன்றி திருடியதற்கு மன்னிப்பு கேட்டு கடையின் உரிமையாளருக்கு கடிதம் ஒன்றும் எழுதியிருந்தார். அதில் “மன்னித்து விடுங்கள். நான் மிகுந்த பசியில் இருக்கிறேன். நீங்கள் ஒருநாள் […]
டீ வாங்குபவர்களுக்கு இலவசமாக முக கவசம் கொடுக்கும் டீக்கடை உரிமையாளரின் செயல் பாராட்டுகளை பெற்று வருகிறது சென்னையில் இருக்கும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை அருகே தமிழ்நாடு தேயிலைத் தோட்ட வாரியத்தின் அங்கீகாரத்தை பெற்ற டீக்கடை ஒன்று அமைந்துள்ளது. அந்த கடையில் 10 ரூபாய் கொடுத்து டீ வாங்கினால் அதற்கு இலவசமாக முக கவசம் கொடுக்கப்படுகிறது. இதுகுறித்து அந்த கடையின் முகவர் ப்ரீத்தி கூறுகையில், “அரசு பொது மருத்துவமனை அருகே இருக்கும் டீக்கடையிலும் வால்டாக்ஸ் சாலையில் அமைந்திருக்கும் சுரங்கப்பாதை […]
டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்து தற்கொலை முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஜி.பி.முத்து டிக் டாக் செயலியில் காணொளி வெளியிட்டதன் மூலம் மிகவும் பிரபலமானவர். சமீபத்தில் காணொளி ஒன்றை வெளியிட்ட ஜி.பி.முத்து குடும்ப பிரச்சனையினால் சமூக வலைதளங்களில் தன்னால் வீடியோ பதிவேற்றம் செய்ய முடியவில்லை என்று அதில் தனது வருத்தத்தை தெரிவித்து இருந்தார். இந்நிலையில் ஜி.பி.முத்து திடீரென தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வரும் அவரிடம் காவல்துறையினர் […]
உயிருடன் இருக்கும் பெண்ணிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ரோஷினி என்ற பெண்ணிற்கும் வீரராகவன் என்பவருக்கும் கடந்த 2018 ஆம் வருடம் திருமணம் நடைபெற்றது. வீரராகவன் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறினால் கடந்த மார்ச் மாதம் தற்கொலை செய்துகொண்டார். இதனை அடுத்து ரோஷினி தாய் வீட்டிற்கு வந்துவிட்டதால் இரண்டு குடும்பத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ரோஷினி வசிக்கும் பகுதியில் கடந்த 7ஆம் தேதி ரோஷினி இறந்து விட்டதாக கண்ணீர் […]
மூன்று திருமணம் முடிந்து குழந்தைகள் இருக்கும் நிலையில் நான்காவதாக காதல் திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டத்தில் இருக்கும் ஜெயில் கார்னரில் அமைந்துள்ள புதிய காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் மகாலிங்கம். இவரது மகன் கார்த்திக் தேனி மாவட்டத்தை சேர்ந்த சுமதி என்ற பெண்ணை காதலித்து கடந்த வருடம் கோவில் ஒன்றில் வைத்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கணவர் மீது சுமதிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது தொலைபேசியை எடுத்து சோதித்தபோது கார்த்திக் […]
மாடியின் கைப்பிடியைப் பிடித்து தொங்கிக் கொண்டிருந்த சிறுவனை காப்பாற்றிய வியாபாரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது திருச்சி மாவட்டத்தில் உள்ள இளம்குறிச்சியை சேர்ந்தவர் முகமது சாதிக். இவர் கிராமப்புறங்களில் ஓம வாட்டர், பிளீச்சிங் பவுடர், பினாயில் போன்ற பொருட்களை விற்பனை செய்யும் தொழிலை செய்து வருகின்றார். கடந்த செவ்வாய்க்கிழமை தனது இரண்டு சக்கர வாகனத்தில் பழையகோட்டை, வீரப்பூர் சந்தைப்பேட்டை வழியாக தோப்புபட்டி சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது குறிப்பிட்ட ஒரு வீட்டின் மாடியில் இருந்து காப்பாற்றுங்கள் என்று சிறுவனின் […]
கல்லூரி மாணவி ஊரடங்கு காலத்தில் தனக்குப் பிடித்த செயலை செய்து சமூகவலைதளத்தில் பிரபலமாகியுள்ளார் மதுரையை சேர்ந்த ஜெனிஃபர் என்ற கல்லூரி மாணவி ஊரடங்கு நாட்களில் தனக்கு பிடித்தமானதை செய்து பிரபலமாகியுள்ளார். தூக்கி வீசப்படும் பாட்டில்களை எடுத்து அதில் கைவினைப் பொருட்களை தயார் செய்கிறார் ஜெனிஃபர். இதுதான் தனது சிறுவயது ஆசை என்று கூறும் அவர் தற்போது தான் இதனை செய்வதற்கு நேரம் கிடைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தூக்கி எறியப்படும் பழைய பாட்டில்களை எடுத்து அதனை சுத்தப்படுத்தி பெயிண்ட் மற்றும் […]
பழைய காதலை மறைக்க தியானம் செய்தால் போதும் என்று கூறி இளம்பெண்ணிடம் கோவில் அர்ச்சகர் பாலியல் தொல்லை கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது போரூர் அடுத்து இருக்கும் ஐயப்பன்தாங்கல்பகுதியை சேர்ந்தவர் கோவில் அர்ச்சகரான சந்திரமவுலி. இவர் மீது இளம்பெண் ஒருவர் பூந்தமல்லி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் “நான் ஒருவரை மூன்று வருடங்களுக்கு முன்பு காதலித்தேன். அந்த காதலை மறப்பதற்கு தியானம் செய்தால் போதும் என்று அர்ச்சகர் சந்திரமவுலி தனி அறைக்கு என்னை அழைத்துச் சென்றார். […]
வறுமையினால் தாயே தனது 5 மாத குழந்தைக்கு பூச்சி மருந்து கலந்த பாலை கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் பார்ப்பன்குளத்தை சேர்ந்தவர்கள் சாதிக்பாஷா-யாஸ்மின் தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கும் நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. தனியார் பேருந்து ஓட்டுநரான சாதிக்பாஷா கொரோனா ஊரடங்கில் வேலை இழந்து கூலி வேலைக்கு செல்லத் தொடங்கினார். குடும்பத்தில் வறுமை அதிகரிக்க யாஸ்மினிடம் குழந்தைகளை எப்படி […]
தேனியில் புதிதாக திறக்கப்பட்டிருக்கும் மிட்டாய் கடை 90ஸ் கிட்ஸ் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது தற்போதைய 2k காலகட்டத்தில் இருப்பவர்கள் அறிந்திராத பல உணவுப் பொருட்களை 90ஸ் கிட்ஸ்கள் உண்டு மகிழ்ந்திருப்பார்கள். தற்போதைய காலத்தில் உள்ள பிட்ஸா, கேஎப்சி போன்ற உணவு பொருட்களையும் 90ஸ் கிட்ஸ்கள் ருசித்தது உண்டு. ஆனால் 90ஸ் காலத்திலுள்ள மிட்டாய்களை 2k கிட்ஸ்கள் சாப்பிட்டிருக்க முடியாது. தற்போது அவர்களுக்கும் அந்த அரிய வாய்ப்பு கிடைக்க உள்ளது. 90ஸ் கிட்ஸ்கள் விரும்பி சாப்பிட்ட உணவு பொருட்கள் […]
மகளை திருமணம் செய்து கொடுக்க மறுத்த தாயை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்தவர்கள் தமிழ்தாசன் மேரி தம்பதியினர். இவர்களுக்கு ஐந்து மகள்கள் இருக்கின்றனர். கடந்த 7 வருடங்களுக்கு முன்பு தமிழ்தாசன் மரணமடைந்ததால் மேரி தள்ளுவண்டியில் துணி வியாபாரம் செய்து வருகிறார். 5 மகள்களில் இருவருக்கு திருமணம் முடிந்த நிலையில் மற்ற மூன்று பேரும் தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வருகின்றனர். மேரியின் 19 வயதான கடைசி மகளை 38 […]
இளம்பெண் ஒருவர் தனக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாகவும் சொத்தை கேட்டு கணவர் குடும்பத்தினர் துன்புறுத்துவதாகவும் புகார் அளித்துள்ளார். தர்மபுரி மாவட்டத்திலுள்ள பாலக்கோடு கடைமடை பகுதியை சேர்ந்தவர்கள் குமார்-தொட்டியம் தம்பதியினர். இந்த தம்பதியினரின் மகள் லட்சுமி தனியார் கல்லூரி ஒன்றில் எம் காம் படித்து வந்தார். இந்நிலையில் லட்சுமியின் தாய் சமீபத்தில் தனது மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்துள்ளார். ஆனால் லட்சுமி வேலைக்கு சென்ற பிறகுதான் திருமணம் என்று உறுதியாக கூறியுள்ளார். ஆனாலும் அவரது தாய் கடைமடை […]
காதல் திருமணம் செய்த எம்எல்ஏவின் வீட்டின் முன்பு பெண்ணின் தந்தை தீக்குளிக்க முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தனி தொகுதி அதிமுக வின் சட்டமன்ற உறுப்பினர் பிரபு தியாகதுருகத்தில் சேர்ந்த சௌந்தர்யா என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெண்ணின் வீட்டில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தனது மகளை அதிமுக எம்எல்ஏ பிரபு கடத்தி விட்டதாக சௌந்தர்யாவின் தந்தை புகார் கொடுத்தார். இதனிடையே இன்று அதிகாலை பிரபு சௌந்தர்யாவை திருமணம் செய்துள்ளார். இது […]
ஆன்லைன் மூலம் சேலை விற்பதாக கூறி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள ஓட்டேரி பகுதியை சேர்ந்த இந்திரா பிரகாஷ் என்பவர் சில தினங்களுக்கு முன்பு காவல் துறையினரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் “வாட்ஸ்அப் மூலம் அறிமுகமான நபர் ஒருவர் குறைவான விலையில் புடவை உள்ளிட்ட ஆடைகள் விற்பனை செய்து வருவதாக கூறினார். அதன் பிறகு என்னை வாட்ஸ்அப் குழு ஒன்றில் சேர்த்து விட்ட அந்த நபர் பெண்கள் அணியும் அழகான […]
பிணவறையில் வைக்கப்பட்டிருந்த சடலத்தை எலி கடித்து குதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த நபர் ஒருவர் புதிதாக வீடு ஒன்றை கட்டி வந்துள்ளார். அந்த கட்டுமான பணியில் ஆவியூரை சேர்ந்த முருகன் மற்றும் ஆறுமுகம் என்ற இருவரும் பல மாதங்களாக ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டின் சுவற்றில் சாரம் கட்டி சிமெண்ட் பூசுவதற்கான வேலையை செய்து கொண்டிருந்தனர். அப்போது கயிறை சாரத்தில் கட்டுவதற்கு முயற்சித்தபோது வீட்டு கட்டிடத்தின் அருகே சென்று […]