திருமண வரவேற்பிற்கு அழைத்து செல்லாததால் குழந்தையை கொன்று மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த நெகமம் தாளக்கரை பகுதியை சேர்ந்த தம்பதியினர் கதிரேசன்-தாமரைச்செல்வி. இத்தம்பதியினருக்கு குழந்தை ஒன்று உள்ளது. கடந்த ஆகஸ்ட் 30 அன்று தாமரைச் செல்வியின் உறவினருக்கு திருமணம் நடைபெற்றது. திருமண விழாவிற்கு குடும்ப சகிதம் 3 பேரும் சென்று வந்த நிலையில் தாமரைச்செல்வி கதிரேசனிடம் திருமண வரவேற்பிற்கு செல்லவேண்டும் எனக் கூறியுள்ளார். ஆனால் கதிரேசன் அதற்கு […]
Tag: மாவட்ட செய்திகள்
உயிரிழந்த தந்தைக்கு வீட்டினுள்ளேயே மகன் சமாதி கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் களரம்பட்டி சேர்ந்த ராமசாமி நேற்று உடல்நலக்குறைவின் காரணமாக மரணமடைந்தார். இந்நிலையில் அவரது மகன் ராமசாமியின் உடலை வீட்டு வாசலில் உள்ள தென்னை மரத்தின் அடியில் புதைப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். ஆனால் அதற்கு ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டின் உள்ளே சடலத்தை வைத்து கான்கிரீட் சுவர் கட்டுவதற்கு முயற்சித்துள்ளார். இதுகுறித்து தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட விரைந்து வந்த காவல்துறையினர் மகனிடம் விசாரணை […]
தொடர் மின்தடையால் டிரான்ஸ்பார்மருக்கு அஞ்சலி செலுத்தி கிராம மக்கள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட புதூர், எம்.ஜி.ஆர் நகர், மஞ்சள்பரப்பு, மூலக்கடை, புல்லாவெளி, பெரும்பாறை, குத்துகாடு, கொங்கபட்டி, கட்டகாடு, வெள்ளரிக்காய் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மக்கள் மின்சாரம் இன்றி அவதிப்பட்டு வந்துள்ளனர். அதோடு மின்சாரமின்றி மின் மோட்டாரை இயக்க வழி இல்லாமல் குடிநீர் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குடிநீர் […]
ஐந்து பெண்கள் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சி செய்ததால் காவல்துறையினர் அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாகம்மாள் என்பவர் தேனி மாவட்டம் காந்தி நகரை சேர்ந்தவர். அவரது மகள்கள் மூன்று பேரும் மற்றும் பக்கத்து வீட்டைச் சேர்ந்த கருப்பையாவின் மகள்கள் ஆகியோரும் குழந்தைகளுடன் நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்கள் இரண்டு கேன்களில் மண்ணெண்ணையை மறைத்து எடுத்து வந்தனர். கலெக்டர் அலுவலகத்திற்கு முன் வந்த சிறிது நேரத்தில் திடீரென தங்கள் உடல்களிலும் குழந்தைகள் மீதும் […]
திருமணம் முடிந்து ஒன்றரை மாதத்தில் கணவன் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இருக்கும் பிச்சாண்டார் கோவில் ஊராட்சியை சேர்ந்த அருள்ராஜ் என்பவருக்கும் லால்குடி பகுதியை சேர்ந்த ஹெலன் ராணி என்பவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து தம்பதியினர் வாழவந்தபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்ராஜ் வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை வெளியில் சென்ற ஹெலன் ராணி வெகு நேரமாகியும் வீடு […]
முட்புதரில் கிடந்த 2 வயது சிறுமியின் உடலை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கும்பகோணத்தில் அசூர் புறவழிச் சாலைக்கு அருகே உள்ள முட்புதரில் 2 வயது சிறுமியின் உடல் காயங்களுடன் இறந்த நிலையில் துண்டின் மீது இருப்பதாக காவல்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். எனவே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து குழந்தை கொலை செய்யப்பட்டு இப்படி வைத்து விட்டு […]
வழிப்பறியில் ஈடுபட்ட இருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் நிலுவையில் வழக்கு உள்ள ரவுடி என்பது தெரியவந்தது. வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணிபுரிந்து வரும் பவித்ரன் என்பவர் சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர். கடந்த 27ஆம் தேதி இரவு வேலை முடித்து பச்சையப்பா கல்லூரிக்கு அருகே சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி 7000 ரூபாய் பணத்தையும் அவரின் செல்போனையும் […]
குடும்ப தகராறில் மனைவி செருப்பால் தாக்கியதால் ஆத்திரமடைந்த கணவன் இரும்பு கம்பியால் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் பத்திரபல்லி கிராமத்தை சேர்ந்த யுவராஜ் என்பவர் அதே பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமி என்ற பெண்ணை காதலித்து 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று கணவன் மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்குமிடையே தகராறு அதிகரித்ததால் யுவராஜை சுப்புலட்சுமி செருப்பால் அடித்ததாக […]
விறகு சேர்க்க சென்ற பெண்ணை விஷப் பாம்பு கடித்து உயிர் இழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்லாவரம் பகுதிக்கு அடுத்துள்ள திருநீர்மலை தெற்கு மாட வீதியை சேர்ந்தவர் அனிதா. இவர் சமைப்பதற்காக அப்பகுதியில் இருந்த விறகுகளை சேகரிக்கும் போது அதிலிருந்து விஷப்பாம்பு அவரை கடித்துள்ளது . சிறிதும் இதை உணராது அனிதா தன் வேலையிலேயே மும்மரமாக ஈடுபட்டுள்ளார். சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு அவர் மயங்கி விழுந்துள்ளார். இதை பார்த்த […]
அமைச்சர் ஓ எஸ் மணியனின் மனைவி உடல்நலக் குறைவால் காலமானார். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள ஓரடியம்புலம் கிராமத்தில் ஓ.எஸ் மணியன் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சராக உள்ளார்.. இவரின் மனைவி கலைச்செல்வி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இசக்கி முத்து என்பவர் நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கூடலுக்கு அருகே இருக்கும் மருதம்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர். இவருடைய மகன் சிலம்பரசன், கூலி வேலை செய்து வருகிறார். விவாகரத்தான முத்துலட்சுமி என்ற பெண்ணை கடந்த ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன்பு முத்துலட்சுமிக்கு ஒரு குழந்தை பிறந்து இறந்துவிட்டது. இதனால் சிலம்பரசன்-முத்துலட்சுமிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. எனவே முத்துலட்சுமி […]
மின்சாரம் தாக்கியதால் இரண்டு மாடுகள் உயிரிழந்தது அவற்றை காப்பாற்ற சென்ற பெண்ணும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். நாகை மாவட்டத்தில் உள்ள சோமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கூத்தூர் கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணனின் மகள் சீதாராமன். இவர் நேற்று காலை வீட்டில் வளர்ந்து வரும் இரண்டு பசுக்களை மேய்ச்சலுக்காக அருகிலுள்ள வயலுக்கு அழைத்து சென்றுள்ளார். அப்பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளது. இது தெரியாமல் மேய்ந்துகொண்டிருந்த மாடுகள் மின் கம்பிகளை மிதித்து விட்டது. இதனால் […]
கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் படகில் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் உறவினர்களுக்கிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம் யூனியன் பனைக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏராளமான மீனவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். சோகையன் தோப்பு, புதுக்குடியிருப்பு, கிருஷ்ணாபுரம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் தினம்தோறும் நாட்டுப் படகுகளில் கடலுக்கு சென்று விலை உயர்ந்த மீன், நண்டு, கணவாய் போன்ற மீன்களைப் பிடித்து வந்து மார்க்கெட்டில் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த தங்கவேலு […]
மூன்று வருடங்களுக்கு முன்பு அண்ணியை உயிருடன் எரித்து கொலை செய்த கொழுந்தன் தற்போது காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர் . கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையை அடுத்த சடைய மங்கலத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரின் மனைவி சிவகலா. இவர்கள் இருவருக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுரேஷ்குமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வருவதால் அவரின் மனைவி மற்றும் குழந்தைகள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். சுரேஷ்குமாரின் வீட்டிற்கு அருகில் அவர் சகோதரர் ஸ்ரீகண்டன் வீடு உள்ளது. ஸ்ரீகண்டனுக்கு திருமணமாகி மனைவி இருக்கிறார். […]
விழுப்புரம் அருகே கோபால்தாஸ் என்ற ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோபால்தாஸ் என்பவர் புதுவை தர்மாபுரியை சேர்ந்த பிரபல ரவுடி. இவர் திருந்தி தனியார் கம்பெனியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஜெயந்தி, மாலதி என இரண்டு மனைவிகள் உள்ளனர். மாலதி புதுவையை சேர்ந்தவர். ஜெயந்தி விழுப்புரம் அருகே பூந்துறை எனும் கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஜெயந்தி வெளிநாட்டில் தற்போது வேலை பார்த்து வருவதால் […]
மனவளர்ச்சி குன்றிய இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மன வளர்ச்சி குன்றிய இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் சென்னை டி.பி சத்திரத்தில் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கை மனு ஒன்றையும் கீழ்ப்பாக்கம் துணை ஆணையரிடம் கொடுத்தனர். அந்த மனுவில்” சென்னை டி.பி சத்திரம் […]
வனத்துறையினர் மான் வேட்டையில் ஈடுபட்ட மூன்று பேருக்கு எச்சரிக்கை விடுத்து 60,000 அபராதம் விதித்துள்ளனர். மான், மிளா, கரடி, யானை, காட்டுப்பன்றி, எருமை போன்ற அரிய வகை விலங்குகள் தென்காசி மாவட்டம் சிவகிரிக்கு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ளது. இந்த வனப்பகுதிக்குள் தேவியாறு பீட்பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் மானை வேட்டையாடுவதில் ஈடுபட்டுள்ளதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே காட்டிற்கு ரோந்து பணியில் சென்ற வனத்துறையினர் காட்டில் சம்பந்தமில்லாமல் சுற்றித்திரிந்த மூன்று நபரை பிடித்து […]
எஸ்பி அலுவலகத்தில் ஒரே நாளில் இரண்டு காதல் ஜோடிகள் உயிருக்கு ஆபத்து என்று தஞ்சம் புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பவுன்குமார்- விஜி என்ற திருமணமான காதல் ஜோடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உயிருக்கு பாதுகாப்பு வேண்டி தஞ்சமடைந்துள்ளனர். இது தொடர்பாக விஜி கூறுகையில் “நாங்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். சமீபத்தில் வேறொரு பையனுடன் எனக்கு திருமணம் செய்து வைக்க என் பெற்றோர் தீர்மானித்ததால் இருவரும் […]
கோழிக்கறிக் கடையில் தனது கையை தானே வெட்டி துண்டாக்கிய மாஜி ராணுவ வீரரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கே.கே.பட்டியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் மாஜி ராணுவ வீரர். குடும்ப தகராறு காரணமாக இவரது மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் வெங்கடேசன் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் கம்பம் புதிய பேருந்து நிலையம் அருகே இருக்கும் கோழிக்கறி கடைக்கு சென்ற வெங்கடேசன் யாரும் எதிர்பார்க்காத சமயத்தில் கறி வெட்டும் […]
திரையரங்கில் ‘வலிமை’ திரைப்படத்தை மட்டும்தான் முதலில் பார்ப்போம் என அஜித் ரசிகர்கள் உறுதிமொழி எடுத்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோன வைரஸ் பரவலின் காரணமாக அனைத்து திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு படங்கள் இறுதிகட்ட பணிகள் முடிந்தும் வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சூர்யா நடித்த “சூரரை போற்று” திரைப்பட பணிகள் முடிவடைந்து நான்கு மாதங்கள் ஆகியும் வெளியாகாமல் இருந்தது. வருகின்ற அக்டோபர் 30ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்த […]
வேட்டைக்காக வெடிவைத்த பழத்தை ஆடு தின்றதில் தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்தது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பத்தமடையை சேர்ந்தவர் மாரியப்பன். இவர் தனியார் பள்ளி அருகே உள்ள இடஞ்சன்குளத்திற்கு ஆடுகளை மேய்க்க அழைத்து சென்றுள்ளார். மதிய வேளையில் குளத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆடு அருகே கிடந்த பழத்தை கடித்ததும் அந்த பழம் திடீரென வெடித்தது. இதனால் ஆட்டின் தலை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இத்தகவலை அறிந்த பத்தமடை காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்து […]
பெண்களின் பாதுகாப்பிற்கு அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் பிரத்தியேக காலனி ஒன்றை வடிவமைத்துள்ளனர். கும்பகோணத்தில் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் பெண்களின் பாதுகாப்புக்காக பிரத்யேக காலணி ஒன்றை வடிவமைத்து இருக்கிறார்கள். சரண், ஜெயவில்சன் ,ஜெகதீஸ்வரன்,தினகரன் ஆகிய இறுதி ஆண்டு மாணவர்கள் சக நண்பர்களுடன் சேர்ந்து இந்த நவீன காலணியை உருவாக்கி இருக்கிறார்கள். பெண்களிடம் தவறாக நடக்க உற்பட்டால் இந்த காலனி மூலம் ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களில் உயிர் மின் அழுத்தத்தை செலுத்தி அவரை நிலைகுலையச் செய்ய […]
மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை காரணமாக கண்ணை கவரும் பட்டாம்பூச்சிகள் ஜவ்வாது மலைக்கு இடம்பெயர்ந்து வருகின்றன. பட்டாம்பூச்சிகள் பொதுவாக அடர் காடுகளில் மலைப் பிரதேசங்களில் வாழும் தன்மை கொண்டது. மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள சில வகை பட்டாம்பூச்சிகள் அங்கு பெய்து வரும் மழை பொழிவால் தற்போது கிழக்கு தொடர்ச்சி மலைகளில் அங்கமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை போன்ற மலை பிரதேசங்களில் தற்போது படையெடுத்து வருகின்றன. ஜவ்வாது மலையை பொறுத்த வரையில் முரசை, இலந்தை […]
வரதட்சணை கேட்டு தனது ஆபாச படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டதால் பெண் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த விஜயபாரதி என்பவர் திருமணம் முடிந்து தன் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில் அயனாவரத்தை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் விஜயபாரதி காதலித்து திருமணம் செய்து கொண்ட திவ்யாவிடம் 10 […]
மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த கணவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது சென்னையை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியுடன் சேர்ந்து எடுத்த புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் வேறு ஒரு பேஸ்புக் பக்கத்தில் தனது மனைவியின் புகைப்படம் தவறாக சித்தரிக்கப்பட்டு பதிவேற்றம் செய்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், அந்த ஃபேஸ்புக் பக்கத்தின் உரிமையாளரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். பின்னர் அதிலிருந்து புகைப்படம் நீக்கப்பட்டு வேறு ஒரு பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இதனால் […]
கல்லறைத் தோட்டத்தை தோண்டி உடல்களை எடுத்துச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாற்றுத்திறனாளி ஒருவர் புகார் அளித்துள்ளார் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பண்டாரவிளை பகுதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான விஜயன். இவர் தனக்கு சொந்தமான இடத்தில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தமான முக்கால் சென்ட் இடம் ஒன்றில் தனது குடும்பத்தில் உள்ளவர்கள் இறந்தபொழுது அவர்களுக்காக கல்லறை தோட்டம் ஒன்று அமைத்து அதில் தாத்தா, பாட்டி, தந்தை மற்றும் தாய் ஆகியோரை அடக்கம் செய்து இருந்தார். […]
பெற்ற மகனை தந்தையே கோடாரியால் வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கோயம்புத்தூர் மாவட்டம் அருகம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் டெம்போ ஓட்டுநரான பழனிச்சாமி. மதுபோதைக்கு அடிமையான பழனிச்சாமி தனது குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில் தந்தை வேலுச்சாமியிடம் தனது பெயருக்கு சொத்து முழுவதையும் எழுதி வைக்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் நன்றாக மது அருந்திவிட்டு தனது தந்தையிடம் தகராறு செய்துள்ளார். அதன் பிறகு அவர் உறங்கச் சென்ற நிலையில் நேற்று அதிகாலை 3 […]
பிரிந்து சென்ற மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வலியுறுத்தி காவல் நிலையம் முன்பு உடலில் பிளேடால் கீறி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் திருச்செங்கோடு பொன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் சசிகுமார் வாசுகி தம்பதியினர். இவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் வாசுகி கணவர் சசிகுமாரை பிரிந்து உறவினர் இருந்து வீட்டில் வசித்து வந்துள்ளார். இதனை அறிந்த சசிக்குமார் நேற்று முன்தினம் அரிவாளுடன் அங்கு சென்று தனது மனைவியை அழைத்துள்ளார். இதுகுறித்து வாசுகி திருச்செங்கோடு […]
பிரசவத்தின் போது பெண் உயிரிழந்ததால் உறவினர்கள் மருத்துவமனையை குற்றம் சாட்டி தகராறு செய்தனர் கன்னியாகுமரி மாவட்டத்தில் கோட்டார் பகுதியை சேர்ந்தவர்கள் சுரேஷ்குமார்- பவித்ரா தம்பதியினர். பவித்ரா கர்ப்பமாக இருந்த நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று பவித்ராவுக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. ஒட்டுமொத்த குடும்பமும் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் மூழ்கி இருக்க சில மணி நேரத்தில் பெரும் சோகம் அவர்களுக்குக் காத்திருந்தது. சிறிது நேரத்திலேயே குழந்தை பெற்ற பவித்ராவிற்கு அதிகப்படியான […]
5 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த டேவிட்சன் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். நாமக்கல் மாவட்டத்திலுள்ள தாதம்பட்டி ஈச்சங்காடு புதூர் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி மற்றும் அவரது மனைவி இருவரும் கூலிவேலைக்கு செல்வதற்கு முன்னதாக தங்களது 5 வயது மகளை அருகில் உள்ள உறவினர்கள் வீட்டில் விட்டு சென்றுள்ளனர். அவர்கள் பணியை முடித்து வீடு திரும்பியபோது மகள் குளியலறையில் அழுது கொண்டிருந்தார். என்ன காரணம் என சிறுமியிடம் பெற்றோர் விசாரித்தபோது, […]
அபின் எனும் போதைப் பொருள் கடத்திய திருச்சியை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த குற்ற தடுப்பு நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு ‘அபின்’ எனும் போதைப் பொருள் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து தனிப்படையினர் திருச்சி மன்னார்புரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் அபின் போதை பொருள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினர் காரில் வந்த இரண்டு பேரையும் விசாரித்தனர். இதில் […]
திருச்சி விமான நிலையத்தில் ஒரு கோடி மதிப்புள்ள தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகள் கடத்தி வந்தவர்களிடம் சுங்க துறை அதிகரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளுக்கு விமானம் இயக்குவது நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்களை மீட்டு வருவதற்காக வந்தே பாரத் திட்டத்தின் கீழ் பிரத்யேக விமானங்கள் அனுமதிக்கப்பட்டு இயங்கிவருகின்றன. இந்த விமானங்களில் தங்கம் கடத்தல் அடிக்கடி நடந்து வருகிறது. அந்த வகையில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் […]
மும்பையில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஒருவர் சென்னைக்கு சுமார் 115 கிலோ மீட்டர் நடந்தே வந்துள்ளார். பரந்தாமன் என்பவர் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர். மும்பையில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் இவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு சொரியாசிஸ் நோய் இருப்பதால் சென்னையில் உள்ள கே.எம்.சி அரசு மருத்துவமனைக்கு இரண்டு மாதத்திற்கு ஒரு முறை வந்து மாத்திரைகள் வாங்கிக்கொண்டு மீண்டும் மும்பை சென்றுவிடுவார். தற்போது கொரோனா ஊரடங்கால் மருந்துகளை வாங்க அவரால் சென்னைக்கு வர இயலவில்லை. இதற்கிடையில் சொரியாசிஸ் […]
கடலூரில் பத்தாம் வகுப்பை சேர்ந்த மாணவன் பாஸ் பண்ண வைத்ததற்கு முதல்வருக்கு நன்றி என போஸ்டர் அடித்து மகிழ்ச்சி அடைந்துள்ளார். கொரோனா தொற்று பரவலின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவர்களின் நலன் கருதி மூடப்பட்டன. அதுமட்டுமல்லாமல் பள்ளி, கல்லூரி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அனைத்து மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. இதைத்தொடர்ந்து ஆகஸ்ட் 10ஆம் […]
சொல்லை மீறி தங்கை காதல் திருமணம் செய்ததால் அண்ணன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது தாயும் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டத்தில் இருக்கும் மண்ணச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம் நீலவதி தம்பதியினர் .இத்தம்பதியினருக்கு பால்ராஜ் மற்றும் சின்னத்துரை என்ற மகன்களும் மீரா, கல்பனா மற்றும் மீனா என மூன்று மகள்களும் இருக்கின்றனர். மூத்த மகனான பால்ராஜ் சென்னையில் எலக்ட்ரீசியன் ஆக பணிபுரிந்து வர இளைய மகன் சின்னதுரை மற்றும் மீனா தனியார் நிறுவனம் ஒன்றில் […]
திருமணமானதை மறைத்து இளம்பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் சென்னை மதுரவாயல் சேர்ந்த இளம்பெண் ஒருவர் திடீரென வயிறு வலிப்பதாக கூறியுள்ளார் இதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் அப்பெண்ணை உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் சில மணி நேரங்களில் குழந்தை பிறந்து விடும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளிடம் விசாரிக்க காத்திருந்தனர். பின்னர் சில மணி நேரங்களில் […]
உடல் நிலை சரி இல்லாத மகளைப் பார்க்க சென்றபோது அவர் உயிரிழந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருவள்ளூர் மாவட்டம் சிவி சாலையை சேர்ந்தவர் முருகன். பூக்கடை நடத்தி வரும் இவருக்கும் மோகன பிரியா என்ற பெண்ணிற்கும் ஒன்பது வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த நாள் முதல் மோகன பிரியாவை முருகனின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமை படுத்தியுள்ளனர். அதோடு வேறு ஒரு பெண்ணுடன் முருகனுக்கு தொடர்பு இருந்ததால் மனைவி மோகன பிரியாவுடன் அடிக்கடி தகராறு செய்து […]
குமரி மாவட்டத்தில் கடல் சீற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கடற்கரை பகுதி மக்களை பாதுகாப்பாக இருக்க கூறி வானிலை ஆய்வு மையம் வலியுறுத்தியுள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த கனமழையால் நீலகிரி பகுதியைச் சேர்ந்த மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதேபோல் நமது அண்டை மாநிலமான கேரளத்திலும் பல்வேறு பேரிடர்கள் கனமழையால் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் […]
சென்னையில் ஆன்லைன் வகுப்பு படிக்க மொபைல் இல்லாததால் மன விரக்தி அடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக ஆகஸ்ட் 31ம் தேதி வரை தளர்வுகள் இல்லாமல், பல மாநில முதல்வர்கள் ஊராடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளனர். தமிழகத்திலும் இதே நிலை தொடர பள்ளி , கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் […]
சென்னை மயிலாப்பூர் பகுதியில் ஆயுதங்களால் தாக்கி தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆழ்வார்பேட்டையில் சிவி ராமன் சாலையில் சவாரி செல்வதற்காக காத்திருந்த ஆட்டோ ஓட்டுநர் பாஸ்கர் என்பவரை தாக்கி 13 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போனை பறித்து சென்றுள்ளனர். அவர் அளித்த புகார் தொடர்பாக அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த பொலிசார் வழிப்பறி செய்த நபர்கள் தப்பிச் சென்ற இருசக்கர வாகனம் விபத்துக்குள்ளானதை கண்டறிந்தனர். இது தொடர்பாக திருவான்மியூரை சேர்ந்த விஜயகுமார் […]
விழுப்புரம் அருகே ஏரியில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் 10 கிராமங்களை சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். விழுப்புரம் அருகே உள்ள நத்தமேடு கிராமத்தில் உள்ள ஏரியில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் மீன்பிடித் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான மீன்பிடி திருவிழா நேற்று காலை நடைபெற்றது. இதில் நத்தமேடு திருவாக்கூர், கல்பட்டு, மாம்பழப்பட்டு, ஒட்டன் காடு உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டு மீன் பிடித்தனர். […]
ஆகஸ்ட் 10-ஆம் தேதி கடையடைப்பு போராட்டம் நடத்துவது குறித்து வணிகர் சங்கங்களின் தலைவர் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழக அரசும் அதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், கோயம்பேடு சந்தையில் அமைக்கப்பட்டிருந்த கடைகள் அனைத்தும் வேறுபகுதிக்கு மாற்றப்பட்டது. இந்நிலையில் கோயம்பேடு சந்தையில் மீண்டும் கடைகளை திறக்க அனுமதிக்க கோரி ஆகஸ்ட் 10ம் தேதி முதல் காய்கறி […]
மொபைல் செயலியில் செய்தி படித்தால் அதற்கு பணம் கொடுப்பதாக கூறி சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக ஈரோடு மாவட்ட காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த அபெக்ஸ் நிறுவனம் மொபைல் செயலியில் செய்திகளைப் படித்தால் பணம் கொடுப்பதாக விளம்பரம் செய்துள்ளது. இதனை உண்மை என்று நம்பி தமிழகம் முழுவதிலும் கிட்டத்தட்ட ஒன்றரை லட்சம் பேர் இதில் முதலீடு செய்துள்ளனர். இதனால் அந்நிறுவனம் 100 கோடி ரூபாய் வரை முதலீடு பெற்றுள்ளதாக […]
இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும் என திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு குறைந்த பிறகே தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்டவற்றை திறப்பது குறித்து ஆலோசிக்கப்படும் அதன் பின்பே தேர்வுகள் நடத்த வாய்ப்பு இருக்கிறது என்பதால், கல்லூரிகளில் படிக்க கூடிய இறுதி ஆண்டு மாணவர்களை தவிர்த்து மற்ற ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு தேர்வை ரத்து செய்து […]
திருவள்ளூர் அருகே 16 கொரோனா நோயாளிகள் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை ஒருபுறம் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக அயராது உழைத்துவரும் அதிகாரிகள் மத்தியில், சிலரின் அலட்சியத்தாலும், பொதுமக்களின் தேவையற்ற செயல்களாலும் கொரோனா பாதிப்பு பரவுவதற்கான வாய்ப்புகள் நாள்தோறும் அதிகரித்து செல்கின்றன. அந்த வகையில், திருவள்ளூர் அருகே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 16 பேர் மருத்துவமனைக்கு அழைத்துச் […]
சென்னையில் பணிபுரிய விரும்புபவர்கள் தாங்கள் வேலை பார்க்க உள்ள நிறுவனத்தின் மூலம் இ பாஸ்க்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்திலும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கை தளர்வுகளுடன் நீட்டித்து தமிழக முதலவர் உத்தரவிட்டுள்ளார். பல தொழில் நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கத் தொடங்கியுள்ளன. சென்னை இயல்பு வாழ்க்கைக்கு படிப்படியாக திரும்பி வரும் இந்த சூழ்நிலையில், தொழில் நிறுவனங்களில் […]
சேலம், ஈரோடு மாவட்ட அணைகளில் உள்ள நீர் இருப்பு , நீர்வரத்து மற்றும் நீர் வெளியேற்றம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளலலாம். மேட்டூர் அணை : அணையின் முழு கொள்ளளவு_64.02 அடி அணையின் நீர் இருப்பு _ 27.77அடி அணைக்கு நீர்வரத்து _ 4,040 கன அடி அணையில் இருந்து நீர் வெளியேற்றம் _3,000 கன அடி பவானிசாகர் அணை : அணையின் முழு கொள்ளளவு _ 85.60 அடி அணையின் நீர் இருப்பு _ 18.8 அடி […]
ஈரோடு மாவட்டத்தில் வாய்க்காலுக்கு முதல் போக பாசனத்திற்காக அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கே.சி.கருப்பணன் தண்ணீரை திறந்து வைத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கொடிவேரி தடுப்பணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை ஆகிய வாய்க்காலுக்கு முதல்போக பாசனத்திற்கு அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கே.சி.கருப்பணன் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தார்கள்.அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “ஈரோடு மாவட்டத்தில் தடுப்பணைகள் கட்டப்பட்டு கொண்டிருக்கின்றன. தடுப்பணைகளில் இணைப்பு சாலை தேவைப்படும் என்றால் பொதுப்பணித்துறை ஆய்வு செய்து முடிவு செய்வார்கள். ஈரோடு மாவட்டத்தை பொருத்தவரையில் […]
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள 3 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், ஆங்காங்கே அதனுடைய பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் சில வாரங்களுக்கு முன்பு வரை பாதிப்பு அதிகமாக இருந்தது. சென்னை மக்கள் கொரோனாவை கண்டு மிகவும் அச்சம் அடைந்து இருந்தனர். காரணம் நாளொன்றுக்கு […]
ஊரடங்கு காலத்திலும் மாணவர் நலன் கருதி செயல்படும் ஆசிரியரை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டியுள்ளார். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தங்களது மாணவர்கள் தேர்ச்சி பெற்று நல்ல நிலைமைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக வாங்குகிற சம்பளத்துக்கு உண்மையாக வேலை பார்க்கும் படி புதிய புதிய பல செயல்கள் மூலம் புதுவிதமான கல்வியை மாணவர்களுக்கு செலுத்தி வந்தனர். இது போன்ற விஷயங்களை நாம் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கண்டு வருகிறோம். இந்த ஊரடங்கு நேரத்திலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு […]