கை, கால்கள் செயலிழந்து துயரப்பட்டு வந்த தாயை மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்தவர் ஆனந்தன். தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வரும் இவரது தாய் கோவிந்தம்மாள் சில வருடங்களாக கை கால்கள் செயல் இழந்து மிகவும் துயரப்பட்டு வந்துள்ளார். தாய் மீது அதிக பாசம் கொண்ட ஆனந்தன் அதிக அக்கறை எடுத்து தாயை கவனித்துக் கொண்டார். ஆனால் ஆனந்தனுக்கு ஏழு வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்த நிலையில் அவரது […]
Tag: மாவட்ட செய்திகள்
மனைவி குடிப்பழக்கத்துக்கு அடிமையானதால் கணவனே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சண்முகராஜ் முருகவள்ளி தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் முருகவள்ளி நேற்று வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் முருகவள்ளியின் கணவன் மற்றும் குழந்தைகள் அங்கு இல்லாததை அறிந்து விசாரணை மேற்கொள்ள தொடங்கினார். இதனிடையே முருகவள்ளியின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் முருகவள்ளியை காதல் திருமணம் செய்து […]
15 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ஈரோடு மாவட்டத்தில் பவானிசாகர் பகுதியில் இலங்கைத் தமிழர்கள் வசித்து வரும் முகம் ஒன்று அமைந்துள்ளது. முகாமை சேர்ந்தவர் நாகராஜ். பெயிண்டராக பணிபுரிந்து வரும் நாகராஜ், பவானிசாகர் அடுத்த எரங்காட்டூர் பகுதிக்கு பெயிண்ட் அடிக்க சென்றுள்ளார். அச்சமயம் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருக்கு நாகராஜ் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை அறிந்த […]
நாகை மாவட்டம் வைதீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் பணியாற்றும் ஒரு தம்பதியர் அங்குள்ள ஒரு குப்பை கிடங்கை விளை நிலமாக மாற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர். வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு ஊருக்கு ஒதுக்குப் புறமாக அமைந்துள்ளது. வைதீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு தினமும் கொட்டப்படுவது வழக்கம் அவை மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு இயற்கை உரம் தயார் செய்யப்படுகிறது. மட்காத குப்பைகள் பிளாஸ்டிக் பொருட்கள் தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு […]
சென்னையில் கொரோனா பாதிப்பு விகிதம் குறைந்து விட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு ஆங்காங்கே அதிகரித்து வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை, விருதுநகர் ஆகிய பகுதிகளில் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. சென்னையில் நாளொன்றுக்கு சராசரியாக ஆயிரத்திற்கும் மேல் மக்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். அது படிப்படியாக குறைக்கப்பட்டு […]
தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் கடும் குடிநீர் பஞ்சம் நிலவுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கம்பம் நகராட்சியின் இருபத்தி எட்டாவது வார்டு பகுதியில் 8 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது அதுவும் சுத்திகரிக்கப்படாமல் விநியோகிக்கப்படும் குடிநீரில் புழுக்கள் இருப்பதால் குடிப்பதற்கு கூட பயன்படுத்த முடிவதில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் கொரோனா ஊரடங்கு நேரத்தில் எந்தவித உதவியும் வழங்கப்படாததால் பட்டினியால் தவிப்பதாகவும் கவலை தெரிவிக்கின்றனர் இது குறித்து கம்பம் […]
திருப்பூரில் மது அருந்திவிட்டு போதையில் சேட்டை செய்த சிறுவர்களை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். திருப்பூரில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சிலர் நன்கு குடித்துவிட்டு போதையில் அவர்கள் வீடு அருகில் இல்லாத தெரு ஒன்றிற்குச் சென்று கையில் கத்தியை வைத்துக்கொண்டு தெருவில் நடந்து செல்பவர்களை அச்சுறுத்தி வந்துள்ளனர். சிறிதுநேரம் சிறுவர்களை கண்டுகொள்ளாத தெரு மக்கள் அவர்கள் சேட்டை அதிகமாக செய்ய ஆரம்பித்தவுடன் ஆத்திரம் கொள்ளத் தொடங்கினர். பிறகு சிறுவர்கள் அங்கே உள்ள […]
கோவையில் இன்று முதல் ஆகஸ்ட் இரண்டாம் தேதி வரை செல்போன் சேல்ஸ் மற்றும் சர்வீஸ் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் நாடு முழுவதும் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. தற்போது 6 வது கட்ட நிலையில் ஊரடங்கு செயல்பட்டு வரும் சூழ்நிலையில், அதில் பல்வேறு தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், அந்தந்த மாவட்டங்களில் கொரோனாவின் அளவைப் பொருத்து மாவட்ட […]
கொரோனா சிகிச்சையில் சித்தமருத்துவதிற்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்க கோரி தூத்துக்குடியில் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதில் ஆங்கில மருத்துவதிற்கு மேலாக சித்த மருத்துவம் சிறந்த பலனை கொடுக்ககிறது.எனவே ஆங்கில மருத்துவத்திற்கு இணையாக சித்த மருத்துவத்திற்கும் முன்னுரிமை வழங்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகம் முன்பு சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆரம்ப சுகாதார நிலையங்களில் சித்த மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கிருஷ்ணகிரி அருகே நிலத்தகராறில் குடும்பத்தைச் சேர்ந்த நால்வரை கத்தியால் குத்தி தாக்கிய வழக்கில் ராணுவ வீரர் உட்பட 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியை அடுத்த கொட்டபள்ளம் கிராமத்தில் வசித்து வருபவர்கள் அண்ணன் தம்பிகளான சரவணன் மற்றும் சின்னராஜ். இந்நிலையில் சரவணன் மனைவி கண்ணம்மாள் என்பவருக்கும், சின்னராஜ் என்பவரின் மனைவி தேவி என்பவருக்கும் நிலத்தில் மாடு மேய்ப்பது தொடர்பாக பிரச்சனை எழுந்துள்ளது. இதில் வாய்த்தகராறு முதற்கட்டமாக ஏற்பட்டு, பின் சண்டை முற்றவே, […]
மதுரை மாவட்டம் மேலூர் அருகே நியாயவிலை கடைகளில் வழங்கப்படும் பொருட்களில் முறைகேடு நடப்பதாக குற்றம் சாட்டி குடும்ப அட்டைதாரர்கள் போராட்டம் நடத்தினர். மேலூர் அருகே கம்பர் ஊராட்சிக்கு உட்பட்ட ஐயாவத்தான் பட்டியில் உள்ள நியாயவிலை கடைகளில் விற்பனையாளராக செல்வி என்பவர் உள்ளார் இந்த நியாயவிலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களில் முறைகேடு நடப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 1 கிலோவில் 200 முதல் 300 கிராம்வரை கொள்ளையடிப்பதாக கூறப்படுகிறது. […]
திருச்சி மாவட்டம் முழுவதும் நாளை முதல் காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே கடைகள் செயல்படும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு கடுமையாக இருந்த நிலையில், தற்போது ஆறாவது கட்ட ஊரடங்கில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி […]
சென்னை மாவட்ட ஆட்சியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் கிண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. இதனை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில், தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கில் பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள் […]
யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குறவன் குறத்தி நடனம் ஆபாச நடனங்களாக சித்தரிக்கப்படுவதை தடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. சமூக வலைத்தளங்களில் ஆபாசம் நடனத்திற்கு குறவன் குறத்தி ஆட்டம் என்று குறிப்பிட்டு அதை பதிவேற்றம் செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தடுக்க வலியுறுத்தி குறமகள் வள்ளி பெருந்தகை பாசறை மற்றும் வனவேங்கைகள் கட்சி சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து புகார் அளித்தவர்கள் கூறுகையில் “கிராமிய […]
மதுரையில் திருமணம் முடித்து வீட்டிற்கு வந்த தமது மருமகளுக்கு 101 வகை உணவுடன் தலைவாழை விருந்து வைத்து மாமியார் அசத்தியுள்ளார். மாமியார் மருமகள் என்றாலே கீரியும் பாம்பும் போல சண்டை இட்டுக் கொள்வதாக பலரும் கருதுவது உண்டு. ஆனால் மதுரையைச் சேர்ந்த அஹிலா என்பவர் மாமியார் மருமகள் உறவிற்கு புது இலக்கணம் ஒன்றை எழுதியிருக்கிறார். மூன்றும்மாவடியை சேர்ந்த அபுல்ஹாசனுக்கும் ஷப்னா என்ற பெண்ணுடன் கடந்த 9ஆம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக புதுமண தம்பதிகள் […]
ஆன்லைன் விளையாட்டில் பந்தயம் கட்டி தோற்றதால் மன உளைச்சல் அடைந்த மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23 ஆம் தேதி வரை முதல் தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில் தொடர்ந்து ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு விதிக்கப்பட்டதால் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் தங்களது வீடுகளுக்குள் பத்திரமாக இருந்து வருகின்றனர். அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக மட்டுமே மக்கள் வெளியே […]
ஸ்ரீவில்லிபுத்தூரில் வருகின்ற ஆகஸ்ட் ஒன்றாம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. தமிழகத்தை பொறுத்தவரையில், ஆரம்ப காலகட்டங்களில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பெருநகரங்களில் மட்டுமே பாதிப்பு அதிகமாக காணப்பட்டு வந்த நிலையில், தற்போது மாநிலத்தின் பிற பகுதிகளிலும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதன்படி, மதுரை மாவட்டத்தில் சில வாரங்களாகவே […]
சொத்துக்காக கணவன் மாமனார் மைத்துனர் ஆகியோரைக் கொலை செய்த பெண் மாமியாரை கடத்தி கைது செய்யப்பட்ட நிலையில் இதற்கு உடந்தையாக இருந்த குற்றவாளி தற்போது சிக்கியுள்ளான். சென்னையில் உள்ள படப்பை பகுதியை சேர்ந்தவர்கள் சுப்புராயன்-பத்மினி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு செந்தில் மற்றும் ராஜ்குமார் என இரண்டு மகன்கள் இருந்த நிலையில், சொத்து தகராறினால் கடந்த 2014ஆம் வருடம் செந்தில் தனது சகோதரர் ராஜ்குமாரை கொலை செய்துவிட்டு சிறைக்கு சென்றார். அதன் பிறகு வெளியில் வந்த செந்தில் தலைமறைவாகினர். பல […]
முழு ஊரடங்கை பயன்படுத்தி அடுத்தடுத்து நான்கு கடைகளில் திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் கும்மிடிப்பூண்டி நெடுஞ்சாலையில் அமைந்திருக்கும் பஞ்சர் கடை, வெல்டிங் கடை, டீக்கடை மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் கடை என தொடர்ந்து 4 கடைகளின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். அதோடு கடையில் திருடிய ஒயரை அந்த இடத்திலேயே தீ வைத்து எரித்து விட்டு போயுள்ளனர் . காவல் துறையினரிடம் இருந்து […]
ஒரு வருடத்திற்கும் மேல் பூட்டிக்கிடந்த வீட்டிற்கு மின் கட்டணம் ரூபாய் 11,000 வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது தொடர்ந்து மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான மின் கட்டணங்களை ஊரடங்கு முடிந்த பிறகு செலுத்திக் கொள்ளலாம் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் ஜூன் மாதத்திலிருந்து மின் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. ஆனால் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு மின் கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்களிடையே புகார்கள் எழுந்து வந்தது. இந்நிலையில் நாகை மாவட்டத்தில் இருக்கும் […]
இளம்பெண்ணை மருந்து இல்லாத ஊசி மூலம் கொல்ல முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளித்துறை பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்மின் ஷைனி. இவருக்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தை உள்ள நிலையில் கணவரிடம் விவாகரத்து பெற்று தனியாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஜெபராஜ் என்பவருக்கும் ஷைனிக்கும் இரண்டாவதாக திருமணம் நடைபெற்றது. முதல் கணவருக்கு பிறந்த குழந்தையை தன்னுடன் வைத்துக்கொள்ள ஷைனி விருப்பம் தெரிவிக்க அவரது இரண்டாவது கணவரும் மாமனார் […]
காஞ்சிபுரம் அருகே மகளை தந்தையே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் வசித்து வருபவர் வெங்கட் பிள்ளை. இவரது மகள் செந்தாரகை கடந்த எட்டாம் தேதியன்று கழிவறையில் வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்க, அக்கம்பக்கத்தினர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் இறந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து பிரேத […]
விழுப்புரம் அருகே அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரிந்தவர் புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். அரசியல் மாற்றம் என்பது காலங்களுக்கு ஏற்ப அடிக்கடி மாறுபட்டுக் கொண்டே இருக்கும். காமராஜர் வரை காங்கிரஸ் ஆட்சி, காமராஜருக்குப் பின் திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி, அதற்குப் பின், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி பின் இரண்டு கட்சிகள் மாறி மாறி தமிழகத்தை ஆட்சி செய்து வந்தன. தற்போது இந்த இரண்டு திராவிட கட்சிகளுக்கும் அடுத்த நிலையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த […]
கோவையில் இன்று மாலை 5 மணி முதல் திங்கள்கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில் தொடர்ந்து ஊரடங்கு அமலில் இருக்கிறது. இருப்பினும் பாதிப்பு குறைந்த பாடில்லை. முதல் ஐந்து கட்ட ஊரடங்கில் பல […]
கடை வைப்பதில் ஏற்பட்ட தகராறால் காவல் நிலையம் முன்பு இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது திருச்சி மாவட்டத்தில் இருக்கும் சமயபுரம் அருகே மாகாளிக்குடி பகுதியை சேர்ந்தவர் தங்கமணி. இவர் சமயபுரம் மாரியம்மன் கோவிலின் அருகே தேங்காய் மற்றும் பழக்கடை நடத்தி வருகின்றார். தற்போது கோயில்கள் மூடப் பட்டிருப்பதால் இவரது கடையும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தங்கமணியிடம் மாகாளிக்குடி பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்பவர் தானும் அதே பகுதியில் கடை வைக்கப்போவதாக கூறி […]
காரில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் கதவு லாக் ஆனதால் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது கள்ளக்குறிச்சி மாவட்டம் குலதீபமங்கலம் பகுதியை சேர்ந்த குழந்தைகள் வனிதா மற்றும் ராஜ் இருவரும் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென காணாமல் போயினர். வீட்டில் இருந்தவர்கள் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தும் குழந்தைகள் பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் தவித்தனர். இந்நிலையில் வீட்டின் அருகே இருந்த காரை பார்த்தபொழுது காரின் உள்ளே குழந்தை மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் கார் […]
வீட்டில் கடுமையாக நடந்து கொண்டதால் தனக்குப் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்துக்கொண்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஐடிஐ மாணவன் சதீஷ்குமார். கடந்த 18 ஆம் தேதி ஏதோ பிரச்சனையின் காரணமாக சதிஷ்குமாரை அவரது பெற்றோர் மற்றும் சகோதரர் மிகவும் கடுமையாக திட்டி அடித்துள்ளனர். இதனால் மிகுந்த மன வேதனை அடைந்த சதீஷ்குமார் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளார். ஆனால் குடும்பத்தின் வறுமை நிலையை உணர்ந்த அவர் […]
மனைவி இறந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட கணவன் முகநூலில் கடைசியாக உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூரில் உள்ள நடுக்குத்தகை திலீபன் நகர், அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர் அரவிந்த்ராஜன் வயது 26 இவர் பி.எ பட்டப்படிப்பு முடித்துவிட்டு கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சென்ற 2016ம் ஆண்டு பட்டாபிராம் சத்திரம் பகுதியை சேர்ந்த பவித்ரா என்ற ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக […]
சென்னை அயனாவரம் அருகே 60 வயதான மூதாட்டியை மர்மநபர் ஒருவர் நள்ளிரவில் வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அயனாவரத்தில் தனது கணவருடன் 60 வயதான மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவரது கணவர் உடல்நிலை குறைவு காரணமாக படுத்த படுக்கையாக இருக்கிறார். இவர்களது வீடும் ஒரு பத்தி கொண்ட மிகச் சிறிய வீடுதான். ஆகையால் இடப்பற்றாக்குறை காரணமாக அவ்வப்போது தனது வீட்டிற்கு அருகே உள்ள உறவினர் வீட்டில் 60 […]
தூத்துக்குடி அருகே பிரபல தேவாலயத்தின் உச்சியின் மேல் நின்று ஊழியர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் தற்கொலை மிரட்டல் விடுத்து வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியை அடுத்த தூய யோவான் தேவாலயத்தின் கோபுரத்தின் உச்சியில் நின்று ஊழியராக வேலை பார்த்து வந்த அகஸ்டின் என்பவர் தற்கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தேவாலயத்தில் பணிபுரிந்து வந்த பாதிரியார்கள் மூலம் அவரிடம் பேச்சுவார்த்தை […]
பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் தான் குறைந்த மதிப்பெண் எடுத்ததாக கூறி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே இருக்கும் கொட்டாரமடுகு கிராமத்தை சேர்ந்த பாலாஜி என்பவரது மகன் அசோக்குமார் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிவிட்டு தேர்வு முடிவுக்காக காத்திருந்தார். இந்நிலையில் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானதில் அசோக்குமார் 600க்கு 481 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆனால் தான் குறைந்த மதிப்பெண் பெற்று விட்டதாக வருந்திய […]
வீட்டில் சடலமாக கிடந்த பெண் கொரோனாவால் இறந்திருக்கலாம் என்ற அச்சத்தில் அவரை அடக்கம் செய்வதற்கு அக்கபக்கத்தினர் உட்பட அலுவலர்களும் தயங்கிய சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியது கிருஷ்ணகிரி மாவட்டம் ஆத்தூர் அரசு மருத்துவமனையின் பின்புறம் வசித்து வந்த பெண் கவிதா. சென்னையில் பணிபுரிந்து வந்த இவர் கடந்த மார்ச் மாதம் தான் கிருஷ்ணகிரி வந்துள்ளார். திருமணம் முடிந்து விவாகரத்தான இவர் கூலி அடிப்படையில் மாத்தூர் பகுதியில் இருக்கும் சில மருத்துவமனைகளில் வேலை செய்து வந்துள்ளார். சில வாரங்களாக அவர் […]
சென்னை அருகே கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதியவர் காணாமல் போன சம்பவம் பெரும் அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் ஆலந்தூர் பகுதியில் வசித்து வந்தவர் ஆதிகேசவன். இவருக்கு வயது 74 ஆகிறது. இவர் சமீபத்தில் தனது 103 வயதான தாயாரின் இறுதி சடங்கில் பங்கேற்று பின் வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய மூன்று நாட்களில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வசித்த பகுதி உட்பட்ட 162 வது வார்டு மாநகராட்சி அதிகாரிகள் ஆம்புலன்ஸ் மூலம் அவரை […]
தர்மபுரி அருகே மனைவிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் மனமுடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தர்மபுரி மாவட்டம் அதகபாடி பகுதியில் வசித்து வந்த 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் தர்மபுரியில் இருக்கக்கூடிய அரிசி ஆலை ஒன்றில் காவலாளியாக பணி செய்து வந்துள்ளார். இவரது 60 வயது மனைவிக்கு சுகாதாரத் துறை அதிகாரிகளால் கொரோனா இன்று உறுதி செய்யப்பட்டு அவர் வீட்டிலேயே தனிமையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டதுடன் அவரை தனிமைப்படுத்தினர். இதையடுத்து இந்த சம்பவங்கள் ஏதும் காவலாளியாக […]
திண்டுக்கல் அருகே பழிக்குப்பழி வாங்க எண்ணி வாலிபரை கொலை செய்த வழக்கில் சிறுவர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற மூன்று பேரை 10 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் தாக்கியதில் வாலிபர் ஒருவர் உயிரிழக்க, மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வர, 3 வது நபர் அந்த கும்பலிடமிருந்து தப்பி சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் கொலை செய்த […]
ஆன்லைன் வகுப்பிற்காக தனது தாய் ஆண்ட்ராய்டு மொபைல் வாங்கி தராததால் காரணத்தினால் மனமுடைந்த +2 படித்து வரும் மாணவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது . திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப். இவர் தற்போது பிளஸ் 1 வகுப்பு முடித்துவிட்டு பிளஸ் 2 வகுப்பு செல்கிறார். தந்தையை இழந்த இவரை அவரது தாயாரான காஞ்சனா என்பவர் தான் கஷ்டப்பட்டு வேலைக்கு சென்று படிக்க வைத்து […]
காஞ்சி அருகே தனது திருமணத்திற்காக பெற்றோர்கள் படும் கஷ்டத்தை தாங்க முடியாமல் மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியை அடுத்த பழைய நல்லூர் பகுதியில் வசித்து வருபவர் சம்பத். இவர் தனியார் கம்பெனி ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய ஒரே மகள் ரேவதி. மகளுக்கு 21 வயதாகும் நிலையில், சீக்கிரம் திருமணம் செய்து கொடுக்க வேண்டும். நகை விலை வேறு ஏறிக்கொண்டே செல்கிறது. எனவே திருமணத்துக்கு நகைகளை […]
கோயம்புத்தூர் அருகே 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டம் போத்தனூர் பகுதியில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பின் அவர் பணிபுரிந்த கம்பெனிக்கு செல்லாத காரணத்தினால் அவர் வசிக்கும் பகுதிக்கு அருகில் இருக்கக்கூடிய விளையாட்டு மைதானத்தில் நண்பர்களுடன் இவர் கிரிக்கெட் விளையாடுவது வழக்கம். இந்நிலையில் கிரிக்கெட் […]
பெற்ற பிள்ளையை பிச்சை எடுக்க வைத்த தாயையும் குழந்தையையும் காவல்துறையினர் திருத்தணி குழந்தைகள் நலக்காப்பகத்தில் சேர்த்துள்ளனர். திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பெண் ஒருவர் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்து வருவதாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. புகாரின் அளித்த பின் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிகுமாருடைய, உத்தரவின்பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர். அப்போது திருத்தணி பைபாஸ் சாலையில் பெண் ஒருவர் தன்னுடைய […]
பசுவை பிரிந்த காளையின் பாசத்தை காணொளியை பார்த்து உணர்ந்த துணை முதல்வர் மகன் தனது முயற்சியால் இரண்டையும் சேர்த்து வைத்துள்ளார். மதுரை பாலமேட்டை சேர்ந்த விவசாயி முனியாண்டி என்பவரது பசு மாடும், மஞ்சமலை கோயிலில் உள்ள காளையும் ‘நட்புடன்’ பழகி வந்தன. ஒன்றாக தண்ணீர் குடிப்பது உணவருந்துவது என இருந்த நிலையில் விவசாயி தான் வளர்த்து வந்த பசுவை ஊரடங்கில் ஏற்பட்ட வறுமையினால் விற்க முடிவு செய்து 2 நாட்களுக்கு முன்பு சரக்கு வாகனத்தில் ஏற்றியுள்ளார். இதனை […]
ஒரு இனத்தையோ அல்லது மதத்தையோ குறை கூறி அவதூறு பரப்புவோர் நாட்டை காட்டிக் கொடுக்கும் துரோகிகள் என்று அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் செல்லிப்பட்டு கிராமத்தில் புதிய தடுப்பணை பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் சம்பத் என்பவருடன் சிவி சண்முகம் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கந்தர் சஷ்டி கவசம் குறித்து அவதூறு பரப்புவதாக சமீபத்தில் புகார் எழுந்துள்ளது. இந்த புகாரில் சமந்தபட்டவர்கள் யாராக இருந்தாலும் சரி, […]
சேலம் அருகே காதலன் வீட்டு முன்பு காதலி விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியை அடுத்த ஆனையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அனிதா. இவருக்கும் கங்கவள்ளி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. இந்த காதலுக்கு விக்னேஷ் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து அனிதாவிற்கு வேறு ஒருவருடன் அவர்கள் வீட்டின் சார்பில் கட்டாய திருமணம் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. பின் கணவருடன் […]
விருதுநகர் மாவட்டத்தில் பணியில் இருந்த காவலர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பகுதியை அடுத்த மொட்டைமலை என்னும் பகுதியில் உள்ள சிறப்பு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் முத்தையா என்ற காவல்துறை அதிகாரி கடந்த 12ஆம் தேதி பணியில் இருக்கும்போதே மயங்கி விழுந்துள்ளார். பின் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் இன்று திடீரென சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட […]
தூத்துக்குடி அருகே 7 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள கல்வலை கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகள் முத்தாள். 7 வயதே ஆன இவர் காலையில் வெளியே விளையாட சென்றவர் பிறகு வீட்டிற்கு வரவில்லை என்றதும், அவரைத் பெற்றோர்கள் தேட ஆரம்பித்துள்ளனர். பிறகு கல்வலை பகுதிக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் அடையாளம் தெரியாத சிறுமியின் உடல் கிடப்பதாக காவல் நிலையத்தில் தகவல் […]
திருமணம் முடிந்த 4 நாட்களில் சகோதரி வீட்டிற்கு விருந்திற்கு சென்ற புதுப்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது திருச்சி மாவட்டம் உடுமலையை சேர்ந்த செல்வராஜ் என்பவருக்கும் தேவி என்ற பெண்ணுக்கும் கடந்த எட்டாம் தேதி திருமணம் நடைபெற்றது. இதனையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சகோதரியின் வீட்டிற்கு திருமண விருந்திற்காக செல்ல, புதுமணத் தம்பதியினருக்கு பிரம்மாண்டமாக விருந்து சாப்பாடு தயாராகி கொண்டிருந்தது. அச்சமயம் தேவி தனி அறைக்கு சென்றுள்ளார். வெகு நேரமாகியும் அவர் வராததால் அவரை அழைக்க […]
தேனி அருகே திருமண ஆசை வார்த்தை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் தேனி மாவட்டம் கோட்டூர் பகுதியை அடுத்த பால்பண்ணை தெருவில் வசித்து வருபவர் ரங்கநாதன். 28 வயதாகும் இவர் மேடை அலங்காரம் தொழில் சொந்தமாக செய்து வருகிறார். நல்ல வருமானத்தை ஈட்டிக் கொண்டிருக்கும் இவர் தான் செட்டில் ஆகிவிட்டதாகவும், விரைவில் உன்னை உங்கள் வீட்டு பெரியோர்களின் அனுமதியுடன் திருமணம் […]
நாமக்கல்லில் சந்தேகிக்கும் படி நபர்களை கண்டால் 24 மணி நேரமும் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கலாம் என அம்மாவட்டத்தின் புதிய எஸ்பி பேட்டியளித்துள்ளார். நாமக்கல்லில் எஸ்பியாக வேலை பார்த்து வந்த அருளரசன் என்பவர் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட, ஈரோடு மாவட்டத்தில் எஸ்பியாக வேலை பார்த்து வந்த சக்தி கணேசன் தற்போது மாவட்டம் நாமக்கல் மாவட்டத்திற்கு எஸ்பியாக பொறுப்பேற்று உள்ளார். பொறுப்பேற்ற முதல் நாளே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். அதில், நாடு முழுவதும் கொரோனா […]
பாலமேடு அருகே விற்பனைக்காக செல்ல இருந்த பசு மாடுடன் காளை மாடு பாசப்போராட்டம் நடத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. மதுரை பாலமேடு பகுதியில் வசித்து வருபவர் முனியாண்டி. இவர் பசு மாடு ஒன்றை நீண்ட வருடமாக வளர்த்து வருகிறார். இவரது வீட்டின் அருகே மஞ்சள் மலை கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் காலை ஒன்று பாரம்பரியமாக வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த காளையானது முனியாண்டி வீட்டின் வழியாக செல்லும்போது அவர் வளர்க்கும் பசு மாடு உடன் சேர்ந்து பழம், […]
ஓசூர் அருகே காதலி இறந்த துக்கத்தில் காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் வெட்டுவனம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை அடுத்த குமுதேபள்ளியில் தங்கி தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் வேலூரில் உள்ள லட்சுமி பிரியா என்னும் பெண்ணை நீண்ட வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விஷயம் பெண் வீட்டாருக்கு தெரியவர, அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து பெண்ணை கண்டித்துள்ளனர். […]
கரூர் அருகே காதலித்து திருமணம் செய்துகொண்ட மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியே அடுத்த அண்ணா காலனி தெருவில் வசித்து வந்தவர் மோகன். இவரது மனைவி சுகந்தி. இவர்கள் இருவரும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், இவர்கள் இருவருக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கடந்த மூன்று வருடங்களாக மோகனுக்கும் சுகந்திக்கும் இடையே […]