கரூர் அருகே பெண்ணிடம் பேசிய போது ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவரை 3 பேர் சேர்ந்து அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் நச்சலூர் பகுதியை அடுத்த காலனி தெருவில் வசித்து வருபவர் வடிவேல். இவர் நேற்று முன்தினம் அப்பகுதி வழியாக மாலை நேரத்தில் நடந்து வந்த ஒரு பெண்ணிடம் பேசியுள்ளார். சிறிது நேரம் நன்றாக பேசிக் கொண்டிருந்த இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனைக் கண்ட அதே நச்சலூர் பகுதியை சேர்ந்த […]
Tag: மாவட்ட செய்திகள்
கன்னியாகுமரி அருகே தந்தை ரீசார்ஜ் செய்யாத மன விரக்தியில் கல்லூரி மாணவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தளவாய்புரம் கிராமத்தில் வசித்து வருபவர் ஆண்டனி டேனியல். கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகன் ஆண்டோ பெர்லின் நாகர்கோவிலில் உள்ள தனியார் பாலிடெக்னிக் ஒன்றில் படித்து வந்துள்ளார். ஊரடங்கின் காரணமாக வீட்டில் இருக்கும் பெர்லின் எப்போதும் செல்போனில் வீடியோ கேம் விளையாடுவது வழக்கம். அதேபோல் வீடியோ கேம் […]
ஈரோடு அருகே பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஒருவர் தான் சேமித்து வைத்த ரூபாய் 24 ஆயிரம் மதிப்பிலான பழைய 500 1000 ரூபாய் நோட்டுகளை அரசு மாற்றி தருமா என கேள்வியுடன் கண்ணீர் விட்டபடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியை அடுத்த பொதியாமூக்கனுர் என்னும் கிராமத்தில் வசித்து வருபவர் சோமு. இவர் பார்வை இல்லாத மாற்றுத்திறனாளி ஆவார். குழந்தைகள் இல்லாத சோமு தனது மனைவி பழனியம்மாள் உடன் தனியாக வசித்து வந்துள்ளார். ஊரடங்கிற்கு முந்தைய காலம் […]
கொடைக்கானல் அருகே இரும்பு கதவின் மேல் பகுதியில் சிக்கி காட்டெருமை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் பேரிக்காய் சீசன் தொடங்கி விட்டதன் காரணமாக வனப் பகுதியில் இருக்கக்கூடிய காட்டெருமைகள் தோட்டத்திற்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தும், அவ்வப்போது குடியிருப்பு வளாகத்தில் சுற்றித்திரிந்தும் வந்தன. இந்நிலையில் எப்போதும் போல் பேரிக்காயை தின்பதற்காக காட்டெருமை ஒன்று தனியாக ஊருக்குள் வந்துள்ளது. எருமையை கண்ட நாய்கள் உடனடியாக குரைக்கத் தொடங்க மிரண்டுபோன காட்டெருமை ஓடியது. […]
சென்னையில் 300 டன் மருத்துவ கழிவுகளை பத்திரமாக அழித்துள்ளதாக மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு பணிகளை நேற்று மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அப்பகுதியில் உள்ள மக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறார்கள். அம்மாதிரியான பகுதிகளில் மக்கள் பயன்படுத்தக்கூடிய முகக்கவசம், கையுறை உள்ளிட்ட கொரோனா பரவலை ஏற்படுத்தும் மருத்துவ கழிவுகளை icmr மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுரையின்படி […]
சேலத்தில் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டியை முதியோர் இல்லத்தில் பரிதவிக்க விட்ட சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் 60 வயது நிரம்பிய மூதாட்டி ஒருவர் அங்குள்ள பழ கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அவருடைய பிள்ளைகள் குறித்த விவரங்கள் தெரிய வரவில்லை. ஊரடங்கின் போது அவர் உடல் நலம் சரியில்லாமல் பாதிக்கப்பட்டதாலும், அவரது பணியில் தொய்வு ஏற்பட்டதாலும் அவரை பாதுகாக்க முடியாமல் பழ கடை உரிமையாளர் சேலம் முதியோர் இல்லத்தில் கூட்டிவந்து […]
60 வயதிற்கு மேற்பட்டவர்கள் எந்த பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்று மதுரை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழகம் முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. இதுவரையிலும் தமிழகத்தின் தலைநகரமான சென்னை, அதைச் சுற்றி இருக்கக் கூடிய காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் தான் பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. இதனை தொடர்ந்து தமிழகத்தின் தெற்குப் பகுதியான மதுரையில் பாதிப்பு நாளுக்கு […]
ஈரோடு அருகே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மனைவியை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் நம்பியூர் பகுதியில் வசித்து வந்தவர் குமார். இவர் அதே பகுதியில் வாடகைக்கு ஆட்டோ ஒன்றை எடுத்து ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார் . இவரும் இந்துமதி என்பவருக்கும் இரண்டு ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் நடைபெற்ற நிலையில், ஒரு வயதில் மகனும் உள்ளார். இந்நிலையில் ஆட்டோ டிரைவர் குமார் நேற்று சாக்கு மூட்டைக்குள் காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து […]
கடலூர் அருகே வெளி மாவட்டத்தில் இருந்து வேன் பிடித்து வந்த 20க்கும் மேற்பட்டோரை கிராம மக்கள் ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியை அடுத்த காராமணிகுப்பம் கிராமத்தை சேர்ந்த 5 பெண்கள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் என்னும் பகுதிக்கு கரும்பு வெட்டும் வேலைக்கு சென்றனர். பின் பணி முடிந்ததும், அங்கிருந்து அரசின் அனுமதியைப் பெற்று இ பாஸ் மூலம் மீண்டும் காராமணிகுப்பத்திற்கு வேன் […]
அரியலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குழாய் மூலம் ஆக்சிஜன் வழங்குவதற்கான பணி விரைவாக நடைபெற்று வருவதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு பணிக்கான ஆலோசனை கூட்டம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ரத்னா தலைமை தாங்கினார். கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை மூச்சுத்திணறல் தான். அதனை சமாளிப்பதற்கு கண்டிப்பாக வெண்டிலேட்டர் தேவைப்படும். இவை குறிப்பிட்ட அளவிலான ஆக்சிஜனை நோயாளிகளுக்கு சப்ளை செய்து அவர்களை மூச்சுவிடும் சிரமத்தில் […]
காஞ்சிபுரம் அருகே மனைவியை கத்தியால் குத்தி கொன்று விட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் எண்ணைக்கார பகுதியில் வசித்து வருபவர் தேவிபிரசாத். இவர் அதே பகுதியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி என்பவர் வீட்டின் அருகே உள்ள சில வீடுகளில் வீட்டு வேலை பார்த்து வந்துள்ளார். தேவி பிரசாத்துக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு. நாள்தோறும் மது அருந்திவிட்டு மனைவியை இழுத்துப்போட்டு அடிப்பதை வேலையாக வைத்திருந்தார். அதேபோல் […]
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் நாளை முதல் அடுத்த மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என வருவாய் ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது ஆறாவது கட்ட நிலையில் ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் சமயத்தில், பல தளர்வுகள் ஏற்படுத்தபட்டாலும், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை 1 நாள் மட்டும் கொரோனா பாதிப்பை தடுப்பதற்காகவே முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் […]
சென்னையில் மட்டும் ஒரே நாளில் கொரோனாவால் 24 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், அதனுடைய பாதிப்பும், இறப்பு விகிதமும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கையும், இறப்பு விகிதமும் நாள்தோறும் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. சென்னை மாநகராட்சி அதிகாரிகளும் சுகாதாரத் துறையினரும் புது புது புது நடவடிக்கைகள் கொரோனாவுக்கு எதிராக மேற்கொண்டு வரும் பட்சத்தில், […]
திண்டுக்கல் அருகே தனது கணவருடன் தன்னை சேர்த்து வைக்குமாறு குழந்தையுடன் இளம்பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல் மாவட்டம் கொல்லம்பட்டி பகுதியைச் சேர்ந்த கார்த்திகா என்பவருக்கும், கரூர் மாவட்டம் தாந்தோனிமலை பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவருக்கும் கடந்த 2013 ஆம் ஆண்டு பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் கௌசிகா ஸ்ரீ என்ற 6 வயது குழந்தையும் உள்ளது. இந்நிலையில் குடும்ப தகராறு காரணமாக கார்த்திகா தனது மகளுடன் […]
ஈரோடு மாவட்டத்திற்குள் வர இ பாஸ் அப்ளை செய்யும் போது கொரோனா பரிசோதனை சான்றிதழை இணைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது தொடர்ந்து ஆறாவது கட்டமாக அமுலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தைப் பொருத்தவரை ஊரடங்கு அமலில் இருப்பதால் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்ல வேண்டுமெனில் இ பாஸ் கட்டாயமாக தேவைப்படுகிறது. இந்த இ பாஸ் திருமணம், இறப்பு, மருத்துவ எமர்ஜென்சி உள்ளிட்ட முக்கிய காரணங்களுக்காக […]
வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஊழியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட சம்பவம் சக ஊழியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியை அடுத்த மங்கலம்பேட்டை அண்ணாசிலை அருகே தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த நபர் ஒருவர் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டு உள்ளது. இதை அடுத்து அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்தி கொண்டதுடன், ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தனது உமிழ்நீரை […]
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஜூலை 12 முதல் 25ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆறாவது கட்ட நிலையில் ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வரும் சூழலில், பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் மக்கள் தளர்வுகளுடன் நடமாட தொடங்கியுள்ளனர். இருப்பினும் பாதிப்பு அதிகமாக இருக்கக்கூடிய சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கட்டுப்பாடுகள் கடமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் தமிழகத்தின் […]
கணவனுடன் ஏற்பட்ட தகராறில் 11 மாத குழந்தைக்கு தூக்கு மாட்டி விட்டு தாய் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் கந்திலியை அடுத்த நார்சாம்பட்டியை சேர்ந்தவர்கள் சிலம்பரசன்-கவிதா தம்பதியினர். இத்தம்பதியினருக்கு பதினோரு மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் வேறு ஒரு பெண்ணுடன் சிலம்பரசனுக்கு தொடர்பு இருப்பது கவிதாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் கணவன் மனைவி இடையே தகராறுஏற்பட்டு வந்துள்ளது. இதன் காரணமாக மிகுந்த மன வேதனைக்கு ஆளாகியுள்ளார் கவிதா. சம்பவத்தன்று […]
திருமணமான 8 மாதங்களில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் இருக்கும் எடமலைப்பட்டி அடுத்த புதூர் பகுதியை சேர்ந்தவர் விஷ்ணு. ஓட்டுநராக பணிபுரிந்து வரும் இவருக்கு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த நீலவேணி என்ற பெண்ணை கடந்த வருடம் நவம்பர் மாதம் திருமணம் செய்துவைத்தனர். திருமணத்திற்குப் பிறகு மாமனார், மாமியார், கணவர் என நீலவேணி கூட்டுக்குடும்பமாக மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை திடீரென நீலவேணியின் அலறல் சத்தம் கேட்டு […]
புதுக்கோட்டை அருகே கொரோனாவால் பாதிக்கப்பட்ட இளைஞருக்கு டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொண்டு காப்பாற்றிய அரசு மருத்துவர்களுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வரும் சூழ்நிலையில், உடம்பில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை கொள்ள நேரிடும் சூழ்நிலையில், மருத்துவமனையில் முதலில் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு, அதனுடைய முடிவு வெளியான பின்பு நோயாளிகளுக்கு சிகிச்சை முறை அளிக்கப்படுகிறது. இது பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளில் கடைபிடிக்கக் கூடிய ஒரு விஷயமாகும். அந்த […]
கோவையில் மைசூர்பாவை சாப்பிட்டால் கொரோனா குணமடையும் என விளம்பரம் செய்த கடை உரிமையாளரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை ஒருபுறம் மேற்கொண்டு வர, மற்றொருபுறம் இந்த வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடிப்பதில் உலக நாடுகளும் மும்முரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில் பதஞ்சலி நிறுவனம் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்ததோடு மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் அனுமதி இல்லாமல் […]
நம்மாழ்வார் கூற்றுப்படி விவசாயம் செய்து வரும் எம்.ஏ., எம்.பில். பட்டதாரி பெண் அனைவரது பாராட்டையும் பெற்று வருகிறார் சிவகங்கை அருகே பனையூரில் நம்மாழ்வார் மூலம் ஈர்க்கப்பட்ட பெண் விவசாயி ஜெயலக்ஷ்மி உழவில்லா இயற்கை விவசாயத்தில் சாதித்து வருகிறர். வறண்டு கிடந்த பூமியை இயற்கை விவசாயம் மூலம் பசுமையாக்கி உள்ளார் எம்.ஏ., எம்.பில். படித்து விட்டு விவசாயம் பார்த்து வரும் பெண் விவசாயி ஜெயலட்சுமி. 2 ஏக்கர் 60 செண்டில் கொய்யா, நாவல், வாழை பூந்திக்கொட்டை , நெல், […]
ஊனமற்ற முதியவர் தனக்கான உரிமையை கேட்டு ஆட்சியர் அலுவலகத்திற்கு 60 கிலோ மீட்டர் தூரம் மிதிவண்டியில் பயணித்தது பார்ப்போரை கலங்க வைத்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தை அடுத்த ஏனாநல்லூரின் பகுதியில் வசித்து வரும் 73 வயதான நடேசன் என்பவர், விவசாயக் கூலி வேலையும் மற்றும் கோல மாவு விற்பதும் போன்ற சில வேலைகளை செய்து வாழ்க்கையை வழிநடத்தி வருகின்றார். மாற்றுத் திறனாளியான இவர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் ஊரடங்கு போடப்பட்ட நிலையில் அவருடைய வாழ்வாதாரத்தை இழந்துள்ளார். […]
தனது குடும்பத்தின் வறுமையைப் போக்குவதற்காக சிறுமி செய்த செயல் தமிழக மக்களை கண்கலங்க செய்துள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், அரசுப்பள்ளிகளில் தனது பள்ளிப் படிப்பை படித்து வரும் மாணவ மாணவிகளில் பலர், தங்களது குடும்ப சூழ்நிலை காரணமாக ஊரடங்கில் வேலைக்கு சென்று வரும் அவல நிலையும் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஐந்து வருடங்களுக்கு முன் தந்தையை இழந்த தனது குடும்பம் மிகவும் கஷ்டப்படுவதை […]
கோவையில் இளம்பெண் ஒருவருக்கு ஆட்டோவில் வைத்து பிரசவம் பார்க்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் துடியலூர் பகுதியை அடுத்த ராக்கி பாளையம் ஏரியாவை சேர்ந்த கௌதம். இவரது மனைவி ஜோதி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து கௌதம் அவரது நண்பன் உதவியுடன் ஆட்டோவை எடுத்துக்கொண்டு துடியலூர் நோக்கி வேகமாக சென்றனர். […]
கோவில்களுக்குள் பூ, பழங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கோவில்கள், வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்காமல் மூடப்பட்டன. தற்போது ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதைத்தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் குறைவாக வருமானம் தரக்கூடிய கிராமப்பகுதிகளில் இருக்கக்கூடிய கோவில்களை திறக்க தொடர்ந்து பல மாவட்டங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் […]
மதுரையில் டெலிமெடிசன் முறை நல்ல பலன் தருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மதுரையில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டிய நிலையில், நேற்று முதலே ஒரு புதிய நடவடிக்கையை அம்மாவட்ட ஆட்சியர் மேற்கொள்ள உத்தரவிட்டார். அதாவது, டெலிமெடிசன் என்ற முறை மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் வீட்டில் தனிமைப்படுத்தும் வசதி இருக்கும் பட்சத்தில் அவர்களது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, பின் நாள் ஒன்றுக்கு இரண்டு முறை அவர்களது மொபைல் எண்ணுக்கு மருத்துவர்கள் கால் செய்து சிகிச்சைக்கான ஆலோசனைகளை வழங்கி, […]
சென்னையில் 20 வயது இளம் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய போலீஸ் ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு உள்ளார். சென்னை ஆர்கே நகர் காவல் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருபவர் ஜோசப். இவர் நேற்று காலை அண்ணா நகர் 6-வது தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது வீடு வீடாக சென்று அறிகுறிகள் ஏதும் இருக்கிறதா? என கொரோனா கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வந்த 20 வயது இளம் பெண் ஒருவரிடம், போலீஸ் ஏட்டான ஜோசப் சென்று அவரது […]
மதுரையில் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டியதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனுடைய பாதிப்பை தடுப்பதற்காக மாநில அரசும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை ஏற்படுத்திவரும் சூழ்நிலையிலும், இதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா அதிகரித்து வந்த சூழ்நிலையில், தற்போது சென்னையை தாண்டி பிற மாவட்ட பகுதிகளிலும் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில், விழுப்புரத்தில் இன்று ஒரே நாளில் 90 […]
திருநெல்வேலி அருகே சீருடை கூட அணியாத காவலர்கள் இளைஞரை வழிமறித்து தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் காவல் துறை அதிகாரிகள் சிலர் சீருடை கூட அணியாமல் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக ஒரே இருசக்கர வாகனத்தில் 3 வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்களை கலர் சட்டையில் இருந்த காவலர்கள் வழிமறித்து வாகனத்தை நிறுத்த வலியுறுத்திய போது நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆத்திரமடைந்த காவலர்கள், காரில் அவர்களை […]
கொரோனா பரவலைத் தடுப்பதற்காக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் முக்கிய வேண்டுகோள் ஒன்றை பொதுமக்களிடம் விடுத்துள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மாநில அரசும், சுகாதாரத் துறையும், பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் பாதிப்பு குறைந்தபாடில்லை. அந்தந்த மாவட்ட ஆட்சியர்களும், மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளும் பொதுமக்களிடம் நாள்தோறும் கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பல்வேறு அறிவுரைகளை கூறி வருகின்றனர். அந்தவகையில், இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஒரு முக்கிய வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில், கொரோனா வைரஸ் பரவாமல் […]
கொரோனா அறிகுறி இருந்தால் தங்களுக்கு வீடுகளிலேயே தனிமைப் படுத்திக் கொள்ளுமாறு மதுரை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மாநில அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. தமிழகத்தின் பல்வேறு முக்கிய மாவட்டங்களில் அதனுடைய பாதிப்பு தாறுமாறாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மதுரை உள்ளிட்ட மாவட்ட பகுதிகளில் இதனுடைய பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. சென்னையில் பாதிப்பு மிகப்பெரிய அளவில் பெருக நிலைமையை கட்டுக்குள் […]
கன்னியாகுமரியில் மணப்பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த 33 வயது வாலிபர் ஒருவருக்கும், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவருக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு முன்னதாக சாத்தூர் பகுதியில் இருந்து, மணப்பெண் உட்பட 9 பேர் ஒரு வேனில் கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதிக்கு வந்துள்ளனர். அப்போது ஆரல்வாய்மொழி சோதனைச் சாவடியில் இருந்த அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின் […]
ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களை பொருத்தவரையில் இ பாஸ் செயல்முறை குழப்பத்தை ஏற்படுத்துவதாக அம்மாவட்ட மக்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு தமிழகத்தில் அமலில் இருக்கும் பட்சத்தில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு கட்டாயம் இ பாஸ் தேவைப்படுகிறது. இ பாஸ் இல்லாமல் வேறு மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அடுத்த மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். இந்நிலையில் நாமக்கல்லில் இருந்து பல பொதுமக்கள் இ பாஸ் இல்லாமல் கருங்கல்பாளையம் சோதனைச்சாவடி வழியாக ஈரோடு மாவட்டத்திற்குள் நாள்தோறும் சென்று […]
கோவை மாநகர காவல்துறையினர் வாகன தணிக்கையில் இருக்கும்போது கேமராவை தங்களது சீருடையுடன் இணைத்து அணிந்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்ட இரண்டு வியாபாரிகள் அடித்து கொடூரமாக காவல்துறையினரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரிய அளவிலான பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்த வழக்கில் குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கிடைக்கும் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். அதேபோல் பொதுமக்களுடன் காவல்துறை அதிகாரிகள் நல்லுறவை […]
சென்னையில் கொரோனாவை குணப்படுத்த சித்த மருத்துவத்தை விரிவுபடுத்தவுள்ளதாக மாநகராட்சி கமிஷனர் தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமம் பகுதியில் அமைந்துள்ள ஜவஹர் இன்ஜினியரிங் கல்லூரி ஆனது கொரோனா வார்டாக மாற்றப்பட்டு, அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு அங்கே சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனுமதிக்கப்பட்ட 234 பேரில் 30 பேர் இந்த சிகிச்சையால் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இவர்களை பத்திரமாக வீட்டிற்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சியில் சென்னை மாநகர கமிஷனர் […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஆறாவது கட்ட நிலையில் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில் ஊரடங்கு தளர்வு ஏற்படுத்தப்பட்டும், பாதிப்பு அதிகமாக இருக்கக் கூடிய சிவப்பு மண்டலப் பகுதிகளில் கட்டுப்பாடுகள் கடுமையாக விதிக்கப்பட்டும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. அந்த வகையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட சில பகுதிகளில் […]
கொரோனாவை வென்ற காதல் தம்பதியினர் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். சென்னை செங்குன்றம் பகுதியை சேர்ந்த மதனகோபால் என்ற 76 வயது முதியவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே நீரழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், உள்ளிட்ட பாதிப்புகளும் இருந்துள்ளது. முதியவருக்கு உறுதி செய்யப்பட்டதும் அவரை அழைத்துச் செல்வதற்காக பொன்னேரி அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவ ஊழியர்கள் வந்திருந்தனர். இதையடுத்து அவரது 66 வயது மனைவி லலிதா அவரை தனியாக அனுப்பாமல், நான் உன்னுடன் வருகிறேன் […]
கொரோனா அதிகம் பரவும் நகரத்தில் உலக அளவில் 2 வது இடத்தை சென்னை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் ஹூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலக அளவில் 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. மிகப்பெரிய வல்லரசு நாடுகளிலும் இந்த வைரஸ் கோர தாண்டவம் ஆடி வரும் சூழ்நிலையில், இந்தியாவிலும் இதனுடைய பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது. சமீபகாலமாக டெல்லி, மகாராஷ்டிரா, சென்னை இந்த மூன்று பகுதிகளிலும் […]
சென்னையில் வாடகைக்கு இருக்கும் நபர்களின் விபரங்களை வீட்டு உரிமையாளர்கள் காவல்நிலையத்தில் அளிக்க வேண்டுமென காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் வாடகை வீட்டில் இருக்கும் வாடகைதாரர்கள் விபரங்களை வீட்டு உரிமையாளர்கள் இன்னும் 60 நாட்களுக்குள் வீட்டின் எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்தில் கொண்டுபோய் அளிக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் துறை உத்தரவிட்டு உள்ளது. இந்த இந்த உத்தரவிற்கு செவிசாய்க்காமல் இருந்தால் வீட்டு உரிமையாளர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூபாய் ஆயிரம் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும் […]
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா பாதிப்பு தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வர மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் தங்களது இடைவிடாது சேவையை தொடர்ந்து மக்களுக்கு அளித்து வருகின்றனர். இதன் மூலம் மக்களுக்கு சேவை செய்யும் இவர்களும் கொரோனாவால் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவல்துறை அதிகாரியான பாலமுரளி என்பவர் கொரோனாவுக்கு முதல் பலியானார். இவரை […]
சென்னை அருகே தாயும் மகளும் ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டம் கீழ்கட்டளை துரைசாமி நகரை சேர்ந்தவர் பிரபாவதி. இவரது கணவர் கணேசன் என்பவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இருவரையும் பிரபாவதி தந்தையான செல்வராஜ் என்பவர் பராமரித்து வர, பேத்தி சோபனா அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபகாலமாக பிரபாவதி எதையோ இழந்தது போல் காட்சியளிக்க […]
நெய்வேலி அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பான ஒரு சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ள என்எல்சி அணுமின் நிலையத்தில் பாய்லர் வெடித்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 16 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து ஒருபுறம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பாக சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அவையாவன, […]
கொரோனா களபணியாளர்களிடம் உண்மையை கூறுங்கள் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. கொரோனா பாதிப்பானது தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனுடைய பாதிப்பை குறைப்பதற்காக ஊரடங்கு ஒருபுறம் அமுலில் இருக்கும் நிலையில், மற்றொரு புறம் சென்னை மாநகராட்சியின் சுகாதாரத்துறை அதிகாரிகளும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஏனெனில், சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் மிக அதிக அளவில் கூடிக்கொண்டே செல்கிறது. தற்போது பரிசோதனையை தீவிரப்படுத்தும் விதமாக சென்னையில் […]
பிரசவத்தின்போது மனைவியுடன் இருக்க முடியாத வருத்தத்தில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் விக்கி. இவர் தனியார் சாயப்பட்டறையில் கூலி வேலை செய்து வருகின்றார். சென்ற வருடம் விக்கிக்கும் சென்னை தாம்பரத்தை சேர்ந்த ரோஜா என்ற பெண்ணுக்கும் திருமணம் நடந்தது. இதனை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு ரோஜா கர்ப்பமானதால் தாய் வீட்டிற்கு சென்றார். சில தினங்களில் குழந்தை பிறக்கப் போவதாக விக்கிக்கு ரோஜாவின் தாய் அலைபேசி மூலமாக தெரிவித்துள்ளார். […]
திருச்சியில் பொதுமக்களுடன் நல்லுறவை பேணாத 80 காவலர்கள் பணியில் இருந்து விடுக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் ஊரடங்கு நேரத்தை தாண்டி சிறிது நேரம் கூடுதலாக கடை திறந்த காரணத்தினால் தந்தையும், மகனும் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டு அங்கே கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் தற்போது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. பொதுமக்கள் அனைவரும் இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நீதி கிடைக்கப் போகிறது என்பதை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். […]
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்படவில்லை. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டும், அதனுடைய பாதிப்பு குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகின்றன. தினமும் மாலையில் புதிய பாதிப்பு எண்ணிக்கை சுகாதாரத் துறை அதிகாரிகளால் வெளியிடப்படும். அதன்படி, இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில் சென்னையில் அதிகபட்ச பாதிப்பாக 2716 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையை தாண்டி […]
புதுக்கோட்டையில் சுபநிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முன் உரிய அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு 5வது கட்ட நிலையில் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் மட்டும் பொது முடக்கம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, பல பகுதிகளில் ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த சமயத்தில் சுப நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றில் ஐம்பதுக்கும் குறைவான நபர்களை வைத்து நடத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தி […]
வேதிப்பொருட்கள் அல்லாத காய்கறி பழங்களில் இயற்கையாக உருவாக்கப்பட்ட கிருமி நாசினியை தெளிக்கும் சுரங்கப்பாதை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த கொரோனா பாதிப்பை முற்றிலும் நீக்குவதற்கு ஒரே வழி நம்மையும், நம்மைச் சுற்றி இருக்கக் கூடிய அலுவலகம், வீடுகளையும் சுத்தமாக வைத்திருப்பது தான் என்பது நிதர்சனமான உண்மை. எனவே அலுவலகங்களிலும், வீடுகளிலும் மக்களும் அதிகாரிகளும் தொடர்ந்து கிருமிநாசினி தெளிக்கும் பணியை […]
கொரோனாவால் கணவன் உயிர் இழந்த துயரத்தில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பிரபாகரன்-ராம்பிரபாவதி தம்பதியினர். பிரபாகர் ரயில்வேயில் வேலை பார்த்து வரும் நிலையில் ராம்பிரபாவதி தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 24 ஆம் தேதி பிரபாகரனுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் மதுரை அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மூன்று நாட்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறலால் […]