சகோதரனை விடுதலை செய்யக்கோரி தன் குழந்தைகளுடன் பெண் நடுரோட்டில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது உளுந்தூர்பேட்டை அருகே இருக்கும் கூவாடு கிராமத்தை சேர்ந்தவர்கள் வள்ளிகந்தன்-அபிராமி தம்பதியினர். இத்தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட இதனால் வள்ளி காந்தன் அபிராமியை தாக்கியுள்ளார். இதனை அறிந்த அபிராமியின் சகோதரர்கள் வள்ளிகந்தனை தட்டிக் கேட்டனர். அதில் அவர்களிடையே கைகலப்பு ஏற்பட்டு காவல்துறையினருக்கு தகவல் சென்றது. இதில் அபிராமியின் சகோதரர் ஜானகிராமன் என்பவரை காவல்துறையினர் பிடித்து […]
Tag: மாவட்ட செய்திகள்
முயல் வேட்டையில் ஈடுபட்ட 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பள்ளத்திவிடுதி கிராமத்தில் அமைந்துள்ள வனப்பகுதியில் அடையாளம் தெரியாத சிலர் முயல் வேட்டை செய்து வருவதாக ஆலங்குடி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து துணை ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் காவலர்கள் பள்ளத்திவிடுதி வனப்பகுதிக்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமளிக்கும் விதத்தில் 6 பேர் கொண்ட கும்பலை கண்டனர். காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை […]
தாயின் மீது சந்தேகம் கொண்டு தந்தை கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு சென்று விட குழந்தை ஆதரிக்க ஆளின்றி தவித்து வருகின்றது விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர்கள் சரவணகுமார்-ஜெயலட்சுமி தம்பதியினர். இரண்டு வருடங்களுக்கு முன்பு இத்தம்பதியினருக்கு திருமணம் முடிந்த நிலையில் கயல் என்ற 8 மாத குழந்தை உள்ளது. கணவன் மனைவி இருவரும் வெவ்வேறு தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் நிலையில் மனைவி ஜெயலட்சுமி மீது சரவணகுமாருக்கு சந்தேகம் ஏற்பட்டு தகராறு செய்து வந்துள்ளார். கடந்த வியாழனன்று மீண்டும் மனைவியுடன் […]
பொது வெளியில் எச்சில் துப்பினால் ரூபாய் ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடு முழுவதும் கொரானா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதனுடைய பாதிப்பை தடுப்பதற்காக மத்திய அரசும், சுகாதாரத் துறையும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. இதற்கான காரணமாக பொதுமக்கள் மத்தியில் சுய கட்டுப்பாடு இல்லை என்பது குற்றச்சாட்டாக உள்ளது. பொதுமக்கள் வெளியே செல்லும் போது சமூக இடைவெளியை […]
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் காவல்துறை அதிகாரிகள் தாக்கி கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் ஊரடங்கு நேரத்தைத் தாண்டி சிறிது நேரம் கூடுதலாக கடை நடத்திய வியாபாரிகளான ஜெயராஜ் , பென்னிக்ஸ் ஆகியோரை காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதில் அவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் சூழ்நிலையில், தூத்துக்குடி காவல் அதிகாரிகள் குறித்த புகார்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வந்தவண்ணம் இருக்கின்றன. […]
பிரியாணி வாங்கித் தராத கோபத்தில் கணவர் காப்பாற்றி விடுவார் என்ற நம்பிக்கையில் மனைவி தீக்குளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது மகாபலிபுரம் அருகே இருக்கும் பூஞ்சேரி பகுதியில் மனோகரன் தனது மனைவி சௌமியா மற்றும் தனது 2 குழந்தைகளுடன் வசித்து வருகின்றார். கடந்த புதனன்று மனோகரன் வசித்து வரும் வீட்டின் உரிமையாளர் மனோகரனிடம் பணம் கொடுத்து பிரியாணி வாங்கி தருமாறு கேட்டுள்ளார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த மனோகரனின் மனைவி தனக்கும் பிரியாணி வேண்டுமென கேட்டுள்ளார். ஆனால் மனோகரன் தன்னிடம் பணம் […]
குளியலறையில் பதுங்கியிருந்த பாம்பு பிடிபட்டபோது ஏராளமான குட்டிகளை ஈன்றுள்ளது கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் கோவில்மேடு திலகர் வீதியில் இருந்த வீட்டின் குளியலறையில் பாம்பு ஒன்று பதுங்கி இருந்துள்ளது. அதனை கண்ட வீட்டின் உரிமையாளர் மனோகரன் அதே பகுதியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் முரளி என்பவரிடம் தகவல் கொடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த முரளி குளியல் அறையின் மூலையில் பதுங்கி இருந்த பாம்பை மீட்டு தான் கொண்டு வந்த பையில் வைத்து எடுத்துச் சென்றார். அதை வனப்பகுதிக்குள் […]
பத்து வருடங்களுக்கு பிறகு கணவருடன் சேர்ந்த மனைவி அவரை கொலை செய்து புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சேலம் மாவட்டம் சிவதாபுரம் அருகே இருக்கும் செஞ்சிகோட்டை பகுதியைச் சேர்ந்த சேட்டு பூங்கொடி தம்பதியினருக்கு பவித்ரா என்ற மகளும் தமிழரசன் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் 10 வருடங்களுக்கு முன்னர் பூங்கொடி அவரை பிரிந்து சென்றார். அதன்பிறகு புருஷோத்தமன் என்பவருடன் சேர்ந்து பூங்கொடி வாழ தொடங்கியுள்ளார். இந்நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு […]
மதுரை பரவை சந்தையில் பணியாற்றிய 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையை போல் மதுரை மக்கள் அதிகம் பயன்படுத்தக்கூடிய ஒரு காய்கறி சந்தை என்றால் அது பரவை காய்கறி சந்தை தான். இந்த சந்தையில் மதுரை மக்கள் ஏராளமானோர் நாள் தோறும் தங்கள் வாழ்க்கைக்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களான காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். சமீபத்தில் மதுரை மாநகரில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில், […]
ஈரோடு பேருந்து நிலையத்தில் இன்று முதல் சில்லரை வியாபாரத்திற்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனை தடுப்பதற்காக மாநில அரசும் சுகாதாரத் துறையும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில் பிற மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகமாகி விட்டால் நிலைமையைக் கட்டுப்படுத்துவது கடினமாகிவிடும் என்பதால், சென்னைக்கு நிகராக மற்ற மாவட்டங்களில் பாதுகாப்பு பணியானது […]
குடிபோதையில் தகராறு செய்த கணவரை குடும்பத்தினருடன் சேர்ந்து மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் இலையூர் மேலவெளி பகுதியை சேர்ந்தவர் ராஜசேகர், ஓட்டுநராக இருந்து வரும் இவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் . தினமும் மது அருந்திவிட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இரண்டு தினங்களுக்கு முன்பும் மது போதையில் இருந்தவர் தூக்கிட்டு தற்கொலை செய்வதற்கு முயற்சி செய்ததாக கூறப்படுகின்றது. வழக்கம்போல் நேற்று மது அருந்திவிட்டு வந்த ராஜசேகர் தனது மனைவி, […]
கடையத்தில் விவசாய நிலங்களை கரடிகள் சேதப்படுத்துவதால் மக்கள் பயத்தில் ஆழ்ந்துள்ளனர் கடையம் வனச்சரக பகுதி, அம்பாசமுத்திரம் கோட்டம் மற்றும் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் ஆகிய இடங்களில் இருந்து வன விலங்குகள் வெளியேறி வீட்டு விலங்குகளை தாக்கியும் விளைநிலங்களை சேதப்படுத்துவதும் தொடர்ந்து வருகின்றது. அதேநேரம் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கரடிகள் தோட்டங்களில் இருக்கும் தென்னை, மா, பலா உள்ளிட்டவைகளை அதிகம் சேதப்படுத்துகின்றன. இதுகுறித்து வனத்துறையினருக்கு புகார் கொடுக்கப்பட்டதும் பல இடங்களில் கண்காணித்து கரடி பிடிப்பதற்கு கூண்டுகளை வனத்துறையினர் […]
இம்முறை சென்னையில் ஊரடங்கை கடுமையாக கடைபிடிக்கவுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்களது வீடுகளுக்குள் முடங்கி இருந்தவரை கொரோனா பாதிப்பு ஓரளவு கட்டுக்குள் இருந்தது. பின் 5வது கட்ட ஊரடங்கில் தளர்வுகள் ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னை உள்ளிட்ட பலமாவட்டங்களில் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. எனவே தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு அமல் படுத்தபடவிட்டாலும், சென்னை உள்ளிட்ட பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கடுமையாக்கப்பட […]
முழு ஊரடங்கில் கடைபிடிக்க வேண்டிய சில கட்டுப்பாடுகளை சென்னை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் சென்னையில் கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து வரும் 19ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது இதனால் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படும் என சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விதித்த கட்டுப்பாடுகள், உணவு விநியோகம் செய்பவர்கள் மற்றும் வங்கிக்குச் செல்லும் நபர்கள் முறையான அடையாள அட்டை வைத்திருந்தால் அனுமதிக்கப்படுவார்கள். அடையாள அட்டை போலியானது என கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் […]
சென்னையிலிருந்து பொய்யான காரணத்தை கூறி தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்ற நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள இடங்களில், ஐந்தாவது கட்ட இடங்களில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டாலும் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் மீண்டும் தளர்வுகள் நீக்கப்பட்டு ஊரடங்கு தீவிரப்படுத்தப்படவுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் ஜூன் 19 முதல் 30ம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும் என தமிழக […]
கொரோனாவிடமிருந்து தப்பிப்பதற்கான வழி முறைகள் குறித்து குணமடைந்த வாலிபர் ஒருவர் வீடியோ வெளியிட்டுள்ளார். கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் சுகாதாரத்துறை அதிகாரிகள் நாள்தோறும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு குறைந்த பாடில்லை. நாள்தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. ஒரு புறம் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்தாலும், மறுபுறம் குணமடைந்து வீட்டிற்கு செல்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பிய இளைஞர் ஒருவர் […]
தூத்துக்குடி அருகே SSRBS என்ற தனியார் பேருந்து நிறுவனம் தனது பயணிகளுக்கு கட்டணம் வசூலிக்காமல் இலவச போக்குவரத்தை மக்களுக்கு வழங்கியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.இதை தொடர்ந்து பல குடும்பங்கள் வேலை வாய்ப்பின்றி வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வந்தனர். இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்படவே, தொடர்ந்து பொதுமக்கள் பொதுப் போக்குவரத்தை உபயோகப்படுத்த தொடங்கிவிட்டனர். இருப்பினும் செலவுக்கு பணம் இல்லாததால் போக்குவரத்து செலவுக்கு என்ன செய்வது என்ற கேள்வி அவர்கள் மத்தியில் தொடர்ந்து எழுந்த […]
மதுரையில் முககவசம் அணியாமல் வெளியே சுற்றினால் ரூ 200 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஊரடங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும், மக்களின் சின்ன சின்ன அலட்சியங்களும், கொரோனா குறித்த புரிதல் இல்லாததன் காரணமாகவும், கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. முகக்கவசம் இல்லாமல் வெளியே வரக்கூடாது எனவும், வெளியே வரும்போது மக்கள் சமூக இடைவெளியை […]
சென்னையை விட்டு இபாஸ் இல்லாமல் வெளியேறினால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 5-வது கட்ட ஊரடங்கு அமல் படுத்த பட்ட சமயத்தில், பல தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. இந்த தளர்வுகளுக்கு பின் குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகரிக்க தொடங்கியது. இதனால் மீண்டும் தமிழகம் முழுவதும் பொது ஊரடங்கு அமல் படுத்தப்படவிட்டாலும், பரவாயில்லை. பாதிப்பு அதிகம் உள்ள […]
MGR பல்கலைக்கழக வளாகத்தில் கொரோனா மருத்துவ கழிவுகளை சாப்பிட்ட 10 நாய்கள் உயரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் மேற்கொண்டு வருகின்றனர். இருந்தபோதிலும், அதனுடைய பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது ஒரு சில அதிகாரிகளின் அலட்சியத்தால் மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளி ஒருவர், இறந்த […]
வந்தவாசி அருகே மின்வேலியில் உயிரிழந்த மாற்றுத்திறனாளியை பெண் காவல் அதிகாரி தூக்கி சென்ற சம்பவம் காண்போரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நேற்று வந்தவாசி அருகே கரும்புத் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியல் சிக்கிய மாற்றுத்திறனாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. மின் வேலியில் சிக்கி உயிரிழந்த அந்த மாற்று திறனாளியை தூக்குமாறு அந்த பெண் காவல்துறை அதிகாரி பொது மக்களிடம் கேட்டபோது கொரோனா அச்சம் காரணமாக தூக்க மறுத்து விட்டார்கள். இருப்பினும் […]
தூத்துக்குடி அருகே காதல் தோல்வியில் காவலர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறை கீழ செக்காரக்குடி பகுதியில் வசித்து வரும் காவலர் ஒருவர் இன்று காலை அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்கான காரணமாக காதல் தோல்வி கூறப்படுகிறது.இவர் நீண்ட நாட்களாக ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அது தோல்வி அடையவே, ஏற்பட்ட மன விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் […]
அமைச்சர் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் 5 கிலோ அரிசி எப்படி போதும் என பொதுமக்கள் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது திருச்சி மாவட்டத்தில் இருக்கும் ஸ்ரீரங்கம் மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் பொது மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. அமைச்சர் வளர்மதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 2005 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. பொருட்களை வாங்க வந்த பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, முகக் கவசங்கள் அணிந்து, வரிசையில் நின்று வாங்கிச்சென்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் […]
புதுகோட்டை மாவட்டத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்ணை எரித்து கொன்ற 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் விவேக் மற்றும் சாவித்திரி. இவர்கள் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள நினைத்து, தங்களது வீடுகளில் காதலை தெரிவிக்க, இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை தொடர்ந்து தங்களது வீடுகளில் உள்ள பெற்றோர்களை பேசி புரிய வைக்க இருவரும் நினைத்த சமயத்தில், சாவித்திரி சில நாட்களாக […]
மையலாடுத்துறை அருகே போலீசாரை போடுவேன் என வசனமிட்ட இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை அருகே வசித்து வருபவர் செல்வமணி. இவர் காவல் நிலையம் ஒன்றில் உள்ள போலீஸ் தொப்பியை திருடி அதனை தலையில் மாட்டிக்கொண்டு புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வீர வசனத்துடன் பதிவிட்டிருந்தார். இந்த வசனம் வைரல் ஆகவே இதை கண்ட மயிலாடுதுறை காவல்துறையினர் உடனடியாக செல்வமணியை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர் குறிப்பிட்டிருந்த வசனம் என்னவெனில், யாருக்கேனும் போலீஸ் தொப்பியை போட தைரியம் […]
ஸ்ரீபெரும்புதூர் MLA வுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் தமிழக மக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது. அரசியல் வட்டாரங்களிலும் கொரோனா பாதிப்பைத் தடுக்க ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதையடுத்து வாழ்வாதாரம் நிறைய பேருக்கு பாதிக்கப்பட்டது. அவர்களுக்கு உதவும் விதமாக அதிமுக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் தொடர்ந்து பல உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், அதிமுக சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மண்டலங்களாக […]
இன்று முதல் 81 குழுக்கள் மூலமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பரிசோதனை செய்யும் முயற்சியை சுகாதாரதுறை அமைச்சர் விஜய பாஸ்கர் அறிமுகபடுத்தியுள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட சிகப்பு மண்டலங்களில் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. எனவே இப்பகுதிகளில் பரிசோதனையை அதிகப்படுத்தி நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து கொரோனாவை குறைப்பதற்கான முயற்சியில் தமிழக அரசும், சுகாதாரத் துறையும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை […]
சென்னை ராஜாஜி மருத்துவ மனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா உறுதி செய்யப்படவில்லை. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. சென்னையில் கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதில் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் காட்டிலும் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படுவது மிகுந்த மனவேதனை அளிப்பதாக உள்ளது. சென்னையில் இதுவரை 191 கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில், ராஜாஜி மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு உரிய முறையில் […]
மதுரை மாவட்ட ஆட்சியரிடம் பிச்சைக்காரர் ஒருவர் 3 வது முறையாக ரூ10,000 நிதி என 3 முறை வழங்கியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், ஊரடங்கு தொடர்ந்து 5 வது கட்ட நிலையில், அமுலில் உள்ளது. பலர் வேலை வாய்ப்பை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். அவர்களுக்கு பல தொண்டு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் என பலர் நிவாரண உதவி அளித்து வருகின்றனர்.இந்நிலையில் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட பிச்சைக்காரர் ஒருவர், […]
கன்னியாகுமரி அருகே பேஸ்புக் மூலம் பழகிய பெண்ணிடமிருந்து 10 சவரன் நகைகளை ஏமாற்றி பறித்துச் சென்றவனை போலீஸார் தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் வேர்கிளம்பி பகுதியை சேர்ந்தவர் சபிதா. இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவருக்கு பேஸ்புக் மூலம் ஜோஸ் என்ற இளைஞனுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்த நிலையில் தனக்கு அவசரமாக பணம் தேவைப் படுவதாக கூறியிருக்கிறார் […]
முன்னாள் ராணுவ வீரர் கொலை வழக்கில் அவரது அண்ணன், அவரது மகன் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை அடுத்த எல்என் கொல்லைமேடு கிராமத்தில் வசித்து வந்தவர் கிருஷ்ணன். இவர் ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவரது அண்ணன் தாமோதரன் வயது 70. இந்நிலையில் கிருஷ்ணன் பொது இடத்தில் தண்ணீர் ஏற்றும் அறை ஒன்றை கட்டியுள்ளார். இதனை தாமோதரனும் அவனுடைய மகன் மற்றும் பேரன்கள் ஆகியோர் சேர்ந்து […]
தேனி அருகே 2வது மனைவி இறந்த சோகத்தில் கணவன் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்தையா என்பவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவிக்கு குழந்தை இல்லாத காரணத்தினால், அவர் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இரண்டாவது மனைவிக்கு இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அனைவரும் மும்பையில் இட்லி கடை வைத்து பிழைப்பை ஓட்டி வந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக […]
ராணிப்பேட்டை அருகே 1 1/2 வயது குழந்தை மூச்சு திணறி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியை அடுத்த சின்ன பட்டு கிராமத்தில் வசித்து வரும் தனபால் என்பவரது மகள் திவ்யா ராணி என்பவருக்கும், திருப்பத்தூர் பகுதியில் மட்டுபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நரேஷ்குமார் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று இருவரும் சந்தோஷமாக வாழ்க்கையை வாழ்ந்து வந்த நிலையில், சென்ற ஆண்டு இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியில் வீட்டை விட்டு […]
புதுக்கோட்டை கொரோனா பாதிப்பே இல்லாத ஆலங்குடியில் சென்னையில் இருந்து மாணவர்கள் வந்த நிலையில்கொரோனா உறுதி செய்யப்பட்டது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் வசித்து வரும் இரண்டு பெண்கள் சென்னையில் தனது கல்லூரி படிப்பை படித்து வந்துள்ளனர். அதில், ஒருவர் பிஎஸ்சி நர்சிங் படிப்பையும், மற்றொருவர் எம்பிஏ படிப்பையும் படித்து வந்துள்ளனர். இவ்வாறு இருக்கையில், கடந்த ஜூன் 7ஆம் தேதியன்று இருவரும் தங்களது சொந்த ஊருக்கு செல்ல விருப்பம் தெரிவித்து இபாஸ் பெற்று சென்னையில் […]
மதுரையில் ஒரே மாதத்தில் குழந்தை பிறப்பு எண்ணிக்கை 1,413 என பதிவாகியுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு 5வது கட்ட நிலையில் அமலில் உள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான தனியார் மருத்துவமனைகள் மூடப்பட்டு அரசு மருத்துவமனைகளும், அரசு அனுமதி அளித்த தனியார் மருத்துவமனைகளும் மட்டுமே செயல்பட்டு வருகின்றனர். அந்த வகையில், மதுரை அரசு மருத்துவமனை தமிழகத்திலேயே மிகப் பெரிய அளவிலான மருத்துவமனைகளில் ஒன்று. இங்கு மதுரை மட்டுமல்லாமல் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் […]
கிருஷ்ணகிரி அருகே காளை மாட்டை கல்லால் தாக்கி கொன்ற குடிகார வாலிபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பகுதியில் வசித்து வரும் வெற்றிவேல் என்பவர் சென்னசந்திரம் கிராமத்தில் நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு காளை மாடு என்றால் அவ்வளவு பிடிக்கும். தனது வீட்டின் அருகிலேயே கொட்டகை அமைத்து காளை மாடுகளை வளர்த்து வருகிறார். எருதுவிடும் விழாவில், பங்கேற்க வைத்து தனது காளை மூலம் பல பரிசுகளை அவர் வென்றுள்ளார். இந்நிலையில் நேற்று […]
கிருஷ்ணகிரி அருகே 3 விவசாயிகளை கொன்ற யானையை மயக்க ஊசி போட்டு பிடித்து பத்திரமாக காட்டிற்குள் விட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சுற்றி வருகின்றனர். இந்த வனப் பகுதிகளை சுற்றிலும் சிறு குறு கிராமங்கள் ஏராளம் உள்ளன. 200-க்கும் மேற்பட்ட யானைகளில் ஒரு யானை மட்டும் மிகுந்த ஆத்திரத்துடன், கிராமப் பகுதிகளைச் சுற்றி வந்துள்ளது. அதிகம் கோபம் கொள்ளும் அந்த யானை குடியிருப்புக்குள் புகுந்து இதுவரை தேன்கனிக்கோட்டை […]
திண்டுக்கல்லில் பேருந்தில் சின்ன இடைவெளி கூட இல்லாமல் அலைமோதிய மக்கள் கூட்டத்தால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே தமிழகத்தில், திண்டுக்கல், கோயம்புத்தூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சீராகக் குறைந்து எப்போதாவது ஓரிரு பாதிப்புகள் மட்டுமே தென்பட்டு வருகின்றன. பல மாவட்டங்கள் பச்சை மண்டலங்களுக்கும் மாற்றப்பட்டு விட்டன. இந்நிலையில் ஊரடங்கு ஐந்தாவது கட்ட நிலையில் […]
கோவையில் இளைஞர்களால் கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய கோயம்புத்தூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும் ஓரிரு பாதிப்புகள் மட்டுமே அவ்வப்போது வெளிப்படும் நிலையில்,நோய் பாதிப்பு குறைந்துவிட்டது என்ற அலட்சியத்தில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருக்கக்கூடிய இளைஞர்கள் கொரோனாவை பரப்பும் வகையில், பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். […]
தாய் மாமாவிற்கு இரண்டாவதாக திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்த நிலையில் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது சென்னை முகப்பேர் அடுத்த காளமேகம் சாலை பகுதியில் வசித்து வருபவர் ரவி. இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. ரவி நான்கு வருடங்களுக்கு முன்பு இவரது மனைவி இறந்து விட்டதால் குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். பின்னர் ரவியின் அக்கா மல்லிகா என்பவரது மகள் திவ்யா கடந்த மூன்று மாதங்களாக தாய் மாமாவான […]
முழு ஊரடங்கை காரணம் காட்டி சென்னையை விட்டு தப்பி செல்ல முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து திருப்பி அனுப்பி வருகின்றனர். கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. பிழைப்பிற்காக சென்னை வந்த பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்குச் செல்ல முடியாமல் மாட்டிக் கொண்டனர். சிலர் சென்னையில் கொரோனா அதிகம் பரவி வருவதால் தென்மாவட்டங்களில் இருக்கக்கூடிய தனது உறவினர்கள் வீட்டிற்கு செல்லலாம் என தமிழகத்தில் இருந்து கன்னியாகுமரி வரையிலும் நாள்தோறும் அதிகாரிகளுக்கு தெரியாமல் பயணிப்பவர்கள் […]
நாளை முதல் நடமாடும் ஆம்புலன்ஸ் மூலமாக கொரோனா சோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வரும் சூழ்நிலையில், சென்னையில் அதனுடைய தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனுடைய தாக்கத்தைக் குறைப்பதற்காக தமிழக அரசும், சுகாதாரத் துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் பட்சத்திலும், பாதிப்பு குறைந்தபாடில்லை. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்களின் தொடர்பிலிருந்து கண்டறிய பட்டவர்கள்தான். இந்நிலையில் கொரோனா நோயை விரைவில் கட்டுப்படுத்தி கொரோனா இல்லாத மாநிலமாக […]
கொரோனா அறிகுறிகள் இருந்தால் மட்டும் தான் தனிமைப்படுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், அதனை கட்டுப்படுத்த உதவி சென்னை மாநகராட்சியும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா பரிசோதனைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று மாலை சென்னை மாநகராட்சி பரிசோதனை மேற்கொள்ளும் அனைவருமே, 14 நாட்கள் தனிமைப் படுத்தப்பட வேண்டும் என்று அறிவித்தது. இந்நிலையில் கொரோனா பரிசோதனை என்பது பொதுவானது. நிறைய பேரிடம் […]
சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு செல்ல விரும்புவோருக்கான இ பாஸ் நிறுத்தப்படவில்லை என தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக ஆரம்ப காலகட்டத்தில் ஊரடங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வந்தது. அப்போது கொரோனா பாதிப்பு குறைந்து காணப்பட்டாலும், தற்போது ஊராடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்ட பின் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும், சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துடன், சென்னை உயர் நீதிமன்றத்திலும் முழு ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் […]
சென்னையில் மட்டும் 191 கர்ப்பிணி பெண்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் படிப்படியாக பரவி கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்தியாவிலும் இதனுடைய பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வந்தாலும், பொதுமக்கள் மத்தியில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்த பயம் தற்போது இல்லை. அதற்க்கான காரணம் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கைக்கு ஓரளவு இணையாக குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கையும் சீராக அதிகரித்து வருவதால், மக்கள் மத்தியில் ஒரு விதமான […]
கொரோனா பாதிப்பால் சென்னையை வெறுத்து புறநகர் நோக்கி மக்கள் கூட்டம் படையெடுத்து செல்கிறது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் தற்போது கொரோனாவின் தலைநகராக மாறிவருகிறது. இங்கே நாளுக்கு நாள் இந்த வைரஸின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வர, மக்களிடையே அச்சம் எழுந்து கொண்டே வருகிறது. இதனால் சென்னைக்கு பிழைப்பிற்காக வந்த பலரும் இங்கே வசிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், தங்களது சொந்த ஊருக்கு இ பாஸ் இல்லாமல் கூட வாங்காமல் சட்டவிரோதமாக தொடர்ந்து சென்ற வண்ணம் உள்ளனர். காவல்துறையினர் […]
செங்குன்றத்தில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த இனி வாரத்தில் 3 நாள்கள் மட்டுமே கடைகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் அமல் படுத்தப்பட்டு இன்று வரை ஐந்தாவது கட்ட நிலையில் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. இருப்பினும் ஒருசில தளர்வுகளின் அடிப்படையில் தனிக் கடைகள் அனைத்தும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. கொரோனா குறைந்து காணப்பட்ட சமயத்தில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு, தற்போது அதிகரித்து வரும் சூழ்நிலையில் […]
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசுடன் இணைந்து 15 நாட்கள் வரை கடைகளை அடைக்க தயாராக இருப்பதாக வணிகர் சங்க தலைவர் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு இன்றுவரை ஐந்தாவது கட்ட நிலையில் தொடர்ந்து நடைமுறையில் உள்ளது. இருப்பினும் ஒருசில தளர்வுகளின் அடிப்படையில் தனிக் கடைகள் அனைத்தும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு குறைந்து காணப்பட்ட சமயத்தில் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு, தற்போது அதிகரித்து […]
தொண்டை வலி என வந்தவரை 10 அடி தூரத்தில் நிறுத்தி டார்ச்லைட் மூலம் மருத்துவர்கள் சிகிச்சை அளித்த வீடியோ குறித்து மருத்துவர்கள் சங்கம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் பகுதியில் செயல்பட்டுவரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில், வாலிபர் ஒருவர் தொண்டை வலிக்கான சிகிச்சை பெற சென்றுள்ளார். அங்கு சென்ற அவரை மருத்துவர்களும், மருத்துவருக்கு உதவியாக பணியாற்றி வந்த பெண் ஒருவரும் 10 அடி தூரத்திற்கு முன்பே நிறுத்தி டார்ச் லைட் அடித்து தொண்டையை காட்டும் […]
சென்னையில் கண்டிப்புடன் முழு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும் என வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையில் முழுமையான ஊரடங்கு கண்டிப்புடன் அமல்படுத்த கோரிக்கை முன்வைத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் தமிழரசு என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது, “இந்தியாவில் கடந்த 8ஆம் தேதி நிலவரப்படி 1,24,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 1,24,429 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 7,200 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. […]