மானாமதுரையில் ஆளில்லா வீட்டிற்குள் சாராயம் காய்ச்சிய பட்டதாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக கடந்த 20 நாட்களுக்கும் மேலாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாத நிலையில், குடிமகன்கள் பலரும் போதைக்காக திக்குமுக்காடி வருகின்றனர். இதனால் 20 வருடங்களுக்கு பிறகு சாராயம் காய்ச்சுவது சிலர் தொடங்கியுள்ளனர். அந்தவகையில் சில தினங்களுக்கு முன்பு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 300 லிட்டர் கள்ளச் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில் அன்னவாசல், புதூர், செல்லும் வழியில் பூட்டி கிடந்த வீட்டில் […]
Tag: மாவட்ட செய்திகள்
ஊரடங்கு உத்தரவால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து மீனவர்கள் தவிக்கின்றனர். தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக ஏற்கனவே மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இழப்பை சந்தித்து வரும் நிலையில், தற்போது மீன்பிடி தடைக்காலமும் அமல்படுத்தப்பட்டுள்ளதால் சுமார் பத்து லட்சம் மீனவர்கள் வேலை இழக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக செங்கல்பட்டு மாவட்டம் கடலோரப் பகுதியான கானத்தூர், ரெட்டி குப்பம் மீனவர்கள் கூறுவதாவது; கொரோனா வைரஸினால் ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டு உள்ளதால், மீனவர் சமுதாயம் மிகுந்த வருத்தற்குரிய விஷியமாக உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் […]
கொரோனா பாதிப்பு மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ள சூழலில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களையும் அச்சத்துடன் பார்க்கும் நிலை உருவாகியிருக்கிறது. பழனியில் கொரோனோவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பிய நபரை அனுமதிக்க மறுத்து போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். கொரோனா தொற்று ஒரு புதுவித தீண்டாமையை ஏற்படுத்தி உள்ளது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு கொரோனா நோய் பாதித்தவர்களை கண்டு மக்களுக்கான அச்சம் அதிகரித்து வருகிறது. சென்னையில் கொரோனோவால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததும் இதற்கு உதாரணம். […]
மழையால் வாழை மரங்கள் மற்றும் நெல் மூட்டைகள் சேதமடைந்தன. விவசாயிகள் வேதனை அடைத்துள்ளதுனர். திருவண்ணாமலை மாவட்டம்: செய்யாறில் பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமாகி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த சில வாரங்களாகவே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் அனைத்தும் கொள்முதல் செய்யப்படாமல் வெட்டவெளியில் கிடந்து மழையில் நனைந்து சேதமாகின. இதனால் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் […]
19 நாட்கள் கோரோனோவிடம் சிக்கித்தவித்த ஈரோட்டை சேர்ந்த இளைஞன் குணமடைந்து தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பினார். கடந்த மாதம் 22ம் தேதி துபாயில் இருந்து திருச்சி வந்த விமானப் பயணிகள் 154 பேரை பரிசோதனை செய்ததில், ஈரோட்டை சேர்ந்த 24 வயது இளைஞருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அந்த இளைஞன் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை கொரோனா சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 19 நாட்கள் தீவிர சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார் இளைஞர். […]
நாகை மாவட்டத்தில் தனியார் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் அவரிடம் சிகிச்சை பெற்ற 54 பேரை தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. நாகை புதிய கடற்கரை பகுதியில் வசிக்கும் மருத்துவர் ஒருவர் தனியார் கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் தொடர் இருமலும், காய்ச்சலும் இருந்தது. இதையடுத்து தாமே முன்வந்து சோதனை செய்து இருக்கிறார். அதனால் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி இருக்கிறது. இதை தொடர்ந்து அந்த மருத்துவர் தங்கியிருந்த குடியிருப்புத் […]
ஊரடங்கு உத்தரவை மீறுவோருக்கு பச்சைமிளகாய் தண்டனை வழங்கினார்கள் காவல்துறையினர். தோப்புக்கரணம் தண்டால் ரன்னிங் தண்டனைகள் எல்லாம் பயன் அளிக்காததால் பச்சைமிளகாயை கொடுத்து கடித்து சாப்பிட வைக்கும் புதிய தண்டனையை கொடுக்க தொடங்கியுள்ளனர் காவல்துறையினர். தெருக்களில் வெட்டியாய் சுற்றித் திரியும் இளைஞர்களுக்கு இந்த முறை கடுமையான தண்டனைகள் காத்திருந்தது. திருச்சியில் பச்சை மிளகாயை கையில் கொடுத்து கடித்து சாப்பிட சொல்லி இருக்கின்றனர் போலீசார். கண்ணில் நீர் வர பச்சைமிளகாயை கடிக்கும் தண்டனைக்கு இளைஞர்கள் ஆளாகியுள்ளனர். ஊரடங்கு அமலில் உள்ள […]
நெல் அறுவடை இயந்திரத்தை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா எதிரொலியாக அரியலூர் மாவட்டத்தில் நெல் அறுவடைக்கு தயாராக உள்ள ஆயிர கணக்கான விவசாயிகளுக்கு உதவும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தாஃபே நிறுவனத்துடன் இணைந்து வேளாண்மை இயந்திரங்களை சிறு குறு விவசாயிகளுக்கு 90 நாட்கள் வாடகை இன்றி பயன்படுத்திக்கொள்ள அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதனை அடுத்து உழவன் செயலி மூலம் பயனடையலாம். விவசாயிகள் தங்களுக்குத் […]
144 தடை உத்தரவால் புனித வெள்ளியான இன்று தேவாலயங்களில் மக்கள் யாருமின்றி பிரார்த்தனை நடைபெறாமல் வெறிச்சோடி காணப்பட்டது. சென்னை சின்னமலை பங்குச்சந்தை லாரன்ஸ் ராஜ் இணையதளம் வாயிலாக மக்களுக்கு போதனைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்த கொடிய கொரோனா வைரஸ் தொற்று மக்களை விட்டு நீங்குவதற்கு நாம் ஒவ்வொருவரும் பிரார்த்திப்போம் என தெரிவித்தார். உலகமெங்கும் இன்றைக்கு புனித வெள்ளியை கொண்டாடி கொண்டிருக்கிறோம். கோடிக்கணக்கான மக்கள் இந்த புனிதமான நாளில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக இயேசு […]
சென்னையில் நேபாளத்தை சேர்ந்த காவலாளியின் மனைவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்னன் பகதூர் என்பவர் சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றி வருகிறார். அதே குடியிருப்பில் மனைவியுடன் தங்கி உள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி அளவில் காவலாளி அறையில் இருந்த போது, வீட்டில் தனியாக இருந்த அவரது மனைவியிடம் மர்ம நபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுதொடர்பாக புகாரின்பேரில் […]
கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து உலக மக்கள் நலம் பெற வேண்டி நாதஸ்வரம் இசை கலைஞர்கள் நாதஸ்வரம் வாசித்து பிரார்த்தனை செய்தனர். உலகையே அச்சமடைய செய்திருக்கும் கொரோனா தற்பொழுது இந்தியாவில் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து உலக மக்கள் நலம் பெற வேண்டியும் , கொரோனா பாதிப்பிலிருந்து மிக விரைவாக மக்கள் குணம் அடைய வேண்டியும் சகஜ நிலைக்கு திரும்பும் வகையில், நாதஸ்வர கலைஞர்கள் இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின் முன்பாக பத்துக்கும் மேற்பட்ட […]
ஊரடங்கு உத்தரவால் ஆதவற்றோர்களுக்கு மாநகராட்சி தன்னார்வலர்கள் உதவிகள் செய்தனர். கொரோனோவால் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள், வீடு இன்றி வாழும்ஏழைகள், ஆதரவின்றி சாலைகளில் இருந்த நபர்களுக்கு உதவிக்கரம் நீட்ட முடிவுசெய்தது திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம். அதன் அடிப்படையில் தன்னார்வலர்கள் கொண்ட இளைஞர்களை ஒருங்கிணைத்து, ஆதரவற்றவர்களை மீட்கும் பணி தொடங்கியது. இதுவரை 160 பேர் மீட்கப்பட்ட நிலையில், அனைவரும் மாநகராட்சி கல்லணை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டனர். மனநலம் பாதிக்கப்பட்டகள் முதியவர்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் […]
திருநங்கைகள் அதிக அளவில் திரண்டு நடத்தும் ஒரே விழாவான கூவாகம் திருவிழா இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் என்ற இடத்தில் இருப்பது பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோவில். ஆண்டுதோறும் சித்திரை மாதம் இங்கு நடைபெறும் திருவிழாவில் பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான திருநங்கைகள் பங்கேற்பார்கள். இந்த ஆண்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் திருவிழா தொடர்பாக கூவாகம் மற்றும் அதை சுற்றியுள்ள 8 கிராம பூசாரிகள் […]
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே திடீரென்று பெய்த கனமழையால் குண்டேரிபள்ளம் அணை நிரம்பி உள்ளது. கோபிசெட்டிபாளையம் அருகே குண்டேரிப்பள்ளம் அணை நீர் பிடிப்புகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் அணையின் முழு கொள்ளளவான 42 அடி நிரம்பியதும். அடித்து வரும் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதன்காரணமாக கோபிசெட்டிபாளையம், கொங்கர்பாளையம், வாணிபுத்தூர், வினோபா நகர்,கலியம்பாடு என்ற 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வருவாய்த்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆற்றின் கரையூரில் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் […]
வெற்றிலையை வெளியூர்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுத்து விவசாயிகளின் வாட்டத்தை தமிழக அரசு போக்குமா.? ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து தடை பட்டதாலும் கடைகள் மூடியதாழும் வெற்றிலை கொடியிலேயே அழுகி வருகிறது. இதனால் வெற்றிலை போல் அதை பயிரிட்ட விவசாயிகள் வாடி போயுள்ளனர். அரசு இவர்களுக்கு கை கொடுக்குமா, தமிழகத்தில் எல்லா சுபகாரியங்களும் வெற்றிலையுடன் தான் தொடங்கும். அப்படிப்பட்ட வெற்றிலையை ஊரடங்கு உத்தரவால் வெளியூர்களுக்குச் எடுத்து செல்ல முடியாமல் பழுத்து கொடியிலேயே வீணாகி வருகிறது. மதுரை மாவட்டம் சோழவந்தான் வெற்றிலைக்கு […]
கொரோனா குறித்த விழிப்புணர்வில் அம்மன் TRY சுரங்கப்பாதை அமைத்து கிருமிநாசினி தெளித்து வருகின்றனர். கொரோனா விழிப்புணர்வில் காவல்துறை, திரை பிரபலங்கள் உட்பட பலரும் ஈடுபட்டுள்ள நிலையில். பல தனியார் தொண்டு நிறுவனங்களும் அத்தகைய முயற்சிகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் அம்மன் TRY கம்பிகள் சார்பில் திருச்சியில் பல இடங்களில் கிருமிநாசினி தெளிக்கும் சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸை தடுப்பதற்காக பணிகளில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவிகள் செய்து மனம் நெகிழ செய்துள்ளனர். உலகையே அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. அதை தடுப்பதற்காக மத்திய அரசு 144 தடை உத்தரவு 21 நாட்களுக்கு அறிவித்தது. இதனால் அனைத்து பாமர மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அனைவரும் வீட்டிற்குள் அடைந்து இருக்கின்றனர். இந்த தொற்று பரவாமல் தடுப்பதற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகிய அனைவரும் இரவு […]
கொரோனா வைரஸ் எதிரொலியாக கோவில் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டதால் விளாத்திகுளம் சுற்று வட்டார நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். எட்டையபுரம் தாலுகாவில் நையாண்டி மேளம், தப்பாட்டம், ஒயிலாட்டம், கும்மி பாட்டு, ஆடுபுலி ஆட்டம் என மூவாயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் உள்ளனர். தமிழகம் மட்டுமல்ல வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் சென்று இவர்கள் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். மாசி மாதம் முதல் ஆடி மாதம் வரை திருவிழா சீசன் என்பதால் அந்த காலகட்டத்தில் இவர்கள் பிசியாக இருப்பது […]
சேலம் அருகே இறைச்சி, மீன்கள், வாங்குவதற்கு தற்காலிகமாக அமைக்கப்பட்ட கடைகளில் மக்கள் வாங்குவதற்கு திரண்டனர். வேகமாக பரவி வரும் கோரனோவை கட்டுப்படுத்துவதற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காய்கறி மற்றும் மளிகை கடைகளில் பொது மக்கள் சமூக இடைவெளி விட்டு நின்று பொருட்கள் வாங்கி செல்லுங்கள் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் நெரிசல் அதிகமாக காணப்பட்டது. அதனால் கொரோனா வைரஸ் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதிகளில் இயங்கும் இறைச்சி மற்றும் […]
7ம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே அறிவொளி நகரை சேர்ந்த பிரபுவின் மகள் பூவிகா, அவர் அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வரும் நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அணைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் வீட்டில் இருந்த பூவிகா நேற்று திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை கண்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கண்ணீர் மல்க […]
நெல்லையில் குழந்தைகளிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஓவியப்போட்டி நடைபெற்றது. கொரோனா அச்சம் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் நெல்லையில் குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்கும் விதமாகவும் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தவும் பணகுடி காவல் ஆய்வாளர் சாகுள் ஹமீத் ஓவிய போட்டி நடத்தினர். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட குழந்தைகள் வீட்டிலிருந்து ஓவியங்களை வரைந்தனர். பின்னர் அதனை சேகரித்த காவலர்கள் ஓவிய ஆசிரியர் மூலம் சிறந்த ஓவியத்தை தேர்வு செய்தனர். இதில் […]
கொரோனோவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உடைகள் தயாரிக்கும் பணிகள் கரூரில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நாளொன்றுக்கு 500 க்கும் அதிகமான பாதுகாப்பு கவச உடைகளை தயாரிக்கும் தொழிலாளிகள் அவற்றை கரூர், நாமக்கல்,கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கின்றார்கள். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பத்தாயிரம் உறைகள் தேவைப்படும் நிலையில் சில உபரி பொருட்களுக்கு நிலவும் தட்டுப்பாட்டை போக்கினால் மிகவேகமாக அதிகளவில் மருத்துவர்களுக்கான பாதுகாப்பு கவசங்களை தயாரிக்கலாம் என்கிறார்கள் இந்த நிறுவனங்களை சேர்ந்தவர்கள். கண்ணுக்குப் புலப்படாத கொரோனாக்கு […]
கிருஷ்ணகிரி அருகே காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட ஒற்றை ஆண் யானைக்கு கிராம மக்கள் உணவு, குடிநீர் வழங்கி பராமரித்து வந்தனர். 16 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று கடந்த 10 தினங்களுக்கு முன்பு தர்மபுரி மாவட்டம் காரியமங்கலம் அருகே உள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்டது. யானையை கிணற்றிலிருந்து மீட்டு வனத்துறையினர் யானைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து அதனை வனத்திற்குள் விட்டனர். காயம் முழுவதாக குணமடையாத நிலையில் மீண்டும் வனத்தை […]
வெளிநாடுகளுக்கு சென்று திரும்பிய 2,200 பேர் தூத்துக்குடியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கொரோனா நிவாரணமாக வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ரேஷன் பொருட்கள் 15 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்க 1500 தன்னார்வலர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் இவர் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களை தங்க வைப்பதற்கான […]
சாலையோரம் வசிக்கும் ஆதரவற்றவர்களுக்கு முடிதிருத்தம் செய்து உடை வழங்கிய காவல் உதவி ஆய்வாளருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பேருந்து நிறுத்த நிழற்குடையில் ஆதரவற்றவர்கள் தஞ்சமடைந்திருந்தனர். இவர்களை கண்ட திருவெறும்பூர் காவல் உதவி ஆய்வாளர் நாகராஜ் அனைவரையும் ஆதரவற்றோர் காப்பகத்தில் சேர்க்க முடிவு செய்தார். இரண்டு முதியவர்கள் உட்பட 3 பேருக்கு முடி திருத்தம் செய்ய முயன்ற அவருக்கு, அந்த […]
10 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கொள்ளையடித்து விற்பனை செய்த மதுபான கடை ஊழியர்கள் மற்றும் பார் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம், ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து மதுபான கடைகளையும் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் எதிரொலியாக திருவள்ளூர் அடுத்த காக்களூர் நெடுஞ்சாலையில் உள்ள மதுபான கடைகள் மூடப்பட்டது. கடையின் மேற்பார்வையாளரான பொற்சிலம்பு அந்த கடையில் பணியாற்றும் செந்தில், ராமகிருஷ்ணன் ஆகியோரிடம் சாவியை ஒப்படைத்து உள்ளார. இந்த நிலையில் […]
சென்னை கொடுங்கையூரில் இரவு நேரங்களில் சுற்றித் திரியும் இளைஞர்களை பிடித்த காவல்துறையினர் உறுதிமொழி எடுக்க வைத்து அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். சாலையில் சுற்றித் திரிந்த இளைஞர்களை விசாரித்த காவல்துறையினர் அவர்கள் காரணமின்றி வெளியில் சுற்றியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை வீட்டிலிருந்து வெளியே வர மாட்டோம் என்று உறுதிமொழி எடுக்க வைத்து பின்னர் வீட்டிற்கு அனுப்பினார். திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் முக […]
கொரோனா பரவும் விவகாரத்தில் மதம் சார்ந்த தவறான வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். கோவை குனியமுத்தூரில் உள்ள நியாய விலைக்கடைகளில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் நியாய விலை பொருட்கள் வழங்குவதை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் கொரோனா தொற்று உள்ளவர்களையும், அவர்களைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றவே அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் கொரோனா தொற்று பற்றி வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியதால், அவர்களின் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். டி.என். பாளையம் பகுதியில் 24 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது என அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் இரண்டு பேர் வாட்ஸ் அப்பில் பொய்யாக வதந்தி பரப்பி விட்டனர். இதை அறிந்த போலீசார் அவர்களின் மீது வழக்கு பதிவு செய்தனர். இத […]
ஊரெல்லாம் வாசம் வீசும் மல்லிகை மலர் பெரும்பாலும் அவை விளைவிக்கும் விவசாயிகளின் வாழ்க்கையை மட்டும் மணக்க வைக்கவே இல்லை. இந்த நிலையில் கொரோனாவால் மலர் சந்தைகள் மூடப்பட்டுள்ளதால் மல்லிகை விவசாயிகள் பெருத்த வேதனையில் முடங்கிப் போயுள்ளனர். செடியில் வாடி வதங்கி கிடக்கும் இந்த மலர்களை போலவே மதுரை மல்லிகை விவசாயிகள் வேதனையில் வாடி உள்ளனர். மல்லிகைக்கு பெயர்போன மதுரையில் ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கரில் மல்லிகை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஆறு மாதங்கள் மட்டுமே மல்லிகைக்கு சீசன். இந்த […]
வெளிநாட்டிலிருந்து ஊர் திரும்பிய தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி என தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கும்பகோணம் பகுதியை சேர்ந்த 42 வயது உள்ள ஒருவர் சில நாட்களுக்கு முன் வெஸ்ட்இன்டீஸ்சில் இருந்து தன்னுடைய சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் தகவல் கிடைத்ததும் அவரின்வீட்டிற்கு தஞ்சை மாவட்டத்தின் சுகாதாரத்துறையினர் சென்றனர். பின்னர் அவரின் இரத்தத்தை எடுத்து சோதனை செய்ய அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து இவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். இந்நிலையில் கொரோனா […]
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வெளிநாட்டை சேர்ந்த தம்பதியை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கொல்லப்பட்டி சாலையில் ஆட்டோ ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது, அப்போது அதில் இருந்த வெளிநாட்டு தம்பதியினரை கண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், விசாரணை நடத்தியதில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் அவர்கள் கொடைக்கானலில் ஆட்டோ ஒன்றை சொந்தமாக வாங்கி கொண்டு சென்னைக்கு செல்வது தெரிந்தது. பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்தபோது ஏற்கனவே 6 முறை தங்களை […]
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தப்புவது எப்படி என்பது குறித்து நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வேதியியல் துறை தலைவர் பேராசிரியர் கண்ணன் விளக்கமளித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது வைரஸ் என்பது மூக்கு வழியாக உடலில் செல்லக்கூடியது. இவ்வாறு மூச்சு காற்றில் கலந்து செல்லும் போது, முதலில் மூக்கில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதன் மூலம் மூக்கில் அடைப்பு ஏற்படும். இந்த அறிகுறி தெரிந்தவுடன் எந்த மூக்கில் அடைப்பு தென்படுகிறதோ, அடுத்த மூக்குத் துவாரத்தை […]
மருத்துவமனைகளில் உயிர் காக்கும் கருவிகள் தட்டுப்பாடின்றி பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் தங்களுக்கு தாங்களே கட்டுப்பாடுகள் விதித்து கொள்ள வேண்டும் எனவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேட்டுக்கொண்டுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரோனோவை எதிர்கொள்ள பொதுமக்கள் தங்களுக்குத் தாங்களே கட்டுப்பாடுகள் விதித்து கொள்ள வேண்டுமெனவும் கூறினார்.ஏழை எளிய குடும்பங்கள் ஒவ்வொன்றிக்கும் அரசாங்கம் உடனடியாக 3000 ரூபாய் வழங்க முன்வரவேண்டும். ரேஷன் கார்டுகள் கொண்டுவர வேண்டுமென வலியுறுத்தாமல் அடையாள அட்டைகளை சரிபார்த்து வழங்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் […]
கொரோனா முன்னெச்சரிக்கையாக புதிய பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி முதல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எப்பொழுதும் பேருந்தில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால் கொரோனா அச்சத்தின் காரணமாக குறைந்த அளவிலேயே மக்கள் பயணிக்கிறார்கள். இன்று மாலை 6 மணி வரை பேருந்துகள் இயங்கும் என்ற நிலையிலும், மக்கள் பேருந்துகளில் குறைவாகவே பயணிக்கின்றனர். நெல்லை மாநகரத்தை […]
சுய ஊரடங்கு உத்தரவு, வீடுகள் இல்லாத சாலையோர வாசிகள், உணவின்றி தவிக்கும் பரிதாபம்..! மக்கள் அனைவரும் சுய ஊரடங்கிற்கு ஆதரவளித்து தங்கள் வீடுகளுக்கு உள்ளேயே இருக்கும் பொழுது, சாலையோர வாசிகளின் நிலை என்ன வீடு இல்லாதோர் எங்கே தங்குவார்கள் என சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் கேள்வி எழுப்பியிருந்தது. இதற்கு பதிலளித்த சென்னைமாநகராட்சி நிறுவனம் நிர்வாகம் 60 இடங்களில் வீடற்றோர் தங்குமிடங்களில் இருப்பதாகவும் அங்கே வீடு இல்லாதோர் தங்க வைக்கப்படுவார்கள் எனவும் விளக்கம் அளித்திருந்தது. ஆனால் ஒரு […]
சென்னையில் புள்ளிங்கோக்கல் எதையும் பொருட்படத்தாமல் கொரோனா பற்றிய ஆபத்து அறியாமல், நேற்று அசாகசம் என்று அடாவடியில் இறங்கியுள்ளனர். உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை இந்தியாவில் பரவாமல் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனோவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி ஞாயிறு ஒரு நாள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் மக்கள் சுய ஊரடங்கு கடைபிடிக்க வேண்டுகோள் விடுத்தார். அதனை நாடு முழுவதும் மக்கள் கட்டுப்பாட்டுடன் […]
கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்க மையம் ஒன்று செயல்படுத்தினார் ஆட்சியர், அங்கு பொதுமக்கள் மையத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். கோவை மாவட்டம் கருத்தம்பட்டி அருகே பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மையம் இன்று முதல் செயல்பட உள்ளது. இந்த மையத்தை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி ஆய்வு செய்திருக்கிறார். மருத்துவர், செவிலியர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முதற்கட்டமாக 50 படுக்கை வசதிகள் […]
அருப்புக்கோட்டை அருகே பழிக்குப்பழி வாலிபர் வெட்டிக் கொலை, இசசம்பவத்தில் தற்போது இரண்டுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த அக்னி ராமன், மூர்த்தி ஆகிய இரு குடும்பத்திற்கும் இடையே பல காலமாக நிலத்தின் மீது சம்மந்தமாக தகராறு இருந்தது. இந்த நிலையில், அக்னி ராமனால் கடந்த 2016ம் ஆண்டு புது வருடமான அன்று கந்தவேலு என்பவர் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் அக்னி ராமன் கைது செய்யப்பட்டு சிறை சென்றார். பின்னர் ஒரு மாத […]
துபாயிலிருந்து சென்னைக்கு வந்த 14 நபர்களுக்கு காய்ச்சல், சளி இருந்ததால் அவர்கள் சிறப்பு வார்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எமரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சென்னை வந்த 3 பெண்கள் உட்பட 14 பேருக்கு சளி மற்றும் காய்ச்சல் இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. இதை அடுத்து அனைவரையும் விமான நிலையத்தில் உள்ள மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர பரிசோதனை மேற்கொண்டனர். இந்த 14 பேருக்கும் கொரோனா அறிகுறிகளான காய்ச்சல், சளியின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதன் காரணமாக அவர்கள் அனைவருக்கும் பூந்தமல்லியில் […]
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு பள்ளங்கள் தோண்ட பட்டுள்ள நிலையில் திருவெற்றியூரில் டீ கடை மற்றும் பேக்கரி கட்டடங்கள் சரிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் வரை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் கடந்த 4 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் தண்டையார்பேட்டையில் தொற்றுநோய் மருத்துவமனை அருகே உள்ள டீ கடை மற்றும் பேக்கரி உணவு கட்டிடங்கள் இன்று காலை திடீரென்று சரிந்து விழுந்தது. கட்டிடம் இடிந்து விழுந்த […]
கொரோனா வைரஸ் மற்றும் பறவைக்காய்ச்சல் அச்சுறுத்தல் காரணமாக கோழியின் விலை சரிந்துள்ளது, மீன்களின் விலை எகிறியது..! சென்னை புதுப்பேட்டை பகுதியில் கடந்த வாரம் ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்ற கோழிக்கறி இன்று 100 ரூபாயாக சரிந்தது. ஆனால் நாட்டுக்கோழி கிலோ ரூபாய்280 விற்பனை ஆனாலும் மக்கள் அச்சமின்றி வாங்கிச் செல்வதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆட்டுக்கறி கிலோ ரூபாய் 740 ருக்கு விற்கப்பட்டதாக, மீன்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த விடுமுறை தினமான […]
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதை அடுத்து தூத்துக்குடி சிதம்பரனார் துறைமுகத்தில், கட்டுப்பாடுகள் அதிகரித்தது மட்டுமல்லாமல் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தை பொருத்தவரை வைரஸ் காரணமாக துறைமுகத்திற்கு வரும் கப்பல்கள் அனைத்தும், அதிலுள்ள பணியாளர்கள் அனைவருக்கும் ஸ்கேன் மூலமாக ஸ்கிரீனிங் செய்யப்பட்டு அவர்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கப்பல்களில் சரக்குகள் இறக்கப்டுகின்றது. இதனைத்தொடர்ந்து கப்பல்களில் இருந்து யாரும் சிப்பந்திகள், மாலுமிகள் உள்ளிட்ட யாரும் தரைதளத்தில் […]
சென்னையில் பேருந்தை நிறுத்துவதற்காக தமக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக பதட்டத்தை ஏற்படுத்தி இளம்பெண், அந்த பெண்ணை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர். சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று மேல்மருவத்தூர் கடந்து சென்றபோது , பேருந்தை நிறுத்துமாறு இளம்பெண் ஓட்டுநரிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது. அதற்கு ஓட்டுநர் மறுப்பு தெரிவிக்க, தமது ரத்தப் பரிசோதனையில் வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் பேருந்தில் பயணித்த அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில், ஓட்டுனர் உடனடியாக […]
தேனியில் பெண்ணொருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாடெங்கும் கொரோனா வைரஸ் பரவி மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் தமிழ்நாட்டிலும் பரவத் தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தேனியில் கூடலூர் பகுதியை சேர்ந்த 48 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நான்கு நாட்களாக மூச்சுத் திணறலால் அவதிப்படும் பெண்ணிற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே அதிமுக,திமுக மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி சென்ற கார் கண்ணாடியை அடித்து நொறுக்கி, திமுகவினர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். உள்ளாட்சி மறைமுக தேர்தல் டி.என்.பாளையம் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு நடத்தப்பட்டது. அதில் அதிமுக சார்பில் விஜயலக்ஷ்மி போட்டியிட்டார். இதில் அவர் 6 வாக்குகள் அதிகமாக பெற்று ஒன்றிய குழு தலைவராக விஜயலக்ஷ்மி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் மறைமுக தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை, பொறுத்து கொள்ள முடியாத திமுகவினர், திமுக […]
திரைப்பட பாணியில் காவல் உதவி ஆய்வாளர் சீருடை அணிந்து பொது மக்களிடம் பணம் பறித்த நபரை காவல்துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம் சரவணம்பட்டி சாலையில் பாண்டி குமார் என்பவர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். காவல் உதவி ஆய்வாளர் சீருடையில் அவரை வழிமறித்த நபர் ஆவணங்களை காண்பிக்குமாறு நிர்பந்தித்தார். ஆவணங்கள் சரியாக இருந்த போதிலும் பாண்டிக்குமாரை மிரட்டிய அந்த நபர் ஆயிரம் ரூபாய் பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகம் அடைந்த பாண்டி குமார் […]
விவசாயிகளின் நலனுக்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் கெலவரப்பள்ளி அணையில் இருந்து, வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. ஓசூர் அருகே அமைந்துள்ள கெலவரப்பள்ளி அணையின் தண்ணீரை தமிழக அரசு கோடை சாகுபடிக்காக திறந்துவிட்டது. பல ஆயிரம் ஏக்கர் நிலங்களின் கோடை சாகுபடிக்கு தண்ணீர் வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இந்த அணையின் மொத்த கொள்ளளவு 44.28 அடியும், அதில் 39.85 அடி அளவுக்கு தண்ணீர் உள்ளது என்றும், அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 172 […]
சுடுதண்ணீர் தர மறுத்த மனைவியை கோடாரியால் 80 வயது முதியவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது சங்கரன்கோவில் அருகே 80 வயதை தொட்ட பொன்னுசாமி என்பவர் உடல்நலம் குன்றிய காரணத்தினால் தனக்கு சுடுதண்ணீர் வைத்து கொடுக்குமாறு மனைவி சீதாலட்சுமியி டம் கேட்டுள்ளார். இதன் காரணமாக கணவன்-மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் கொண்ட பொன்னுசாமி நேற்று முன்தினம் இரவில் சீதாலட்சுமி ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்த சமயம் அவரது தலையில் கோடாரியால் வெட்டி கொலை செய்துள்ளார்.மனைவி […]
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு, இந்து பெண் ஒருவருக்கு வளைகாப்பு நடத்தினர்..! சென்னை வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் போது வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.. சென்னையில் ஷாயின்பாக் என கூறி கடந்த 14 நாட்களாக வண்ணாரப்பேட்டையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இரவு பகலாக தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டத்தின்போது அப்பகுதியை சேர்ந்த பாக்கியலட்சுமி என்ற கர்பிணிக்கு, இந்து முறைப்படி வளைகாப்பு நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்று இருந்த இஸ்லாமிய பெண்கள் […]