கூலி வேலை செய்து வந்த வாலிபர் திடீரென மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் காரிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சிவன் இவரது மகன் தமிழரசன். கிடைக்கும் வேலைகளை செய்து வருவது தமிழரசனின் வழக்கம். இந்நிலையில் சம்பவத்தன்று பச்சனம்பட்டி பகுதியில் நெல் அறுவடையின் காரணமாக மிஷினை எடுத்து சென்றுள்ளார் பூபதி என்பவர். அவருக்கு உதவியாளராக தமிழரசன் சென்றுள்ளார். அச்சமயம் திடீரென தமிழரசனுக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தமிழரசனை மீட்டு தர்மபுரி […]
Tag: மாவட்ட செய்திகள்
சொகுசு பேருந்து ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நின்ற லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.. செங்கல்பட்டு மாவட்டத்தின் மதுராந்தகம் அருகே கனரக லாரி மீது சொகுசு பேருந்து மோதி விபத்தில் 2 பேர் பலியாகினர். சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சசாலையில் இந்த விபத்து நடந்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து 45 பயணிகளுடன் தூத்துக்குடிக்கு புறப்பட்ட சொகுசு பேருந்து, படாலம் அடுத்த அத்தினம்பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த […]
பாஸ்டேக் செயல்படாததால், மினி வேன் ஓட்டுநர் மற்றும் கிளீனரை சரமாரியாக சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்கினர். இதனால் 6 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கர்நாடக மாநிலம் ஆணைகள்ளை சேர்ந்த ஓட்டுனர் ஜெகதீஷ் மினி வேனில் சரக்கு ஏற்றிக்கொண்டு கிருஷ்ணகிரி நோக்கி வந்து இருக்கிறார். அப்போது அத்திப்பள்ளி சுங்கச்சாவடிகள் பாஸ்டேக் செயல்படாத நிலையில் சுங்கச்சாவடி ஊழியர்கள் சுங்கக் கட்டணத்தை கட்ட கூறியிருக்கின்றனர். சிறிது நேரத்தில் பாஸ்ட்ரக் வேலை செய்த நிலையில் கட்டணம் பெறப்பட்டதால் மினி வேன் புறப்பட இருக்கிறது. […]
கஜா புயல் சீற்றம், மண் பாதிக்கப்பட்டு மகசூல் இல்லாமல் போனது, விவசாயிகள் பெரும் வேதனை..! நாகை மாவட்டத்தில் கஜா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண்ணின் தன்மை மாறியதால், சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த நிலக்கடலையில் மகசூல் பொய்த்து போய் விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். 90 நாட்களில் பலன் தரக்கூடிய பணப் பயிரான நிலக்கடலையை நாகை மாவட்டங்களில் ஏராளமான விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். ஓரளவு மகசூல் கிடைத்தாலே போதிய வருமானம் கிடைத்து விடும் என்பதாலும், நிலக்கடலை […]
போதையில் தள்ளாடியபடி பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர், புகார் அளித்த பெற்றோர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே குடி போதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. பாலியல் புகார்கள், மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவது என அண்மைக்காலமாக ஆசிரியர்கள் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். ஒழுக்கமாக மாணவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டிய ஆசிரியர் மதுபோதையில் பள்ளிக்கூடத்திற்கு வந்து பொதுமக்களிடம் கையும், களவுமாக சிக்கியுள்ளார். மேலூர் அருகே உள்ள வலையசேரி […]
மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க கோரிக்கை, அரசுப்பள்ளிகள் அழிவின் விளிம்பில் உள்ளது என சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்னர். ஆண்டிப்பட்டி அருகே 3 மாணவர்கள் மட்டுமே படித்து வரும் அரசு ஆரம்பப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. சிங்கராஜ புரம் கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட அரசு ஆரம்ப பள்ளியில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்பது புகாராகும். இதனால் பள்ளியை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களின் பிள்ளைகளை தேனி, கம்பம் உள்ளிட்ட வெளியூர் […]
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம், கவுன்சிலிங் கொடுக்க சுற்றறிக்கை.. ஆத்திரமடைந்த மாணவர்கள்..! குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக போராடிய மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்ற உத்தரவை கண்டித்து புதுச்சேரியில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர் நலத் துறை அதிகாரி இஷாவின் சுல்தானா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு, கவுன்சிலிங் நடத்த வேண்டும் என்று அனுப்பியுள்ள சுற்றறிக்கை கண்டனத்திற்கு ஆளாக்கியுள்ளது. சுற்றறிக்கையை கண்டு ஆத்திரமடைந்த புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் சுற்றறிக்கை […]