Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“தலைதீபாவளி” கொண்டாட வந்த இடத்தில்….. மனைவியை காப்பாற்ற முயன்ற இன்ஜினியர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பார்வதிபுரத்தில் சுஷ்மா(26) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சுஷ்மாவுக்கு டெல்லியை சேர்ந்த சாப்ட்வேர் இன்ஜினியரான சியாம்(28) என்பருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு இருவரும் சென்னையில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் தலை தீபாவளி கொண்டாடுவதற்காக சுஷ்மா தனது கணவருடன் பெற்றோர் வீட்டிற்கு வந்துள்ளார். நேற்று மதியம் கணவன் மனைவி இருவரும் காளிகேசம் பகுதியை சுற்றிப் பார்ப்பதற்காக காரில் சென்றுள்ளனர். இதனை அடுத்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர்…. விபத்தில் சிக்கி 2 பேர் பலி; 3 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் 2 பேர் பலியான நிலையில், 3 பேர் படுகாயம் அடைந்தனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள இருங்காலக்குறிச்சியில் வசிக்கும் வாலிபர், ஒரு பெண் உள்பட 5 பேர் ஒரே மோட்டார் சைக்கிளில் கடலூர் மாவட்டத்தில் உள்ள நெய்வாசலில் இருக்கும் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் கொடிக்குளம் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பள்ளத்தில் பாய்ந்த தனியார் பேருந்து…. கண்ணாடியை உடைத்து வெளியேறிய பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!!

பேருந்து பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேட்டில் இருந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனியார் பேருந்து பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் அருகே சென்ற போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்திற்குள் பாய்ந்தது. இதனால் பயணிகள் அலறியடித்து கொண்டு அவசர கால கதவு வழியாக வெளியேற முய. ஆனால் அந்த வழி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“மனநல காப்பகத்தில் இணைந்த காதல் ஜோடி”…. அரசு வேலை வழங்கிய அமைச்சர்…!!!!!

மனநல காப்பகத்தில் இணைந்த காதல் ஜோடிக்கு நேற்று முன்தினம் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. சென்னை மாவட்டத்தில் உள்ள கீழ்பாக்கம் மனநல காப்பகத்தில் சிகிச்சைக்காக சென்ற இடத்தில் மகேந்திரன் என்பவருக்கும் தீபா என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்திருக்கின்றது. இந்த நிலையில் இவர்களின் திருமணம் கீழ்பாக்கத்தில் உள்ள மனநல காப்பக வளாகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மனநல காப்பகத்தின் இயக்குனர், டாக்டர்கள், நர்சுகள் பிரம்மாண்டமாக திருமண ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். காப்பகத்திற்கு வெளியே இருக்கும் கோவிலில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“கால்நடைகளின் உயிரைக் குடிக்கும் பாலித்தீன்”…. பயன்பாட்டை குறைக்க வேண்டும் என கோரிக்கை…!!!!!

பாலித்தீன் கழிவுகளின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.  இன்றைய சூழ்நிலையில் பொதுமக்கள் பாலித்தீன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். பாலித்தீன் கால்நடைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு சுற்றுச்சூழலுக்கும் சுகாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்கின்றது. பொதுவெளிகளில் மக்கள் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும். கால்நடை வளர்ப்போர் கால்நடைகளுக்கு பாதுகாப்பான மேய்ச்சல் சூழலை நாம் உருவாக்கி தர வேண்டும். அது நமது கடமையாகும். வனப்பகுதியை ஒட்டி இருக்கும் கிராமங்களில் பாலிதீன் கவர்களை பயன்படுத்திவிட்டு குப்பைகளை போடுவதால் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“தரமான ஹெல்மெட் விற்கப்படுகிறதா..?” அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்…. சமூக ஆர்வலர்கள் கோரிக்கை….!!!!!

தரமான ஹெல்மெட் விற்பனை செய்யப்படுவதை அதிகாரிகள் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். சாலைகளில் ஏற்படும் பெரும்பாலான விபத்துகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதாலே ஏற்படுகின்றது‌. இந்த நிலையில் தற்போது வாகனம் ஓட்டுபவர் மட்டுமல்லாமல் பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கின்றது. மேலும் விதிமீறல்களுக்கு பல மடங்கு அபராதம் உயர்த்தப்பட்டு இருக்கின்றது. இதனால் பல இடங்களில் புதிய சாலை ஓரத்தில் விற்பனையாளர்கள் முளைக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. தற்போது ஹெல்மெட் விற்பனை அமோகமாக நடந்து வருகின்றது. […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (30.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 30) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 75 காசுகளிலிருந்து, அக்டோபர் 27 ஆம் தேதி முதல் 25 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பனை மேம்பாட்டு இயக்கம்…. “100 சதவீத மானியத்தில் பனை விதைகள் வழங்கல்”…!!!!!

விவசாயிகளுக்கு 100% மானியத்தில் பனை விதைகள் வழங்கப்படுகின்றது. தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரம் தமிழர்களின் வாழ்வோடு இணைந்துள்ளது. பனைமரம் நிலத்தடி நீரை அதிகரிக்கும், மண்ணரிப்பை தடுக்கும், மண்ணை உறுதி படுத்தும் மேலும் வளப்படுத்தும். மண்ணுக்கு ஏற்ற மரமாக விளங்குகின்றது. பனைமரம் அடி முதல் நுனி வரை பலனளிக்க கூடியது. பதநீர் இறக்குதல், நுங்கு அறுவடை, பாய் முடைதல், கூடை பின்னுதல் என பனைச் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருவதற்கான காரணம் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

பறவை காய்ச்சல் எதிரொலி…. “தீவிர கண்காணிப்பில் கால்நடைத்துறையினர்”…!!!!!

பறவை காய்ச்சல் எதிரொளியால் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. கேரளாவில் தற்போது பறவை காய்ச்சல் பரவி வருவதால் தமிழக எல்லைப் பகுதியில் கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து கால்நடை துறையினர் கூறியுள்ளதாவது, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை அருகே ஒன்பதாறு சோதனை சாவடியில் கால்நடை பராமரிப்பு துறை மூலமாக சோதனை சாவடி அமைக்கப்பட்டு இருக்கின்றது. அங்கே கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வருகின்ற வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படுகின்றது. மேலும் கால்நடை உதவி மருத்துவர், ஆய்வாளர் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“திருச்செந்தூரில் முன்னேற்பாடுகள் தயார்”…. போலீஸ் சூப்பிரண்டு தகவல்…!!!!

திருச்செந்தூரில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பல முன்னேற்பாடுகள் தயார் செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது. இவ்விழாவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்காக ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பின்புறமாக 5000 வாகனங்கள் நிறுத்துவதற்கும் அன்பு நகரில் இருக்கும் வியாபாரிகள் சங்கத்திடலில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

சொந்த மகளுக்கு பாலியல் தொந்தரவு…. “மீண்டும்” தொழிலாளி செய்த செயல்…. போலீஸ் விசாரணை…!!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள உதயேந்திரம் பகுதியில் கூலி தொழிலாளியான ராஜா(44) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது ராஜா சிறுமியை தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை குடும்பத்தினர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து அறிந்த ஊர் மக்கள் ராஜாவின் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர் இல்லாததால் அவரது மனைவியை வெளியே அனுப்பிவிட்டு பொதுமக்கள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அலறி சத்தம் போட்ட கல்லூரி மாணவர்…. அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. பெரும் சோகம்…..!!!

கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய வெங்கட்சமுத்திரம் பகுதியில் ஆட்டோ ஓட்டுநரான கார்த்தீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆகாஷ் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஆகாஷ் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர் ஆகாஷை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசிக் கொண்டிருந்த வாலிபர்…. சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் செல்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆண்டனி அபிஷேக் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு அருகில் நின்று ஆண்டனி செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் செல்போனை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து ஆண்டனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் ஜெட்லி ஆண்ட்ரூஸ் மற்றும் இரண்டு சிறுவர்களை […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

ரூ. 1 1/4 லட்சத்துடன் நின்ற முதியவர்…. மர்ம நபர்கள் செய்த செயல்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…!!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள நரசிங்கபுரம் கிராமத்தில் விவசாயியான கிருஷ்ணசாமி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 7- ஆம் தேதி வங்கியிலிருந்து 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாயை எடுத்து கொண்டு கிருஷ்ணசாமி பாலக்கரை பகுதியில் இருக்கும் கடையில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்தார். அப்போது திடீரென வந்த 2 மர்ம நபர்கள் முதியவரிடமிருந்து பணத்தை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து கிருஷ்ணசாமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இரு தரப்பினரிடையே மோதல்…. காயமடைந்த 7 பேர்…. போலீஸ் விசாரணை…!!!

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஆலங்காயம் படகுப்பம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 20 ஆண்டுகளாக சங்கருக்கும், உறவினரான சண்முகம் என்பவருக்கும் நிலத்திற்கு போகும் வழி தொடர்பாக பிரச்சனை இருந்துள்ளது. நேற்று சங்கர் தனது நிலத்தில் நெல் அறுவடை செய்து அதனை சண்முகம் நிலத்தின் வழியாக எடுத்து சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கத்தி மற்றும் ஆயுதங்களால் தாக்கி கொண்டனர். இதில் காயமடைந்த சங்கர், சண்முகம் உட்பட […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி விளாத்திகுளம் பள்ளியில்…. “மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி”…!!!!

விளாத்திகுளம் பள்ளியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டயபுரம் அருகே இருக்கும் விளாத்திகுளம் அம்பாள் வித்யாலயா பள்ளியில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. இப்போட்டியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜீவி மார்க்கண்டேயன் தொடங்கி வைக்க மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பாலசாமி, உடற்கல்வி ஆசிரியர் வையணன், விளாத்திகுளம் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் இம்மானுவேல், […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தப்பி செல்ல முயன்ற நபர்…. விரட்டி பிடித்த போலீசார்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!!

மோட்டார் சைக்கிளை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கெடிலம் கூட்டுரோடு பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை போலீசார் நிறுத்துமாறு சைகை காண்பித்தனர். அப்போது அந்த வாலிபர் வாகனத்தை திருப்பி செல்ல முயன்றதை பார்த்து சந்தேகமடைந்த போலீசார் அவரை விரட்டி சென்று மடக்கிப்பிடித்தனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் முட்டியம் கிராமத்தில் வசிக்கும் ரகுராமன்(40) என்பது தெரியவந்தது. அவர் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

வாடிக்கையாளர் விட்டு சென்ற பணம்…. வங்கியில் ஒப்படைத்த போலீஸ் ஏட்டு…. பாராட்டும் பொதுமக்கள்…!!!

போலீஸ் ஏட்டு ஏ.டி.எம் மையத்தில் வாடிக்கையாளர் விட்டு சென்ற பணத்தை வங்கி மேலாளரிடம் கொடுத்தார். புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பிரபு என்பவர் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். இவர் ஏ.நத்தம் பண்ணை பகுதியில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம் கிளையில் பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் எந்திரத்தில் இருந்து பணம் வெளியே வரக்கூடிய பகுதியில் ஐந்தாயிரம் ரூபாய் வெளியே எடுக்கும் நிலையில் இருந்ததை பார்த்து பிரபு அதிர்ச்சியடைந்தார். அங்கு வேறு யாரும் இல்லை. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சித்தப்பாவால் ” 9 வயது சிறுமிக்கு அரங்கேறிய கொடூரம்” நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் பரோட்டா கடையில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவியின் அக்காளுக்கு இரண்டாவது குழந்தை பிறந்தது. இதனால் தனது முதல் மகளான 9 வயது சிறுமியை தங்கையின் வீட்டில் விட்டு சென்றுள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு வாலிபரின் மனைவி வெளியூர் சென்ற நேரத்தில் சித்தப்பாவான அவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ஜெயம்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

பெண் கழுத்தை அறுத்து கொலை…. கணவரின் கொடூர செயல்…. பரபரப்பு சம்பவம்…!!!

மனைவியின் கழுத்தை அறுத்து கணவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் பகுதியில் ஜியாபத்(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் இறைச்சி கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ரியாஷ்பி(44) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் ஜெயம்கொண்டத்தில் இருக்கும் வாடகை வீட்டிற்கு சென்று வசிக்கலாம் என ரியாஷ்பியிடம் அவரது கணவர் கூறியுள்ளார். அதற்கு ரியாஷ்பி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் அந்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

வேன் ஓட்டுனரின் கவன குறைவு…. அதிர்ஷ்டவசமாக உயர் தப்பிய 15 குழந்தைகள்…. போலீஸ் விசாரணை…!!!

கார் மீது பள்ளி வாகனம் மோதிய விபத்தில் 15 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கோத்தகிரியில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இங்கு படிக்கும் குழந்தைகளை 2 வேன்களில் ஏற்றிக்கொண்டு மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் டானிங்டன் அருகே சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் பின்னால் வந்த வேன் ஓட்டுநர் முன்னால் சென்ற வேனை முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிரே வந்த கார் மீது வேன் எதிர்பாராதவிதமாக மோதியதால் கார் சேதமடைந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த […]

Categories
மாவட்ட செய்திகள்

“திருச்செந்தூரில் முன்னேற்பாடுகள் தயார்”…. போலீஸ் சூப்பிரண்டு தகவல்…!!!!

திருச்செந்தூரில் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பல முன்னேற்பாடுகள் தயார் செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற இருக்கின்றது. இவ்விழாவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்காக ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி பின்புறமாக 5000 வாகனங்கள் நிறுத்துவதற்கும் அன்பு நகரில் இருக்கும் வியாபாரிகள் சங்கத்திடலில் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மது பிரியர்களே….! “நாளை இங்கே டாஸ்மாக் கடை செயல்படாது”…. ஆட்சியர் அறிவிப்பு…!!!!!

தூத்துக்குடியில் நாளை மதுபான கடைகள் செயல்படாது என ஆட்சியர் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் தேவர் ஜெயந்தி குருபூஜை மற்றும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி விழாவையொட்டி நாளை அனைத்து அரசு மதுபான கடைகள், மதுபானக்கூடங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். நாளை மதுபான விற்பனை நடைபெற கூடாது. மேலும் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மதுபானத்தை கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் உள்ளிட்ட […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடி ஆசிர்வாதபுரம் பள்ளி”…. புகையிலை இல்லா சான்று வழங்கல்….!!!!

ஆசிர்வாதபுரம் பள்ளிக்கு புகையிலை பொருட்கள் இல்லாத பகுதி சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழகத்தில் புகையிலை பொருட்களை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. பள்ளி மற்றும் கல்லூரி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது தடுக்க காவல்துறை மற்றும் சுகாதாரத்துறை மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. சாலைப்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக பேய்குளம் அடுத்த ஆசீர்வாதபுரம் மேல்நிலைப்பள்ளிக்கு புகையிலை இல்லா சான்று வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இதற்கான நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் மாணிக்கத்திடம் சுகாதார […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இரவு முழுவதும் பெய்த சாரல் மழை…. தணிந்த வெப்பம்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று இரவு நேரத்தில் நாகர்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்நிலையில் இரவு முழுவதும் மழை பெய்ததால் மாநகரின் பல்வேறு இடங்களில் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நின்றது. பகலில் வெயில் பாட்டி வதைத்த நிலையில் இரவில் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இரவு நேரத்தில் சுற்றி திரிந்த மர்ம நபர்…. உரிமையாளர் அளித்த புகார்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்….!!!

மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடையாலுமூடு பகுதியில் அல் அமீன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்துள்ளார். இந்நிலையில் மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் யாரோ திருடி சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்த அல் அமீன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

குழந்தைகளை அச்சுறுத்திய குரங்குகள்…. கூண்டு வைத்து பிடித்த வனத்துறையினர்….!!

அட்டகாசம் செய்த 40 குரங்குகளை வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தக்கலை அருகே இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் போதிய உணவு கிடைக்காததால் குரங்குகள் ஊருக்குள் நுழைந்து அட்டகாசம் செய்கிறது. அந்த குரங்குகள் வீட்டிற்குள் நுழைந்து உணவு தின்பண்டங்களை எடுத்து செல்வதோடு குழந்தைகளையும் பயமுறுத்துகிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அமைச்சர் மனோ தங்கராஜிடம் குரங்குகள் தொல்லை குறித்து தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து அமைச்சர் மாவட்ட வனத்துறை அலுவலர் தொடர்பு கொண்டு […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

அழுகிய நிலையில் வாலிபர் உடல் மீட்பு…. நடந்தது என்ன…? நண்பர்களின் பரபரப்பு வாக்குமூலம்….!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பகுதியில் கூலி தொழிலாளியான ராஜேந்திரன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சித்தி பாப்பம்மா வீட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் அழுகிய நிலையில் ராஜேந்திரன் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் தார்பாயால் சுற்றப்பட்டு இருந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில், மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் ராஜேந்திரனை கொலை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து ராஜேந்திரனின் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மகளுக்கு துணையாக இருந்த தந்தை…. தீயில் உடல் கருகி இறந்த சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குமுதேபள்ளி விக்னேஷ் நகர் பகுதியில் அம்பிகா என்பவர் வசித்து வருகிறார். கணவரை இழந்த அம்பிகாவுக்கு அவரது தந்தை கிருஷ்ணப்பா துணையாக இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அம்பிகா திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊரான திருப்பத்தூருக்கு சென்றுவிட்டார். இதனால் கிருஷ்ணப்பா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் அதிகாலை வீடு தீப்பிடித்து எரிந்ததால் கிருஷ்ணப்பா அலறி சத்தம் போட்டுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

அழைப்பிதழ் கொடுப்பது போல நடித்த மர்ம நபர்கள்….. மூதாட்டிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!!

மதுரை மாவட்டத்தில் உள்ள டி.கல்லுப்பட்டி பகுதியில் ரவி- ருக்குமணி(70) தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று மாலை மூதாட்டி வீட்டில் தனியாக இருந்தபோது 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க மூன்று பேர் அங்கு சென்றனர். அவர்கள் மூதாட்டியிடம் உங்களது கணவருக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்துள்ளோம். அவரது செல்போன் எண்ணை தாருங்கள் என கேட்டனர். இதனை நம்பி ருக்மணி தனது கணவரின் செல்போன் நம்பரை கொடுத்துள்ளார். அவர்கள் ரவிக்கு போன் செய்வது போல நடித்து வீட்டின் கதவை பூட்டினர். […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தேங்காய் சிரட்டை வாங்குவது போல சென்று…. வாலிபர்கள் செய்த காரியம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நித்திரவிளை பகுதியில் வசிக்கும் பாபு வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு உஷா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உஷா தனது குழந்தைகள் அணிந்திருந்த தங்க சங்கிலி, மோதிரம் என 5 1/2 பவுன் நகைகளை கழற்றி வீட்டில் அலமாரியில் வைத்துள்ளார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் விபின், வினிஷ், அனீஸ் ஆகியோர் தேங்காய் சிரட்டை வாங்குவது போல உஷாவின் வீட்டிற்கு சென்று நோட்டமிட்டனர். இதனை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அனுமதி இன்றி வைக்கப்பட்ட விளம்பர பலகைகள் அகற்றம்…. எச்சரிக்கை விடுத்த சென்னை மாநகராட்சி….!!!!

சென்னை மாநகரில் அனுமதி இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகளை உடனே அகற்ற வேண்டும் இதனை மீறும் மீறினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகரம் மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது “சென்னையில் உரிமை இல்லாமல் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள் பதாகைகள் உடனடியாக அகற்றுவதற்கு மாநகராட்சி சார்பில் மண்டல அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு 17ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை சென்னையில் உள்ள […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சர்தார் வல்லபாய் பட்டேல் வாழ்க்கை வரலாறு கண்காட்சி…. பயணிகளுக்கும் அனுமதி உண்டு…. அறிவிப்பு வெளியிட்ட அதிகாரிகள்….!!!!

சென்னை மாநகரில் மீனம்பாக்கம் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலைய ஆணையத்தின் சார்பில் ஒற்றுமை திருவிழா கொண்டாடப்படுகிறது. இதற்காக உள்நாட்டு முனையம் வருகை பகுதியில் சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை மத்திய மந்திரி வி.கே.சிங் தொடங்கி வைத்துள்ளார். மேலும் இதில் விமான நிலைய ஆணையக இயக்குனர் சரத்குமார் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டுள்ளனர். இந்த கண்காட்சி ஒரு வாரம் நடைபெறும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தேர்வுக்கு பயந்து…. கடத்தல் நாடகமாடிய மாணவன்…. எச்சரிக்கை விடுத்த போலீஸ்….!!!!

சென்னை மாநகரில் கீழ்ப்பாக்கம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்றில் மாணவன் ஒருவன் ஏழாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த மாணவன் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் ஆட்டோவில் ஏறுவதற்காக காத்துக் கொண்டிருந்த போது இன்னொரு ஆட்டோவில் வந்த இரண்டு பேர் மாணவனை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் கடத்தி சென்றுள்ளனர். மேலும் ஓடும் ஆட்டோவில் மாணவனை அவர்கள் அடித்து துன்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த ஆட்டோ பச்சையப்பன் கல்லூரி சிக்னலில் நின்ற போது மாணவன் கீழே குதித்து தப்பியுள்ளார். பிறகு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

செயல்படாத தனியார் தொழிற்சாலை…. அழுகிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!!

அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் விவரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொல்லம்பாளையம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு நகரில் இருக்கும் தனியாருக்கு சொந்தமான டையிங் தொழிற்சாலை அமைந்துள்ளது. நீண்ட காலமாக செயல்படாமல் இருக்கும் தொழிற்சாலையில் உள்ள காலி இடத்திலிருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் 45 வயது மதிக்கத்தக்க பெண் அழுகிய நிலையில் இறந்து கிடந்ததை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

படபிடிப்பை பார்க்க சென்ற போது…. பள்ளி மாணவனுக்கு நடந்த விபரீதம்…. கதறும் குடும்பத்தினர்…!!

ஓடும் வேனில் ஏறும் போது தவறி விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி அடிவாரத்தில் குமரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளான். நேற்று முன்தினம் பழனி பாலாறு-பெருந்தலாறு அணை பகுதியில் தனியார் நிறுவனத்தின் குறும்பட படப்பிடிப்பு நடைபெற்றதால் ரமேஷ் தனது நண்பர்களுடன் அங்கு சென்றுள்ளான். இந்நிலையில் பாலசமுத்திரம் சாலையில் நடந்து சென்ற […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

செல்போன் கோபுரத்தில் ஏறி பட்டாசு வெடித்த வாலிபர்…. என்ன காரணம்….?? பரபரப்பு சம்பவம்….!!!

செல்போன் கோபுரத்தின் மீது ஏறி வாலிபர் பட்டாசு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நாகல்நகர் சிறுமலை செட் பகுதியில் கையில் பையுடன் வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்தார். மாலை 6.30 மணிக்கு திடீரென அந்த வாலிபர் செல்போன் அந்த பையில் இருந்து அதிமுக பாஜக உள்ளிட்ட கட்சிகளின் கொடிகள், பட்டாசுகள் மற்றும் கோரிக்கை மனுவை கையில் எடுத்துக்கொண்டு அப்பகுதியில் இருந்து செல்போன் கோபுரத்தின் மீது ஏறி உச்சிக்கு சென்றார். இதனை அடுத்து கட்சி […]

Categories
ஆன்மிகம் ஈரோடு மாவட்ட செய்திகள்

பெரிய மாரியம்மன் கோவிலில்…. கும்பாபிஷேக விழா…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

ஈரோடு மாவட்டத்தில் பைராபாளையம் பகுதியில் செல்வகணபதி, பெரிய மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த சில நாட்களாக புணரமைப்பு பணிகள் நடைபெற்று வந்துள்ளது. இந்த பணிகள் தற்போது நிறைவடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கடந்த 26 ஆம் தேதி காலை மகா கணபதி ஹோமமும் நவகிரக ஹோமமும் நடத்தப்பட்டு கும்பாபிஷேக விழா தொடங்கப்பட்டது. இதனை அடுத்து பகலில் காவிரி ஆற்றுக்கு சென்ற புனித நீர் எடுத்து வந்து பின்னர் மாலையில் மாவிளக்கு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்…. எளிய வழிமுறைகள் இதோ…. பயிற்சியில் விவசாயிகள்….!!!!

தண்ணீரின் சிக்கனம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் பனங்காட்டங்குடி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர் சுப்பிரமணியன் அறிவுறுத்தலின்படி கீழ் கொள்ளிடம் பாசன பகுதி விவசாயிகளுக்கு சில பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. அதாவது நெற்பயிரில் நீர் மறைய நீர் கட்டுதல், ஒருங்கிணைந்த மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகள் பயிற்சி பெற்றனர். இந்த பயிற்சியானது உளவியல் இணை பேராசிரியர் இளமதி மேற்பார்வையில் நடைபெற்றது. மேலும் இதில் கலந்துகொண்ட இணை பேராசிரியர் நாகேஸ்வரி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“இதனால நிறைய விபத்து நடக்குது”…. உடனே சரி பண்ணி தாங்க…. பொதுமக்களின் கோரிக்கை….!!!!

குண்டும் குழியுமாய் கிடக்கும் சாலையை சீரமைத்து தர வேண்டி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் திருக்கடையூர் பகுதியில் உள்ள சந்து தெருவில் சிமெண்ட் சாலை சீரமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றது. இந்த சிமெண்ட் சாலை சீரமைக்கப்படாததால் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கின்றது. மேலும் இதன் வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இந்த சாலை சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் அடிக்கடி விபத்தும் ஏற்படுகின்றது. எனவே சந்து தெருவை […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (29.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 29) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 75 காசுகளிலிருந்து, அக்டோபர் 27 ஆம் தேதி முதல் 25 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“பேரனை பேருந்துக்கு அடியில் விட்டுச்சென்ற பாட்டி”… போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைப்பு….!!!!!

பாட்டி, பேரனை பேருந்து நிலையத்தில் விட்டுச்சென்ற நிலையில் போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்சங்கோடு இறையமங்கலம் பகுதியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவரின் மனைவி மேரி. இத்தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கின்றார். இந்நிலையில் மேரி தனது குழந்தை மற்றும் மனநலம் பாதித்த தனது தாயாருடன் ஈரோட்டிற்கு துணி எடுக்க சென்றுள்ளார். அவர்கள் திருச்செங்கோட்டில் இருந்து பேருந்தில்  புறப்பட்டார்கள். கடைசி சீட்டில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தனது பேரனுடன் அமர்ந்திருந்தார். திடீரென மனநல பாதிக்கப்பட்ட பெண் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“வீடு தேடி கல்வித் திட்டம்”…. ஓராண்டு நிறைவு… “போனில் வாழ்த்து தெரிவித்த முதல்வர்”….!!!!

வீடு தேடி கல்வி திட்டம் தொடங்கி ஒரு வருடம் நிறைவு பெற்றதை தொடர்ந்து குன்னூர் தன்னார்வலர்களுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் அட்டடியில் இருக்கும் இல்லம் தேடி கல்வி திட்டம் மையத்தில் நேற்று முன்தினம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார். அப்போது தன்னார்வலர் ஒருவரை கல்வி அமைச்சரின் செல்போன் மூலமாக முதல்வர் தொடர்பு கொண்டு அவரிடம் பேசினார். அப்போது பெயர், ஊர் குறித்து கேட்டார். இதன் பின்னர் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

“அரசு பேருந்தில் துர்நாற்றம்”… கண்டுகொள்ளாத கண்டக்டர்…. சிரமத்திற்குள்ளான பயணிகள்….!!!!!

குன்னூரில் இருந்து கோத்தகிரிக்கு இயக்கப்படும் அரசு பேருந்தில் கடும் துர்நாற்றம் வீசியதால் பயணிகள் அவதிக்குள்ளானார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூரில் இருந்து கோத்தகிரிக்கு நேற்று முன்தினம் இரவு ஏழு முப்பது மணிக்கு அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தார்கள். அப்போது பேருந்தில் கடும் துர்நாற்றம் வீசியதனால் பயணிகள் இது குறித்து நடத்தினரிடம் புகார் கொடுத்தார்கள். ஆனால் அவர் அதெல்லாம் என்னுடைய வேலை இல்லை என கூறியதாக சொல்லப்படுகின்றது. இதில் ஆத்திரம் […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஊட்டி மார்லிமந்து அணை…. “1 கோடி மதிப்பில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டம்”….!!!!!

ஊட்டியின் முக்கிய குடிநீர் ஆதாரமான மார்லிமந்து அணையில் 1 கோடியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட இருக்கின்றது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி நகருக்கு தண்ணீர் தருகின்ற மூன்றாவது முக்கிய குடிநீர் ஆதாரமாக மார்லிமந்து அணை இருக்கின்றது. இந்த அணை ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட மிகவும் பழமை வாய்ந்த அணையாகும். இந்த அணையின் தடுப்பு சுவர்களில் விரிசல் ஏற்பட்டதால் தண்ணீர் வீணாகி வருகின்றது. மேலும் தூர்வாரப்படாமல் இருப்பதால் அதிக தண்ணீரை சேர்த்து வைக்க முடியவில்லை. பொதுமக்களுக்கு சுத்திகரிப்பு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தற்கொலைக்கு முயன்ற திருநங்கை…. “கைகளில் தூக்கி வந்து மருத்துவமனையில் அனுமதித்த பெண் போலீஸ்”…!!!!!

தற்கொலைக்கு முயன்ற திருநங்கையை பெண் போலீஸ் ஒருவர் கைகளில் தூக்கி வந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தட்டார்மடம் அருகே இடைச்சிவிளை மோடி நகரைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் சம்பவத்தன்று பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராமலட்சுமியை தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தார்கள். இந்நிலையில் முத்துக்குமாரின் அண்ணனான திருநங்கை செல்வராஜ் என்ற செல்வி சென்ற 26 ஆம் தேதி சாத்தான்குளம் நீதிமன்றத்திற்கு சென்று தனது தம்பி முத்துகுமார் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கிறிஸ்துவ தேவாலயங்களை சீரமைப்பதற்கு நிதி உதவி”…. தூத்துக்குடி ஆட்சியர் அறிவிப்பு….!!!!

தூத்துக்குடியில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சீரமைப்பதற்கு நிதி உதவி வழங்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செய்து குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தூத்துக்குடியில் சொந்த கட்டிடத்தில் இயங்கி வரும் கிறிஸ்தவ தேவாலயங்களை பழுதுபார்த்தல் மற்றும் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்வதற்கு நிதியுதவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. இவ்வுதவிகளை பெற தேவாலயம் பதிவு செய்யப்பட்டு, சொந்த கட்டிடத்தில் குறைந்தபட்சம் 10 வருடங்களுக்கு மேல் பயன்பாட்டில் இருக்க வேண்டும். மேலும் பதிவு துறையில் பதிவு செய்திருக்க […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“மாணவர் மனசு பெட்டி”…. நோக்கம் நிறைவேற்றப்படுகின்றதா…?

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர் மனசு பெட்டி தலைமையாசிரியர் அறைக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளது. இதை கண்காணிப்பதற்காக தலைமை ஆசிரியர் தலைமையில் இரண்டு ஆசிரியர்கள், ஒரு பெற்றோர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர், ஆசிரியர் அல்லாத பணியாளர், நிர்வாகப் பணியாளர் உள்ளிடோர் கொண்ட பாதுகாப்பு ஆலோசனை குழு அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த பெட்டியை 15 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது மாதத்திற்கு ஒரு முறையோ பிரித்துப் பார்த்து பள்ளி அளவில் நிவர்த்தி செய்ய முடிந்ததை உடனுக்குடன் தீர்வு காணப்படுகின்றது. […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

காட்டுப்பகுதியில் கேட்ட அலறல் சத்தம்…. சிறுமியை மீட்ட பொதுமக்கள்…. நீதிபதி அதிரடி….!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள உலகத்தான்பட்டியில் மாரிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமியை காட்டுபக்கம் தூக்கி சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். அப்போது சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சிலர் சிறுமியை மீட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் மாரிமுத்துவை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் மாரிமுத்துவுக்கு 1 லட்ச ரூபாய் அபராதமும், 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

“ஆன்லைனில் பதிவு செய்ய முடியவில்லை” சாலை மறியலில் ஈடுபட்ட தொழிலாளர்கள்…. போலீசாரின் பேச்சுவார்த்தை…!!

100 நாள் வேலை வழங்காததை கண்டித்து தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நாடு முழுவதும் சர்வர் பிரச்சனையால் ஆன்லைன் மூலம் 100 நாள் வேலைக்கு பதிவு செய்ய முடியவில்லை என ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேம்பன்பட்டி கிராமத்தில் 100 நாள் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பட்டுக்கோட்டை- கந்தர்வகோட்டை சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வேலை வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். […]

Categories

Tech |