Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தீப்பொறி விழுந்ததா….?? பற்றி எரிந்த குடிசை வீடு…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…!!!

குடிசை வீட்டில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு கனகசபா தெருவில் கூலி தொழிலாளியான ராமன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் ராமனின் குடிசை வீடு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ராமன் தனது குடும்பத்தினருடன் வெளியேறிவிட்டார். பின்னர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்கு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“உர விற்பனையில் 22 லட்சம் கையாடல்”…. அதிரடியாக இளைஞரை கைது செய்த போலீசார்….!!!!!

உர விற்பனையில் 21 லட்சத்து 91 ஆயிரம் கையாடல் செய்த வழக்கில் நாமக்கல்லை சேர்ந்த பட்டதாரி இளைஞரை போலீசார் கைது செய்துள்ளார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு அருகே இருக்கும் கொக்கராயன்பேட்டையில் செயல்பட்டு வரும் இந்திய உழவர் உர கூட்டுறவு நிறுவனத்தின் கிளையில் நாமக்கலை சேர்ந்த முதுநிலை வேளாண் பட்டதாரி சீனிவாசு சென்ற 2018 ஆம் வருடம் முதல் விற்பனையாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் சென்ற வருடம் மார்ச் மாதம் 15 ஆம் தேதி அவர் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஊருக்குள் நுழைந்த முதலை…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…. வாலிபர்களின் துரிதமான செயல்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நெடுங்குன்றம் ஏரியில் ஏராளமான முதலைகள் இருக்கின்றன. இங்குள்ள முதலைகள் அடிக்கடி குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து பொதுமக்களை பயமுறுத்தி வருகிறது. நேற்று அதிகாலை நெடுங்குன்றம் மேட்டு தெருவில் முதலை ஒன்று நுழைந்தது. சுமார் 7 அடி நீளம் உள்ள முதலையை பார்த்து பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனை அடுத்து வாலிபர்கள் கயிறு கட்டி முதலையை லாவகமாக பிடித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் முதலையை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

70 லட்ச ரூபாய் மோசடி…. அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம்…. அதிரடி நடவடிக்கை…!!!

அரசு பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள டி.புதுப்பாளையம் மேட்டு தெருவில் சங்கரன்(51) என்பவர் வசித்து வருகிறார். இவர் சித்தலிங்கமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மின்வாரியத்தில் உதவி பொறியாளர், கேங்மேன் வேலை வாங்கி தருவதாக கூறி 40 பேரிடமிருந்து தலா 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய், 18 பேரிடமிருந்து தலா 25 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 94 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

திடீரென தீப்பிடித்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 2 பேர்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!!

ரயில்வே மேம்பாலத்தில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் இருந்து பெங்களூரு நோக்கி கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரை கிருஷ்ணகாந்த்(44) என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள திண்டிவனம் ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த போது காரின் முன்பகுதியில் இருந்து புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த கிருஷ்ணகாந்த் வாகனத்தை உடனடியாக நிறுத்தி தன்னுடன் வந்த பெண்ணுடன் கீழே இறங்கினார். சிறிது நேரத்தில் கார் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“பிஸ்கட் தருவதாக கூறி அழைத்த முதியவர்” சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள புதுஉச்சிமேடு பகுதியில் சன்னியாசி(70) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 7 வயது சிறுமி பிஸ்கட் வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது முதியவர் பிஸ்கட் தருவதாக கூறி நைசாக சிறுமியை தனியாக அழைத்துச் சென்று சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார் இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த போலீசார் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கொதிக்கும் பாலை ஊற்றிய கணவர்…. வலியில் அலறி துடித்த இளம்பெண்…. போலீஸ் விசாரணை…!!!

இளம்பெண் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய கணவரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாத்திமா நகரில் அருண்குமார்(32)- வத்சலா (29) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் அருண்குமார் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார். அவர் வேலைக்கு செல்லாமல் மது குடித்துவிட்டு தனது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் விவாகரத்து கோரி இளம்பெண் வழக்கு தொடர்ந்துள்ளார். தற்போது சூலக்கரை வள்ளுவன் நகரில் இருக்கும் தந்தை வீட்டில் இளம்பெண் தனது […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

முதியவரை தேடி அலைந்த உறவினர்கள்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!!

காணாமல் போன முதியவர் சடலமாக மீட்கப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வைத்தூர் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட ரெங்கன் (80) என்பவர் வசித்து வந்துள்ளார். ஏனெனில் தீபாவளி அன்று இரவு நேரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த முதியவர் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் ரெங்கனின் மகன் செல்வராசு காவல் நிலையத்தில் தனது தந்தையை காணவில்லை என புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கடையை சூறையாடிய மர்ம கும்பல்…. ஊழியர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

மர்ம நபர்கள் கடைக்குள் புகுந்து ஊழியரை தாக்கி பொருட்களை அடித்து நொறுக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரியார் நகரில் பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான பேன்சி கடை அமைந்துள்ளது. இங்கு கோபாலகிருஷ்ணன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று மதியம் 6 பேர் கொண்ட மர்ம கும்பல் கடைக்குள் நுழைந்து கோபாலகிருஷ்ணனை தாக்கி கடையை அடித்து நொறுக்கி விட்டு அங்கிருந்து சென்றனர். இதனால் காயமடைந்த கோபாலகிருஷ்ணனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“செல்போன் கோபுரத்தின் மீது ஏறிய தொழிலாளி”…. தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு….!!!!!

செல்போன் கோபுரத்தின் மீது ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டத்திலுள்ள எருமைப்பட்டி அருகே இருக்கும் முண்டான்செட்டி கிராமத்தைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவருக்கும் அவரின் அண்ணன் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தகராறு இருந்து வந்ததாக சொல்லப்படுகின்றது. இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது. வழக்கின் முடிவு தாமதமாகி வருவதால் அண்ணாதுரை மிகுந்த மன வேதனை அடைந்ததாக சொல்லப்படுகின்ற நிலையில் அவர் நேற்று சேந்தமங்கலம் நீதிமன்றம் அருகே இருக்கும் செல்போன் கோபுரத்தின் […]

Categories
மாவட்ட செய்திகள்

பெண்ணை தாக்கிய கொடூரம்…. இன்ஸ்பெக்டர் உட்பட 5 பேர் மீது வழக்குபதிவு…. போலீஸ் அதிரடி….!!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் அபிராமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் மூங்கில் தோட்டம் கன்னித்தோப்பு பகுதியைச் சேர்ந்த வினோத் குமார் என்பவரை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதனை அடுத்து அபிராமியின் கணவரும் மாமியாரும் வரதட்சணை கேட்டு அவரை கொடுமைப்படுத்தி உள்ளனர். இதனால் அபிராமி வினோத்குமார் விட்டு பிரிந்து சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றார். இதனை அடுத்து அபிராமி தீபாவளி பண்டிகைக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறை வந்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

Instagramல் காதல்…. புது மாப்பிள்ளையின் மர்ம சாவு…. போலீஸ் தீவிர விசாரணை….!!!!

கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரசாத். இவருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 23 வயதுடைய பெண்ணுக்கும் instagramல் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதனை அடுத்து இவர்கள் இருவரும் கடந்த மாதம் ஐந்தாம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து திருமணம் செய்த நாளிலிருந்து இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாக இருந்துள்ளது. இதனால் புதுமணப்பெண் 23ஆம் தேதி ஊருக்கு செல்வதாக கூறு விட்டு சென்றுள்ளார். அதன் பின் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“உள்நோக்கத்துடனே வதந்திகளை பரப்புகின்றனர்”…. இலங்கை தமிழர் குடியிருப்புகள் குறித்து…. கலெக்டர் வெளியிட்ட தகவல்….!!!!

வேலூர் மாவட்டத்தில் வேல்மொண ஊரில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் அமைந்துள்ளது. இங்கு அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த பணியினை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். மேலும் கட்டுமான பணிகளில் எந்த காரணத்திற்கு கொண்டும் தரம் குறைவாக இருக்கக் கூடாது என அவர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது “இலங்கை தமிழர்களுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கும் பணிகளை […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“சீக்கிரம் இதை சரி செய்யுங்க”…. போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள்…. அதிகாரிகளுக்கு பொதுமக்களின் கோரிக்கை….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை பழனி தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக கார் லாரி வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் பஸ் நிலையத்திற்கு பின்புறம் உள்ள பைபாஸ் சாலை வழியாகத்தான் ரவுண்டானா அருகில் பழனி சாலையில் வந்து இணையும். இவ்வாறு இணையும் இடத்தில் 15 பேருந்துகள் நின்று செல்லும் வகையில் கூடுதல் பஸ் நிலையம் கட்டுவதற்காக கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் ரவுண்டானா அருகில் இருந்து பழனி சாலையில் கனரக வாகனங்கள் மற்றும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக…. புது மாப்பிள்ளை அடித்துக் கொலை…. அதிரடி நடவடிக்கையில் போலீஸ்….!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் அய்யனேரி கிராமத்தில் தசரதன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகனான சரத்குமாருக்கு ஐந்து மாதத்திற்கு முன்பு திவ்யா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் சரத்குமார் தனது மாமனாருடன் ஐபேடு கிராமத்திற்கு இறைச்சி வாங்க சென்றுள்ளார். அந்த கிராமத்தை சேர்ந்த சிலரிடம் சரத்குமாருக்கு முன்விரோதம் இருந்துள்ளது. இதனை அடுத்து சரத்குமார் இறைச்சி வாங்கி விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அந்த கிராமத்தை சேர்ந்த தாமோதரன், கோபி, துரைப்பாண்டி, அசோக்பாண்டியன், குபேந்திரன், சதீஷ் ஆகிய ஆறு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

வயர் மேனை தாக்கிய மின்சாரம்…. பெரும் சோகம்….!!!!

மின்சார பழுதை சரி செய்வதற்காக மின்கம்பத்தின் மீது ஏறிய வயர் மேன் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் கன்னிகாபுரம் பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வந்தார். இவர் அதிமாஞ்சேரி பேட்டை பகுதியில் உள்ள மின்வாரியத்தில் வயர் மேனாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவர் தன்னுடைய கிராமத்தில் ஏற்பட்டுள்ள மின்சாரப் பழுதை சரி செய்வதற்காக மின்கம்பத்தின் மீது ஏறி உள்ளார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக மின்சாரம் அவரை தாக்கியுள்ளது. இதில் வெங்கடேசன் மின்கம்பத்தில் இருந்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

18 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரி…. கிடா வெட்டி, தெப்பம் விட்டு மகிழ்ந்த விவசாயிகள்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முத்தாலி கிராமத்தில் ஏரி அமைந்துள்ளது. கடந்த 18 ஆண்டுகளாக இந்த ஏரி நிரம்பாமல் இருந்ததால் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் ஓசூர் பகுதியில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக முத்தாலி ஏரி நிரம்பியதால் சின்னகுள்ளு, பெததகுள்ளு உள்ளிட்ட 10 கிராம மக்கள் ஏரியில் தெப்பம் விட்டு, கிடா வெட்டி பூஜை நடத்தியுள்ளனர். சுமார் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த சரக்கு வேன்…. 4-ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து….!!!

சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை நான்காக உயர்ந்தது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தீர்த்தம் பகுதியில் 16 பெண்கள் உட்பட 19 பேர் சரக்கு வேனில் கடந்த 22-ஆம் தேதி கூலி வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். இந்த வேலை முருகன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் ராமன்தொட்டி என்ற பகுதியில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் வீரபத்திரன்(40), சின்னக்கா(60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மனநலம் பாதிக்கப்பட்ட இளம்பெண்…. பெற்றோரின் பரபரப்பு புகார்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சாலிவரம் பகுதியில் திம்மப்பா(28) என்பவர் வசித்து வருகிறார். கூலி தொழிலாளியான இவர் மனநலம் பாதிக்கப்பட்ட 27 வயதுடைய இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அடுத்து ஆறு மாதங்கள் கழித்து உடல்நலம் பாதித்த இளம்பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இளம்பெண் 6 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இளம் பெண்ணின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

ரூ.100 குறைவாக கொடுத்த வாலிபர்கள்…. கடையில் ஏற்பட்ட தகராறு…. போலீஸ் விசாரணை…!!

பட்டாசு கடையில் தகராறில் ஈடுபட்ட நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கரூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளைப்பட்டி களத்து வீடு பகுதியில் ராஜகோபால் என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடை அமைந்துள்ளது. இந்நிலையில் கரையாம்பட்டி பகுதியில் வசிக்கும் அஜித், ஆகாஷ் ஆகி இருவரும் ராஜகோபாலின் கடைக்கு சென்ற பட்டாசு வாங்கியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் 100 ரூபாய் குறைவாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இது தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியது. இதுகுறித்து இரு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

குப்பையில் அடுத்தடுத்து வெடித்த பட்டாசுகள்…. வகுப்பில் இருக்க முடியாமல் சிரமப்பட்ட மாணவிகள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கச்சேரி தெருவில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். அதே தெருவில் புகழ்பெற்ற அபிராமி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் தெருவின் ஓரத்தில் பள்ளிக்கு எதிரே குப்பைகளை குவித்து வைத்திருப்பதால் துர்நாற்றம் வீசி மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். நேற்று குவிந்து கிடந்த குப்பைக்கு யாரும் தீ வைத்ததால் குப்பைகள் தீப்பிடித்து எரிந்து பள்ளி வளாகம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதற்கிடையே குப்பையில் கிடந்த பட்டாசுகளும் திடீரென […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!!

கிணற்றில் தவறி விழுந்த மாட்டை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தென்னம்பட்டி பகுதியில் விவசாயியான பிரபாகரன் என்பவர் ரசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 4 பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு எதிர்பாராதவிதமாக 90 அடி ஆழமுடைய கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் தத்தளித்தது. இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

திடீரென சரிந்து விழுந்த நெல் மூட்டைகள்…. அலறி துடித்த லாரி ஓட்டினர்…. போலீஸ் விசாரணை…!!!

நெல் முட்டைகள் சரிந்து விழுந்ததால் லாரி ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுசீந்திரம் யோகேஸ்வரர் தெருவில் பிரம்மநாயகம் (54) என்பவர் வசித்து வருகிறார். இவர் பாபு என்பவருக்கு சொந்தமான லாரியை ஓட்டி வந்துள்ளார். இவருக்கு சத்யகலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் நாகர்கோவில் ரயில் நிலையத்திலிருந்து நெல் முட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு பிரம்மநாயகம் அரிசி ஆலைக்கு சென்று கொண்டிருந்தார். இதனை அடுத்து அரிசி ஆலைக்கு சென்றவுடன் நெல் மூட்டைகளை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

செல்போன் மூலம் அழைத்த வாலிபர்….. சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இரணியல் பகுதியில் யானை பாகனான தனேஷ்(22) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் துணிக்கடையில் வேலை பார்த்த 15 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு செல்போனில் சிறுமியை தொடர்பு கொண்ட வாலிபர் அவரை கடத்தி சென்ற பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு […]

Categories
கரூர் மாவட்ட செய்திகள்

வலிப்பு நோயால் அவதிப்பட்ட சத்துணவு பணியாளர்…. நொடியில் பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை…!!!

தண்ணீரில் மூழ்கி சத்துணவு பணியாளர் பலியான சம்பவம் சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள தெலுங்கு பட்டி பகுதியில் ஆரியமாலா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு ஆதிதிராவிடர் தொடக்கப் பள்ளியில் சத்துணவு பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு அடிக்கடி வலிப்பு நோய் வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆரியமாலா பள்ளிக்கு நடந்து சென்றுள்ளார். முருகன் கோவில் அருகே சென்றபோது ஆரியமாலாவுக்கு திடீரென வலிப்பு வந்தது. இதனால் நிலைதடுமாறி அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்த ஆரியமாலா தண்ணீரில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாலையை கடக்க முயன்ற வாலிபர்…. மின்சாரம் தாக்கி பலியான சம்பவம்…. பெரும் சோகம்…!!!

சாலையை கடக்க முயன்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கரணை விவேகானந்தர் தெருவில் கம்ப்யூட்டர் இன்ஜினியரான இளவரசன்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் இளவரசன் கையேந்திபவனில் தனது நண்பர்களுடன் சாப்பிடுவதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் மடிப்பாக்கம் கைவேலி சந்திப்பு சிக்னல் அருகே சாலையை கடக்க முயன்றார். அப்போது சாலை நடுவே தடுப்பு சுவர்களுக்கு மத்தியில் அமைக்கப்பட்டிருந்த மின்சார கம்பம் பக்கத்தில் இருந்த சிறிய இடைவெளி வழியாக […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“ரோட்டில் சுற்றித்திரிந்த மனநலன் பாதிக்கப்பட்ட பெண்”…. வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்பு….!!!!!

மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை வருவாய் துறை அதிகாரிகள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு அருகே இருக்கும் மதினா பள்ளி மலட்டாறு  மேம்பாலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான கோவில் அருகே சென்ற மூன்று நாட்களாக 30 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுற்றித்திரிந்து இருக்கின்றார். அவரை மீட்குமாறு தாசில்தார் வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டார். இதை அடுத்து அதிகாரிகள் இளம் பெண்ணை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால் அந்த இளம் பெண் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர்”…. 47 வருட சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு….!!!!

காங்கயம் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 47 வருட சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம் பரஞ்சேர்வழி தீர்த்தம்பாளையத்தை சேர்ந்த பழனி என்பவர் சென்ற 2020 ஆம் வருடம் ஆகஸ்ட் 26ம் தேதி 13 வயது சிறுமியை ஏமாற்றி வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றார். இதுப்பற்றி சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பழனியை […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்து வந்த மாற்றுத்திறனாளி”….விபரீத முடிவால் திருவள்ளூரில் சோகம்…..!!!!!

கடன் தொல்லையால் மாற்றுத்திறனாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள புதுமாவிலங்கை எம்.ஜி.ஆர் நகர் பகுதியை சேர்ந்த சேகர் என்பவரின் மகன் சுரேஷ். ஊனமுற்ற மாற்றுத்திறனாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகாத நிலையில் இவர் கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே செல்போன் ரீசார்ஜ் செய்யும் கடை நடத்தி வந்தார். இவருக்கு கடன் தொல்லை இருந்து வந்ததால் மன உளைச்சலில் காணப்பட்டதாக சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் அதிகாலை 5 மணி அளவில் கடம்பத்தூரில் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

பருவமழை காலத்தில்… “பயிர் பாதுகாப்பு செய்வது எப்படி..?” வழிமுறைகள் குறித்து அதிகாரி தகவல்….!!!!!

பருவமழை காலத்தில் பயிர்களை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் குறித்து தோட்டக்கலை துறை அதிகாரி தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்திலுள்ள வாழை, திராட்சை உள்ளிட்ட பழபெயர்கள் 18,750 ஹெக்டேர் அளவிலும் தக்காளி, மிளகாய், வெண்டைக்காய், வெங்காயம், கத்திரிக்காய் உள்ளிட்ட காய்கறி பயிர்கள் 5700 ஹெக்டேர் அளவிலும் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் வடக்கிழக்கு பருவமழை காலத்தில் பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். இது குறித்து தோட்டக்கலை துறை அதிகாரி கூறியுள்ளதாவது, வாழை பயிர்கள் காற்றுக்கு எளிதில் உடைந்துவிடும் […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற மாணவி”…. கண்ணிமைக்கும் நேரத்தில் நேர்ந்த சோகம்….!!!!!

கும்முடிபூண்டி அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ஆசிரியர் பயிற்சி கல்லூரி மாணவி உயிரிழந்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டியில் இருக்கும் தபால் தெருவை சேர்ந்த சந்தியா என்பவர் சென்னையில் இருக்கும் தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்து வருகின்றார். இவர் சென்ற 25ஆம் தேதி கும்முடிபூண்டி சென்னை சென்ட்ரல் ரயில் மார்க்கத்தில் இருக்கும் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயற்சித்திருக்கின்றார். அப்போது எதிர்பாராவிதமாக அகமதாபாத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மிஸ் பண்ணிடாதீங்க…. தனியார் வேலைவாய்ப்பு முகாம்…. வெளியான தகவல்…!!

திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நாளை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வைத்து சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் விவரத்தை பதிவு செய்ய வேண்டும். இதனை அடுத்து போட்டி தேர்வுகளுக்கு தயார் செய்யும் மாணவர்கள் www.tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து போட்டி தேர்வுகளுக்கான பாட குறிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மகளிடம் எப்படி பணம் கேட்கலாம்..?? பெண்ணை மிரட்டிய நபர்…. போலீஸ் விசாரணை…!!!

பெண்ணை மிரட்டிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்து மேட்டு தெருவில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சுப்புலட்சுமி என்பவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்தார். இந்நிலையில் சுப்புலட்சுமியிடம் 46 ஆயிரம் ரூபாய் பணத்தை முருகன் கடனாக வாங்கியுள்ளார். அதில் 17 ஆயிரம் ரூபாயை மட்டுமே திருப்பி கொடுத்தார். இதனால் மீதி பணத்தை தருமாறு முருகன் வீட்டில் இல்லாத போது அவரது மகளிடம் சுப்புலட்சுமி கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

செல்போனை உடைத்த கணவர்…. காதல் மனைவி எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி அழகியநம்பிபுரம் பகுதியில் மைக்கில் மதன்சிங்(27) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மதன் சிங் சினேகா(23) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதுடைய பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த மதத்தின் தனது மனைவியின் செல்போனை உடைத்தார். இதனால் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மோட்டார் சைக்கிளில் சென்றபடி பட்டாசு வெடித்த வாலிபர்கள்…. வைரலாகும் வீடியோ…. அதிரடி நடவடிக்கை…!!!

மோட்டார் சைக்கிளில் சென்றபடி பட்டாசு வெடித்த வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம் சந்திப்பு பகுதியில் இருந்து பழைய பேருந்து நிலையத்தை கடந்து செல்லும் சாலையில் தீபாவளி தினத்தில் இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அவர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதோடு, பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் கையில் வாணவெடியை வடிக்க செய்தார். இதனை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். அந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது. இதனை பார்த்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து…. 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!!

தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டதால் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள குருப்பநாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட என்.ஜி.ஜி.ஓ காலனியில் சுரேந்தர் என்பவருக்கு சொந்தமான குச்சிப்பை பிரிண்டிங் தொழிற்சாலை அமைந்துள்ளது. நேற்று இரவு அப்பகுதியில் இருக்கும் டிரான்ஸ்பார்மரில் இருந்து அதிக அளவு மின்சாரம் வந்தது. இதனால் தொழிற்சாலை குடோனுக்கு செல்லும் மின் ஒயரில் எதிர்பாராத விதமாக தீப்பிடித்து பிரிண்டிங் செய்ய அடுக்கி வைக்கப்பட்டிருந்த குச்சிப்பை பண்டல்களின் தீ வேகமாக பரவி அப்பகுதி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

அடக்கம் செய்யப்பட்ட முதியவர்…. வெள்ளப்பெருக்கால் மேலே வந்த உடல்…. பரபரப்பு சம்பவம்…!!!

அடக்கம் செய்யப்பட்ட முதியவரின் உடல் வெள்ளப்பெருக்கால் முட்புதரில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாசூரில் இருக்கும் காவிரி ஆற்றின் கரையோரம் உள்ள முட்புதரில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் முதியவரின் உடல் கிடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், முதியவர் செங்கோடம்பாளையம் பகுதியில் வசித்த துரைசாமி(70) என்பது தெரியவந்தது. கடந்த மாதம் துரைசாமி இறந்துவிட்டார். இதனால் உறவினர்கள் துரைசாமியின் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திடீரென அதிகரித்த வலி…. ஆம்புலன்சில் பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர்…. குவியும் பாராட்டுகள்…!!!

ஆம்புலன்ஸில் வைத்து பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள குன்றி மலை கிராம பகுதியில் சாலமன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேரி ஸ்டெல்லா(23) என்ற மனைவி உள்ளார். நிறை மாத கர்ப்பிணியான மேரிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனால் ஆம்புலன்ஸ் மூலம் மேரியை கடம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். இதனை அடுத்து சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்த போது மேரிக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு தப்பிக்க முயன்ற இங்கிலாந்து கடத்தல்காரர்”…. சாட்சிகளிடம் விசாரணை தொடக்கம்….!!!!

தூத்துக்குடி இருந்து இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்ற இங்கிலாந்தை சேர்ந்த கடத்தல்காரர் கைதான வழக்கில் சாட்சிகளிடம் விசாரணை நேற்று ஆரம்பமாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தரையர் காலனி கடற்பகுதியில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோனதன் தோர்ன் என்பவர் சுற்றித்திரிந்ததால் சென்ற வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி போலீசார் அவரை மடக்கி பிடித்தார்கள். பின் போதை பொருள் கடத்தல் வழக்கில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. மேலும் அவர் தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்பிக்க முயன்றதும் தெரிந்தது. இதனால் போலீசார் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“கோவில்பட்டியில் வீடு புகுந்து அரிவாளை காட்டி மிரட்டிய கும்பல்”….. 5 பேர் அதிரடி கைது….!!!!

கோவில்பட்டியில் வீடு புகுந்து கார் மீது ஏறி நின்று தாய், மகளை அரிவாளை காட்டி மிரட்டிய 5 பேரை போலீசார் கைது செய்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அருகே அத்தைகொண்டான் பகுதியைச் சேர்ந்த தாமோதர கண்ணன் என்பவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றார். இவரின் மனைவி லாவண்யா. இவர்களின் வீட்டின் முன்பாக கண்காணிப்பு கேமரா வைக்கப்பட்டிருக்கின்றது. சம்பவத்தன்று இவர்களின் வீட்டின் எதிரே இருக்கும் வீட்டில் கோழி திருட்டுப் போனதால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

10 நாட்களுக்கு பிறகு…. அணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி….!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கொடிவேரி தடுப்பணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்து விட்டு கரையில் விற்பனை செய்யும் மீன்களை வாங்கி சாப்பிடுவர். கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கொடிவேரி அணையில் குளிப்பதற்கு கடந்த 10 நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் பவானிசாகர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டதால் வெள்ளப்பெருக்கு […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

14 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த கணவர்…. கர்ப்பிணி திடீர் சாவு…. போலீஸ் விசாரணை…!!!

கர்ப்பிணி திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள சாஸ்திரி நகரில் ஆரோக்கியமேரி(38) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக ஆரோக்கியமேரியின் கணவர் அற்புதராஜ் பிரிந்து சென்றுவிட்டார். இந்த தம்பதியினருக்கு 22 வயதுடைய மகளும், 14 வயதுடைய மகனும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் வயிற்று வலியால் அவதிப்பட்ட ஆரோக்கிய மேரியை அவரது மகன் ஈரோடு அரசு மருத்துவமனை அழைத்து சென்றுள்ளார். அங்கு சிகிச்சை அளித்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தாய் வீட்டிற்கு அழைத்த மனைவி…. பள்ளி ஆசிரியர் தற்கொலை…. போலீஸ் விசாரணை….!!!

தனியார் பள்ளி ஆசிரியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் அக்ரஹாரம் வீதியில் சீனிவாசன்(45) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு விக்னேஷ்வரி(39) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரிதம் தன்வந்திரிக்கா(8) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் சேலத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு சென்று தீபாவளியை கொண்டாடலாம் என விக்னேஷ்வரி தனது கணவரை அழைத்துள்ளார். அதற்கு விடுமுறை இல்லாததால் அங்கு போக வேண்டாம் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“மேளம் அடிக்க சென்ற இடமெல்லாம் பழக்கம்” இளம்பெண் தற்கொலை வழக்கு…. கணவர் உள்பட 2 பேர் கைது…!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நீலமங்கலம் புது காலனி பகுதியில் மேளக்காரரான புருஷோத்தமன்(22) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஐஸ்வர்யா(22) என்ற பெண்ணுடன் புருஷோத்தமனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மேளம் அடிக்க செல்லும் இடமெல்லாம் பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த புருஷோத்தமனை ஐஸ்வர்யா கண்டித்ததால் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனை அடுத்து உனது தாய் வீட்டிற்கு சென்று பணம் வாங்கி வா எனக்கூறி புருஷோத்தமன் தனது மனைவியை அடித்து துன்புறுத்தியுள்ளார். இதனால் மன […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பட்டாசு வெடித்ததால் இடையூறு…. கர்ப்பிணியை தாக்கிய கும்பல்…. போலீஸ் விசாரணை…!!!

கர்ப்பிணியை தாக்கி 6 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆற்றூர் முள்ளுவிளை பகுதியில் விஷ்ணு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபலட்சுமி என்ற மனைவி உள்ளார். கர்ப்பிணியாக இருக்கும் சுபலட்சுமி பிரசவத்திற்காக காவல்ஸ்தலம் செட்டி தெருவில் இருக்கும் தாய் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு விஷ்ணு தனது மனைவியை பார்ப்பதற்காக சென்றபோது அதே பகுதியில் வசிக்கும் சிலர் சுபலட்சுமி வீட்டிற்கு முன்பு பட்டாசுகள் வெடித்து […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில் அட்டூழியம்…. மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது…. போலீஸ் விசாரணை…!!!

மிரட்டி பணம் பறித்த பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திக்கனங்கோடு கீழ புல்லுவிளை பகுதியில் ரத்தினகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரிஜேஸ் (26) என்ற மகன் உள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ரிஜேஸ் சேனம்விளை அரசு மருத்துவமனை அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது ரவுடியான சிம்சோனி என்பவர் வழிமறித்து பணம் கேட்டுள்ளார். அப்போது ரிஜேஸ் தன்னிடம் பணம் இல்லை என கூறியதால் கத்தியை […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

50 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரி….. ஆடு வெட்டி சிறப்பு பூஜை செய்த பொதுமக்கள்….!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அச்சமங்கலம் பகுதியில் 120 ஏக்கர் பரப்பளவு உடைய பெரிய ஏரி அமைந்துள்ளது. இந்நிலையில் 2 லட்ச ரூபாய் செலவு செய்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பர்கூர் எம்.எல்.ஏ-வுமான மதியழகன் என்பவர் நீர்வழி பாதைகளை சீரமைத்து தூர்வார நடவடிக்கை எடுத்தார். இதனால் பெரிய ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு அச்சமங்கலம் பெரிய ஏரி நிரம்பியதால் மதியழகன் எம்.எல்.ஏ மலர் தூவி விவசாயிகளுக்கு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலத்தில் வியாபாரிகளை தாக்கி 100 கிலோ வெள்ளி கொள்ளை”…. 3 பேர் கைது….!!!!

ஓமலூர் அருகே வியாபாரிகளை தாக்கி 100 கிலோ வெள்ளியை கொள்ளை அடித்துச் சென்ற மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய் பேட்டை மார்க்கெட் ரோடு பகுதியைச் சேர்ந்த சந்தோஷ், சாகர் மற்றும் சிவதாபுரம் பனங்காடு பகுதியை சேர்ந்த விக்ராந்த் உள்ளிட்ட மூன்று பேரும் வெள்ளியை மொத்தமாக வாங்கி செவ்வாய்பேட்டை பகுதியில் சில்லறையாக விற்கும் தொழில் செய்து வந்துள்ளார்கள். இந்நிலையில் சென்ற 13ஆம் தேதி மூன்று பேரும் சேலத்தில் இருந்து கார் மூலம் […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“புதுமைப்பெண் திட்டம்”…. வருகிற 1 ஆம் தேதி முதல்….சிறப்பு முகாம் ஏற்பாடு…. தவறவிட்டுறாதீங்க!!!!

தேனி மாவட்டத்தில் புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த முகாம் வருகிற 1 ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இது குறித்து தேனி மாவட்டத்தின் கலெக்டரான முரளிதரன் செய்தி குறிப்பில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது “தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவிகளுக்கு மேற்படிப்பு மற்றும் தொழில்நுட்ப படிப்புக்காக மாதம் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மக்களுக்கு உங்களுக்காக…. செங்கோட்டை-மயிலாடுதுறை…. முன்பதிவில்லாத விரைவு ரயில் போக்குவரத்து தொடக்கம்….!!!!

தென்காசி மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு முன்பதிவில்லாத விரைவு ரயில் நேற்று காலையில் இருந்து தொடங்கியுள்ளது. இந்த ரயிலை செங்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ தலைமை தாங்கி கொடியசைத்து ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்துள்ளார். இந்த முன்பதிவில்லாத விரைவு ரயில் ஆனது செங்கோட்டையிலிருந்து தினசரியும் காலை 7 மணிக்கு புறப்பட்டு தென்காசி, கடையநல்லூர், பாம்பு கோவில் சந்தை, சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, திருத்தங்கள், விருதுநகர், கள்ளிக்குடி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, கொடைக்கானல் […]

Categories

Tech |