சேலம் சிறையில் பெண் வார்டன்கள் மோதல் நடைபெற்றதா? என அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். சேலம் மாவட்டத்திலுள்ள அஸ்தம்பட்டி அருகே ஏற்காடு செல்லும் ரோட்டில் பெண்கள் கிளை சிறைச்சாலை இருக்கின்றது. இங்கே 45-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளார்கள். இந்த சிறைச்சாலையில் பெண் வார்டன்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகின்ற நிலையில் சென்ற பத்து நாட்களுக்கு முன்பாக உதவிப் பெண் வார்டன் ஒருவர் பணிக்கு தாமதமாக வந்ததாக சொல்லப்படுகின்றது. அப்போது பணியில் இருந்த மற்றொரு உதவி வார்டன் தாமதம் […]
Tag: மாவட்ட செய்திகள்
சொத்து தொடர்பான தகராறு விவசாயியை குத்தி கொலை செய்த உறவினரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டத்தில் நாயுடுபாளையம் பகுதியில் செந்தில் முருகன் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கும் இவருடைய உறவினரான வெங்கடேஷ் என்பவருக்கும் இடையே சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி செந்தில் முருகன் மருந்து வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அதன் பின் அவர் மருந்து வாங்கி விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தபோது […]
மொய்ப்பண தகராறில் உறவினரை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரியபேட்டையை சேர்ந்த நாராயணன் என்பவரின் மகள் திருமணம் உசிலம்பட்டியில் நடைபெற்றது. இதன்பின் வரவேற்பு சென்ற ஜூன் 29ஆம் தேதி 2015 ஆம் வருடம் விருதுநகரில் நடந்தது. திருமண வரவேற்பின் போது மொய்ப்பணம் வசூலை நாராயணன் அவரது மனைவி முத்துலட்சுமியிடம் தன்னிடம் தருமாறு கேட்டு இருக்கின்றார். அப்போது நாராயணனின் உறவினர் கருப்பசாமி முத்துலட்சுமியிடம் மொய் பணத்தை கொடுக்க […]
தீபாவளி பண்டகையை மரக்கன்றுகள் நட்டு கொண்டாடிய இளைஞர்களை பலரும் பாராட்டு வருகின்றனர். தேனி மாவட்டத்தில் உத்தமபாளையம் பகுதியில் நன்செய் பசுமை இயக்கத்தை சேர்ந்த தன்னார்வ இளைஞர்கள் சார்பில் மரக்கன்றுகள் நட்டு தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இவர்களுடன் கோகிலாபுரம் இயக்கத்தை சேர்ந்த தன்னால் தன்னார்வை இளைஞர்களும் கலந்து கொண்டனர். அப்போது உத்தமபாளையம் கொம்பை ரோடு, தாமரைக் குளம் கண்மாய் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மரக்கன்றுகள் நட்டனர். அது மட்டுமல்லாமல் பனை விதைகளையும் நடவு செய்து […]
தேனி மாவட்டத்தில் மயிலாடும்பாறை ஊராட்சி மன்ற தலைவராக பார்வதி அன்பில் சுந்தரம் இருந்து வருகிறார். இந்நிலையில் தீபாவளி பண்டிகை அன்று இரவு மர்ம கும்பல் ஒன்று ஊராட்சி மன்ற அலுவலர் கதவை உடைத்து உள்ளே புகுந்து மேசை நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கி விட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனை அடுத்து நேற்று காலை வழக்கம் போல் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் பார்வதி அன்பில் சுந்தரம் சென்றுள்ளார். அப்போது அவர் அலுவலகத்தின் பூட்டு […]
சாலையில் நடந்து சென்ற மூதாட்டியிடம் நூதன முறையில் நகைகளை கொள்ளை அடித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் தல்லாக்குடி பகுதியில் ராஜாமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் ஆவார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று இவர் திருச்சி பேருந்து நிறுத்தத்தில் இருந்து தள்ளக்குடிக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தார். இதனை அடுத்து அவர் தல்லாக்குடி பஸ் நிறுத்தத்தில் இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை […]
திருச்சி மாவட்டத்தில் கிராம பட்டி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சின்னத்துரை என்பவர் வசித்து வந்தார். இவர் பல வருடங்களுக்கு முன்பு வெளிநாட்டுக்கு வேலைக்காக சென்றுள்ளார். இதனால் அவர் இங்கிலாந்து நாட்டின் குடியுரிமையையும் பெற்றுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் தீபாவளி கொண்டாடுவதற்காக சின்னதுரை இந்தியா திரும்பி உள்ளார். இந்நிலையில் இவர் நேற்று காலை ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள டாஸ்மார்க் கடைக்கு மது அருந்துவதற்காக சென்று உள்ளார். அங்கு அவரிடம் சிலர் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகராறு […]
வீட்டின் கதவை உடைத்து துப்பாக்கி தோட்டாக்களை திருடிய ரவுடி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் அண்ணாநகர் பகுதியில் ரமேஷ்பாபு என்பவர் வசித்து வருகிறார். இவர் பாதுகாப்பு துறையில் மாவட்ட நியமன அலுவலராக பணியாற்றி வருகின்றார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு தஞ்சாவூர்க்கு சென்றுள்ளார். இதனை அடுத்து அவர் வீடு திரும்பிய போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ் பாபு வீட்டின் உள்ளே சென்று […]
பட்டாசு வெடித்த போது எட்டு வீடுகள் தீயில் கருகி நாசமானது. விழுப்புரம் மாவட்டத்தில் விக்கிரவாண்டி தீபாவளி பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அந்த சமயத்தில் பட்டாசு வெடித்த போது ஏற்பட்ட தீ விபத்தில் ஹரி கிருஷ்ணன், சங்கர், கோவிந்தம்மாள், ராஜா, ரமேஷ், சுகுமார் ஆகியோரது குடிசை வீடுகளும் தீ பற்றி எரிந்துள்ளது. இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்துள்ளனர். இருப்பினும் வீடுகளில் உள்ள […]
விழுப்புரம் மாவட்டத்தில் வடவானூர் பஸ் நிறுத்தம் அருகில் சுமார் 150 வருடங்கள் பழமையான காட்டு வகை மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தில் இருந்து நேற்று முன்தினம் திடீர் என புகை வெளியேறி உள்ளது. இதனை அடுத்து சிறிது நேரத்தில் மரம் முழுவதும் தீ பற்றி எறிய தொடங்கியுள்ளது. மேலும் லேசான காற்று வீசியதால் இந்த தீ மரம் முழுக்க பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு […]
விழுப்புரம் மாவட்டத்தில் அருள்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அருள்ராஜ் தனது இருசக்கர வாகனத்தில் வி.மருதூர் பகுதியில் உள்ள தனது நண்பரை பார்த்து விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அப்பகுதியில் சிலர் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தனர். இதனால் ஏற்பட்ட தீப்பொறி அருள் ராஜின் மேல் விழுந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அருள்ராஜ் அந்த நான்கு பேரையும் திட்டி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த […]
வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் பகுதியில் ஒரு நபர் மான்கறி விற்பனை செய்ய முயற்சிப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் மாவட்ட வன அலுவலர் மற்றும் உதவி வன பாதுகாவலர் ஆகியோர் உத்தரவிட்டதன் பேரில் வனதுறை அதிகாரிகள் ஒன்றிணைந்து பரதராமி பகுதியில் இருக்கும் ஒருவரது வீட்டில் திடீர் சோதனையை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனையில் அவர் தனது வீட்டில் வைத்திருந்த குளிர்சாதன பெட்டியில் மான்கறி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நேதாஜி என்ற […]
வேலூர் மாவட்டத்தில் உள்ள கீழப்பட்டி கிராமத்தில் ராஜேந்திரன்-சுபா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் கீழடிப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர். ராஜேந்திரனுக்கு அறுவை சிகிச்சை நடந்ததால் வீட்டில் ஓய்வெடுத்து வருகின்றார். இதனை அடுத்து நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் ராஜேந்திரனின் மனைவி சுபா முன்பக்கம் உள்ள இரும்பு கேட்டை பூட்டிவிட்டு சாவியை பூட்டின் மீது தொங்கவிட்டு வந்துள்ளார். இதனை அடுத்து இருவரும் அயர்ந்து தூங்கி உள்ளனர். இந்நிலையில் அதிகாலை […]
நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 27) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 75 காசுகளிலிருந்து, அக்டோபர் 27 ஆம் தேதி முதல் 25 காசுகள் அதிகரித்து 5 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு சென்ற பயணிகள் ரயிலின் அபாய சங்கிலியை மர்ம நபர் இழுத்ததால் ரயில் நடுவழியில் நின்றது. நேற்று முன்தினம் காலை 5.50 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு ரயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரயில் பாம்பன் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் ரயிலில் பயணம் செய்த ஒருவர் பெட்டியின் அபாய சங்கிலியை இழுத்ததார். இதனால் ரயில் பாலத்திற்கு முன்பாகவே நிறுத்தப்பட்டது. இதனால் தகவல் அறிந்து அங்கு சென்று அபாய சங்கிலி […]
குடிசை வீடு மீது ராக்கெட் பட்டாசு விழுந்ததால் தீயில் சிக்கி மூதாட்டி உயிரிழந்தார். சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகர் பகுதியில் மல்லிகா என்பவர் வீட்டின் மாடியில் இருக்கும் குடிசை வீட்டில் தனியாக வசித்து வந்தார். தீபாவளியை முன்னிட்டு அப்பகுதியில் சென்ற 24ஆம் தேதி காலை முதல் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது. காலை 11 மணியளவில் திடீரென ராக்கெட் பட்டாசு ஒன்று தீப்பொறியுடன் வந்து மல்லிகாவின் குடிசை வீடு மீது விழுந்தது. இதனால் தீ சிறிது […]
சமூக வலைதளம் மூலம் பழகி இளம் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் கிண்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, மடிப்பாக்கம் ராம் நகர் 4-வது தெருவை சேர்ந்த ராகுல் சிராஜ் என்ற இளைஞர் தனக்கு இணையதளம் மூலம் அறிமுகமாகி நட்பாக பழகினார். ஒரே பகுதியில் வசிப்பதால் என்னை காதலிப்பதாக […]
சென்னைக்கு கொண்டுவரப்பட்ட அரிய வகை ஐந்து தேவாங்கு விலங்கு குட்டிகளை திருப்பி அனுப்ப இலாகா அதிகாரிகள் முடிவெடுத்துள்ளார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இலாகா அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டார்கள். அப்போது சென்னையை சேர்ந்த ஒரு பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதனால் போலீசார் அவரின் உடைமைகளை சோதனை செய்ததில் அவர் வைத்திருந்த ஒரு பை லேசாக அசைவது போல இருந்தது. இதைத் […]
விஷவாயு தாக்கி உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்திற்கு தலா 21 லட்சம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் இருக்கும் ஒரு ஓட்டலில் கழிவு நீர் தொட்டியில் சுத்திகரிப்பு பணியில் ஈடுபட்ட ரங்கநாதன், நவீன் குமார், திருமலை உள்ளிட்ட 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்தார்கள். இந்த நிலையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் அருண் ஹால்டர் நேற்று சம்பவ இடத்திற்கு நேரில் ஆய்வு மேற்கொண்டார். பின் அவர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியதாவது, […]
அமராவதி அணையில் பாதுகாப்பற்ற படகு சவாரி நடப்பதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை கட்டப்பட்டிருக்கின்றது. அணைக்கு முன்பாக பூங்கா, ராக் கார்டன் அமைந்திருக்கின்றது. இயற்கை எழில் நிறைந்த இந்த அணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றார்கள். இந்த நிலையில் சென்ற ஜூலை மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால் அணை முழு கொள்ளளவை எட்டியது. […]
சிமெண்ட் மூட்டைகள் வாங்கிகொண்டு பணம் தராமல் இருந்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள குன்னத்தூர்-ஊத்துக்குளி ரோட்டில் கட்டிட மூலப்பொருள் கடை விஸ்வநாதன் என்பவர் வைத்திருக்கின்றார். இவரின் கடைக்கு சென்ற வாரம் பெரியாயிபாளையத்தைச் சேர்ந்த பாபு, வாசு உள்ளிட்ட இருவர் சென்று 30 மூட்டை சிமெண்ட் வாங்கியுள்ளார்கள். இதற்கு பணம் தரவில்லை என சொல்லப்படுகின்றது. இது குறித்து விஸ்வநாதன் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாபுவை […]
தூத்துக்குடியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தின் மூலமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (28ஆம் தேதி) காலை 10.30 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகின்றது. இந்த முகாமில் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, டிப்ளமோ, ஐடிஐ, கம்ப்யூட்டர் பயிற்சி, பட்டப்படிப்பு […]
பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் புகுந்து பட்டாசு வெடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கயத்தாறு அருகே வடக்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் சென்ற 24ஆம் தேதி நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே சென்றார்கள். அங்கு அவர்கள் கண்ணாடி டேபிள் மேல் வைத்து பட்டாசு வெடித்துவிட்டு தப்பி சென்று விட்டார்கள். இதனால் அலுவலகத்தில் இருந்த பொருட்கள் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக தீ விபத்து எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் காவல் […]
ஈரோடு மாவட்டத்திலுள்ள கே.புதூர் தொகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் சுற்றி திரிந்தார். இந்நிலையில் ஆடை இல்லாமல் சுற்றி திரிந்த அந்த வாலிபரை பார்த்த கவுந்தப்பாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் பொதுமக்களின் உதவியுடன் அவரை குளிப்பாட்டி ஆடை அணிவித்துள்ளார். இது குறித்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கோட்டை உளிமங்கலம் கிராமத்தில் ஸ்ரீ ராமப்பா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகுமார்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் நர்சரி பண்ணையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சிவக்குமார் சரியாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். தீபாவளிக்கு புத்தாடை வாங்கி தர வேண்டும் என சிவகுமார் தனது தந்தையிடம் கேட்டுள்ளார். அப்போது கடன் வாங்கி தான் தீபாவளி […]
மதுரை மாவட்டத்திலுள்ள அனுப்பானடி காமராஜர் பொது தெருவில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் காமேஸ்வரன்(22) என்பவர் தீபாவளி அன்று தனது நண்பர்களுடன் இணைந்து பட்டாசு வெடித்துள்ளார். அப்போது முத்துகிருஷ்ணனின் வீட்டின் மீது பட்டாசு விழுந்தது. இதனை முத்துகிருஷ்ணன் தட்டி கேட்டபோது வாலிபர் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியுள்ளார். இதுகுறித்து முத்துகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போலீசார் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். […]
பத்தாம் வகுப்பு மாணவியை கொலை செய்து ஏரியில் வீசிய வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வருகின்ற நிலையில் சென்ற சில மாதங்களாக இவர் பள்ளிக்கு சரிவர செல்லவில்லை. சென்ற சில நாட்களுக்கு முன்பு மாணவியை வீட்டிலிருந்து காணவில்லை. இது குறித்து பெற்றோர்கள் போலீசாருக்கு தகவல் மட்டும் கொடுத்த நிலையில் எழுத்து பூர்வ புகார் எதுவும் கொடுக்கவில்லை. இந்த நிலையில் […]
விலங்கை வேட்டையாடிய வாலிபருக்கு வனத்துறையினர் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி வனச்சரகர் பழனி குமாரின் தலைமையிலான வனத்துறையினர் வனப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஓடைக்காடு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை வனத்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் அழகாபுரியில் வசிக்கும் வீரன்வல்லரசு(21) என்பது தெரியவந்தது. இவர் காட்டுப்பன்றியை வேட்டையாடியுள்ளார். பின்னர் அதன் 8 கிலோ இறைச்சியை விற்பனைக்காக வைத்திருந்த போது வனத்துறையினரிடம் […]
அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்த 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். தீபாவளி பண்டிகை கடந்த 24-ஆம் தேதி உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் படி போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வெடச்சந்தூர் குஜிலியம்பாறை, ஆகிய பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வடித்த நான்கு பேரை போலீசார் […]
ஆற்றில் மூழ்கி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வி. ஆண்டி குப்பம் பகுதியில் பன்னீர்செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்வா(18) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஐடிஐ படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் விஷ்வா தனது நண்பர்களான ரிஷிதரன்(18), பாலமுருகன்(19), நரேந்திரன்(18), பாலாஜி, அபிஷேக் ஆகியோருடன் தென்பெண்ணை ஆற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் ஆழமான பகுதிக்கு சென்றதால் விஷ்வாவும், பாலாஜியும் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கினர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த நண்பர்கள் […]
தண்ணீரில் மூழ்கி சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள திருமலைகவுண்டன்கொட்டாய் பகுதியில் மாதையன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூவரசன்(13) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று பூவரசன் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். பின்னர் சிறுவர்கள் மாது என்பவரது விவசாய கிணற்றுக்கு சென்று குளித்து கொண்டிருந்தனர். அப்போது நீச்சல் பழகிய பூவரசன் தண்ணீரில் மூழ்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவர்கள் ஊருக்கு சென்று […]
வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதால் 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள களியூர் பகுதியில் விவசாயியான சின்னதுரை என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் சின்னதுரை தனது குடும்பத்தினருடன் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அதிகாலை நேரத்தில் வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்ததை பார்த்த சின்னதுரை உடனடியாக தனது குடும்பத்தினருடன் வெளியே வந்து விட்டார். பின்னர் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் வீட்டில் எரிந்த தண்ணீர் ஊற்றி அணைக்கப்பட்டது. இந்த […]
போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 697 பேர் மீது தீபாவளி பண்டிகை தினத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் கோலாகலமாக கொண்டாடினர். இந்நிலையில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் படி 1500- க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 38 பேர், அதிவேகமாக வாகனம் ஒட்டிய 11 பேர், ஹெல்மெட் அணியாமல் சென்ற 553 பேர், காரில் […]
நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 26) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, அக்டோபர் 24 ஆம் தேதி முதல் 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 75 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மாநில கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற கோவில்பட்டி மாணவர்களை பாராட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு பரிசு வழங்கினார். கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாச்சலத்தில் நடைபெற்ற மாநில கராத்தே மற்றும் சிலம்பம் போட்டிகளில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அஸ்வா தற்காப்பு பயிற்சி பள்ளி மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற்றார்கள். கராத்தே போட்டியில் அருண், ரோகித் உள்ளிட்டோர் முதலிடமும் சிலம்பம் போட்டியில் விக்னேஷ், பாலதர்ஷன், அம்பரீஷ் உள்ளிட்டோர் முதலிடமும் கவீன் ராஜ், ஆனந்தலட்சுமி உள்ளிட்டோர் இரண்டாம் இடமும் பெற்றார்கள். […]
தூத்துக்குடியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நலிவடைந்த 25 குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி விஸ்வகர்மா மகாஜன சங்கம் சார்பாக தீபாவளி பண்டிகையொட்டி நலிவடைந்த 25 குடும்பங்களுக்கு அரிசி பருப்பு, மாளிகை பொருட்கள் உள்ளிட்டவை அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு விஷ்வகர்மா மகாஜன சங்கத் தலைவர் பாலமுருகேசன் தலைமை தாங்க பள்ளி மேலாளர் பாலசுப்ரமணியன், சங்க பொருளாளர் முன்னிலை வகித்தார்கள். பின் 25 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, […]
தீபாவளி சீட்டு நடத்தி 10 கோடி மோசடி செய்த வழக்கில் நிறுவன மேலாளர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தாமரைப்பாக்கம் கூட்டு சாலையில் ஜோதி என்பவர் தீபாவளி நகை பண்டு திட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவரிடம் சீட்டு சேர்த்தியுள்ளார். ஜோதிக்கு உடந்தையாக அவரின் மனைவி சரண்யா, சகோதரர் பிரபு, தந்தை மதுரை மற்றும் கடை மேலாளர்களாக நாகலட்சுமி, சரண்ராஜ், வேணுகோபால், சத்தியமூர்த்தி, அவரின் மனைவி உள்ளிட்டோர் இருந்து வந்துள்ளார்கள். இந்த நிலையில் அனைவரும் […]
பணகுடி அருகே ஓடை வெள்ளத்தில் சிக்கிய 8 பேர் மீட்கப்பட்ட நிலையில் 2 பேரை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பணகுடி அருகே குத்தரப்பாஞ்சான் அருவி இருக்கின்றது. இங்கு சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வந்தது. இந்த நிலையில் அருவியில் கூடங்குளம், கூத்தன்குடி, பணகுடி, கன்னியாகுமாரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குளித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது கனமழை காரணமாக ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் […]
மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியை ஆட்சியர் வழங்கினார். திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 19 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகளை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் திருவாரூர் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் வழங்கினார்கள். பின் ஆட்சியர் பேசியதாவது, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக தேசிய அடையாள அட்டைகள், உதவித்தொகை என பல நலத்திட்ட உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சிறு, குறு, நடுத்தரமான மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் செய்து பொருளாதாரத்தை உயர்த்திக் […]
மதவெறுப்பு பிரச்சாரத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என முஸ்லிம் லீக் தலைவர் கூறியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, உலக நாடுகளில் ராணுவத்திற்காக அதிக செலவும் செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாவது நாடாக திகழ்கின்றது. ராணுவ தளவாட உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் சிறப்பிடம் பிடித்திருக்கின்றது. மதவெறுப்பு பிரச்சாரம் மேற்கொள்வதை தடுத்து நிறுத்த வேண்டியது மத்திய அரசு மற்றும் பிரதமரின் கடமையாகும். மதவெறுப்பு பிரச்சாரத்தை மேற்கொண்டு […]
சேலம் மாவட்டம் கலெக்டர் கார்மேகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சேலம் மாவட்டத்தில் 280 மெட்ரிக் டன் பச்சைப்பயறு, 250 மெட்ரிக் டன் உளுந்து கொள்முதல் செய்யப்பட இருக்கிறது. இதில் பச்சைப்பயறு கிலோ ஒன்றுக்கு 77.55 ரூபாய், உளுந்து விலை 66 ரூபாய் வீதம் வருகிற டிச., 29 வரை கொள்முதல் செய்யப்படும். அதற்குரிய கிரையத் தொகையானது விவசாயி வங்கிக்கணக்கில் நேரடியாகவே செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார், வங்கிக்கணக்கு […]
கோபி பச்சைமலை சுப்ரமணியசாமி கோவிலில் வருகின்ற 30ஆம் தேதி சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி பச்சைமலை சுப்பிரமணிய கோவிலில் இன்று கந்த சஷ்டி விழா ஆரம்பமானது. இதை அடுத்து இன்று காலை 07.30 மணிக்கு சத்துரு சம்கார திரிசதை அர்ச்சனையும் காலை 10.00 மணிக்கு சஷ்டி விரதம், காப்பு கட்டுதலும், யாகசாலை பூஜை தொடங்குதல் நிகழ்ச்சியும் மதியம் 12 மணிக்கு ஷண்முகர் அர்ச்சனையும் நடைபெற்றது. வருகின்ற 26 ஆம் தேதி முதல் 29ஆம் […]
மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள சணப்பிரட்டி பகுதியில் சத்யராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டுனர் ஆவார். இந்நிலையில் சத்யராஜ் மோட்டார் சைக்கிளில் பணிக்கம்பட்டி- மயிலாடும்பாறை சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறியதால் சத்யராஜ் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சத்யராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் […]
போட்டி போட்டுக் கொண்டு இரண்டு தனியார் பேருந்துகள் சென்ற நிலையில் விபத்து ஏற்பட்டதில் ஆறு பேர் படுகாயமடைந்தார்கள். கரூரிலிருந்து திண்டுக்கல் நோக்கி தனியார் பேருந்து சென்ற 22-ம் தேதி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை செக்கண்ணன் என்பவர் ஓட்டினார். இந்த பேருந்துக்கு பின்னால் கரூரில் இருந்து திண்டுக்கலுக்கு மற்றொரு தனியார் பேருந்து சென்றது. இந்த பேருந்தை சண்முகம் என்பவர் ஓட்டினார். இரண்டு பேருந்தும் போட்டி போட்டுக் கொண்டு சென்றபோது முன்னாள் சென்ற பேருந்து டிரைவர் திடீரென பிரேக் […]
வேடந்தூர் அருகே பட்டாசு வெடித்து விவசாயின் கட்டைவிரல் துண்டானது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் அருகே இருக்கும் ரோசாப்பாளையத்தை சேர்ந்த விவசாயி சௌந்தரராஜன் நேற்று மதியம் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தபோது அவர் கையில் பிடித்து பட்டாசை பற்ற வைத்துள்ளார். அப்போது திடீரென வெடித்து சிதறியது. இதனால் அவரின் இடது கையின் கட்டை விரல் துண்டானது. இதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தார்கள். தற்போது மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் […]
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருக்கும் இனிப்பு தயாரிக்கும் கூடங்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்கள். நேற்று தீபாவளி பண்டிகை கோலகலமாக கொண்டாடப்பட்டது. இதனால் இனிப்பு மற்றும் கார வகைகள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையங்களில் இனிப்பு பலகாரங்கள் முறையாக தயாரிக்கப்படுகின்றதா என ஆட்சியரின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்கள். அதன்படி இனிப்பு மற்றும் கார வகைகள் தரமான எண்ணெயில் செய்யப்படுகின்றதா? வண்ணம் அனுமதிக்கப்பட்ட அளவில் பயன்படுத்தப்படுகின்றதா? என சோதனை மேற்கொண்டார்கள். […]
கடலூர் துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அந்தமான் அருகே இருக்கும் வங்க கடலில் சென்ற சில நாட்களாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை இருந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இதனால் கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்ட நிலையில் தற்போது குறைந்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியிருக்கின்றது. இதற்கு சிட்ரங்கு என பெயரிடப்பட்டிருக்கின்றது. இந்த புயல் ஆனது மேலும் வலுவடைந்து வடக்கு […]
திருவள்ளூர் பெரியபாளையம் அடுத்த நெல்வாய் கிராமத்தில் திலகா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு உஷா (16) என்ற மகள் இருந்தார். இவர் பெரியபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு பயின்று வந்தார். சென்ற சில மாதங்களாக முறையாக உஷா பள்ளிக்கு போகவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் சென்ற 12-ஆம் தேதி வீட்டிலிருந்து உஷா மாயமானதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. எனினும் புகார் எதுவும் பதிவுசெய்யப்படவில்லை. இந்த நிலையில் நேற்று […]
செங்கல்பட்டு கல்பாக்கம் அருகில் கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் அடுத்த வடபட்டினம் எனும் இடத்தில் புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி சென்ற கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென்று வலதுபக்க சாலையோரத்திலுள்ள மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரில் பயணம்மேற்கொண்ட சரண் ராஜ்(24), மோகன் ராஜ்(23) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதே காரில் பயணம் மேற்கொண்ட பிரவீன், நந்தா, வேலு போன்றோர் படுகாயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். காரில் […]
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகராட்சி தூய்மை நகரமாக மாற்றுவதற்கான பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக மக்கும் குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்தெடுக்கப்படுகிறது. இவ்வாறு பிரித்தெடுக்கப்படும் மக்கும் குப்பையை வைத்து பல்வேறு விதமான பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் தற்போது விகே புரம் நகராட்சி தூய்மை பணியாளர்கள் புது முயற்சியாக 4 அடி உயரத்தில் குப்பைகளை வைத்து யானை ஒன்றை உருவாக்கி நகராட்சி அருகில் வைத்துள்ளனர். இது பார்வையாளர்கள் […]