தீபாவளி பண்டிகையையொட்டி பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடிப்பது பற்றி சென்னை மாநகர காவல் துறை சார்பாக அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இன்று உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இந்த நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் பாதுகாப்பான முறையில் பட்டாசுகள் வெடிப்பதற்கு விதிமுறைகள், கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அறிவுரைகளை வழங்கியுள்ளார். அதில் பின்வருமாறு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ப இரசாயன பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டும் விற்கவும், வெடிக்கவும் வேண்டும். கோர்ட் அனுமதித்த நேரமான காலை […]
Tag: மாவட்ட செய்திகள்
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட பேட்டை பகுதியில் ஷேக் மைதீன் என்பவர் வசித்து வந்தார். இவரும், இவருடைய நண்பர் முகமது ரியாஸ் என்பவரும் சேர்ந்து நேற்றிரவு பழையபேட்டை இணைப்பு சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தில் நிலைதடுமாறி அவர்கள் கீழே விழுந்தனர். இதில் ஷேக் மைதீன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து காயமடைந்த முகமது ரியாசை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
திருப்பத்தூர் ஜோலார்பேட்டையிலுள்ள ராமரெட்டியூரை சேர்ந்த பிரபாகரன்(31) ரயில்வே பாயின்ட்ஸ் மேன் ஆவார். இவருக்கு பவிதாரணி என்ற மனைவியும், 2 மகள், ஒரு மகன் இருக்கின்றனர். சென்ற 20ஆம் தேதி ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இரவு 7.15 மணியளவில் பணியில் இருந்தபோது பிரபாகரன் திடீரென்று மயங்கி விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை ரயில்வே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அங்கு […]
ஆரணி பேருந்து நிலையம் அடிப்படை வசதிகளின்கூடிய புதிய பேருந்து நிலையமாக மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணியில் பழைய மற்றும் புதிய பேருந்து நிலையங்களின் மூலம் நகராட்சிக்கு அதிக வருவாய் கிடைத்தும் பயணிகளுக்கு எவ்வித அடிப்படை வசதிகளும் செய்யாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றார்கள். பயணிகள் அமர்வதற்கு போதிய இட வசதி இல்லை. குடிநீர் குழாய்கள் அமைத்தும் தண்ணீர் வருவதில்லை. மேலும் இலவச கழிப்பறை வசதி கூட இல்லை. […]
ஒன்பது வருடங்களாக மாற்றம் செய்யப்படாமல் இருந்த திருத்தணி முருகன் கோவில் சேவை கட்டணம் தற்போது இருமடங்கு உயர்த்தப்பட்டிருக்கின்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் புகழ்பெற்ற திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் இருக்கின்றது. இது முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருத்தலமாகும். இக்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றார்கள். இக்கோவிலில் மூலவருக்கு பஞ்சாமிர்தம், சந்தன காப்பு, தங்க, வெள்ளி கிரீடம் அணிவித்தல், உச்சவர் திருக்கல்யாணம், வெள்ளி மயில் வாகனம், தங்கத் தேர் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்காக பக்தர்கள் […]
மொபட் மீது கார் மோதியதில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பொங்கலூர் அருகே இருக்கும் கோவில்பாளையம் புதூரை சேர்ந்த சின்னராமசாமி மற்றும் மனோகரன் என்பவர்கள் தாராபுரம் திருப்பூர் சாலையில் மொபட்டில் வந்து கொண்டிருந்த போது அங்கிருக்கும் தனியார் கல்லூரி அருகே வந்ததும் சாலையை கடக்க முயன்றார்கள். அப்போது திருப்பூரில் இருந்து தாராபுரம் நோக்கி சென்ற கார் எதிர்பாராவிதமாக மொபட் மீது பயங்கரமாக மோதி விட்டு அங்கிருந்து நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் […]
தூத்துக்குடி துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது தொடர்ந்து வட திசையில் நகர்ந்து மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் நாளை புயலாக வலுப்பெரும் என்பதால் வரும் 25ஆம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையில் கரையை கடக்கும் என […]
ஸ்டெர்லைட்-க்கு எதிராக பொதுமக்களை தவறாக வழி நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆதரவு அமைப்பினர் வலியுறுத்தியுள்ளார்கள். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆதரவு கூட்டமைப்பினரான தனலட்சுமி, வக்கீல்கள் முருகன், ஜெயம் பெருமாள் மற்றும் நான்சி, தியாகராஜன், துணைச்செயலாளர் கல்லை ஜிந்தா உள்ளிட்டோர் நேற்று முன்தினம் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டி அளித்தார்கள். அப்போது அவர்கள் கூறியுள்ளதாவது, சென்ற சில நாட்களுக்கு முன்பு இதுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் மூன்றாயிரம் பக்கம் கொண்ட அறிக்கையை தமிழக […]
தூத்துக்குடியில் உள்ள பள்ளியில் மாணவிகளுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாரதியார் வித்தியாலயம் பள்ளியில் தீபாவளி பண்டிகையொட்டி பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவிகளுக்கும் புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மாவட்ட சமூக நல ஒருங்கிணைந்த சகி மைய நிர்வாகி செலின் சார்ஜ் தலைமை தாங்கினார். பின் மாணவிகளுக்கு புத்தாடைகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது, பெண்களுக்கு அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் நலத்திட்டங்கள் பற்றியும் பெண் கல்வியில் முக்கியத்துவம் குறித்தும் பெண்கள் […]
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கனகம்மாசத்திரம் ஊராட்சி வி.ஜி.கே.புரத்தில் வேணுகோபால் (55). இவர் கர்நாடக மாநிலம் மங்களூரில் இருக்கும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு விமலா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கின்றனர். இந்நிலையில் வேணுகோபால் சென்னை பள்ளிக்கரணையில் தனக்கு சொந்தமாக உள்ள வீட்டை பிரசாந்த், வைஷ்ணவி என்ற தம்பதியினருக்கு வாடகைக்கு விட்டுள்ளார். கடந்த சில நாட்களாக வைஷ்ணவி வீட்டு வாடகை தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வேணுகோபால் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை பகுதியில் மனோன்மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரயில்வே ஊழியரான பிரபாகரன்(30) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு பவதாரணி என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் இருக்கின்றனர். கடந்த 20-ஆம் தேதி வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததால் பிரபாகரனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரை ஓசூர் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபாகரன் மூளைச்சாவு அடைந்தார். இந்நிலையில் பிரபாகரனின் குடும்பத்தினரிடம் அனுமதி பெற்று அவரது […]
மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதிய விபத்தில் போலீஸ்காரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள ஆனையூர் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கரிமேடு காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஏட்டாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ராமகிருஷ்ணன் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சாலையின் குறுக்கே நாய் வந்தது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக ராமகிருஷ்ணன் சடன் பிரேக் பிடித்ததால் பின்னால் வந்த ஆட்டோ […]
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாஞ்சார் கிராமத்தில் உதயகுமார் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தில் இருந்த சீமை கருவேல மரங்களை முனீஸ்பாண்டி என்பவர் அகற்றிய போது பழங்கால மண் கலயம் ஒன்று கிடைத்தது. அதனை உடைத்து பார்த்தபோது பழமையான பூஜை பொருட்கள் மற்றும் சாமி சிலைகளை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த முனீஸ்பாண்டி உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் காரியாபட்டி தாசில்தார் தவழ்ந்த நிலையில் இருந்த கண்ணன், […]
திருத்தணியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் 300 போலீசார் ஈடுபட்டுள்ளார்கள். இந்தியா முழுவதும் வருகின்ற 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப் பட இருக்கின்றது. இதனால் திருத்தணியில் மக்கள் கடைகளுக்குச் சென்று இனிப்புகள், பட்டாசுகள், புதிய ஆடைகள் உள்ளிட்டவற்றை வாங்க குவிந்து வருகின்றார்கள். பண்டிகை காலம் என்பதால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்க கூடாது என்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள். இதனால் மக்கள் அதிகமாக கூடும் 14 இடங்களில் தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊருக்கு படையெடுத்ததால் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பொதுமக்கள் புதிய ஆடைகள் வாங்குதல், பலகாரம் வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் மக்கள் அவரவர்களின் சொந்த ஊருக்கு படை எடுக்க ஆரம்பித்துள்ளார்கள். இதற்காக டெல்டா மாவட்டங்கள், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வதற்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றது. இதனால் மக்கள் புதிய பேருந்து நிலையத்தில் […]
கும்பகோணத்தில் புத்தாடைகள் வாங்குவதற்காக மக்கள் குவிந்தனர். நாடு முழுவதும் நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பொதுமக்கள் புதிய ஆடைகள் வாங்குதல், பலகாரம் வாங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் அருகே இருக்கும் பல்வேறு கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கும்பகோணத்திற்கு வந்தார்கள். இதனால் கும்பகோணம் நகர் பகுதிகள் மக்கள் கூட்டத்தால் சூழ்ந்தது. மேலும் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இடைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று போக்குவரத்தை […]
அறுவடை செய்த நெல் மழையில் நனைந்ததால் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளார்கள். தஞ்சாவூர் மாவட்டத்தில் நடப்பு வருட சாகுபடி செய்யப்பட்ட குருவை நெற்பயிர்களில் இதுவரை 85 சதவீதம் அறுவடை பணி நிறைவடைந்து இருக்கின்றது. அறுவடை செய்த நெல்லை விவசாயிகளிடம் இருந்து வாங்குவதற்காக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றது. அறுவடை செய்ததில் விற்பனை செய்வதற்காக விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குவித்து வருகின்றார்கள். இந்த நிலையில் சென்ற சில நாட்களுக்கு […]
நாமக்கல் அருகே மகளை அழைத்து செல்ல வந்த போது நாய் குறுக்கே வந்ததால் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அரசு பள்ளி ஆசிரியை பரிதாபமாக உயிரிழந்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வாலாஜாபாத் ரங்கப்பிள்ளை தெருவை சேர்ந்த நடராஜன் என்பவர் அரசு தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக இருக்கின்றார். இவரின் மனைவி ராதா. இவர் நத்தநல்லூர் அரசு பள்ளியில் ஆசிரியராக இருந்தார். இவர்களின் மூத்த மகள் கீர்த்தனா. இவர் நாமக்கல்லில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் +1 படித்து வந்த நிலையில் தீபாவளி […]
நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 23) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 45 காசுகளிலிருந்து, அக்டோபர் 22 ஆம் தேதி முதல் 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக தரைப்பாலம் நீரில் மூழ்கியது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நத்தக்காடையூர் அருகே இருக்கும் பழைய கோட்டை ஊராட்சிக்குட்பட்ட புதுவெங்கரையாம்பாளையம் கிராமத்தில் இருக்கும் தாழ்வான தரைப்ப்பாலத்தை கடந்து நொய்யல் ஆறு செல்கின்றது. இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சென்ற சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக சென்ற 2 நாட்களாக நொய்யல் ஆற்றில் அதிக மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்துள்ளது. புது வெங்கரையாம்பாளையம் கிராமத்தில் நேற்று […]
ஒட்டப்பிடாரம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக பள்ளிக்குள் வெள்ளம் புகுந்தது. தமிழகம் முழுவதும் சென்ற சில நாட்களாகவே கனமழை பெய்து வருகின்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சென்ற 20 – ம் தேதி இரவில் கனமழை பெய்ததை தொடர்ந்து நேற்று முன்தினமும் மதியம் 12 மணியளவில் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஒட்டப்பிடாரம் அருகே இருக்கும் நாகம்பட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மழைநீர் தேங்கியது. தொடர்ந்து இரண்டு […]
சாத்தான்குளம் பகுதியில் இருக்கும் கடைகளில் தொழிலாளர் துறையினர் ஆய்வு மேற்கொண்டார்கள். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் பகுதியில் இருக்கும் கடை மற்றும் நிறுவனங்களில் தீபாவளி பண்டிகையொட்டி குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திருப்பதாக புகார் வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் தொழிலாளர் துறை துணை ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான அதிகாரிகள் சாத்தான்குளம் பகுதியில் இருக்கும் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்கள். அப்போது ஜவுளி, பேக்கரி, மளிகை கடைகள், நிறுவனங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் சட்ட விரோதமாக குழந்தைகளை வேலைக்கு அமர்த்திய […]
அரசு பேருந்துகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாநகரப் பேருந்தில் தினமும் 1000க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றார்கள். இந்த பேருந்துகளில் செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நகை பறிப்பு, திருட்டு போன்ற குற்ற செயல்களை தடுப்பதற்காகவும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும். தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள மாநகர பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது அங்கு திருடர்களின் கைவரிசை குறைந்துள்ளது. […]
காட்டெருமை தாக்கியதால் முதியவர் படுகாயமடைந்தார். நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வனவிலங்குகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிக்குள் உள்ள வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். நேற்று முன்தினம் கிளன்டேல் எஸ்டேட் பகுதியில் வசிக்கும் ராஜசேகர்(64) என்பவர் வீட்டில் இருந்து அதிகாலை நேரத்தில் வெளியே நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென வந்த காட்டெருமை ராஜசேகரை துரத்தி சென்று முட்டி தாக்கியது. இதனால் ராஜசேகர் அலறி சத்தம் போட்டுள்ளார். […]
மின்மாற்றியில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள காந்திநகர் பகுதி தீயணைப்பு துறையினரின் குடியிருப்பு வளாகம் அருகே ஒரு மின்மாற்றி அமைந்துள்ளது. இந்த மின்மாற்றில் இருந்த பெட்டி நேற்று மதியம் திடீரென வெடித்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்ததால் அனைத்து இடங்களுக்கும் மின்சாரம் தடைப்பட்டது. இது குறித்து அறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்மாற்றியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. […]
பாலிடெக்னிக் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் சோழன் நகரில் சுந்தர்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூஜா(16) என்ற மகள் இருந்துள்ளார். இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட பூஜா மன உளைச்சலில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பூஜாவின் உடலை மீட்டு […]
பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டத்தில் உள்ள கம்பநல்லூர் பகுதியில் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளி வாகன ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு மாரி என்ற மனைவி இருந்துள்ளார். என் நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் இருந்த மாரி தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து […]
கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் இருந்து ஊட்டி நோக்கி நேற்று முன்தினம் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த கார் நடுவட்டம் அரசு தேயிலை தோட்டம் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த அரசு தையலை தோட்ட கழகத்திற்கு சொந்தமான இரும்பு வரவேற்பு மைய கூடாரம் மீது பயங்கரமாக மோதி சுமார் 150 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் பெண் உள்பட இரண்டு […]
சட்ட கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள பாதிரிக்குப்பம் பகுதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்தியா(21) என்ற மகள் இருந்துள்ளார். விழுப்புரத்தில் இருக்கும் அரசு சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தியா தனது தாய் உமாரான இடம் படிப்பு செலவிற்கு பணம் கேட்டபோது தன்னிடம் இப்போது பணம் இல்லாததால் வேறு யாரிடமாவது விரைவில் வாங்கி தருகிறேன் என […]
மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லப்பட்டி பகுதியில் கட்டிட தொழிலாளியான பாலாஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாறைப்பட்டி பகுதியில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் கட்டிடத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரை இயக்க முயன்ற போது பாலாஜி மீது மின்சாரம் பாய்ந்தது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த பாலாஜியை அக்கம் பக்கத்தினர் மீட்டு குஜிலியம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். […]
ரேஷன் கடையில் போதுமான ஊழியர்கள் இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆனந்தகிரி பகுதியில் நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு உட்பட்ட ரேஷன் கடைகள் அமைந்துள்ளது. இந்நிலையில் அனந்தகிரி இரண்டாவது தெரு ரேஷன் கடையில் எடையாளர் மட்டுமே இருப்பதால் ஒருவரை பில் போட்டு முடித்து, அவரே பொருட்களை எடை அளந்து பொது மக்களுக்கு வழங்குவதால் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கூலி வேலைக்கு செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில் வேலைக்கு செல்ல […]
மின்னல் தாக்கி மூன்று மாடுகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இலுப்பட்டி பகுதியில் விவசாயியான அண்ணாதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் சினையான 2 பசு மாடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று தனக்கு சொந்தமான வீட்டிற்கு முன்புறம் இருக்கும் தென்னை மரத்தில் 2 பசு மாடுகளையும் அண்ணாதுரை கட்டி வைத்துள்ளார். இந்நிலையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் மின்னல் தாக்கி 2 மாடுகளும் சம்பவ இடத்திலேயே இறந்ததை பார்த்து […]
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வேடசந்தூர் சந்தைப்பேட்டை பகுதியில் நவீன் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் கடையில் லோடுமேனாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு விஜயசாந்தி என்ற மனைவியும், தியா என்ற மகளும், பிரகாஷ் என்ற மகனும் இருக்கின்றனர். இரவு நேரத்தில் நண்பருடன் வெளியே சென்ற நவீன்குமார் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இந்நிலையில் கோடாங்கி பட்டி குளத்துக்கரையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் நவீன்குமார் சடலமாக கடந்ததை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு […]
முதுமலை எல்லையோர கிராமங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து பசுமை தீபாவளி கொண்டாடுங்கள் என வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றார்கள். நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் காட்டு யானைகள் உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றது. இதன் கரையோரம் மசினகுடி ஊராட்சி இருக்கின்றது. இங்கு வாழும் பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசுகள் வெடிப்பதால் வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் என வனத்துறை வருடம் தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றார்கள். அந்த வகையில் நாளை மறுநாள் […]
குமரியில் வேலை கிடைக்காததால் எம்.பி.ஏ பட்டதாரி கொள்ளையனாக மாறிய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடியப்பட்டணத்தில் சென்ற மே மாதம் 9-ம் தேதி பேருந்தில் இரவு கண்டக்டர் ஆக்கிலன் பணப்பையை தலையில் வைத்துக்கொண்டு தூங்கியுள்ளார். அப்போது நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் அவர் பணப்பையில் இருந்து 8,000 எடுத்துக்கொண்டு தப்பித்து விட்டார். இது குறித்து ஆக்கிலன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி […]
மத்திய அரசு மகளிர் சக்தி விருதிற்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் செய்திகுறிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது மத்திய அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலமாக மகளிர் சக்தி விருது அறிவிக்கப்பட்டு தகுதி வாய்ந்த தனிப்பட்ட சிறந்த பெண்கள், குழுக்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது. விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் மத்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைப்பு இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றது. தகுதி வாய்ந்த தனி […]
ஈரோடு ரயில் நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை போலீசார் தீவிர சோதனை செய்து வருகின்றார்கள். தமிழகத்தில் தீபாவளி பண்டிகை வருகின்ற 24ஆம் தேதி கொண்டாடப்பட இருப்பதால் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தங்கள் சொந்த ஊரை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளார்கள். இதனால் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதுகின்றது. தொலைதூர பயணத்திற்கு பயணிகள் அதிக அளவில் ரயில் பயணத்தை தேர்ந்தெடுக்கின்றார்கள். இதனிடையே எளிதில் தீபற்ற கூடிய பட்டாசுகளை ரயிலில் எடுத்து செல்லக்கூடாது என போலீசார் அறிவுறுத்தியுள்ளார்கள். […]
போலியான பத்திரம் மூலம் இறந்தவரின் நிலத்தை விற்க முயன்ற 5 பேரை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் பகுதியில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவரது உறவினரான கணபதி என்பவர் 30 வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டார். இந்நிலையில் கணபதிக்கு சொந்தமான 36 சென்ட் நிலத்தை விற்பனை செய்வதற்காக முருகன் போலியான பத்திரம் தயாரித்துள்ளார். இந்நிலையில் மீனாட்சிபுரத்தில் வசிக்கும் செல்லம் என்பவருக்கு பத்திரப்பதிவு செய்வதற்காக பண்பொழி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு சாட்சி கையெழுத்து போடுவதற்காக […]
கணவர் மனைவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பரமார்த்த லிங்கபுரம் பகுதியில் ஆண்டனி(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் புதிய வீடுகளுக்கு உள் அலங்காரம் செய்யும் வேலை பார்த்து வருகிறார். இவர் பத்மா(30) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் பத்மா யாரிடமும் நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த ஆண்டனி தனது மனைவியை கண்டுள்ளார். மனைவியின் […]
மனைவியை கொலை செய்ய முயன்ற கணவருக்கு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வன்னியூர் தெற்றிக்குழி பகுதியில் கிறிஸ்டோபர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினிதா என்ற மனைவி உள்ளார். மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த கிறிஸ்டோபரை அவரது மனைவி கண்டித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கடந்த 2017-ஆம் ஆண்டு தனது மனைவி குடிப்பதற்கு பணம் இல்லை என கூறியதால் கிறிஸ்டோபர் வினிதா மீது மண்ணெண்ணையை […]
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் நகராட்சிக்குட்பட்ட புலியூர்குறிச்சி, மேட்டுக்கடை பகுதியில் இருக்கும் கடைகளில் புகையிலை மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என நகராட்சி அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பள்ளிக்கூடத்தின் அருகில் உள்ள ஒரு கடையில் புகையிலை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து உரிமையாளருக்கு அதிகாரிகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். இதேபோல் கடைக்காரர்களிடமிருந்து பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.6,000 அபராதம் வசூலிக்கப்பட்டது.
வாலிபருக்கு 12 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வெள்ளாளன்குழியில் அர்ஜூனன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் தியாகராஜன் (27). கடந்த 2016-ஆம் ஆண்டு தியாகராஜன் 19 வயது இளம்பெண்ணை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிந்து தியாகராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கினை விசாரித்த நெல்லை மகிளா நீதிமன்றம் தியாகராஜனுக்கு ரூ.60 ஆயிரம் […]
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு எரி நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள நாகநல்லூர் ஊராட்சியில் 164 ஏக்கர் பரப்பளவு உடைய ஏரி அமைந்துள்ளது. இந்நிலையில் நாகநல்லூர் ஊராட்சியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு நாகநல்லூர் ஏரி நிரம்பி வழிகிறது. சுமார் 7 வருடங்களுக்கு பிறகு ஏரி நிரம்பியதால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
பெண்ணிடமிருந்து 4 3/4 லட்ச ரூபாய் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள இ.பி ரோடு கீழகாசிபாளையம் பகுதியில் வைஷாலி என்பவர் வசித்து வருகிறார். இவர் இணையதளம் மூலம் தொழில் தொடங்க பதிவு செய்துள்ளார். இந்நிலையில் செல்போன் மூலம் மர்ம நபர் ஒருவர் வைஷாலியை தொடர்பு கொண்டு பேசி ஒரு லிங்கை அனுப்பியுள்ளார். அந்த லிங்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் வைஷாலி 4 லட்சத்து 74 ஆயிரத்து 594 ரூபாய் முதலீடு செய்துள்ளார். […]
குழந்தைகளோடு மாயமான பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவானைக்காவல் பகுதியில் ஜெயராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காமாட்சி என்ற மனைவி உள்ளார். இவர் தீபாவளி சீட்டு சேகரிப்பு செய்து தொழில் நடத்தி வந்துள்ளார். கடந்த சில தினங்களாக காமாட்சியிடம் தீபாவளி சீட்டு பணம் கட்டியவர்கள் அதன் முதிர்வு தொகையோடு பணத்தை கேட்டுள்ளனர். நேற்று முன்தினம் 9 வயது மகன், 6 வயது மகளுடன் வீட்டை விட்டு வெளியே சென்ற காமாட்சி […]
மோதிவிட்டு நிற்காமல் சென்ற பேருந்தை ஒருவர் காரால் வழிமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடியில் இருந்து தனியார் பேருந்து சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ஓயாமரி அருகே சென்றபோது ஒரு காரை முந்தி சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக கார் மீது உரசி விட்டு தனியார் பேருந்து நிற்காமல் சென்றது. இதனால் கோபமடைந்த கார் ஓட்டுநர் விரட்டி சென்று மற்றொரு இடத்தில் வைத்து பேருந்தை நிறுத்த முயன்றார். அப்போதும் பேருந்து கார் […]
தொழிலதிபரிடம் 17 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள சின்னகடை வீதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் பயோமெடிக்கல் டெக்னாலஜி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரியில் கூறியிருப்பதாவது, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த எனது நண்பர் ரமேஷ்குமார்(43) என்பவர் மருத்துவ உபகரணங்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். கொரோனா காலகட்டத்தின் […]
நீலகிரி மாவட்டத்தில் பட்டாசு, பலகார கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்கள். நீலகிரி மாவட்டத்திலுள்ள பட்டாசு மற்றும் பலகார கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார்கள். சட்டமுறை எடையளவு சட்டம் 2009 மற்றும் பொட்டல பொருட்கள் விதிகள் 2011 குழந்தை தொழிலாளர் முறையை தடுத்தல் சட்டம் 1986 கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் 36 இனிப்பு தயாரிப்பு நிறுவனங்களில் சட்டமுறை எடையளவு சட்டம் 2009 கீழ் முத்திரையிடாமல் பயன்படுத்தப்பட்ட தராசுகள் மற்றும் பொட்டலப் பொருட்கள் விதிகள் 2013 கீழ் உரிய […]
நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 22) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 20 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 45 காசுகளிலிருந்து, அக்டோபர் 22 ஆம் தேதி முதல் 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 60 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மோட்டார் சைக்கிள் மீது லோடு ஆட்டோ மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நரசிங்கன்விளை பகுதியில் முத்துராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 14-ஆம் தேதி முத்துராஜா குரும்பூர் பகுதியில் வசிக்கும் மகேஷ்குமார், கிறிஸ்டோபர் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் நெல்லை மேட்டுக்குடி விலக்கு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோ எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முத்துராஜா சம்பவ […]