Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில்….! “மரத்தடியில் அமர்ந்து பாடம் படிக்கும் மாணவிகள்”….. கட்டிடம் விரைந்து கட்டி தர பொதுமக்கள் கோரிக்கை….!!!!!!

ஏரல் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து பாடம் கற்று வருவதால் வகுப்பறைகளை உடனே கற்றுத் தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஏரல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மூன்று கட்டிடங்களில் 17 வகுப்பறைகளுடன் இயங்கி வந்தது. இப்பள்ளியில் 600 மாணவிகள் படித்து வருகின்றார்கள். இந்தப் பள்ளி கட்டிடம் மிகவும் சேதம் அடைந்ததால் இங்கு படித்து வந்த மாணவிகள் தற்காலிகமாக ஏரல் அருகே இருக்கும் சிறுதொண்டநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றப்பட்டார்கள். மேலும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை மக்களே…! காலை மற்றும் இரவில் மழை விட்டு விட்டு பெய்யும்”…. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்…!!!!!

சென்னையில் இனி வரும் நாட்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் மழை விட்டு விட்டு செய்யக்கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் கூறி உள்ளார். தமிழ்நாடு வெதர்மேன் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது, தமிழகத்தில் உள் மாவட்டங்களில் கன மழை பெய்யும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இனிவரும் நாட்களில் மழை விட்டு விட்டு பெய்யக்கூடும். இன்று தமிழகத்தில் மேற்கு உள் மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், கரூர், திண்டுக்கல், […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடி மாணவர்கள் அடிமுறை சிலம்பம் சுற்றி உலக சாதனை”….. குவியும் பாராட்டு….!!!!!

தூத்துக்குடி மாணவர்கள் தொடர்ந்து அடிமுறை சிலம்பம் சுற்றி சாதனை படைத்தார்கள். தேனி மாவட்டத்தில் உள்ள சின்மனூரில் உலக சாதனைக்காக தொடர்ந்து சிலம்பம் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று சிலம்பம் விளையாடினார்கள். இதில் தொடர்ந்து ஆறு மணி நேரம் அடிமுறை சிலம்பம் விளையாடி உலக சாதனை படைத்தார்கள். இதை அடுத்து சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் சாதனை படைத்த மாணவ-மாணவிகள், தேசிய பயிற்சியாளர் வீரத்தமிழன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காதலனை ஒன்னும் செய்யாதீங்க”…. “இதுக்கு நான் மட்டுமே காரணம்”…. காதல் தோல்வியால் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு….!!!!

ஐந்து வருடங்களாக காதலித்து வந்த காதலன் ஏமாற்றியதால் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை அருகே பாரதி நகர் மூன்றாவது தெருவை சேர்ந்த டேனியல் ராஜா என்பவரின் மகள் ஏஞ்சல். இவர் மாதவரம் ரவுண்டானாவில் இருக்கும் தனியார் மார்க்கெட்டில் வேலை செய்து வந்திருக்கின்றார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்பவரை சென்ற ஆறு வருடங்களாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகின்றது. இருவரும் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“காலதாமதமாக கட்டணம் வசூலித்த வங்கி”…. “கோர்ட் வழங்கிய அதிரடி தீர்ப்பு”…. திருப்தியில் நுகர்வோர்….!!!!!!

காலதாமதமாக கட்டணம் வசூலித்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு 50,000 இழப்பீடு வழங்குமாறு தனியார் வங்கிக்கு நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள குரோம்பேட்டையைச் சேர்ந்த அசோக் குமார் சரக்குகளை கையாளும் போக்குவரத்து நிறுவனத்தை நடத்தி வருகின்றார் இவர் கோட்டூர்புரத்தில் இருக்கும் தனியார் வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வந்திருக்கின்றார். சென்ற 2006 ஆம் வருடம் கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்கியதற்கு செலுத்த வேண்டிய தொகைக்காக குறிப்பிட்ட நாளுக்குள் காசோலை கொடுத்து இருக்கின்றார். அவரது வங்கிக் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“தூத்துக்குடியில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் திடீர் போராட்டம்”…. பேச்சுவார்த்தை நடத்திய போலீசார்….!!!!!

தூத்துக்குடியில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் திடீர் போராட்டம் நடத்தினார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் வடக்கு பீச் ரோட்டில் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்துக்கு உட்பட்ட விக்டோரியா பள்ளி செயல்பட்டு வருகின்றது. இப்பள்ளியில் 40 ஆசிரியர்கள் மற்றும் 30 ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் வேலை செய்து வருகின்றார்கள். காலாண்டு விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பள்ளி முன்பு அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது, எங்களுக்குச் சென்ற இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில்…. “மாற்றுத்திறனாளி பெண் திடீர் தர்ணா போராட்டம்”….!!!!!!!

தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளி பெண் அரசு வேலை வழங்கக்கோரி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது. இதற்கு ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமை தாங்க கூடுதல் ஆட்சியர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணபிரான், மகளிர் திட்ட இயக்குனர் வீரபத்திரன் உள்ளிட்டோர் முன்னிலை வசித்தார்கள். பின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்கொடுத்தார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முடிவைத்தானேந்தல் அருகே […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

சாலையில் கவிழ்ந்த அரசு பேருந்து….. காயமடைந்த 18 பேர்…. கோர விபத்து….!!!

சென்னை மாவட்டத்தில் இருந்து அரசு பேருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை கர்ணாமூர்த்தி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக கார்த்திகேயன் என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கோவிலாஞ்சேரி பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி வாய்க்கால் மதகு கட்டையில் மோதி கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த ஓட்டுனர் கண்டக்டர் உள்பட 18 பேரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய…. “சூரத்திலிருந்து சிவகங்கைக்கு வந்தடைந்த 550 டன்கள் யூரியா”….!!!!!

சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதற்காக 550 டன் யூரியா சூரத்தில் இருந்து சிவகங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் செய்து குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சிவகங்கை மாவட்ட விவசாயிகள் தற்போது பெய்து வரும் மழையை பயன்படுத்தி 30 ஆயிரம் ஏக்டேருக்கு மேல் சாகுபடி பணிகளை செய்து வருகின்றார்கள். விவசாயிகளுக்கு தேவைப்படும் யூரியா, டிஏபி, பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாக விற்பனை செய்ய மாவட்ட […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“நாமக்கலில் மண்டல சிலம்பம் தனித்திறமை போட்டி”…… வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம்….!!!!!!

நாமக்கலில் மண்டல சிலம்பம் தனித்திறமை போட்டி நடைபெற்றதில் 700 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றார்கள். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி பாரத மாதா சிலம்பம் பயிற்சி மன்றம் சார்பாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு மண்டல அளவிலான சிலம்பம் தனித்திறமை போட்டிகள் நேற்று முன்தினம் நடந்தது. இந்த போட்டியில் சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தர்மபுரி, ஈரோடு ஆகிய பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 6 முதல் 19 வயதிற்கு உட்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்று சிலம்பத்தில் தங்களின் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மசாஜ் செய்வதற்கு சென்ற தொழிலாளி…. விபச்சாரத்திற்கு அழைத்த மேலாளர்…. போலீஸ் அதிரடி….!!!

தொழிலாளியை விபச்சாரத்திற்கு அழைத்த மசாஜ் சென்டர் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிடில் முத்து தெருவில் ஆஷிக்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் இறைச்சி கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஆஷிக் நாமக்கல் செல்லும் சாலையில் இருக்கும் மசாஜ் சென்டருக்கு மசாஜ் செய்வதற்காக சென்று கொண்டிருந்தார். அப்போது மசாஜ் சென்டரின் மேலாளரான ரதீஷ் என்பவர் 2000 ரூபாய் கட்டணம் கேட்டுள்ளார். மேலும் 1500 ரூபாய் கொடுத்தால் பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

“ஆதிதிராவிட பெண்ணை பணியில் சேர்க்கக்கூடாது” வைரலான ஆடியோ…. ஊராட்சி மன்ற தலைவியின் கணவர் கைது…!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கோபுராஜபுரம் ஊராட்சி பகுதியில் இருக்கும் அங்கன்வாடி மையத்தில் நீலாம்பாள் என்பவர் ஊட்டச்சத்து பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இங்கு உதவியாளர் பணியிடம் காலியாக இருக்கிறது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மகேஸ்வரி(38) என்ற பெண்ணை நீலாம்பாள் தனக்கு உதவியாக வைத்துள்ளார். இந்நிலையில் கோபுராஜபுரம் ஊராட்சி மன்ற தலைவி உமா மகேஸ்வரியின் கணவர் ராஜேஷ் என்பவர் நீலாம்பாளை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த மகேஸ்வரியை வேலைக்கு சேர்க்க கூடாது என கூறியுள்ளார். […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

ஏராளமான குடியிருப்பு பகுதிகள்…. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

சிறுத்தை உலா வருவதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள நெடுகுளா ஒசட்டி கிராமத்தை சுற்றி ஆயிரக்கணக்கான குடியிருப்புகளும், மேல்நிலைப்பள்ளி, அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை அமைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக சிறுத்தை ஒன்று குடியிருப்பு பகுதியில் உலா வரும் சிசிடிவி காட்சிகள் அப்பகுதியில் பொருத்தப்பட்ட கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே அசம்பாவிதங்கள் ஏற்படுவதற்கு முன்பு வனத்துறையினர் அடர்ந்த வனப் பகுதிக்குள் சிறுத்தையை விரட்ட […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தங்கப்பதக்கம் வென்று சாதனை…. புதுக்கோட்டை வாலிபருக்கு குவியும் பாராட்டுகள்…..!!!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முத்துகுடா கிராமத்தில் மீனவர் சமுதாயத்தைச் சேர்ந்த ஜனகன்(27) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவாவில் நடந்த நேஷனல் பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற சாதனை படைத்து சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். அவரை கிராமத்தினர் சால்வை அணிவித்து சிறப்பாக வரவேற்றனர். ஏற்கனவே இவர் பல்வேறு பேட்மிண்டன் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது, ஜனகன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது எங்கள் கிராமத்திற்கு மிகவும் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மகளுடன் மாமனார் வீட்டிற்கு சென்ற நபர்….. பெண் செய்த செயல்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

சிறுமியிடம் நகையை பறித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருவிளந்தூர் ராதாநல்லூர் தெருவில் தினேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 7 வயது உடைய அபிக்ஷா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் தினேஷ்குமார் தனது மகளுடன் தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் மாமனார் வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் அரசு பேருந்தில் மயிலாடுதுறைக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சாலை பேருந்து நிறுத்தத்தில் அபிக்ஷாவை கையில் பிடித்துக் கொண்டு தினேஷ்குமார் இறங்கியுள்ளார். […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

டாக்டர் இல்லாத “அவசர சிகிச்சை பிரிவு” சிரமப்படும் நோயாளிகள்….. பொதுமக்களின் கோரிக்கை….!!

அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் அரசு தலைமை மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர் இல்லாததால் நீண்ட நேரம் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, பல்வேறு இடங்களில் இருந்து சிகிச்சை பெறுவதற்காக தினமும் ஏராளமான பொதுமக்கள் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். அவசர […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மகளை வீட்டில் விட்டு சென்ற தாய்….. விளையாடிய சிறுமிக்கு நடந்த விபரீதம்… கதறும் குடும்பத்தினர்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள செம்பட்டியில் ஓட்டுனரான சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரஸ்வதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஜீவபிரீத்தி(10) என்ற மகள் இருந்துள்ளார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் சதீஷ்குமார் வேலைக்கு சென்ற பிறகு உடல் நலம் சரியில்லாத சரஸ்வதி அவரது தாயுடன் மருத்துவமனைக்கு சென்று விட்டார். இதனால் வீட்டில் ஜீவபிரீத்தி தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் கதவை உள்பக்கமாக பூட்டிவிட்டு சிறுமி சேலையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

120 அடி ஆழமுடைய கிணறு….. அபயகுரல் எழுப்பிய 10-ஆம் வகுப்பு மாணவி….. தீயணைப்பு வீரர்களின் செயல்….!!!

கிணற்றுள் தவறி விழுந்த சிறுமியை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள சின்னாளம்பாளையத்தில் விவசாயியான மோகன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மதுமிதா(15) என்ற மகள் உள்ளார். இந்த சிறுமி பெருந்துறையில் இருக்கும் தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மதுமிதா வீட்டிற்கு அருகில் இருக்கும் தோட்டத்தில் கிணற்றுக்கு சென்று மின் மோட்டாரை இயக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக கால் தவறி 120 அடி ஆழமுடைய கிணற்றுக்குள் தவறி விழுந்தார். 10 […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (11.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 11) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 25 காசுகளிலிருந்து, அக்டோபர் 10 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

*டீசல் விலை, காப்பீடு கட்டணம் உயர்வு எதிரொலி”…. மினி பேருந்து தொழில்‌ பாதிப்பு…‌ மீண்டும் போக்குவரத்து ஆரம்பமாகுமா…..????

பலவற்றின் உயர்வு காரணமாக மினி பேருந்து உரிமையாளர்கள் தொழிலை கைவிடும் நிலைமைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றார்கள். கிராம மக்களின் வாழ்வாதாரத்துக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏராளமான திட்டங்களை கொண்டு வருகின்றது. அதில் ஒன்று மினி பேருந்துகள் திட்டமாகும். இத்திட்டத்தை சென்ற 1997 ஆம் வருடம் அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி அவர்களால் தொடங்கப்பட்டதாகும். பல அடிப்படை தேவைகளுக்கும் ஆணிவேராக இந்த மினி பேருந்து இருந்து வந்த நிலையில் தற்போது நஷ்டத்தை நோக்கி செல்வதால் முடங்கும் அபாயம் ஏற்பட்டிருக்கின்றது. […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில்…. “கடல் உணவுப் பொருட்களில் தொழில் முனைதல் பயிற்சி”…. மாணவிகளுக்கு சான்றிதழ்….!!!!!

தூத்துக்குடியில் கடல் உணவுப் பொருட்களின் தொழில் முனைதல் பயிற்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கடல் உணவு பொருட்களில் தொழில் முனைதல் குறித்த விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் சுகுமார் தலைமை தாங்க மீன் பதன தொழில்நுட்பத் துறை தலைவர் கணேசன் வரவேற்புரை வழங்கினார். இதன் பின் கல்லூரி முதல்வர் அகிலன் மீன் உணவுப் பொருட்களில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து விரிவாக பேசினார். இப்பயிற்சியில் கல்லூரி மாணவிகள் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடியில்…. “மானிய விலையில் விவசாயிகளுக்கு விதைகள் விநியோகம்”…. அதிகாரி தகவல்….!!!!!

மானிய விலையில் விதைகள் விநியோகம் செய்யப்படுவதாக கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கருங்குளம் வேளாண்மை உதவி இயக்குனர் இசக்கியப்பன் செய்தி குறித்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, விதை கிராம திட்டம் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நெல் விதைகள் அம்பை – 16, கோ – 51, டி.கே.எம் – 13, டி.பி.எஸ் – 5  உள்ளிட்ட ரகங்கள் கிலோவிற்கு ரூபாய் 17.50 மற்றும் ரூபாய் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“அவிநாசியில் 100 இளைஞர்களின் பெருஞ்சலங்கையாட்ட அரங்கேற்றம்”….. தொடங்கி வைத்த எம்.எல்.ஏ…!!!!!!

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் நூறு இளைஞர்களின் பெருஞ்சலங்கையாட்ட அரங்கேற்றம் நடைபெற்றது. அவிநாசியில் இருக்கும் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பெருஞ்சலங்கை ஆட்டக்குழு, கொங்கு பண்பாட்டு மையத்தின் சார்பாக உள்ளி விளவு என்ற கொங்கு பெருஞ்சலங்கையாட்டம் நடைபெற்றது. இதில் 100 இளைஞர்கள் முறையாக பயிற்சி பெற்று சத்திய பிரமாணம் எடுத்து நாட்டார் ஆதி சிவனை நெருப்பாக வழிபாடு செய்து அரங்கேற்றம் செய்தார்கள். இந்நிகழ்ச்சிக்கு கொங்கு மக்கள் தேசிய கட்சி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு மாவட்டத்தில்…. “காவல்துறை சார்பாக சிறுவர்-சிறுமிகளுக்கு சுற்றுலா”…..!!!!!

காவல்துறை சார்பாக சிறுவர்-சிறுமிகள் சிறப்பு சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டார்கள். தமிழ்நாடு காவல்துறை சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் சிறுவர் மற்றும் சிறுமிகள் மன்றங்கள் இயங்கி வருகின்றது. ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் 11 மன்றங்களை சேர்ந்த 95 சிறுவர்-சிறுமிகளுக்கு காவல்துறை சார்பாக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. ஆகையால் பல்வேறு அன்றாட நிகழ்வுகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்திரவின் பேரில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த வகையில் சென்ற எட்டாம் தேதி போலீசார் வாகனங்கள் மூலம் இரண்டு […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“திருப்பூரில் மூத்தோர்களுக்கான தடகள போட்டி”…. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் மூத்தோர்களுக்கான தடகளப் போட்டி நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் தனியார் பள்ளி ஒன்றில் மூத்தோர் தடகள சங்கம் சார்பாக 13-வது வருடம் மூத்தவர்களுக்கான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஓட்டப்பந்தய போட்டிகள் நடைபோட்டி, தடை தாண்டி ஓட்டம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், தத்தித் தாண்டுதல், கோலூன்றி தாண்டுதல், குண்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 321 பேர் கலந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

களைகட்ட ஆரம்பித்த “தீபாவளி”…. “கடைவீதிகளில் குவிந்த பொதுமக்கள்”…. போக்குவரத்து நெரிசல்…!!!!!

தீபாவளி பண்டிகையொட்டி ஜவுளிகள் வாங்க கடை வீதிகளில் பொதுமக்கள் குவிந்தார்கள். வருகின்ற 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகின்றது. இதனால் பொதுமக்கள் ஆடைகளை வாங்கி வருகின்றார்கள். அந்த வகையில் நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் ஈரோடு கடைவீதிகளில் பொருட்களை வாங்க பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டார்கள். தற்பொழுது தீபாவளி பண்டிகையொட்டி கடைகள் களைகட்ட ஆரம்பமாகியுள்ளது. மேலும் ஈரோடு மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பூங்கா, ஆர்.கே.வி.ரோடு, நேதாஜி ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி உள்ளிட்ட இடங்களில் பொது மக்களின் கூட்டம் அலைமோதியன‌. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சிறுவன் இயக்கிய மதகு பழுதானதால்…. பெரும் பரபரப்பு….. சமூக ஆர்வலர்களின் வலியுறுத்தல்….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் முழு கொள்ளளவு 120 அடி ஆகும். இந்த நிலையில் கடந்த 7 ஆம் தேதி பி.ஏ.பி திட்ட தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த தினத்தில் அணை முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்தது. அந்த சமயத்தில் சிறுவன் ஒருவன் மதகை இயக்கியுள்ளார். இது சம்பந்தமான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் அந்த மதகு பழுதானதாக கூறப்படுகிறது. இந்த காரணத்தினால் மதகை உடனடியாக மூட முடியவில்லை. பின்னர் அங்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தலைக்குப்புற கவிழ்ந்த ஆட்டோ…. படுகாயமடைந்த 3 பேர்…. கோர விபத்து….!!!

ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூரில் இருந்து ஆட்டோ ஒன்று பயணிகளுடன் பாட்டவயல் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பாலவயல் பாலம் அருகே சென்ற போது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ எதிரே வந்த ஜீப் மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த செல்வராணி(75), லெனின்(12), தேவராஜ்(70) ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். இதனை பார்த்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

தடுப்புசுவர் கட்ட பள்ளம் தோண்டிய போது…. உயிரோடு மண்ணில் புதைந்த தொழிலாளர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மஞ்சனக்கொரை குந்தாஹவுஸ் பகுதியில் குமரேசன்-பத்மினி தம்பதியினருக்கு சொந்தமான இடம் உள்ளது. அங்கு வீடு கட்ட தம்பதி முடிவு செய்தனர். இதற்கான பணி அர்ஷத் என்ற ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த ஒரு மாதமாக வீடு கட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்தனர். இந்நிலையில் வீட்டின் அருகே தடுப்புசுவர் கட்டுவதற்காக 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டும் பணி நேற்று நடைபெற்றுள்ளது. இதில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

சுடுகாட்டுக்கு சென்ற பெண்….. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை….!!!

பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள சித்துடையார் காலனி தெருவில் மூக்காயி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருடன் மூக்காயிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதியினருக்கு 6 வயதுடைய மணிகண்டன் என்ற மகன் உள்ளார். சிறு வயதிலிருந்தே மனநலம் பாதிக்கப்பட்டதால் மூக்காயி மாத்திரை சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் திருமணமான 6 மாதங்களில் மூக்காயியின் கணவர் அவருடன் வாழ பிடிக்காமல் அவரை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

போதையில் படுத்து தூங்கிய தொழிலாளி….. உடல் கருகி இறந்த சோகம்….. பரபரப்பு சம்பவம்….!!

தொழிலாளி உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மஞ்சூரில் சுமை தூக்கும் தொழிலாளியான மணிகண்டன்(30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டனர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மணிகண்டன் அப்பகுதியில் இருக்கும் காவல் நிலையம் அருகே தகரக் கூரை வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அளவுக்கு அதிகமாக மது குடித்த மணிகண்டன் வீட்டில் தூங்கியுள்ளார். அந்த வீட்டில் மின்சார இணைப்பு இல்லாததால் வெளிச்சத்திற்காக மண்ணெண்ணெய் விளக்கு […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இறைச்சியில் புழுக்கள் கிடந்ததால் பரபரப்பு…. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் விசாரணை…!!!

இறைச்சியில் புழுக்கள் கிடந்த சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள பாட்டவயல் பகுதியில் நெஸ்னா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூடலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருக்கும் கடையில் மாடு இறைச்சி வாங்கி சென்றுள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு சென்று பார்த்தபோது இறைச்சியில் புழுக்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சம்பந்தப்பட்ட கடை நிர்வாகத்திடம் பேசிய போது அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் நெஸ்னா மாவட்ட உணவு […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

“சிறப்பு பேருந்து இயக்க வேண்டும்” டிரைவர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை….!!

பணிச்சுமை காரணமாக பூச்சி மருந்தை குடித்து டிரைவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மாம்பாக்கசத்திரம் கிராமத்தில் குருவய்யா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருத்தணி பஸ் டிப்போவில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 7-ஆம் தேதி குருவய்யா வழக்கம்போல் வேலைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து அதன் மறுநாளும் டிரைவர் பற்றாக்குறையால் குருவய்யா பேருந்தை இயக்கியுள்ளார். அதன்பின் வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல முயன்ற குருவய்யாவை அதிகாரி சிறப்புப் பேருந்து இயக்க […]

Categories
சென்னை திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“பாரத ஸ்டேட் வங்கியில் வேலை வாங்கித் தருகிறேன்”…. 3 கோடி மோசடி…. முக்கிய குற்றவாளி கைது….!!!!!

வங்கியில் வேலை வாங்கித் தருவதாக கூறி 3 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் போலீசார் முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளார்கள். திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த புருஷோத் ராவ் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது, பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரி பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறி என்னை போன்ற 39 பேரிடம் போலியான நியமன ஆணை வழங்கி சிலர் பண மோசடியில் ஈடுபட்டதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பழனி மலை முருகன் கோவில்”…. சாமி தரிசனத்திற்கு வந்த விவசாயி…. திடீர் மரணம்….!!!!

கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக வந்த விவசாயி திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் குள்ளம்பாளையம் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி கௌதம். இவர் தனது நண்பரான செந்தில் என்பவருடன் பழனி முருகன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்வதற்காக சென்றார். அதன் பின் மலையின் அடிவாரத்தில் இருந்து படி வழியாக இருவரும் கோவிலுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் கௌதமுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை உடனடியாக மலைக்கோவிலில் உள்ள சிகிச்சை […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை… சந்தேகத்தை ஏற்படுத்திய செல்போன் அழைப்பு…. போலீஸ் விசாரணை…!!!

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள லட்சுமிபுரம் தாகூர் பகுதியில் பிளம்பரான ஆனந்த்(32) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்த் சுஜிலா(28) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதில் சுசிலா நாகர்கோவிலில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் மருந்தாளுனராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் மாமியாரின் நகையை பறித்த பெண்…. மடக்கி பிடித்த மருமகள்….. பரபரப்பு சம்பவம்….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குருசடி விளாகம் பகுதியில் கூலி தொழிலாளியான கிப்சன்(35) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மேரி ஷைனி(32) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கிப்சனின் தாய் டெல்பி(65) என்பவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதனால் டெல்பி தனது மருமகளுடன் மார்த்தாண்டம் செல்லும் பேருந்தில் ஏறியுள்ளார். ஒரே இருக்கையில் மாமியாரும் மருமகளும் அடுத்தடுத்து அமர்ந்திருந்தனர். இந்நிலையில் பேருந்து வெட்டுமணி நிறுத்தத்தில் நிற்க முயன்ற போது பின் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் டெல்பியின் கழுத்தில் கிடந்த 2 1/2 […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் கொள்ளை….. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்….. போலீஸ் விசாரணை….!!!

பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் சைமன் நகரில் தனியார் நிறுவன மேலாளரான சங்கரநாராயணன்(38) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிருந்தா என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்நிலையில் சங்கரநாராயணன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு மறுநாள் அதிகாலை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சடைந்த சங்கரநாராயணன் உள்ளே […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சம்பளத்தை வாங்கிய வடமாநில தொழிலாளி….. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் விசாரணை…!!!

வட மாநில தொழிலாளி தண்ணீர் குழிக்குள் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறையில் இருக்கும் தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த செந்துகுமார் ராவத்(32) என்பவர் தையல் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். அந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் விடுதியில் செந்துகுமார் தங்கி வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் சம்பளத்தை வாங்கி கொண்டு விடுதியை விட்டு வெளியே சென்ற குமார் மது அருந்தியுள்ளார். இதனை அடுத்து குடிபோதையில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கோவில் வினோத திருவிழா….. “11-ஆம் வகுப்பு மாணவர் பூசாரியாக தேர்வு”…..!!!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள புதுகொத்துக்காடு கிராமத்தில் புகழ்பெற்ற வீரமாத்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது. 8 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த கோவிலில் பூசாரியை தேர்ந்தெடுக்கும் வினோத திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் புதிய பூசாரியை தேர்ந்தெடுக்க முடிவு செய்தனர். அதன்படி சில விதிமுறைகளை பொதுமக்கள் அறிவித்த நாள் முதல் அனைவரும் தவறாமல் கோவிலுக்கு வந்து விழாவில் கலந்து கொண்டனர். அப்போது பக்தர்கள் யாருக்காவது சாமி வந்தால் அவர் தீச்சட்டியை எடுத்து கோவிலை சுற்றி வர […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய வாலிபர்…. ஏன் தெரியுமா….?? போலீசாரின் அறிவுரை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்து குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் லோக் மானிய திலக் வரை இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் காலை 10:25 மணிக்கு ஈரோடு முதலாவது நடைமேடைக்கு இந்த ரயில் வந்து சேர்ந்தது. சிறிது நேரத்தில் ரயில் புறப்பட தயாராக இருந்த போது வாலிபர் ஒருவர் திடீரென அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் சம்பந்தப்பட்ட முன்பதிவு பெட்டிக்கு சென்ற விசாரணை நடத்திய போது அந்த வாலிபர் தன்னுடன் வந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தாமதமாக வந்த ரயில்….. அதிகாரி கூறிய காரணம்…. சிரமப்பட்ட பயணிகள்….!!!

கடலூர் மாவட்டத்திற்கு மதியம் 2:20 மணிக்கு மும்பையில் இருந்து வரும் லோக மாண்ய திலக் வாராந்திர விரைவு ரயில் வந்து சேரும். நேற்று மாலை 3:40 மணிக்கு ரயில் திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்ததால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர். மேலும் குடிநீர் குழாய்கள் இருந்தும் தண்ணீர் வராததால் பொதுமக்கள் பணம் கொடுத்து தண்ணீர் பாட்டில்களை வாங்கி சென்றனர். அந்த ரயில் 25 நிமிடங்கள் தாமதமாக திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்திலிருந்து சிதம்பரம் வழியாக காரைக்கால் நோக்கி புறப்பட்டது. இதுகுறித்து […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (10.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 10) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 30 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 8 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 25 காசுகளிலிருந்து, அக்டோபர் 10 ஆம் தேதி முதல் 5 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 30 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“நிதி நிறுவனத்திற்கே தண்ணி காட்டிய ஊழியர்கள்”…. போலீசார் அதிரடி நடவடிக்கை…!!!!!!

நிதி நிறுவனத்தில் பண மோசடியில் ஈடுபட்ட ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் பேருந்து நிலையம் அருகே இருக்கும் தனியார் நிதி நிறுவனத்தில் பண வசூலிப்புத் துறை மேலாளராக பணியாற்றும் ஏசுதாஸ் என்பவர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது, எங்கள் நிதி நிறுவனத்தில் பணியாற்றி வரும் டேனியல் ஆண்டனி, அருள் செல்வம், சசிகுமார், சரவணன் மற்றும் சுரேஷ் உள்ளிட்ட ஐந்து ஊழியர்கள் எங்கள் நிதி நிறுவனத்தில் கடன் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னை போலீஸ் கமிஷனர் முன்னிலையில்….. “1 1/2 கோடி போதை பொருட்கள் எரித்து அழிப்பு”….!!!!!

சென்னை போலீஸ் கமிஷனர் முன்னிலையில் 1 1/2 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டது. பல போதைப்பொருள் வழக்குகளில் சிக்கும் கஞ்சா உள்பட போதை பொருட்களை விசாரணை முடிந்த பின் எரித்து அழிப்பதற்கு நீதிமன்றத்தின் அனுமதியை போலீசார் பெற்றுள்ளார்கள். அந்த வகையில் சென்ற ஜூன் மாதம் 25ஆம் தேதி 68 வழக்குகளில் சிக்கிய 2 கோடி மதிப்பிலான 30 கிராம் ஹெராயின், பிரவுன் சுகர், 1300 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. தீயணைப்பு வீரர்களின் போராட்டம்…. பரபரப்பு சம்பவம்….!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூலைக்கரைப்பட்டியில் இருந்து முனைஞ்சிப்பட்டிக்கு செல்லும் சாலையில் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் அமைந்துள்ளது. இதற்கு அருகே முட்புதர்கள் நிறைந்த இடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

டீக்கடைக்குள் புகுந்த தனியார் பேருந்து…. படுகாயமடைந்த 3 பேர்…. சேலத்தில் கோர விபத்து….!!!

தனியார் பேருந்து டீக்கடைக்குள் புகுந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் இருந்து தனியார் பேருந்து பயணிகளுடன் மேட்டூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஓமலூரில் இருந்து கோட்டகவுண்டம்பட்டி சர்வீஸ் சாலையின் குறுக்கே லாரி ஒன்று சென்றது. அதன் மீது மோதாமல் இருப்பதற்காக தனியார் பேருந்து ஓட்டுநர் வாகனத்தை இடதுபுறம் திருப்பியுள்ளார். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த டீக்கடைக்குள் புகுந்ததால் கடையில் நின்று கொண்டிருந்தவர்கள் அலறி அடித்து […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“பள்ளி மாணவன் கடத்தி சென்றான்” சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்…. போலீஸ் வலைவீச்சு….!!!

16 வயது சிறுமியை கடத்தி சென்ற பள்ளி மாணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூரில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 6-ஆ ம் தேதி வீட்டில் இருந்த சிறுமி திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் சிறுமி கிடைக்காததால் பெற்றோர் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் காவல் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

தாங்க முடியாத வலி….. கல்லூரி மாணவரின் அவசர முடிவால்….. கதறி அழும் பெற்றோர்….!!!

கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டை பகுதியில் முத்து விக்னேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையில் இருக்கும் தனியார் கல்லூரியில் ஆசிரியர் படிப்பு இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் முத்து விக்னேஷ் கடந்த ஒரு மாதமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த முத்து விக்னேஷ் மீண்டும் வலி ஏற்பட்டபோது வீட்டு மாடியில் இருக்கும் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

நேருக்கு நேர் மோதிய மோட்டார் சைக்கிள்கள்…. ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை ஊழியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில் என்.ஜி.ஓ காலனியில் ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை ஊழியரான ரத்தினவேல்(75) என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மாதம் 28-ஆம் தேதி ரத்தினவேல் மோட்டார் சைக்கிளில் குருக்கள்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ரத்தினவேலின் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த […]

Categories

Tech |