Categories
தேனி மாவட்ட செய்திகள்

“ரேஷன் கார்டில் பெயர் சேர்ப்பு”…. தேனியில் நடைபெற்ற முகாம்….!!!!!

தேனி அருகே ரேஷன் கார்டில் பெயர் சேர்க்கும் முகாம் நடைபெற்றது. தேனி மாவட்டத்தில் உள்ள பூதிபுரத்தில் வட்ட வழங்கல் துறை சார்பாக ரேஷன் கார்டு சார்ந்த குறைதீர்க்கும் முகமானது நடந்தது. இம்முகாமில் வட்டார வளங்கள் அலுவலர் ராமராஜன் பங்கேற்று குறைகள் குறித்த மனுக்களை பெற்றுக் கொண்டார். இதன் பின்னர் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் ஆகிய பல்வேறு பணிகள் நடைபெற்றது. இம்முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் சுப்ரமணி, மாவட்ட வழங்கல் அலுவலர் சாந்தி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“மதிமுக நிர்வாகிகளிடையே தகராறு”…. எதுக்காக தெரியுமா…??? தேனியில் பரபரப்பு….!!!!

தேனியில் வைகோ ஆவணப்பட வெளியீட்டு விழாவில் டிக்கெட் கிடைக்காததால் நிர்வாகிகள் இடையே தகராறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு தியேட்டரில் நேற்று மதிமுக சார்பாக வைகோ ஆவணப்பட வெளியிட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ பங்கேற்று ஆவணப்படத்தை வெளியிட்டார். இதை தொடர்ந்து திரையரங்கில் ஆவணப்படம் திரையிடப்பட்டது. இத்திரைப்படத்தை பார்ப்பதற்காக ஏராளமானோர் அங்கு திரண்டு வந்திருந்தார்கள். இதில் சிலருக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என சொல்லப்படுகின்றது. இதனால் நிர்வாகிகளிடையே […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“போலி சான்றிதழுடன் மருத்துவம் பார்த்த சித்த வைத்தியர்”…. அதிரடியாக கைது செய்த போலீசார்….!!!!!

போலி சான்றிதழ் வைத்து மருத்துவம் பார்த்து வந்த சித்த வைத்தியரை போலீசார் கைது செய்துள்ளார்கள். தஞ்சை மாவட்டத்தில் உள்ள பட்டுக்கோட்டை அத்திவெட்டி தெற்கு தெருவை சேர்ந்த தென்னரசு என்பவர் தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, நான் கிராம உதவியாளராக பணியாற்றி வருகின்றேன். என்னுடைய மகன் நேசன். நீண்ட நாட்களாக நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்ததால் எனது மகனை தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை முனிசிபல் காலனியில் பாரம்பரிய […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பட்டுக்கோட்டையில் 12ம் தேதியிலிருந்து இதை பயன்படுத்தக் கூடாது”…. நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்…. ஆணையர் அறிவிப்பு….!!!!!!

தஞ்சையில் வருகின்ற 12ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிர படுத்தப்படும் என ஆணையர் சௌந்தர்ராஜன் கூறியுள்ளார். தஞ்சை மாவட்டத்தில் ஆட்சியர் அறிவுறுத்தலின்படி பிளாஸ்டிக் மொத்த விற்பனையாளர்கள் வர்த்தக சங்க நிர்வாகிகள் சாலையோர வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகள் உடனான பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது. இக்கூட்டத்தில் வர்த்தக சங்க தலைவர் பேசும்போது கூறியதாவது, அரசின் பிளாஸ்டிக் ஒழிப்பு சட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு தருகின்றோம். அனைத்து விற்பனை மண்டலங்களிலும் பிளாஸ்டிக் ஒழிப்பு பதாகைகள் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் உயர்வு”…. பயணிகள் அவதி….!!!!

பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியிருக்கின்றார்கள். புகழ்வாய்ந்த சுற்றுலாத்தலங்களில் ஒன்றான தஞ்சையின் மையப் பகுதியில் தஞ்சை ரயில் நிலையம் இருக்கின்றது. இதனால் ஏராளமான சுற்றுலா பயணிகள், வேலைக்கு செல்வோர், பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்ளிட்டோர் பயன்படுத்துகின்றார்கள். இந்த நிலையில் திருச்சி ரயில்வே கோட்டத்தில் இருக்கும் தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட ரயில் நிலையங்களின் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டிருக்கின்றது. பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பிளாட்பாரம் டிக்கெட் கொரோனா காலத்தில் ஐம்பது ரூபாயாக […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கணவருக்கு தெரியாமல் செய்த காரியம்….. மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி….. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோட்டகம் மேலன்விளை பகுதியில் கொத்தனாரான பிரேம்குமார்(41) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சபிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் சபிதா கணவருக்கு தெரியாமல் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தாலி சங்கிலி அவரது தாயாரிடம் அடகு வைக்க கொடுத்துள்ளார். இதுகுறித்து அறிந்த பிரேம்குமாருக்கும், சபீதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபத்தில் வேலைக்கு சென்ற பிரேம்குமார் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் சபிதாவும், உறவினர்களும் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மயிலை துரத்தி கடித்த நாய்கள்….. விவசாயி அளித்த தகவல்….. வனத்துறையினரின் செயல்….!!

நாய்கள் கடித்து காயமடைந்த மயிலுக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள வெளிப்பிரிங்கியும் கிராமத்தில் வசிக்கும் விவசாயி தனது வயலுக்கு சென்றுள்ளார். அப்போது நாய்கள் ஆண் மயிலை கடித்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த விவசாயி வாலிபர்களுடன் இணைந்து நாய்களை விரட்டி அடித்தார். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் 2 வயதுடைய ஆண் மயிலை மீட்டனர். இதனை அடுத்து வனத்துறையினர் கால்நடை மருத்துவமனைக்கு மயிலை கொண்டு சென்று […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற தங்கை….. சகோதரி அளித்த புகார்….. போலீஸ் விசாரணை….!!

மாயமான இளம்பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் உள்ள நாகல்குழி கிராமத்தில் ரேவதி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேணுகா(26) என்ற தங்கை உள்ளார். இவர் கைத்தறி நெசவாளர் நல வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வேலைக்கு செல்வதாக கூறி வீட்டிலிருந்து புறப்பட்ட ரேணுகா மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் ரேணுகாவை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதனால் ரேவதி தனது தங்கையை காணவில்லை என ஜெயம்கொண்டம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“கனடாவில் குடியுரிமையுடன் வேலை” பல லட்ச ரூபாய் மோசடி…. பெண் ஏஜெண்டு கைது….!!!

வேலை வாங்கி தருவதாக கூறி 52 லட்ச ரூபாய் வரை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள திருவான்மியூரில் ஜேம்ஸ் ஆரோக்கியம் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாவட்ட போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, கனடாவில் குடியுரிமையுடன் வேலை வாங்கி தருவதாக கூறி பாஸ்போர்ட்டுகளை பெற்றுக்கொண்டு மர்ம கும்பலைச் சேர்ந்தவர்கள் பண மோசடி செய்கின்றனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“பழனி பெரியநாயகி அம்மன் கோவில்” சிறப்பு பூஜையில் கலந்து கொண்ட பக்தர்கள்….!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி பெரியநாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு புரட்டாசி மாதத்தில் வரும் உத்திரட்டாதி நட்சத்திர நாளில் நடராஜ பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை நாளில் பெருமாளுக்கு பன்னீர், சந்தனம், பழம், பால் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனை அடுத்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த பெருமாளை ஏராளமான பக்தர்கள் தரிசித்து சென்றனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது.

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நாய்களை கட்டையால் தாக்கிய வாலிபர்கள்…. தட்டி கேட்ட போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்…. பரபரப்பு சம்பவம்….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராயபுரம் மாதா கோவில் போலீஸ் குடியிருப்பில் ராஜேஷ்(39) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் ஏட்டாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாக பழைய வண்ணாரப்பேட்டை, பாரிமுனை, ராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் ஹோட்டல்களில் மீதம் இருக்கும் உணவுகளை சேகரித்து ராஜேஷ் இரவு நேரங்களில் சாலையில் சுற்றி தெரியும் தெரு நாய்களுக்கு உணவளித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் கல்மண்டபம் சாலை தீயணைப்பு துறை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவன்….. பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி…. கோர விபத்து….!!!

விபத்தில் சிக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள பெரும்பாக்கம் கலைஞர் நகர் பகுதியில் ஆர்யா(14) என்பவர் வசித்து வருகிறார். இந்த சிறுவன் மேடவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தாம்பரத்தில் இருந்து அடையாறு செல்லும் மாநகர பேருந்தில் கடந்த மாதம் 8-ஆம் தேதி சிறுவன் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறி கீழே விழுந்த ஆர்யா மீது பேருந்தின் சக்கரம் ஏறி […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

வெளியூருக்கு சென்ற குடும்பத்தினர்…. நிதி நிறுவன அதிபர் வீட்டில் நடந்த சம்பவம்…. போலீஸ் வலைவீச்சு….!!!

நிதி நிறுவன அதிபர் வீட்டில் திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய கரூர் சாலை ஜி.எஸ் நகரில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகல் நகரில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த மாதம் 27-ஆம் தேதி ரவிச்சந்திரன் தனது குடும்பத்தினருடன் வெளியூருக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு ரவிச்சந்திரன் அதிர்ச்சடைந்தார். இதனையடுத்து உள்ளே சென்று […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி….. மருத்துவமனையில் இருந்து தப்பி ஓடியது ஏன்….?? போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனுமந்த நகரில் 27 வயதுடைய கர்ப்பிணி பெண் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இளம்பெண்ணின் குடும்பத்தினர் அவரை திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் திடீரென அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனை அறிந்த மருத்துவமனை நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் […]

Categories
ஆன்மிகம் நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

வைத்தீஸ்வரன் கோவில்…. பிரபல நாடுகளிலிருந்து வருகை தந்த பக்தர்களுக்கு…. சிறப்பு பூஜை ஏற்பாடுகள்….!!!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி பகுதியில் வைத்தீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்த வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள நவகிரகங்களில் செவ்வாய் பகவான், செல்வ முத்துக்குமார சுவாமி, 18 சித்தர்களின் தன்வந்திரி தனித்தனி சன்னதிகளில் தோன்றி பக்தர்களுக்கு அருள் தருகின்றனர். இந்த கோவிலுக்கு ரவிசங்கர் குருஜியின் சீடர் பிரணவானந்தா தலைமையில் ஸ்பெயின், கஜகஸ்தான், தைவான், குரோஷியா, ரஷ்யா, இங்கிலாந்து, அர்ஜென்டினா, பங்களாதேஷ், உருகுவே ஆகிய நாடுகளில் இருந்து சுமார் 30 பேர் கொண்ட குழுவினர் வந்தனர். இவர்கள் செவ்வாய் பகவான், அம்பாள், […]

Categories
நாமக்கல் பல்சுவை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றைய (09.10.22) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 09) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 25 காசு என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 10 காசுகளிலிருந்து, அக்டோபர் 8 ஆம் தேதி முதல் 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 25 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த சேலம் இளைஞர்கள்”…. தங்கியிருந்த வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் திடீர் சோதனை….!!!!!

யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த சேலம் இளைஞர்களின் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையிட்டார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாப்பேட்டையை சேர்ந்த என்ஜினியர் சஞ்சய் பிரகாஷ், எருமாபாளையம் பகுதி சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் youtube-யை பார்த்து ரகசியமாக துப்பாக்கி தயாரித்த வழக்கில் கைது செய்யப்பட்டார்கள். இந்த நிலையில் இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள். இந்த நிலையில் சஞ்சய் பிரகாஷ் மற்றும் நவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோரை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட அனைத்து காவல் நிலையங்களுக்கும்…. “ரத்த அழுத்தம் பரிசோதனை கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி”….!!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களுக்கும் ரத்த அழுத்த பரிசோதனை கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் ரத்த அழுத்தம், சிறுநீரக நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை கருவிகளை அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் ஷாஜி ஆபிரகாம் தலைமை தாங்க தூத்துக்குடி சிறுநீரகவியல் டாக்டர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சேலத்தில் உரிமம் இல்லாமல் இயங்கிய பெட்ரோல் விற்பனை நிலையம்”…… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை….!!!!!

உரிமம் இல்லாமல் இயங்கி வந்த பெட்ரோல் விற்பனை நிலையத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தார்கள். சேலம் மாவட்டத்தில் உள்ள தலைவாசல் அருகே இருக்கும் வீரகனூர் பகுதியில் உரிமம் இல்லாமல் பெட்ரோல் விற்பனை நிலையம் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இது குறித்து வீரகனூர் கிராம நிர்வாக அலுவலர் களியமூர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில் சேலம் குடிமை பொருள் வழங்கல் புலனாய்வுத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று நேற்று முன்தினம் ஆய்வு மேற்கொண்டார்கள். […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“சண்டையை தடுக்கச் சென்ற நாடக ஆசிரியர் அடித்துக் கொலை”…. டீக்கடைக்காரர் கைது….!!!!!

தம்பதியை தாக்கிய டீக்கடைக்காரரை தடுத்த நாடக ஆசிரியர் அடித்து கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் டீக்கடைக்காரரை கைது செய்தார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள போளூர் அருகே இருக்கும் பங்களாமேடு பகுதியில் முபினுதீன் என்பவர் டீக்கடை நடத்தி வருகின்றார். இந்த நிலையில் சென்ற 6-ம் தேதி வேலூர் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்ற தம்பதி பங்களா மேடு டீக்கடையில் டீ சாப்பிட்டார்கள். அவர்களிடம் டீக்கடைக்கார் தகராறில் ஈடுபட்டு தம்பதியினரை அடித்ததாக சொல்லப்படுகின்றது. இதை பக்கத்தில் குடியிருக்கும் நாடக […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“1 கிலோ நகை மாயம்”…. நிதி நிறுவன மேலாளர் அதிரடி கைது…!!!!!

நிதி நிறுவனத்தில் ஒரு கிலோ நகையை கையாடல் செய்த நிதி நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்பிக் நகரில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த நிதி நிறுவனத்தில் அருள் ஞானகணேஷ் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்த நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக அதிகாரிகள் நகைகளை ஆய்வு செய்தபோது சுமார் ஒரு கிலோ தங்க நகைகள் மாயமானது தெரியவந்தது. இதன்பின் கிளை மேலாளரிடம் விசாரணை செய்ததில் அவர் முன்னுக்குப் பின் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“எனக்கு நீதி வேண்டும்”…. தாசில்தார் அலுவலகம் முன் பெண் தீக்குளிக்க முயற்சி…. ஆரணியில் பரபரப்பு….!!!!!!

ஆரணி தாலுக்கா அலுவலகம் முன்பாக பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு தாலுகாவிற்குட்பட்ட தும்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி மீரா. இத்தம்பதியினருக்கு மௌலீஸ்வரி என்ற மகள் இருக்கின்றார். ரமேஷும் மீராவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இந்த நிலையில் ரமேஷ் மீராவை தினமும் தொந்தரவு செய்து கொடுமைப்படுத்தியதாக சொல்லப்படுகின்றது. இதனால் மனமுடைந்த மீரா கணவனின் கொடுமை தாங்க முடியாமல் அவரிடம் இருந்து எங்களை மீட்க வேண்டும் எனக் கூறி […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“பேரிடர் கால நண்பன் பயிற்சி”…. சமூகத் தன்னார்வலர்களுக்கு அவசரக்கால உதவி உபகரணங்கள்….!!!!!

பேரிடர் கால நண்பன் பயிற்சி பெற்ற சமூக தன்னார்வலர்களுக்கு அவசரகால உதவி உபகரணங்களை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் கீழ் பேரிடர் கால நண்பன் பயிற்சி பெற்ற சமூக தன்னார்வலர்களுக்கு அவசரகால உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தலைமை தாங்கி உபகரணங்களை வழங்கினார். இதன் பின் அவர் பேசியதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் 3500 தன்னார்வலர்கள் […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

“கெட்டுப்போன உணவை சாப்பிட்ட 3 சிறுவர்கள் பலி”…… உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு….!!!!!!

காப்பகத்தில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டு உயிரிழந்த சிறுவர்களின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தை அடுத்த திருமுருகன் பூண்டியில் இருக்கும் ஸ்ரீ விவேகானந்த சேவாலய ஆதரவற்றோர் காப்பகத்தில் கெட்டுப்போன உணவுகளை சாப்பிட்ட மாதேஷ், பாபு, ஆதிஷ் உள்ளிட்ட மூன்று சிறுவர்கள் உயிரிழந்தார்கள். சிறுவர்களின் உடல் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று முன்தினம் அவர்களின் உறவினர்களிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து திருப்பூர் தெற்கு ரோட்டரி மின் மயானத்தில் சிறுவர்களின் உடல் தகனம் செய்யப்பட்டது. உயிரிழந்த குழந்தைகளின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“வீடுகளைச் சுற்றிலும் சூழ்ந்த மழை நீர்”…. சிரமத்திற்குள்ளாகிய பொதுமக்கள்…!!!!!

திருவொற்றியூரில் மழைநீர் கால்வாய் பணி முடிவடையாத நிலையில் மழை பெய்ததன் காரணமாக பத்து தெருக்களில் வீடுகளில் சுற்றிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை நீர் வடிகால்வாய்கள் அமைக்கும் பணியானது நடைபெற்று வருகின்றது. இதனால் சாலையோரங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு பணி முழுமை அடையாமல் உள்ளது. தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியானது பாதிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சென்று 4 நாட்களாக மழை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சுகாதாரமற்ற ஹோட்டல்….. அதிகாரிகளின் திடீர் சோதனை….. அதிரடி நடவடிக்கை….!!!

ஹோட்டலுக்கு அதிகாரிகள் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள நகர் நல அலுவலர் டாக்டர் பாலசுப்பிரமணியம் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் தேர் பிள்ளையார் கோவில் அருகில் இருக்கும் ஹோட்டலில் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சமையலறை கூடம் சுகாதாரமற்ற முறையில் இருந்ததை அதிகாரிகள் பார்த்துள்ளனர். இதனை அடுத்து சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு அதிகாரிகள் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் அந்த ஹோட்டலுக்கு எச்சரிக்கை நோட்டீஸும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாமியார் வீட்டில் விட்டு சென்ற கணவர்….. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்….!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள கான்சாபுரம் பகுதியில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவியுள்ளார். இவர்களது மகள் செல்லக்கனி(23) என்பவருக்கு கடந்த 2018- ஆம் ஆண்டு முனீஸ்வரன் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லாததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முனீஸ்வரன் தனது மனைவியை மாமியார் வீட்டில் விட்டு சென்றுள்ளார். இதனை அடுத்து சாத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் முனீஸ்வரன் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

“சித்திரவதை செய்யப்பட்ட பெண்” கணவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு…. போலீஸ் விசாரணை…!!

பெண்ணை அடித்து துன்புறுத்திய கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். விருதுநகர் மாவட்டத்திலுள்ள காரியாபட்டி பகுதியில் ஜெயபாலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பாலாமணி(29) என்ற மகள் உள்ளார். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு பாலமணிக்கு பிரபு என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் வரதட்சணை கேட்டு பிரபுவின் குடும்பத்தினர் பாலமணியை அடித்து துன்புறுத்தியுள்ளனர். இதுகுறித்து பாலமணி அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 80 சதவீதம் நிறைவு”…. 791 இடங்களில்…. அமைச்சர் கே.என்.நேரு பேட்டி….!!!!!

சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் 80 சதவீதம் நிறைவு பெற்றிருப்பதாகவும் தேங்கும் தண்ணீரை அகற்றுவதற்காக 791 இடங்களில் பம்பு செட் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் கே.என்.நேரு கூறியுள்ளார். சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலம் வார்டு 52 மற்றும் 53 போஜராஜன்நகர், கண்ணன் தெருவை இணைக்கும் வகையில் ரயில்வே சந்திக்கதவு 11 ஏ-ல் வாகன சுரங்கப்பாதை அமைக்கப்பட இருக்கின்றது. இதற்காக 37 மீட்டர் நீளம், 6 மீட்டர் அகலத்தில் மொத்தம் 20 கோடி செலவில் இந்த பாதையானது அமைக்கப்பட […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மாமியார் வீட்டிற்கு சென்ற இன்ஜினியர்….. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

பேருந்தில் இருந்து தவறி விழுந்து இன்ஜினியர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை பகுதியில் ஜியாஉல்ஹக்(34) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பெங்களூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாமியார் வீட்டிற்கு சென்ற ஜியாஉல்ஹக் அங்கிருந்து பி.துரிஞ்சிபட்டியில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு செல்ல முடிவு செய்தார். இதற்காக அவர் தர்மபுரியில் இருந்து பொம்மிடி செல்லும் அரசு பேருந்தில் பயணம் செய்துள்ளார். அந்த பேருந்து செம்மணஅள்ளி அருகே […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

பணப்பையை தவறவிட்ட பெண்…. நேர்மையாக செயல்பட்ட ஆட்டோ ஓட்டுநர்…. குவியும் பாராட்டுகள்…!!

பணப்பையை நேர்மையாக ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுனரை துணை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டியுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் அப்சல்ஜா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நிஜாமுதீன்(41) என்ற மகன் உள்ளார். இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில் நிஜாமுதீனின் ஆட்டோவில் பந்தலூரில் வசிக்கும் காசிராணி என்பவர் பயணம் செய்துள்ளார். இதனை அடுத்து இறங்கும்போது மணிபர்சை ஆட்டோவில் வைத்துவிட்டு காசிராணி சென்று விட்டார். பின்னர் ஆட்டோவில் மணிபர்ஸ் இருந்ததை பார்த்த நிஜாமுதீன் மணிபர்சை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளார். […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“பாரம்பரிய உணவு திருவிழா” கல்லூரி மாணவர்களின் முயற்சி….!!!

மதுரை மாவட்டத்திலுள்ள பசுமலையில் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி அமைந்துள்ளது. இங்கு கல்லூரி செயலாளர் விஜயராகவன் தலைமையில் தமிழ் துறை சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு சுயநிதி. பிரிவு இயக்குனர் பிரபு, பேராசிரியர் ரஞ்சித் குமார், உள்தர மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பையா ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்நிலையில் பாரம்பரிய உணவு திருவிழாவை முன்னிட்டு சந்திரலேகா என்ற மாணவி சவ்மிட்டாய், கமர்கட், சீனி மிட்டாய், புளிப்பு மிட்டாய், சூட மிட்டாய், தேன் மிட்டாய் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

துணி காய போடும் கயிற்றை சுற்றி கொண்டிருந்த சிறுவன்….. திடீரென நடந்த அதிர்ச்சி சம்பவம்….. கதறும் குடும்பத்தினர்….!!!

விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள பழங்காநத்தம் அக்ரஹாரம் பகுதியில் கூலித்தொழிலாளியான துரைப்பாண்டி-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு விசாகன்(10) என்ற மகன் இருந்துள்ளார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் சிறுவன் துணி காயப்போடும் கொடி கயிற்றை கழுத்தில் மாட்டிக் கொண்டு விளையாட்டுத்தனமாக சுற்றிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக கயிறு கழுத்தை இறக்கியதால் மூச்சு திணறி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மகளை கொன்று சாக்கு மூட்டையில் கட்டிய தந்தை….. பிச்சைக்காரர் போல சுற்றி திரிந்தவர் கைது….. பரபரப்பு சம்பவம்…..!!

மதுரை மாவட்டத்திலுள்ள ஜெய்ஹிந்த்புரம் வ.உ.சி தெருவில் டெய்லரான காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரியதர்ஷினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4-ஆம் வகுப்பு படிக்கும் தன்ஷிகா என்ற மகள் இருந்துள்ளார். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காளிமுத்து தனது மகளை அழைத்துக் கொண்டு சிவகங்கையில் இருக்கும் சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து வீட்டில் தனியாக இருந்த பிரியதர்ஷினி மேலூரில் இருக்கும் தனது தனது சகோதரி வீட்டிற்கு சென்றார். இந்நிலையில் […]

Categories
ஆன்மிகம் ஈரோடு மாவட்ட செய்திகள்

ரங்கசாமி மல்லிகார்ஜுனா கோவில்…. தெப்ப திருவிழாவில்…. திரளான பக்தர்கள் பங்கேற்பு….!!!!

தெப்ப திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டு சென்றுள்ளனர். ஈரோடு மாவட்டம் திகனார் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ரங்கசாமி மல்லிகார்ஜுனா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடந்தோறும் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடத்திற்கான தெப்பத் திருவிழா நேற்று முன்தினம் கணபதி பூஜையுடன் தொடங்கியுள்ளது. இதனை அடுத்து நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. அதன் பின் மதியம் 12 மணிக்கு சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சப்பரத்தில் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பேருந்தில் திடீர் தீ விபத்து…. அலறியடித்து ஓடிய பயணிகள்…. ஓட்டுனரின் துரிதமான செயல்….!!!

பேருந்தில் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து அரசு பேருந்து நேற்று மாலை 6 மணிக்கு குமுளி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40 பயணிகள் இருந்துள்ளனர். இந்நிலையில் தோவாளை புதூர் அருகே சென்ற போது என்ஜினில் இருந்து புகை வெளியேறியதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் பெருந்தை நிறுத்திவிட்டார். உடனே சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். இதற்கிடையில் அலறி சத்தம் போட்டபடி பயணிகள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சாப்பாடு கொடுப்பதற்கு சென்ற தாய்….. ஆட்டோ ஓட்டுனர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!!

ஆட்டோ ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சு கிராமத்தில் ஆட்டோ ஓட்டுனரான மகேந்திரன்(39) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சிந்தாமணி என்ற மனைவியும், இரண்டு மகன்களும் இருக்கின்றனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே. ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிந்தாமணி தனது கனவை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். அதிலிருந்து மன உளைச்சலில் இருந்த மகேந்திரன் யாரிடமும் பேசாமல் தனியாக இருந்துள்ளார். கடந்த […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மகளை பார்த்து கொள்ளுமாறு கூறிய தாய்…. முதியவர் செய்த காரியம்…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தாழக்குடி நடுத்தெருவில் சிதம்பரம் பிள்ளை(60) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 40 வயதுடைய ஊனமுற்ற மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை அவரது தாய் பார்த்து கொள்ளுமாறு முதியவரிடம் விட்டு சென்றுள்ளார். அப்போது முதியவர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிதம்பரம் பிள்ளையை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் முதியவருக்கு 5 ஆயிரம் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

முன்னுக்கு பின் முரணான பதில்…. 3 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!!

கஞ்சா வைத்திருந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புதுகிராமம் குளத்தின் அருகே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய சோதனையில் அவர்களிடம் 1 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்து தெரியவந்தது. அவர்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“50 சதவீத மானியம் பெற்று புதிய தொழிலை தொடங்குங்கள்”…. கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்ட தகவல்….!!!!

தேசிய கால்நடை இயக்கத் திட்டத்தின் கீழ் 50 சதவீதம் மானியம் பெற்று புதிய தொழில் தொடங்கி தொழில் முனைவோர் ஆகலாம் என தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் ஒரு செய்தி குறிப்பில் கூறியுள்ளார். தேசிய கால்நடை இயக்கத் திட்டத்தின் அடிப்படையில் 50 சதவீத மானியம் பெற்று புதிய தொழில் தொடங்கி தொழில் முனைவோராக உருவாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஒரு செய்தி குறிப்பில் கூறியுள்ளார். மேலும் இது குறித்த அவர் கூறியிருப்பதாவது “மத்திய […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“வியாபாரி கொலை வழக்கு”…. 5 பேர் அதிரடி கைது…. 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு…!!!!!

தூத்துக்குடி அருகே கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கயத்தார் அருகே இருக்கும் மஞ்சநம்பகிணறு கிராமத்தைச் சேர்ந்த பூ வியாபாரி அழகுதுரை என்பவர் சென்ற இரண்டு நாட்களுக்கு முன்பாக மது குடிக்கும் இடத்தில் உறவினர் ஒருவருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதை பார் உரிமையாளர் உள்ளிடோர் கண்டித்துள்ளர்கள்கள். இதனால் அவருக்கும் உரிமையாளர் தரப்பினருக்கும் இடையே முன் விரோதம் ஏற்பட்டது. இதை அடுத்து அழகுதுரை வீட்டிற்குச் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

“நபார்டு வங்கி பணி”…. முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்…. ஆட்சியர் தகவல்….!!!!!

முன்னாள் படை வீரர்கள் நபார்டு வங்கி பணியில் சேர விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் கூறியுள்ளார். நபார்டு வங்கியில் வளர்ச்சி பிரிவு உதவியாளர் பணிக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட இருக்கின்றார்கள். இதில் முன்னாள் படை வீரர்களுக்கு இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள் https://www.nabard.org என்ற இணையதளத்தில் வருகின்ற பத்தாம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு தூத்துக்குடி முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குனர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தூத்துக்குடி அருகே சிலம்பம் பயிற்சி முகாம்…. “உலக சாதனை நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள மாணவ-மாணவிகள்”….!!!!!

தூத்துக்குடி அருகே சிலம்பம் பயிற்சி முகாம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கீழமுடிமண் புனித வளன் தொடக்கப் பள்ளியில் சிலம்ப பயிற்சி முகாம் நடைபெற்றது. இம்முகாமில் ஏராளமான மாணவ-மாணவிகள் பங்கேற்று பயிற்சி பெற்றார்கள். இதில் பயிற்சி பெற்ற  மாணவ-மாணவிகளுக்கு வண்ண பட்டைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வீர தமிழன் போர்களை சிலம்பக்கூட செயலாளரும் தலைமை ஆசானமான சுடலைமணி, பயிற்சியாளர் வெள்ளைய ராஜா உள்ளிட்டோர் தலைமை ஏற்று சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்கள். மேலும் இம்முகாமில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“ஜல்ஜீவன் திட்டத்தில் பயனடைந்தவர்கள்”…. பங்குத் தொகையை செலுத்த ஆட்சியர் அறிவுறுத்தல்….!!!!!!

ஜல்ஜீவன் திட்டத்தில் பயனடைந்தவர்கள் பங்குத் தொகையை செலுத்த வேண்டும் என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, திருப்பத்தூர் மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் அனைத்து ஊரக குடியிருப்பவருக்கும் வீடுதோறும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 2020-21 ஆம் வருடம் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் இருக்கும் 6 ஊராட்சி ஒன்றியங்களில் 31 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டிருக்கின்றது. […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“மின் கட்டணம் செலுத்த நீண்ட வரிசையில் பொதுமக்கள்”…. ஆன்லைனில் செலுத்த அதிகாரி அறிவுறுத்தல்….!!!!!

திருப்பத்தூரில் மின் கட்டணம் செலுத்த நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருக்கின்றார்கள். திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து ஜலகாம்பாறை செல்லும் வழியாக திருப்பத்தூர் துணை மின் நிலையம் இருக்கின்றது. இங்கே திருப்பத்தூர் நகர பகுதிக்கு உட்பட்ட மக்கள் மின் கட்டணம் செலுத்தி வருகின்றார்கள். இதுவரை மின் கட்டணம் செலுத்துவதற்கு இங்கு இரண்டு கவுண்டர்கள் செயல்பட்டு வந்த நிலையில் தற்பொழுது ஒரு கவுண்டர் மட்டுமே செயல்பட்டு வருகின்றது. இதனால் மின் கட்டணம் செலுத்த வரும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் நின்று […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

“விவசாயிகள் விளைப்பொருட்களை இருப்பு வைத்து கடன் பெறலாம்”…. அதிகாரி தகவல்….!!!!!

விவசாயிகள் விளைபொருட்களை இருப்புவைத்து கடன் பெறலாம் என அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தேனி மாவட்டத்திலுள்ள கம்பம் பகுதியில் முதல் போக நெல் அறுவடை பணி ஆரம்பமாகியுள்ளது. இந்த நிலையில் கம்பம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் சந்தை மூலமாக மறைமுக ஏலத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் வியாபாரிகள் பங்கேற்று விவசாயிகளின் விளைபொருட்களை கொள்முதல் செய்து […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“போதைப்பொருள் இல்லாத மாவட்டமாக மாற்ற உரிய நடவடிக்கை”….. ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்….!!!!!!

போதை பொருள் பயன்பாட்டற்ற மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஆட்சியர் கூறியுள்ளார். திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் போதை பொருள் தடுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியர் தலைமை தாங்கி ஆலோசிக்கப்பட்டதாவது, மாவட்டத்தில் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க காவல்துறையின் மூலம் மாவட்ட எல்லைகளில் போதைப்பொருள் கடத்துவதை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. கஞ்சா போன்ற போதை பொருட்கள் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்…. “கிரிவலம் செல்ல உகந்த நேரம்”…. கோவில் நிர்வாகம் அறிவிப்பு….!!!!!!

திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் இங்கிருக்கும் மலையைச் சுற்றி கிரிவலம் வருவார்கள். அந்நேரத்தில் திருவண்ணாமலை நகரமே விழாக்காலம் போல் மக்கள் கூட்டம் இருக்கும். இந்த நிலையில் புரட்டாசி மாத பௌர்ணமிக்கு கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. அதன்படி நாளை அதிகாலை […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“மாணவ-மாணவிகளுக்கு உதவித்தொகை”….. ஆட்சியர் வெளியிட்ட சூப்பர் தகவல்…..!!!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள சிறுபான்மையினராக கருதப்படும் இஸ்லாமியர், கிறிஸ்தவர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சார்ந்த அரசு உதவி பெறும் மற்றும் மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022-23 ஆம் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“திருவண்ணாமலையில் உரம் கட்டுப்பாடு”…. வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை….!!!!!!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உரம் தட்டுப்பாடு என வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தேவையான 1459 டன் யூரியா, 418 யூரியா, 215 டன் காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்கள் மணலி மற்றும் காட்பாடி முண்டியம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை ரயில் நிலையத்திற்கு வந்தது. இதனை வேளாண்மை இணை இயக்குனர் சரவணன் மற்றும் உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்கள். அப்போது பேசிய வேளாண்மை இணை இயக்குனர், நடப்பு பருவத்துக்கு தேவையான உரங்கள் தனியார் […]

Categories

Tech |